சாம பேத தான தண்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 96 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி அதைக் கண்டது. அதன் இறைச்சியைத் தின்பதற்கெண்ணி அதன் அருகில் சென்றது. அப்போது அங்கு சிங்கம் வந்து சேர்ந்தது. நரியைக் கண்டு, ‘நீ யார்?” என்று அதட்டியது சிங்கம். 

”அரசே, தாங்கள் கொன்று போட்ட இந்த யானையைக் காத்துக் கொண்டு நான் இருக் கிறேன்” என்றது நரி. 

நரி அடக்க ஒடுக்கமாகவும் சமாதானமாகவும் பேசியதைக் கண்ட சிங்கம், அதன் பேரில் இரக்கப் பட்டு, “நரியே, இது நான் கொன்ற யானை அல்ல. ஆகவே நீயே இதை எடுத்துக்கொள்” என்று சொல்லிச் சென்று விட்டது. 

சிங்கம் சென்ற சிறிது நேரத்தில் அங்கு ஒரு புலி வந்து சேர்ந்தது. அது நரியை பார்த்து, ”நீ யார்? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று அதிகாரக் குரலில் கேட்டது. 

“புலி மாமா, இதை ஒரு சிங்கம் கொன்று போட்டது. அந்தச் சிங்கம் இந்தப் பக்கத்தில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஏதாவது புலி வந்தால் எனக்குச் சொல் என்று அந்த சிங்கம் சொல்லியிருக்கிறது. ஏன் என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிங்கம், ‘முன்னொரு யானையை நான் கொன்று போட்டுவிட்டு, நீராடப் போயிருந்த போது, ஒரு புலி வந்து அந்த யானையைக் கடித்துத் தின்று எச்சிலாக்கி விட்டது. ஆகவே புலியை அதற்குத் தண்டிக்க வேண்டும். என்று சொல்லியது”, 

இவ்வாறு நரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே புலி தப்பித்தேன் பிழைத்தேன் என்று அங்கிருந்து ஓடி விட்டது. 

இவ்வாறு பகையுணர்ச்சியினால் புலியை மாறு படச் செய்து ஓட்டியபின் அங்கு ஒரு குரங்கு வந்தது. 

“வா, வா இவ்வளவு பெரிய யானை இறந்து கிடக்கிறது. தின்ன ஆளில்லையே என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் உடலைக் கிழித்து வேண்டிய அளவு தன்னு” என்று கூறியது நசி. குரங்கும் சரி யென்று கூர்மையான தன் கை நகத்தால் யானையின் உடலைக் கிழித்தது. அது கிழித்து முடிந்த சமயம், ‘ஐயோ சிங்கம்! சிங்கம், அதோ வருகிறது!’ என்று நரி கூச்சலிட்டது! சிங்கம் என்றவுடன் பயந்து போய்க் குரங்கு ஓட்டம் பிடித்தது. 

‘அப்பாடா இந்த யானையின் தடித் தோலை எப்படிக் கிழிப்பதென்று யோசித்துக் கொண்டிருந் தேன். தானம் கொடுப்பது போல் காட்டிக் குரங்கை ஏமாற்றிக் கிழித்தாமிற்று. தின்ன வேண்டியதுதான்” என்று நரி யானையைத் தின்னப் போகும் பொழுது அங்கு மற்றொரு நரி வந்து சேர்ந்தது. 

உடனே அந்த நரியின் மேல் பாய்ந்து சண்டை யிட்டு அடித்து விரட்டி விட்டது. இவ்வரறு தண்டம் செய்து அதை ஓட்டியபின் அந்த யானை இறைச்சியைத் தனக்கே சொந்தமாக வைத்துக் கொண்டு நெடுநாள் வரை தின்று தன் பசியைத் தீர்த்துக் கொண்டது நரி. 

சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நான்கு வழிகளாலும் அறிவுடையவர்கள் தங்கள் விருப்பத்தை முடித்துக் கொள்வார்கள். 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 4 – பெற்றதை இழக்கச் செய்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *