(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் உயர்நிலைப் பள்ளியிலே கண்ணபிரான் என் னும் பெயருடைய ஓர் இளைஞன் படித்துக்கொண்டிருந் தான். அவன் தற்புகழ்ச்சியிலே மிகுந்த விருப்பம் உள்ளவன். பள்ளிக்கூடத் தேர்வு நெருங்கியது; மற் றைய மாணவர்கள் முயற்சியுடன் தங்கள் பாடங் களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். கண்ணபிரான் தன்னுடைய வகுப்பிலே மிகுந்த கெட்டிக்காரனாக இருந்தான். அதனால் ஆணவங்கொண்ட மாணவன், “எனக்குக் கணிதம், நிலநூல், தமிழ், ஆங்கிலம் முத லிய எல்லாம் நன்கு தெரியும். எத்தகைய கடின மான கேள்விகளுக்கும் பதில் எழுதிவிடுவேன்,” என்று இறுமாப்புடன் சொல்லிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாள் வந்தது. கண்ணபிரான் அன்று காலையிற் சிறிது படித்தான். பள்ளிக்கூடத்திற்குச் சென்று கேள்வித்தாளை எதிர்பார்த்திருந்தான். கேள்வித்தாள் வந்தது. எல்லாங் கடினமான கேள்வி களாக இருந்தன. ஒரு கேள்விக்குக்கூடக் கண்ண பிரானால் பதில் எழுத முடியவில்லை. அதனால் தேர்வில் தேராமற் போனான். அவனுடைய நண்பர்கள் கண்ணபிரானைப் பார்த்து, “எனக்கு எல்லாம் தெரியும் என்று உன் ஆற்றலைப் புகழ்ந்து பேசினாயே, இப் பொழுது ஏன் தேர்வில் தேரவில்லை?” என்று கூறிக் கேலி செய்தார்கள். அன்று முதல் கண்ணபிரான் வல்லமை பேசுவதை அடியோடு விட்டுவிட்டான்.
“வல்லமை பேசேல்” (இ – ள்.) வல்லமை – உன்னுடைய ஆற்றலை, பேசேல் = புகழ்ந்து பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955