(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளிலே மதுரையிலே நக்கீரர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் எதற் கும் அஞ்சாத தறுகண்மையை உடையவராக விளங் கினார். மதுரைச் சொக்கநாதக் கடவுள் பாடிய பாட் டொன்றுக்குப் புலவர் குற்றங் கூறினார். சொக்க நாதக் கடவுள் மனித வடிவுடனே நக்கீரர் முன் தோன்றினார். ‘நான் பாடிய பாடலுக்குப் பழுது சொன்னவர் யார்?’ என்று கேட்டார். நக்கீரர் சிறிதும் அஞ்சாமல் ‘நான் தான் சொன்னேன்’ என்று சினத்துடன் அக் கடவுள் முன் வாதாடத் தொடங்கினார்.
நக்கீரர் அறிவுக் குறைவால் கடவுளைச் சிறிதும் மதிக்காமல் அக் கடவுள் கூறியவைகளை மறுத்து வாதாடினார். நக்கீரருடைய போக்கைக் கண்ட சொக்க நாதக் கடவுளுக்கு மிக்க சினம் உண்டாகிவிட்டது. அவர் தம்முடைய நெற்றிக்கண்ணைச் சிறிது திறந்து காட்டினார். அப்பொழுதுகூட நக்கீரர் அஞ்சாமல் வாதாடினார். கடவுளுடைய தீக்கண் பார்வையால் நக்கீரர் வெப்பு நோய் அடைந்து வெப்பம் தாங்கமுடி யாமல் பொற்றாமரையில் குதித்துத் தொல்லைப்பட்டார். பிறகு சங்கப் புலவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கிக் கடவுள் நக்கீரரைக் கரையேற்றியருளினார். பெரியோர்கள் முன்பு சொற்போரிட்டால் இவ்வாறு தான் தீமை நேரிடும்.
“வாதுமுற் கூறேல்” (இ – ள்.) வாது – வாதுகளை, முன் – பெரியோர் முன், கூறேல் – பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955