கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2024
பார்வையிட்டோர்: 450 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊருக்குப் பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது. அந்த மாந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் சென்றனர். 

சித்திரை மாதம்! மாமரங்களில் தங்கக் கட்டிகள் போல் மாம்பழங்கள் பழுத்துக்கொங் கிக் கொண்டிருந்தன. பார்த்தவர் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அவை கொத்துக் கொத் தாகத் தொங்கின. இருவரும் அண்ணாந்துப் பார்த்தனர். ஒரு மனிதன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அங்குள்ள மாமரங்களை எண் ணினான். ஒரு மரத்தில் சுமார் எத்தனை பழங் கள் இருக்கும் என்று கணக்குப் போட்டான். அதைப் பெருக்கிப் பார்த்தான். ஒரு மாம்பழம் என்ன விலை போகும் என்று எண்ணிப் பார்த் தான். மொத்த மாம்பழமும் எத்தனை ரூபாய் ஆகும் என்று கணக்குப் போட்டான். தோப் பின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்தான். இப்படியாக அவன் சிந்தனையும் கணக்கும் நீண்டு கொண்டே போயிற்று. 

மற்றொரு மனிதன், நேரே தோட்டக்கார னிடம் சென்றான். மாம்பழங்களின் அருமை யைப் புகழ்ந்து சொன்னான். அதுபோன்ற நல்ல ஜாதி மாம்பழங்கள் நாட்டில் கிடைப்பது அரிது என்றுசொன்னான். தோட்டக்காரனுக்கு மனம் குளிர்ந்து போய் விட்டது. இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். தோட்டக்காரன் அவனுக்குச் சிலபழங்களைப் பறித்துக்கொடுத் தான். உண்மையிலேயே அவை சுவையான மாம்பழங்கள். அவற்றை வாங்கித்தின்றுவிட்டு. மகிழ்ச்சியாக அந்த மனிதன் திரும்பினான். 

இந்த இரண்டு மனிதர்களில் யார் அறி வாளி? தோட்டக் காரனுடன் நட்புக் கொண்டு மாம்பழம் தின்றவனா? தோப்புக்கு விலை மதிப்புப் போட்டவனா? 

வீண் சிந்தனைகள் இன்பம் விளைப்ப தில்லை. 

– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *