கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 23,344 
 
 

Ambulimama_Tamil_1996_02_0009-picமாளவ தேச மன்னன் மகாசேனன் ஒரு நாளிரவு மாறு வேடத்தில் நகரில் திரிந்து வந்த போது ஓரிடத்தில் ஒருகல்லில் பட்டு இடறிக் கீழே விழுந்துவிட்டான். தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அங்கு அருகிலிருந்த ஒரு குடி சையில் வாழும் ஏழை மனிதன் பார்த்து ஓடி வந்து அவனைத் தூக்கி ஒரு மரத்தடியேகொண்டு சேர்த்தான். அதன்பின் தனக்குத் தெரிந்த பச்சிலை களைப் பறித்து வந்து அவற்றின் சாற்றை மன்னனின் காயங்களில் தடவினான்.

மன்னனின் காயங்களின் எரிச்சல் நின்றது. அவன் அந்த ஏழைக்குத் தன் நன்றியைத் தெரிவித்து அவனைப் பற்றி விசாரித்தான். அவனும் ”சொல்வதென்றால் எவ்வளவோ குறைகளும், கோரிக்கைகளும் உள் ளன. அவற்றை யார் தீர்க்கப்போகிறார்கள்?” என்றான். மன்ன னும் ”கவலைப்படாதே. நான் ஆசி கூறினால் உன் விருப்பம் நிறைவேறி விடும்” என்றான்.

அந்த ஏழையும் “நான் அரசனாக விரும்புகிறேன்” எனவே மன்னனும் “இதென்ன ஆசை! எல்லோரும் பணம் வேண்டும், புகழ் வேண்டும், சுகவாழ்வு வேண்டும் என விரும்பு வார்கள். நீ அரசனானால் இந்த மூன் றில் எது ஒன்றும் உனக்குக் கிடைக்காதே” என்றான்.

ஏழையும் ”ஏன் கிடைக்காது?” என்று கேட்கவே மன்னனும் “அரசனிடமுள்ள பணம் மக்கள் பணம். புகழை விட அவனுக்குக் கெட்ட பெயர்தான் அதிகம் வரும். சுகபோகங்கள் அவனுக்குக்கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும் பொறுப்புகள் மிக அதிகம். எனவே இம் மூன்றும் ஏழைக்குத்தான் சுகமளிக்கும். அரசனுக்கு இவற்றால் பயனே இல்லை” என்றான்.

Ambulimama_Tamil_1996_02_0010-picஏழையும் “நான் மன்னனாக விரும்புவது என்னை ஒருவன் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே. மன்னனைப் பற்றிப் பலர் காவியங்கள் எழுதுகிறார்கள். ஆனால் ஒரு ஏழையைப் பற்றி யாரும் காவியம் புனைவதில்லையே!” என்றான். மன்னனும் “பூ! இதுதானா உன் விருப்பம்? இது நிறைவேறும்படி ஆசி கூறுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

அந்த ஏழைக்கு இருப்பது ஒரே குடிசை அதில் இருப்பவன் அவன் ஒருவனே. மறுநாள் மன்னன் ஒரு கவிஞரை அந்த ஏழையின் குடிசைக்கு அனுப்பி வைத்தான். கவிஞரைக் கண்ட ஏழை “ஐயா!தாங்கள் என்குடிசைக்கு வந்த காரணம் என்னவோ?” என்று கேட்டான். கவிஞரும் அவனைப் பற்றி ஒரு காவியம் எழுத வந்திருப்பதாகக் கூறினார்.

ஏழையும் “என்னைப் பற்றிக் காவியமா? என் சிறப்புகள் என்ன?” என்று கேட்க கவிஞரும் “உன்னைப் பற்றிய விவரங்களைக் கூறு. அவற்றிலிருந்து உன் சிறப்புகள் என்ன என்று நான் தெரிந்து கொண்டு விடுவேன்” என்றார்.

ஏழையும் “நான் பிறந்ததும் என் தாய் தந்தையரை இழந்து விட்டேன். நான் எந்த வீட்டிலிருந்தாலும் அந்த வீட்டில் பெருத்த நஷ்டமே ஏற்பட்டது. முடிவில் சில பிரமுகர்கள் சேர்ந்து எனக்கு இந்த குடிசையைப் போட்டுக் கொடுத்தார்கள். நான் காட்டிற்குப் போய்கட்டைகள் எடுத்து வந்து விற்றுப் பிழைத்து வருகிறேன்” என்றான்.

கவிஞரும் “தினமும் நீ காட்டிற்குப் போவதால் அங்கு எதாவது துணிகரச் செயலைச் செய்திருப்பாயே” எனவே அவனும் “ஒருமுறை காட்டில் ஒரு நரியைப் பார்த்து ஓடியே வந்து விட்டேன். அதன் பிறகு இரண்டு நாட்களுக்குக் காட்டின் பக்கமே போக வில்லை. வாழ் நாட்களை எப்படியாவது கழித்தாக வேண்டுமே. அதனால் மறுபடியும் காட்டிற்குப் போனேன்” என்றான்.

Ambulimama_Tamil_1996_02_0011-picகவிஞரும் “ஏதாவது தானதர்மம் செய்திருக்கிறாயா?” என்று கேட்டார். அவனும் நானே சிரமப்படும்போது நான் எப்படி தான தர்மங்கள் செய்ய முடியும்? ஆனாலும் எப்போதாவது தானதர்மம் செய்வேன். அது எதற்குத் தெரியுமா? கடவுள் பக்தர்களைப் பரீட்சிப்பாராம். அத்தகைய பரீட்சையில் வெற்றி பெற்று பெயர் பெறுவதற்காகத்தான்” என்றான்.

கவிஞரும் “ஓய்வு நேரங்களில் ஏதாவது காவியங்களை நீ படிப்பது உண்டா?” என்று கேட்கவே “எனக்கு ஓய்வு ஏது? அப்படி ஓய்வு நேரம் கிடைத்தாலும் படுத்துத் தூங்கி விடுவேன்” என்றான். கவிஞரும் “உனக்குப் படிக்கவாவது தெரியுமா?” என்று கேட்கவே அவனும் “ஏன் தெரியாது? காவியங்களைப் படித்துப் புரிந்து கொள்வேன்” என்றான்.

கவிஞரும் “ஓ! உன்போன்ற ஏழை காவியங்களைப் படித்துப் புரிந்து கொள்வதும் ஒரு சிறப்பு அம்சம் தானே” என்றார். ஏழையும் “இந்தச் சிறப்பு அம்சம் என்னிடம் இல்லா விட்டால் நாளை நீங்கள் என்னைப் பற்றி எழுதப் போகும் காவியத்தை எப்படிப் புரிந்து கொள்வதாம்?” என்றான்.

கவிஞரும் “உன்னை எக்கோணத்தில் பார்த்தாலும் நீ தரித்திரம் பிடித்தவனே. உன்னைப்பற்றி காவியம் எழுத வந்தேனே. அது என் தலை விதி” என்று கூறி உடனேயே தாம் கொண்டு வந்த பனை ஓலைகளில் ஒரு சிறு காவியம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.

ஏழை அந்தக் காவியத்தைப் படித்துப் பார்த்தான். அதில் நூறு செய்யுள்கள் இருந்தன. எல்லாம் அவனைப் பற்றியதே. ஒவ்வொரு செய்யுளிலும் அவனது புகழே இருந்தது. அன்று முதல் அவன் இரவு வேளைகளில் தன் குடிசைக்கு எதிரே உள்ள மரத்தின் கீழ் உட்கார்ந்து ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு அவ்வழியே போவோர் வருவோரை எல்லாம் அழைத்து உட்கார வைத்து அந்தக் காவியத்தைப் படித்துக் காட்டி ”இந்தக் காவியம் யாரைப் பற்றி எழுதப்பட்டது தெரியுமா? என்னைப் பற்றித் தான்” என்று கூறி வரலானான்.

அதைக் கேட்டவர்களெல்லாம் “இப்படி கவிதை புனையும் சக்தி படைத்த புலவர் போயும் போயும் உன்னைப்பற்றிகாவியம் எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றால் அவர் எவ்வளவு தரித்திரம் பிடித்தவர் என்பது தெரிகிறது அந்தக் கவிஞர் இந்தக் தாழ் நிலைக்குத் தள்ளப்படக் காரணமானவர் இந்நாட்டு மன்னரே” எனக் கூறலாயினர்.

இதெல்Ambulimama_Tamil_1996_02_0012-picலாம் மன்னனுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது. ஒரு நாளிரவு மன்னன் மாறு வேடத்தில் சென்று அந்த ஏழை உட்கார்ந்திருந்த மரத்தின் கீழ்வேண்டுமென்றே விழுந்தான். ஆனால் அந்த ஏழை குத்துக் கல் போல உட்கார்ந்திருந்தானேயொழிய எழுந்து வந்து அவனைத் தூக்கிவிட வில்லை.

சற்று நேரத்திற்குப்பின் மன்னன் தானாகவே எழுந்து அந்த ஏழையிடம் போய் “முன்பு ஒருமுறை உனக்கு ஆசி கூறினேன். நீ விரும்பியதும் நடந்தது. நீ எனக்கு இப்போது உதவி இருந்தால் இப்போதைய உன் விருப்பமும் நிறை வேற ஆசி கூறி இருப்பேன். நீ எனக்கு உதவாததால் ஒரு அரிய வாய்ப்பினை இழந்து விட்டாய்” என்றான்.

ஏழையோ “ஐயோ! உன் ஆசி என்றாலே எனக்குப் பயம்” எனவே மன்னனும் “ஏன் பயப்படுகிறாய்?” என்று கேட்டான். ஏழையும் “நான் தான் முட்டாள்த்தனமாக எதையோ விரும்பிக் கேட்டால் நீயாவது நல்ல விதமாகச் சொல்லி நல்லதைக் கொடுத் திருக்கக்கூடாதா? ஒருகவிஞன் வந்து என்னைப் பற்றி ஒரு காவியம் எழுதி விட்டால் என் வயிறு நிரம்பிவிடுமா? இந்த காவியத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? நாலு பேருக் குப் படித்துக் காட்டினால் அவர்கள் சிரிக்கிறார்கள். இதை எழுதிய கவிஞ ரையும் இந்நாட்டு மன்னனையும் திட்டுகிறார்கள். கவிஞரோ இப்படி ஒருகாவியம் எழுதியது தன் தலைவிதி என்று தன்னைத் தானே நொந்து கொண்டே சென்றார். உன் ஆசியால் யாருமே மகிழ்ச்சி அடையவில்லை” என்றான்.

மன்Ambulimama_Tamil_1996_02_0013-picனனும் “இன்று நீ மகா புத்தி சாலி போலப் பேசுகிறாயே. அன்று ஏன் இந்த புத்திசாலித்தனத்தை நீ காட்டவில்லை?” என்று கேட்டான். ஏழையும் “கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தது எதற்கு? நல்லது எது கெட்டது எது என்று அறிந்து செயல் படத்தானே. மனிதன் மரணமோ, நோயோ, வலியோ வேண்டாம் என்கிறான். ஆனால் அவற்றைத் தவிர்க்க முடியாதே. மனிதனுக்குக்கடவுள் எல்லாம் கொடுக்கிறார். அவற்றில் தனக்கு சுகத்தையும் நன்மையையும் அளிப் பவை எவை என்று அவன் தன் அறிவைக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். நான்தான் அறிவுகெட்டு ஏதோ கேட்டால் நீயாவது யோசித்து எனக்கு அறிவுரை கூறி நல்லதைச் செய்திருக்கலாம். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. நீ செய்தது எனக்குத் கெடுதலே. இதனால் எனக்குப் பிறருக்கு உதவும் எண்ணமே இல்லாது போயிற்று” என்றான்.

மன்னன் அப்போது ஒரு ஏழையின் கள்ளம் கபடமற்ற உள்ளத்தைக் கெடுத்து விட்டதற்காக மனம் வருந்தினான். அவன் அந்த ஏழை சுகமாக வாழ எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான். அன்று முதல் மன்னன் யார் எதைக் கேட்டாலும் அதைக் கொடுப்பதற்கு முன்பே யோசித்து அவர்களின் தேவை எது எனக் கண்டு அதை மட்டும் கொடுத்து வந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *