(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு கழுதை இருந்தது. அது ஒரு நரி யோடு சேர்ந்து பயிர் மேய்வது வழக்கம். ஒருநாள் அது விலாப் புடைகள் வீங்க மேய்ந்து ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது. அப்போது இரவு நேரம், நிலாக் காலம்; பொழுது போவதற்கு நான் இசை பாடுகிறேன்; நீ கேள்’ என்று நரியிடம் கூறியது.
‘உன் குரல் கேட்டால் பயிர்க்காரன் வந்து கொன்று விடுவான்!’ என்று நரி கூறியது.
அதன் சொல்லைக் கேளாமல் கழுதை தன் பாழான குரலெடுத்துப் பாடியது. உழவர்கள் வந்து அதை உடம்பு நொறுங்கும்படியாக அடித்து விரட்டி னார்கள்.
நரி தூரத்தில் ஓடிப்போய் நின்று கொண்டு கழுதை மாமா என் பேச்சைக் கேட்காததனால் தானே அடிபட்டாய்? ஏன் இந்த இறுமாப்பு!’ என்று ஏசி விட்டுச் சென்றது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.