காட்டு முனிவரும் வீட்டு முனிவரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,868 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு முனிவர் காட்டிலே தவஞ்செய்து கொண் டிருந்தார். அவர் மிகுந்த மன உறுதியுள்ளவர். தவத் தினால் எத்தகைய காரியத்தையும் எளிதாகச் செய்யக் கூடிய ஆற்றலுடையவர். அவர் ஒருமுறை காட்டை நீங்கி நாட்டிற்கு வந்தார். சென்னை திருமயிலையில் அந்நாள் வாழ்ந்திருந்த திருவள்ளுவர் இல்லத்திற்குச் சென்றார். திருவள்ளுவருடைய வீடு ஒரு குடிசையாக இருப்பதைப் பார்த்தார். திருவள்ளுவருக்கு நல்ல உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினார். திரு வள்ளுவருடைய குடிசையை ஓர் அழகிய பெரிய வீடாக மாற்றிவிட்டுத் திருவொற்றியூருக்குச் சென்றார்.

காட்டு முனிவரும் வீட்டு முனிவரும் 67 தாம் திருவள்ளுவருக்குப் பேருதவி செய்துவிட்ட தாக அம் முனிவருக்கு மிகுந்த செருக்கு. ஒரு திங்கள் கழித்து மீண்டுந் திருமயிலைக்கு வந்தார். தாம் அமைத்த வீட்டில் திருவள்ளுவர் நலமுடன் வாழ்ந்து கொண் டிருக்கிறாரா என்று பார்த்தார் முனிவர். திருவள்ளுவர் அந்த வீட்டைவிட்டுப் பக்கத்தில் ஒரு குடிசை அமைத் துக்கொண்டு அதில் வாழ்ந்திருத்தலைப் பார்த்தார். “நான் அமைத்துக்கொடுத்த வீட்டில் ஏன் குடியிருக்க வில்லை?” என்று திருவள்ளுவரைப் பார்த்துக் கேட் டார்.

அதற்குத் திருவள்ளுவர், “மோகத்தை ‘முனி’ என்று அறிஞர்கள் மொழிந்திருக்கிறார்கள். அவ் வாறாக நீவிர் எனக்கு உலகப் பொருள்களின் மேல் அவாவுண்டாக்கப் பார்க்கிறீரே, இது தகுமா?” என்று கேட்டார். அந்த முனிவர், “இந்தப் பெரியோர் தத்துவ ஞானி என்பதை அறியாமற் போனோமே” என்று நாணிச் சென்றார்.

‘மோகத்தை முனி” (இ – ள்.) மோகத்தை – நிலையில்லாப் பொருள்களின் மேல் உள்ள அவாவை, முனி – சினந்து விலக்கு.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *