விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட
இவனுக்கு தெரியாது.
வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.
ஊருக்குள் முனியசாமிக்கு “அரைப்பைத்தியம்” என்று பெயர்.
எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.
முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.
-நிலாரசிகன்.
பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்….)Wednesday, October 10, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.
ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு ...
மேலும் கதையை படிக்க...
இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன் இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது..
பத்து மணிக்கே வர்றேன்னு சொன்னவன் இன்னும் வரலை. ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது...
மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள்.
மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் ...
மேலும் கதையை படிக்க...
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.
எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.
"அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.
அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை
எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.
துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை
கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.
எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி ...
மேலும் கதையை படிக்க...
1.
கண்களை திறக்க முடியவில்லை.உடலெங்கும் பரவிய வலி கண்களில் குவிந்திருந்தது. பலமான காற்று வீசுவதும் மரக்கிளைகள் வேகமாய் அசைவதும் உணர முடிந்தது. மிகுந்த வலியுடன் கண்களை திறந்து பார்த்தான் இராவணன். தான் எங்கிருக்கிறோம் என்பது முதலில் புரிபடவில்லை. காய்ந்த புற்களும் இலவம் பஞ்சைப் ...
மேலும் கதையை படிக்க...
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா"
அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன்.
எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா?
பயம்தான். பயம் மட்டும்தான் காரணம்.
காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய
பணக்கார குடும்பத்தில் பிறந்தவள்.
அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் ...
மேலும் கதையை படிக்க...
மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)