கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 9,351 
 

பொய்தான் சொன்னான். பொய்யை உண்மையை போல் சொல்லும் திறன் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தியமாக அவன் பொய்தான் சொல்கிறான். அவனின் கண்களைப் சற்று உற்று பார்த்தால் பொய்மை எகத்தாலமாக நம்மை பார்த்து சிரிக்கும். இருந்தாலும் அத்தனை பொய்யும் அவனது கவர்ச்சிகரமான புன்னகையில் கரைந்து போகும். சிவன். பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பான். நேர்த்தியான பள்ளி உடை… மடிப்புக் களையாமல் ஆடை உடுத்துவதில் அவனுக்கு நிகர் அவன். அமைதியும் நிதானமும் அவனின் உடன் பிறப்பு.

அப்பள்ளியெங்கும் புற்றீசல் போல் வெள்ளைப் பூக்கள் திடீயென்று பூத்திருந்தன.மாணவர்களின் காலை நேரத்து வாசம் அப்படித்தான் போலும் , அங்கொன்று இங்கொன்றாக வண்ணத்து பூச்சிகளாக சில ஆசிரியை பெருந்தகைகள் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தனர்.

இது தினந்தோறும் அப்பள்ளியில் நடக்கும் காலைக் காட்சி. அன்றாடம் கடந்து போகும் வாடிக்கை கலாச்சாரம், அதுவும் பள்ளியின் ஆரம்ப மணி அடிப்பதற்கு முன். ஒரு வெள்ளை பூ வட்டமிட்டு வந்தது, என் அருகில். அதோ!

“ஏன்னடா நேத்து ஸ்கூலுக்கு வரல? சர்வசாதரணமாக சொன்னான் “உடம்பு சரியில்ல டீச்சர்”

“எப்ப பார்த்தாலும் ஏதாவது காரணத்த சொல்லு.. ! இது ஒரு பொழப்பா போச்சு”……என்றேன்.

“உனக்கு ஸ்கூலுக்கு வரத்துக்கு ஏண்டா கசக்குது. என்று பண்மையில் முழங்கினேன். ஒழுங்க படிச்சு நல்ல நிலைக்கு வரனனு ஆசை இல்லையா உனக்கு?” என்று கேள்விக் கனைகளை எறிந்தேன்.

“இருக்கு” என்றான்.

ஒரளவுக்கு படிக்கும் மாணவன் அவன். ஆர்வத்தோடு படிப்பான். அவனை இழப்பதற்கு எனக்கு மனம் வரவில்லை. முயற்சி திருவினையாக்கும் அவன் முயன்றால் வருங்காலத்தில் சிறப்பாக வருவான், என் மனம் சொன்னது. இந்த வருட முதலில் இருந்து அந்த வகுப்பை என் பொறுப்பில் விட்டுவிட்டார் தலைமை ஆசிரியர். ரொம்ப போசமாக இருந்த அந்த வகுப்பு மாணவர்களை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போது என்றாகிவிட்டது.

தலைமை ஆசிரியரிடமும் எடுத்து சொல்லிவிட்டேன். “அதற்குதானே உங்களிடம் ஒப்படைத்தேன். உங்களால் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.. அவர்கள் இரண்டாம் தர வகுப்பாய் இருந்தாலும், தேர்வில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒட்டு மொத்த பள்ளியின் வெற்றியின் நிலையை பாதிக்கும் என்பதால் அவர்களை உங்களிடம் ஒப்படைதேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

பக்கத்தில் இருந்த திடலைப் பார்த்தேன். என்றும் இல்லாத சத்தம் அன்று ஆரவாரத்தோடு அதிகமாக கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி கண்களை செலுத்தினேன். புறப்பாட வகுப்பில் மாணவர்கள் சந்தோசமாய் இயங்கிக் கொண்டிருந்தனர். ஒன்றாம் வகுப்பில் நான்கம் வகுப்பு வரை அவர்களுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர் ஜெயந்தி அந்த வழியில் சென்றபோது அவர்களை அழைத்து ஜெயந்தி சிவன் ஏன் அடிக்கடி .மட்டம் போடுகின்றான் என்று வினாவினேன்? “அவன் எப்போதும் அப்படிதான் . எவ்வளவு சொன்னாலும், கேட்க மாட்டான். அந்தசீக்கு இந்தசீக்குனு சொல்லுவன் . இப்ப புதுச லுக்மேனிய என்கிறான். அவ்வளவும் பொய்ங்க டீச்சர் என்றார்கள். திடுக்கிட்டேன் நான். அவன் பார்பதற்கு அப்படி ஒன்றும் சீக்காளி மாதிரி தெரியவில்லை. வகுப்பை வலம் வந்து அவன் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

“டீச்சர்” என்று என்னை அழைத்தான்.

“என்னடா” என்றேன் . டீச்சர் எனக்கு இனிப்பு நீராம். டாக்டர் சொன்னாரு…என்று ரகசியமாக சொன்னான்.

சிரிப்புதான் வந்தது எனக்கு. இருந்தாலும் முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னேன்.

“அப்படியே விட்டேனே பாரு. பொய்யா பேசற?” என்றேன்.

“இல்லைங்க டீச்சர் சத்தியமாதான் சொல்லறேன்” என்றான். சத்தியம் என்றவுடன். மனம் கொஞ்சம் இளகியது “ இதுக்கெல்லாம் சத்தியம் சொல்லலாமாடா” என்று சொல்லி பாடங்களை திருத்திக்கொண்டிருந்தேன்.

மனம் மெளனமானது..

அன்று பள்ளி விட்டவுடன் அவனைத் தேடினேன். பிள்ளைகள் கூட்டம் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். பள்ளியின் ஒருமூலையில் அமைதியாக அமர்ந்திருந்தான் அவன். எதிரே போய் நின்றவுடன் நிமிர்ந்து என்னை ஏரெடுத்து பார்த்தான். “நாளைக்கு பள்ளிக்கு வரும்போது அம்மாவையும் அழைத்து வா ,,,, டீச்சர் பேசனும்” என்றேன் .

தலையை ஆட்டியபடி பள்ளி பேருந்து வந்தவுடன் ஓடிச் சென்று அதில் ஏறிக்கொண்டான். என்ன அப்பாஅம்மா இவர்கள் ஒருமாதமாக சொல்கிறேன் என்னை வந்து பார்க்க சொல்லி ஆனால் வந்த பாடில்லை.

பிள்ளைகளின் கல்வியை விட அப்படி என்ன முக்கிய வேலை இவர்களுக்கு? பிள்ளைகள் பள்ளிக்கு மட்டம் போடுவது கூட இவர்களுக்கு தெரியுமா தெரியாதோ என்னவோ. கலிக் காலமாய் போச்சுடா கஷ்டப்பட்டு பெற்றெடுத்த பிள்ளைகளின் எதிர்க்காலத்தை வளமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கூடவா இருக்காது இவர்களுக்கு. பெற்றுப் போட்டா மட்டும் போதுமா? பிள்ளைகளின் வளர்ச்சியில் கொஞ்சம் அக்கரைக் காட்டக்கூடாதா? மண்டையில் மசாலா இருந்தாதானே! அது சரி இருந்ததானே எதுவும் வெளியே வரப் போகிறது?

கண்களை மூடினால் எல்லாம் குட்டிச் சுவராய் அல்லவா தெரிகிறது. என்ன செய்வது தமிழ்ப் பள்ளி என்றால் சிலருக்கு கிள்ளுகீரையாகதான் இருக்கிறது.பள்ளிக்கு வராவிட்டால் ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பு. சமுகத்தின் மீது அக்கறை உள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளின் வீடுவரை வந்து மரியாதை இழந்ததுதான் மிஞ்சம். சற்று நேரத்தில் அவனை ஏற்றிச் சென்ற அந்த மஞ்சள் நிற வேன் என் கண்களை விட்டு மறைந்தே போனது.

அன்று மாலை வரை அவன் சிந்தனைதான் எனக்கு!. நல்ல பையனாச்சே ஏன் தாய் தந்தைக்கு அக்கறை இல்லை. நாளை அவனின் தாய் வந்தால் அவர்களின் குடும்ப நிலவரத்தை கேட்டு தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கடைநிலை மாணவர்களை நாம் அடித்து மிரட்டி படித்துக் கொடுத்தால் தாய் தந்தை ஏன் என் பிள்ளைகளை அடித்தாய் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்கள். பிறகு எப்படி படிப்பு வரும்? நம் பிள்ளைகளின் நன்மைக்குதானே பள்ளி ஆசிரியர்கள் செயல் படுகிறார்கள் என்று எண்ணம் எந்த பெற்றோர்களாவது வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இந்த சமுகமும் சரி, ஆசிரியர்களும் சரி நன்றாக படிக்கும் மாணவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து தாலாட்டுகின்றனர். கொஞ்சம் சுமாராக படிக்கும் மாணவர் கண்டுக்கொள்வதில்லை. அல்லது புறக்கணித்து விடுகின்றனர்.பெரும்பாலோர் கடும் சிக்கலான பிரச்சனைகளை கொண்டிருக்கின்றனர். சில பிள்ளைகள் கவனிப்பின்றி கிடக்கின்றனர். அவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்று வளமாக வாழ ஏதாவது வழிவகைகளை அவர்களிடம் கொண்டுச் சென்றால் கோடி புண்ணியம் உண்டாகும். தடம் மாறும் நாளைய இந்திய சமுகத்தை கரையேற்றலாம். பள்ளிப் படிப்பை மட்டும் எதிர்ப்பார்க்கும் இந்த பெற்றோர்கள், பிள்ளைகளை தொழில் கல்வி பெருவதற்கு ஆவணம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சீனர்கள் எல்லோரும் என்ன படித்தா பணத்தோடு இருக்கின்றார்கள்? தொழில்தான் அவனை “தவுக்கே: என்று அழைப்பதற்கு காரணமாகிறது. நாம் சிறந்த சமுகம் என்றிருந்த நிலை மாறி “கிரிமினல்” சமுகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். பூனைக்கு மணிக்கட்டுவது யாரு?

போகட்டும் இந்த சமுதாயம் ஆசிரியர்களை மட்டும் குறைச்சொல்வதில் என்ன பயன்? மறுநாள் காலை வருகை அட்டையை பதிவு செய்த பிறகு என் வகுப்பறையை நோக்கி நடந்தேன். விறுவிறுப்பான காலை சுழலில் துண்டைக்கானும் துனியைக் கானும்னு தம் தம் வகுப்பை நோக்கி ஓடிய ஆசிரியர்களை பார்த்தேன். மாணவர்களை விட ஆசிரியர்களை பார்க்க பாரிதாபமாக இருந்தது.

மாணவர்கள் புத்தகச் சுமையை சுமக்கிறார்கள் என்றால் ஆசிரியர்கள் மனச் சுமைகளை சுமந்துக்கொண்டு வகுப்பறைக்கு வருவார்கள் போலும். அவர்களை சொல்லிக் குற்றமில்லை. பணிச்சுமை ஒரு பக்கம் என்றால் குடும்ப சுமை மறுபக்கம். இன்றைய ஆசிரியரியர்களின் மன அழுத்ததிற்கு அவர்களின் பணிச் சுமையே காரணம் என்பேன்.

சிவனை பார்த்தேன் ஜீவனில்லாமல் தலையை சொரிந்துக்கொண்டு நின்றிருந்தான். நான் கேள்விக் கணைகளை நான் தொடுக்கவே இல்லை. ஆனாலும் அவனிடமிருந்து பதில் வந்தது. நான் இந்த வகுப்பை எடுத்ததிலிருந்து அவன் பெற்றோர்ரிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன், எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் வர வில்லை.

“இதுங்க எல்லாம் எங்க உறுப்பட போகுதுனு” அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன்.

“டிச்சர் “ “என்னடா” “

எங்க அம்மா அப்புறம் வரனுன்சொன்னாங்க.”

நான் சிறு புன்னகை பூத்தேன் “போடா அப்பையிலருந்து அப்படிதான் சொல்லறாங்க” என்றேன்.

“முதல உன்னை உதைக்கனும்டா அப்பதான் அவங்க சரிப்படுவாங்க”

மெளனமாக நின்றவனை பார்த்து மீண்டும் கேட்டேன் .

“உன்னை விட அவங்களுக்கு அப்படி என்னடா வேலை?”

“உன்னை பத்தி கொஞ்சமாவுது அக்கறை இருக்கா அவங்களுக்கு?”

என்னை வெறிக்க பார்த்தவனின் கண்கள் கலங்கியது. அவன் மேல் கோபத்திற்கு பதில் ஒரு இனம் புரியாத பச்சபாதம் எற்பட்டது. அவனிடம் அதற்கு மேல் என்னதான் சொல்ல முடியும்?

சிவன் எதையோ பறிகொடுத்தவன் போல உணர்வின்றி வானத்தை வெறிக்கபார்த்தான். சற்று ஓய்வு கிடைத்த போது ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தேன்.

அப்போது என் சக ஆசிரியை “டீச்சர் சிவனின் அம்மா உங்களிடம் பேச வேண்டுமாம்” என்று கூறினார். நடுத்தர வயது பெண்மனி என் அருகில் வந்து முகம் மலர வணக்கம் டீச்சர் “நான் தான் சிவனின் அம்மா” என்றார்கள்.

“ ஓ அப்படிய உங்களைதான் ரொம்ப நாள எதிர்ப்பார்த்தேன். ஏங்க உங்க பையன் மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லையா” என்றேன்.

“ஏங்க அவன் பள்ளிக்கு ரொம்ப மட்டம் போடுகிறான் நீங்க கவனிக்க மாட்டிங்களா?. எப்பபார்த்தாலும் சீக்கு சீக்கு என்கிறான். நேற்று என்னடானா லுக்மேனியா என்கிறான்.இதை எல்லாம் நீங்க கண்டிக்க கூடாதா?” என்று சற்று கடிந்து சொன்னேன்.

சற்று மெளனமாக இருந்த சிவனி தாயார். “இல்லைங்க டீச்சர். . உண்மையாகவே அவனுக்கு லுக்மேனியதான் டீச்சர். மாதத்திற்கு இரண்டு முறை அவனுக்கு ஊசி போடவேண்டும். லுக்மேனிய ஊசி போட்டதால இப்ப அவனுக்கு இனிப்பு நீர் அதிகமாகிவிட்டது அதனால தான் அவன் ரொம்ப சோர்ந்து போறான் டிச்சர் டாக்டர் அடுத்த வருசம் கொடு கொடுத்திருக்கின்றார்.”

“இப்ப எல்லாம் அவனுக்கு ரொம்ப கோவம் வருதுங்க டீச்சர்.நான் தான் சாவபோறோனே நான் கேட்கிறது வாங்கி கொடுங்கனு அடம்பிடிக்கிறான்”. நான் அவர்களையே உற்று பார்த்து,

“உண்மையாகவா”

ஏன் என்று கேட்டு என் புருவங்களை உயர்த்தினேன், எனக்கும் என் கணவருக்கும் ஓ குருப் ரத்தம் அதான். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். நான்கு பிள்ளைகளில் முத்தவனுக்கும் இளையவனான சிவனுக்கும் இந்த நோயால பாதிச்சி இருக்காங்க என்று சொல்லி தன் கண்களில் படிந்த கண்ணீர் முத்துக்களை துடைத்துக்கொண்டார்கள்.

முதல் பையன் எட்டு வயதிலே இறந்துவிட்டான்!.

அதிர்ச்சியில் உறைந்து போனேன். வெட்டி விழ்ந்த மரக்கிளைப்போல் அப்படியே நாற்காலியில் சரிந்தேன். சிவனின் தாய் என்னைப்பார்த்து “முதல் பிள்ளை இறந்தவுடன் இப்படிப்பட்ட விஷயம் எங்களுக்கு மறுத்து போயிருச்சிங்க டீச்சர்” என்றார்கள்.

“சாவு எங்களுக்கு இப்ப பெரிசு இல்ல! ஆனா சாவ நினைக்கர துன்பம்தான் ரொம்ப பெருசா இருக்கு” கொஞ்சம் நேரம் அவர்களையே உற்றுப்பார்த்தேன். எனக்கு வார்த்தைகள் வர மறுத்தன. எப்படி எல்லாம் அடித்திருப்பேன் ஒரு வார்த்தை சொல்லியிப்பான அவன்?

அடுத்த வினாடி யாரோ திடுதிடுப்புனு நடந்து வந்து என் வார்த்தைகளில் நம்மிக்கையற்று என் முதுகில் நாலு சாத்து சாத்தியது போன்ற பிரஞ்சனையற்று கலக்கத்தோடு சிவனின் அம்மாவை நோக்கினேன்.

கல்லிலே நார் உறிபவர்களை பார்த்திருக்கின்றேன். நாரே கல்லாக இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். ரொம்ப மன அழுத்தக் காரன் எனக்கு வருத்தம் மேலிட்டது. நம்புவதும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. யாரிடம் இதை உறுதிப்படுத்திக் கொள்வது?

நேராக என் வகுப்பறைக்கு சென்றேன். சத்தமில்லாமல் சிவனிடம் சிறு புன்னகை பூத்தேன் பவ்வியமாக கேட்டேன் சாப்பிட்டியா? “சாப்பிட்டேன் டீச்சர்” என்றான்.

அருகில் அமர்ந்து “என்னடா அடுத்த வருடம் செத்துடுவெனு எல்லார்கிட்டையும் சொல்லரையாமே சாவு என்ன நீ கூப்பிடவுடனே வந்து விடுமா என்ன? காரணமே சொல்லாமல் வந்தாலும் வரும் அதற்காக இப்படியா இந்த சிறுவன் மேல்! அப்படி என்ன ஆசை அதற்கு? என் கண்கள் அவன் கண்களை ஊடுறுவின, அவன் உதடுகள் நடுங்கின, வாய் ஏதோ சொல்ல முயன்று முடிவில் “செத்துடுவேனா” என்றான்? எனக்கு தூக்கி வாரிப்போட்டது

சாவு என்றவுடன் எனக்கே மரண பயம் வந்துவிட்டது.. நான் உளறி விட்டேனா? இனம் தெரியாத ஒரு பயம் லேசாக என் மனதிம் எங்கோ ஒரு மூலையில் மரம் முளைத்து கிளைகள் பரப்பியது.. ஏதும் புரியாமல், அவன் முகத்தை வெறிக்க பார்த்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *