பணம் கொண்ட பிராமணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2024
பார்வையிட்டோர்: 337 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பிராமணன் இருந்தான். அவன் அடிக்கடி தட்சிணேசுவரத்துக்கு வருவான். மிக எளிமையானவன். எப்பொழுதும் வணக்கத்தோடுதான் பேசுவான். என்னை அடிக்கடி சந்திப்பான். சில நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. எங்கே போயிருப்பான். என்ன ஆனான் என்பது தெரியவில்லை. 

ஒரு நாள் நாங்கள் கொன்னாகர் என்ற ஊருக்குப் படகில் சென்றோம். அந்த ஊரை யடைந்து படகிலிருந்து இறங்கிக் கரையில் ஏறினோம். 

கங்கைக் கரையில் அந்தப் பிராமணனைப் பார்த்தோம். பிரபுக்களைப் போல் அவன் ஆற்றங்கரையில் காற்று வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் கடந்து செல்லும் போது என்னைப் பார்த்தான். “என்ன சுவாமி நலமா?” என்று அவன் கேட்டான். 

அவன் கேட்ட குரலில் முந்திய பணிவும் அடக்கமும் இல்லை. தேவையில்லாத ஒரு மிடுக்கு அந்தக் குரலில் கலந்தொலித்தது. 

அந்த மாறுபாடு எனக்கு நன்கு புலப் பட்டது. கூட இருந்த இருதயனிடம், “பிராமணனுடைய குரலைப் பார்த்தாயா? இவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. பணம் கிடைத்தவுடன் எப்படி மாறி விட்டான் கவனித்தாயா?” என்று கேட்டேன். 

இருதயன் விலா வலிக்கச் சிரித்தான். 

பலபேர் புதிதாகப் பணம் கிடைத்தவுடன் மாறிப்போய் விடுகிறார்கள். பணத்தால் அவர்களுடைய நல்ல பண்புகள் மாறிவிடுகின்றன. 

– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *