கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 13,097 
 
 

பரமக்குடியிலேயே இறங்கிவிட்டேன். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் என்கிற இல்லை எனக்கு.

வழியெங்கும் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.இறங்குவதற்கு ஏதுவான இடம் எதுவாய் இருக்க முடியும் என,,,,,,,,,,,,,

நீண்டு விரிந்திருந்த பஸ்,அதில் சற்று நிதானமாகவும், அவசரமான மனோ
நிலையிலும்அமர்ந்திருந்தமனிதர்கள்,கலர்,கலரான உடைகளிலும்,
அலங்காரத்திலும்,பெண்களும்,சிறுவர்களுமாய் தனித்துத்தெரிந்தார்கள்.
டிக்கெட் மிசினை சரிபார்த்துக்கொண்டிருந்த கண்டக்டர் ஓட்டுனரிடம் ஏதோ பேச்சுக் கொடுத்தவாறு ஆண்களை விட பேச்சு சத்தம் அதிகமாய் கேட்ட பெண்கள் பக்கம் கலகலப்பாய்தெரிந்தது. அப்படி என்னதான் பேசுவார்கள் எனத் தெரியவில்லை.

“வீட்டில்பேசுகிறார்கள்,வெளியில்பேசுகிறார்கள்,பார்க்கிறஇடங்களிலெல்லாம்
பேசிக்கொள்கிறார்கள்.இது போக பேசிப்பேசி தீராத பேச்சும்,வற்றாத ஆற்றாமையும் அவர்களது பேச்சில் வெளிப்பட காரணம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள்”என்கிறான்எனதுநண்பன்.

அது தனியார் பேருந்தா?,அரசுபேருந்தா?,,,,,,,தெரியவில்லை?அலங்காரம் கூட்டித்தெரிந்தது.

ஓட்டுனரின் இருக்கையை ஒட்டியிருந்த முன்புற கண்ணாடியில் சுற்றி,சுற்றிஓடியவாறுஎரிந்தபொடிப்பொடியான கலர் விளக்குகளும்,ஓட்டுனரின் தலைக்கு மேல் ஓடிய இரட்டை தொலைக்காட்சிகளில் ஓடிய படமும்,பாட்டும் பேருந்தை புதிதாய் காண்பிக்கிறது.

நல்ல பாடல் ,நல்ல காட்சி பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாயும், மனதுக்கு இதமாயும் இருந்தது.அது எத்தனை பேரினுள் நுழைந்திருக்கும் என்பது தெரியவில்லை.

வெள்ளியில் உருக்கி ஊற்றியது போல் இருந்தது.பேருந்தினுள் இருக்கைகளை ஒட்டி நடப்பட்டிருந்த தாங்கு கம்பிகளும்,இருக்கைகளின் பின்னால்வளைந்து நின்ற கம்பிகளும். பார்க்கப்பார்க்கஅழகாகவும், பளபளப்பாகவும் தெரிந்தது.

தரை தளமாய் பாவியிருந்த அடிபுற மர பலகைகளும் அதன் மேல் அடித்திருந்த இருந்த சில்வர் பட்டைகளும் காலை பதம் பார்க்காது என்பதை உறுதி கூறியது.

ராமநாதபுரத்தில் பஸ் ஏறும்போதே வராத ஒண்ணுக்கை உருவாக்கி இருந்துவிட்டு தான் வந்தேன்.

“அப்புறம் எப்படி அதற்குள்ளாய்,,,,,,” பிடிபடவில்லை.ஒன்று சரியாக இருந்திருக்க மாட்டேன்.அல்லது எனது உருவாக்கத்தில் எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும்.எது எப்படியானாலும் இப்போது இறங்கியாக வேண்டும். முட்டிக் கொண்டு நிற்கிறது, நிற்கிறதா?அல்லது அப்படி ஒரு நினைப்பா தெரியவில்லை? எதுவானாலும் இறங்கித் தான் ஆக வேண்டும்.

இல்லையெனில் சிக்கல்லாகி போகலாம்.

நான்கு இட்லி,கொஞ்சமாக தண்ணீர், ஒரு டீ இவ்வளவுதான் சாப்பிட்டேன்.
நீண்டதூர பஸ் பிரயாணமென்றால் தண்ணீர், டீ எல்லாம் சுருக்கி விடுவது வழக்கம். ஆனால் நண்பர் குமார் அருகில் இருந்ததாலும், அவரே காலை உணவு வாங்கிக் கொடுத்ததாலும் டீயை குடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிப் போனேன்.

இரவு அவரது அறையில்தான் தங்கியிருந்தேன்.ராயநந்தபுரம் கிளைக்கு பணிநிமித்தமாய் இரண்டு நாட்கள் சென்று வந்து கொண்டிருக்கும் போது உண்டான “வயிற்று வலிக்கு” மருத்துவம் பார்த்துவிட்டு தெருவில் நின்ற என்னை அவர்தான் ஏந்திக்கொண்டார்.

முருகவேலும், மரியசுரேஷீமாய் என்னை கைகுழந்தைபோல பாவித்து அழைத்துகொண்டு மருத்துவம் பார்த்து கொண்டுவந்து விட்டபோது தாங்கிகொண்ட முக்கிய மனிதராகிபோகிறார் குமார்.

மரியசுரேஷ் சொன்னார் “இது ஒன்றும் பெரிய ஆபத்து இல்லை.பெரியதாக நினைத்து பயப்படவேண்டாம்.எனக்கும் வந்திருக்கிறது.வலிவந்த நேரங்களில் தாங்க மாட்டாமல் தலைகீழாகவெல்லாம் நின்றிருக்கிறேன்.இப்போது போட்ட ஊசி இருபத்திநான்கு மணிநேரம் பவர்.அதற்கடுத்து வலிவந்துவிடும்” என்றார்.

ராயந்தபுரத்திலிருந்து முருகவேல்தான் என்னை இறக்கிவிட வந்திருந்தார்.
அவர் அந்த கிளையில் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்கிறார்.நான் பணிநிமித்தமாக சென்றிருந்த இரண்டாவது நாள் முடிந்து சீக்கிரமாக ஊர் சென்று விடவேண்டும் என்கிற நினைப்பிலும்,அவசரத்திலும் அவரது இருசக்கர வாகனத்தில்கொண்டு வந்து ராமநாதபுரம் வரை விடச்சொல்லியிருந்தேன்.
அவரும் சரி என்றிருந்தார்.காலையில் வேலை ஆரம்பிக்கும்போதே ஆகியிருந்த உடன்பாட்டை மாலை ஐந்து மணிக்கு அமல் செய்தோம்.

16கிலோ மீட்டர் தூரத்தை அவரது பேச்சும், தகவல்களும் நிரப்பியது.அவர்தான் வண்டியை ஓட்டினார்.

16ல் பாதிதூரம்க டந்திருந்தபோது தான் பாழாய்ப் போன அந்த வலி ஆரம்பித்தது.
நான் எப்போதும் வருகிற அல்சர் வலிதான் அது, மாத்திரை போட்டால் சரியாகிப்
போய்விடும். அப்படியும் அடங்காமல் ரொம்பவும் வலித்தால் ராமநாதபுரத்தில் இறங்கி ஏதாவது ஆஸ்பத்திரியில் ஊசி போட்டுக்கொண்டு போய் விடலாம் என நினைத்தவாறு பயணித்த நேரத்தில்தான் வேர் ஊன்றியிருந்த வயிற்றுவலி, மெதுமெதுவாய் பரவி தனது கரங்களைஅகலவிரித்து தாண்டவமாடியது.

வாகனத்தில் ஒழுங்காக அமரக்கூட முடியவில்லை.உடம்பு பாடாய்படுத்தியது.
நடுவயிறு, கீழ்வயிறு ,தொடை, நெஞ்சு, உணவுக்குழாய், வயிற்றின் பக்கவாட்டுப்
பகுதி என எல்லாம் வலிக்கவும், எரியவும் செய்தது.

உடலை நெளித்து அமர்கிறேன்,குன்னி அமர்கிறேன்,நிமிர்ந்து அமர்கிறேன்.
ம்ஹீம்,,,,,எதையும் சட்டைசெய்யவில்லை வலி.தனது கோர கரம் விரித்து தன்னை நிலை நிறுத்திக்கொள்வதில் உறுதியாய் இருந்தது. அந்த உறுதி என்னை நிலை குலையச் செய்துவிட கொஞ்சமாய் அதைரியமாகி விடுகிறேன்.

தாங்கமாட்டாத வலி லேசான தலை சுற்றலை உண்டாக்கி விடுகிறது. முருகவேலிடம் சொல்லி வண்டியை நிறுத்த சொல்கிறேன்.

அவரிடம் விஷயத்தை சொன்னதும் அதிர்ச்சியாகி “சார் என்ன செய்யலாம் சொல்லுங்கள்” என்கிறார். அப்படியே கொஞ்சம் நிற்போம் என்றவாறு பையில் இருந்த பாட்டில் தண்ணீரை அவசரமாய் எடுத்து முகம் கழுவி குடித்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து விடுகிறேன். அது எந்த இடம்,எது தெரியவில்லை. எத்தனை ஆடு, மாடுகள் ஒதுங்கியதோ, எத்தனை முறை நாய்களும், மற்ற ஜீவராசிகளும் ஒதுங்கியிருக்கும் என தெரியவில்லை. அவசர ஆத்திரத்திக்கு எத்தனை பேர் ஒண்ணுக்குப்போன இடமோ? மெய்மறந்து அமர்ந்து விடுகிறேன்.
கறுத்து நீண்ட சாலையில் விரையும் பேருந்துகள்,பெரிய,சிறிய, கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் மனிதர்கள் எதுவும் எனது கவனத்தை ஈர்த்ததாய் தெரியவில்லை.

ஆனால் இது சாதாரண அல்சர் வலிதான் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் அதிக பயமில்லாமலும் இருக்க முடிந்தது.வலியுடனும்,நோயுடனுமாக வாழப்பழகி கொண்ட மனிதம் படும்பாடு இப்படி நட்டநடு வீதிகளிலும்,
ரோட்டிலுமாக விரித்து காட்சியளித்தவாறு பல்லிளித்துக் கிடக்கிறது.

தலை சுற்றல் சரியானதும் அவரிடம் “அப்படியே மெதுவாக ராமநாதபுரத்தில் ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு சென்றுவிடுகிறேன்.நேராக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்” என்கிறேன்.

அப்படியே செய்த அவர் ராமநாதபுரத்தில் பணிபுரியும் மரியசுரேஷையும்,
குமாரையும் சந்திக்க செய்து விடுகிறார்.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து மரியசுரேஷ் பரபரப்பாகிபோனார்.சற்றே பதறியும் போனார்.உயிர் நண்பனாகவும், உற்ற தோழனாகவும்,பாசாங்கு அற்ற மனிதராகவும் எப்போதுமே இருக்கிற அவர் அந்த ஊரின் அரசு மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போனார்.

அங்கிருந்த மருத்துவர் வலியை சொன்னதும்சொல்லிவிட்டார். இது சிறுநீரக
கல்லடைப்பு தான், வேறொன்றுமில்லை என.

அதற்கான ஊசிபோட்டு,மாத்திரைகளை கொடுத்ததும் கால் மணியில் வலி சரியாகிப்போனது.

“அது சரியாகும் தருணம் வரை நான் துடித்த,துடிப்பும் எனது மனோநிலையும்,,,,,,,,வெளியில் சொன்னால் வெட்ககேடு வீடு போய் சேருவேனா முழுதாக” என்கிற அளவு சந்தேகம் வந்து விட்டது.

அதிலும் அரசுமருத்துவமனையிலிருந்த நர்ஸ் “ஏதாவது பிரைவேட் ஆஸ்பத்திரியில் வேணுமின்னாஅட்மிட்பண்ணீருங்க, அவரு வலிதாங்க மாட்டாம துடிக்கிறாருல்ல” என சொல்லிவிட எனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது.

வலுப்பட்ட சந்தேகம் தனது முடிச்சுகளை இறுக்க ஆரம்பித்திருந்த நேரம் வலி உச்சத்திற்க்குப்போய் படக்கென குறைந்து விட்டது.

மரியசுரேஷ் மிகவும் சரியாக சொன்னார்.”அது அப்படித்தான்.இப்போது வலி முற்றிலுமாய் குறைந்து வ்யிறு சாதாரண நிலைக்கு வந்திருக்குமே” என்றார்.
நல்லவேளையாக பிரைவேட் ஆஸ்பத்திரி,அட்மிஷன் என்கிற தர்ம்சங்கடமெல்லாம் நிகழாமல் போனதில் பெரிய நிம்மதி.

மரியசுரேஷின் இருசக்கர வாகனத்திதான் சென்றிருந்தோம்.அவரை சந்தித்ததும் முருகவேலைப் போகச் சொல்லி விட்டோம்.

16 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டுமே அவரும்.போய்விட்டார்.

தர்மசங்கடங்கள் சூழ்ந்து கொண்ட தருணமாய் அது பட்டது எனக்கு. “ஒண்ணும் நெனைக்காதீங்க, சாமியக்கும்புட்டுட்டு பேசாம படுங்கண்ணே,

ஒண்ணும் சங்கடப்பட்டுக்காதீங்க,மனசபோட்டு ஒழப்பிக்காதீங்க”என நிறைய பேசிக்கொண்டு வந்தார்.

நாங்கள் வருகிற வழியில் உயரமாக கோபுரம் வைத்திருந்த ஒரு கோவில் தெரிந்தது.அது என்ன கோவில் என சரியாகத்தெரியவில்லை.மரியசுரேஷிடமும் கேட்கவில்லை.

ஆயினும் அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் “சுரேஷீம்,முருகவேலும்”
தெய்வங்களோடு,தெய்வங்களாய்தெரிந்தார்கள் எனக்கு.

அவர்கள் செய்த உதவிக்கு அவர்களுக்கு கோவில்கட்டிகும்பிடவேண்டும்தான்.
ஆனால் அந்த அளவு வசதி இல்லை எனக்கு.

எல்லாம் முடிந்து குமாரின் ரூமில் இறக்கி விட்டுவிட்டு இரவு டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு,,,,,,,,,,,,,,

“வீட்டில்சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள்,அவர்களை கவனிக்க வேண்டும்,இல்லையானால் உங்களுடன் இருந்து விடுவேன்”என கூறி பிரியா விடை பெற்றுப்போன மரியசுரேஷ்யும்,முருகவேலையும் நினைத்துக்கொண்டு படுத்த எனக்கு தூக்கம் சரியாக வரவில்லை.

நடு இரவு எழுந்து மரிய சுரேஷ் வாங்கிக்கொடுத்த இட்லியை சாப்பிடுகிறேன்.சட்னி கெட்டுப்போயிருந்தது. நல்ல வேளையாக சாம்பார் நன்றாக இருந்தது.

கடைகாரர்களுக்குத் தெரியுமா?இப்படி ஒருவன் வாங்கி வந்த டிபனை நடு இரவில் பிரித்து சாப்பிடுவான் என.

ஆனால் என்னைப்போல் நடு இரவில் சாப்பிடுபவர்கள் நிறைய இருப்பார்கள் போல்தான்தெரிகிறது.சமீப காலமாக அதன் எண்ணிக்கையும் கூடிவிட்டது போல தெரிகிறது. அதை வெளியில் தெரியாமல் பராமரித்துக் கொள்வார்கள்
போலும்.

மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துவிட்டேன்.என்னருகில் படுத்திருந்த குமார் அப்போதுதான் புரண்டு படுத்தார்.மனைவி மக்களை விட்டுபிரிந்து,வயதான தாய் தந்தையை விட்டுபிரிந்து,சொந்த வீட்டை விட்டு சொந்தங்களையும், சுற்றத்தார்களையும் விட்டு,இப்படி பிழைப்பு நிமித்தமாயும், பணிநிமித்தமாயும், ஊர் விட்டு, ஊர் வந்து சின்னச்சின்ன புறாக்கூண்டு அறைகளில் தங்களை அடைத்துக் கொண்டு கதியற்றவர்களைப்போல வாழ்கிற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் இதுபோலும் என தெரிகிறது.

குமாரின் நண்பர் தங்கியிருந்த அறைக்கு கூட்டிப்போனார்.அது இவர்களினது அறையைப்போலவே இன்னும் சிறிய புறா கூண்டாய் இருந்தது.

பறவைகளுக்குப்பதில்மனிதர்கள்.இறக்கைகளுக்குப்பதில்கை கால்கள்.
பறப்பதற்க்குபதில்நடந்தும்,வாகனங்களிலுமாய்பயணித்தும்கொண்டிருந்தார்கள்
தானியம்,தவசிகளுக்குபதில்சாப்பாடு,டிபன்எனஉண்டு கொண்டிருந்தார்கள்.
அந்தபுறாக் கூண்டில் தங்கியிருக்கும் குமாரின் நண்பர் திருநெல்வேலி
பக்கத்துக்காராம். “வாராவாரம் லீவுக்கு சென்று திரும்புகையில் வீட்டிலிருந்து பத்துலிட்டர் கேனில் சுடவைத்த தண்ணீரை கொண்டு வந்து விடுவேன்” என்கிறார்.

“இங்குள்ள தண்ணீர் சேரமாட்டேன் என்கிறது எனவும் ,ஒன்று தொண்டையில் புண்வந்து விடுகிறது.இல்லையெனில் ஏதாவது தொந்தரவு செய்து விடுகிறது என்கிறார்.

கொண்டு வந்த தண்ணீர்ஒரு வாரம் வாரம் வரை தாங்குமாம்.பிறகு ஊருக்குப்
போகையில் திரும்பவுமாய்,,,,,,,,,,,,,என சொல்லும் அவர் அதற்கு தான் வரும்
ரயில் பயணம் வசதிப்படுகிறது என்கிறார்.

இது தவிர எதுவும் செளகரியப்படவில்லை என்பது அவரது ஆழ்ந்த கருத்து.
அவரது அறையில் தங்கியிருக்கும் அவரின் சக ஊழியர் சொல்கிறார்.நான் வேலைபார்க்கிற ஊரில் மதியசாப்பாடு கிடைக்காது,ஆகவே காலை இங்கேயே சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு பொங்கல் வாங்கி சென்று விடுவேன் என
இப்படி துயரம் சுமந்ததாய் இருக்கிற அவர்களது வாழ்க்கை என்று சரியாகும் என்கிற நினைப்புடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் இத்தனையும்.

“என்னென்னெமோ வசதிசெய்கிற பஸ்களில் பாத்ரூம் வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா?”

என்கிற நினைப்பு மேலோங்க நிறைந்திருந்த பேருந்தை விட்டு பரமக்குடியிலேயே இறங்கி விடுகிறேன்.மிகவும் பரிதாபமாக.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *