(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
இழிந்தவர் கூட்டத்திற் சேராதிருத்தல்
எருக்கத்தம் புலியூருல் வாழ்ந்தவர் திரு நீல கண்டயாழ்ப்பாணர். இவர் மன நலத்தால் இசைக் கல்வியைக் கற்று, அதை யாழில் அமைத்து இசைக் கும் வன்மையும் பெற்றார். சிவனது பாடலை யாழி லிட்டு வாசிப்பதைக் கேட்டு அன்பர்கள் தரும் பொருளைக் கொண்டு காலங்கழித்து வந்தார். இவ ருக்கு மன நலம் இவ்வித செல்வத்தை அளித்தா லும், தாம், “மேலும் புகழ்பெற வேண்டும்” என்று ஆசைப்பட்டுத் திருஞான சம்பந்தரின் அடியவவராகி, அவர் பாடலை யாழில் அமைத்துப் பாடும் இன நலத்தைப் பெற்றதால் இவர் பெரும் புகழ் அடைந்தார்.
மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லாப் புகழும் தரும்.
மன் உயிக்கு = நிலைபெற்ற உயிர்களுக்கு
மனநலம் = நெஞ்சினது நன்மையானது
ஆக்கம் (தரும்) = செல்வத்தைக் கொடுக்கும்
இனம் நலம் = இனத்தினது நன்மையானது
எல்லாப்புகழும் = அதனோடு எல்லாப் புகழையும்
தரும் = கொடுக்கும்.
கருத்து: மன நன்மை செல்வத்தையும், இன நன்மை புகழையும் தரும்.
கேள்வி: மக்களுக்கு மன நலமும் இன நலமும் அளிப்பன எவை?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.