கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 118 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேதுபதி அவசர அவசரமாய் நடந்தான், பள்ளிக்கூட மணியடிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. அவசர மாய் வந்து அந்தச் சிறு வீட்டுக்குள் நுழைந்து அங்கே தரையில் உட்கார்ந்து கொண்டு பிளாஸ்டிக் வயரினால் பைகளைப் பின்னிக் கொண்டிருந்த ஒரு வயதான தாத்தாவி டம் போனான்.

கையோடு தான் கொண்டு வந்திருந்த பேப்பர் பொட்ட லங்களை அவரிடம் கொடுத்தான். பிளாஸ்கில் இருந்த கோப்பியை ஒரு குவளையில் ஊற்றி அவர் கையில் கொடுத் தான். அவர் அவனை ஒரு கையால் தடவிக் கொடுத்தார்.

“நீ யாருன்னே எனக்குத் தெரியாது. ஆனா தினமும் எனக்காக இந்த நேரத்தில அன்றாடம் வந்து கிட்டிருக்கியே நீ யாரப்பா? உன்னைப் பார்த்தா பணக்கார வீட்டுப்பிள்ளை மாதிரி இருக்கே… படிக்கிறீயாப்பா?…

நெகிழ்ச்சியாய் அவர் கேட்க, சேதுபதி குறுகுறுவென்று அவரைப் பார்த்தான்.

“தாத்தா… உங்களுக்கு என்னைத் தெரியாமல் இருக்க லாம். ஆனா உங்கள, எனக்கு நல்லாவே தெரியும் தாத்தா… நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு வேலையைப் பாருங்க… எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுது நான் போய்ட்டு நாளைக்கு வர்றேன்”

அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காது ஓட்டமும் நடையு மாய் ஓடிவிட்டான். தாத்தா அவன் கொடுத்த பலகாரத்தைச் சாப்பிட்டு விட்டுக் கோப்பியைக் குடித்தார். அவர் பசி நீங்கி வயிறு நிறைந்தது. அவர் மனதில் அந்தச் சிறுவன் நினை வுக்கு வந்தான்.

“யார் பெத்த புள்ளையோ…அவனைப் பெத்தவுங்க மகராசனா இருக்கனும். இந்த வயசில அடுத்தவுங்க பசிய றிஞ்சு சாப்பாடு குடுக்கிற மனசு, இவனுக்கு இருக்குன்னா இவன் பெரியவனானதும் எப்படி இருப்பான்; ஆயிரக்கணக் கான பேரை வாழ வைக்கிற வள்ளலாத்தானே இருப்பான். ஆண்டவனே அந்தப் புள்ளைக்கு எந்தக் குறையும் வராம நீதான் காப்பாத்தனும் என்று வேண்டினார். தனக்குத் தானே அவனைப் பாராட்டிக் கொண்டார்.

ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்கூடம் திறக்கிற துக்கு முன்னாடி ஓடிவந்து தன்னைப் பார்தது, தனக்காக அம்மா கொடுக்கும் சாப்பாட்டை அவருக்குக் கொடுத்துவிட் டுப் போகும் அவன் தன்னைத் தனக்குத் தெரியும் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

“இந்த அனாதையை அவனுக்கு எப்படித் தெரியும். பத்துவருட காலமாகப் பெற்ற பிள்ளைகளால் விரட்டியடிக் கப்பட்டு பைத்தியம் போல் வீதிகளில் அலைந்து நிதானம் இழந்து ஒருநாள் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகி அதில் ஒரு காலையும் இழந்து முடமாகி இப்போது வயிற்றுப் பிழைப்புக்காகத் தனத்குத் தெரிந்த கூடைமுடையும் தொழிலை செய்து கொண்டு எங்கோ ஓர் மூலையில் ஒதுங்கிக் கிடக்கும் இவனை அவன் எப்படிக் கண்டு கொண் டான் கடவுளே! எல்லாம் உன் செயல்தான்”

தாத்தாவின் மனதில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டி ருந்தபோது பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருந்த சேதுபதியின் மனம், ஒருநிலையில் இல்லை… அது எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டிருந்தது. பசிவேறு சிறுகுடலைப் பெருங்கு டல் தின்ன ஆரம்பித்தது.

அவனுக்கு ஆசையாய் அம்மா செய்து கொடுக்கும் சுவையான பலகாரங்கள் எல்லாம் தாத்தாவுக்குத் தானம் பண்ணிவிட்டு வந்து விடுவதால் அவன் வயிறு அன்றாடம் அவனிடம் வம்பு பண்ணும். இன்றோ அவன் முனகல் பலமாகி அவனுக்கு வலி அதிகரிக்கத் தொடங்கியது.

எவ்வளவோ பொறுமையாய் இருந்தான், முடிய வில்லை. இறுதியாக இடக்கையால் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு.

“அம்மா” வென்று அலறினான். வகுப்பு ஆசிரியை மீனாம்பாள் ஓடிவந்து அவனைப் பிடித்துத் தூக்கி நீண்ட மேசையில் படுக்க வைத்து அமைதி படுத்தினார். அவசர மாய் அவன் அப்பாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து விரைந்து வந்த அவர், அவனைத் தங்கள் குடும்ப மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். சில நிமிடங்கள் அவனைப் பரிசோதனை செய்து மருத்துவர்,

“என்ன விஸ்வநாத்… உங்க பையனோட உணவு விஷயத்தில, நீங்க அக்கறையா இருக்க மாட்டீங்க போலி ருக்கே… சரியான உணவு இல்லாம உணவுப் பையில் கோளாறு ஏற்பட்டிருக்கு… அவனோட அம்மாவைக் கொஞ் சம் கவனமா இருக்கச் சொல்லுங்க. ஆரம்பத்திலேயேக் கவனிக்கலேன்னா அப்புறம் அதுவே வழக்கமாயிடும். இப்ப மருந்து கொடுத்திருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியாப் போய்டும். பையனை நீங்க அழைச்சிட்டுப் போகலாம் என்றார்.

டாக்டரின் வார்த்தைகள் விஸ்வநாத்தை அதிர்சசி அடையச் செய்தன. அவரது மனைவியைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். குழந்தை விஷயத்தில் எப்போதுமே அவள் அதிக கவனம் எடுத்துக் கொள்பவள். தேடித் தேடி பார்த்துப் பார்த்து பொருட்களை வாங்குவாள். அதேபோல் பையன் விருப்பம்போல் விதம் விதமாய் சமைத்துக் கொடுப்பார்.

காலைப் பசியாறல் மதிய உணவு என்று பள்ளிக்குப் போகும் போது கைப்பையிலேயே அவனிடம் கொடுத்து அனுப்புவாள், அப்படி இருக்கும்போது இவன் சரிவர சாப்பிடாமல் இருக்க, நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். அது என்னவென்று விரைவில் கண்டுபி டிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். எதையும் அவனிடம் சொல்லாமல்… கேட்காமல் வீட்டுக்குப் புறப்பட்டார். வழியி லேயே சில புதிய பழங்களை அவனுக்கு வாங்கிக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் அவனை ஒய்வெடுக்கச் சொல்லி விட்டு மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் இருவரும் அவனைப் பற்றி யோசிக்கலானார்கள். ஒரு வேளை உண்ணப் பிடிக்காமல் உணவை வெளியில் கொட்டி இருப்பானோ என்று சந்தேகப்பட்டார்கள். அவனிடம் நானே கேட்கிறேன் என்று அம்மா கூறினாள். அவன் விழித்து எழும்வரைக் காத்திருந்து, கண்விழித்ததும் அவனைத் தம் மடியில் சாய்த்துக் கொண்டு அவனிடம் அம்மா பேசத் துவங்கினாள்.

“சேதுக்கண்ணா….உனக்கு அம்மா சமையல் பிடிக்கலியா கண்ணு.. ஏன் சாப்பிடாம, வயித்தைக் காயப் போட்டீங்க…வயிறு காய்ஞ்சு இப்ப உனக்கே வியாதி வந்துடுச்சி பார்த்தியா…? புதுசா ஏதும் வேணுமின்னா என்கிட்டே சொல்லலாமே…”

சேதுபதி அம்மாவைக் குறும்பாய்ப் பார்த்தான். மெல்லச் சிரித்தான்.

“அம்மா…என் செல்ல அம்மா…நீ என்னைத் திட்ட மாட்டியே?”, என்று கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்து நடந்ததை மறைக்காமல், சொல்லி முடித்தான்.

“அம்மா அந்தத் தாத்தாவுக்கு ஒரு கால் இல்லேம்மா… ஆனா அவர் நல்ல வேலை செய்யரார்ரும்மா அழகழகா கூடை பின்னி விக்கறாரும்மா… பாவம் அவருக்குக் கொஞ் சம் காசுதான் கெடைக்குது. கூடை வாங்கிறவுங்க பேரம் பேசியே காசைக் குறைச்சிக் குடுப்பாங்க. தாத்தா கோவிக் காம அதை வாங்கிப் பாரும்மா… நம்ம அப்பான்னா நெறைய காசு கொடுத்து வாங்குவாரில்லே… நீயும் நெறைய பணம் கொடுப்பே இல்லியா…?

மகனின் அன்புள்ளம் பெற்றவள் மனதை பூரிக்க வைத் தது . யாரோ ஓர் அனாதை மீது தான் கொண்ட அன்பின் பருக்கில் தன் பசியை மறந்து தன் உணவை அவருக்குக் கொடுத்ததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். உச்சிமுதல் உள்ளங்கால் வரை முத்தமழை பொழிந்தாள். கணவனிடம் பிள்ளையின் பிஞ்சுமனம் செய்த பெரிய செய லைச் சொல்லிப் பூரித்தாள். அப்பா அவனை மெச்சினார். காரில் ஏறி மூவரும் தாத்தாவைக் காணச் சென்றார்கள். தாத்தா அப்போதுதான் எங்கோ வெளியே போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். சேதுபதி ஓடிப்போய் அவரின் முன்னால் நின்று, தன் பெற்றோர்கள் அவரைப் பார்க்க வந்திருப்பதைக் கூறினான்.

அவர்களுக்குத் தாத்தா வணக்கம் கூறினார். மிக உயர்ந்த பிள்ளையை பெற்றுள்ளீர்கள் நீங்கள். பிற்காலத்தில் இவன் வன்னலாய் வாழ்வான். இவனைப் பெற்றதால் நீங்கள் பெருமையடைகிறீர்கள் என்று அவர்களை வாழ்த்தினார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படத் தயாரானார்கள். தாத்தா ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து சேதுபதியிடம் கொடுத்தார்.

“ஐயா உனக்கு என்னோட அன்புப் பரிசு இது என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு என்மேல நீ வெச்சிருந்த அன்புக்கு என்னால வேற எதுவும் தர முடியாது…இந்தப் பேனா பென்சில் நீ எழுத உபயோகமாகுமே எடுத்துக்கய்யா…”

பாசத்துடன் கூறினார். சேதுபதி வாங்கிக் கொண்டான் பாசத்துடன் கூறினார். சேதுபதி வாங்கிக் கொண்டான். நன்றி சொன்னான். அப்போது அவனது அப்பாவும் அம்மா வும் தாங்கள் முடிவு செய்திருந்த விஷயத்தைச் சொன்னார்கள்.

சேதுபதியின் மகிழ்ச்சிக்கும் மன சந்தோஷத்திற்கும் நிரந்தரமாகவே அவரும் தங்களுடன் வந்து தங்க வேண்டும் என்றார்கள். தாத்தா திகைத்தார். இறைவனின் கருணையை மெச்சினார். தனக்கென ஒரு சொந்தம் வந்து விட்டதென மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறன் : 72)

விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_1048.html#72

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *