சிங்கத்தின் மோசம் அறிந்த நரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 70 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் ஒரு சிங்கம் இரை தேடிக் கொண் டிருந்தது. ஒன்றும் அகப்படவில்லை. கடைசியில் ஒரு குகையைக் கண்டது. ‘இந்தக் குகை ஏதாவது ஒரு மிருகம் தங்குமிடமாக இருக்கக் கூடும். அந்த மிருகம் தங்குவதற்கு வரும்வரை காத்திருப்பேன். வந்தவுடன் அடித்துக் கொன்று தின்பேன்’ என்று சிங்கம் அதனுள்ளே ஒளிந்திருந்தது. 

நெடுநேரம் சென்று அந்தக் குகையில் தங்கு கின்ற ஒரு நரி திரும்பி வந்தது. குகை வாசலில் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைக் கண்ட நரி, விழித்துக் கொண்டது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது. 

நரி, ‘ஏ குகையே! ஏ குகையே! என்று கூப்பிட்டது. 

பதில் இல்லை. 

‘ ஏ குகையே! ஏ குகையே!’ இன்று ஏன் பேச வில்லை!’ என்று நரி, இரண்டாவது முறை கூப்பிட்டது. 

அப்போதும் பதில் இல்லை. 

எப்போதும் இந்தக் குகை பேசும் போலிருக் கிறது. நாம் இருப்பதால் பயந்து பேசவில்லை போலும். குகை பேசாவிட்டால் நரி கோபித்துக் கொண்டு திரும்பிப் போய்விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய சிங்கம், குரலை மாற்றிக் கொண்டு ‘ஏன்?’ என்று கேட்டது. 

அந்தப் பதிலைக் கேட்டதும் நரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி விட்டது. 

எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *