(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு கொக்கு இருந்தது. அது இடுகிற முட்டைகளை யெல்லாம் ஒரு நாகப் பாம்பு தெரியாமல் வந்து தின்று கொண்டிருந்தது.
என்ன செய்வதென்று தெரியாத கொக்கு, தனக்குத் தெரிந்த நண்டு ஒன்றிடம் போய் என்ன செய்யலாம் என்று கேட்டது.
அது ஓர் அருமையான வழி சொல்லிக் கொடுத்தது.
ஒரு கீரி வளையிலிருந்து பாம்புப் பொந்து வரை வரிசையாக மீனைப் போட்டு வைக்கச் சொல்லியது. கொக்கு அவ்வாறே மீன்களைப் பிடித்துக் கொண்டு போய்ப் போட்டது.
கீரிப்பிள்ளை ஒவ்வொரு மீனாகத் தின்று கொண்டே பாம்பின் பொந்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்த பாம்போடு சண்டையிட்டு, அதைக் கடித்துக் கொன்று விட்டது. திருட்டுப் பிழைப்பு என்றும் ஆபத்துதான்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.