(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பழனிவேல் அந்த ஊர்ப் பணக்காரர் ராஜமாணிக்கத்தின் ஒரே மகன், பணம் இருக்கிறது என்ற அகந்தையுடன் மற்றவர்களைத் துச்சமாக நடத்தும் குணம் உடையவன். படிப்பிலும் நாட்டமில்லை. அந்த ஊரில் உள்ள பள்ளியில் பத்தாவது படிக்கிறான். அவனிடம் உள்ள பணத்திற் காசு, அவன் சொல் கேட்டு நடக்கும் சில மாணவர்களே அவன் தோழர்கள்.
பழனிவேலின் வகுப்பாசிரியர் தான் விஜயராகவன். மிகவும் நல்லவர், அதே சமயத்தில் கண்டிப்பானவர். பழனிவேல் ஒரு வழியாகப் பத்தாம் வகுப்பு வந்த போது. மற்ற ஆசிரியர்கள் அவரை எச்சரித்தனர். அவனுக்கு அனுசரித்து நடந்தால் சிக்கல் இருக்காது என்றும் அறிவுரை கூறினர்.
பழனிவேலால் விஜயராசுவனுக்கு முதல் மூன்று மாதங்கள் வரை எந்தச் சங்கடமும் இல்லை. காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்தது. அன்று விஜயராகவன், திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்குக் கொடுத்தார். பழனிவேல் எல்லாப் பாடங்களிலும் முப்பத்தைந்து முதல் நாற்பது மதிப்பெண்கள் வரை வாங்கியிருந்தான். கணிதத்தில் மட்டும் முப்பத்திரண்டு.
விஜயராகவன் அன்து மாலை ஆசிரியர்களின் ஓய்வறையில் புத்தசும் படித்தபடி தனியாக அமர்ந்திருந்தார். “சார்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார். பழனிவேல் அவனுடைய விடைத்தாளுடன் நின்றிருந்தான். பொதுவாக அவர் அறைக்கு மாணவர்கள், பாடங்களில் எழும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள வருவார்கள். விடைத்தாளில், மதிப்பெண்களைக் கூட்டிப் போடும் போது, குறைத்துப் போடப்பட்டுள்ளது. சரியான விடைக்கு முழு மதிப்பெண்கள் போடவில்லை என்ற குறைகளுடன் மாணவர்கள் வருவதுண்டு. பழனிவேல் விடைத்தாளுடன் வந்து நின்றதால், அவனும் அதே போன்ற குறையோடுதான் வந்திருக்கிறான் என்று எண்ணி, “வா, பழனிவேல், என்ன விஷயம்?” என்றார்.
பழனிவேல் விடைத்தாளை அவரிடம் கொடுத்தான். “முப்பத்தைந்தாக மாற்றுங்கள்” என்று அவன் சொன்ன விதம் சரியாக இல்லாவிட்டாலும், விஜயராகவன் பதில் ஏதும் கூறாமல் அவனுடைய விடைத்தாளை வாங்கிப் பார்த்தார். எல்லா மதிப்பெண்களையும் கூட்டிப் பார்த்தார். முப்பத்திரண்டுதான் வந்தது. “சரியாக இருக்கே” என்றார் விஜயராகவன்.
“சரியாக இருக்கிறது என்று தெரியும், ஆனாலும் அதை முப்பத்தைந்தாக மாற்றுங்கள் என்றுதான் கேட்கிறேன். நான் இம்முறை தேர்ச்சி பெற்றே தீர வேண்டும்.”
“தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால், அதற்காக இதுபோன்ற குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பது முறையல்ல. இதற்கு நான் ஒத்துழைப்பேன் என்று கனவில் கூட நினைக்காதே!” என்றார் விஜயராகவன் கடுமையாக, பழனிவேல் சுடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினான்.
அன்று முதல் விஜயராகவனுக்குப் பழனிவேலால் தொல்லைதான், அவர் கரும்பலகையில் எழுதும் போது காகித அம்புகள் அவரை நோக்கிப் பறக்கும். அவர் வகுப்புக்குள் நுழையும் போது கரும்பலகையில் அவரைப் போல கேலிச் சித்திரம் வரையப்பட்டிருக்கும். இவைகளெல்லாம் பழனிவேலின் திருவிளையாடல்கள்தான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், விஜயராகவன் அவற்றைப் பெரிதுபடுத்த மாட்டார். “வகுப்பில் இது போன்று செய்வது தவறு” என்று பொதுவாகச் சொல்லி, விட்டுவிடுவார். பழனிவேலை அலட்சியம் செய்வதே அவனுக்குத் தரும் தண்டனை என்பதை உணர்ந்து, அவன் குறும்புகளை இலட்சியம் செய்யாமல் இருப்பார்.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் இருந்தன. விஜயராகவன் வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார், வகுப்பின் கடைசியில் ஏதோ புகைவது போலத் தெரியவே வேகமாக அங்கே சென்றார். “படால்… படீர்” என்று எலெக்டிரிக் பட்டாசுச் சரம் ஒன்று வெடித்தது. வெடி அவர் மேலும் தெறித்தது. அதை எதிர்பாராததால் விஜயராகவனுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. “மாணவர்களே! இந்த விபரீத விளையாட்டைச் செய்தது யார் என்று எனக்குத் தெரிய வேண்டியதில்லை. ஆனால், அந்த மாணவனுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். வகுப்பறை விளையாட்டு இடமல்ல, அறிவை வளர்த்துக் கொள்ளுமிடம். இதைச் செய்தவன் படிப்பில் நாட்டம் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால், இது மற்ற நல்ல மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்பும் செயல், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார் விஜயராகவன். அவருக்கு உறுதியாகத் தெரியும், இதைச் செய்ததும் பழனிவேல்தான் என்று.
சில நாட்கள் கழிந்தன. இறுதித் தேர்வுகளுக்கு இரண்டு மாதம்தான் இருந்தது. ஒரு நாள் விஜயராகவன் வகுப்புக்குள் நுழையும் போது. பழனிவேல் அவரைக் கவனியாதவன் போல் “நான் இந்தப் பள்ளியை விட்டுப் போனவுடன் பாருங்கள், இவரை ஒரு வழி செய்யாவிட்டால் என் பேர் பழனிவேல் இல்லை! மாற்றிக்கிறேன்!” என்றான். விஜயராகவன் அதைப் பொருட்படுத்தாமல் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
மாலை, விஜயராகவன் பழனிவேலைத் தம் அறைக்கு வரச் சொல்லியிருந்தார். காலையில் தான் கூறியதைப் பற்றி விசாரிப்பார் என்றும், அவர் அப்படி ஏதேனும் கேட்டால் தூக்கியெறிந்து பேச வேண்டும் என்றும் தீர்மானித்து மிதப்பாக அவன் வந்தான். ஆனால், விஜயராகவன் அவன் படிப்பைப் பற்றி விசாரித்தார்.
பழனிவேல் அலட்சியமாகப் பதில் சொன்னான். “நீ பெரிய பணக்காரன் என்பது எனக்குத் தெரியும். ஆயினும், படிக்காதவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. குறிப்பாக இந்த ஆண்டு நீ வாங்கும் மதிப்பெண்கள் தான் உன் எதிர்கால வாழ்க்கையை நிச்சயிக்கும். நாளை முதல் தினமும் மாலை இங்கு வா, பாடங்களில் எழும் சந்தேகங்களைப் போக்குகிறேன்” என்றார். “சார், டியூஷன் வைத்துக்கொள்கிற எண்ணம் எனக்கு இல்லை” என்றான் பழனிவேல் திமிராக. விஜயராகவன் சிரித்தார். “பழனிவேல்! நான் பணத்துக்காக உன்னை வரச் சொல்லவில்லை. உன் நன்மைக்காக, நம் பள்ளியின் பெ ருக்காக – இலவசமாகச் சொல்லித் தருகிறேன், நாளை முதல் நீ வர வேண்டும். இது என் உத்தரவு” என்று கடுமையாகச் சொன்னார்.
மறுநாள் முதல் பழனிவேல் வேண்டா வெறுப்பாகப் பாடம் கற்றுக் கொள்ளச் சென்றான். அவனைத் தவிர வேறு சில மாணவர்களும் வந்திருந்தனர். அவர்களுக்கு மிகவும் சிரத்தையாகச் சொல்லிக் கொடுத்தார் விஜயராகவன், அவருக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு பழனிவேலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
தேர்வுகள் நடந்தன. கோடை விடுமுறை. அன்றுதான் பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவு வெளியாகப் போகிறது. பழனிவேலின் தந்தையின் கையில் நாளேடு. “பழனிவேல் இங்கு வா. உன் தேர்வு எண்ணைச் சொல்” என்றார். பயந்து கொண்டே சொன்னான் பழனிவேல், “நீ தேறி விட்டாய். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பெயரில் உங்கள் பள்ளியும் இருக்கிறது. உங்கள் ஆசிரியர் யார்?” என்றார் அவர். “விஜயராகவன்” என் நான் பழனிவேல், “நிஜமாகவே அவரைப் பாராட்ட வேண்டும். அதுவும் நீ அரையாண்டு வரை மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கியவன் இந்த வருஷம் நீ கோட்டடிக்கப் போகிறாய் என்று தான் நான் நினைத்து வந்தேன்!” என்று வியந்தார் அவர்.
பழனிவேலுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. தான் அவரிடம் அலட்சியமாக நடந்து கொண்ட விதத்தை, அவர் தன்னிடம் நடந்து கொண்ட முறையால் தேர்வு நேரத்தில் தன்னை வலியுறுத்திப் படிக்கச் சொன்னதை எல்லாவற்றையும் தந்தையிடம் கூறினான், “உன்னை என் மகன் என்று கூறிக் கொள்ளவே வெட்கப்படும்படி செய்து விட்டாய். அறிவு புகட்டும் ஆசானிடம் நடந்து கொள்ளும் விதமா இது! உடனே புறப்படு…அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உன்னைத் தேர்வு பெறச் செய்ததற்கு நன்றியும் சொல்ல வேண்டும்” என்றார்.
பழனிவேலும் அவன் தந்தையும் விஜயராகவன் இல்லத்திற்கும் போன போது, அவர் அன்புடன் வரவேற்றார். பழனிவேலை வாழ்த்தினார். அவர் அப்பொழுது கூட அவன் செய்த குறும்புகளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் புகார் சொல்லவில்லை. பழனிவேலின் தந்தை தன் மைந்தனின் செயலுக்காக மனம் வருத்தினார்.
“நீங்க அவன் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டீர்கள். எதோ என்னால் ஆனது” என்று சொல்லி, கூடை நிறைய பழங்களையும் ஐநூறு ரூபாய் பணத்தையும் தட்டில் வைத்துக் கொடுத்தார்.
“பழனிவேல் திருந்தி விட்டான், தவறான பாதையில் போகும் ஒரு மாணவன் திருந்தி விட்டால், ஆசிரியருக்கு அதைவிட மகிழ்ச்சியளிக்கக் கூடியது ஏதும் இருக்காது. அவன் மேன் மேலும் நன்றாகப் படிக்க வேண்டும். எனக்குப் பள்ளியில் தரும் ஊதியமே போதுமானது. பழங்களை ஏழை, எளியவர்களுக்குக் கொடுங்கள். உங்க அன்புக்கு நன்றி” என்று சொல்லி ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். பணத்தைத் தொடவில்லை. சிரம் தாழ்த்தி விம்மினான் பழனிவேல். அவன் கண்கள் குளமாயின. அவன் ஆணவம் மறைந்திருந்தது!
– 1991-05-01
சிறப்பு. வாழ்த்துகள்