(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பக்கத்து வீட்டிலே ஒரே கூச்சலும் கூப்பாடு மாயிருந்தது. தங்கம்மாள் ஓடிப் போய்ப் பார்த்து விட்டு வந்தாள். “என்ன நடந்தது ?” என்று விசாரித்தார் பொன்னப்பர்.
“ஆசிரியர் நமசிவாயம் கடன் வாங்கியிருந் தாராம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடிய வில்லை. கடன் கொடுத்த முரடன் கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லையா என்று கேட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்” என்று சொன்னாள் தங்கம்மாள்.
“ஆசிரியர் நமசிவாயத்தை அடிக்கிறானா? அப்பாவியாயிற்றே அவர். இரு, இதோ வருகிறேன்!” என்று சொல்லிப் பொன்னப்பர் எழுந்தார். பக்கத்து வீட்டுக்கு ஓடினார். ஆசிரியர் நமசிவாயத்தை அந்த முரடன்
அப்போதும் அடித்துக் கொண்டுதான இருந்தான். பொன்னப்பர் அவன் மேல் பாய்ந்தார். அவன் கையில் இருந்த தடியைப் பறித்தார். அவனைத் தூணோடு தூணாகச் சேர்த்து வைத்துக் கட்டினார்.
அதன்பின் நமசிவாயத்தை நோக்கி, “என்ன நடந்தது?
இவனிடம் எவ்வளவு கடன் வாங்கி னீர்கள் ?” என்று விசாரித்தார்.
“நான் கடனே வாங்கவில்லை. என்னை உங்க ளுக்குத் தெரியாதா ? எனக்குக் கடன் வாங்க என்ன தேவையிருக்கிறது!” என்று அடிபட்ட வலி வேதனையோடு பேசினார் ஆசிரியர் நமசிவாயம். அவர் பொய் பேசாதவர் என்பது பொன்னப்பர் அறிந்ததே.
கொல்லும் பார்வையோடு அவர் முரடனை நோக்கினார். “சந்தையில் ஐந்து ரூபாய் கொடுத் தேன். இப்போது இல்லை என்கிறாரே” என்றான் முரடன்.
நமசிவாயம் ஆப்பக்கார கிழவி வீட்டில் சாப்பிடுகிறார் என்பது யாவரும் அறிந்த செய்தி. அவர் சந்தைக்குப் போக வேண்டிய வேலையே இல்லை. முரடன் பொய் அம்பலமாகி விட்டது. பொன்னப்பர் அவனைக் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
”பொன்னப்பரே, சமயத்தில் நீங்கள் வந்து காப்பாற்றாவிட்டால், அந்த முரடன் என்னைச் சாகடித்திருப்பான். பிறர் துயரம் தீர்க்க முன் வரும் உங்களைப் போன்ற வீரர்களால்தான் என்னைப் போன்ற அப்பாவிகள் பிழைத்திருக்கிறார்கள்” என்று நன்றி நிறைந்த சொற்களைக் கூறினார் ஆசிரியர் நமசிவாயம்.
கருத்துரை:- பெரியவர்கள், பிறர் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதி விரைந்து சென்று நீக்குவார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.