(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா, முகுந்தன் இன்னும் வீடு திரும்பாததைக் கண்டு கவலைப் பட்டார். ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்குச் செல்பவன், மதிய வேளைக்கு வீடு திரும்பாமல் மாலை நேரத்திலேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவரது அலுவலகம் தொலை வில் இருந்ததால், அவரும் அதிகாலையிலேயே வேலைக் குக் கிளம்பிப் போய் மாலையில்தான் வீடு திரும்புவார்.
போக்குவரத்து நெரிசல், பயணச் செலவு இவை காரண மாகவே அவர் நடுவில் வருவதை தவிர்த்திருந்தார். அம்மா வும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று விடுவார். நடுத்தர குடும்பம் ஆதலால் வருமானம் கருதி இருவரும் வேலைக்குச் சென்று வந்தார்கள் வீட்டில் முகுந்தனும் குமாரி யும் இருந்தார்கள். இருவரும் முறையே ஐந்தாம்படிவமும் மூன்றாம் படிவமும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
முகுந்தன் வீட்டில் மூத்த பிள்ளையாதலால் அவனை நம்பித்தான் அவர்கள் அவனைவிட இரண்டு வயது இளைய வளான தங்கை குமாரியை அவனிடம் விட்டுச் சென்றார்கள். குமாரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் முகுந்தன் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்து வந்தார்கள்.
குமாரி காலையில் பள்ளி பஸ்ஸில் சென்று விடுவாள். முகுந்தன் சைக்கிளில் செல்வான். முகுந்தனின் பள்ளி அருகா மையிலேயே இருந்தது . ஒவ்வொரு நாளும் நேரம் கழித்து வருவதைக் குமாரி அம்மாவிடம் சொல்வாள்; அம்மா அவனை அழைத்துக் கண்டிப்பாள்.
அப்போதைக்குப் பல காரணங்களைக் கூறி சமாளிக்கும் அவன், மறுபடியும் தனது போக்கைத் தொடர ஆரம் பித்து விடுவான். திருந்திவிடுவான் என்று நினைத்த அம்மா இறுதியில் அப்பாவிடம் அவன் நடவடிக்கை பற்றிச் சொன் னாள். அவன் பள்ளி முடிந்து அன்றும் தாமதமாக வந்தது அதை உறுதிபடுத்தியது. அவன் தாமதமாக வரக்காரணம் என்னவென்று அவனை அப்பா விசாரித்தார்.
நண்பர்களுடன் இருந்து பாடங்களைப் படித்துவிட்டு வருவதாகக் கூறினான். சில மரணவர்களின் பெயர்களையும் கூறினான். அப்பா அவனைப் போய் குளித்து உடை உடுத்திக் கொண்டு வரச் சொன்னார். நாமெல்லாம் இரவு உணவுக்கு வெளியே போகிறோம். சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்கள் என்றார். முகுந்தன் மகிழ்ச்சியாய் ஓடினான். உல்லாசமாய் விசிலடித்துக் கொண்டு சினிமாப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே குளித்தான்.
மாலை மணி ஆறுக்கு அவர்கள் காரில் புறப்பட்டார்கள். நல்ல ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சுவையான இரவு உணவு உண்டார்கள். காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்ட போது இரவு மணி எட்டாகிவிட்டது. மறுநாள் பொது விடுமுறை நாள் என்பதால் கொஞ்ச நேரம் சில இடங்களில் சுற்றினார்கள்.
“முகுந்தன் உன்னோட நண்பர்கன் வீடு இங்கே இருக்கிறதா சொன்னே இல்லை, அவன் வீட்டுக்குப் போய் விட்டுப் போகலாமா?”
திடீரென்று அப்பா கேட்டதும் முகுந்தன் முகம் பயத்தால் வெளிறிப் போனது. அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந் திருந்தான். இரண்டு மூன்று முறை கேட்டபின்பு அப்பா அவனைக் கீழே இறங்கிக் கொள்ளச் சொன்னார். அம்மாவும் தங்கையும் அப்பாவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அம்மா அவனை அதட்டினாள். உண்மையைச் சொல்லாவிட் டால் தெருவிலேயே விட்டு விட்டுப் போய்விடுவோம் என்று பயமுறுத்தினாள். முகுந்தன் தான் பொய் சொன்னதாகப் பயந்து கொண்டே கூறினான்.
அப்பா காரை வேகமாக ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்— வீட்டின் உள்ளே அனைவரும் வந்ததும் கதவைச் சாத்தித் தாளிட்டார். இடுப்பில் இருந்த பெல்டைக் கழற்றி னார்; ஆத்திரம் தீரும் வரை முகுந்தனை அடித்தார்.
அவர் இதுபோல் கோபப்பட்டு அம்மாவும் குமாரியும் பார்த்ததே இல்லை. அம்மா அவரை அமைதிப்படுத்தினாள். உடம்பு சோர்ந்துபோய் நாற்காலியில் சாயந்தார் அவர். வாங்கிய அடிகளைத் துடைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் போய்ப் புகுந்து கொண்டான் முகுந்தன். அந்த அடிகளால் ஏற்பட்ட காயங்களோ… அதனால் ஏற்பட்ட வலியோ, அவனை ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை.
அப்பாவுக்குச் சூடாகக் காபி கொடுத்துவிட்டு அம்மா அவனைக் கவனிக்க உள்பக்கம் போனாள். குமாரி அப்பா வின் அருகில் உட்கார்ந்து அவரது கையைத் தடவிக் கொடுத்தாள் . அப்பா அவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார்.
“குமாரி… பொய் சொன்னா எனக்குப் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்லே… இவன் ஏன் பொய் சொன்னான்? இந்தப் பொய்க்குப் பின்னால, என்ன மர்மம் மறைஞ்சிருக் குன்னு தெரியலியேம்மா… என்கிட்டேயே இவன் பொய் சொல்கின்றான்னா, இவன் நல்லவன் இல்லேம்மா. அவன் பாதை தவறிட்டான். இவனுக்குப் பின்னால் யார் யாரோ இருக்கணும். இல்லேன்னா இப்படி ஒரு பொய் இவன் சொல்ல மாட்டாம்மா.
கவலையுடன் பேசும் அப்பாவைப் பார்க்கும்போது குமாரிக்கு கவலை அதிகமாகிவிட்டது.
நெஜந்தான்பா… என்கிட்டேயும் இவன் பொய் சொல் வான். நான் அப்பாகிட்டேச் சொல்லிடுவேன்னா என்னை அடிப்பேன்னு பயமுறுத்துவான்பா”
அப்பா அவனை ஆறுதலாய் தட்டிக் கொடுத்தார். மூத்தப்பிள்ளைன்னு மரியாதை குறைச்சிட்டான்மா, பொறுப்பா இருக்க வேண்டியவன் இப்படிப் பொறுப்பில் லாம போயிட்டான்’ குரல் கம்மியது அப்பாவுக்கு.
மறுநாள் விடுமுறையாக இருந்ததால், காலையில் எல் லோரும் ஒன்றாய் பசியாறினார்கள். குமாரி அம்மாவுடன் சமையல் வேலையில் கலந்து கொண்டாள். அப்பா ஹாலில் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தார். முகுந் தன் அவனது அறைக்குள் இருந்தான். அந்த நேரத்தில் வாசலில் யாரோ அழைப்பு மணியை அழுத்தினார்கள். குமாரி ஓடிவந்து கதவைத் திறந்தாள்.
வாசலில் இரண்டு பையன்களுடன் இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துப் பயந்துபோன குமாரி அப்பாவிடம் ஓடிவந்து விஷயத்தைச் சொன்னாள். அப்பா வெளியே வந்து பார்த்து, அவர்களுக்கு வணக்கம் கூறி உள்ளே வந்து அமரச் சொன் னார். அவர்கள் வெளியில் நின்றே பேசினார்கள். விபரங்க னைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் அப்பா முகுந்தனை அழைத்து அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். காவல்துறை அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்தனர்.
அவன் தடுமாறிப் போனான். பயத்தால் அழுதான் அப்பா எதையும் கவனிக்காமல் ஒதுங்கி நின்றார்.
“அப்பா நான் தப்பே பண்ணலப்பா, எல்லாம் அவனுங்க தான்பா செய்தானுங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா பணம் தர்றேன்னு சொன்னாங்கப்பா; நான் அவனுங்க கொடுத்ததை ப்ரண்ட்ஸ் களுக்கு வித்தேன், அவ்வளவு தான்பா.
முகுந்தன் அப்பாவின் காலைக் கட்டிக் கொண்டு கதறி னான். அவர் எதையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் போய்விட்டார். அம்மா ஓடிப்போய் அவரிடம் கெஞ்சினாள். ஆனால் அவர் யார் அழுகையையும் பொருட்படுத்த வில்லை காவல்துறை அதிகாரிகளிடம் அவனை ஒப்படைத்தார்.
நீங்களே விசாரணை பண்ணி என்ன செய்யனுமோ செய்யுங்க என்று சொல்லிலிட்டு, மனைவியை உளளே போகச் சொன்னார். அவன் அழுது கொண்டே போனாள். அவரும், தன்னறைக்குள் போய் அமைதியாய்ப் படுத்தார்.
முகுந்தனை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாலை நான்கு மணிக்கு முகுந்தனை ஓர் அதிகாரி அழைத்து வந்தார்.
“உங்க பையன் தவறு செய்யல சார். அவனுங்க கொடுத்த டிக்கட்டுகளை வெளியே விற்றுக் காசை கொடுத்தி ருக்கிறான். இன்னிக்கு ஏதோ தகராறு வந்து அவனுங்க இவனைக் காட்டிக்கொடுத்திட்டானுங்க எப்படி சார் உங்க பையன் அங்கே அவனுங்களோட போய் சேர்ந்தான். அவ னுங்கள உள்ளே தள்ளியாச்சு.. போனாப் போவுதுன்னு மன்னிச்சு இவனை வெளியே விட்டிருக்கோம். பத்திரமாப் பார்த்துக்குஙக சார்.
அவர்கள் போய்விட்டார்கள். முகுந்தன் அப்பா அம்மா விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பொல்லாத பையன்களோடு சேர்ந்து பொல்லாப்பைத் தேடிக் கொண்ட தாக வருந்தினான். இனி அவர்களுடன் சேரவே மாட்டேன் என்று உறுதியாய் சொன்னான்.
சாமி சத்தியமா நான் இனிமே இந்த மாதிரிப் பசங்க ளோட சேரமாட்டேன்பா, என்று அழுதான். அப்பா அவனை மன்னித்தார்.
“நல்ல நணபர்களைத் தேடி அவர்களோட நட்பு வெச் சுக்கிட்டா அது எப்பவுமே உதவியா இருக்கும். முகுந்தன் இனிமேலாச்சும் நல்லபடியா இரு… முதல்ல பொய் சொல்ற பழக்கத்தை விட்டுடு அப்பத்தான் உருப்பட முடியும்.
அப்பாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டான். அவர் அவனைத் தன்னுடன் அணைத்துக் கொண்டார்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும், மாந்தர்க்கும்
இனத்தியல் பதாகும் அறிவு. (குறள்:452)
விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_9897.html#452
– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை