ராஜேஷ்குமார் நிமிடக் கதைகள்!

 

இரண்டாவது இன்னிங்ஸ்

நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள்.

‘‘என்ன ஷிவா… ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, அவளோட பி.சி-யில் உன் போட்டோ..! டூயட் பாடாதது ஒண்ணுதான் குறையாம்! ஆபீஸே புகையுது!’’

‘‘பேத்தல்!’’

‘‘நம்ப மாட்டேன். இன்னிக்கில்லேன் னாலும் என்னிக்காவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்துடும்…’’ என்றபடி மெர்ஸி எழுந்து போக, அந்த இடத்தில் வந்து உட்கார்ந்தாள் ரீட்டா.

‘‘மெர்ஸி பேசியதை நானும் கேட்டேன். எனக்குத் தெரிஞ்சு அதுல பாதி நிஜம்! நான் ஏற்கெனவே உங்களைக் காதலிக்கிற தாகச் சொல்லிட்டேன். உங்க முடிவு என்ன, எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!’’ என்றாள்.

‘‘ரீட்டா! நான் என்ன சொல்ல வரேன்னா…’’

‘‘தெரியும்! சென்னைல உங்களுக் கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. நமக்குள்ளே வேண்டாத ஒரு ‘மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்’ ஏற்பட்டு, டைவர்ஸ் வரைக்கும் போயிட்டோம். அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நீங்களும் நானும் இந்த நியூஜெர்ஸியில் சந்திச்சது, மறுபடி ஒண்ணு சேர்றதுக்குதான்னு நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸைக் கோட்டை விட்டுட் டோம். ரெண்டாவது இன்னிங்ஸை கன்டினியூ பண்ணா என்ன? புதுசா காதலிப்போம்… கல்யாணம் பண்ணிக் குவோம். என்ன சொல்றீங்க?’’

‘‘ஐ லவ் யூ ரீட்டா!’’ என்றேன் காதலாகிக் கசிந்த அவள் கண்களைப் பார்த்தபடி!

நம்பிக்கை

‘‘டாக்டர்! என் மனைவிக்குப் பிறந்திருக்கிற பெண் குழந்தைக்கு வலது கால் சூம்பிப் போய், குச்சி மாதிரி இருக்கு. கண் கொண்டு பார்க்க முடியல. என் மனைவியும் குழந்தையைப் பார்க்கப் பிரியப்படாம திரும்பிப் படுத்து அழுதுட்டு இருக்கா. எங்க உறவுக் காரங்க வந்து குழந்தையைப் பார்க்கிறதுக்குள்ள…’’& முடிக்கத் தயங்கினான் ராகவன்.

‘‘கொன்னுடச் சொல்றீங்களா..?’’&சீறலாகக் கேட்டாள் டாக்டர் வாணி.

‘ஆமாம்’ என்பது போல் மெள்ளத் தலையசைத்த ராகவன், ‘‘ஊனமுள்ள குழந்தை எதிர்காலத்தில் ரொம்பக் கஷ்டப்படுமே டாக்டர்! வாழ்க்கையில் அது எப்படி முன்னேறும்? அதனாலதான் அழிச்சுடச் சொல்றேன்’’ என்றான்.

‘‘அப்படீன்னு என் அப்பா&அம்மா நினைச்சிருந்தா, இன்னிக்கு நான் ஒரு டாக்டராக வந்திருக்க முடியுமா?’’ என்று கேட்ட வாணி, தன் ஜாக்கெட்டின் வலது கை மறைவில் இருந்த ஸ்க்ரூ போன்ற அமைப்பைத் திருகி, உடம்பின் நிறத்தோடு ஒத்துப்போயிருந்த வலது செயற்கைக் கையைத் தனியே எடுத்து மேஜையில் வைத்தாள்!

வலி

அதிகாலை. அறையினின்றும் வெளியே வந்தான் டேனியல். மனசு வலித்தது.

செய்யாத குற்றத்துக்கு 10 வருட கடுங்காவல்! மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு வந்தவனுக்கு இன்று விடுதலை. போலீஸ், கோர்ட், சட்டம், வக்கீல், நீதிபதி என்ற இந்த வார்த்தைகள் காதில் விழுந்தாலே குமட்டியது டேனியலுக்கு.

மெயின் ரோட்டுக்கு வந்து, காத்திருந்த டவுன் பஸ்ஸில் ஏறி, வீடு வந்து சேர்ந்தபோது, மனைவி ஸ்டெல்லா வாசலைக் கூட்டிக்கொண்டு இருந்தாள். டேனியலைப் பார்த்ததும் வேகமாக வந்து, அவன் கையைப் பற்றினாள்.

‘‘ஸ்டெல்லா! நான் எடுக்கப்போற முடிவு உனக்கு அதிர்ச்சியா இருக்க லாம். ஆனா, எனக்கு வேற வழி யில்லே! செய்யாத குற்றத்துக்காக ஒருத்தன் பத்து வருட கடுங் காவல் தண்டனையை அனுப விச்சுட்டு, வெளியே போனான்னா சமூ கத்தில் அவனுக்கு என்ன மரியாதை இருக்கும்? அவன் பெண்டாட்டி, பிள் ளைங்கள்லாம் என்ன கதி ஆகியிருப் பாங்க? அப்படி ஒருத்தன் இன் னிக்கு விடுதலை யாகிப் போகும் போது கதறி அழுதான். என்னால தாங்க முடியலை. ஒரு வேலையைச் செய்யும் போது மனசுக்குச் சந்தோஷம் கிடைக்கணும். இந்த வேலையில் அதுக்கு வாய்ப்பே இல்லே. அதனால, இந்த சிறை வார்டன் வேலையை ராஜினாமா பண்றதா தீர்மானிச்சுட்டேன். உனக்கு ஆட்சேபணை இல்லியே?’’

- வெளியான தேதி: 27 டிசம்பர் ௨௦௦௬ 

தொடர்புடைய சிறுகதைகள்
ஈடு
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை பதினோரு மணி. ஜனக் கூட்டம் கணிசமாய்ப் புழங்கும் அந்த மெயின் ரோட்டின் வலைவில் பலகைகளால் தடுக்கப் பெற்ற, சுப்பையனின் டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. பக்கத்துக் கிராமமான ...
மேலும் கதையை படிக்க...
அவள் பெயர் தமிழச்சி
ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் நியூஜெர்ஸி வெள்ளை வெளேரென்ற உறைபனியில் இருக்க, என் மனதும் அடிவயிறும் நூற்றுப் பத்து டிகிரி உஷ்ணத்தில் தகித்துக்கொண்டு இருந்தது. 'தீட்சண்யா! எப்படியடி நீ ஏமாந்தாய்? எல்லா விஷயத்திலுமே ஜாக்கிரதையாக இருப்பாயே... இந்த விஷயத்தில் மட்டும் எப்படிக் கோட்டை விட்டாய்?' ...
மேலும் கதையை படிக்க...
வலை
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அடி வயிற்றில் ஆவேசத்துடன் செருகப்பட்ட அந்த ஒன்பது அங்குலக் கத்தி கல்லீரலையும், மண்ணீரலையும் சிதைத்து மரணத்தை உண்டாக்கியிருக்கிறது. மரணம் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திகழ்ந்திருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் ...
மேலும் கதையை படிக்க...
மறுபடியும் ஒருதடவை!
ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன. ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் ...
மேலும் கதையை படிக்க...
பதினோராவது பொருத்தம்
இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?'' தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். '' 'மகிள ரத்னா’ என்கிற பெயரில் ...
மேலும் கதையை படிக்க...
இளம்பிறையின் இரவுகள்
அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய் ஒளிர்ந்த சப்தரிஷி மண்டலவிண்மீன் கூட்டமோ, அருகாமையில் இருந்தஅந்தப்புர நந்தவனத்திலிருந்து வெளிப்பட்டநறுமண பூங்காற்றோ மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியாமல் தோற்றுப் போயிற்று. காரணம், மகாராணியின் ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். "கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ...
மேலும் கதையை படிக்க...
சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயே ஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள். அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட் ...
மேலும் கதையை படிக்க...
ஈடு
அவள் பெயர் தமிழச்சி
கனாக் கண்டேன் தோழா
வலை
மறுபடியும் ஒருதடவை!
பதினோராவது பொருத்தம்
இளம்பிறையின் இரவுகள்
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
உன் இதயம் பேசுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)