அண்ணனின் பணத் திமிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,895 
 

ஒரு ஊரில் அண்ண னும், தம்பியும் அடுத்த அடுத்த வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

அண்ணன் வியாபாரம் செய்து பணக்காரன் ஆனான்.

தம்பியோ உழைத்துச் சம்பாதிக்கும் ஏழ்மை நிலையில் இருந்தான்.

தம்பிக்கு எதுவுமே உதவுவதில்லை . அவனும் அண்ண னிடம் உதவி கேட்பதில்லை.

அண்ணனுக்கு, தான் பணவசதி உள்ளவன் என்ற கர்வம் அதிகம், அதனால் எவரிடமும் அலட்சியமாக நடந்து கொள்வான்.

ஒரு நாள், தன் தம்பியிடம், “உன் வீட்டை என்னிடம் விற்றுவிட்டு வேறு எங்கேயாவது போய் குடியிருக்கலாமே?” என்றான்.

தம்பிக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “உனக்கு பணத்திமிர் அதிகம். அகம்பாவத்தால், ஆட்டம் போடாதே; உன்னிடம் எப்பொழுதாவது நான் உதவி கேட்டது உண்டா? உன் வீட்டு வாசலைக் கூட மிதித்தது இல்லையே, அப்படி இருக்கும்போது, என் வீட்டை விலைக்குக் கேட்கிறாயே; உனக்கு எவ்வளவு கர்வம்?

நான் வேண்டுமானால், என் பக்கத்து வீட்டுக்காரர் என் அண்ணன் பெரிய பணக்காரன் என்று பெருமையாகக் கூறிக் கொள்ள முடியும் நான் அப்படி பெருமையாகப் பேச முடியாத போது, நீ ஏன் கர்வத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில், உன் பக்கத்து வீட்டுக்காரனாகிய உன் தம்பி மிகவும் ஏழையாகிய நான் தானே?” என்று பொரிந்து தள்ளினான். அது முதல் அண்ணனின் அகம்பாவம் மறைந்தது.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *