திண்டாடும் பண்பாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 10,607 
 
 

தாயின் உடைகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “அம்மா இதுதானே உங்கட மருந்துப் பெட்டி?;;;;…… …அம்மா!” என திரும்பவும் அழைத்து, ஒரு சிறு பெட்டியை கையில் எடுத்து வைத்துக் கொண்டு கேட்டாள் ராகினி. கன்னத்தில் வலது கையை முண்டு கொடுத்தபடி யன்னல் வழியே பார்வையைச் செலுத்தி அமர்ந்திருந்த தாய் விநோதினி மெல்ல மகள் பக்கம் திரும்பிப் பார்த்தார். நீPர் நிரம்பி நின்ற கண்கள் மகளை நோக்க, “ஓம்,”; என அவர் ஆமோதிக்கவும் கண்ணீர் தழும்பி கன்னத்தில் வழிந்தோடியது.

விநோதினியின்; 16 வயதுப் பேரன் வேந்தனும்;, 18 வயதுப் பேத்தி சியாமளாவும், “பாய் அம்மம்மா, றந றடைட அளைள லழர” என்று கூறி, கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டனர். விநோதினியும் அவர்களை அணைத்து உச்சி மோர்ந்து மாறிமாறி கன்னத்தி;ல் முத்தமிட்டாள். காரில் ஏற உதவிசெய்த பேரன் பேத்தியர்களின் கண்களிலும்; நீர் கோர்த்தது.

பேரப் பிள்ளைகள் முன் அழக் கூடாது எனும் வைராக்கியத்தல் இருந்த விநோதியின் கண்களில் கார் புறப்பட்டது தான் தாமதம் கண்ணீர் அருவியாக முகத்தின் சுருக்கங்களிடையே தங்கி கோடாக இறங்கியது. ராகினி மௌனமாக காரை ஓட்டினாள். தாய்; மனம் வருந்தி கண்ணீர் சிந்துவதைப் பார்க்க அவள் மனமும் சங்கடப்பட்டு கண்கள் கலங்கின. திரும்ப வீட்டுக்கே போயிடலாமோ என எண்ணினாள்.. ஆனால்……..எப்படி? ‘இந்த ஏற்பாடெல்லாம்; அம்மாவின் நன்மைக்காக நான், தம்பி தங்கச்சியுடன்;; சேர்ந்து எடுத்த முடிவு. வேறு என்ன செய்யமுடியும்?; வீட்டிலுள்ள எல்லோரும் வேலை, பள்ளிக்கூடம் என்று போய் விட்டால்; உடல் பலவீனமடைந்து மறதிக் குணமும் கூடி இருக்கிற நிலையில் அம்மா விழுந்து, ஏதாவது நடந்தால் ஆர் காணப்போயினம்? ஆர் எங்களுக்குச் சொல்லுவினம்? இந்த யதார்த்தத்தை அம்மா உணரவில்லையே’ என நினைத்த ராகினி; மனதை கல்லாக்கி, மௌனமாக காரை ஓட்டிக்;கொண்டு போய் சிட்னியின் பிரபலமான முதியோர் இல்லத்தின் முன் நிறுத்தினாள் .

காலத்தினதும் வேதனையினதும் தாக்கம் வலை போல் குறுக்குக் கோடிட்;டிருந்த அவரது அழகான முகம் சிவக்க, கூர்; நாசியினின்று நீர் வழிய, செப்பனிட்ட குவிந்த அழகான இதழ்கள் துடிக்க, கையில் ஊன்று கோலின் உதவியுடன்; காரை விட்டிறங்கி வயோதிப கூனலுடன் நடந்தார் விநோதினி. தலையை நிமிர்த்தி குழிவிழுந்து பழுப்பேறியிருந்த கண்களால் அந்த கட்டிடத்தை நோக்க, சித்திரை மாத இலையுதிர் கால சூரியனின் ஒளியில் அவர் தலை முடி வெள்ளை வெளிரென மின்னியது.

அந்த முதியோர் இல்லத்தின் முதலாவது மாடியில் விநோதினிக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே, ராகினி, தாயின் உடைமைகளை வைக்க வேண்டிய இடங்களில் வைத்துக் கொண்டிருக்கும் போது இல்லத்தின் மேற்றன் அவர்களைச் சந்திக்க வந்தார்.

“வெல்கம் விநோதினி அம்மா. எப்படி இருக்கிறீங்கள்? இங்கே உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து குடுப்போம். ஏதும் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கோ. உங்கள் சௌகரியங்களைப் பார்த்துக் கொள்ளத் தான் நாங்கள் இருக்கிறோம்,” என ஆங்கிலத்தில் மேற்றன் அன்பாகக் கூறி விடை பெற்றார்.

“அம்மா, மேற்றனிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். பயப்பட வேண்டாம். புது இடம் தான், ஆனா எங்கட தமிழ் ஆக்கள் கன பேர் இருக்கினம், உங்களுக்கு பேச்சுத் துணையாயிருக்கும். இந்தாங்கோ உங்கட மோபைல் ஃபோன். பாhத்துச் சார்ஜ் பண்ணுங்கோ. அடிக்கடி வந்து பாக்கிறன் சரியா அம்மா,” எனக் கூறியபடி ராகினி புறப்பட தயாரானாள்.

கதிரையில் இருந்தபடி மகளின்; கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த தாயின் கையை மெதுவாகத் தளர்த்தி விட்டு, “அம்மா போட்டு வாரேன்.” கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி, “நேரமாகிறது நாளைக்கு திங்கக்கிழமை வேலைக்கும்; போக வேணும்.” தாயை இரு கரங்களால் அணைத்து முத்தமிட்டு விட்டு விறு விறு வென வெளியேறினாள் ராகினி.

ராகினி கையைத் தளர்த்தி விட்டு போகவும் விநோதினியின் எழுபத்தி ஐந்து வயது வாழ்க்கையின் தொடர்பு அறுந்து போனது போன்ற ஒர் உணர்வு. ஐந்து வயதுச் சிறுமியாக அம்மா அப்பா முதல் நாள் பள்ளிக்கூடத்திலே விட்டிட்டுப் போன பொழுது, மனதில் ஏற்பட்ட அதே தனிமையும் பயமும் கலந்த உணர்வு வரவும், நெஞ்சுக்குள் ஓர் நடுக்கம் உருவாகி உடம்பெல்லாம் ஊடுருவியது. இதழ்கள் துடித்தன. கூடவே கைகளும் நடுங்க கண்களில் கண்ணீர் நிறைந்தது. அந்த நேரம் மேற்றன், ஒரு அம்மாவையும் கூட்டிக் கொண்டு வந்தார். அவர்களைக் கண்டதும் நடுங்கும் கரங்களால் நெஞ்சை நீவி விட்டுக் கொணடாள். பிரயாசைப்பட்டு கண்களை இமைக்காமல் கண்ணீர் வெளியேறாமல் கட்டுப்படுத்தவும்; விநோதினியின் கீழ் நாடி தளர்வுக்கோடிட்டு துடித்தது.

“விநோதினி, இவ பூரணம், உங்கட ரூம் மேட். இவவும் உங்களைப் போல சிறீலங்காவைச் சேர்ந்தவ தான்,” எனக் கூறிய மேற்றன், பின்பு பூரணம் பக்கம் திரும்பி, “பூரணம் இவ உங்கட புது ரூம் மேட்,” என மலர்ந்த முக்த்துடன் ஆங்கிலத்தில் இருவரையும் அறிமுகம் செய்து விட்டுப் போனார்..

ஊன்று கோலைப் பிடித்தபடி எழுபது கிலோ எடை உடம்பை தூக்கிக் கொண்டு நடந்ததால் மூச்சிளைக்க மெல்ல வந்து கதிரையில் அமர்ந்து, “என்ட……… ஊர் அளவெட்டி…….. நீங்கள் எந்த ஊர்.” என விநோதினியிடம் கேட்டார் பூரணம்.

கண்களில் லேசாக கசிந்த ஈரத்தைத் துடைத்தபடி, சோகத்தால் அடைத்திருந்த தொண்டையை செருமிவிட்டு, “மானிப்பாய்”; மெதுவாகப் பதிலளித்தார்;; விநோதினி.

அணிந்திருந்த ஊதா நிற கஃட்டான் உடையை இழுத்துச் சரிப்பண்ணி விட்டு, பூரணம் அடுத்த கேள்வியைத் தொடுத்தார், “உங்களுக்கு எத்தினை பிள்ளைகள்?”

“ஒரு குறையுமில்லாமல் ஐஞ்சு பெத்தேன். மூன்று ஆண், இரண்டு பெண். ஐஞ்சு பேரும் பாசமாகத் தான் இருந்தார்கள் சுயநலம் சுரக்கும் வரை. தன் துணை தன் வாழ்வு என்று வந்ததும், பாசம் மெல்ல மெல்ல பறந்து போச்சுது. என் துணையை இழந்தேன், மூப்பும் முட்டியதால் நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டேன். அதனால் என்னை வீட்டில் வைத்து பார்க்க முடியாது என பிள்ளைகள் கை கழுவி என்னை அநா…..தை மாதிரி இங்கே கொண்டு வந்து தள்ளிப் போட்டி………னம்.” தொண்டைக்குள் துயரம் பந்தாக வந்து அடைக்க அடித் தொண்டையால் கரகரத்தார். தன் மன ஆதங்கத்தை இப்படி வெளியிட்டிட்டேனே என்ற குற்ற உணர்வு அவரை மேலும் பேசவிடவில்லை. கண்களில் நீர் பொங்கி வழிந்தது. அடி மனத்தில் இருந்து விம்மலும் வெடித்துக் கிளம்பியது. கதிரையைவிட்டு மெதுவாக எழுந்து வந்த பூரணம், விநோதினியின் தோள் மேல் கை வைத்து அணைத்தபடி “விநோதினி! அழாதேங்கோ. எனக்கு உங்கட மனநிலை புரியுது. நான் உங்களுக்கு துணையாயிருப்பேன். எங்களைப் போல கன பேர் இங்கே இருக்கினம். நீங்க எனக்கு……..தங்கச்சி மாதிரி,” என முகத்திலும் குரலிலும் பரிவு மிளிர தேற்றியபோது விநோதினியிக்கு தன் அக்கா ஞாபகம் வந்தது. விநோதியின் அக்கா அமுதம் ஊரிலே 1995ம்
ஆண்டின், இடப் பெயர்வின் போது புக்காருகளின் குண்டு வீச்சால் இறந்து போனார். இப்போது அமுதத்தின் கைகள் அவள் தோளை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மேசை மேலிருந்த ரிசுவை எடுத்து கண்ணீரைத் துடைத்துவிட்டு தோள் மேல் இருந்த விநோதினியின் கையை பிடித்துக்; கொண்டு,

“அக்கா…….அப்…படி கூப்பிடலாம் தானே…. உங்களைப் பாத்தா என்ட அக்கா அமுதத்தின்ட நினைப்புத் தான் வருது,” அவரது குரல் தழுதழுத்தது.

“எனக்கும் அப்படித்தான்; ஒரு தங்கச்சி கிடைத்ததில் சந்தோசம்,”; பூரணத்தின் வட்டமான கொழு கொழுவென்ற முகத்தில் புன்னகை பூத்தது.

பேச்சுத் துணைக்;கு பூரணம் என்கிற ரூம் மேற் கிடைத்தது விநோதினிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

இரவு இடியப்பமும் மீன் கறியும் பரிமாறினார்கள்;. பரவாயில்லை, நல்லாத்தானிருந்தது. ஆனால் மனம் ரணப்பட்டிருக்கும் போது ருசித்துச் சாப்பிடமுடியுமா?.
படுக்கைக்குப் போனால் வீட்டின் ஞாபகம் தான் கண்ணயரமுடியவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு புரண்டு படுத்தால் கூட சுகமாகவிருந்திருக்கும், ஆனால் அவருக்குத் தானே வலது தோள் மூட்டிலும் இடது தோள் மூட்டிலும் வாதம் முற்றிப் போயிருந்தது. எந்;தப் பக்கமும் திரும்பிப் படுக்க முடியவில்லை. நேராகப் படுத்தபடி அறையின் உட் கூரையைப் பார்த்தபடி பலதும் சிந்தித்தபடி முழித்திருந்தாள் விநோதினி.

‘என்னுடைய கூட்டாளிகளிடம் எத்தனை தரம் பெருமையாகச் சொல்லியிருப்பேன். முதியோர் இல்லத்திற்கு போகவேண்டி வராது. எனக்கு மூன்று ஆம்பி;ளைப் பிள்ளைகளும் இருண்டு பெண்களும். அதனால் அவர்கள் என்னை வீட்டில் வைத்துப் பார்த்து கொள்வார்கள் என. ஆனால் இப்போ இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டார்களே. பிள்ளைகள் கல்யாணம் கட்டி வீட்டை விட்டுப் போனபின் அவரும் நானும் சந்தோசமாகவே இருந்தோம். எங்கள் சுகம் பாராமல் ஆசையோடும் ஆவலோடும் பாசத்தைக் கொட்டி பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் வளத்தோம்;. திடீரென ஹார்ட்; அட்டாக் வந்து அவர் நிம்மதியா போய்ச் சேந்திட்டார். துணைக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கினம் தானே என்னைப் பாத்துக் கொள்வினம் என நினைத்திருப்பார். தனியே இருக்க வேண்டாம் எனக் கூறிய மூத்தவள் ராகினி என்னை தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போயிட்டாள். ஐந்தோ ஆறு வருசமோ அவர் இல்லையே என்ற குறை மட்டும்தான், மற்றபடி வாழ்க்கை நல்லாத் தான் போய்க்; கொண்டிருந்தது. இந்தப் பாழாப்போன வாதம் தோள்மூட்டிலும், முழங்காலிலும், இடுப்பிலும்; பீடித்ததும,; நான் அவர்களுக்கு உபத்திரவமாகவும் தொல்லையாகவும் போயிட்டேன். வருடக்கணக்கில் குடும்பம், சொந்தம் என்று வாழ்ந்து விட்டு; இப்போ அறிமுகமேயில்லாத மனிதர்களிடையே தனி மரமாக நிக்கிறேனே!’ என ஏங்கினாள்.

விநோதினியின் மனதுக்குள் இறுகிப் போயிருந்த துயரம் இளகிக் கண்ணீராய் கரைந்து; கன்னத்தில் வழிந்தோடியதால் தலையணையையும் நனைத்தது. அதிக நேரம் உறக்கமும் நினைப்புமாகக் கிடந்தவரை அதிகாலையின் அமைதியை குப்பை லொறியின் ஆரவாரச் சத்தம்; குலைத்தப்பின்; தான், ஆழ்ந்த உறக்கம் தழுவிக் கொண்டது.

காலையில் சூரிய ஒளி அறையினுள் பரவவும் விநோதினி கண் விழித்துக் கொண்டார். போதிய நித்திரையில்லாததால் கண்கள் அதைத்துப் போய் உடம்பும் லேசா நடுங்கியது. படுக்கையை விட்டு எழ மனமில்லை. ‘இப்படியே இந்த உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடாதோ. இல்லை என் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடலாமோ.’ மனதில் விபரித எண்ணங்கள் ஓடின…..

இளநகை இழையோடிய மாநிற முகத்தில் பளிச்சென திருநீறு அலங்கரிக்க ஊன்று கோலைப் பிடித்தபடி மெதுவாக நடந்து, விநோதினியின் பக்கத்தில் வந்து நின்ற பூரணம், “குட் மார்னிங் (புழழன ஆழசniபெ) விநோதினி நித்திரை கொண்டிங்களா? புது இடம் புது கட்டில் நித்திரை கொள்ள கஸ்டப்பட்டிருப்பிங்களே!” குரலில் கரிசனத்தோடு உற்சாகமும் தொனித்தது.

விநோதினியின் மனதில் அலைபாயும் கவலைகள் பூரணத்துக்கு புரியவா போகிறது.

“ மார்னிங் (ஆழசniபெ)இ” என்று முணுகினார்;; விநோதினி.

“என்ன காய்ச்சலோ?” என்று பரிவுடன் கேட்டபடி விநோதினியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார்;.

“சுடவில்லையே! நீர் நித்திரை கொண்டிருக்கமாட்டீர். பிள்ளைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருப்பீர். விநோதினி முதல்லே குளிச்சுப் போட்டு வாரும். இப்ப பிரேக்ஃஸ்ட் அறைக்கு வந்திடும்;,” என அவரைக் கட்டிலை விட்டு எழுப்பி ஊன்று கோலைக் கொடுத்து பாத்ரூமுக்கு அனுப்பினார்;. அவவும் சுடு நீரில் குளித்துவிட்டு, மகள் ராகினி ஊரிலேயிருந்து எடுப்பித்து தந்த வெள்ளையிலே பச்சைப் பூக்கள் போட்ட கஃட்டான் உடையை அணிந்து கொண்டார்;.

“வாரும் வந்து முதலிலே சாமி கும்பிடும்,” என அவரின் படுக்கைக்குப் பக்கத்து மேசைக்கு அழைத்துச் சென்றார். அங்கே விநாயகர், சிவபெருமான், முருகன், அம்மன் படங்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. “கடவுளே நீ தான் துணை”, என வாய் முணுமுணுக்க கைகூப்பிக் கும்பிட்டு, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டார்; விநோதினி.

“நாங்கள் இருக்கிற இல்லத்தின் இந்தப் பக்கத்திலே ஒரு பொது அறை இருக்கிறது அங்கே பெரிய மேசை மேல் சாமி படம் எல்லாம் வைத்து வெள்ளிக்கிழமையிலே விளக்கு ஏற்றி பஜன் பாட்டுகள் பாடிக் கும்புடுவோhம். தீபாவளி, வருசப்பிறப்பு தைப்பொங்கல்; எல்லாத்திற்கும்; பஜன்கள் பாடி கலைநிகழ்ச்சிகளுடன் நல்லாக் கொண்டாடுவினம்;. இப்படி ஓவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வீட்டிலே கொண்டாடுவார்களா? அவர்களுக்கு லீவு கிடையாது, வேலைக்குப் போயிடுவார்களே!”

“ம்……..ம்ம்;;;;;” விநோதினி இறுக்கத்துடன் பதிலளித்தார்.

அவர்கள் அறையில் படுக்கைகளுக்குப் பக்கத்தில் இருந்த கதிரைகளில் போய் அமரவும், ஓரு பிலிப்பினோப் பெண் சாப்பாட்டு டிரேயுடன் ‘குட் மொர்னிங் அம்மா’ என உற்சாகத்துடன்; பற்கள்; தெரியப் புன்னகைத்து உபசரித்துக் கொண்டு உள்ளே வந்தாள். கண்கள் சற்று விரிய அவளைப் பார்த்தார் விநோதினி. சில்லு வைத்த மேசை ஒன்று விநோதினிக்கு முன்னாலும், பூரணம் முன்னாலும் தள்ளி விட்டு டிரேயில் கொண்டு வந்த காலை உணவை வைத்தாள். டிரேயில் விநோதினி வழக்கமாக வீட்டில் சாப்பிடும் வீட் பிக்ஸ் (றூநயவ டிiஒ) பாணும் அதோட பழங்களும் வைக்கப்பட்டிருந்தது. பூரணம் அக்கா வற்புறுத்தியதால் இரண்டு துண்டு டோஸ்டில் மாமைட் மட்டும் பூசிச் சாப்பிட்டுத் தேநீரையும் அருந்தினார்.

பூரணம் விநோதியை இல்லத்தின் அமைப்பையும் வசதிகளையும் சுற்றிக் காட்டி பெருமையாகப்; புகழ்ந்தார்.

“கவனமாகத் தடியைப் பிடித்துக் கொண்டு நடவும்” என கூறியபடி வெளித் தோட்டத்தையும் காட்டினார். வழியில் சந்தித்த இல்லத்தில் உடனுறைபவர்களுக்கு விநோதினியை அறிமுகம் செய்ததோடு அவர்கள் சுகத்தையும் கேட்டுக்கொண்டார். அதில் ஒருவர் சக்கரநாற்காலியிலும் சிலர் சில்லு வைத்த வாக்கர் கொண்டும் உலாவி கொண்டிருந்தனர். பிள்ளைகளைப் பற்றியும் பேரப்பிள்ளைகளைப் பற்றியும் சிந்தித்தபடியிருந்த விநோதினியின் மனதில் பூரணம் கூறியது எதுவுமே பதிய வில்லை.

மத்தியானம் சற்று நேரம் படுத்துவிட்டு எழுந்து, தாதி அறைக்குக் கொண்டு வந்த தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். மேசை மேல் இருந்த விநோதினியின் கைபேசி; டீரிங்! டீரிங!; என ஒலித்தது. சட்டென்று தேநீர் கோப்பையை மேசை மேல் வைத்துவிட்டு கைபேசியை எடுக்க மறு பக்கத்திலே மகள் ராகினிதான் பேசினாள்.

“ எபப்டி இருக்கிறீங்க அம்மா? நல்லா பாத்துகொள்றாங்களா?

“ஓம் பரவாயில்லை. ராகினி, வேந்தன்; எங்கே?’

“நான் வேலையிலே இருந்து கதைக்கிறன். பிள்ளைகளை இரவைக்குக் கதைக்கச் சொல்லுறேன்.”

“சரி வைக்கிறேன்.”

அவர் பேசி முடிக்கவும் பூரணம் “ ஆர் மகளா?

“ஓம் ஓம் வேலையிலே இருந்து கதைச்சவ.” வாடிப் போயிருந்த விநோதினியின் முகத்தில் சற்றுத் தெளிவு தெரிந்தது.

“விநோதினி பாத்தீங்களா இங்கே கொண்டு வந்து விட்டிட்டினம் என்றாலும் அவர்களுக்கு உம்மிலே பாசம் இருக்குது. எனக்கும் இண்;டைக்கு ஒரே சந்தோசம். பின்னேரம்; நாலு மணிபோல் பேர்த்திலே இருக்கிற என்ட மூத்த மகன் ஈஸ்வரன் என்னைப் பாக்க வாரான். இரண்டு மாதத்திற்கு ஒருக்கா தவறாமல் பாத்துவிட்டுப் போவான்.” கண்களில் ஒளி பிரகாசிக்க, அவர் முகத்தில் பெருமையின் ரேகைகள் பரவிப் பூரித்ததைக் கவனித்தார் விநோதினி.

பூரணம் எழுந்து போய் முகம் கழுவிக்;கெண்டு வந்து, வெண்தலை தெரிய இருந்த கொஞ்ச முடியைச் சேர்த்து வாரி பின் தலையில் சிறு முடிச்சாகக் கட்டி கிளிப்பை மாட்டிக்கொணடார். முகத்திற்கு பவுடர் பூசி, மாநிற நெற்றியில் பளிச்சென விபூதி இட்டுக் கொண்டார்.

மகன் வந்ததும் பூரணம் அவனை விநோதினிக்கு அறிமுகம் செய்து வைத்தார். நலம் எல்லாம் விசாரித்தப்பின,; தாயும் மகனும் ஆசை தீர கதைத்துக் கொள்ளட்டும் என்று விநோதினி ஊன்று கோலைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறப் போனார்,

“தங்கச்சி எங்கே போறீர்? இங்கேயே இரும். யு எஸ் லே இருக்கிற என்ட இரண்டு மகன்மார் ஸ்கைப்பிலே பேசப் போயினம். அவர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,” என்றார் பூரணம்.

ஈஸ்வரன் தான் கொண்டு வந்த ஐபாட்டை மேசை மேல் மூவரும் பார்க்கத் தக்கதாய் வைத்து விட்டு ஸ்கைப்பை ஒன் பண்ண, முதலில் ஒரு மகன், பின்பு மற்ற மகனும் கதைத்தனர். இருவருக்கும் விநோதினியை எனது புது ரூம் மேட் என அறிமுகம் செய்து வைத்தார் பூரணம். அவர்களும் அவரிடம் சுகம் விசாரித்து அன்பாக கதைத்தார்கள்.

அன்று இரவு சாப்பிட்டபின் ‘என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு, பூரணம் அக்காட்ட அவவின்;ட குடும்பத்தைப் பற்றி கேட்காமல் விட்டிட்டேனே.’ என விநோதினியின் மனம் குத்திக் காட்டியுது. அறையில் கலைமகள் சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்த பூரணத்திடம்,

“அக்கா உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”

“……………….” உடனே பதில் வரவில்லை. சஞ்சிகையை மூடி வைத்தவர் ஏதோ சிந்தனையில் இருந்து விட்டு,

“எனக்கா? பத்து. எட்டு ஆம்பிளை, இரண்டு பொம்பிளை,”

“என்ன பத்துப் பிள்ளைகள் இருந்துமா இப்படி இங்கே………!” கண்கள் விரிய, புருவங்கள் உயர, குரலில் சுருதி உயரக் கேட்டார் விநோதினி.

“விநோதினி ஏன் திகைத்துப் போனீPர்? நான் வி;ருப்பப்பட்டுத் தான் இங்கு வந்து சேர்ந்தனான்;.”

“நீங்க விரும்பியோ………? பிள்ளைகள் கட்டாயப்படுத்தி உங்களை இங்கே கொண்டு வந்து சேத்து விடயில்லையோ…?”

“இல்லை இல்லை நான் விரும்பித்தான்………”;

“உங்கட மற்றப் பிள்ளைகள் இங்கே அவுஸ்திரேலியாவிலோ…….?”

இரண்டு மகன்மார் யு எஸ் லே, இரண்டு மகன்கள் இன்னும் யாழ்ப்பாணத்திலேதான். மற்றவை இங்கே அவுஸ்திரேலியாவிலேதான். நாலு மகன்மார் பேர்த்திலே, இன்றைக்கு வந்தவன் மூத்தவன். மகள்மார் இங்கே சிட்னியிலே தான்.”

“நான் நினைச்சன் மகள் மருமகளோடு இருக்க பிடிக்காமலே தான் இங்கே வந்து இருக்கிறீங்கள் எண்டு.”

“தங்கச்சி நீர் நினைக்கிற மாதிரியில்லை. உமக்கு விளங்குதில்லை. எல்லாம் எங்கட நன்மைக்குத் தான் நாங்கள் இங்கே சேர்ந்திருக்கிறோம். மகளும் மருமகனும் ஏழு மணிக்கு வேலைக்குப் போனால் வீட்ட வர ஆறு ஏழு மணியாயிடும். இப்படி உடல் பலவீனமடைந்து வாதம் பீடித்து கைத்தடியோடு கஷ்டப்பட்டு நடக்கிற நாங்கள் வீட்டிலே தனியே இருக்கும் போது விழுந்துகிழுந்து போனா ஆருக்குத் தெரியப்போகுது. பத்தாததற்கு மறதிக்குணம் வேறு. இங்கே சரியான மருந்துகளை நேரத்திற்கு நேரம் குடுக்கிறதற்கு ஆக்கள் இருக்கினம். இதை எல்லாம் வீட்டிலே ஆர் செய்வார்கள்? பேச்சுத் துணைக்கு எங்கட வயதை ஒத்தவர்கள் இங்கே இருக்கினம், வீட்டிலே……..தனிமை. பிள்ளைகளுக்கு எங்களோடு பேசக் கூட நேரமில்லாமல் காலிலே சுடு தண்ணீரை கொட்டின மாதிரி எந்த நேரமும் ஓடித் திரியிதுகள். வேலையிலே இருக்கும் போது பிள்ளைகள் நாங்க தனியே எண்டு கவலைப் பட்டுக்கொண்டிருப்பினம். இப்படி இந்த நிலைமை வந்த பிறகு பிள்ளைகளுக்குக் கரச்சல் குடுக்கக் கூடாது. இதை எல்லாத்தையும் யோசித்துத் தான் என்னை இங்கே சேக்க சொன்னனான்.”

“அக்கா, நாங்கள் எங்கட பிள்ளைகளையும், பிறகு பேரப்பிள்ளைகளையும் இரவு பகல் பாராமல், எங்கட உடல் உள ஆரோக்கியத்தைக் கவனியாது வளத்து விடவில்லையா….. எங்கட வசதியைப் பாத்தோமா. இப்ப எங்கட வயது போன காலத்திலே அவையின்ட அன்பையும் கவனிப்பையும் தேவைப்படுற நேரத்தில இப்படி இங்கே அநாதை போல கொண்டு வந்து தள்ளிவிட்டினமே…”

“ஏன் அப்படி நினைக்கிறீர். இப்போ நாங்கள் சீவிக்கிற சூழு;நிலையிலே, எங்களை வீட்டிலே வைச்சுப் பார்க்கிறதென்றால் முடியாத விசயம். இப்படி எங்கடை அலுவல்களை பாத்துக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுற எங்களுக்கு இந்த இடம் தான் சரி. நீர் பிள்ளைகளை வளக்கும் போதும் பேரப்பிள்ளைகளைப் பாத்துக் கொண்ட போதும் பிற்காலத்தில் எங்களை விட்டிலே வைத்து பாத்து கொள்வார்கள் என்ட எதிர்பார்ப்போடா செய்த நீர்?
“சீச்சி அந்தமாதிரி நினைப்பில்லை,” குரலில் சங்கடம் ஒலிக்க தலையையும் கைகளையும் ஆட்டி “இல்லை இல்லை, ஆனால் அவைக்கும் கடமை எண்டு ஒன்று இருக்குதல்லவா?” என்றார் விநோதினி;.

இரவு மருந்து கொடுக்க வந்த தாதி மேரி இவர்களுடைய உரையாடலை கேட்டுவிட்டு, “ஓமோம்….தாய்;மை தன்னலம் கருதாது. உங்கட மகள்மாதரி நானும் ஒரு மகள் தான். அதோடு ஒரு தாயும் கூட. வயதுபோன பெற்றோரைப் பராமரிப்பதோடு எங்கட பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகளும் இருக்குது. இதனால் முக்கியமா எங்களுடைய நேரம், சக்தி, தேக சுகம், பொருளாதாரம் பாதிக்கப்படுறது. எங்கட பொறுப்புகள் வரம்புமீறி நீளுறது. ஆங்கிலத்தில் எங்கள் தலைமுறையை சன்விச் யெனறேசன் (ளயனெறiஉh பநநெசயவழைn) என்று சொல்வார்கள். அதாவது எங்கட பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே, இரண்டு பாணுக்குமிடையே வைக்கப்பட்ட தக்காளிப்பழம் போல நசுக்கப்படுகிறோமாம்.”

“ஓமோம் மேரி, நானும் இதைப்பற்றி ஒரு வெப் சைட்டிலே வாசித்திருக்கிறேன்,” என பூரணம் அதை ஆமோதித்தார்.

“ மேரி, நீங்கள் உங்களைப் பற்றி மட்டும் யோசிக்கிறீங்கள். எங்களைப் பற்றியும் கொஞ்சம் யோசியுங்க. பிள்ளைகள் எங்களை இந்த முதியோர் இல்லத்திலே கொண்டு வந்து சேத்திருக்கினம். நாங்களும் எங்கட பிள்ளைகளைச் சின்ன வயசிலே பள்ளிக்கூட ஹாஸ்;டல் சேத்திட்டு வாரத்துக்கு ஒருக்கா பாத்திட்டு வந்தா எப்படியிருந்திருக்கும்,” விநோதினியின் குரலில் ஆதங்கம் தொனித்தது.

“விநோதினி என்ன கதைக்கிறீர்? இப்படி சொல்லுறீரே……அப்படி செய்திருப்பீரா?”

“இல்லை……இல்லை ஒரு பேச்சுக்குத்தான் சொன்னனான,;” தாழ்ந்த குரலில் பதிலளித்;தார்.

“பேச்சுக்கும் அப்படி சொல்லாதேயும். எந்த தாயென்றாலும் தகப்பனென்றாலும் அப்படி செய்வினமா? மனதாலே கூட அப்படி நினைக்க மாட்டினம். நான் கேட்டறிந்ததையும் பல புத்தகங்களில் வாசித்து அறிந்ததையும் வைத்துச் சொல்லுறேன,; பெற்றோர் பிள்ளைகள் மேல் வைக்கிற அன்புக்கும்; பிள்ளைகள் பெற்றோர் மேல் வைக்கிற அன்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது உங்களுக்கு புரிந்தால் நிம்மதியா சந்தோசமா இருக்கலாம்.”

“ஒ அப்படியா, அப்படி என்ன வேறுபாடு;?” ஆவலோடு கேட்டார் விநோதினி

“ சொல்லுங்கோ சொல்லுங்கோ. எனக்கும் அறிய விருப்பம்,” என்றாள் நர்ஸ் மேரி.

“தாய் தகப்பன் பிள்ளைகளைப் பாசத்தோடு பாதுகாத்து வளத்து ஆளாக்கி உயிருள்ள வரையும் நேசிப்பது மனித இயல்பு. இந்த இயல்பூக்கம் எங்களின்ட மரபணுவிலே உள்ளது. ஐந்தறிவுள்ள பிராணிகளுக்கும் மரபணுவிலே இந்த ஊக்கம் இருக்குது. உயிரினங்கள் எல்லாம் தமது வம்சத்தைப் பாதுகாத்து விருத்தி செய்ய முக்கியமாக இருப்பது இந்த உணர்வு தான்.”

நர்ஸ் மேரி கொடுத்த மருந்தை வாயில் போட்டு விழுங்கி விட்டு, தொடர்ந்தார் பூரணம்,

“அதோட பிள்ளை பிறந்தவுடனே தாயின் மூளையில் ழஒலவழஉin என்னும் இயக்குநீர் (hழசஅழநெ) சுரக்கின்றது. இது மார்பில் பால் சுரப்பதற்கும் தாய்மை உணர்வுகளுக்கும் வித்திட காரணமாகிறது. இந்த இயக்குநீர் தாய்க்குப் பிள்ளை மேல் நீண்ட கால பிணைப்பையும், பராமரிப்புப் பொறுப்பையும், தாய்மை உள்ளுணர்வையும் (அயவநசயெட iளெவinஉவ) குடுக்கிறது. இந்த பிள்ளைப் பாசம் தாய்களான எங்கட உயிர் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். அதோடு மனைவி கருவுற்றதும் கணவனின் மூளையிலும் ழஒலவழஉin உடன் ஏயளழிசநளளin பாதுகாப்பு இயக்குநீர்; மெல்ல சுரக்கின்றது என்று சொல்லுகிறார்கள். இது அவரது மூளையில் தந்தைக்குரிய நடத்தையை மேப்படுத்தி தன் குழந்தை தன் பிள்ளை என்ற பிணைப்பை ஏற்படுத்தி குடும்பத்தின் மேல் பாசமுள்ளவராக்கிறது.”

எல்லாவற்றையும் வாயைத் திறந்தபடி மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்த விநோதினியும், மேரியும் “இவ்வளவும் தெரிந்து வைத்திருக்கறீங்களே? நீங்க டொக்டரோ?” என இருவரும் ஒருமிக்கக் கேட்டனர்.

“இல்லைத் தங்கச்சி ஊரிலே டீச்சரா வேலை பாத்த போது ஏதோ வாசித்திருக்கிறேன். அதை வைசு;சும், இந்த இணையதளத்தில் போய் வாசித்ததையும் வைத்துத் தான் சொல்றேன். பிள்ளைகள் பெற்றோர் மேல் காட்டுற அன்பை ஆங்கிலத்திலே கடையைட pநைவல என்று சொல்வார்கள். அதாவது பிள்ளைகளுக்குப் பெற்றோர் மேல் ஏற்படும் அன்பு, அது இடைப்பட்ட காலத்துக்கு உரிய பாசம். பிள்ளைகளுக்கு பெத்தவை மேலே பாசம் இருக்கிறது ஆனால் பெற்றோரைப் பிள்ளைகள் பராமரிக்க ஊக்குவிக்கும்;; இயல்புணர்ச்சி மத்திமம் தான்.”

”ஒரு தாயுடைய அன்பும் பாசமும் வெறும் வார்த்தைகள் இல்லை. அது ஒரு தியாகம். பிள்ளைகளுக்காக தேகசுகம் பாராமல் ஊனமுறும் வரை உழைப்போம்;;. அவர்கள் நன்மை தீமைகளில் பங்குபற்றி, காசாகவும், பொருளாகவும் உதவி செய்து கொண்டிருப்போம.; ஏன் இப்பவும் அவர்களுக்காக எதுவும் செய்ய தயாராக இpருக்கிறோம். அவர்களுடைய நன்மைக்காகவும் என் நன்மைக்காகவும் தான் நான் இந்த இல்லத்திற்கு வந்து சேந்திருக்கிறேன். பெண்களான நாங்கள் ஓரு மகளாக ஒரு மனைவியாக தாயாக பாட்டியாக பல பரிமாணத்தில் வாழ்ந்திருக்கிறோம். நீங்களே யோசித்துப் பாருங்கோ உங்கள் அம்மா அப்பா மேல் நீங்கள் காட்டிய பாசத்திற்கும் உங்கள் பிள்ளைகள் மேல் காட்டுகிற பாசத்திற்கும் வித்தியாசமிருக்கிறதல்லவா?”

“நான் ஒருநாளும் அப்படி நினைத்ததில்லை. ஆனால் இப்ப நிங்கள் சொன்ன்பிறகு எனக்கு அந்த வித்தியாசம் விளங்குது,” என்றாள் மேரி.

“ம்…..ம்..ஓம் ஓம். அது சரி…… ஆனா நாங்கள் எங்கள் தாய் தகப்பனை எங்களோடு வீட்டிலே வைத்துத்தானே பாத்துக்கொண்டோ……..ம்.,” என இழுத்தார் விநோதினி.

“ஓம் ஓம், அதைத் தான் நானும் ஊரிலே செய்தேன். வேலைக்கும் போன நான் தான். அப்ப சொந்தக்காரர்கள், வீட்டு வேலைக்கு ஆள் என்று இருந்தார்கள். அவர்கள் அம்மா அப்பாவை பாத்துக் கொள்ள உதவினார்கள். நீங்களும் அப்படித் தானே செய்திருப்பீர்கள். அதோடே பிள்ளைகள் வயது போன தாய் தகப்பனை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறது ஒரு மரபு. ஒருவரின் சமுக பண்பாடு, சமயம், கல்வி, வளர்ப்பு மூலம் கற்றுக் கொண்டது. இந்த மரபை பண்டைக் காலம்; தொடக்கம் எங்கட சமுகம்; வாiழுயடி வாழையாய் பின்;;பற்றி வந்திருக்கிறது,” என்றார் பூரணம்.

“அதைத் தானே ஊரிலே செய்தோம். ஆனால் இங்கே…………” என இழுத்தார் விநோதினி.

“அந்த மரபு காலத்தோடு மாறிக் கொண்டு வருகிறது. நீங்கள் பொம்பிளைப் பிள்ளைகளையும் டொக்டராக, பட்டாதாரிகளாகப் படிப்பித்து விட்டது வேலைக்குப் போக வேணுமென்றுதானே. நாங்கள் இப்போது வாழ்வது இருபத்தி ஓராம் நூற்றாண்டு.; அதோட ஊரிலே நாங்கள் வாழ்ந்த சாதாரண வாழ்க்கைக்கும் சிட்னி நகரத்திலே நாங்கள் சீவிக்கிற செல்வமிக்க போட்டிமய (சுயவ சயஉந) வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம். இளைய சமுதாயத்திற்கு முன்னேறும் நோக்கமும்; தேவைகளும் அதிகம். இதை ஈடுகட்ட பெரிய வங்கிக் கடன்களுடன்; பெரிய வீடுகளும், கார்களும் வாங்கினால் புருசனும் பெண்சாதியும் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இளசுகளின்ட ஆசைகளை எங்கள் சுகத்;திற்காக ஏன் கெடுப்பான.; காலத்தோடு நாங்களும் மாறவேணும். இந்த உண்மையை உணர்ந்தால்; இப்படிக் கவலைப்படத் தேவையில்லை,” என மன தெளிவோடு பதிலளித்தார் பூரணம்.

“ஓம் ஆன்டி ஊரிலேயும் பொம்பிளைகள் வேலைக்கு போறதாலே அங்கேயும் இதே பிரச்சனை தான். தாய் தகப்பனை பாத்து கொள்ளிறதில்லை என குறை சொல்லுறார்கள்,” என தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள் மேரி.

“இந்த அரசாங்கம் எம்போன்ற முதியோருக்குப் பல வசதிகள் செய்து குடுக்கிறது. இது போல பல முதியோர் இல்லங்கள் இங்கே இருக்கிது. இந்த இல்லம் எனக்குப் பிடித்திருக்கிது. எங்களுக்கு பிடித்த சாப்பாடு, எங்கட பண்டிகைகளை கொண்டாடினம். எங்கட வீட்டிலே இருக்கிற மாதிரி சூழல். எங்களின்ட கடைசி காலத்திலே பிள்ளைகள் எங்களை தங்களோடு தான் வைச்சுப் பாத்து கொள்ள வேணும் என்று எதிர்பார்க்காவிட்டால், ஏமாற்றம்; வருத்தம் எதுவுமே இராது.

“நீங்க சொல்லுறதும் ஒருவிதத்திலே சரிதா…..ன்” என இழுத்தார் விநோதினி. அப்படிச் சொன்னாரே தவிர அவர் மனம் அதை ஏறறுக் கொள்ளவி;ல்லை. பூரணம் தெளிவாக கூறிய விளக்கங்களைப்; பற்றித் திரும்பத் திரும்ப சிந்தித்தபடியிருந்தார். அவர் சொன்ன விசயங்களிலே உண்மை இருப்பது போலவும் இருந்தது.

“அன்டி, என்ட அம்மா என்னோடு தான் இருக்கிறா. அண்டைக்கு அவ வீட்டிலே விழுந்துபோய் எழும்பமுடியவில்லை. நல்ல காலம் நான் அரை நாள் லீவோடு வீட்டே போனதாலே உடனே டொக்டரிட்ட கொண்டு போகக் கூடியதாயிருந்தது. அம்மாவை வீட்டிலே தனியே விட ஏலாத நிலை வந்தா இனி நான் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் அவவை முதியோர் இல்லத்திலே சேத்திடுவேன். எனக்கு டியுட்டி முடிந்திட்டுது, நாளைக்கு சந்திப்போம்.” எனக் கூறி விடை பெற்றாள் மேரி.

சனிக்கிழமை விநோதினியைப் பார்க்க இரண்டாவது மகள் மாலதி பிள்ளைகளோடு வந்தாள். கூடவே மகன் மோகன் மனைவி பாமாவோடு வந்திருந்தான். டி வி ஒன்று கொண்டு வந்து அவருடைய படுக்கைக்கு நேரே பூட்டுவதிலும், சன் டி வி கெனக்சனும் போட்டுக் கொடுப்பதிலும் மும்மரமாக செயற்பட்டான். பாமா மாமிக்குப் பிடித்த பட்டர் கேக் செய்து கொண்டு வந்திருந்;தாள்;. விநோதினி பேரன்களை அணைத்து உச்சி முகர்ந்து சந்தோசப்பட்டார். பேரன்களும் அம்மம்மா! அம்மம்மா என அவரின் மடியில் போட்டியிட்டு அமர்ந்து பள்ளிக்கூட கதைகளுடன்; தாங்கள் வரைந்த படங்களையும் காட்டினார்கள். விநோதினி பெருமையோடு எல்லோரையும் தனது புதுச் சிநேகிதி பூரணத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். “ அடுத்த சனி ராகினியும் நானும் பிள்ளைகளோடு வருவோம். நாங்க போட்டு வாறோம்; அம்மா,” என்றவள் தாயை அணைத்து கொஞ்சி விடைபெற்றாள்.

அடுத்த சனிக்கிழமை வந்திடாதோ என விநோதினி பட்ட பாட்டை ஆரறிவார். நாட்காட்டியைப் பார்ப்பதும,; கடிகார முட்கள் ஏன் இப்படி நத்தை போல நகருகின்றன என அங்கலாய்ப்பதுமாக இருந்;தார்.

விநோதினியின் ஐந்து பிள்ளைகளும் மாறி மாறி வந்து பார்த்தும், தொலைபேசியில் அழைத்தும் சுகம் விசாரிpத்துக் கொண்டனர். இப்படியே மூன்று மாதம் ஓடிற்று. ஒருநாள் விநோதினி, ராகினியை அழைத்து, “ராகினி நீ என்னை முதியோர் இல்லத்திலே சோத்தது நல்லதாப் போச்சு. நான் நல்ல சந்தோசமாயிருக்கிறேன். நீங்கள் எல்லாரும் பக்கத்திலே இல்லை என்ற குறை மட்டும் தான்,” என்றார்

வயது போகப் போக ஐம்புலனாசைகள் அடங்கிவிடும் என்கிறார்கள். ஆனால் இந்தப் பாழாய்ப்போன பிள்ளைப் பாசம் மட்டும் அடங்காது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *