(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஓர் ஏழைப்பெண் இருந்தாள். அவளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வடிவழகி எனப் பெயரிட்டு அழைத்தாள். அக் குழந்தை எல்லோரிடத்திலும் அன்போடு பழகும்.
ஒரு நாள் அக் குழந்தை குடிசையின்முன் விளையாடிக்கொண்டு இருந்தது. அநத வழியாக ஒரு பணக்கார அம்மாள் வந்தாள். அந்த அம்மாளுக்குக் குழந்தைகளே கிடையாது. வடிவழகி யைக் கண்டு ஆசைப்பட்டாள். தன் வீட்டிற்குக் கொண்டுபோய் வளர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டாள்.
வடிவழகியின் அம்மாவை அழைத்தாள். ‘உன் குழந்தையை என்னோடு அனுப்புகின்றாயா அவளை என் குழந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறேன்’, என்று கேட்டாள்.
வடிவழகியின் தாய் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தாள். குழந்தை யாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி அதைப் பணக்கார அம்மாளுடன் அனுப்பிக் கொடுத்தாள். ஆனால் கன்றை விட்டுப் பிரிந்த பசுவைப்போல் கதறி அழுதாள்.
வடிவழகி சிறிய குழந்தையாக இருந்ததால் நாளடைவில் தன் தாயை மறந்துவிட்டாள். பணக்கார அம்மாளைத் தாய்போல் கருதி வந்தாள். ஒரு பெரிய மாளிகையில் இன்பமாகக காலம் கழித்து வந்தாள். அவளுக்கு உடுப்பதற்கு. நல்ல துணிகளும், விலையாடுவதற்கு நல்ல பொம்மைகளும் உண்பதற்கு நல்ல உணவுகளும் கிடைத்தன. பணக்கார அம்மாள் அவளை அன்புடன் ஆதரித்து வந்தாள். ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டும் இருந்தது. வீட்டிற்குள் ஒரு மூலையில் மூன்று அறைகள் இருந்தன. அறைகளின் கதவுகள் எப்போதும் மூடப்பட்டிருந்தன. வடிவழகி அந்த அறைகளுக்குள் போகக் கூடாது என்று அந்த அம்மாள் எச்சரிக்கை செய்து வைத்திருந்தாள்.
அழகி அந்த அறைகளின் பக்கத்தில் போய் விளையாடுவாள். ‘அறைக்குள் என்ன இருக்கும்? கதவை ஏன் திறக்கக்கூடாது?’ என்று எண்ணுவாள். ‘ஒருவேளை பேய் பிசாசு ஏதேனும் இருக்குமோ?’ என்று நினைத்தாள்.
நாட்களும் ஓடிவிட்டன. பல ஆண்டுகள் கழிந்தன. வடிவழகியும் வளர்ந்து பெரிய பெண் ஆகிவிட்டாள். அழகில் சிறந்து விளங்கினாள். ஒருநாள் பணக்கார அம்மாள் அவளை அருகில் அழைத்தாள். நான் வெளியே போகிறேன். பொழுது சாயும் நேரத்திற்குத் திரும்பி வருவேன். நல்ல பெண்ணாக நடந்துகொள்ள வேண்டும். அந்த அறைகளுக்குள் போகக் கூடாது’ என்று எச்சரிக்கை செய்தாள்.
வடிவழகி ‘தங்கள் சொற்படி நடப்பேன்,’ என்று வாக்களித்தாள். உண்மை யாகவே அப்படி நடக்கவேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து மெதுவாக அறைகளின் பக்கம் சென்றாள். ‘அறைக்குள் மந்திரமோ மாயமோ இருககிறது. திறந்து பார்ததால் என்ன?’ என்று நினைத்தாள்.
முதல் கதவிற்கு அருகில் சென்றாள். ‘திறந்துதான் பார்க்கலாமே! எட்டிப் பார்த்தால் போகிறது. உள்ளே போக வேண்டியதில்லை’, என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். கதவின் மேல் கையை வைத்தாள். கதவு திறந்து கொண்டது. உள்ளே எட்டிப் பார்த்தாள். கண்ணை மூடித் திறப்பதற்குள் உள்ளே இருந்து ஒரு நட்சத்திரம் பறந்து சென்றது.
அழகி நடுங்கப்போய் விட்டாள். கதவைப் படார் என்று. மூடினாள்.
உள்ளே இருந்த நட்சத்திரம் மாயமாய் மறைந்து போய் விட்டது. அதைப் பிடித்து அறைக்குள் அடைப்பதற்கு அவளால் முடியவில்லை.
பணக்கார அம்மாள் அன்று இரவு வீட்டிற்குத் திரும்பி வந்தாள். நட்சத்திரத்தைக் காணவில்லை. அவள் கடுங் கோபம் அடைந்தாள். அழகியை அழைத்தாள். ‘உன்னை வெளியில் துரத்திவிடுகிறேன் பார்,’ என்றாள்.
‘வேண்டாம் வேண்டாம். நான் இனிமேல் நல்லவளாக நடக்கிறேன். என்னை. அனுப்பவேண்டாம்,’ என்று கெஞ்சினாள். பணக்கார அம்மாள் அவளை மன்னித்துவிட்டாள்..
சில நாட்களுக்குப் பிறகு அந்த அம்மாள்: வெளியூருக்குப் போக நேர்ந்தது, அழகி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். அவளுடைய கெட்ட குணம் போகவில்லை. ஓட்டமாக ஓடி இரண்டாவது அறையின் கதவைத் திறந்தாள். உள்ளே இருந்து நிலவு ஓட்டம் பிடித்தது. வானத்தை நோக்கிப் பறந்து. சென்றது. ஊரிலுள்ள மக்கள் எல்லாம் அந்த வேடிக்கையைப் பார்த்தார்கள்.
அழகி வருத்தப்பட்டாள். ‘இனி மேல் என்ன செய்யமுடியும்? கதவைத் திறந்தது என் குற்றம்’, என்று பெரு மூச்சு விட்டாள்.
பணக்கார அம்மாள் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். மிகவும் கோபம் அடைந்தாள். ‘உலகத்திற்கே கெடுதல் வரும்போல் இருக்கிறது. உன் விளையாட்டே வினையாக முடிந்துவிடும். இப்படிச் செய்தால் உன்னை வீட்டில் வைக்க முடியாது,’ என்று எச்சரிக்கை செய்தாள்.
அழகி மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். ‘இன்னும் ஒருமுறை பார்க்கலாம். மறுபடியும். என் உததரவை மீறினால் நீ போகவேண்டியது தான்’, என்று கூறினாள்.
இதற்குப் பின் அழகி ஓழுங்காகவே நடந்துகொண்டாள். அறைகளின் பக்கமே அவள் போவதில்லை. ஒரு நாள் அந்த அம்மாள் வெளியில் போயிருந்தாள். மழை பெய்துகொண்டிருந்தது. அழகிக்குப் பொழுது போகவில்லை. ‘நான் பெரிய பெண் ஆகிவிட்டேன். அறைக்குள்ளிருந்து ஏதேனும் ஓடினால் என்னால் பிடித்துக்கொள்ள முடியும். மூன்றாவது அறையைக் திறந்து பார்க்கலாம்’, என்று எண்ணினாள்.
சந்தடி. இல்லாமல் மூன்றாவது அறைக்குச் சென்றாள். மெதுவாகக் கதவைத் திறந்தாள். அங்கே தோன்றிய ஒளியில் அவளுடைய கண்கள் மங்கிப்போய் விட்டன. உள்ளே இருந்த சூரியன் ஒட்டம் பிடித்தான். அழகி மயக்கம் அடைந்து கீழே சாயந்தாள்.
மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தாள். சூரியனைக் காணவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். அழுவதால் என்ன பயன்? சூரியன் வானத்தை அடைந்து விட்டான். சூரியனைத் திருப்பிக் கொண்டுவர அழகியால் முடியவில்லை.
பணக்கார அம்மாள் வீட்டிற்கு வந்தாள். அழகியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளினாள். ‘இனிமேல் உங்கள் சொற்படி நடக்கிறேன். ஒரு தவறும் செய்யமாட்டேன்,’ என்று அழகி அழுதாள்.
‘உன் வாக்குறுதியை நம்பவே முடியாது. என் முன் நிற்காதே! போய் விடு’ என்று உத்தரவிட்டாள்.
‘நீ உன் ஆசையை அடக்குவதுற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் சொற்படி. நடக்கவேண்டும். அது வரையில் நீ ஊமையாகப் போகவேண்டும். அல்லது உன் அழகை இழக்க வேண்டும்’, என்று சாபமிட்டாள். ‘இந்த இரண்டு சாபங்களில் எது வேண்டும்,’ என்று கேட்டாள்.
‘நான் ஊமையாகி விடுகிறேன்’, என்று அழுதுகொண்டே சொன்னாள். அவளுடைய அழகை இழப்பதற்கு அவள் விரும்பவில்லை.
அழகி ஒரு காட்டிற்குச் சென்று தனியாக வசித்து வந்தாள். காய் கனி கிழங்குகளை உண்டு மரத்தடியில்படுத்து உறங்கினாள். மனம் போனபடி. நடக்காமல் ஒழுங்காகக் காலம் கழித்து வந்தாள். அவளுக்குப் பேச முடியவில்லை. தான் செய்த குற்றங்களை எல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினாள். அவளுடைய குணம் திருந்திவிட்டது. அவளுடைய அழகிற்கு ஏற்ப நற்குணமுடையவளாக இருந்தாள். சாபமும் நீங்யெதால் ஊமை மாறிவிட்டது. ஆனால் அழகிக்கு அது தெரியவில்லை. ஊமையாகவே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் அவள் குளக்கரையில் ஒரு மரத்தின் மேல் ஏறி அதன் கிளையில் படுத்து உறங்கினாள். அதன் அருகாமையில் ஓர் அரண்மனை இருந்தது. விடியற் காலையில் அரண்மனையிலிருந்து ஒரு தாதிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுக்க வந்தாள்.
அழகியின் முகம் தண்ணீரில் தெரிந்தது. ‘நிழலில் தெரிவது என்னுடைய முகமா? நான் இவ்வளவு அழகாய் இருக்கிறேனே’, என்று தாதி நினைத்தாள். தன் அழகைக் தண்ணீரில் பார்த்துப் பார்த்துப் பெருமை அடைந்தாள். தன்னையும் மறந்து குடக்தைத் தண்ணீரில் போட்டுவிட்டாள். முடிவில் குண்ணீர் எடுக்காமல் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாள்.
மற்றொரு தாதி தண்ணீர் எடுக்க வந்தாள். அழகியின் முகத்தைக் தண்ணீரில் கண்டாள். தன்னுடைய முகம் என்று எண்ணிக்கொண்டாள், தண்ணீர்க் குடத்தை வீசி எறிந்தாள். “நான் இவ்வளவு அழகாய் இருக்கிறேனே! நான் எதற்கு தண்ணீர் சுமக்கவேண்டும்? இளவரசருக்குக் கூடத் தண்ணீர் எடுக்கவேண்டியதில்லை. அவர்தாம் என்னிடம் வந்து கொஞ்சவேண்டும்’, என்று பெருமை பேசிக்கொண்டாள்.
இளவரசருககுத தண்ணீர கிடைக்கவில்லை. தாதிப் பெண்களும் திரும்பி வரவில்லை. இளவரசரே குளத்தங்கரைக்கு வந்து சோந்தார்.
அழகியின் முகம் தண்ணீரில் தெரிந்தது. மரத்தின்மேல் உறங்கும் அழகியைப் .பார்த்தார். கைதட்டி அழைத்தார். கீழே இறங்கிவரும்படி வேண்டிக் கொண்டார்.
அழக மெதுவாக இறங்கி வந்தாள். அவள் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. இளவரசரின் எதிரில் நாணத்துடன் நின்றாள், அவள் மிகவும் அழகாக இருந்ததால் இளவரசர் அவளை மணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
‘என்னுடன் வந்துவிடு, நீ அரசியாக இருக்கலாம்’, என்றார்.
அழகி பேசுவதற்கு வாய் எடுத்தாள். உடனே பேச்சு வந்துவிட்டது.
‘நான் நல்ல பெண் அல்ல, நான் நல்லபெண் ஆகும் வரையில் தனிமையாக இருக்கவேண்டும்’, என்று தன் கதையைச் சொன்னாள்.
‘நீ இப்பொழுது நன்றாய்ப் பேசுகிறாய். ஊமை போய்விட்டது. அதிலிருந்து நீ நல்ல பெண் என்று தெரியவில்லையா?’ என்று இளவரசர் கேட்டார்.
‘எனக்குப் பேசத் தெரிந்துவிட்டது. தங்களிடம் பேசிக்கொண்டிருந்தது கூட எனக்குத் தெரியவில்லை. என்னையே மறந்துவிட்டேன். கடவுள் என்னைக் காப்பாற்றினார்’ என்று கை கொட்டிச் சிரித்து மகிழ்ந்தாள்.
இளவரசர் அழகியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அழகி இன்பமாக வாழ்க்கை நடத்தினாள். அவள் இரண்டு பாடங்கள் கற்றுக் கொண்டாள். ஓன்று மற்றவர்களுடைய காரியத்தில் தலையிடக்கூடாது. மற்றொன்று: சொன்ன சொல் தவறக் கூடாது.
– அயல்நாட்டுக் கதைக்கொத்து (ஆறு புத்தகங்கள்), முதற் பதிப்பு: மார்ச் 1964, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை