கூடா ஒழுக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,359 
 

துறவிகளுக்குப் பொருந்தாத நடத்தை

மதுரையில் உள்ள சைவ மடத்தில் பலர் வந்து காவி உடை உடுத்துத் துறவியாக ஆயினர். மேலும், மேலும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். இவர்கள் யாவரும் காலையில் வைகையில் நீராடுவது; காவி உடை, விபூதி, உருத்திராக்ஷம் அணிவது; கோயில் செல்வது; வந்து மீண்டும் உண்பது; இவ் விதம் தங்கள் காலத்தைக் கழித்துக் கழித்துக் கொண்டிருந்தார்கள், இவர்களில் உண்மையான துறவி எவர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அம்மடத்துத் தலைவர் அவர்கள் ஒரு உபா யம் செய்தார்கள். இரவில் எல்லோருக்கும் குடிப்ப தற்காக வெந்நீர் அடுப்பிலேயே போட்டுவைப்பது வழக்கம். அன்று சமயல்காரனைக் கூப்பிட்டு ‘இன்று வெந்நீர் நன்றாகக் கொதித்து வரும்போது அதில் ஒரு பிடி சாணத்தைப் போட்டு மூடிவிடு” என்று சொன்னார்கள். அவனும் அவ்விதமே செய்தான். இரவு நடுநிசியில் துறவிகள் யாவரும் போய் வெந்நீர் குடித்தனர். குடித்தவுடன் நெடி தலைக் கேறியது; தொண்டை கரகர என்றது; வயிற்றைப் புரட்டியது; இரவு முழுதும் தூக்கம் வரவில்லை; அதில் ஒருவர் நாம் செய்த பாபம் என்று பேசாது இருந்தார். மற்றவர்கள் விளக்கை ஏற்றிப் பார்த் தார்கள்; அதில் சாணம் கிடப்பதைக் கண்டார்கள். கோபம் பொங்கியது. மடத்தில் கொட்டகை போடப்பட்டிருந்த கழியை எடுத்து கையில் வைத் துக்கொண்டு எப்போது சமையல்காரன் வருவான்” என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள், அச் சமயம் மடத்துத் தலைவர் அங்கே வந்தார்; ஒரு வரைத் தவிர ஏனையோரெல்லாம் கையில் மூங்கில் கழியை வைத்திருப்பதைக் கண்டார். “ஏன் இந்தக் கழியோடு நிற்கிறீர்கள்?” என்று துறவிகளைத் தலைவர் கேட்டார். துறவிகள் – இரவு வெந்நீர் போட்டு அதில் சாணத்தையும் போட்டுவிட்டான் சமையல்காரன். அந்த நீரை நாங்கள் குடித்துப் படாதபாடு பட்டுத் தூங்காமல் வருந்துகிறோம்”. இவ்வித வருத்தத்தை எங்களுக்குச் செய்த அவன் வந்தால் அடித்துக் கொல்லவே நிற்கிறோம்.” என்றார்கள். இதைக்கேட்டுத் தலைவர், இச்சிறு குற்றத் திற்காகப் பொறுமை யில்லாது கோபித்த உங்க ளுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை; ஆகையால் ”ஊர் சென்று சிலநாள் இருந்து பின்பு வந்து துறவியாகலாம்” என்று பொறுமையோடு இருந்த ஒரு வரை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களுcகு விடைகொடுத் தனுப்பினார். வள்ளுவரும் அம்பு உருவத்தில் அழகாகவும் நேராகவும் இருந் தாலும் செயல் செய்யும்போது அது மக்களைக் கொல்லும். வீணை வளைவாக இருந்தாலும் அது மக்கள் செவிக்கு இன்பத்தை அளிக்கும். அவ்விதமே தவம் செய்வாரை அவரவர்களின் வேடங்களினாலே நல்லவர் தீயவர் என்று கொள்ளாமல் செயலின் பாகுபாட்டினாலே அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

கணை = அம்பானது
கொடிது = (வடிவினாலே செவ்விதாய் இருந்தாலும் செயலினாலே) கொடியதாய் இருக்கிறது.
யாழ் = வீணையானது
கோடு = (வடிவினாலே) வளைவாய் இருந்தாலும்
செவ்விது = செயலினாலே செவ்விதாய் இருக்கின்றது.
ஆங்கு = அவ்வகையே
அன்ன = தவம் செய்வார் கொடியர், செவ்வியர் என்பன
வினைபடுபாலால் = (அவரது வடிவிலே கொள்ளாமல்) அவரது செயலில் உண்டாகும் பாகு பாட்டாலே
கொளல் = அறிந்து கொள்ளுக.

கருத்து: அம்பு நேராய் இருந்தும் கொடுமை செய் யும்; வீணை வளைந்திருந்தும் இனிமை செய்யும்; அதுபோலத் தவமுடையார் செயல் தீமையாயின் கொடியர் எனவும், நன்மையாயின் செவ்வியர் எனவும் கொள்க.

கேள்வி: துறவிகளில் நல்லவர் தீயவர்களைக்கண்டறிவது எப்படி?

கொடிது +யாழ்; கொடி.தியாழ்; குற்றியலிகரம்.

கொளல், உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று.

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *