குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 7,753 
 
 

அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது. குட்டி யானை கணேசனுக்கு ஒரே சந்தோசம், அவனுடைய நண்பர்களுக்கு வாழைப்பழம் என்றால் உயிர். அதனால் இரண்டு வாழைத்தார்களையும் தன் குட்டித்தும்பிக்கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சென்றது.

வழியில் நரியார் வழி மறித்து “குண்டு கணேசா” என்ன கொண்டு போகிறாய்? என்று கேட்டது. குட்டி யானை கணேசனும், என்னோட நண்பர்களுக்கு பழம் கொண்டு போகிறேன் என்று சொன்னது. அப்படியா ரொம்ப சந்தோசம் எனக்கும் இரண்டு சீப் பழம் கொடு என்றது. ஹ¥கூம் அதெல்லாம் முடியாது, என்னோட நண்பர்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்று சொன்னது. நான் உன்னை விட மூணு கிளாஸ் அதிகமா படிக்கிறேன், எனக்கே கொடுக்க மாட்டீங்கறயா? என்று மிரட்டியது., குட்டி கணேசன் பயந்து கொண்டு சரி சரி இந்தா இரண்டு சீப் பழம் மட்டும்தான் என்று சொல்லி நா¢யாரிடம் கொடுத்துவிட்டு வேகமாக நடந்த்து.

கொஞ்ச தூரம் சென்றதும் வழியில் குரங்கு குசலா வந்துகொண்டிருந்தாள். அவள் குட்டி கணேசன் வகுப்பில்தான் படிக்கிறாள். என்ன தும்பி கணேசா வாழைப்பழத்தை எடுத்துட்டு எங்கே போகிறாய்? நான் என் நண்பர்களை பார்க்க போறேன் என்று பதில் சொன்னது குட்டி யானை கணேசன். அப்படீயா ரொம்ப மகிழ்ச்சி, அதுக்கு வாழைப்பழம் எதுக்கு எடுத்துட்டு போறே?அதுவா எனக்கு பிறந்த நாள் அதுக்குத்தான் என்று குட்டியானை கணேசன் சொன்னான். ரொம்ப மகிழ்ச்சி, நான் உன்னுடைய வகுப்பில்தானே படிக்கிறேன். எனக்கும் இரண்டு சீப் பழம் கொடுத்துட்டு போ,என்று கேட்டது.முதலில் மறுத்த குட்டி யானை கணேசன் சரி இந்தா என்று பரிதாபப்பட்டு இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

அடுத்ததாக கரடியார் எதிரில் வந்து குட்டி யானை கணேசனிடம் வாழ்த்துச்சொல்லி இரண்டு சீப் பழங்களை கொடுக்கச்சொன்னது.குட்டி யானை கணேசனும் வேறு வழியில்லாமல் இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

அதற்குப்பின்னால் வா¢சையாக மான்,ஓநாய்,முயல்,காட்டுப்பன்றி,என்று வாழ்த்துச்சொல்லி,”எனக்கு இரண்டு சீப் பழம் கொடு” என்று வாங்கி சென்றன. இப்படி எல்லாருக்கும் கொடுத்து,கொடுத்து, கொண்டு போன இரண்டு வாழைத்தார் பழங்களும் தீர்ந்து போய்விட்டன. குட்டி கணேசனுக்கு அழுகை தாங்க முடியவில்லை. “கோவென” அழுதுகொண்டே தன் நண்பர்களை பார்க்காமல் மறுபடியும் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டது.

அப்பா யானையும், அம்மா யானையும், மகன் குட்டி யானை கணேசன் அழுதுகொண்டே ஓடி வருவதை பார்த்து பதட்டத்துடன் என்ன கணேசா எதற்கு அழுதுகொண்டே ஓடி வருகிறாய்? என்று கேட்டன. அதற்கு குட்டி யானை கணேசன் தான் கொண்டு போன பழங்களை, எல்லோரும் வாங்கிக்கொண்டதையும், கடைசியில் ஒரு பழம் கூட இல்லாமல் தீர்ந்துவிட்டதால், நண்பர்களை பார்க்காமல் ஓடி வந்து விட்டதை அழுது கொண்டே சொன்னது.

இவ்வளவுதானா! இதற்கா அழுவுவது, எல்லோருக்கும் கொடுத்து உதவுவது நல்லதுதானே, அதுவும் உன் பிறந்த நாளைக்கு இப்படி எல்லோருக்கும் கொடுத்து உதவினால் புண்ணியம் தான் கிடைக்கும்.கவலைப்படாதே, உனக்கு வேணும் என்கிற அளவுக்கு பழங்கள் தருகிறேன் என்னுடன் வா, என்று அப்பா யானை குட்டியானை கணேசனை அழைத்தது.அப்பொழுது வெளியில் ஒரே சத்தம் என்னவென்று அப்பா, அம்மா, குட்டி யானை கணேசன், ஆகியோர் எட்டிப்பார்த்தனர். வெளியே நா¢,கரடி, மான், குரங்கு, மற்றும் குட்டியானை கணேசனிடம் பழம் வாங்கியவர்களும், கூடவே குட்டி யானை கணேசனின் நண்பர்கள் ஆகியோர் கைகளில் பரிசுப்பொருள்களுடன் நின்று கொண்டு “ஹேப்பி பர்த்டே கணேசா” என்று சொல்லி கொண்டு வந்த பரிசுப்பொருட்களை அதன் கையில் கொடுத்தன.

இதைப்பார்த்த குட்டியானை கணேசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, பெருமையாக தன்னுடைய அப்பாவை பார்க்க “பார்த்தாயா கணேசா நாம் ஒருவருக்கு கொடுத்தால் அது பல மடங்கு நமக்கே வரும்” பழம் கொடுத்தற்கு அழுதாயே, உனக்கு இப்பொழுது எத்தனை பரிசுப்பொருட்கள் வந்துள்ளது பார்த்தாயா, நம் வீட்டில் உள்ள எல்லா பழங்களையும் கொண்டு போய் அவர்களுக்கு கொடு என்று அன்புடன் சொல்ல, குட்டியானை கணேசன் அனைவரையும் இருக்கச்சொல்லி ஓடி ஓடி பழங்களை கொடுத்து மகிழ்ந்தது.

(அனைவருக்கும் கொடுத்து உதவினால் உங்களுக்கு இரு மடங்காய் திரும்ப கிடைக்கும் என்பதை தொ¢ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே)

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

1 thought on “குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்

  1. அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *