அறிவின் கண்டுபிடிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 12,847 
 
 

என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும்பெயர் வைக்கும்படி குடும்ப சாத்திரியார் சொன்ன படியால் யோசித்து; என்ன பெயர் வைப்பது என்று யோசித்துமூளையை உடைத்துக் கொண்டேன். நான் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணாவின் அபிமானி. அதனால் காஞ்சி, அறிவுஎன்ற இருவார்த்தைகளையும் இணைத்து “காஞ்சியறிவு” என்று புதுமையாக வைத்தால் என்ன என்று என் மனைவிகயல்விழியைக் கேட்டேன்.

“நீண்ட பெயராக இல்லையா அத்தான். வீட்டில் சுருக்கமாக என்ன வென்று நாங்கள் அவனைக் கூப்பிடுவது” என்னைக்கேட்டாள் கயல்.

“உன் முழுப்பெயர் கயல்விழி அல்லவா. ஆனால் எல்லோரும் உன்னைக் கயல் என்று தான கூப்பிடுவார்கள். அதே போல்…”

“ அதே போல்.. “

“அறிவு என்று சுருக்கமாக வீட்டில் கூப்பிட்டால் என்ன?”

“நல்ல பெயராகத் தான் இருக்கிறது. “அறிவு” என்று வீட்டில் கூப்பிட்டால் அவன் அறிவின் சின்னமாக இருக்கட்டும்” என்றுஎன் யோசனைக்குச் சம்மதித்தாள் கயல்.

பிறந்து மூன்று மாதத்துக்குள்ளேயே அவனுக்கு என் நண்பன் வாங்கிக் கொடுத்த வெள்ளை நிற நாய் பொம்மையைஅறிவுக்கு வெகுவாகப் பிடித்ததுக் கொண்டது. அது ஒரு புதுமையான, அழகான பொம்மை. அழுத்தினால் குரைக்கும்;.பொம்மை நாய் குரைக்கும் போது அழுவதை நிறுத்திவிட்டு கெக்கட்டம் விட்டு கைதட்டி அறிவு சிரிப்பான். தூங்கும்போது பொம்மையை அணைத்தபடியே தூங்குவான்.

அறிவுக்கு ஒரு வயதான போது பிறந்த நாளுக்கு ஒரு வெள்ளை நிற பொமரேனியன்; நாய்க் குட்டியொன்றை வெட்டனரிசேர்ஜனாக இருக்கும் கயலின் அண்ணன் பரிசாக வாங்கிக் கொடுத்தார்;. அறிவுக்கு மாமன் கொடுத்த பொமரேனியன்;;நாய் குட்டி உருவத்தில் சிறிதானாலும் அடர்த்தியான மயிர்கள் நிறைந்த வெள்ளை நிற ஆண்குட்டி;. 16 வருடங்கள் மட்டில்வாழக்கூடியவை. இனிமையான மற்றும் நட்பு தன்மையுள்ள

புத்திசாலியான நாய். அனேகமாக மடியில் வைத்திருக்கும்நாய். என்பர்.

இசைமேல் பிரியம் உள்ள என் மனைவி கயலின் விருப்பப்படி “மெலடி” என்ற பெயரை அந்நாய்க் குட்டிக்கு வைத்தோம்.சிறுவயது முதற்கொண்டே அறிவுக்கு மிருகங்கள், பறவைகள் மீது தனிப் பற்று. பிறந்த நட்சத்திரமோ என்னவோதெரியாது. படிப்பில் பெயருக்கு ஏற்ற கெட்டிக்காரனும் கூட.. பொருட்கள் எதையாவது கொடுத்தால் அதை ஆராச்சிசெய்யும் பழக்கம் இருந்தது. எதையாவது கண்டு படிக்க வேண்டும்; என்பது அவன் ஆவல். டொம் அன் ஜெரி, வுடிவுட்பெக்கர், மிக்கி மௌஸ், டொனல்ட் டக், பம்பி போன்ற மிருக , பறவைகள் கதாப்பாத்திரஙகளாக பேசி நடிக்கும்பிரபல்யமான கார்டுன்களை அடிக்கடி விரும்பிப் பார்த்து, சிரித்து அறிவு இரசிப்பான். அதவுமல்லாமல் எங்கள் வீட்டுத்தோட்டத்துக்கு வரும் அணில், முயல் ரொபின் குருவிகளைப் பார்த்து அவை போடும் ஒலிகளைக் கேட்டு; மெய்மறந்துபோய் நிற்பான். அவன் நாய் மெலடி கூட சொல்வதை விளஙகி நடக்கும். மெலடிக்கு அவ்வளவுக்குப் பயிற்சி கொடுத்துஅறிவு வளர்த்திருந்தான்.

அறிவுக்கு வயது பத்தாக இருக்கும் போது, ஒரு நாள் என்னை அழைத்து

“ அப்பா இங்கே வாருங்கள் ஒரு அதிசயத்தைக் காட்டுகிறன்.

“என்ன அதிசயம் அறிவு”

“ மெலடிக்கு கூட்டல் கழித்தல் கணக்கு செய்யத் தெரியும் அப்பா”

“என்ன நீ சொல்லுகிறாய்? புரியவில்லையே . நாயுக்கு கணக்க எப்படித் தெரியும்?”

“ உங்களுக்கு அது புரியாது தான். இதோ பாருங்கள் நடக்கப்போவதை”

மெலடி அறிவு சொல்வதைக்க கேட்டபடியே அவன் முகத்தைப் பார்த்தபடியே அவன் அருகே நின்றது

“மெலடி இரண்டும் ஐந்தும் கூட்டினால் எவ்வளவு” மெலடியைப் பார்த்து ஆறிவ கேட்டான்.

மேலடி ஏழுதடவை குரைத்து பதில் அளித்தது. நான் ஆச்சரியத்தால் நான் அசந்து போனேன்.

“மெலடி ஐந்தும் ஐந்தும் கூடனாhல எவ்வளவு”? அறிவு மெலடியைக் கேட்டான்

மெலடி பத்து தடவை குரைத்துச் சரியாக தன் பாஷையில் பதில் அளித்தது.

“மெலடிலடி பத்தில் இருந்து நாலைக் கழித்தால் எவ்வளவு”?

“மெலடி ஆறில் இருந்து ஆறைக் கழித்தால் எவ்வளவு”

மெலடி குரைக்கவில்லை.

இப்படி பத்துக்குள் பல எண்களை வைத்துப் பல கூட்டல் கழித்தல் கணக்குகளை மெலடியிடம் அறிவு; கேட்டபோது எல்லாக் கேள்விகளுக்கும்; சரியாகக் குரைத்து பதில் அளித்தது.

என்னால் நடப்பதை நம்ப முடியவில்லை.

“அறிவு, சரியான புத்திசாலி நாயாக மெலடி இருககிறதே”

“அப்பா நாங்கள் பேசுவது அதற்கு விளங்குகிறது. ஆனால் குரைப்பதன் காரணம் எங்களுக்கு விளங்குவதில்லை.குரைப்பதை மொழி
பெயர்கக் கூடிய கருவி ஒன்றைக் கண்டு பிடிக்க ஆராச்சி செய்து கொண்டிருக்கிறன” என்றான அறிவு

“நீ சொல்வதை எனக்குக் கொஞ்சம் விளக்கமாய் தான் சொல்லேன் அறிவு”

“அப்பா எனது ஆராச்சியின் நோக்கம் முதலில் நாயுடன் உரையாடக் கூடிய சொப்ட்வெயர் ஒன்றைக் கண்டு பிடிப்பதுதான். அதன் மூலம் நாய குரைத்தால் அத ஓசையை வைத்து ஆங்கிலத்தில்; நாம் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அதோடு பேசி உறவாட முடியும். அது மட்டுமல்ல மற்றைய நாய்கள் குரைத்தாலும் ஏன் குரைக்கிறது என்பதை நாம்அறியலாம். இந்தக் கருவியைக் நான் கண்டு பிடித்து விட்டால் மெலடியோடு நாம் உரையாடலாம். என் ஆராச்சி வெற்றிபெற்றால்; பின் பறவைகளோடு கூட நாம் உரையாடலாம்”. அறிவு தன் ஆராச்சி பற்றி எனக்கு விளக்கம் கொடுத்தான்.

எனக்கு அறிவு சொன்னது புதிராக இருந்தது. இது நடக்கக் கூடிய காரியமா நான் யோசித்தேன்.

“அறிவு உனக்கு என்ன பைத்தியமா”. இது முடியுமா”? நான் அவனைக் கெட்டேன்.

“ அறிவியலைப் பாவித்து செய்யமுடியாதது ஒன்றுமேயில்லை. முயற்சி செய்தால் நிட்சயம் வெற்றி பெற முடியும் அப்பா”

நான் அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபடவிரும்பவில்லை.

“அறிவு நீ நினைத்ததை சாதிக்கும் குணம் உள்ளவன்.; நீ உன் பெயருக்கு ஏற்றப் புத்திசாலி என்று எனக்குத் தெரியும்.அதனால் தான் உனக்கு உனது பதினைந்தாம் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த லப்டொப் ஒன்று வாங்கிக்கொடுத்திருக்கிறன. நீ புரோகிராம் எழுதுவதை பார்த்திருக்கிறேன். எனக்கு அது விளங்காது. ஏதோ உன் ஆராச்சியைத்தொடர்ந்து செய்.. என் வாழ்த்துக்கள். ஆனால் உன் படிப்பில் கவனம் செலுத்து.”
எனது வாழ்த்தோடு அறிவு தன் ஆராச்சியைத் தொடர்ந்தான்.

*******

எங்கள் வீட்டுத் தோட்டத்துக்கு வட அமெரிக்க ரொபின் குருவி ஒன்று அடிக்கடி வந்து போகத் தொடங்கியது.அக்குருவியின் ஆயுள் காலம் சுமார் 12 வருடங்கள் என என் மைத்துனர் சொல்லி அறிந்திருந்தேன். மேலடியின்ஆயுட்காலமும் அவ்வளவே. மேலடிக்கு ஒரு கம்பீரத் தோற்றம் இருந்தது, மெலடி எவ்வளவு குரைத்தாலும் பொறுமையாகத்தோட்டத்துக்கு ரொபின் வந்து போகும். அதன் வருகை இளவேனிற்காலம் ஆரம்பமாகப் போவதைக் குறிக்கும்.ரொபின்; பார்ப்பவர்களைக் கவரக் கூடிய அழகிய தோற்றமும்உள்ள குருவி.; ஆண் ரொபின் குருவி பெண் குருவியிலும்பார்க்கப் பிரகாசமான நிறக்தைக்கொண்டது. ஆதன்; கண்ணைச்சுற்றி உள் வளையமும், களுத்தில் உள்ள வெள்ளைநிறஅடையாளமும், அதன் வயிற்றில் உள்ள கடும் ஆரஞ்சு நிற வர்ணமும் ஆண் ரொபின் குருவிக்கு இருக்கும். அதுவே பெண்குருவியில் இருந்து ஆண் குருவியை வேறுபடுக்தி காட்டும். வீட்டுத் தோட்டத்துக்கு வருவது பெண்’ ரொபின்குருவிஎன்று என்மைத்துனர் சொன்னார். வெட்டினரி சேர்ஜனான அவருக்குத் தெரியாததா என்ன.?

ரொபின் போடும் ஓசையானது ஒரு இன்னிசை போல இருக்கும். ஜுலை முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை அவை தன்குரலின் மகிமையை பாடிக்காட்டுவதால் “பாடும் குருவி” என மக்கிளிடையே பெயர் ரொபின் வாங்கியது. தன்னோடுபோட்டியாக ஓசை எழுப்ப ஒரு உயிர் வந்ததையிட்டு ஆரம்பத்தில் மெலடிக்கு போறாமையாக இருந்தது, அதனால்ரொபின் பாடும் போதெல்லாம் மெலடி குரைக்கும். ஆனால் காலப்போக்கில் ரொபின் போடும் இனிமையான ஓசையால்மெலடி கவரப்பட்டது. அதனால் ரொபினை தோட்டத்தில் இருந்து துறத்திவிட மெலடி விருப்பப்படவில்லை.

எங்கள் தோட்டத்துக்கு அடிக்கடி வந்து போகும் பெண் குருவி ரொபினும், அணில் ஒன்றும் சில சமயங்களில் ஒன்றாகத்தானியங்களை உண்பதைக் கண்டு மெலடி குரைத்து தன் எதிரப்;பைக் காட்டும். ரொபினுக்கும் அணிலுக்கிடையே நட்புவளர்வதை மெலடிக்கு பிடிக்கவில்லை போலும். முயல்கள் இரண்டும் தம்பதிகள் போல் வருவதால் எங்கே மெலடிதங்களை கடித்துக் குதறி விடுமோ என்ற பயம் இருந்ததினால் சில நாட்களில் அவை இரண்டும் தோட்டத்துக்கு வராமலேநின்று விட்டன.

ரொபினோடு ஆரம்பத்தில் மெலடிக்கு பிரச்சனை இருந்தது. ஆரம்பத்தில் ரொபினைக்; தோட்டத்துக்குள் கண்டால்வீட்டுக்குள் இருந்தபடியே குரைத்து, அதைத் தோட்டத்திலிருந்து துரத்த தன்னை வெளியே விடும்படி ஆராவாரப்படும்.தோட்டத்துக்குப் போகும் கதவைத் திறந்து விடும்படி வாசற் கதவில் தொங்கும் மணியை மெலடி அடிக்கும். குருவிகளையும்முயல்களையும் போய் பயமுறுத்த அதற்கு ஆவல். அவைகளை துறத்திய பின்னர் திரும்பி வந்து வீட்டுக்குள் வரகண்ணாடிக் கதவை மெலடி தன் கால்களால் தட்டும்.

“கதவைத் திறவுங்கள் எனக்குப் பசிக்கிறது. நான் சாப்பிட வேண்டும்” என்பது போல் இருக்கும் அதன் செயல்;. மெலடிவீட்டுக்குள் வர கதவைத் திறந்து விட்டால், உடனே அது உணவும் தண்ணீரும் வைத்திருக்கும் இடத்துக்கு ஓடும்.தண்ணீரை மடக் மடக் என்று குடித்தபின்னரே தன் உணவைச் சாப்பிடும்.

மேலடிக்கு ஆங்கலத்திலும் தமிழிலும் நாம் பேசுவது விளங்கும். “மெலடி இரு” என்று ஆங்கிலத்தில் சொன்னால்பதுமையாக இருக்கும். “ மெலடி சத்தம் போடாதே” என்று தமிழில் சொன்னால் குரைப்பதை நிறுத்திவிடும். “மேலடி யூஆர் ஏ குட் போய்” என்றால் வாலை ஆட்டியபடி தனது மகழ்ச்சியைக் காட்டியவாறு என் அருகே வந்து தன்னைத் தடவச்சொல்லி முகத்தை நீட்டும். அறிவு பள்ளிக்கூடத்துக்குப் போய் திரும்பும் வரை முணுமுணுத்தபடியே இருக்கும்.; அறிவு வீடுதிரும்பியபின் சந்தோஷத்தால் அங்கும் இங்கும் ஓடி அவன் கவனத்தை அவனிடம் இருந்து கவரப்பார்க்கும்.

******

அன்று தமிழ் புத்தாண்டு தினம். என் மனைவி கயல், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை ஆகியவறறை தயார்செய்தாள். சுவாமிக்குப் படைக்கும் போது காகம் கனடாவில் இல்லாததால் தோட்டத்துக்கு வரும் ரொபினுக்கு படைக்கநினைத்து; கொஞ்சம் வெண் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் வாழை இலையில் வைத்து தோட்டத்துக்குவரும்; குருவிகள் உண்பதற்கு வைத்தாள். இதைக் கவனமாக மெலடி கவனித்துக் கொண்டிருந்தது. கயல் வீட்டுக்குள்வந்த பின் மெலடி மெதுவாக தோட்டத்துக்குச் சென்றது.

கயல்; அதைக் கவனித்துவிட்டாள்.

“ஏய் மெலடி. ரொபினை சாப்பிட விடு. உனக்குத் தனியாக பொங்கல் வைத்திருக்கிறன்” என்றாள் சத்தம் போட்டு. மெலடிஅதைக் கேட்காதது போல தோட்டத்துக்குப் போய் ரொபின்

கயல் ,வாழை இலையில் வைத்த பொங்கலை உண்பதைஅமைதியாக அவதானித்தபடி நின்றது. தன் குரலை உயர்த்திக் குரைக்கவில்லை. ரொபினும் மேலடியைக் கண்டு பறந்துபோகவில்லை. சில நேரத்துக்குப் பின் மெலடிக்கு என்ன தோன்றியதோ தெரியாது மெதுவாகத் தானும் போய் ரொபினோடுசேர்ந்து பொங்கலைப் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தது.

பொங்கலை உண்ண வந்த அணில் ஒன்றைக் குரைத்து மெலடி துறத்திவிட்டது. அந்த காட்சியைப் பார்த்து கொண்டிருந்தஎனக்கு மேலடியின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்னால் அக்காட்சியை நம்பமுடியவில்லை. நான் உடனேஅறிவையும் கயலையும்; கூப்பிட்டு மெலடியின் சகோதர தத்துவ உணர்வைச் சுட்டிக் காட்டினேன். கயலால்; கூட அந்தக்காட்சியை நம்பமுடியவில்லை.

“இப்ப ரொபினும்,; மெலடியின் நண்பர்களாகி விட்டார்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒற்றுமையாக வாழஒரு உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாக்கும்” என்றேன் நகைச்சுவையாக நான.

“ஆமாம் நாம் காணமுடியாத காதல் அவர்களுக்கிடையே உருவாகிவிட்டது அப்பா. ஆரம்பத்தில் மெலடிக்கும்ரொபினுக்கும் இடையே ஊடல். அந்த ஊடல் போய் காதலாக மாறிவிட்டது. என்றான் அறிவு.

“என்ன அறிவு சொல்லுகிறாய்”? நான் அவனைக் கேட்டேன்.

தனது லப்டொப்பைக் கொண்டுவந்து மெலடிக்கும் ரொபினுக்கும் இடையேலான பதிவு செய்த உறயாடலைப போட்டுக்காண்பித்தான். அவ்வுரைவாடல் ஆங்கில வார்ததைகளில் மொனிட்டரில் தெரிந்தது. என்னாலும் கயலாலும் அதைநம்பமுடியவில்லை. அறிவு தன் ஆராச்சியில் வெற்றி பெற்றுவிட்டான் என்றது என் மனம்.

“பிரமாதம் அறிவு உன் கண்டுபடிப்பு. இதை விருத்தி செய்; இதற்கு நிட்சயம் மிருகங்கள் பறவைகள் வளர்ப்போருக்கிடையே மார்க்கட் இருக்கும். கண்டுபடித்தால் உன் காப்புரிமையை பதிவு செய்து விடு” என்றேன் நான்.

“காப்புரிமை என்றால் என்ன அப்பா”?

“பேட்டன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதைக் கண்டுபிடித்த உரிமை உன்னுடையது என்பது அர்த்தம் கயல்நான் சொல்வதைகேட்டுக் ; கொண்டிருந்தாள்.

“பார்த்தாயா கயல். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடையே கூட காதல் ஏற்பட இனம் தேவையில்லை. ஆண்நாயானமெலடிக்கு தோட்டத்துக்கு வருவது பெண் ரொபின் என்று கூடத் தெரியும் போல எனக்குத் தோனறுகிறது.” என்றேன்நான் சிரித்தபடி.;

“இது ஊடல் போயின் காதல் என்பது போல் மெலடிக்கும் ரொபினுக்கும் இடையே வளர்ந்த காதல். எங்களுக்கு இவ்விசித்திரமான காதல் புரியாது” என்றாள் கயல். இனி எங்கள் மகன் அறிவின் கண்டுபிடிப்பினால் நாய்கள் பறவைளுக்கு இடையேலான உறவை நாம் அறியக் கூடியதாக இருக்கும் “ என்றாள் என் மனைவி கயல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *