(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு வீடு. வட கிழக்குத் திசையிலே, அதனைத் தொட்ட வாறு ஒரு கறி முருங்கை. மொசு மொசு வென்று இலைகள் வீட்டு செழித்துக் கிடந்தது. அதற்குச் சற்றுத் தள்ளி ஒரு மாதுளை. அதுவோ இலைகள் அடர்த்தியின்றி சாதாரணமாக வளர்ந்திருந்தது. அந்தக் கறி முருங்கையின் ஒரு கிளையிலே, கணவன் மனைவியான இரு சிட்டுக் குருவிகள் அமைதியாக உட்கார்ந்திருந்தன. ஆனால், அவற்றின் குஞ்சுகள் ஐந்தும் அம் மாதுளையின் கிளை களிலே, குதூகலமாய் பொழுதைக் கழித்துக் கொண்டி ருந்தன. சதங்கைகளைக் குலுக்கி விடுவது போன்ற ஒலி அங்கிருந்து அடிக்கடி எழுந்து குஞ்சுகளின் நிலையைப் பிரதிபலித்தன.
சற்று நேரத்தின் பின்னர், முருங்கையின் கிளையிலே உட்கார்ந்திருந்த கணவனான சீட்டுக் குருவி, தங்களுக்குள் நிலவிய அமைதியைக் கலைத்துக் கொண்டு தணிந்த குரலிலே, பக்கத்தே வீற்றிருந்த தன் மனைவியான சிட்டுக் குருவியிடம் பேசியது:
“அருமைத் துணைவியே, எமது பிள்ளைகள் எவ்வ ளவு சந்தோசமாக இருக்கிறார்கள். இது போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும். அவர்களின் சந்தோசந் தான் எங்களின் சந்தோசம். ஆனால், அவர்கள் பொறுப் புணர்ச்சியில்லாதவர்களாக இருப்பதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது. இப்போது எமது பிள்ளைகள் யாவரும் வாலிப வயதை யடைந்தும் நீண்ட காலம் நகர்ந்து விட்டது. இவ்வளவு காலமும் எவ்விதக் குறையு மின்றி உணவு தேடிக் கொடுத்தோம். அது எமது கடமை யுங் கூட. ஆனால், இன்னும் அவ்வாறு நடந்து கொள்வது எப்படி? இதை அவர்கள், சிறிதேனும் சிந்திப்பதாகவும் தெரியவில்லையே, இன்று அவர்கள் எமக்குப் பெரும் பாரமாகவல்லவா தோன்றுகிறார்கள்” என்று விட்டு வதனத்தை உம்மென்று வைத்துக் கொண்டது கணவனான சிட்டு.
“ஆமாம்… என்றும் எமது பிள்ளைகள் மகிழ்ச்சி யோடு இருப்பதுதான் எமக்கு வேண்டியது. ஆனால், பொறுப்புணர்ச்சியில்லாமல் இவ்வாறு இவர்கள் நடந்து கொள்வதுதான் எனக்குப் பெரிய யோசனையையும் கவலையையும் தருகின்றது” மனைவியான சிட்டு பக்கப் பாட்டுப் பாடியது.
இதனை இவர்களுக்கு எப்படி உணர்த்தலாம்…?”
“எனக்கு அதுதான் யோசனையாக விருக்கிறது”
விடை காண முடியாது கணவன் மனைவியான அவ்விரு சிட்டுக் குருவிகளும் மீண்டும் அமைதியில் மூழ்கிப் போயின.
அப்போது, மாதுளையிலிருந்து, வீசி எறிந்து விட்ட கற்கள் போல் விரைந்து வந்து அவற்றை மொய்த்துக் கொண்ட குஞ்சுகள் தம் பெற்றோரின் நிலை கண்டு துணுக் குற்றன.
“என்ன நடந்தது?” என்று பரஸ்பரம் பார்வையால் தமக்குள்ளே பேசிக் கொண்டன, பின் அவற்றிலே சற்றுப் பருமனாகவும், வாயாடியாகவும் விளங்கிய ஒரு சிட்டுக் குருவி, தன் பெற்றோரை நோக்கி வினவியது.
“நீங்கள் ஏன் இன்று ஒரு மாதிரியாகக் காணப் படுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது…?”
“அது… அது…” தந்தையான சிட்டு சொல்லத் தயங்கியது.
“எதுவாக விருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்கள்…”
சந்தர்ப்பத்தை நழுவவிட வேண்டாம் என்று தாயான சிட்டுக் குருவியும், அதற்குப் பார்வையால் சைகை செய்தது.
தன்னைச் சமாளித்துக் கொண்டு தந்தைச் சிட்டு பேசியது:
“நமது குடும்பமோ பெரியது. இப்போது நீங்களும் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறீர்கள், முன்பு எப்படியோ சமாளித்துக் கொண்டோம். ஆனால், இப்போது உங்களுக்கு உணவு தேடுவதுதான் பெரிய சிரமமாக விருக்கிறது அதுதான் எங்களுக்கு யோசனை. வேறு ஒன்றுமில்லை…”
இவ்வாறு தந்தையான சிட்டு கூறி முடிக்கும் போது தாய்ச் சிட்டு தன் வதனத்திலே உயிரற்ற ஒரு குறு நகை யைப் படர விட்டுக் கொண்டது.
தந்தைச் சிட்டு சூசகமாகக் கூறியதைப் பட்டென்று விளங்கிக் கொண்ட வாயாடிச் சிட்டு தன் பெற்றோரை நோக்கி இவ்வாறு இயம்பியது:
“எம் இனிய பெற்றோரே, நாங்கள் எப்போதோ இதை உணர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். நாங்கள் தான் பிழை விட்டு விட்டோம். இனிமேல் நாங்கள் தங்களுக்கு எவ்விதச் சிரமமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வோம்”
வாயாடிச் சிட்டுவின் இவ் வார்த்தைகளுக்கு அதன் உடன் பிறப்புகளும் தலை சாய்த்து ஆதரவைத் தெரிவித்துக் கொண்டன. பகுதி மகட்ப்
இப்போது அந்த வாயாடிச் சிட்டு தன் உடன் பிறப்புகளை நோக்கி உரைத்தது:
“இவ்வளவு காலமும் எமது பெற்றோர் எங்கெங் கெல்லாமோ இருந்து உணவு தேடித்தந்து எங்களையெல்லாம் நன்கு வளர்த்து விட்டிருக்கிறார்கள். அத்தோடு, எங்கள் வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்கான சகல பயிற்சி களையும் கூட எமக்குத் தந்திருக்கிறார்கள். ஆகையினாலே நாம் இனியும், அவர்களுக்குப் பாரமாக விருக்காது இப்போ திருந்தே எமக்கு வேண்டிய உணவை நாமே தேடிக் கொள்வோம்”
“ஆம்…ஆம்… எமது பெற்றோரைச் சிரமப்படுத்தாது எமக்குத் தேவையான உணவை நாமே தேடிக் கொள்வோம்…”
ஏனைய சிட்டுக் குருவிகளும் ஏகோபித்த குரலில் தங்கள் இணக்கத்தை வெளிப்படுத்தின.
வாயாடிச் சீட்டு தன் பெற்றோரை நோ ஈக்கி அனை வரின் சார்பிலும் கூறியது:
“இவ்வளவு காலமும், எங்களை வளர்த்து உருவாக்கி விட்ட உங்களுக்கு நாங்கள் நிறையவே கடமைப் பட்டிருக் கிறோம். இதுவரை எங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் தேடித் தந்தீர்கள். இனிமேல் எங்களுக்கு வேண்டிய உணவை நாங்களே தேடிக் கொள்வதோடு உங்களுக்கு வேண்டிய உணவையும் நாங்களே தேடித் தரலாமென்று எண்ணுகிறோம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்…?”
எப்பொழுதும் போல் தந்தைச் சிட்டுவே முந்திக் கொண்டு பின்வருமாறு பகர்ந்தது:
“எங்கள் செல்வங்களே, உங்களுக்கு வேண்டிய உணவை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் தேடித் தரத் தேவை யில்லை. எங்களை எண்ணி நீங்கள் இவ்வளவும் சொன்னதே போதும். நீங்கள் செய்தது போலவே இருக்கிறது. அப்பட்ட மாகக் கூறுகிறோம், நாங்கள் இன்னொருவரின் கஷ்டத் திலே சுகமநுபவிப்பதைக் கிஞ்சித்தும் விரும்பவில்லை. மற்றவர்களுக்குப் பாரமாக இல்லாது அவரவர் உழைத்து உண்ண வேண்டும். அதிலேதான் மகிழ்ச்சியும் மன நிறை வம் இருக்கிறது. ஆகையினாலே, எங்களுக்கு வேண்டிய உணவை நாங்களே தேடிக் கொள்வோம். எங்கள் உடலிலே ஒரு துளி வலுவிருக்கும் வரை எவரின் உதவியும் தேவை யில்லை. ஒரு காலம் உடலிலே வலு படுமோசமாக இழந்து போகும் நிலை ஏற்படுமாக விருந்தால், அப்போது எங்களுக்கு உங்கள் உதவியைத் தாருங்கள்…
தாய்ச் சிட்டு தன் உடலை ஒரு உடலை ஒரு முறை உலுக்கி விட்டுக் கொண்டு உவகையோடு தலை நிமிர்ந்தது.
“ம்… ம்… சரி…” இது வாயாடிச் சிட்டு.
பிள்ளைகளான அந்த ஐந்து சிட்டுக் குருவிகளும் தத் தமக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் பொருட்டு, புத்தம் புது வேகத்தோடு கிளைகளை விட்டு இறக்கைகளை விரித்தன.
இப்போது தம் பிள்ளைகள் செல்வதையே பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்த பெற்றோராகிய அவ்விரு சிட்டுக் குருவிகளின் வதனங்களிலோ, மகிழ்ச்சியும், வேதனையும் பொங்கிக் கொண்டிருந்தன.
– தினகரன் வார மஞ்சரி – 1987.11.29.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.