கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 118 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாலமுருகன் இரண்டு வாரமாய்ப் பன்ளிக்கூடம் வர வில்லை. அவன் வராததால், மோகனுக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது . எளிமையான குடும்பத்தில் பிறந்துவிட்ட மோகனுக்கு மூன்றாம் படிவம் வரை கல்விபயிலும் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டவன் பாலமுருகன்தான்.

வசதி மிக்க குடும்பத்தில் பிறந்த பாலமுருகன் தன்னை விட வசதி குறைந்த வறுமையான குடும்பத்துப் பிள்ளையான மோகனுடன் நட்பு வைத்துக் கொள்ள, பல காரணங்கள் இருந்தன.

மோகன் பொய் சொல்லவே மாட்டான். எப்போதும் சுறுசுறுப்பாய்க் காணப்படுவான். ஆடைகள் எளிமையாய் இருந்தாலும் தூய்மையாய் இருக்கும், பணிவும், பரிவும் அவனிடம் மிகுந்து காணப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் படிப்பில்’ கெட்டிக்காரனாய் இருந்தான். அவனது கையெழுத்து முத்துக் கோர்த்தது போலிருக்கும்.

பாலமுருகனுக்குப் புரியாத பாடங்களை விளக்குவதி லும், புதிய புதிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலும் ஒரு பெரிய மனிதரைப் போல் அவன் நடந்து கொள்வான். சகமாணவர்கள் ஆசிரியர்கள் அவனை வெகுவாக நேசித் தார்கள்.

நகரசபைத் தொழிலாளியான மோகனின் தந்தை, ஒரு நாள் தான் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தாயில்லாத பிள்ளை யான மோகன் மிகவும் கஷ்டப்பட்டான் தேர்வுக் காலமாகை யால், பணத்திற்குத் தடுமாறினான் அந்த நேரத்தில் பாலமுரு கன் தன் தந்தையிடம் சொல்லி, மோகனின் அப்பாவுக்கு உதவி செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். அவரது சிபாரி சின் பேரில், மோகனின் அப்பா நல்லவிதமான சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மோகனுக்கு தேவைப்பட்ட பணவுதவியும் செய்தார். மோகனுடன் பாலமுருகன் நட்பு கொண்டிருந்ததை அவர் தடை செய்யவில்லை . ஓய்வான நேரங்களில் இருவரையும் பார்க்க நேர்ந்தால் சில மணி நேரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு பொது அறிவுக் கேள்விகளைக் கேட்பார் எல்லா விதக் கேள்விகளுக்கும் மோகனே சரியாக பதில் சொல்வான்.

வெளியூர் சென்று விட்டதாக அறிந்து அவனது வீட்டிற்குச் சென்ற மோகனிடம் பாலமுருகனின் அம்மா சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியைத் தந்தன. மதிய உணவுக்கு வந்த அப்பாவும் அதை உறுதிபடுத்தினார்

“எனக்கே விளங்கல மோகன். இந்தியாவிலேர்ந்து வந்திருந்த சித்தப்பா பிள்ளைகளோட ஊர் சுத்திப் பார்க்க னும்னு ஆசைப்பட்டான். அவுங்க கிளம்பினதும் கூடவே புறப்பட்டுப் போய்ட்டான். பள்ளி விடுமுறையில் நீயும் இந்தப் பக்கம் வரல. ஊருக்குப் போனவன் திரும்பாம அங்கேயே தங்கிட்டான். பள்ளிக்கூடம் திறந்தாச்சுன்னு சொன்னா’ ‘ பரவாயில்லேன்கிறான்’ ‘ எனக்கு என்ன பண்ற துன்னே தெரியலப்பா”

மோகன் ஆச்சர்யப்பட்டான். படிப்பில் பாலமுருக னுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது என்னவோ ஓரளவு உண்மைதான் என்றாலும், அது இந்த அளவுக்கு படிப்பை உதறித் தள்ளும் அளவுக்குப் போகும் என்று மோகன் எதிர்பார்க்கவில்லை அவனை நினைத்து மிகவும் வருந்தி னான். அதிகமாய் செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்து விட்டார்களோ என்று பயந்தான்.

“அங்கிள் நீங்க போய்க் கூப்பிட்டா அவன் வரமாட்டானா அங்கிள”

பாலமுருகனின் அப்பாவிடம் கவலையாய்க் கேட்டான். அவர் நெகிழ்ந்து போனார். அவனைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு ஆறுதலாய்த் தட்டிக் கொடுத்தார். “வருவான்…நீ என் கூட வந்தா அவன் நிச்சயமா வருவான்…நீ என்னோட இந்தியாவுக்கு வர்றியா?”

மோகனுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆர்வம் ஒருபுறம்.

“நானா” ஊருக்கா? திகைத்தான். அவர் தலையை ஆட்டினார். வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லி அவரது சம்மதத்தை வாங்கினான்.

இரண்டே தினங்களில் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து அவசரமான விடுமுறையாக ஒரு வாரகாலம் பள்ளி யில் விடுமுறை வாங்கிக் கொண்டு பாலமுருகனின் தந்தை பயணமானார்.

பாலமுருகன் இதை எதிர்பார்க்கவே இல்லை. மோகனை ஆவலுடன் கட்டிப்பிடித்துக் கொண்டான். நண்பர் கள் இருவரும் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.

“இதெல்லாம் எங்கப்பா வாங்கினது மோகன்; எங்கப் பாவுக்கு அஞ்சு தொழிற் சாலைகள் இருக்கு… பெரிய பெரிய நகைக்கடை புடவை கடையெல்லாம் இருக்கு… அது மட்டு மில்லே மோகன் அப்பா ரெண்டு சினிமா ஸ்டூடியோவும் வெச்சிருக்காங்க. சினிமால்லாம் அங்கேதான் ஷூட் பண் றாங்க…

நீயும் இங்கேயே இருந்துடு மோகன்… இதெல்லாம் எனக்குத்தான்னு சித்தப்பா சொன்னாங்க நீ படிச்சு பட்டம் வாங்கி வேலையா பார்க்கப் போறேன்னு , சித்தி சொல் றாங்க.. இப்பவே இங்கேருந்து இதெல்லாம் பார்த்தாதான் பின்னால எல்லாம் சுலபமா இருக்கும்னு பாட்டியும் சொல் றாங்க.

“இன்னும் பத்து வருஷத்தில நான் பெரிய முதலாளி ஆயிடுவேன்னு எல்லாரும் சொல்றாங்க. நீயும் என்கூடவே இருந்தா, எனக்கு ரொம்ப உதவியா இருக்கும், இங்கேயே நீயும் இரு மோகன். “

நண்பனிடம் பெருமையாய் சொல்லிவிட்டு அவனது கைகளைப் பற்றிக் கொண்டான் பாலமுருகன். மோகனுக்கு அவனை நினைத்துப் பார்க்கையில் அவன் மீது அனுதாபமே பிறந்தது.

“பாலா…எந்த நம்பிக்கையில நீ இப்படிப் பேசிக்கிட்டி ருக்கேன்னு எனக்குப் புரியலே… இதெல்லாம் உங்கப்பா தேடினது. உனக்கு மட்டும் இது சொந்தமில்லே; மத்தவங்க ளுக்கும் இது சொந்தமா இருக்கும். அது மட்டுமில்லாம இதெல்லாம் எப்பவும் நமக்கு நிரந்தரமானதில்லே. ஒருதரம் புயலடிச்சு வெள்ளம் வந்தா இதையெல்லாம் அது கொண்டு போயிடும். எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டாலும் இதெல் லாம் மிஞ்சாது. நீராலேயும் நெருப்பாலேயும் கள்வராலேயும் காலத்தாலேயும் அழியாத சொத்து, இந்த வயசில நாம படிக்கிற படிப்புதான்.

எவன் ஒருவன் இளமையில் கஷ்டப்பட்டுப் படிச்சு தன்னை அறிவாளியாக்கிக்கிறானோ அவன்தான் கோடீஸ்வ ரன். படிப்பிருந்தா பிற்காலத்தில பணத்தை தேடிக்கலாம். ஆனா வயசான காலத்தில பணத்தை வெச்சு படிப்பைத் தேட முடியாது அது ரொம்ப கஷ்டம்.

இப்ப நீ கஷ்டப்பட்டுப் படிச்சா இன்னும் பத்து வருஷத் தில நீ ஒரு டாக்டரா.. ஒரு வழக்கறிஞரா வந்து இதைவிட இன்னும் பல மடங்கு சம்பாதிக்கலாம் அந்த நேரத்தில் உன்கிட்டே அளவு கடந்தசொத்தும் இருக்கும்…விலைமதிப் பில்லாத கல்வியும் இருக்கும். தயவு செய்து என்னோட புறப்படு பாலா…நம்ம நண்பர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் உன்னைப் பார்த்தா மகிழ்ச்சி அடைவாங்க.

மோகன் வார்த்தைகளால் பாலா குழம்பிப் போனான் . சிறிது தூரம் மெளனமாக நடந்தான் ‘அவனது மவுனத்தை மோகன் கலைத்தான்.

“இங்கே பாரு பாலா…இந்தச் சின்ன வயசு… அதிலே யும் மாணவப் பருவம் திரும்பக் கெடைக்காத ஒன்னு. எதை வேணுமானாலும் திரும்ப வாங்கிடலாம் ஆனால் நேரத்தை வெலைகுடுத்து வாங்க முடியாதும்பாங்க…அது மாதிரிதான் இந்த வயசு.

அன்பான ஆசிரியர்கள், பிரியமான நண்பர்கள்; இருட் டிலேர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர்ற புத்தகங்கள்… இதெல்லாம் சேர்ந்து நம்மை முழு மனிதராக்கி இந்த உலகத்துக்கு அடையாளம் காட்றது இப்பத்தரன்… இந்த வயசில தான் கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை நீ நழுவ விட்டுடாதே”

மோகன் பாலாவின் கைப் பிடியிலிருந்து விடுபட்டு நடந்தான். நடையில் வேகம் அதிகமானது அவனை ஓடிப் போய் பிடித்து நிறுத்திய பாலமுருகன் சொன்னான்.

“நான் எதையும் இழக்க மாட்டேன் மோகன்; எனக்கு நண்பர்கள். நம்ம ஆசிரியர்கள் புத்த்கங்கள் நம்ம ஸ்கூல் எல்லாமே வேணும்…இது எல்லாத்துக்கும் மேலா நீயும் எனக்கு வேணும்.

இருவரும் ஆரத்தழுவிக் கொண்டார்கள். இரு தினங்களுக்குப் பின் இந்தியாவில் கண்டு மகிழ்ந்த இனிய காட்சிகளின் நினைவோடு தங்கள் தாய் மண்ணுக்குத் திரும்பினார்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை. (குறள் : 400)

விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_8369.html#400

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *