கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 5,165 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எல்லா வீடுகளிலும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த உயரமான அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் இருக்கும் தனது வீட்டின் சமையலறையில் வேலையாயிருந்த வேணியின் மனதில் வினாடிக்கு வினாடி பயம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

இரவு மணி எட்டு அடிக்கப்போகும் அந்த வேளையில் கூட அவன் வீடு திரும்பாமல் இருப்பதை எண்ணி அவள் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இன்றல்ல… அவன் இடைநிலைப் பள்ளியில் என்று புகுந்தானோ அன்றுதொட்டு இன்றுவரை அவன் இப்படித் தான் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தான். கேட்கும் போதெல்லாம் புதுப்புது காரணங்களைக் கூறி அந்த நேரத் தில் சமாளித்துக் கொண்டுபோய் விடுவான்.

தனது ஒரே மகனான வினோத் நல்ல பண்புகள் நிறைந்த பிள்ளையாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள குடிமகனாகத் திகழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றவளின் மனதை அவன்

ஒரு நாளாவது நினைத்துப் பார்த்திருப்பானா என்பது சந்தேகமே!

எல்லோரும் தூங்கப் போகும் வேளையில் அவன் உள்ளே வந்தான். கைகால்களைக் கழுவாமல் நேராக உணவு மேசைக்குப் போய் தன் விருப்பம் போல் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டான். பக்கத்து அறையில் படித்துக் கொண் டிருக்கும் அம்மாவைப் போய் பார்க்கவோ பேசவோ விரும் பாதவனாய் விடுவிடுவென்று தன் அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டு தாளிட்டான். விளக்கை அணைத்து விட்டுப் படுத்தான். எல்லாவற்றையும் கவனித்துத் கொண்டிருந்த அம்மா, இறைவனிடம் முறையிட்டவளாய் உறங்கப் போனாள். பெற்ற மனம் தீயில் விழுந்த மெழுகாய் அந்த இரவில் உருகிக் கொண்டிருந்தது.

சில மணி நேரங்கள் தூங்கி இருப்பாள்; திடீரென்று வினோத் அலறும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். “அம்மா அம்மா”என்று அவன் அழுது கொண்டிருந்தான். கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்ததால், அவளால் அவ னைப் பார்க்க முடியவில்லை. கதவைத் தட்டினாள். சில நிமிடங்கள் கழித்துக் கதவைத் திறந்தவன் வயிற்றைப் பிடித் துக் கொண்டு தரையில் உட்கார்ந்தான். அவனால் உட்கார முடியவில்லை. தரையில் படுத்துப் புரண்டான். அம்மா துடித்துப் போனாள்.

“என்னப்பா வினோத், உனக்கு என்ன பண்ணுது. ஏன் அழறே! வயிறு வலிக்குதாப்பா…” என்று கனிவுடன் கேட் டாள்.

அவனோ அதைக் காதில் வாங்காதவனாய் விழுந்து புரண்டு கொண்டிருப்பதிலேயே நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தான். அந்த வீட்டில் விருந்தினராய் வந்து தங்கியிருந்த அவனது மாமா எழுந்து வந்தார்.

அவன் துடித்துக் கொண்டிருப்பதையும் அம்மா அவ னைக் கெஞ்சிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். திரும்பிப் போய் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தார்.

தரையில் கிடந்தவனைத் தன் கையால் பிடித்துத் தூக்கிக் கன்னத்தில் நான்கு அறைகள் கொடுத்தார். அவன் அதிர்ந்து போய், சிலையாய் உட்கார்ந்தான். அம்மா திகைத்துப் போய் நின்றாள்.

“எழுந்துருடா… எழுந்து போய் முதல்ல குளிச்சிட்டு வந்து இந்தத் தண்ணிய குடி. போ..”

ஆத்திரமான பார்வையும் அவரது ஓங்கிய கையும் வினோத்தை நடுங்க வைத்தன. ஓடினான். குளியலறைக்கு; ஷவரைத் திறந்து நன்றாய்க் குளித்து தலையை உடம்பைச் சுத்தமாய் துடைத்துக் கொண்டு வந்து மாமா முன்பு நின்றான்.

குவளயில் இருந்த தண்ணீரை மாமா அவனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். மடமடவென்று குடித்துவிட் டுக் குவலையைக் கொடுத்தான். ஒரு துண்டை எடுத்து அவனது படுக்கையில் விரித்தார் மாமா.

“காலைத் தொடைச்சிட்டு இந்தத் துண்டு மேலே சம்ம ணம் போட்டு உட்காரு” அதட்டலாய்ச் சொன்னார். ஏறி அமர்ந்தான்.

“கையைக் கட்டிக் கண்ணை மூடிக்கிட்டு அரைமணிநே ரம் அசையாம உட்கார்ந்திரு. நான் வந்து சொன்னதும் தான் எழுந்திருக்கணும்.

மந்திரம் போட்டது போல் சொல்லிவிட்டு, அம்மாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து மாமா போனார்.

வினோத் இடித்து வைத்தப் புளிபோல் உட்கார்ந்திருந் தான். முப்பது நிமிடங்கள் போனபின் மாமா வந்தார்.

இப்ப எழுந்திருச்சு கொஞ்ச நேரம் நட என்றார். நடந்தான்.

“இப்ப வயிறு வலிக்குதா? என்றார்; அவன் மாமாவை விளங்காதவனாய் பார்த்தான்.

“என்னடா முழிக்கிறே வயிறு வலி என்னாச்சு, இப்ப வலிக்குதா இல்லையா..!

இல்லை என்று தலையை ஆட்டினான் “பேசாம தூங்கு”, என்று சொல்லியவராய் , தன் அறைக்குள் போய் படுத் துக் கொண்டார் மாமா. அம்மாவும் ஒன்றும் பேசாமல் தன் அறையிலேயே இருந்தாள். அப்புறம் உறங்கிப் போனாள். காலையில் எழுந்து குளித்துவிட்டுப் பசியாற வந்தவன், மாமாவைத் தேடினான். அவர், அம்மாவிடம் கடிதம் ஒன் றைக் கொடுத்துவிட்டு போயிருந்தார் அவன் விபரம் புரிய மல் அம்மாவைப் பார்த்தான்

“மாமா உங்கிட்டே இதைக் கொடுக்கச் சொன்னார் வினோத். அவர் ஈப்போவுக்குப் போய்ட்டாருப்பா. சொல் லிக்கொண்டே தட்டில் இட்லிகளை வைத்துச் சாம்பார் ஊற்றினாள். அவன் அவசரமாய் அந்தக் கடிதத்தைப் பிரித்து படித்தான்.

வினோத்!

நான் ஊருக்குக் கிளம்பி விட்டேன் உன்னோடு சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதற்காகவே, நான் சிங்கப்பூர் வந்திருந்தேன். நற்பண்புகளும் கட்டொழுங்கும் பணிவன்பும் மிகுந்து காணப்படுகின்ற இந்த சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நீ கொஞ்சமும் ஒழுங்கில்லாமல் இருப்பது கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

என் சகோதரியான உன் தாய், மிகவும் சிறந்த பெண் மணி; தந்தை இல்லாத உன்னைக் கண்போல் காத்து வரும் உத்தமி. அவரிடம் நீ பாசம் இல்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதும் அலட்சியப்படுத்துவதும், என்னையே அப்படிச் செய்வபதுபோல் இருப்பதாலேயே, உன்னிடம் சொல்லாமல் நான் கிளம்பக் காரணமாயிருந்தன.

உன்னைப் போன்ற மாணவர்கள்தான் எதிர்காலத்தில் இம்மண்ணின் சிறந்த தலைவர்களாய் விளங்க வேண்டியவர் கள். ஒரு நாட்டின் தலைவர்களாய் சிறந்த குடிமக்களாய் விளங்கவேண்டுமனால் இளமையில் நல்ல பண்புகளோடு வளர வேண்டும். நல்ல தாயின் பிள்ளைகளாய்ப் பேரெடுக்க சிறு வயதில் தூய மனம் வேண்டும். தூய மனம் வேண்டுமா னால் இறை பக்தி வேண்டும். உன்னிடம் எதுவும் இல்லை. இந்த குணங்களே உன்னிடம் நீடித்து வருமானால் உனக்கு நல்ல எதிர்காலமும் இல்லை.

கண்டபடி ஊர் சுற்றுவதும். கண்ட கண்ட நேரத்தில் கண்டதை வாங்கித் தின்று உடம்பைக் கெடுத்துக் கொள்வ தும், நல்ல பழக்கமல்ல.

நீ நல்ல விதமாகப் படிப்பது கண்டு நான் பெருமை கொள்கிறேன். ஒன்றை நீ நினைவில் வைக்க வேண்டும். எவ்வளவு தான் நீ படித்துப் பட்டம் பெற்றவனாக இருந்தா லும், இறை நம்பிக்கை, இறை வழிபாடு போன்றவை உன்னிடம் இல்லாவிடில், மற்ற பண்புகள் எது இருந்தும் அவை பயனற்றவை என்பதை நீ நினைவு கொள்.

எல்லாம் வல்ல இறைவன் தான் நம்மை வழி நடத்தும் தலைவன். அந்தத் தலைவனை நம்பி அவன் வழி நடந்தால், எல்லா நன்மைகளும் உன்னைச் சேரும்.

நீ சிந்திக்க, இதுவே நல்ல தருணம். “இளமையில் கல்வி, சிலை மேல் எழுத்து“ என்பார்கள். நீ இப்போது திருந்தினால், உனக்கொரு வரலாறு நிச்சயம் உண்டு. மீண் டும் உன்னை நான் சந்திக்கும் போது, உன்னை ஒரு நல்ல பிள்ளையாகவே சந்திக்க விரும்புகிறேன்.

அன்புடன், உன் மாமா.

வினோத் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான். சட்டென்று எழுந்து போய் அம்மாவின் கால்களைப் பணிந்து வணங்கினான். அம்மா நெகிழ்ந்து போனாள். மகனை வாரியணைத்து உச்சிமோந்து முத்தமிட்டாள். அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (குறள்:611)

விளக்கம்: http://www.thirukkural.com/2009/02/blog-post_8831.html#611

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *