காகமும் நரியும் ..பாட்டி சுட்ட வடையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,390 
 
 

ஒரு காகம் பறந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியிலே ஒரு பாட்டி வடை
சுட்டுக் கொண்டிருப்பதை பார்த்தது.

அந்த மரத்துக் கிளை மேலே பறந்து போய் உட்கார்ந்து கொண்டு பாட்டியைப் பார்த்து,
‘ஹாய் பறவை முனியம்மா பாட்டி ஹௌ ஆர் யூ ‘ என்று கேட்டது.

பாட்டி ஆச்சரியத்தோடு, ‘ஹாய் காக்கா ஐ யாம் ஃபைன் ஆமாம் என் பேரு உனக்கு எப்படித் தெரிந்தது’ என்று கேட்டாள்.

‘நான் தான் வாராவாரம் சன் டிவியில நீ சமைக்கிறத பார்த்திருக்கேனே’

‘அது சரி இப்ப எதுக்கு இங்க வந்தே வடை திருடத்தானே’

‘நோ நோ டோன்ட் மிஸ்டேக் மீ ஐ யாம் நாட் அ தீஃப் .வடை சுடும் வாசனையைப் பார்த்து வாங்கிச் சாப்பிட வந்தேன்’

‘சரி சரி இந்தா சாப்பிட்டுப் பாரு’என பாட்டி குடுக்க

காகம் கேட்டுது,’ஆமா இது பிரீ ஹீட் பண்ண எண்ணையில சுட்டதா?’

‘பிரீ ஹீட்டுன்ன்னா?இது ரிபைன்ட் ஆயில்லதான் சுட்டேன்’

‘பிரீ ஹீட்டுன்னா நெறய முறை வாணலியில் சூடுபடுத்தி உபயோகப் படுத்தனது.அதைத் திரும்பத் திரும்ப சுட வைக்கும் போது அதன் குணம் மாறி உடம்புக்கு கெடுதல் செய்யும்.வயிற்றுக் கோளாறு,அல்சர்,அஜீரணம் எல்லாம் வரும்.ஏன் தொடர்ந்து யூஸ் பண்ணா கேன்சர் கூட வரலாம்’

‘ஓ அப்படியா? இது சுத்தமான ஆயில்தான் சுட்டேன் .
இனி நான் அடிக்கடி சூடுபடுத்தியதை உபயோகிக்க மாட்டேன்.
தகவலுக்கு நன்றி.
இந்தா நீ இவ்ளோ நல்லவனா பொய் சொல்லாம திருடாம இருப்பதால் உனக்கு ஃபிரீயாவே ஒரு வடை தரேன்’என்று முனியம்மா பாட்டி வடையைக் கொடுத்தாள்.

காகம் வடையுடன் இருப்பதைப் பார்த்த ஒரு நரி தந்திரமாக அதை அபகரிக்க எண்ணி,
‘ஹல்லோ மிஸ்டர் காகம் யூ ஆர் வெரி பியூட்டிஃபுல் அண்டு ய குட் சிங்கர் டூ.
ஃப்ளீஸ் எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்’ என்றது.

காகம் ,’ஹலோ மிஸ்டர் நரி இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட பலிக்காது. நீ என்னை ஏமாத்தி வடையை பிடிங்கி தின்ன தானே பார்க்கிறாய்’ என்றது.

காகம் சொன்னதைக் கேட்ட நரி இதை ஏமாத்த முடியாது எனப் புரிந்து கொண்டு ஓடி விட்டது.

ஹாய் குட்டீஸ் கதை எப்படி ஓகே வா?புடிச்சிருக்கா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *