வணக்கம் குழந்தைகளே !
இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன! எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்
வாலு பெரிசா குரங்கு குட்டிக்கு
இந்த வால் பெரிசா…?
அடிக்குது பாரு கரணம்,
ஐசைலக்கடி அம்மா…ஐசைலக்கடி அம்மா..
பாருங்கள் குரங்கு போகிறவர்களை எல்லாம் எப்படி வம்புக்கு இழுக்கிறது என்று பாருங்கள்..
அடடா தலையில் வாழை பழத்துடன் நடந்து போகையிலே
கூடையில் உள்ள பழத்தை எடுத்து போகிறதே
அந்த அம்மா என்ன செய்வார்கள்?
குழந்தைகள் : அச்ச்ச்ச்சோ…. கத்துவார்கள்..
கோமாளி குரங்கு : நாங்கள் என்ன செய்வோம் ?
குழந்தைகள் : பழத்தை பிச்சி பிச்சி தின்னுவீர்கள்.
கோமாளி : கரெக்ட்… இங்க பாருங்க இப்படித்தான் அந்த பழத்தை சாப்பிடும் (கோமாளி குரங்கு பழத்தை சாப்பிடுவது போல செய்து காட்டுகிறார்)
குழந்தைகள்: கை கொட்டி சிரிக்கிறார்கள்.
கோமாளி: ஸ்..ஸ்..சத்தம் போடாதீர்கள் புலியார் வருகிறார் பாருங்கள்
(புலி ஒன்று நடந்து வருகிறது)
கோமாளி: புலியார் எப்படி உறுமுவார்
குழந்தைகள்: உர்..உர்..உர்…
கோமாளி குரங்கு: ஆம்..இப்ப பாருங்க புலி எப்படி உறுமுதுன்னு..ர்…ர்…ர்….ர்ர்ர்
கோமாளி குரங்கு : அடடா அங்க ஒரு மான் குட்டி வந்துடுச்சே?
குழந்தைகள் : அய்ய்யோ புலி மான் குட்டியை பிடிச்சிடுமே
கோமாளி குரங்கு: அட ஆமா இப்ப என்ன பண்ணறது தெரியலையே?
குழந்தைகள் “குரங்காரே எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்களேன்
கோமாளி குரங்கு: நீங்கதான் எங்களை குறும்புக்காரங்கன்னு சொல்லுறீங்களே?
குழநதைகள்: நீங்க குறும்பு பண்ணுனாலும், பரவாயில்லை, எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்க?
கோமாளி குரங்கு :அப்படியா அப்ப எங்களுக்கு என்ன கொடுப்பீங்க?
குழந்தைகள் “ ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்கிறோம்.
கோமாளி குரங்கு : சரி..இப்ப பாருங்க.
சட்டென குரங்கார் முன்னே சென்று புலியாரே வணக்கம் என்றது
வணக்கம் உனக்கு என்ன வேணும்?புலியார் உறுமியது
ஐயா இப்பத்தான் ஒரு புலியார் எங்களை எல்லாம் மிரட்டிட்டு போனார்
என்னையத்தவிர இன்னொரு புலியா?
ஆமாய்யா பயத்துடன் சொன்னது?
எங்க அது?
இப்பத்தான் முன்னாடி போச்சுங்க, இப்ப வேகமா போனா அதை பிடிச்சுடலாம்.
இப்பவே போறேன், புலியார் உறுமிக்கொண்டு பாய்ந்து சென்றது
கோமாளி குரங்கு: அப்பாடி மான் தப்பிச்சுது, சந்தோசத்துடன் சொன்னது.
புத்தி இருந்தால் எவ்வளவு ஆபத்து இருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம்.
புரிந்து கொண்டீர்களா? எங்களை குறும்பு செய்பவர்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள், நாங்கள் புத்திசாலிகள் கூட, தெரியுமா குழந்தைகளே!!