ஏன் காட்டிற்கு சிங்கம் மட்டுமே தான் ராஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 7,574 
 
 

குரங்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜா குரங்கு தீடிறென்று இறந்துப் போனதால். அந்த கூட்டத்தை வழி நடத்த சரியான தலைமை இல்லாமல் திண்டாடி போனது எல்லா குரங்குகளும் தனக்கேனே ஒரு குழுக்களை அமைத்துக் கொண்டும் மற்ற குரங்களுடன் பிரிவுகளை ஏற்படுத்தியது.

இதை கவனித்த ராணி குரங்கு நம் கூட்டத்தை வழி நடத்த சீக்கிறமே ஒர் தேர்தலை நடத்த வேண்டும் என்று எண்ணியது.

அதன் படி குரங்கு கூட்டத்திற்கு புதிய ராஜாவாக யார் நிற்க விருப்புகிறிர்களோ அவர்கள் முன் வரலாம் என்றது ராணி குரங்கு.

இதை கேட்டதும் மற்ற குரங்குகளுக்கும் பதவி ஆசை வந்து நீ நான் என்று ஒருவொறோடு ஒருவர்களாக சண்டை போட்டுக்கொண்டது அதை பார்த்துக்கொண்டயிருந்த ராணி குரங்கு. எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள் நம் கூட்டத்தின் ராஜா எப்படி எதனால் யாரால்இறந்தார் என்பதை..

உங்கள் நினைவில் வைத்துக் கொண்டு பின் உங்கள் சண்டைகளை தொடங்குங்கள் என்றதும் சண்டை போட்டுக்கொண்டுயிருந்த குரங்கு யாவும் அமைதியாக நின்றது.

பின் எந்த குரங்கும் ராஜாவாக முன்வரவேயில்லை….

அப்போது அதில் ஒரு குரங்கு மட்டும் சொன்னது நான் ராஜாவாக நிற்கிறேன் ராணி. ஆனால்…! நான் சொல்லுவதைப் போன்று செய்யதால் மட்டுமே நான் ராஜாவாக இருந்து நம் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நல்வழி செய்வேன் என்றது.

ராணி குரங்கும் சரி அப்படி என்ன தான் நீ சொல்ல போகிறாய் சொல் என்றது.

அதற்கு அந்த குரங்கு சொன்னது நமக்கென்று இருக்கும் எல்லை பகுதியை பாதுகாப்பது பற்றியும் மற்ற விலங்குகளுடன் நட்புடனும் இருக்கலாம்.

ஆனால் அவர்களின் பிரச்சனைக்கு நாம் போகக்கூடாது.

அது மட்டுமில்லாமல் சிங்க ராஜா பற்றி நாம் எப்போதுமே பேசக்கூடாது. சிங்க ராஜா என்ன சொல்கிறாறோ அதன்படியே நாம் போகலாம்…

இதற்கேள்ளாம் சரி என்றால் நானே ராஜாவாக இருக்கிறேன் என்றது அந்த குரங்கு.. ராணி குரங்கும் இதை கேட்டுக்கொண்டு இதை பற்றி நானும் சிந்தித்துள்ளேன் புதிய ராஜாவாக யார் பதவி ஏற்கிறார்களோ அப்போதே புதிய சட்டம் இயற்றப்படும் என்றது ராணி குரங்கு.

அந்த கூட்டத்தில் மிகவும் வயதான குரங்கு பேசியது ராணியே உங்கள் மகனே அடுத்த ராஜாவாக நம் கூட்டத்திற்கு நீங்களே அறிவித்துவிடலாமே என்றது.. அதற்கு ராணி குரங்கோ இல்லை… இல்லை அது நமது வழக்கங்களில் இதுபோன்ற முடிவுகள் யாரும் எடுக்கவில்லை.

நம் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் ராஜாவாகின்ற தகுதிகள் இருக்கிறது என்று நமது இறந்த ராஜா சொல்லியது.

நம் கூட்டத்தில் இருக்கும் மற்ற குரங்குகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். நான் இறந்த பின் தேர்தல் வைத்தே ராஜாவை தேர்வு செய்ய வேண்டும்.

நம் வசம்சாவழிகளே ராஜாவாக இருக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாறே. ஏன் இப்பொழுது இறந்த என் கணவர் ஒர் சாதாரண குரங்கு கூட்டத்தில் ஒருவராகவே தானே இருந்தார்…

அப்போது இருந்த ராஜா தேர்தல் வைத்து தானே இவரை ராஜாவாக அமர வைத்தார் என்றது.

அந்த வயதான குரங்கும் ம்ம்ம்ம்ம்… மிகசரியாக சொன்னீர்கள் ராணியே என்றது.

குரங்கு கூட்டத்தை பார்த்து ராணி குரங்கு சொன்னது இன்னும் இரண்டு நாட்களில் ராஜாவை தேர்வு செய்துவிட வேண்டும்..

உங்களில் யார் வேண்டுமானும் முன்வரலாம் இப்போது எல்லோரும் அவரவர்களின் வீடிற்கு செல்லலாம் என்று உத்தரவு போட்டது. பின் கூட்டம் கலைக்கப்பட்டது.

ராணி குரங்கு வீட்டிற்கு சென்றதும் அதன் குட்டிக் குரங்கு அம்மா ஏன்ம்மா நீ அப்படி பேசுனிங்க..? நான் ராஜாவாக இருக்கக்கூடாதா என்ன…? அப்புறம் சிங்க ராஜாவ பாத்து ஏதுக்கு பயப்புடுறாங்க ?? என்றது.

அதற்கு ராணி குரங்கு சொன்னது நமகேன்று ஒரு எல்லை பகுதி உள்ளது அதுவரையில் தான் உங்க அப்பா ராஜா. ஆனால் சிங்கம் இந்த காட்டுக்கே ராஜா செல்லம். நீ இன்னும் குட்டி பையனாகவே இருக்கிறாய் ராஜாவாக வரவேண்டும் என்றால் நன்றாக வளரவேண்டும். நம் கூட்டத்திற்க்காகா உயிரையே தியாகம் செய்ய வேண்டும்டா செல்லம் என்றது.

குட்டிக்குரங்கு சட்டென்று அப்போ அப்பாவை ஏன் சிங்க ராஜா சாகடிச்சதும்மா என்று கேட்டது குட்டிக்குரங்கு…

இதைக்கேட்டதும் பதறிப்போன ராணி குரங்கு… உனக்கு சொன்னால் புரியாதுடா விடு என்று கண்ணீறோடு தனது குட்டியை கட்டியணைத்துக்கொண்டது.

குட்டிக்குரங்கோ விடுவதாய் இல்லை இல்லைம்மா…. நீ சொல்லியே ஆகவேண்டும் என்றது.

ராணி குரங்கும் ராஜா குரங்கு இறந்தற்கான காரண்த்தை சொல்லஆரப்பித்தது.

இந்த காட்டில் நம் குரங்கு கூட்டத்தை போல் மற்ற மிருக கூட்டங்களும் இருக்கின்றதல்லவா.. அந்த மிருக கூட்டத்திற்கும் தனித்தனி ராஜாக்கள் இருக்கிறார்கள். அவரவர்களின் இனத்திற்குகேன்று இந்த காட்டில் எல்லைகளாக பிரித்து வைத்து அதில் ஆட்சி செய்வார்கள்.

சிங்க ராஜாவும் இதை போன்றே இருக்கும் ஆனால் சிங்க ராஜா இந்த காட்டில் யாருடைய எல்லை பகுதியிலும் வந்து வேட்டையாடலாம் அவரை நாம் எதிர்க்கக்கூடாது எதிர்க்கவும் முடியாது.

சிங்க ராஜாவிற்கு பிரச்சனை செய்யும் மிருகங்களை கொன்று விடும். அதன் ஆளுமை மிக பெரியது. சிங்கத்தை எதிர்க்கவே முடியாது.

உங்க அப்பா இந்த சிங்கம் எல்லா மிருகங்களையும் மிரட்டி வைத்து அதற்கு சேவை செய்ய வைப்பதை மற்ற மிருகங்கள் விரும்பவில்லை ஆகையால் சிங்கத்தை நாம் எப்படியும் எதிர்க்க வேண்டும் அதனுடன் சண்டை போட்டு நாம் ஜெயிக்க வேண்டும் என்று காட்டில் உள்ள மற்ற மிருகங்களிடம் உங்க அப்பா குரங்கு முறையீட்டது. மற்ற மிருகங்களும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

இந்த விசயம் சிங்க ராஜாவிற்கு தெரிந்துவிட்டது ஆதனால தான் சிங்க ராஜா உங்க அப்பாவை கொன்றது.

உடனே அந்த குட்டி குரங்கு கேட்டது ஏன்ம்மா இப்படியிருக்கின்ற சிங்கத்தை எல்லோரும் இந்த காட்டிற்கே ராஜாவாக ஏற்றுக் கொண்டார்கள் அதை இந்த காட்டைவிட்டே விரட்டிவிட்டு இருக்கலாமே.

அதற்கு ராணி குரங்கு சொன்னாது இந்த காட்டில் சிங்கம் தான் ராஜா என்று நாம் யாருமே இது வரையில் சொல்லியது கிடையாது. இந்த காட்டில் எல்லா வல்லமை படைத்த மிருகமும் உள்ளது ஆனால் அவை சிங்கத்தை போன்று இந்த காட்டில் ஆளுமை செய்யவில்லை. செய்ய முயற்சி செய்தாலும் அவை சிங்கத்திற்கு இடுயிணையாக செய்ய முடியாமலும் பயந்தும் நமக்கேதுக்கு இந்த பிரச்சனை என்றும் எதையுமே கண்டும் காணாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தியே இந்த காட்டிற்கு நான் தான் நிரந்தர ராஜா என்று தன்னை தானே ராஜாவாக அறிவித்துவிட்டது சிங்கம்.

சிங்கத்தின் வலிமையை உணர்ந்ததலாம் அவை மற்ற மிருகங்களை கொடுமையாக கொள்ளுவதாலுமே சிங்கத்தை யாரும் எதிர்க்கவில்லை. தன் ராஜா பதவியை பாதுகாக்கவே. மற்ற மிருக கூட்டத்தை கொன்றுவிடுகிறது. அப்படி சிங்கத்தை எதிர்க்கின்ற எந்த மிருகமும் இப்போது உயிரோடும் இல்லை செல்லம்.

வலிமை மிகுதியானவர்களிடம் வலிமையே இல்லாதவர்கள் எப்படி மோத முடியும் சொல்லு. எல்லா மிருகமும் நமக்கு ஏன் இந்த வம்பு சிங்கமே ராஜா என்று இன்றளவும் நம் மிருக இனத்திற்கே தெரியாது. எல்லா விலங்குகளுக்கும் சிங்கத்தின் மீது மனதில் பயம் வெறுப்பு இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்கிறது.

சிங்கமும் ராஜாவாக தனது வாழ்ழையே நடத்தி வருகிறது ராணி குரக்கு.

சாதாரண மக்கள் பணம் பதவி வலிமையைக் கொண்டுள்ள நபர்களை ஏன் எதிர்க்க முடியவில்லை என்றால் பணத்தால் எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள். பதவிக்காக மற்றவர்களின் கொன்றுவிடுகிறார்கள். நான் இந்த இனத்தின் ராஜா நானேதான் உங்களை ஆளுவேன் என்று வெறித்தனமாக செயல்படுகிறார்கள்.

இவை சாதாரண மக்களுக்குமே தெரியும் ஆனால் இவர்களை எதிர்த்து புதிய நபர்களை தேர்வு செய்தாலும் அவர்கள் ஒன்று இறந்து போவார்கள் இல்லை என்றால் அவர்களுடனே கூட்டணி வைத்துக்கொள்வார்கள். இவர்களை எதிர்த்து நிற்கவே முடியாது என்பதை மக்கள் நன்றாக புரிந்துக்கொண்டதால் தான் நமது மக்கள் புதிய தலைவர்களை தேர்ந்தெக்க மறுக்கிறார் என்பதே நிதர்சனம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *