(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது தொழிலாளி ஒருவனின் குடிசை. அதன் பின்னே செழித்து வளர்ந்து நின்றது ஒரு பலா. ஒரு நாள் அதன் கீழே ஐந்து, ஆறு நாட்டுக் கோழிகள் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. அப்போது அவை தங்கள து எஐமானரால் உரிமையாக்கப் பட்டு, புதிதாக அங்கே கொண்டு விடப்பட்ட ஓர் இளம் ‘வைட்லெக்கன்’ கோழியை இன் முகம் காட்டி வரவேற்றன. பின்பு அவற்றில் ஒன்று எல்லோர் சார்பிலும், ‘தங்கையே வா நாம் இணைந்து வாழ்வோம்’” என்று அன்போடும், ஆதர வோடும் வேண்டிக் கொண்டது. ஆரம்பத்தில் அந்த இளம் ‘வைட்லெக்கன்’ கோழியும் அதற்கு இயைந்தது போல் நடந்து கொண்டது. ஆனால் அது, சில நாட்களின் பின், தான் உயர்ந்த இனம் என்ற கர்வம் கொண்டு அந்த நாட்டுக் கோழிகளை மதியாது அலட்சியமாக நடந்து கொள்ளத் தொடங்கியது.
இம்மாற்றத்தை அவதானித்த நாட்டுக் கோழிகள் சலிப்படைந்தன. ஒரு தினம்…அவற்றில் ஒன்று அனைவரின் சார்பிலும், ”என்ன…இப்போது ஒரு மாதிரியாக நடந்து கொள்கிறீர்கள்’ என்று வினவியது.
”உயர்ந்த இனத்தைச் சேர்ந்த நான் தாழ்ந்த னத்தவர்களான உங்களை எப்படி மதித்து நடப்பது? நீங்கள்தான் என்னை மதித்து நடக்க வேண்டும்… நான் உங்களை மதித்து நடக்க மாட்டேன்’ என்று ‘வைட் லெக்கன்’ ஆணவத்துடன் பதிலளித்தது.
அதனைக் கேட்ட நாட்டுக் கோழிகள் இப்போது தமது தலைவன் வாயிலாக, “ஆ..அதுவா விசயம்? நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். நமக்குள் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பேதமில்லை. சம்மதமாக விருந்தால் நாம் இரு சாராரும் பரஸ்பரம் மதித்து நடப்போம். இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் விருப்பம் போல் நடந்து கொள்கிறோம்” என்று தங்களது கருத்தை நிதானமாக வெளியிட்டு வைத்தன.
அதனைக் கேட்ட ‘வைட்லெக்கன்’, ‘உலகம் தெரியாதவர்கள்… சீ…” என்றது.
‘வைட்லெக்கனின்’ அவ்வார்த்தைகள் நாட்டுக் கோழி களுக்கு மிக்க ஆத்திரத்தை உண்டாக்கின. இருந்தாலும், அவை அதனை அடக்கிக் கொண்டதோடு பிடிவாதமான அதனுடன் மேலும் பேசவும் விரும்பாது மௌனத்தில் ஆழ்ந்தன. அதனைத் தொடர்ந்து அந்த நாட்டுக் கோழிகள், ‘இனி நாம் இந்த வைட்லெக்கனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை’ என்று முடி வெடுத்து அதனை உறுதியாகச் செயற் படுத்தியும் வந்தன.
இப்போது இளம் வைட்லெக்கனுக்கு நாட்டுக் கோழிகளின் போக்கு மிக்க கவலையைத் தோற்று வித்தது.
இந்த நிலையிலே ஒரு நாள் அடுத்த வீட்டைச் சேர்ந்த வயது முதிர்ந்த ‘வைட்லெக்கன்’ கோழி யொன்று தற்செயலாக இதனைச் சந்திக்கின்றது.
“தங்கையே, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” வயது முதிர்ந்த ‘வைட்லெக்கன்’ கேட்டது. அதன் பேச்சில் பரிவு இழையோடியது.
“நாம் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களல்லவா? தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த இவர்கள் தானே நம்மை மதித்து நடக்க வேண்டும். நாமா இவர்களை மதித்து நடப்பது? நானும் பார்க்கிறேன் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவளான என்னை இவர்கள் மதித்து நடப்பதாகத் தெரியவில்லை. அதுதான் எனக்கு மிகுந்த கவலையாக விருக்கிறது” அந்த இளம் ‘வைட்லெக்கன்’, நாட்டுக் கோழிகளைச் சுட்டிக் காட்டியவாறு பதிலளித்தது.
அதன் எண்ணத்தை மிகவும் தெளிவாக உணர்ந்து கொண்ட அடுத்த வீட்டு வயது முதிர்ந்த ‘வைட்லெக்கன்’ அதனை நோக்கி பின்வருமாறு பகர்ந்தது:
“நமக்கும் இவர்களுக்கு மிடையே பெயரைப் பொறுத்த வரையிலேதான் வித்தியாசமே தவிர வேறு பேத மில்லை. மற்றப்படி எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந் தவர்கள்தாம். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் கணிப்பதெல்லாம் அவரவரின் நடத்தையைக் கொண்டே யல்லாமல்,பிறப்பு, நிறம், தோற்றம்,தொழில் ஆகியவற்றைக் கொண்டல்ல என்பதை உணர்ந்து கொள். அது மட்டுமல்ல இந்தக் காலத்தில் நாம் ஒருவரிடமிருந்து மதிப்புப் பெற வேண்டுமென்றால் மதிப்புக் கொடுத்துத்தான் அதனைப் பெற வேண்டும். நான் எனது அநுபவத்தைக் கொண்டுதான் இதனைக் கூறுகிறேன். நீயும் சற்றுச் சிந்தித்துப் பார்த்து நடந்து கொள்” வயது முதிர்ந்த ‘வைட்லெக்கன்’ தனது உரையை முடித்துக் கொண்டது.
அதன் பின்பு அந்த இளம் ‘வைட்லெக்கன்’, குறுகிய வட்டத்திற்குள் இருந்து விடுபட்டுத் தனது சிந்தனையைப் பரந்த அளவிலே படரவிட்டது.
சில தினங்களின் பின், ‘வயது முதிர்ந்த வைட்லெக் கனும், அந்த நாட்டுக் கோழிகளும் சொன்னது உண்மை’ உடனே அது அந்த என்பது அதற்குத் தெளிவாகியது. நாட்டுக் கோழிகளிடம் தான் முன்பு செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, “நாம் இனி இணைந்து வாழ்வோம்” என்று கூறி அவற்றை மதித்து நடக்கவும் தொடங்கியது. அதனால் அந்த நாட்டுக் கோழி களோ பழையவைகளை மறந்து அந்த இளம் ‘வைட்லெக் கன்’ உண்மையை உணர்ந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சி யடைந்ததுடன் தங்களை மதித்து நடந்த அதனைத் தாங்களும் மதித்து நடக்க ஆரம்பித்தன.
இப்போது அந்த இளம் வைட்லெக்கனின் வாழ்வு இனிதாகக் கழிகிறது.
– தினகரன் வார மஞ்சரி – 1978.11.12.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.