தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 214,895 
 
 

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு

மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் –

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.

அதைப் பார்த்த ஒரு மனிதன், “”மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, “”மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்…” என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, “”மனிதனே, நீயும் தேடு… மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்” என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், “”நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்” என்றார்.

– ஆர்.பி.பரத்வாஜ ராவ், 7-ஆம் வகுப்பு,
ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர், சென்னை.
செப்டம்பர் 2012

5 thoughts on “தேடினால் கிடைக்கும்

  1. நைஸ் ஸ்டோரி..ஆல் தி பெஸ்ட் ..யு கிவ் பெஸ்ட் ஸ்டோரி அகைன் அண்ட் அகைன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *