சண்டை எத்தனை நாளைக்கு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,183 
 
 

ராமுவும் சோமுவும் ஒரே வகுப்பு. இருவரும் ஒருவரையருவர் எப்போதும் வம்பிழுத்துக்கொண்டே இருப்பார்கள்.

இதை ஒருநாள் கவனித்த ஆசிரியர், ”ஏன்டா இப்படி உங்களுக்குள்ளே அடிச்சுக்கறீங்க? ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு, ஒத்துமையா இருக்கணும். இனிமே, சண்டை கிண்டை போட்டீங்க, அடி பின்னிடுவேன்!” என்று அதட்டினார்.

ஒருநாள், எல்லோரும் தீம் பார்க் போனார்கள். ராமுவும் சோமுவும் ஒன்றாக, ஒற்றுமையாக நடந்து போவதைத் திருப்தியோடு பார்த்தார் ஆசிரியர். ஓரிடத்தில், ”டேய், நான் அங்கே பெஞ்ச்சுல உட்கார்ந்திருக்கேன். எனக்கு ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் வாங்கிட்டு வந்து தரியா?” என்று காசை நீட்டினான் ராமு.

ஆசிரியர் கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதால், சோமு தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, தன் பையை ராமுவிடம் கொடுத்துவிட்டு ஜூஸ் வாங்கி வரப்போனான். அவன் போனபின், ஆசிரியர் பார்க்காத நேரத்தில், சோமுவின் ஸ்நாக்ஸ் டப்பாவைத் திறந்து எச்சில் துப்பிவிட்டு, மூடி வைத்தான் ராமு. சோமு திரும்பி வந்து, ராமுவிடம் ஜூஸைக் கொடுத்துவிட்டு, ஸ்நாக்ஸ் டப்பாவைத் திறந்தான். அதில் ராமு எச்சில் துப்பி வைத்திருப்பது தெரிந்தது.

சலிப்போடு சோமு கேட்டான்… ”நாம இன்னும் எத்தனை நாளைக் குடா ராமு, ஒருத்தர் மேல ஒருத்தர் வெறுப்பா இருக்கப்போறோம்… இப்படி ஸ்நாக்ஸ் பாக்ஸ்லயும் ஜூஸ்லயும் எச்சில் துப்பிக்கிட்டு..?”

– 04th ஜூன் 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *