(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தச் சுவரிலே ஒரு பல்லி காணப்பட்டது. பால் வண்ணப்பல்லி தன் வயிற்றிலிருப்பதைக் கண்ணாடியினைப் போல எடுத்துக்காட்டியது. வயிறோ நன்கு நிரம்பியதாகத் தெரியவில்லை. அதனைப் பூரணப்படுத்தத்தான் போலும், சிறிது நேரத்திற்குப் பின் அது மெல்ல நெளிந்து நடந்து வந்தது. அதன் குறி எதிரே சுவரிலிருந்த ஈயின் மேல் படிந்திருந்தது.
ஈக்கு அருகில் வந்த பல்லி, தனக்கு நல்ல விருந்து கிடைக்கப் போகிறது என்று எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியது. அது மட்டுமல்ல அது வாய் விட்டுச் சிரிக்கவும் செய்தது.
“ஹாஷ்… ஹாஹ்…… ஹா…” என்ற பல்லியின் சிரிப்பொலி ஈயின் காதில் சுழியோடி அதனைச் சுய நிலைக் குக் கொண்டு வந்தது. நிமிர்ந்து பார்த்த ஈ தனக்கு எ எதிரே ஒரு பல்லியைக் கண்டது. உடனே ஈ, “பெரியவரே . நீங்கள் என்னை நோக்கிச் சிரித்தது போல் ஒலி ஒன்று கேட்டது. என்ன விஷயம்?” என்றது பல்லியைப் பார்த்து. பல்லியோ, “நீ இன்னும் சிறிது நேரத்தில் எனக்கு இரையாகப் போகி றாய். அதை நினைத்துத்தான் நான் சிரித்தேன்” என்றது.
இதைக் கேட்ட ஈ பெரும் அறிஞரைப் போல புன் முறுவல் ஒன்றினை உதிர்த்து விட்டு, “பெரியவரே… நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. எனவே, இது நடக்கு மென்று உங்களால் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?” என்றது.
சாட்டைகளைக் கொண்டு தாக்கியதைப் போல இவ் வார்த்தைகள் பல்லியைத் தாக்கின. உடனே பல்லி, “நான் நினைத்தது நடக்கிறதா, இல்லையா, என்பதைப்பார்” என்று கூறியவாறு ஈயின் மேல் தாவியது.
பல்லியில் மிகவும் கவனமாக விருந்த ஈ, இதனை அவதானித்ததும் உடனே “சர்” என்று மாறி மேலே யெழுந்து அதே சுவரில் வேறோர் இடத்தில் படிந்தது. ஆனால், பல்லியோ கீழே உள்ள அடுப்பில் எரிந்து கொண்டிருந்த பெருந்தீயில் விழுந்து புதைந்து தீக்கு இரையாகியது.
அதன் பின்பு, சுவரிலிருந்த மேலே பந்தெனக் கிளம்பி எங்கோ பறந்தது. அவ்வேளை, அதன் உள்ளமோ, தான் முன்பு பல்லியிடம் சொன்னது நிஜமாகி விட்டதை எண்ணிக் கொண்டது.
– சிந்தாமணி – 1967.03.18.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.