நல்லாத்தான் வாழ்ந்தார் முல்லா நஸிருத்தீன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,884 
 

பீர்பால், தெனாலிராமன் மாதிரி தன்னைக் கோமாளி ஆக்கிக்கிட்டு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிற ஜீனியஸ் முல்லா நஸிருத்தீன்.

முல்லாங்கிறது அவரோட பெயர் இல்லை. அரபுச் சட்டங்களில் தேறியவருக்கு முல்லா என்பது சிறப்பு பதவிப் பெயர். நாளடைவில் அதுவே அவருக்குப் பெயராகி விட்டது.

முல்லாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர். துருக்கியில் முல்லாவை நஸ்ரெட்டீன் ஹோகா என்பார்கள். மேற்கு ரஷ்யாவில் தாஜி நஸ்ரித்தீன், ஈரானில் முல்லா, துருக்கியில் ஹோஜா, அரபு நாடுகளில் கோஜா அல்லது முல்லா.

கி.பி. 1480&ல் எழுதப்பட்ட சல்துக்நாம் என்ற நூலில் முல்லா துருக்கியில் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

கி.பி. 1074&க்கு பின் முல்லா இங்குதான் வாழ்ந்தார். முல்லாவின் அப்பா அப்துல் ஷேட்ஜா இமாம் என்ற மதத்தலைவர் பதவியில் இருந்தார். முல்லாவின் அம்மா பெயர் சிதிகா. நசிர் இத் தின் என்பது அவருக்கு அம்மா, அப்பா வைத்த பெயர்.

இதற்கு ‘உண்மையின் வெற்றி’ என்பது பொருள். ஹோட்ஜா என்பது அறிஞர், ஆசிரியர் என்று மதிப்பளிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பட்டம்.

மதம் மற்றும் சட்டம் தொடர்பான கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக ஹானாயா பள்ளியில் சேர்த்தார்கள். படிப்பை வெற்றிகரமாக முடித்த முல்லா பள்ளி ஆசிரியராகவும், இமாம் ஆகவும் பணியாற்றும் தகுதியைப் பெற்றார்.

சிவ்ரிஹசாரில் நசுருதீன் ஹோஜா அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. இதில் முல்லா பயன்படுத் தியதாகச் சொல்லப் படும் பல அரிய பொருள் களும், முல்லா கதைகளும், சித்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

முல்லாவுக்குப் பிடித்த வாகனம் கழுதைதான். எல்லோரையும் போல கழுதை பார்த்துச் செல்லும் முன்புறத்தைப் பார்த்தபடி அமர மாட்டார். கழுதையின் மேல் அதன் வாலைப் பார்த்தபடிதான் உட்கார்ந்து கொள்வார்.

முல்லா 76 வயது வரைக்கும் வாழ்ந்தார். அவரது கல்லறையில்கூட அவரது கிண்டல் பளிச்சிடும். அந்தக் கல்லறைக்குப் போகும் வழியில் மிகப்பெரிய கதவுகள் போடப்பட்டு, பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கும். கதவு பூட்டி இருக்குமே தவிர, கதவிற்கு இரண்டு பக்கமும் எந்தச் சுவரும் கிடையாது.

முல்லாவின் உடல் துருக்கியில் புதைக்கப்பட்டதாக நம்புகிறார்கள். எஸ்கிஷிஹார் என்ற இடத்தில் முல்லாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இங்கே ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 5&ஆம் தேதி முதல் 10&ஆம் தேதி வரை முல்லா விழா அமர்க்களப்படும்.

எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் படைப்புகளை அரங்கேற்றுவார்கள். ஓவியக் கண்காட்சியில் முல்லா உயிர் பெற்று வருவார். முல்லாவைப் போலவே வேடம் அணிந்தவர்களும் நடமாடுவார்கள்.

வெளியான தேதி: 01 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *