கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 8, 2024
பார்வையிட்டோர்: 503 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கடற்கரை பூசி மினுக்கிய செம்புப் பாத்திரம் போல் காட்சி தந்தது. அலைகள் வந்து தழுவிச் செல்லு கின்ற கரையெல்லாம் இளம் பெண்ணின் குழல் வண் ணத்தைப் பிரதிபலித்தது. 

அங்கே…. கடலிலிருந்து எழுகின்ற அலைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து கரையைத் தழுவுவதும் பின் மீள்வது மாய் இருக்கின்றன. அவ்வாறு அலைகள் கரையைத் தழுவும் போதும். மீளும் போதும் கரையில் மோதுகின்ற நீருக்குள்ளே மிகவும் இலாவகமாய்ப் புகுந்து கொண்டு இரையை உண்டு திரிகின்றன நண்டுகள். 

அத்தோடு, அலைகள் கரையைத் தழுவிவிட்டுப் போன பின்பும் கரையில் வெறும் தரையிலே ஓடித் திரிந்து கிடைப்பதை அவை அங்கும் உண்டு உலாவுகின்றன. என்றாலும் அந் நண்டுகள் நிதமும் தங்கள் வாழ்க்கையிலே, மிகவும் அதிகமான நேரத்தை அலைகளுக்குள்ளேயே கழிக்கின்றன. 

சற்று நேரத்தின் பின் கடலிலிருந்து ஒரு பெரிய அவை மிக்க இரைச்சலோடு வந்து கரையைத் தழுவி விட்டுச் செல்லுகிறது. அப்போதும் கரையில் நீருக்குள் வழமை போலவே நடந்து கொண்ட நண்டுகள் அலைமோதி மீண்ட பின்பும், அவை கரையிலே வெறும் தரையில் தத்தம் வழமையான போக்கிலேயே இழுபட்டுச் செல்லுகின்றன. அப்போது அவற்றிலே ஒரு நண்டு திடீரென்று தன் நடையை நிறுத்திக் கொண்டு நிமிர்கிறது. எதிரே கடலையே பார்த்த வண்ணம் கரையிலே நின்றிருந்த ஒரு மனிதனை உற்று நோக்குகிறது. 

அவனுக்கு முப்பத்தைந்து, நாற்பது வயதிருக்கலாம். தடிப்பான மீசை வைத்திருந்தான். தாடியும் பொசு பொசு வென்று று வளர்ந்திருந்தது. சோகம் நன்கு குடிகொண்டு, அழகான அவன் வதனத்தை அலங்கோலப்படுத்தியுமிருந்தது. 

நண்டுக்கோ அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. விழிகளை உருட்டித் தன்னை ஒருவாறு சமா ளித்துக் கொண்டது. அவ்வேளை, அந்த மனிதனின் பார்வை நண்டின் பக்கமாகத்திரும்பியது. சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த அந்நண்டோ அவனை நோக்கித் தன் பார்வையால் பேசியது. 

“ஏ மனிதா…! வாழ்க்கையில் மிக்க விரக்தியடைந் தவன் போல் ஒரு மாதிரியாகக் காணப்படுகிறாய். நீ பெரும் துன்பத்துள் வீழ்ந்துவிட்டாய் போல் தெரிகிறது… என்ன?” 

“ஆம்… ஆம்… உண்மை… உண்மை” அந்த  மனிதனும் பார்வையாலேயே பதிலளித்தான். 

“ஹாஹ்… ஹாஹ்… ஹா… துன்பமா… அதற்குள் வாழத் தெரியாதா? உயர்ந்த மனித இனமல்லவா நீ… எங்களைப்பார்… கரையிலே மோதுகின்ற அலைகளுக் குள்ளேயே நிதமும் எங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதி கழிகிறது. அவ்வா றிருந்தும் நாங்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்துவிடவில்லை. அத் தகு துன்பத்துள்ளும் இன்பமான பொழுதில் நடந்து கொள்ளுவதைப்போலவே பரபரப்பின் றி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவரின் வாழ்க் கையில் துன்பம் மட்டுமே இருப்பதில்லை. என்றோ இன்பமும் ஏற்படவே செய்யும். இன்பமும், துன்பமும், மாறி மாறி வருவதுதான் சகஜம். துன்பத்தின் மத்தியில் வாழ் வதற்குத் திடமான உள்ளம் வேண்டும். ஆனால் இன்பத் தின் மத்தியில் வாழ்வதற்கோ சாதாரண மனமே போதும். ஆகையினாலே இன்பத்தின் மத்தியில் வாழ்வது பெரிய காரியமல்ல. துன்பத்தின் மத்தியில் துவண்டுவிடாமல் வாழ்வதுதான் பெரிய காரியம். சற்றுச் சிந்தித்துப்பார்!” 

அந்த நண்டு மீண்டும் அலைக்குள் ஓடிச் செல்லு கிறது. சிறிது நேரத்தின் பின்பு அது திரும்பவும் அவ்விடத் திற்கே வருகிறது. அந்த மனிதனும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். ஆனால்… இப்போது அவன் வதனத்திலும் விழிகளிலும் சற்று ஒளி பரவியிருந்தது. 

அந்த மனிதன் கரையிலே மேய்ந்து கொண்டிருந்த தன் பார்வையை இழுத்து அந் நண்டின்மேல் படர விட்டான். நண்டோ, இப்போது அந்த மனிதனின் நிலையை அறிவதற்காகத் தன் பார்வையால் அவனை நோக்கி “என்னப்பா.!” என்று மட்டும் கூறிவிட்டு சும்மா நின்று கொண்டது. 

அந்த மனிதனும் பார்வையாலேயே பகர்ந்தான்: 

“நண்டே! நான் அழிந்துவிட இருந்த வேளையில் நல்ல அறிவுரைகளை வழங்கியதோடு உன் இனத்தின் வாழ்க்கையையும் அவதானிக்கவைத்து என்னைத் திருத்தி விட்டாய். இனிமேல் என் வாழ்க்கையில் எந்த வகையிலே துன்ப அலைகள் வந்து சூழ்ந்த போதும், அவற்றிலே மூழ்கி அடிபட்டுப் போய்விட மாட்டேன். எதிர் கொண்டு சமாளித்து வெல்வேன். துன்பம் இனி எனக்குத் தூசு. என்றும் மகிழ்வோடு வாழ்வேன். என்னைத் திருத்திவிட்ட உனக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்”

அந்த மனிதன் நெற்றியிலே கவிந்து கிடந்த தலை மயிரை மேல் நோக்கி ஒதுக்கி விட்டுக் கொண்டான். 

இவ்வளவு விரைவாய் அந்த மனிதன் திருந்தி விட்டதை எண்ணி நண்டு மெத்தவே மகிழ்ந்து போனது. 

“மனிதா! மிகவும் சந்தோசம். நான் வருகிறேன்” அந்த நண்டு விடை பெற்றுக் கொண்டு மீண்டும். அலைக்குள் விரைகிறது. 

– தினகரன் வார மஞ்சரி – 1986.09.10.

– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.

உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *