கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 1,150 
 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

பாகம்-5 | பாகம்-6 | பாகம்-7

துரோணர் தலைமை 

துரியோதனனும் கர்ணனும் யாரைச் சேனாதிபதியாக நியமிப்பது என்று ஆலோசித்தார்கள். 

“இவ்விடம் கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாருமே சேனாதிபதியாக இருக்கத் தகுதி படைத்தவர்கள். தேக பலம், பராக்கிரமம், முயற்சி,புத்தி,தைரியம், சௌரியம், குலம், அறிவு எல்லா விஷயத்திலும் இந்த அரசர்கள் அனைவரும் சமமாகவே இருக்கிறார்கள். ஆயினும் ஒரே சமயத்தில் எல்லோரும் தலைவர்க ளாக இருக்க முடியாது. அவர்களில் ஒருவரைத் தலைவராக அமைத்தால் மற்றவர்களுக்கு மனக் குறை ஏற்பட்டு நாம் நஷ்டம் அடைவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லா யுத்த வீரர்களும் ஆசாரியரான துரோணரைச் சேனாபதியாக்குவது நலம். ஆயுதம் தரித்தவர்களில் சிறந்தவர் அவரே. க்ஷத்திரியன் எவனுமே அவரு க்குச் சமானமானவன் இல்லை. அவரையே தலைவராக அபிஷேகம் செய்வோம் என்று கர்ணன் சொல்லியதைத் துரியோதன்னு ஒப்புக்கொண்டான்.

“குருவே! ஜாதியினாலும் குலத்தினாலும் சாஸ்திர ஞானத்தி னாலும் வயது, புத்தி, வீரியம், சாமர்த்தியம் இவைகளாலும் சிறந்தவரா இருக்கிறீர். சேனைத் தலைமை நீரே வகிக்க வேண்டும். நீர் சேனாதிபதியாக இருந்தால் யுதிஷ்டிரனை நிச்சயமாக ஜெயிப் பேன்” என்று துரியோதனன் எல்லா க்ஷத்திரிய வீரர்கள் முன்னி லையில் துரோணரை வணங்கினான். 

இதைக் கேட்ட அரசர் கூட்டம் உரத்த சிம்ம நாதங்கள் செய்து துரியோதனனைச் சந்தோஷப்படுத்தினார்கள். முறைப்படி துரோணருக்கு அபிஷேகம் நடந்தது. ஜய கோஷம் ஆகாயத்தைப் பிளந்தது. வந்திகளுடைய ஸ்துதிகளையும் வெற்றி முழக்கங்களையும் கேட்டுக் கௌரவர்கள் உற்சாக மயக்கத்தினால் பாண்டர்களை- ஜெயித்தாய் விட்டது என்றே எண்ணினார்கள். 


துரோணர் சேனையைச் சகட வியூகமாக வகுத்தார். அது வரை விலகி நின்ற கர்ணனுடைய தேர் யுத்தகளத்தில் முதல் தடவையாக இங்குமங்கும் செல்வதைக் கண்டு கௌரவப் படை வீரர்கள் மகிழ்ச்சியும் தைரியமும் அடைந்தார்கள். 

“பிதாமகர் பார்த்தர்களைக் கொல்ல மனமில்லாமல் யுத்த த்தை நடத்தினார். கர்ணன் அவ்வாறு செய்ய மாட்டான். பாண் டவர்களுடைய நாசம் இனிமேல் நிச்சயம்” என்று கௌரவ சேனை யில் பேசிக்கொண்டார்கள். 

துரோணர் கௌரவ சேனையில் தலைமை வகித்து ஐந்துநாள் யுத்தம் நடத்தினார். முதியவராயிருந்தும் யுவனைப் போல் யுத்த களத்தில் எங்கும் பிரவேசித்து உன்மத்தனைப் போல் போர்புரிந் தார். காற்றானது மேகங்களைச் சிதற அடிப்பது போல் பாண்டவ சேனையைத் துன்புறுத்திச் சிதற அடித்தார். சாத்யகியையும் பீமனையும் அருச்சுனனையும் திருஷ்டத்யும்னனையும் அபிமன்யுவை யும் துருபதனையும் காசிராஜனையும் இன்னும் அநேக வீரர்களையும் தானே எதிர்த்துத் தோல்வியுறச் செய்தார். பாண்டவ சேனையை ஐந்து நாட்கள் மிகவும் துன்புறுத்தினார். 

உயிருடன் பிடிக்க 

துரோணர் தலைமை வகித்ததும் துரியோதனனும் கர்ண னு துச்சாதனனும் மந்திராலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார் கள். அதன் மேல் துரியோதனன் துரோணரிடம் சென்று “ஆச் சார்யரே! யுதிஷ்டிரனை நீர் எப்படியாவது பிடித்து நம்மிடத்தில் ஒப்புவிக்க விரும்புகிறோம். இதற்கு மேல் நாங்கள் எதையும் விரும்பவில்லை.இதை நீர் செய்வீராகில் நானும் என்னைச் சேர்ந் தவர்கள் எல்லாருமே மிகவும் திருப்தியடைவோம்” என்றான். 

இதைக் கேட்டதும் துரோணர் அளவு கடந்த சந்தோஷ மடைந்தார். பாண்டவர்களைக் கொல்லத் துரோணருக்கு மன மில்லை. கடமையைச் செலுத்த யுத்தத்தில் சேர்ந்தவராயினும் பாண்டு புத்திரர்களை அதிலும் யுதிஷ்டிரனைக் கொல்லுவது தரும் மன்று என்று சந்தேகித்துக் கொண்டிருந்த துரோணருக்குத் துரி யோதனன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. 

துரியோதனனே! நீயுமா யுதிஷ்டிரனுடைய உயிரைக் காப் பாற்ற விரும்புகிறாய். உனக்கு மங்களம் ஆகுக! தருமபுத்திர னுக்கு உயிர்ச்சேதம் ஆக வேண்டாம் என்று நீயும் சொன்ன பின் அவன் அஜாத சத்துரு என்பதில் என்ன சந்தேகம்? பகையற்றவன் என்று குந்திநந்தனுக்குத் தந்திருக்கும் பெயரை நீ உண்மையாக் கினாய். உயிரோடு பிடிக்க வேண்டும்; கொல்லலாகாது என்று நீயும் வேண்டுகிறாயானபடியால் யுதிஷ்டிரனுடைய புகழ் பதின்மடங்கா யிற்று. அவனே பாக்கியசாலி! என்றார் துரோணர். 

மறுபடியும் “அப்பனே! நீ சொன்னதிலிருந்து யுத்தத்தில் ஜெயித்து விட்டு அவர்களுக்குச் சேரவேண்டிய ராஜ்ய பாகத்தை முடிவில் அவர்களுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள் ளவே உத்தேசித்திருக்கிறாய் என்று தெரிகிறது. இதனால் அல் லவோ நீ யுதிஷ்டிரனைக் கொல்லாமல் உயிரோடு பிடித்துத் தரச் சொல்கிறாய்” என்று சந்தோஷப்பட்டார். 

“புத்திமானான தருமபுத்திரனுடைய பிறப்பே நல்ல பிறப்பு. குந்தி புத்திரனல்லவோ பாக்கியசாலி? அவனுடைய குணமல்ல வோ பகைவனுடைய உள்ளத்தையும் வென்றது?’ என்று திரும்பத் திரும்பத் தரும வாழ்க்கையின் வெற்றியை எண்ணித் திருப்தி யடைந்தார். 

சகோதர நேசத்தைத் துரியோதனன் விடவில்லை என்று ஆச் சாரியர் துரியோதனனைப் பற்றி மகிழ்ச்சியடைந்தார். 

துரியோதன்னுடைய யோசனையோ வேறு. அவனுடைய உள் ளத்தில் ‘பகையும் பாப எண்ணமும் முன் போலவே இருந்தன. அப்படியே ஆகட்டும், உயிரோடு யுதிஷ்டிரனைப் பிடித்துத் தரு வேன்’ என்று துரோணர் சொன்னதும் தன் உண்மையான எண் ணத்தை அவருக்கு வெளியிட்டான். 

யுதிஷ்டிரனைக் கொன்றால் பாண்டவர்களுடைய கோபம் தணியாது. முன்னை விட அதிகரித்து அனைவரும் நாசமாகும் வரை யில் யுத்தம் நடக்கும். தன்னுடைய சேனை தோற்கடிக்கப்படும். பாண்டவர்கள் ஜெயம் பெறுவார்கள். அல்லது இரண்டு பக்கத்து வீரர்களில் யாரும் மிச்சம் இல்லாமல் இருந்தாலும் கிருஷ்ணன் உயிருடன் இருப்பான். அவன் திரௌபதியோ குந்தியோ ராஜ்ய த்தை அடையச் செய்து விடுவான். ஆகையால் யுதிஷ்டிரனைக் கொல்லுவதில் லாபம் ஒன்றுமில்லை. யுதிஷ்டிரனை உயிரோடு பிடி த்து விட்டால் யுத்தம் சீக்கிரமாகவும் வெற்றிகரமாகவும் முடிந்து விடும். க்ஷத்திரிய தருமத்துக்கும் சத்தியத்துக்கும் பயந்த தரும புத்திரனை எப்படியாவது மறுபடி சூதாட்டத்தில் இழுத்து ஏமாற்றலாம். 

மறுபடி காட்டுக்கு அனுப்பி விடலாம். பத்து நாட்கள் யுத்தம் நடந்த அனுபவத்திலிருந்து யுத்தத்தினால் குலநாசம் உண்டாகுமே யொழிய காரிய சித்தி பெறமுடியாது என்பதைத் து ரியே யாதனன் கண்டான். இதனாலேதான் அவன் யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்துத் தர வேண்டும் என்று துரோணரை வேண்டியது. 

துரோணர் இதை அறிந்ததும் தான் முதலில் மகிழ்ந்தது பொய்யாயிற்று என்று வருத்தப்பட்டுத் துரியோ தன்னை மனத்தில் மிகவும் இகழ்ந்தார். ஆயினும் யுதிஷ்டிரனைக் கொல்லாமலிருக்க எப்படியோ ஒரு வழி ஏற்பட்டதே என்று சந்தோஷப்பட்டார். 

துரோணர் புதிஷ்டிரனை உயிரோடு பிடிக்கப் பிரதிக்ஞை செய்திருக்கிறார் என்கிற செய்தி சாரணர்கள் மூலம் பாண்டவ சேனைக்கும் தெரிந்துவிட்டது. ஆசாரியர் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும் என்று நிச்சயம் செய்து பிரக்ஞையும் பண்ணினார் என்றால் அவருடைய ஒப்புயர்வற்ற ஆயுதப் பயிற்சி யையும் சூரத்தனத்தையும் அறிந்த பாண்டவர்கள் பயப்படவேண்டியதாயிற்று. யுதிஷ்டிரனருகில் போதிய காப்பு எப்போ தும் ருக்க வேண்டும் என்று அனைவரும் கவலை கொண்டார்கள். 

அதற்கேற்றபடியே போரின் கிரமத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டார்கள். எந்தச் சமயத்திலும் யுதிஷ்டிரனுக்குக் காப்புக் குறையாமலிருக்குமாறு படைகளை வியூகப்படுத்தினார்கள். 


துரோணர் த லைமையில் நடந்த முதல் நாள் யுத்தத்தில் அவர் தன்னுடைய பராக்கிரமத்தை நன்றாகக் காட்டினார். நெருப்பானது உலர்ந்த காட்டைக் கொளுத்துவதுபோல் பாண்டவ சேனையைக் கொளுத்திக்கொண்டு சஞ்சரித்தார். ஒரு துரோணர் அநேக துரோணர்களானதாகப் பாண்டவசேனை எண்ணுமாறு இங்கு மங்கும் தன் தேரைச் செலுத்தி அம்பு மழை பெய்து யுத்தகளம் முழுதும் தாண்டவமாடச் செய்தார். 

திருஷ்டத்யும்னன் இருந்த இடத்தில் பாண்டவ சேனை யைப் பிளந்தார். மகாரதர்களுக்குள் துவந்த யுத்தங்கள் பல நடந்தன. மாயச் சண்டை செய்வ ல் வல்லவனான சகுனிக்கும் சகதேவனுக்கும் யுத்தம் நடந்தது. தேர்கள் ஒடிந்தன, கீழே இறங்கிக் கதாயுதங்களைக் கொண்டு இரண்டு மலைகள் உயிர் பெற் றுப் போர் செய்வதுபோல் கைகலந்தார்கள். 

பீமனுக்கும் விவிம்சதிக்கும் பெரும் போர் நடந்தது. இரு ருடைய தேர்களும் உடை ந்தன. சல்லியன் தன் மருமகனான நகுலனை எதிர்த்துச் சிரித்துக் கொண்டே மிகவும் துன்புறுத்தினான். நகுலன் கோபங் கொண்டு மாமனுடைய தேரின் கொடியை யும் குடையையும் உடைத்துக் கீழே தள்ளி வெற்றிச் சங்கு ஊதி னான். கிருபாசாரியர் திருஷ்டகேதுவை எதிர்த்து அவனை நன்றாக அடித்துத் துரத்தினார். சாத்யகிக்கும் கிருதவர்மாவுக்கும் பெரும் யுத்தம் நடந்தது. 

விராடன் கர்ணனை எதிர்த்தான். அபிமன்யுவின் பராக்கிர மம் வழக்கம்போல் அற்புதமாக ஜொலித்தது. பௌரவன் கிருதவர்மன், ஜயத்ரதன், சல்லியன் ஆகிய நான்கு பெரிய வீரர்களையும் ஒருவனாகவே நின்று முறியடித்தான். 

அதன் பிறகு பீமனுக்கு சல்லியனுக்கும் உக்கிரமான கதாயுதச் சண்டை நடந்தது. முடிவில் சல்லியன் பீமனால் தோற் கடிக்கப்பட்டு யுத்தத்தினின்று விலகினான். கௌரவசேனை தைரி யம் இழந்தது. அதைத் தொடர்ந்து பாண்டவசேனை கெளரவ சேனையை மிகவும் துன்புறுத்தி ஒழுங்கிழந்து கலையச் செய்தது. 


இதைக் கண்டு தம் சேனையை உற்சாகப்படுத்துவதற்காகத் துரோணர் சாரதியைப் பார்த்து யுதிஷ்டிரன் இருக்குமிடத்துக் குத் தேரை வேகமாக ஓட்டச் சொன்னார். அழகும் பலமும் கொண்ட நான்கு சிந்து தேசத்து ஜாதிக் குதிரைகள் பூட்டியதும் பொன் மயமானதுமான தேர் மாய வேகமாக யுதிஷ்டிரனுடைய தேரை நோக்கிச் சென்றது. உடனே யுதிஷ்டிரன் கழுகு இறகு கள் பூண்ட கூர்மையான அம்புகளைத் துரோணர் மேல் விட் டான். ஆசாரியர் தயங்கவில்லை. தன் பாணங்களால் தரும் புத்திரனைத் தாக்கி அவனுடைய வில் அறுபட்டுக் கீழே விழச் செய்து வெகு விரைவாக அவன் அருகில் சென்றார். திருஷ்டத் யும்னன் துரோணரை எதிர்த்துத் தடுத்தும் துரோணரை நிறுத்த முடியவில்லை. அவருடைய வேகத்தை யாருமே தடுக்க இயலாதவர்களாக நின்றார்கள். 

“யுதிஷ்டிரர் பிடிபட்டார்! யுதிஷ்டிரர் பிடிபட்டார்!” என் கிற ஆரவாரம் யுத்தகளம் முழுதும் பரவிற்று. 

அப்போது அருச்சுனன் திடீர் என்று அவ்விடம் வந்து சேர்ந்தான். பூமி அதிர அவனுடைய தேரானது ரத்த நதியை யும் எலும்புக் குவியல்களையும் கடந்து அவ்விடம் வந்ததும் துரோணர் தயங்கினார். 

அம்புகளைத் தொடுப்பதும் விடுவதுமான மத்திய காலம் யாருக்கும் காணாமல் காண்டீபம் இடைவிடாத சரமாரி பெய்தது. யுத்த களத்தில் பாணாந்தகாரம் அதாவது, அம்புகள் வானத்தை மூடிய இருட்டு உண்டாயிற்று. 

துரோணர் பின் வாங்கிச் சென்றார். யுதிஷ்டிரன் பிடிபட வில்லை.யுத்தமும் அன்று நிறுத்தப்பட்டது. கௌரவசேனை பயத் துடன் திரும்பிற்று. பாண்டவ சேனையும் கம்பீரமாக யுத்த களத்தை விட்டு இரவில் தங்குமிடம் சென்றது. படைகள் அனைத் துக்கும் பின்பாகக் கேசவனும் அருச்சுனனும் பாசறைக்குச் சென் றார்கள். இவ்வாறு பதினோராவது நாள் யுத்தம் முடிந்தது. 

பன்னிரண்டாவது நாள் 

யுதிஷ்டிரனை உயிருடன் பிடிக்கும் பிரயத்தனம் முதல் நாளில் செய்தது தோல்வியாக முடிந்தது. துரியோதனனைப் பார்த்துத் துரோணர் சொன்னார். “தனஞ்சயன் அருகில் இருக்கும் வரையில் யுதிஷ்டிரனைப் பிடிக்க முடியாது. என்னால் வஞ்சனையில்லை.ஏதா வது உபாயம் செய்து தனஞ்சயனை வேறு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போய் யுதிஷ்டிரனைத் தனியாகப் பிரித்து விட்டால் நான் சேனையை உடைத்து யுதிஷ்டிரனைப் பிடிப்பேன்.யுத்தத்துக் குப் பயந்து அவன் ஓடிப் போகாமல் நின்று போர் செய்தானானா அவனை நிச்சயமாகப் பிடித்துத் தருவேன். அப்படி அவன் நிற் காமல் யுத்த பூமியிலிருந்து ஓடினால் அதுவே வெற்றியாகுமல் லவா’ என்றார். 

அவ்வாறு துரோணர் சொன்னதைக் கெளரவ சேனையிலிரு ந்த திரிகர்த்த தேசாபதியான சுசர்மன் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய சகோதரர்களுடன் யோசனை செய்தான். அவர் கள் சம்சப்தக விரதம் பூண்டு அருச்சுனனைப் போருக்கு இழுத்து யுதிஷ்டிரனை விட்டுப் பிரிந்து போகச் செய்ய நிச்சயித்தார்கள். 

ஒரு பெருஞ் சேனையைத் திரட்டி எல்லோரும் சேர்ந்து அக்கி னியை அர்ச்சனை செய்து புல்லால் செய்யப்பட்ட ஆடைகளை அனை வரும் தரித்து சரீரத்தை விட்டு விட உறுதி செய்து கொண்டு “நாங் கள் யுத்தத்தில் தனஞ்சயனைக் கொல்லாமல் திரும்பமாட்டோம். பயந்து புறங்காட்டி ஓடினோமானால் மகா பாபங்களையெல்லாம் செய்த தோஷத்தை அடைவோமாக என்று மரண காலத்தில் செய்ய வேண்டிய தானங்களை யெல்லாம் செய்துவிட்டு யுத்த களத்தில் யமனுடைய திக்கை நோக்கிப் பிரவேசித்தார்கள். 

“அருச்சுனா!” என்று தனஞ்சயனை அறை கூவி யுத்தத்துக்கு அழைத்தார்கள். ஒரு முக்கியமான நோக்கத்துக்காக ஒரு படை யோ தனிப்படையாட்களோ தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு காரிய சாதகம் செய்விப்பது என்கிற தற்கொலை முறையை தக் காலத்து யுத்தங்களிலும் காணலாம். அருச்சுனனைத் தூர இழுத்துக்கொண்டு போக வேண்டிய நோக்கத்துடன் ஏற்பட்ட தற்கொலைப் படையாகத் திரிகர்த்தர்கள் “சம்சப்தக” பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு அருச்சுனனை அழைத்தார்கள். 

அருச்சுனன் தர்மராஜனைப் பார்த்து ”அரசனே! சம்சப்தக விரதம் பூண்டவர்கள் என்னைப் பெயரிட்டுக் கூவுகிறார்கள். யுத்த த்துக்கு யாரேனும் அழைத்தால் பின் வாங்குவதில்லை என்கிற பிரதிக்ஞையால் நான் கட்டுப்பட்டிருக்கிறேன் அல்லவா? சுசர்ம னும் அவனைச் சேர்ந்தவர்களும் என்னை யுத்தத்திற்கு அழைக்கிறார் கள். இவர்களையும் இவர்களுடைய பரிவாரங்களையும் கொன்று திரும்புவேன். எனக்கு அனுமதி தரவேண்டும்” என்றான். 

“அப்பனே! துரோணருடைய எண்ணம் உனக்குத் தெரி யும். அதை நினைவில் வைத்துக் கொண்டு எந்தக் காரியமாயினும் செய். என்னை உயிருடன் பிடிப்பதாக அவர் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர் பலமுள்ளவர். சூரர் அஸ் திர வித்தையில் பண்டிதர். சிரமம் தாங்கக் கூடியவர். சோம்பா தவர் ” என்றான் யுதிஷ்டிரன். 

“அரசனே! உமக்குக் காப்பாக சத்தியஜித்து இருக்கிறான்: அவன் உயிருடன் உமது பக்கத்தில் இருக்கும் வரையில் உமக்கு அபாயமில்லை” என்று அருச்சுனன் தர்மராஜனுக்குச் சொல் லிப் பாஞ்சால ராஜ குமாரனான சத்தியஜித்தை யுதிஷ்டிரனுக்குக் காப்பாக வைத்துவிட்டுச் சம்சப்தர்களுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு பசி கொண்ட சிம்மத்தைப்போல அவர்களை எதிர்த்துச் சென்றான். 

“கண்ணா! அதோ பார் திரிகர்த்தர்கள் நிற்கிறார்கள். அழ வேண் டிய சமயத்தில் விரதம் பூண்ட மயக்கத்தினால், சந்தோஷமாக நிற் கிறார்கள். சுவர்க்கத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியில் பரவசமாக இருக்கிறார்கள் !” என் று சொல்லிக்கொண்டு பகைவர்களுடைய பெருஞ் சேனையை அணுகினான் அருச்சுனன். 

பாரதப் போரில் இது பன்னிரண்டாவது நாள். போர் கடுமை யாக நடந்தது. அருச்சுனனுடைய தாக்குதலினால் ஆங்காங்கு திரிகர்த்தர்களுடைய படை அசைய ஆரம்பித்தது. திரிகர்த்த ராஜன் மனங் கலங்கினவர்களை எச்சரிக்கை செய்து உரத்த சிம்ம நாதம் செய்தான். 

“சூரர்களே! பெரும் க்ஷத்திரியக் கூட்டத்தில் பிரதிக்ஞை செய்து விரதம் பூண்டிருக்கிறீர்கள். கோரமான சபதங்களைச் செய்த பின் பயத்தைப் பாராட்டுவது தகாது. பரிகாசத்திற்குப் பாத்திரமாவீர்கள்’ என்று அந்த வீரர்களையும் ஒருவரை ஒரு வர் உற்சாகப்படுத்திக்கொண்டு சங்கங்களை முழக்கி யுத்தத்தை மறுபடியும் மும்முரமாக நடத்தினார்கள். 

“ரிஷிகேசனே! இவர்கள் உயிரோடிருக்கும் வரை யுத்தத்தை விட்டு விலகமாட்டார்கள். தயங்குவதற்கில்லை. தேரை நடத்து” என்றான் அருச்சுனன். 

மதுசூதனன் தேரைச் செலுத்தினான். தேவாசுர யுத்தத்தில் இந்திரனுடைய ரதத்தைப் போல் கண்ணன் ஓட்டிய தேர் பலவித மண்டல கதிகளைச் செய்தது. அருச்சுனனுடைய காண்டீபம் தன் னுடைய முழுப் பண்பையும் காட்ட ஆரம்பித்தது. திரிகர்த்தர் களுடைய கண் ணுக்கு நூறு அர்ச்சுனர்கள் தென்பட்டார்கள். காயம்டைந்த வீரர்கள் ஆயிரக் கணக்கில் பூமலர்ந்த மரங்களைப் போல் காணப்பட்டார்கள். 

கடுமையான போர் நிகழ்ந்தது. ஒரு சமயம் அம்பு ம மழையா ல் அருச்சுனனுடைய ரதம் கொடி மரத்துடன் அந்தகாரத்தில் மூடப் பட்டது. 

“தனஞ்சயனே! பிழைத்திருக்கிறாயா?” என்றான் கண்ணன்.

“இருக்கிறேன்!” என்று இருட்டில் அருச்சுனன் காண்டீவ த்தை ழுத்துத் தன் அம்புகளினால் பகைவர்களுடைய அம்பு மழையை விலக்கினான். 

பிரளய காலத்தில் நடைபெறும் ருத்திர நடன அரங்கம் போல் ரணகளம் விளங்கிற்று. தலையில்லா முண்டங்களும் வெட் டுண்ட அங்கங்களும் எங்கும் பரவிப் பயங்கரமான காட்சியை அளித்தது. 

சம்சப்தகர்களை எதிர்த்து அருச்சுனன் சென்றதும் துரோணர் அணிவகுக்கப்பட்ட பாண்டவ சேனையில் யுதிஷ்டிரன் இருந்த த்தைப் பலமாகத் தாக்கத் தம் சேனைக்கு உத்திரவிட்டார். பெருஞ் சேனை துரோணர் தலைமையில் தன்னை எதிர்க்க வந்ததை யுதிஷ்டி ரன் கணடான். 

“பிராமணர் என்னைப் பிடிக்க வருகிறார். ஜா க்கிரதையாகச் சேனையைப் பாதுகாப்பாயாக! “என்று திருஷ்டத்யும்னனை எச்சரித்தான். 

துருபத குமாரன் துரோணர் வரும் வரையில் காத்திராமல் தானே துரோணரை எதிர்த்துத் துரிதமாகத் தேரைச் செலுத்தினான். தன்னைக் கொல்லவே பிறந்தவனாகிய திருஷ்டத்யும்னன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஆச்சாரியர் ஒரு கணம் கால னைக் கண்டதுபோல் மனம் கலங்கினார். இவனால் தமக்கு மரணம் என்பது நினைவுக்கு வந்தது. அந்தப் பக்கத்தில் செல்லுவதை விட்டுத் துருபதன் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். 

துருபதனுடைய சேனையைத் துன்புறுத்தி ரத்த வெள்ளம் பெருகச் செய்த பின் துரோணர் மறுபடியும் மனத்தை உறுதி செய்து கொண்டு யுதிஷ்டிரன் இருக்குமிடம் சென்றார். யுதிஷ்டிரன் அசையாமல் அம்பு மழை வருஷித்தான். அதன்மேல் சத்தியஜித்து துரோணரை நோக்கிப் பாய்ந்தான். கோரமான போர் துவங்கிற்று. துரோணர் யமனைப்போல் விளங்கினார். ஒருவர் பின் ஒருவராக வீரர்களை வதம் செய்தார். பாஞ்சால ராஜகுமாரனான விருகன் அவர் பாணத்துக்கு இரையானான். அதன் பின் சத்தியஜித்தும் அடிபட்டு மாண்டான். 

இதைக் கண்டு விராடன் மகன் சதானீகன் துரோணர் மேல் பாய்ந்தான. சதா னீகனுடைய தலை அறுபட்டுக் குண்டலங்களோடு நிலத்தில் உருண்டது. கேதமன் என்கிற அரசன் எதிர்த்தான். அவனும் உயிரை இழந்தான். துரோணருடைய வேகத்தை எப்ப டியாவது நிறுத்த வேண்டும் என்று வந்த வசுதானன் ஒரு பாணத் தால் யமாலயத்துக்கு அனுப்பப்பட்டான்.யுதாமன்யுவையும் சாத் யகியையும் சிகண்டியையும் உத்தமௌஜசையும் பாணங்களால் அடித்து விரட்டித் துரோணர் யுதிஷ்டிரனுக்குச் சமீபத்தில் வந்து விட்டார். அச்சமயம் மற்றொரு துருபத புத்திரனான பாஞ்சால்யன் தன் உயிரைத் திரமணமாகக் கருதித் துரோணரை ஆவேசமாக எதிர்த்தான். அவனும் உயிரிழந்து ஆகாயத்தினின்று நட்சத்திரம் விழுவதுபோல் தேரினின்று கீழே விழுந்தான். 

“ராதேயா! துரோணருடைய பராக்கிரமத்தைப் பார்த் தாயா? இந்தப் பாண்டவர்கள் இனி யுத்தத்தை விரும்ப மாட் டார்கள். அவருடைய சேனை சிதறித் தடுமாறுவதைப் பார்” என்றான் துரியோதனன். 

கர்ணன் தலையசைத்தான். “துரியோதனனே! பாண்டவர்கள் அவ்வளவு சுலபமாகத் தோல்வியடைய மாட்டார்கள். யுத்த த்தை விட்டு விலக மாட்டார்கள். விஷத்தினாலும் நெருப்பினாலும் சூதாட்டத்தினாலும் உண்டான துன்பங்களையும் வனவாசத்தை யும் அவர்கள் மறக்க மாட்டார்கள். அதோ பார்! பாண்டவர்கள் மறுபடி ஒன்று கூடித் துரோணரைத் தாக்குகிறார்கள். பீமனும் சாத்யகியும் சுதாமன்யுவும் க்ஷத்ரதர்மனும் நகுலனும் உத்தமௌஜ சும் துருபதனும் விராடனும் சிகண்டியும் திருஷ்டகேதுவும் இன் னும் பல வீரர்களும் யுதிஷ்டிரனைத் காக்க வந்து கூடிவிட்டார்கள். துரோணர் பலமாகத் தாக்கப்படுகிறார். இவ்வளவு பாரம் ஆசாரி யர் பேரில் சுமத்தி விட்டு நாம் நின்றுகொண்டிருக்கக் கூடாது. மகா சூரராயினும் அவர் தாங்கக் கூடிய சுமைக்கு வரம்பு உண்டு. ஓநாய்களும் ஒன்று கூடிப் பெரிய யானையைக் கொல்லும். துரோ ணர் இருக்குமிடம் நாமும் செல்வோம். அவரைத் தனியாகவிட்டு விடக்கூடாது” என்றான் கர்ணன். 

சூரன் பகதத்தன் 

யுதிஷ்டிரனை உயிருடன் பிடிப்பதற்காகத் துரோணர் செய்த பிரயத்தனம் முடியவில்லை. 

துரியோதனன் ஒரு பெரிய யானைப் படையைத் திரட்டிப் பீமன் மேல் செலுத்தினான். தேரின் மேல் நின்று பீமன் அந்த யானைப் படையை அம்புகளால் தாக்கினான். அர்த்தசந்திர பாணங் களால் துரியோதன்னுடைய தேர்க் கொடியையும் அவன் பிடித் திருந்த வில்லையும் அறுத்துத் தள்ளினான். இவ்வாறு துரியோதனன் பீடிக்கப்படுவதைக் கண்ட மிலேச்ச ராஜனான அங்கன் பெரிய யானையின் மீதேறிப் பீமேசேனனை எதிர்த்தான். பீமன் நாராசங்களைச் செலுத்தி யானையை வீழ்த்தி மிலேச்ச ராஜனையும் கொன்றான். இதைக் கண்டு அந்தப் பகுதிக் கெளரவ சேனை பயந்து போய்ச் சிதறி ஓடிற்று. 

யானைகளும் ரதங்களுக்குப் பூட்டியிருந்த குதிரைகளும் பிய்த் துக்கொண்டு ஓடும்பொழுது ஆயிரக் கணக்கில் காலாட்கள் மிதிக் கப்பட்டு மாண்டார்கள். நான்கு பக்கத்திலும் சேனை சிதறியடிக் கப்பட்டு ஓடுவதைக் கண்டு பிராக்ஜோதிஷ தேசத்து ராஜனான பகதத்தனுக்குப் பொறுக்க முடியவில்லை. அவன் தன்னுடைய பிர சித்தி பெற்ற சுப்ரதீகம் என்ற யானையின் மீது ஏறி அதைப் பீமன் மேல் ஏவினான். காதுகளை விரித்துக்கொண்டும் துதிக்கையைச் சுழற்றிக் கொண்டும் அந்த யானை பீமசேனன் மேல் பாய்ந்து அவனுடைய ரதத்தையும் குதிரையும் நொறுக்கிப் பொடியாக் கிற்று. பீமன் யானையின் மர்ம ஸ்தானங்களை நன்றாகப் பயின்று அறிந்தவன். கீழே குதித்துப் போர் யானையின் கால்களுக் குக் கீழே புகுந்து அதன் சரீரத்தை மிக நெருங்கி யானைக்குரிய, பல மர்ம ஸ்தானங்களை கையினால் தாக்கிக் குத்தித் துன்புறுத்தினான். யானை வீறிட்டுக்கொண்டு குயவனுடைய சக்கரம் போல் சுழன்று சுழன்று பீமனை உதறித் தள்ளப் பார்த்தது. துதிக்கையைக் கொண்டு அவனைப் பிடித்து முழங்கால்களைக்கொண்டு நொறுக்கிக் கொல்லப் போகும் தறுவாயில் விருகோதரன் + தும்பிக்கையினின்று எப்படியோ விடுவித்துக்கொண்டு மறுபடியும் அதனுடைய சரீரத்தையொட்டியே அங்கங்களின் இடையில் புகுந்து வேதனை செய்தான். 

பாண்டவப் படையிலிருந்து போர் யானை ஏதேனும் வந்து பகதத்தனுடைய யானையைத் தாக்கும். அப்போது தன்னை மீட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்து இவ்வாறு அவகாசம் செய்து கொண்டிருந்தான். யானையின் சரீரத்தில் அவன் மறைந்து விட் டதனால் பீம்சேன்னை பகதத்தனுடைய யானை கொன்று விட்டது பீமன் இறந்தான்” என்று யுத்தகளம் முழுவதும் கூச்சல் கிளம்பிற்று. 

பீமன் மாண்டு விட்டான் என்றே யுதிஷ்ரடின் எண்ணி வீரர்களை யெல்லாம் பகதத்தனைத் தாக்கச் சொல்லி ஏவினான். இதற்குள் தசார்ண தேசத்தரசன் ஒரு போர் தத்தனுடைய யானையை எதிர்த்தான். தசார்ணனுடைய யானை தீவிரமாகத் தாக்கி மிகக் கடுமையான போர் புரிந்தது. ஆயினும் அது முடிவில் சுப்ரதீகத்தினால் குத்த்ப்பட்டுக் கீழே விழுந்தது. பீமசேனன் அச்சமயம் யானையின் கீழிருந்து வெளிப்பட்டுத் தப்பி ஓடினான். 

அநேக தேராளிகளால் சூழப்பட்டு மிகவும் தாக்கப்பட்டும் பகதத்தன தைரியத்தை இழக்கவில்லை.மலை-மேல் காடு பற்றி எரி யும் தீயைப் போல அந்த வீரன் ஜொலித்தான். சுற்றி வளைத்து நின்ற சத்துருக்களை அலட்சியம் செய்து சாத்யகியினுடையதேரின் மேல் அந்த யானையைச் செலுத்தினான். யானையானது சாத்தியகி யின் தேரைப் பிடித்து ஒரே தூக்காகத் தூக்கி எரிந்தது. சாத்யகி தேரை விட்டுக் கீழே குதித்து உயிர் தப்பினான். அவனுடைய சாரதி மிகவும் சாமர்த்தியமாகத் தூக்கி எறியப்பட்ட தேரை யும் குதிரைகளையும் காப்பாற்றி உடனே மறுபடி ரதத்தைச் சரி யாக நிறுத்தி சாத்யகி நின்ற இடத்துக்குச் செலுத்தினான். 

பகதத்தனுடைய யானை பாண்டவ சேனையின் மத்தியில் எ ச்சையாகப் புகுந்து இவ்வாறு பல வீரர்களைத் தூக்கித் எறிந்து காலனைப் போல் பயத்தை உண்டாக்கிற்று. ஐராவதத்தின் மீது இந் திரன் நின்று அசுரர்களைத் துன்புறுத்திய வண்ணம் பசுதத்தன் பல அரசர்களை வீழ்த்தியும் துன்புறுத்தியும் வந்தான். 

நீட்டிய துதிக்கையும் அசைவற்ற நிமிர்ந்த காதுகளுமாக அந்த யானை இங்குமங்கும் ஓடி எண்ணற்ற குதிரைகளையும் ரதங்களையும் ஆட்களையும் மிதித்துக் கொன்றது. பாணங்களை அதன்மேல் செலுத்தச் செலுத்த அந்த யானையின் உக்கிரம் மேலும் மேலும் அதிகமாயிற்று. காட்டில் டையன் பசுக் கூட்டங்களை ஓட்டுவது போல் பகதத்தன் தன் போர் யானைகளைக்கொண்டு பாண்ட வ சேனை யை விரட்டி விரட்டி ஓடச்செய்தான்.பீமசேனன் மறுபடி தேர் ஏறி சுப்ரதீகத்தைத் தாக்கினான். யானை தன் துதிக்கையை நீட்டி உமிழ் நீரைக் கக்கி எறிந்து தேர்க் குதிரைகளை விரட்டியபடியால் அவை பிய்த்துக்கொண்டு ஓடி விட்டன். 


அச்சமயம் தூரத்தில் சம்சப்தகர்களோடு யுத்தம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் பாண்டவ சேனையிருந்த இடத்தில் எழும்பிய புழுதியைக் கண்டும் யானையினுடைய சப்தத்தைக் கேட்டும் ஏதோ அனர்த்தம் நேரிட்டது என்று ஊகித்தான். மது சூதனா! இது பகதத்தனுடைய போர் யானை சுப்ரதீகத்தின் தொனி. போர் யானையை நடத்தி யுத்தம் செய்யும் வீரர்களில் பகதத்தனைப் போல் உலகத்தில் யாரும் கிடையாது. அவன் நம்மவர்களை முறி யடித்து விடுவான். விரைவில் அவ்விடம் நாம் போய்ச் சேர வேண் மும். சம்சப்தகர்களை நசித்தது போதும். அவர்களை விட்டுத் துரோ ணர் யுதிஷ்டிரனை எதிர்த்துக்கொண்டிருக்கும் இடத்துக்குத் தேரை வேகமாகச் செலுத்த வேண்டும்” என்றான். 

கிருஷ்ணனும் அவ்வாறே தேரைச் செலுத்தினான். சுசர்மா வும் அவன் சகோதரர்களும் அருச்சுனனுடைய தேரைப் பின் தொடர்ந்து ”நில், நில்” என்று சொல்லித் தாக்கினார்கள். 

அருச்சுனன் இரண்டு எண்ணங்களால் இழுக்கப்பட்டு ஒரு கணம் மனத்தில் வேதனைப்பட்டான். அங்கே சுசர்மா என்னைப் போருக்கு அழைக்கிறான். நான் புறங்காட்டி ஓடுபவனைப் போல் போவதா? வடபுறத்தில் நம்முடைய சேனை பிளக்கப்பட்டு அபாய நிலையில் இருக்கிறது. அவ்விடம் உடனே நான் சென்று உதவாமற் போனால் காரியம் கெட்டுப் போகும்’ என்று கவலைப்பட்டான். 

அச்சமயம் சுசர்மா ஒரு சக்தி ஆயுதத்தை அருச்சுனன் மே லும் ஒரு தோமரத்தை ஜனார்த்தனன் மேலும் வீசினான். கோபங் கொண்ட அருச்சுனன் மூன்று பாணங்களை எய்து சுசர்மனைத் திரு ம்பும்படி செய்து விட்டு வேகமாகப் பகதத்தன் இருந்த இடம் நோக்கித் தேரைச் செலுத்தச் சொன்னான். 

அருச்சுனன் வந்து சேர்ந்ததுமே பாண்டவ சேனை. மேலும் தைரியம் கொண்டது. ஒழுங்காக நின்றார்கள்.நாணற் காட்டை அழிக்கும் யானையைப் போல அருச்சுனன் கௌரவ சேனையை அழித்துப் பகதத்தனை நெருங்கினான். அருச்சுனன் வரக் கண்டதும் அவனை நோக்கிப் பகதத்தன் யானையைச் செலுத்தினான். அருச்சுனன் தேரின் மேல் காலனைப்போல் பாய்ந்தது. அப்போ வாசுதேவன் யானையின் பாதையினின்று மிகவும் சாமர்த்தியமாக ரதத்தை விலக்கிக் காப்பாற்றினான். 

பகதத்தன் யானையின் மேலிருந்து கொண்டு அரு கனன் கண்ணன் இருவர் பேரிலும் அம்புகள் பெய்தான். அரு ச் சுனன் யானையின் கவசத்தைப் பாணங்களால் முதலில் உடைத்து விட்டான். அதன் மேல் யானை பாணங்களால் பீடிக்கப்பட ஆரம்பித் தது. தைக் கண்டு பகதத்தன் சக்தியாயுதம் ஒன்றை வாசு தேவன் மீது பிரயோகித்தான். அருச்சுன்ன் அதைத் தன் பாணத் தால் இரண்டாக வெட்டினான். பிறகு பகதத்தன் ஒரு தோமரத்தை அருச்சுனன் மேல் செலுத்தினான். அது தனஞ்சயனுடைய கிரீடத்தைத் தாக்கிற்று. 

அருச்சுனன் கிரீடத்தைச் சரியாக மறுபடி வைத்துக்கொண்டு “பகதத்தனே! கடைசித் தடவையாக உலகத்தை நன்றாகப் பார்த்து விடு” ஈன்று சொல்லிக் காண்டீபத்தை வளைத்தான். 

பகதத்தன் பழுத்த கிழவன். நரைத்த மயிரும் சதை மடிப்புகளும் கொண்ட அவன் முகம் சிம்மத்தின் முகம் போல் விளங்கிற்று. வயதினால் தொங்கிக் கண்களை மூடும் சதையை அவன் ஒரு பட்டு வஸ்திரத்தால் தூக்கிக் கட்டியிருப்பான், ஒப் புயர்வற்ற சூரன். அவன் சீலமும் குணமும் பிரதாபமும் க்ஷத்திரிய உலகத்தில் பிரசித்தமாக இருந்தன. இந்திரனுக்கு நண்பன் என்று அவனைப் பற்றிச் சொல்லுவார்கள். கடை சித் தடவையாக உல கத்தைப் பார்'” என்று சொல்லி அருச்சுனன் அவன் மேல் பாணங் களை விட்டு அவனுடைய வில்லையும் அம்புப் பெட்டியையும் உடை த்து மர்மஸ்தானங்களைப் பிளந்தான். அந்தக் காலத்தில் வீரர்கள் னைவரும் கவுசம் பூண்டிருப்பார்கள். கவசத்தில் எந்த இடத்தில் பட்டால் அம்பு உள்ளே நுழைந்து ஆளைத் தாக்கும் என்கிற ரகசி யங்கள் யுத்தப் பயிற்சியில் அடங்கும். 

கிழவனான பகதத்தன் தன்னுடைய ஆயுதங்களை இழந்தட்டியால் யானையைக் குத்தி ஓட்டும் அங்குசத்தை மந்திரம் பிரயோகி த்து அருச்சுனன் மேல் வீசினான். அது அருச்சுனனை மாய்த்திருக் கும். கண்ணன் அதைத்தடுத்து தன் மார்பில் ஏற்றுக்கொண்டான். து வைஷ்ணவாஸ்திர மந்திரத்துடன் செலுத்தப்பட்டிருந்தபடியால் மாதவன் கழுத்தில் வனமாலையாக மாறி ஆபரணமாகத்தொங்கிற்று. 

“ஜனார்த்தனா! பகைவன் எறிந்த அஸ்திரத்தை நீ ஏன் ஏற் றுக்கொண்டாய்? ரதத்தை ஓட்டுவேன். யுத்தம் செய்ய மாட் டேன் என்று சொல்லியவன் வில்லும் கையுமாக நான் இருக்கும் போது ஏன் இவ்விதம் செய்தாய்?” என்று அருச்சுனன் ஆட்சேபித்தான். 

“அப்பனே ! உனக்குத் தெரியாது. இந்த அஸ்திரம் உன்னைக் கொன்றிருக்கும். அது என்னுடைய பொருள். என்னிடம் திரும்பியது” என்று சொல்லிச் சிரித்தான். 

பிறகு பார்த்தன் ஒரு பாணத்தைச் செலுத்தினான். அது சுப்ரதீகத்தின் கும்ப ஸ்தலங்களுக்கிடையில் புற்றில் பாம்பு செல்வது போல் நுழைந்து மறைந்தது. 

பகதத்தன் யானையைத் தூண்டிப் பார்த்தான். பொருளிழந்த புருஷனுடைய வார்த்தையை மனைவி கேட்காததைப் போல் அந்த யானை அப்போது பகதத்தனுடைய கட்டளைச் சொற்களை அசட்டை செய்தது. மலைபோன்று நின்ற அந்த யானை அங்கங்களை ஸ்தம்ப னம் செய்து கொண்டும் தந்தங்களை நிலத்தில் முட்டிக்கொண்டும் ஒரு தீனஸ்வரம் விட்டுப் பிராணனை விட்டது. 

யானையைக் கொல்லாமல் பகதத்தனை மட்டும் வீழ்த்தப் பார் த்த தனஞ்சயன் அவ்வாறு செய்ய முடியாததைப் பற்றிக் கொஞ் சம் வருந்தினான். அருச்சுனனுடைய அம்புகளால் கண்களைத் தூக்கிக் கட்டியிருந்த பட்டு அறுந்து பகதத்த ராஜன் இருளில் மூழ்கினான். அதன் மேல் கூரிய பிறை வடிவமான பாணம் ஒன்று அவன் மார்பைப் பிளந்தது. 

மலையுச்சியிலிருந்து காற்றடித்து நன்றாகப் பூத்த மரம் விழு வதைப் போல் பொன் மாலை அணிந்த பகதத்தன் போர் யானையின் மீதிருந்து கீழே விழுந்தான். அந்தப் பகுதியிலிருந்த கௌரவப் உடை கலைந்து ஓடிற்று. 

சகுனியின் சகோதரர்களான விருஷனும் அசலனும் அப்போ தும் தயங்காமல் அருச்சுனனை எதிர்த்தார்கள் முன்புறமும் பின் புறமுமாகத் தனஞ்சயனை மிகவும் துன்புறுத்தினார்கள். அருச்சு னன் அவர்களுடைய ரதங்களைப் பொடியாகச் செய்து அவர்களு டைய படையையும் அம்புகளால் தாக்கினான். ஒரே முகச் சாயலைக் கொண்ட இளம் சிங்கங்களுக்கொப்பான அவ்விரு சகோதரர்க ளும் இறந்து கீழே விழுந்தார்கள். 

யுத்தத்தை விட்டு ஓடாதவர்களான அவ்விரு சகோதரர்க ளுடைய சரீரங்கள் பரிசுத்தமான கீர்த்தியொளியைப் பத்துத்திக்குகளிலும் வீசின என்கிறார் வியாசர். 

தன்னுடைய ஒப்பற்ற வீர சகோதரர்கள் மாண்டதைக் கண்ட சகுனி மிகவும் கோபங் கொண்டு தனக்குத் தெரிந்த மாயப் போர் முறைகளைத் துவக்கினான். அருச்சுனன் அவற்றிற்கெல்லாம் பிரதியஸ்திரம் பிரயோகித்து மாயைகளை விலக்கினான். வேகமான குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற சகுனி அருச்சுனனுடைய பாணங் களால் அடிபட்டு யுத்த களம் விட்டு விலகினான். 

அதன் பிறகு பாண்டவ சேனை துரோணருடைய படையைப் பலமாகத் தாக்கிற்று. எண்ணற்ற வீரர்கள் மாண்டார்கள். ரத்த நதிகள் ஓடின. அச்சமயம் சூரியன் அஸ்தமித்தான். தம்முடைய சேனை பெருந் தோல்வி யடைந்து கவசங்கள் உடைந்து காயங்கள் பட்டுத் தைரியம் இழந்து புத்தி கூட ஸ்திரமில்லாத நிலைமையை அடைந்துவிட்டதைப் பார்த்துத் துரோணர் பன்னிரண்டாவது நாள் யுத்தத்தை நிறுத்தினார். இரண்டு சேனைகளும் ஒன்றை மற் றொன்று பார்த்துக்கொண்டே களத்தை விட்டு விலகின. 

அபிமன்யு 

பன்னிரண்டாவது நாள் இரவு பாண்டவ சேனையில் எல்லா வீரர்களும் பல்குனனைப் புகழ்ந்துகொண்டு உற்சாகமாகத் தங்க ளுடைய தங்குமிடம் சென்றார்கள். கௌரவ வீரர்கள் கவலையும் வெட்கமும் கொண்டு மௌனமாகக் கலைந்தார்கள். 

மறு நாள் விடிந்ததும் துரியோதனன் மிகுந்த கோபத்துடன் துரோணரிடம் சென்று நமஸ்கரித்துப் பல வீரர்களுக்கிடையில் அடியில் கண்டவாறு பேச ஆரம்பித்தான். 

“பிராமணோத்தமரே அருகில் நின்ற யுதிஷ்டிரனை நேற்றுப் பிடிக்காமல் விட்டு விட்டீர். எங்களைக் காப்பாற்றும் கவலை உம் க்கு இருந்திருந்தால் நேற்று நடந்த நிகழ்ச்சிகள் நடைபெற இட மிருந்திருக்காது. உண்மையில் யுதிஷ்டிரனைப் பிடிக்கும் எண் ணம் உமக்கு உறுதியாக இருப்பின் உம்மை எவரால் தடுக்க முடியும்? நீர் எனக்குத் தந்த வரம் நடைபெறாமலிருப்பதற்குக் கார ணம் எனக்குத் தெரியவில்லை. பெரியோர்களுடைய காரியங்கள் விசித்திரமாகவே இருக்கின்றன” என்று குற்றம் சாட்டிப் பேசினான்.

இதைக் கேட்ட துரோணர் மிகவும் வருத்தப்பட்டார். “துரியோதனா! உனக்காக நான் என் முழு பலத்தையும் பிரயோ கித்தே வருகிறேன். நீ எண்ணும் எண்ணங்கள் அரசனா உனக்குத் தகுதியானவை அல்ல. யுதிஷ்டிரன் பக்கத்தில் அருச்சு னன் இருக்கும் வரையில் நம்முடைய எண்ணம் நிறைவேறாது என்று உனக்கு ஏற்கனவே நான் சொன்னேன். அவனை எப்படியா யாவது யுத்த களத்திலிருந்து அப்புறப்படுத்தினாலல்லது உன் எண் ணம் நிறைவேறாது. இன்னும் அதற்காக முயற்சி செய்வேன்” என்று கோபத்தை அடக்கித் துரியோதனனைச் சமாதானப் படுத்தினார். 


பதின்மூன்றாவது நாளிலும் சம்சப்தகர்கள் அருச்சுனனைப் போருக்கு அழைத்தார்கள். அவனும் அவர்களை எதிர்த்துத் தெற்கே சென்றான், அவ்விடம் அவனுக்கும் அந்தப் பெருங் கூட்டத்துக்கும், மிகப் பெரும் போர் நடந்தது. அதைப் போன்ற யுத்தமானது ஓரிடத்திலும் கேட்கப் பட்டதுமில்லை பார்க்கப்பட் டதுமில்லை என்கிறார் வியாசர். 

தனஞ்சயன் தெற்கே சென்று விட்டதும் துரோணர் தம்மு டையை படையைத் பத்ம வியூகமாக வகுத்து யுதிஷ்டிரனைத் தாக் கினார். பீமன், சாத்யகி, சேகிதானன், திருஷ்டத்யும்னன், குந்தி போஜன், துருபதன், கடோத்கஜன்,யுதாமன்யு, சிகண்டி. உத்த மௌஜஸ, விராடன், கேகயர்கள் சிருஞ்சயர்கள் இன்னும் பல மகாவீரர்களும் துரோணருடைய படையை எதிர்த்தும் பயன் பெறவில்லை. துரோணருடைய தாக்குதலின் வேகத்தைக் கண்டு பிரமித்து நின்றார்கள். 

சுமத்திராபுத்திரனான அபிமன்யு வாலிபனானாலும் கிருஷ்ணார் ச்சுனர்களுக்குச் சமமான சூரன் என்று பெயர் பெற்று விட்டான். அவனை யுதிஷ்டிரன் கூப்பிட்டு அப்பா! துரோணர் நம்மை வாட்டுகிறார். நாம் தோல்வி அடைந்தால் அருச்சுனன் நம்மை மிகவும் நிந்திப்பான். துரோணருடை ய சேனையை உடைக்க மற்ற வீரர்க ளால் முடியவில்லை. நீ ஒருவன்தான் அதைச் செய்ய முடியும். துரோணருடைய சேனையைத் தாக்குவாயாக!” என்றான். 

“நான் சென்று இந்த வியூகத்தில் பிரவேசிப்பேன். சந்தேக மில்லை. ஆனால் பிரவேசித்த பின் ஏதேனும் ஆபத்து நேரிட்டால் வெளியே வருவதற்கு நான் சக்தியற்றவன்” என்றான் அபிமன்யு. 

“வீரனே! வியூகத்தை உடைத்து நீ பிரவேசி நீ நுழைந்து செல்லும் வழியில் நாங்கள் உன்னைத் தொடர்ந்து செல்வோம். நீ வியூகத்தைப் பிளந்து உள்ளே தைரியமாகச் செல். பின்னா ல் நா கள் அனைவரும் உனக்குத் துணையாக இருப்போம்” எ ன் று இவ் வாறு தருமபுத்திரன் சொல்லியதை ஒட்டி பீமசேன்னு ம் உன் னைப் பின்தொடர்ந்து நான் வருவேன். திருஷ்டத்யும்னனும் சாத்ய கியும் பாஞ்சாலர்களும் கேகயகர்களும் மச்சதேசத்துப் படையும் உன்னைப் பின் தொடர்ந்தே பிரவேசிப்பார்கள். வியூகத்தை ஒரு முறை நீ உடைத்து விட்டால் நாம் கௌரவ சேனையைத் துவம்சம் செய்து விடுவோம்” என்றான். 

“என் பராக்கிரமத்தைக் காட்டி மாமனுக்கும் பிதாவுக்கும் பிரீதியை உண்டு பண்ணுவேன்’ என்று அபிமன்யு கண்ணனையும் தனஞ்சயனையும் நினைத்துக்கொண்டு உறசாகத்தோடு சொன்னான். 

“உன் பலம் வளர்க !” என்று யுதிஷ்டிரனும் ஆசீர்வதித்தான்.  

“சுமித்திரனே! அதோ! சீக்கிரமாகக் குதிரைகளைத் துரோண ருடைய தேர்க் கொடி காணப்படும் இடத்துக்குச் செலுத்து என்றான் அபிமன்யு தன் சாரதியைப் பார்த்து. அவனும் ஓட்டினான். 

“போ! போ” என்று மேலும் மேலும் தூண்டினான். சாரதி வணக்கமாக ஆயுஷ்மன்! யுதிஷ்டிரர் உன் பேரில் வை திருப்பது மிகவும் பெரிய பாரம். ஒரு கணம் யோசித்துப் பிறகு வியூகத்தில் பிரவேசிப்பாயாக! துரோணர் சிறந்த அஸ்திரப்பயிற்சி பெற்ற சமர்த்தர்; பலசாலி; நீயோ அனுபவம் பெறாத பாலன்’ என்றான். 

அபிமன்யு சிரித்தான். “கிருஷ்ணனை மாமனாகவும் அருச்சுன னைத் தந்தையாகவும் பெற்ற என்னிடம் பயம் என்கிற பேய் அணுகி வராது. இந்தச் சத்துருக்கள் என்னுடைய பலத்தில் பதினாறி லொன்று இருக்க மாட்டார்கள். வேகமாகத் துரோணருடைய சேனையைக் குறித்து ரதத்தைச் செலுத்து. தயங்கவேண்டாம்” என்று கட்டளையிட்டான். சாரதியும் அப்படியே ஓட்டினான். 

மூன்று வயதுள்ள இளங் குதிரைகள் பூட்டிய பொன்மய மான தேர் மிக்க வேகமாகச் சென்றது. கெளரவ சேனை அபிமன்யு வந்தான்! வந்தான்!’ என்று ஆரவாரித்தது. பாண்டவர்க ளும் அபிமன்யு சென்ற வழியைப் பின் தொடர்ந்து சென்றார்கள். கோங்கு மரத் துவஜத்தைக்கொண்’ அபிமன்யுவின் தேர் தங் களை நோக்கி மிக வேகமாக வரும்போது கௌரவப்படையிலுள்ள வீரர்கள் இவன் அருச்சுனனைக்காட்டிலும் மேலான சூரன்’ என்று எண்ணி மனம் பதைத்தார்கள். யானைகளை எதிர்க்கச் சிம்மக் குட்டி செல்வது போல் அபிமன்யு சென்றான். சமுத்திரத்தில் கங் காப் பிரவாகம் சேர்ந்து உண்டாகும் சுழல் போல் கெளரவப்படை யில் ஒரு முகூர்த்த காலம் சுழல் உண்டாயிற்று. துரோணர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வியூகம் உடைந்தது. அபிமன்யு உள்ளே பிரவேசித்து விட்டான். 

கௌரவ வீரர்கள் நெருப்பில் விட்டிற் பூச்சிகள் வீழ்வது போல் அபிமன்யுவை எதிர்த்து ஒருவர் பின் ஒருவராக வீழ்ந்து மாண்டார்கள். எதிர்த்து நின்ற வீரர்களையெல்லாம் தாக்கிப் பால வீரன் அஸ்திரப் பிரயோகம் செய்து கவசங்களிலுள்ள மர்ம ஸ்தானங்களை நன்றாக அறிந்து பிளந்தான். யாகபூமியில் தருப்பைப் புல் பரப்புவதைப் போல் அபிமன்யுவானவன் வீழ்த்தப்பட்ட வீரர் களால் யுத்த களத்தைப் பரப்பி மூடினான். எங்கு கண்டாலும் விற் கள், அம்புகள், கத்திகள், கேடயங்கள், அங்குசங்கள், கடிவாளங் கள், தேர் மரங்கள், கோடாலிகள், கதைகள், ஈட்டிகள், சாட்டை கள், சங்கங்கள் சிதறிக் கிடந்தன. கைகளும் தலைகளும் சரீரத் துண் டங்களும் அறுபட்டுக் கிடந்து பூமியை மண் தெரியாமல் மூடின. 

அபிமன்யுவினால் ஏற்பட்ட நாசத்தைக் கண்டு துரியோதனன் மிகுந்த கோபங் கொண்டு தானே சென்று அபிமன்யுவை எதிர்த் தான். அபிமன்யுவை எதிர்க்க அரசனே சென்றான் என்பதை யறி ந்து துரோணர் துரியோதனனை நான்கு பக்கங்களிலும் காப்பாற் றுங்கள் என்று பல வீரர்களைத் துணைக்கு அனுப்பினார். கொஞ்ச நேரம் சண்டை நடந்தது. பிறகு துரியோதனனைக் கஷ்டப்பட்டு விடுவித்தார்கள். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே என்று அபிமன்யு வருத்தப்பட்டான். அரசனுடைய துணைக்கு வந்த மகாரதர்களைப் புறங்காட்டி ஓடும்படி செய்தான். 

அதன் மேல் யுத்த தருமத்தையும் வெட்கத்தையும் விட்டுப் பல வீரர்கள் ஒன்று கூடித் தனியாய் நின்ற பாலனைச் சூழ்ந்து கொண்டு ஒரே சமயத்தில் தாக்கினார்கள். பொங்கி வரும் சமுத்திரத்தையும் உணற் கரையானது தடுப்பது போல் அருச்சுன அடைய குமாரன் அவர்களை யெல்லாம் தடுத்து நின்றான். துரோ ர், அசுவத்தாமன், கிருபர்,கர்ணன்,சகுனி, சல்லியன் முதலிய பெரும் தளகர்த்தர்கள் எல்லோருமே ரதங்களிலிருந்து கொண்டு அபிமன்யுவைத் தாக்கினார்கள். அசுமகன் என்ற ராஜன் ஒருவன் தன் ரதத்தை மாய வேகமாக ஓட்டி அபிமன்யுவின் பேரில் பாய்ந் தான். அபிமன்யு சிரித்துக்கொண்டு அந்தப் பாய்ச்சலைத் தாங்கிப் பாணங்களால் அவனை வதம் செய்தான். பிறகு கர்ணனுடைய கவ சத்தைப் பிளந்து புகழ் பெற்ற சூரிய குமாரனும் திணறும்படியான பாணப் பிரயோகம் செய்தான். இன்னும் இவ்வாறே பிரபலமான பல வீரர்கள் அடிபட்டுப் புறங் காட்டினார்கள். அநேகம் பேர் மாண்டார்கள். சல்லியன் நன்றாக அடிபட்டுத் தேரில் மூர்ச்சை யடைந்து உட்கார்ந்தான். சல்லியனுடைய தம்பி இதைக் கண்டு அபிமன்யுவை மெய்ம்மறந்த வேகத்தில் எதிர்த்தான். ஆனால் அருச் சுன குமாரன் அவனுடைய தேரைப் பொடி பொடியாக்கி இருந்த டம் தெரியாதபடி செய்து அவனையும் வதம் செய்தான். இவ் வாறு மாமன் வாசுதேவனிடமும் தந்தை அருச்சுனனிடமும் கற்ற அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து பகைவர்களை மாய்த்த பால வீரனுடைய சௌர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பார்த்து சந்தோஷத்தினால் துரோணாசாரியருடைய கண்கள் மலர்ந்தன” என்கிறார் முனிவர். 

“இந்த அபிமன்யுவுக்கு நிகர் யாருமில்லை” என்று கிருபரி டம் துரோணர் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த துரி யோதனனுக்குப் பொறுக்க முடியாத கோபம் பொங்கிற்று. 

“ஆச்சாரியர் அருச்சுனனிடம் வைத்திருக்கும் அன்பினால் அவனுடைய மகனைப் புகழ்ந்து கொண்டு அவனைக் கொல் லாமலிருக்கிறார். உண்மையில் அவனை அடக்கவேண்டும் என்று இவர் எண்ணினால் அது முடியாத காரியமா? என்றான். அதர்ம யுத்தத்தில் பிரவேசித்த துரியோதனனை இவ்வாறு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டுப் பரிதபிக்கச் செய்தது. 

துச்சாதனன் “இந்த மூடப் பையனை நான் கொன்று தீர்த்து விடுகிறேன்” என்று சொல்லிச் சிம்மநாதம் செய்து அபிமன்யு வைத் தாக்கினான்; 

துச்சாதனனும் அபிமன்யுவும் தங்களுடைய தேர்களை நானா வித மண்டலகாரங்களில் செலுத்தி வெகு நேரம் போர் செய்தார் கள். முடிவில் துச்சாதனன் அடிபட்டு மூர்ச்சையடைந்து சாய்ந் தான். துச்சாதனனுடைய சாரதி இதைக் கண்டு விரைவில் தேரை ரணகளத்தினின்று விலக்கிச் செலுத்தினான். பலசாலியான துச்சாதனனுடைய தோல்வியைக் கண்டு பாண்டவ சேனை சந்தோஷமடைந்து முழக்கம் செய்தது.


அதன் பின் அபிமன்யு கர்ணனால் தாக்கப்பட்டு மிகவும் பீடிக் கப்பட்டான். ஆயினும் சுபத்திராபுத்திரன் பரபரப்பில்லாமல் ஒரு பாணத்தைச் செலுத்திக் கர்ணனுடைய வில்லை அறுத்துப் பூமி யில் விழும்படி செய்தான். இதைப் பார்த்துக் கர்ணனுடைய சகோதரன் அபிமன்யுவை எதிரத்தான். அடுத்த கணம் அபிமன்யு செலுத்திய அம்பினால் அவனுடைய தலை அறுபட்டுக் கீழே உ ருண்ட து. அதன் மேல் அபிமன்யு கர்ணனையும் பலமாகத் தாக்கி அவனையும் அவன் சேனைக் கூட்டத்தையும் புறங்காட்டி ஓடச் செய்தான். இதைக் கண்டதும் கௌரவ சேனை ஒழுங் கிழந்தது. “நில்லுங்கள், நில்லுங்கள்” என்று துரோணர் எவ்வளவு சொல்லியும் நிற்காமல் கலைந்தது. ஓடாமல் நின்றவர்களை உலர்ந்த காட்டில் வைக்கப்பட்ட நெருப்பைப்போல் அபிமன்யு நாசம் செய்தான். 

அபிமன்யு வதம் 

தாங்கள் தீர்மானித்திருந்தபடி அபிமன்யு வியூகத்தை உடைத்த பாகத்தில் அவனைப் பின் தொடர்ந்து பாண்டவர்கள் நுழையப் போனார்கள். தை கண்டு திருதராஷ்டிரனுடைய மருமகனும் மகா பராக்கிரமசாலியும் சிந்து தேசத்து ராஜனுமான ஜயத்ரதன் பள்ளத்தாக்கில் யானை இறங்குவது போல பாண்டவர்கள் மேல் படையுடன் பாய்ந்தான். அவனுடைய தைரியத்தையும் சமயத் துக்குத் தகுந்தபடி யோசித்துச் செய்த சாதுர்யத்தையும் பார்த்த கௌரவ சேனை மணபடியும் தைரியம் கொண்ட து ஜயத்ரதன் பாண்டவர்களைத் தடுத்த இடத்தில் படை வீரர்கள் பலமாகக் கூடி னார்கள். வியூகத்தின் பிளவு மறுபடி மூடப்பட்டது. சிந்து ராஜ னுடைய வெள்ளிப் பன்றிக் கொடியைப்பார்த்துக் கௌரவ சேனை உற்சாகமடைந்தது. அபிமன்யுவினால் உண்டாக்கப்பட்ட வியூக உடைப்பு அடைக்கப்பட்டு மறுபடி நன்றாக ஒன்று சேர்ந்து பூர்த்தி செய்யப்பட்டது 

யுதிஷ்டிரன் ஒரு பல்லத்தைப் பிரயோகித்து ஜயத்ரதனு டைய வில்லை அறுத்தான். கண்கொட்டுவற்குள் அவன் வேறு ஒரு வில்லை எடுத்துப் பத்துப் பாணங்களைத் தருமபுத்திரன் மேல் வீசி ன்.பீமசேனன் ஜயத்ரதனுடைய வில்லையும் தேரின் கொடிகுடை எல்லாவற்றையும் பாணங்களால் நாசம் செய்து பூமியில் தள்ளி னான். சிந்து ராஜன் தயங்காமல் மறுபடியும் வேறு வில்லை எடுத்துப் பீமனுடைய வில்லை அறுத்து தள்ளினான். பீமனுடைய தேர்க் குதிரைகளையும் வீழ்த்தினான். பீமசேனன் த தேரினின்று இறங்கி சாத்யகியின் தேரில் ஏற வேண்டியதாயிற்றும் 

இவ்வாறு ஜயத்ரதன் மிகுந்த சாமர்த்தியமாக வியூக உடைப்பை உடனே அடைத்து விட்டுப் பாண்டவர்கள் உள்ளே நுழையாமல் செய்து விட்டான். உடனே அபிமன்யு சகாயமற்று நின்றான். 


கௌரவ சேனைக்குள் புகுந்த சுபத்திரா புத்திரன் தன்னை எதிர்த்த வீரர்களையெல்லாம் வீழ்த்தினான். தனியாக நின்ற அவனை எதிர்க்க வந்தவர்கள் அனைவரும் சமுத்திரத்தில் புகுந்த நதிகளைப் போல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தார்கள். துரியோதன் னுடைய குமாரன் லட்சுமணன் என்பவன் மிகவும் காந்தியும் வீர மும் கொண்ட பாலன். அனைவரும் பின் வாங்கிய போது பயமின்றி அபிமன்யுவை எதிர்க்க வந்தான் இதைக் கண்டவுடன் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்த பல கௌரவ வீரர்கள் திரு ம்பி வந்து துரியோதனனுடைய குமாரனுக்குச் சகாயமாக நின்று போர் புரிந்தார்கள். மலை மேல் மழை பெய்வது போல் அபிமன்யு வின் பேரில் அம்புகளைப் பொழிந்தார்கள். 

துரியோதனனுடைய மகன் லக்ஷ்மணன் மிக்க பராக்கிரமத்து டன் போர் புரிந்தான். முடிவில் சுபத்திரா குமாரன் எய்த ஒரு பல் லம் சட் டை உரித்த பாம்புபோல் லக்ஷ்மணனைத் தாக்கிற்று அழ கிய மூக்கும் புருவங்களும் பளபளவென்று கூந்தலும் குண்டலங்களும் பொருந்திய அந்த வீரன் இறந்து வீழ்ந்தான். 

“ஆ!” என்று கெளரவ சேனையில் துயரச் சத்தம் கிளம்பிற்று.  

“இந்தப் பாதகனான அபிமன்யுவைக் கொல்லுங்கள்’ என்று துரியோதனன் உரக்கக் கத்தினான். 

துரோணர், கிருபர், கர்ணன், அசுவத்தாமன், பிருஹத்பலன், ருதவர்மன் ஆகிய ஆறு மகாரதர்களும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டார்கள். 

துரோணர் கர்ணனை நெருங்கி “இவனுடைய கவசத்தை உடைக்க முடியாது. சரியாகக் குறி பார்த்துக் குதிரைக் கடிவாளங் களை அறுத்து விடு. பின்புறத்திலிருந்து இவன்மேல் ஆயுதப் பிர யோகம் செய்!” என்று சொன்னார். 

சூர்ய குமாரனும் அவ்வாறே செய்தான்; பின்புறத்திலிருந்து விடப்பட்ட அம்புகளால் அபிமன்யுவினுடைய வில் அறுக்கப்பட் டது. குதிரைகளும் சாரதியும் கொல்லப்பட்டு அபிமன்யு தேரிழந்த வனாகவும் வில்லற்றவனாகவும் செய்யப்பட்டான். க்ஷத்திரிய ஸெளர்யத்தின் அவதாரமே போல் அபிமன்யு அந்தச் சமயம் கத்தி யும் கேடயமும் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் அப்போது காட்டிய சாமர்த்தியம் யுத்த களத்திலுள்ள வீரர் களுக்கெல்லாம் வியப்பு உண்டாக்கிற்று. தன்னை ஒன்றுபோல் கூடி எதிர்த்த அனைவரையும் கத்தி சஞ்சாரம் செய்து தாக்கினான். தரையில் கால் வைத்து நிற்காமல் ஆகாயத்தில் பறந்து யுத்தம் செய்பவனைப் போலவே காணப்பட்டான். துரோணர் அபிமன்யு வின் கையிலிருந்த கத்தியை ஒரு பாணத்தால் வெட்டினார். கர்ணன் கூர்மையான அம்புகளைச் செலுத்தி அவன் கேடயத்தைச் சிதற அடித்தான். 

உடனே அபிமன்யு ரதத்தின் சக்கரத்தைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டு சுதர்சனதாரியான மகாவிஷ்ணுவைப் போலவே விளங்கினான். தேர்ச் சக்கரத்திலிருந்த புழுதி அவன் உடல் மேல் படிந்து அவன் சுவாபவமான அழகு இன்னும் அதிக மாகப் பிரகாசித்தது. 

இரண்டாவது ஜனார்த்தனைப் போல அபிமன்யு ஒரு க்ஷண காலம் பயங்கரமாகப் போர் நடத்தினான். பிறகு சேனை முழுவது ம் அவனைத் தாக்கி அவன் கையிலிருந்த தேர்ச் சக்கரம் துண்டு துண் டாகச் செய்யப்பட்ட து. துச்சாதனபுத்திரன் அச்சமயம் கதையை எடுத்துக்கொண்டு அபிமன்யுவைத் தாக்க வந்தான். அபிமன்யு வும் கதாயுதம் எடுத்துக்கொண்டு இருவரும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு போர் துவக்கினார்கள். இருவரும் கீழே விழுந் தார்கள். பிறகு துச்சாதனகுமாரன் முதலில் எழுந்தான். சுபத் திரா குமாரன் எழுந்துகொண்டிருக்கும் சமயத்தில் அவன் தலை யில் துச்சாதனனுடைய குமாரன் கதாயுதத்தால் அடித்தான். பல பேர்களை ஒருவனாக இருந்து எதிர்த்து யுத்தம் செய்த சிரமத்தினால் மயக்கமடைந்திருந்த அபிமன்யு அந்த அடிக்கு இரையாகி உயிரிழந்தான். 

“தாமரை ஓடையை யானை கலக்குவதுபோல் பெரும் கெளரவ சேனையைக் கலக்கிய சுபத்திரா புத்திரனைப் பலர் சேர்ந்து கொண்டு இவ்வாறு கொன்றார்கள்”. என்று சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான். ‘அவ்வாறு கொல்லப்பட்ட அபிமன்யுவை உம்மைச் சேர்ந்தவர்கள் சூழ்ந்துகொண்டு காட்டு வேடர் களைப் போல் கூத்தாடிச் சந்தோஷப்பட்டார்கள். உண்மை வீரர்க ளுடைய கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகிற்று. ஆகாயத்தில் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்த பறவைகள் “இது தருமமல்ல! தருமமல்ல! ” என்று அலறிச் சொல்லுவதுபோல் சப்தமிட்டன.” 

கௌரவ வீரர்கள் அபிமன்யு வதத்தைப் பற்றி மகிழ்ச்சிய டைந்து சிம்மநாதம் செய்தார்கள். திருதராஷ்டிரனுடைய மகன் யுயுத்ஸூ மட்டும் மிகுந்த கோபம் கொண்டவனாக து தகாது. யுத்த தருமத்தை அறியாத க்ஷத்திரியர்களே! வெட்கப்படுவதற்கு பதில் சிம்மநாதம் செய்கிறீர்கள். பெரிய அதர்மத்தைச் செய்து விட்டு நெருங்கி நிற்கும் அபாயத்தையும் அறியாமல் மூடர்களைப் போல் சந்தோஷப்படுகிறீர்கள்!” என்று சொல்லி ஆயுதத்தை எறிந்துவிட்டு யுத்தரங்கத்திலிருந்து விலகினான். யுயுத்ஸூ தர்மத் துக்குப் பயந்தவன். அவன் பேச்சு கௌரவரர்களுக்குப் பிடிக்க வில்லை! 

புத்திர சோகம் 

“துரோணரையும் அசுவத்தாமனையும் துரியோதனனையும் யுத்தத்தில் ஜெயித்துப் பகைவரின் கூட்டங்களை எரித்த வீரன் தீர்க்க சயனத்தை அடைந்து விட்டான். துச்சாதனனைப் புறங் காட்டி ஓடச் செய்த சூரனே! நீ இறந்து விட்டாயா? எனக்கு இனி என்னத்திற்காக வெற்றி! என்னத்திற்காக ராஜ்யம்? அருச் சுன்னு க் கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்? கன்றை ழந்த பசுவைப்போல், புத்திரனைக் காணாமல் துக்கப்படும் சுபத் திரைக்கு என்ன சமாதானம் சொல்வேன். அர்த்தமில்லாத வார்த்தைகளை எப்படிச் சொல்லுவேன்? பேராசை கொண்டவ னுக்கு மதி அழிந்து போகிறது. தேனுக்கு ஆசைப்பட்டுக் கீழே ருக்கும் பெரும் பள்ளத்தைப் பாராமல் நாசம் அடைவரை ப் போல வெற்றிக்கு ஆசைப்பட்டு, சுகங்களுக்குரிய பாலனை அன்புக்குரிய குழந்தையை யுத்தத்தில் முன்னால் தள்ளினேன். என்னைப் போன்ற மூடன் உலகத்தில் இல்லை. அருச்சுனன் இல்லாத சமயத்தில் அவனுடைய அருமைப் புதல்வனைக் காப்பாற்றாமல் கொன்றவனானேன்”. 

இவ்வாறு பாசறையில் யுதிஷ்டிரன் புலம்பினான். சுற்றி உட் கார்ந்திருந்த வீரர்கள் அபிமன்யுவின் சௌரியத்தையே தியானித் தவர்களாகப் பேச்சில்லாமல் இருந்தார்கள். பொறுக்க முடியாத துக்கம் மேலிட்டு யுதிஷ்டிரன் தவித்துக்கொண்டிருந்த சமயங்க ளில் பாண்டவர்களுக்கு ஆசாரியரும் பிதாமகருமான வியாசர் பிர ஸன்னமாகி ஆறுதல் சொல்லுவது வழக்கம். இந்தச் சமயமும் வந்தார். 

யுதிஷ்டிரன் அவரைப் பூஜை செய்து ஆசன்த்தில் இருத்தி மனத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள எவ்வளவு முயன்றாலும் என் னால் முடியவில்லை” என்று அவரிடம் சொன்னான். 

மிகுந்த புத்திமானும் சாஸ்திரங்கள் எல்லாம் படித்தவனு மான நீ இவ்வாறு மதிமயங்கிச் சோகத்துக்கு இரையாகக் கூடா மிருத்யுவின் தன்மை உனக்குத் தெரியாதா! பாமரர்களைப் போல் நீயும் சோகத்துக்கு இரையாகித் திகைக்கலாகாது’ என்று வியா சர் தருமபுத்திரனைச் சமாதானப்படுத்தினார். 

“உலகத்தைச் சிருஷ்டித்து ஜீவ கோடிகளை உண்டாக்கிய பிரமன் வளர்ந்துகொண்டே போகும் பூபாரத்தைக் கண்டு தற்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டான். பெருகிக்கொண்டே போகும் உயிர்ச் சமூகத்தை எவ்வாறு தடுப்பது என்று யோசித்து ஒரு வழியும் தோன்றாமல் பிரம்மனுடைய உள்ளத்தில் கவலை ஏற்பட்டது. அந்தக் கவலையின் வேகம் ஒரு பெரும் சுவாலையாகக் கிளம்பி உலகத்தை ஒரே அடியாக நாசம் செய்வது போல் எழுந்தது. அதன் பின் உலகம் அழிந்து போகும் என்று ருத்திரன் வந்து வேண்டிக்கொள்ள பிரமன் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டான். அடங்கிய கோபாக்னி மரணம் என்ற சாந்த உருவம் கொண்டு உலகத்தின் பிறப்பும் இறப்பும் சமமாவதற்கு வியாதியும் விபத்து க் களுமாக மக்கள் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பாகமாகவே வேலை செய்து வருகிறது. மரணம் என்பது உலக நன்மைக்காகவே ஏற்படு ஒரு ஒழுங்கு. மரணத் தைக் கண்டு யாரும் துக்கப்படலாகாது. இறந்தவர்களைக் கண்டு பரிதாபப்படுவதற்குக் காரணமேயில்லை. உயிருடன் இருப்பவர். களைட்பற்றியே துக்கிக்க வேண்டும்” என்று பூர்வ கதைகளையும் திசாசங்களையும் தத்துவ விளக்கமும் சொல்லிப் பிதாமகரான கிருஷ்ணத் துவைபாயன ரிஷி யுதிஷ்டிரனைத் தேற்றினார். 

“உலகத்தில் மிக மேன்மை பெற்றுப் பாக்கியமும் மங்களமும் அடைந்தவர்கள் எல்லோருமே மாண்டார்கள் என்பது உனக்குத் தெரியாதா? மருத்தன்,சுஹோதரன், அங்கன், சிபி, ஸ்ரீராமன், பகீ ரதன், திலீபன், மாந்தாதா,யயாதி, அம்பரீஷன், சசிபிந்து, கயன், ரந்திதேவன், பரதன், பிருது, பரசுராமன், புகழ் பெற்ற இந்தப் பதினாறு சக்ரவர்த்திகளும் கடை சியில் மரணத்தை அடைந்தார் கள் அல்லவா? நீ உன் புத்திரனைப் பற்றித் துக்கப்பட வேண்டாம். கால விளம்பமில்லாமல் சுவர்க்கத்தை அடைந்தவன் விஷயத்தில் துக்கித்தலே தகாது. துக்கப்படுகிறவனுக்குத் துக்கமே வளரும். விவேகியானவன் சோகத்தை விட்டுக் கடமைகளைச் செய்து நற் பேறு அடைய முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு தருமபுத்திர னுக்குச் சொல்லி வியாசர் மறைந்தார். 

தனஞ்சயனும் கிருஷ்ணனும் சம்சப்தகர்களோடு போர் புரிந்து அவர்களை வதம் செய்து விட்டுப் பாசறையை நோக்கிச் சென்றார்கள். 

“கோவிந்தா! என்ன காரணமோ தெரியவில்லை. என் மனம் கலக்கம் அடைந்திருக்கிறது. பேச்சுத் தடுமாறுகிறது. காரணமில் லாமல் உள்ளத்தில் துக்கமாக இருக்கிறது. யுதிஷ்டிரர் க்ஷேமமாக இருப்பாரா? அவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டு விட்டதோ?” என்றான் தனஞ்சயன். 

வாசுதேவன் “தருமபுத்திரர் தம்பிமார்களுடன் க்ஷேமமா கவே இருப்பார். நீ கவலைப்படாதே” என்றான். 

வழியில் சந்தியா காலத்துக் கடமைகளைச் செய்து விட்டுத் தேர் ஏறித் தம்மவர்கள் தங்கியிருந்த இடம் சென்றார்கள். பாச றையை நெருங்க, நெருங்க அருச்சுனனுக்குச் சந்தேகம் அதிகரித்தது. 

“ஜனார்த்தனா! வழக்கம் போல் மங்கள வாத்தியம் ஏதும் காதில் விழவில்லை. எதிரில் காணப்படும் யுத்த வீரர்கள் தூரத்தி லிருந்து என்னைப் பார்த்து விட்டுத் தலை குனிந்து திரும்பிப் போகி றார்கள். இது விபரீதமாக இருக்கிறது. மாதவா! சகோதரர்கள் க்ஷேமமாக இருப்பார்களா? என் மனம் தெளிவுபடவில்லை. அபிமன்யு தன் சகோதரர்களுடன் ஏன் சிரித்துக்கொண்டு என்னை இன்று எதிர்கொண்டு வரவில்லை?” என்றான். 

இவ்வாறு பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். 

“ஏன் அனைவரும் முகத்தில் தெளிவில்லாமல் துக்கமாக இருக்கிறீர்கள்? அபிமன்யுவையும் இங்கே காணவில்லை. ஏன் ஒருவரும் என்னைக் கண்டு சந்தோஷமாகப் பேசவில்லை? துரோணர் பத்ம வியூகம் வகுத்தார் என்று கேள்விப்பட்டேன். * சௌபத்திரனைத் தவிர அதை உடைத்துப் பிரவேசிக்கத் தெரிந்தவன் உ ங்களுள் ஒரு வனும் இல்லை! அபிமன்யு அந்த வியூகத்தைப் பிளந்து உள்ளே சென்றானா? உள்ளிருந்து வெளிவருவதை நான் அவனுக்கு உபதேசிக்கவில்லை. அவன் கொல்லப்பட்டானா?” என்று நடந்த விஷயத்தைத் தானாகவே ஊகித்து விட்டுக் கேட்டான். 

விஷயம் அறிந்ததும் “ஐயோ! என் குழந்தை யமனுக்கு அதிதியாகி விட்டானா? யுதிஷ்டிரரும் பீமசேனனும் திருஷ்டத்யும் னனும பராக்கிரமசாலியான சாத்யகியும் இருக்கையிலேயே சுபத் திரையின் மகனைப் பகைவர்களு க் கு க் காடுத்து விட்டீர்களா? சுபத்திரைக்கு என்ன சமாதானம் நான் சொல்லுவேன்! உத் தரைக்கு யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?” என்று அருச்சுனன் புலம்பினான். 

புத்திரசோகத்தால் தவிக்கும் வீரனுக்கு வாசுதேவன் “அப்பனே! நீ இவ்வாறு துக்கித்தல் ஆகாது. க்ஷத்திரியர்களாகப் பிறந்த நமக்கு ஆயுதங்களே உயிர். ஆயுதங்களே மரணம். யுத்தத்தில் பின்வாங்காத சூரர்களுக்கு எப்போதும் மிருத்யுவானவன் கூடவே இருக்கும் நண்பன். சூரர்களுக்கு அகால மரணம் ஏற்படுவது சகஜா மல்லவா? புண்ணியம் செய்தவர்களுக்குரிய மேலுலகத்தை அபி மன்யு அடைந்தான். யுத்தத்தில் மரணத்தை அடைய வேண்டும் என்று வீரர்கள் விரும்பி ஆசைப்படுகிறார்கள் அல்லவா? அபிமன் அடைந்த மரணம் க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட சனாதன லட் சியம். நீ அதிகமாகத் துக்கப்பட்டால் உன் சகோதரர்களும் மற்ற அரசர்களு ம் மன நிலை இழப்பார்கள். மற்றவர்களுக்குச் சமாதா னமும் தைரியமும் வழங்குவாயாக, சோகத்தை நீக்கு!” என்றான் மாதவன். 

வீரனான மகன் இறந்த முழுக் கதையைச் சொல்ல வேண்டும் என்று தனஞ்சயன் கேட்க யுதிஷ்டிரன் சொன்னான். 

”பத்ம வியூகத்தைப் பிளந்து எங்களுக்கும் வழி உண்டு பண் ணினாயானால் நாங்களும் உன்னை தொடர்ந்து உள்ளே புகுவோம்; உன்னைத் தவிர இந்த வியூகத்தை உடை க்கத் தெரிந்தவாகள் யாரும் இல்லை. உன் தந்தைக்கும் மாமனுக்கும் பிரியமான காரி யத்தைச் செய்வாயாக” என்று நான் அபிமன்யுவை ஏவினேன். உடைக்க முடியாத அந்த வியூகத்தைப் பிளந்து வழி செய் து கொண்டு உள்ளே பால வீரன் பிரவேசித்தான். முன்னால் தீர்மானித்திருந்தபடி நாங்கள் அவனைத் தொடர்ந்து சென்றோம்.! பாதகனான ஜயத்ரதன் தடுத்து விட்டான். பிளக்கப்பட்ட வியூகம் மறுபடி அடைக்கப்பட்டு விட்டது. நாங்கள் உள்ளே போக முடி யாதபடி சைந்தவன் செய்து விட்டான். க்ஷத்திரிய தர்மத்துக்கு விரோதமாக மகாரதர்கள் பலர் ஒன்று சேர்ந்து சூழ்ந்துகொண்டு தனியாக நின்ற அபிமன்யுவைக் கொன்றார்கள். 

நடந்ததையெல்லாம் இவ்வாறு யுதிஷ்டிரன் சொன்னான். 

“ஆ புத்திரனே! ” என்று கதறி அருச்சுனன் பூமியில் விழுந் தான். மூர்ச்சை தெளிந்த பின் எழுந்து என் மகன் மாய்வதற்குக் காரணமான ஜயத்ரதனை நாளைய தினம் கொல்லப் போகிறேன். யுத்தகளத்தில் அவனைக்காக்கத் துரோணரும் கிருபரும் வந்தாலும் ஆசாரியர்களான அவர்களையும் அம்புகளுக்கு இரையாக்குவேன். இது என் பிரதிக்ஞை!” என்று சொல்லிக் காணடீபத்தை டங்காரம் பண்ணினான். கண்ணன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். 

பீமசேனன் “இந்த டங்காரமும் இந்தச் சங்கின்லியும் தார்த்தராஷ்டர்களுடைய நாசத்தின ஒலியேயாகும்” என்றான்! 

சிந்து ராஜன் 

அபிமன்யுவின் வதத்துக் காரணமாயிருந்த ஸைந்தவராஜனை அடுத்த நாள் சூரியாஸ்தமனத்துக்குள் கொல்லப் போகிறேன் என்று அருச்சுனன் பிரதிக்ஞை செய்தது சாரணர்களால் துரியோதனனுடைய கூட்டத்திற்குத் தெரிந்தது. 

விருத்த க்ஷத்திரன் என்பவன் பிரசித்தி பெற்ற சிந்துராஜன்: பெரும் தவம் செய்து ஜயத்ரதனைப் புத்திரனாக அடைந்தான். குழந்தை பிறந்தபொழுது அசரீரி ‘இந்த ராஜகுமாரன் புகழ் பெற்று விளங்குவான். உலகத்தில் எக்காலத்திலும் சூரர்களால் கொண்டாடப்பட்ட க்ஷத்திரிய சிரேஷ்டன் ஒருவனால் இவன் தலை வெட்டுண்டு தேக வியோகம் அடைந்து மேலுலகம் சேருவான்’ என்று சொல்லிற்று. 

பிறந்த உயிர்களெல்லாம் இறக்க வேண்டும் என்று தெரிந் ருந்தபோதிலும் அறிவாளிகளுக்கும் தவம் செய்து ஞானம் பெற் றவர்களுக்கும் கூட மரணமானது துக்கத்தை விளைவிக்கிறது. விரு த்த க்ஷத்திரன் புதல்வனுடைய மரணத்தைப் பற்றி அசரீரி சொன் னதைக் கேட்டு மிகவும் துயரப்பட்டான். இந்த வாக்கு உண் மையாயின் என் மகன் த லையை எவன் பூமியில் தள்ளுவானோ அவன்தலையும் அந்தச் சமயம் சுக்கு நூறாக வெடித்துச் சாக வேண்டும்” என்று சாபமிட்டான். 

ஜயத்ரதனுக்கு வயது வந்ததும் அவனை அரசனாக அமைத்து விட்டு விருத்த க்ஷத்திரன் நாட்டை ட்டு விலகித் தவத்தில் தன் வாழ்நாளைக் கழித்து வந்தான். குருக்ஷேத்திரம் என்று பின்னால் புகழ் பெற்ற “சியமந்த பஞ்சகம்” என்கிற மைதானத்திற்கு அருகில் ஒரு ஆசிரமத்தில் இருந்து வந்தான். 

அருச்சுனனுடைய பிரதிக்ஞையைப் பற்றி கேட்டதும் தன் முடிவு அசரீரி வாக்கின்படி வந்து விட்டதோ என்று ஜயத்ரதன் சந்தேகப்பட்டுத் துரியோதனனிடம் சென்று ”எனக்கு இனி இந்த யுத்தம் வேண்டாம். நான் என்னுடைய நாட்டுக்குப் போகிறேன்” என்றான். 

“ஸைந்தவனே! நீ அஞ்ச வேண்டாம். இத்தனை க்ஷத்திரிய வீரர்களும் நின்று உன்னைக் காப்பாற்றுவார்கள். கர்ணன், சித்திர சேனன், விவிம்சதி, பூரிசிவரசு, சல்லியன், விருஷசேனன் புருமித்திரன், ஐயன், போஜன், காம்போஜன். கதட் சிணன், சத்திய விரதன், விகர்ணன், துர்முகன், துச்சாதனன், சுபாஹு, காளிங்கன், அவந்தி ராஜாக்கள், துரோணர், துரோண புத்திரர், சகுனி இவ்வளவு பேர்களும் நானும் இருக்க நீ போவது சரியாகாது. என்னுடைய முழுச் சேனையும் உன் காப்புக்காகக் கட்டளையிடப்படும். நீ இந்தச் சமயம் விலகிப்போக வேண்டாம்” என்று துரியோதனன் வற்புறுத்த ஜயத்ரதனும் ஒப்புக்கொண்டான். 

துரோணரிடம் சென்று ஜயத்ரதன் குரு வே! எனக்கும் அருச்சுனனுக்கும் நீ ஆச்சாரியராக இருந்தீர். எங்களுக்குச் சிட்சை யில் என்ன தாரதம்யம் கண்டீர்” என்று கேட்டான். 

“அப்பா! உனக்கும் அருச்சுனனுக்கும் நான் பேதமின்றி ஆச் சார்யக் கடமைகளைச் செய்தேன். சிட்சை ஒன்றே யாயினும் அப்பி யாசத்தினாலும் கஷ்டமான தவத்தாலும் உன்னைக் காட்டிலும் ச்சுனன் மேலானவன். ஆயினும் பயப்பட வேண்டாம். அருச்சு னனால் தாண்ட முடியாத வியூகத்தை வகுத்து அதற்குப் பின்புற மாக உன்னை வைப்போம். உன் மூதாதைகளின் தருமத்தை அனு சரித்து யுத்தம் செய். நாம் எல்லோருமே ஏதோ ஒரு வரிசைக்கிர மப்படி யமனால் தொடரப்பட்டவர்களாகப் பரலோகம் போவோம் அல்லவா? தபஸ்விகள் அடையும் லோகத்தை க்ஷத்திரியன் சுலபமா கவே யுத்தத்தில் அடைவான். அவ்வளவேயன்றோ! பயத்தைவிடு” என்றார். 

விடிந்ததும் ஆயுதம் தரித்தவர்களில் சிறந்தவரான துரோ ணர் சேனையை அணிவகுத்தார். ஜயத்ரதனும் அவனுக்குக் காப் பாகப் பூரிசிரவசும் கர்ணனும் அசுவத்தாமனும் சல்லியன் விருஷ சேனன் கிருபர் இவர்களும் எல்லாவிதப் படைகளுடனும் பன்னிரண்டு மைல் தூரத்தில் பின்னால் விலகி நின்றார்கள். அதற்கும் பாண்டவ சேனைக்கும் இடையில் துரோணர் பெருஞ் சேனையைச் சகட வியூகத்தில் அமைத்தார். சகட வியூகத்துக்கப்பால் பத்ம வடிவத்தில் உள் வியூகம் ஒன்று ஏற்படுத்தினார். அந்தப் பத்ம வியூகத்துக்கும் அப்பால் ஊசி முக வியூகம் வகுத்தார். அந்த ஊசி முக வி யூகத்தின் காப்பில் ஜயத்ரதன் நின்றான். சகட வியூகத்தின் முகத்தில் துரோணர் நின்றார். வெண்ணிற கவசமும் வஸ்திரமும் தலைகாப்பும் தரித்து நின்ற துரோணர் மிகவும் பிரகாசித்தார். சிகப்பு நிறக் குதிரைகள் பூட்டிய அவருடைய ரதத்தின் துவஜத் தில் யாக வேதிகையும் மான் தோலும் விளங்கின. அது காற்றில் ஆடியதைக் கண்ட கௌரவர்கள் உற்சாகம் கொண்டார்கள். வியூகத்தின் பலத்தைப் பார்த்துத் துரியோதனன் தைரியமடைந் தான். 


ஆயிரம் தேர்களும், நூறு யானைகளும், மூவாயிரம் குதிரைக ளும், பதினாயிரம் காலாட் படைகளும், விற்கள் பிடித்து நின்ற வீரர் கள் ஆயிரத்து ஐந்நூறு பேரும் கூடிய படையுடன் திருதராஷ்டிர புத்திரன் துர்மர்ஷனன் என்பவன் கௌரவ சேனைக்கு முன் நின்று கொண்டு சங்கம் ஊதி அறை கூவினான். 

“யுத்தத்தில் ஜெயிக்க முடியாதவனும் கோபங் கொண்டவனு மான தனஞ்சயன் எங்கே? அவன் எங்கள் மேல் போர் புரிந்து கல் மேல் போடப்பட்ட மண் குடம் போல் உடைபடுவதை உலகம் இப்போது பார்க்கப் போகிறது” என்றான். 

ஒன்றரை அம்புப் பாய்ச்சல் தூரத்தில் அருச்சுனன் தன் தேரை நிறுத்திச் சங்கை ஊதிப் பிரதித் த்வனி செய்தான்.உடனே கௌரவ சேனையிலும் சங்கங்கள் ஊதப்பட்டன. 

“கேசவா! துர்மர்ஷணன் இருக்குமிடத்தை நோக்கித் தேரை நடத்து. அங்கிருக்கும் யானைப் படையை பிளந்து நுழைவோம்” என்றான். 

துர்மர்ஷணனுடைய படை அருச்சுனனால் சிதறடிக்கப்பட் டது. பெருங் காற்றினால் அலைக்கப்பட்ட மேகங்களைப் போல் படை யங்கங்கள் அங்குமிங்கும் பறந்தன. அதைக் கண்டு துச்சாதனன் மிக்க கோபங் கொண்டு பெரிய யானைப் படையுடன் வந்து அருச்சு னனைச் சூழ்ந்து கொண்டான. 

துச்சாதனன் கெட்ட பாபியானாலும் மிக்க பராக்கிரமசாலி. கடுமையாக யுத்தம் நடத்தினான். அருச்சுனனால் வீழ்த்தப்பட்ட யுத்த வீரர்களால் போர்க்களமானது கோரமான காட்சியாயிற்று. துச்சாதனனுடைய சேனை தைரியமிழந்து துன்பமடைந்து புறங் காட்டிற்று. துச்சாதனனும் பின்வாங்கித் துரோணர் நின்ற இடத் துக்குச் சென்றான். 

சவ்யசாசியினுடைய தேரும் விரைவாகத் துரோணருக்கு அருகில் சென்றது. நர சிரேஷ்டரே! புத்திரனை இழந்த துக்கத் தால் பீடிக்கப்பட்டு சிந்து ராஜனை நோக்கி வந்திருக்கிறேன். என் பிரதிக்ஞையை நிறைவேற்ற அனுக்ரப்பீராக!” என்றான் தனஞ்சயன். 

ஆசார்யர் புன்னகை செய்து ”அருச்சுனனே! என்னை ஜெயிக் காமல் ஜயத்ரதனை நீ அடைய முடியாது என்றார். யுத்தம் ஆரம் பித்தது. வில்லை வளைத்து அருச்சுனன் மேல் துரோணர் அம்புக் கூட்டங்களை இறைத்தார். 

பார்த்தனும் அம்புகளால் துரோணரை அடித்தான். அவற் றைத் துரோணர் தம் அம்புகளால் அனாயாசமாகத் தடுத்துவிட்டுக் கிருஷ்ணனையும் அருச்சுனனையும் நெருப்பைப் போல் எரியும் பாணங்களால் பீடித்தார். பாண்டவன் துரோணருடைய வில் லை அறுப்பதற்கு நிச்சயித்தான். அதற்காக அம்பை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே துரோணர் அருச்சுனனுடைய வில்லின் நாணை அறுத்து விட்டார். பிறகு சிரித்துக்கொண்டே அவன்பேரி லும் குதிரைகள் பேரிலும் தேரின் நாலாபக்கமும் அம்புகளைப் பொழிந்தார். அருச்சுனன் கோபங் கொண்டு ஆச்சாரியரை அடக்க வேண்டுமென்று பல பாணங்களை ஒன்றாகத் தொடுத்துப் பிரயோகித்தான். 

துரோணர் ஒரு வினாடியில் சிஷ்யனை மிஞ்சுகிறவராகி அம்புமழையைப் பொழிந்து அருச்சுனனையும் அவன் தேரையும் இருட்டில் மறைத்தார். 

கண்ணன் துரோணருடைய பராக்கிரமத்தைக் கண்டு “பார்த்தனே! கால விளம்பம் கூடாது. துரோணரை விட்டுச் செல்வோம். இந்தப் பிராமணருக்குச் சிரமமென்பதே இல்லை” என்றான். 

அதன் பேரில் கண்ணன் அருச்சுனனுடைய தேரைத் துரோணருக்கு இடது பக்கமாக ஓட்டிச் சேனையை நோக்கிச் சென்றார்கள். 

“எங்கே போகிறாய்? யுத்தத்தில் சத்துருவை ஜயிக்காமல் நீ செல்பவன் அல்லவே! நில், நில்!” என்று துரோணர் சொன்னதற்கு அருச்சுனன், 

“தேவரீர் எனக்கு ஆசாரியர். சத்துருவல்ல! நான் உமக்கு சிஷ்யன். உம்முடைய மகனைப் போன்றவன். உம்மை யுத்தத்தில் மீதா ல்வி அடைவிக்கக் கூடியவன் உலகத்தில் இல்லை’ என்று சொல்லி விட்டு விரைவாகத் துரோணரை விட் விலகிக் கௌரவ சேனையை நோச்சிச் சென்றான். 

அருச்சுனன் போஜ சைன்யத்தில் நுழைந்து கிருதவர்மனை யும் சுதட்சிணனையும் ஒரே சமயத்தில் தாக்கி அவர்களைத் தோல்வி யடையச் செய்து அதன் பேரில் தடுக்க வந்த சுருதாயுதனை எதிர்த் தான். பலமான போர் நடந்தது. சுருதாயுதன் குதிரைகளை இழந் தான். அதன் மேல் அவன் தன் கதாயுதத்தை எடுத்து வீசிக் கண்ணனை அடித்தான். போர் செய்யாதவன்பேரில் அவன் வீசிய கதா யுதம் அவனையே வந்து திரும்பித் தாக்கி அவனைக் கொன்றது. அதற்குக் காரணம் அவன் தாய் பெற்ற வரம். 


சுருதாயுதனுடைய தாயாகிய பர்ணாசை என்பவள் வருணனைப் பார்த்து “என் குமாரன உலகத்தில் சத்துருக்களால் கொல்லப்படா தவனாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டாள். அவள்பால் அன்பு கொண்ட வருணன் உன் புத்திரனுக்கு நான் திவ்யமான ஆயுதத்தைத் தருவேன் அந்த ஆயுதத்தைக் கொண்டு அவன் போர் செய்தால் அவனை யாரும் ஜெயிக்க முடி யாது. ஆனால் யுத்தம் செய்யாதவன் மேல் அந்த ஆயுதத்தைப் பிர யோகிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது பிரயோகித்தவ னையே திரும்பிக் கொல்லும்” என்று சொல்லித் திவ்ய கதாயுதத்தைத் தந்தான். யுத்த வேகத்தில் இந்த வாக்கியத்தை மறந்த கருதாயுதன் கதாயுதத்தைக் கண்ணன் மேல் எறிந்தான். ஜனார்த்தனன் அதைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டான்.மந்திரத் தவறு ஏற்பட்டால் மந்திரவாதியின் வசத்திலிருந்த பிசாசு அவனையே கொல்லுவது போல் அந்தக் கதாயுதம் திரும்பிச் சென்று வீரனான சுருதாயுதனைக் கொன்றது. காற்றால் தள்ளப் பட்ட பெரிய மரத்தைப் போல் பூமியில் விழுந்தான். 

அதன் பிறகு காம்போஜ ராஜனான சுதக்ஷிணன் அருச்சுனனைக் கடுமையாக எதிர்த்தான்.அவனும் தேரிழந்து கவசமுடைந்து மார் பில் அடிபட்டு உற்சவம் முடிந்த பின் கீழே தள்ளப்பட்ட இந்திரத்வஜத்தைப் போல் கைகளை விரித்துக்கொண்டு கீழே விழுந்தான். 

மிக்க வன்மை பொருந்திய வீரர்களான சுருதாயுதனும் காம்போஜனு ம் கொல்லப்பட்டதைக் கண்டு கெளரவச் சேனை குழப்பம் அடை ந்தது. இதைக் கண்ட சுருதாயு அச்சுருதாயு என்ற இரு சகோதரர்களும் பார்த்தனை இருபுறமும் தாக்கினார்கள். 

இந்தக் கடும் போரில் அருச்சுனன் அதிகமாக அடிபட்டுக் கொடி மரத்தில் சாய்ந்தான். கண்ணனால் தேற்றப்பட்டு மறுபடி யுத்தம் துவக்கி, அந்த இரண்டு சகோதரர்களையும் வீழ்த்தினான். அவர்களுடைய ரண்டு குமாரர்களும் யுத்தத்தை விடா மல் தொடர்ந்தார்கள். அவர்களும் அருச்சுனனால் யமாலயம் அனுப்பப்பட்டார்கள். 

இவ்வாறு இன்னும் அநேக வீரர்களை மாய்த்துவிட்டுக் காண் டீபம் ஏந்திய அருச்சுனன் சத்துரு சேனையில் வழியைச் செய்து கொண்டு ஜயத்ரதன் இருந்த இடத்துக்கு வேகமாகச் சென்றான். 

தான் பயிலாத கவச தாரணம் 

அருச்சுனனுடைய வெற்றியைப் பற்றி சஞ்சயன் சொன்ன தைக் கேட்ட திருதராஷ்டிரன் புலம்பினான். சூதனே! சமாதா எத்தை விரும்பி ஜனார்த்தனன் ஹஸ்தினாபுரம் வந்தபோது, இதுவே நல்ல சந்தர்ப்பம்; இதைக் கைவிடாதே. சகோதரர்களு டன் சமாதானம் செய்து கொள். நம்முடைய நன்மையின் பொரு ட்டே கேசவன் வந்திருக்கிறான். அவன் பேச்சை உல்லங்கனம் செய்யாதே” என்றேன். துரியோதனன் என் யோசனையை நிராகரித்து விட்டான். கர்ணன், துச்சாதனன், இவர்கள் சொன்னதே அவனுக்கு இதமாகத் தோன்றிற்று. கால புருஷனால் தூண்டப் பட்டு நாசத்தைத் தேடிக்கொண்டான். துரோணரும் யுத்தம் வேண்டாம் என்றார். பீஷ்மரும் பூரிசிரவசும் கிருபரும் இன்னும் மற்றவர்களும் யுத்தம் வேண்டாம் என்றார்கள். மூர்க்கனான என் மகன் கேட்கவில்லை. பேராசையால் தூண்ட ப்பட்டுக் கெட்ட எண் னமும் கோபமும் நிறைந்த மன நிலையில் சிக்கிக்கொண்டு யுத்ததை வரவழைத்துக்கொண்டான். 

சஞ்சயன் “ஜலம் போன பின் அணை கட்டுவதுபோல் இ பாது நீர் புலம்புவதில் என்ன பயன்? சூதாட்டத்திலிருந்து கு புத்திரனை நீர் முதலிலேயே ஏன் விலக்கவில்லை? அவ்வாறு செய்தி ருந்தால் இந்தப் பெரும் துக்கம் வந்திராது; பிறகும் யுத்தப்பேச்சு நேர்ந்த போதாவது உம்முடைய குமாரனைத் தடுத்திருந்தீரா கில் இந்தத் துக்கம் வந்திராது. பிதாவானவன் செய்ய வேண்டிய கடமையைச் செய்து மகனை அடக்கியிருந்தீராகில் இந்தப் பெரும் துயரம் உம்மைப் பீடித்திருக்காது. புத்திமான்களில் சிறந்தவ ரான நீர் உம்முடைய அறிவைத் தள்ளி விட்டுக் கர்ணன், சகு இவர்களுடைய மூர்க்கத்தனமான யோசனையை அனுசரித்தீர். கேசவனும் யுதிஷ்டிரனும் துரோணரும் இப்போது உம்மை முன் போல் மதிக்கவில்லை. பேராசை கொண்டவர் என்றும் வாயினால் மட்டும் தருமம் பேசுபவர் என்றும் வாசுதேவன் உம்மை அறிந்து கொண்டான். க்ஷத்திரிய தருமத்தின்படி சூரர்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு இப்போது கௌரவர்கள் செய்து வருகிறார்கள். நீர் அவர்களை நிந்திப்பது தகாது. உயிரை அலட்சி யம் பண்ணிப் போர் செய்கிறார்கள். அருச்சுனனும் கிருஷ்ணனும் சாத்யகியும் பீமனும் நடத்தும் யுத்தத்தில் அவர்களை எதிர்த்து நிற்க இவர்களுக்குப் பலம் போதாது.. ஆயினும் எவ்வளவு செய்வதற்குச் சாத்தியமோ அவ்வளவும் உம்முடைய மகன் துரி யோதனன் செய்து வருகிறான். இப்போது அவனை நீர் நிந்திக்க வேண்டாம்” என்றான். 

“அப்பனே சஞ்சயா! நீ சொல்லுவது சரியென்றே ஒப்புக கொள்கிறேன். விதியை யாரும் விலக்க முடியாது. நடந்ததை யெல்லாம் சொல்லு. நல்லதாயினும் சரி, துக்க சமாசாரமாயினும் சரி. எல்லாவற்றையும் நடந்தவாறு சொல்’ என்று துயரத்தில் மூழ்கித் துடித்துக்கொண்டிருந்த கிழ அரசன் சஞ்சயன் சொல்லு வதைக் கேட்கலானான். 


அருச்சுனனுடைய தேர் சிந்து ராஜனை நோக்கிச் செல்வதைப் பார்த்த துரியோதனன் தாங்க முடியாத துயரமடைந்து துரோண கிடம் விரைவாகப் போனான். 

“பெரிய சேனையைப் பிளந்து கொண்டு அருச்சுனன் பிரவேசி த்து விட்டான். நம்முடைய தோல்வியைப் பார்த்து ஜயத்ரதனு டைய காப்புக்காக நிற்கும் வீரர்களும் தைரியம் இழப்பார்கள். துரோணரைக் கடந்து அருச்சுனன் செல்ல முடியாது என்று அர சர்கள் எல்லோரும் எண்ணியது பொய்யாகி விட்டது நீர் பார்த் துக்கொண்டிருக்கும்போதே தேரை ஓட்டிக்கொண்டு உம்மைத் தாணடிப் போய் விட்டான். நீர் பாண்டவர்களுக்கு நன்மை செய்வதிலேயே விருப்பம் கொண்டிருக்கிறீர். என்னுடைய மனம் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறது. உமக்கு நான் என்ன பிழை அல்லது குறை செய்தேன்? என்னை ஏன் கைவிடுகிறீர்? இது எனக் குத் தெரிந்திருந்தால் நான் ஜயத்ரதனை யுத்த பூமியில் நிறுத்தி ரு க்கவே மாட்டேன். தன் தாய் நாட்டுக்குத் திரும்பிப் போய் விடுவதாகச் சொன்ன அவனை நான் நிறுத்தியது பெரும் பிழை யாகி விட்டது. அருச்சுனன் ஜயத்ரதனைத் தாக்கினால் அவன் மீள மாட்டான். துயரத்தினால் பிதற்றுகிறேன் என்னை மன்னிக்க வேண்டும் நீரே போய் ஸைந்தவனைக் காப்பாற்றும் என்று து யோதனன் கதறினான். 

துரோணர் “அரசனே! தகாத வார்த்தைகளை நீ சொல்லிய போதிலும் தான் உன் பேரில் கோபங் கொள்ளவில்லை. நீ எனக்குக் குமாரனைப் போல். அசுவத்தாமன் எப்படியோ அப்படியே எனக்கு நீயும். நான் சொல்லுவதைச் செய். இதோ இந்தக் கவசத்தைப் பெற்றுக்கொள். இதைப் போர்த்துக்கொண்டு நீயே அருச்சுனனைத் தடுப்பாயாக! இவ்விடத்தை விட்டு நான் போகக் கூடாது. அதோ பார், பாண சமூகங்கள்! பாண்டவ சேனை நம்மைப் பலமாகத் தாக்கி வருகிறது. அருச்சுனன் இல்லாமல் யுதிஷ்டிரன் தனியாக இருக்கி றான். இதற்காகவல்லவா இந்த ஏற்பாட்டை நாமே செய்தோம்? அவனை நான் பிடித்து உனக்குத் தர வேண்டியவனாக இருக்கிறேன். அதை விட்டுப் பல்குனனைத் துரத்திக்கொண்டு நான் இப்போது போக முடியாது. வியூகத்தின் முகத்தை விட்டு விட்டு நான் அருச் சுனனைக் குறித்துச் சென்றேனானால் அனர்த்தம் நேரிடும் நான் போர்த்த கவசத்தைத் தரித்துக்கொண்டு செல் பயப்படாதே! நீ நீ சூரன். சமர்த்தன். இந்தக் கவசத்தின் மேல்படும் ஆயுதம் உன்னைப் பாதிக்காது. மந்திர சக்தி பொருந்திய இந்தக் கவசம் உன் தேகத் தைக் காப்பாற்றும். பிரம்ம தேவனிடம் இந்திரன் கவசம் பெற்றுப் போருக்குச் சென்றதுபோல் திவய மந்திரக் கவசம் என்னால் பூட் டப்பட்டு நீ செல்வாயாக. உனக்கு மங்களம்” என்றார். 

திவ்ய கவசமணிந்த து ரியோதனனு ம் ஆசார்யர் சொ ன்ன படியே பெருஞ் சேனையுடன் தைரியமாக அருச்சுனனை நோக்கிச் சென்றான். 


அருச்சுனன் கௌரவ சேனையைத் தாண்டி வெ கு தூரம் சென்றான். குதிரைகள் களைப்படை ந்திருப்பது கண்டு தேரை நிறுத் திக் குதிரைகளை அவிழ்த்து இளைப்பாறச் செய்யக் கருதினான். அச்சமயம் விந்தானு விந்தர்கள் என்ற இரு சகோதரர்கள் அருச்சுன னைத் தாக்கினார்கள். அவர்களை எதிர்த்து அவர்களுடைய படை யைத் துரத்தியடித்து இரு சகோதரர்களையும் அருச்சுனன் வதம் செய்தான். பிறகு கண்ணன் குதிரைகளை அவிழ்த்து மண்ணில் பா ளச் செய்து இளைப்பாற்றினான். மறுபடியும் தேரைம் பூட் ஜயத்ரதனை நோக்கி விரைவாகச் சென்றான். 

”தனஞ்சய! அதோ பார்! பின்னால் துரியோதனன் வருகிறான். தைவிட உனக்கு வேறு நல்ல சமயம் கிடைக்காது. வெகு காலமாக அடக்கிய கோபத்தை இப்போது தீர்த்துக்கொள். அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணமான இவன் இப்போது உன் பாணங்களுக்கு இலக்காக வந்திருக்கிறான். இவன் நல்ல தேர் வீரன். தூரத்திலிருந்து தாக்கும் – சாமர்த்தியம் கொண்டவன். பெரிய வில்லை வளைப்பவன். அஸ்திரத் தேர்ச்சி பெற்றவன். யுத்தத்தில் மதம் கொண்டவன் உறுதியான தேகம் படைத்தவன். மிக்க பலசாலி. நமது பகைவன் என்று கிருஷ்ணன் அருச்சுன னுக்குத் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் துரியோதனனைக் காட் டினான். அதன்மேல் தேரைத் திருப்பித் துரியோதனனை நோக்கிச் சென்று அவனை எதிர்த்தார்கள். 

துரியோதனன் பயப்படவில்லை. 

“ஜனங்கள் நீ பெருங் காரியங்களைச் செய்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் நேரில் பார்த்ததில்லை.உன்னுடைய புக ழுக்குக் காரணமான பராக்கிரமத்தை இப்பொழுது பார்க்கலாம். காண்பிப்பாயாக!’ என்று துரியோதனன் அருச்சுனனைப் பார்த்துச் சொன் னா Gor. கடுமையான போர் நடந்தது. 

“பார்த்தா இதுவென்ன ஆச்சரியம் உன்னால் விடப்பட்ட அம்புகள் ஏன் துரியோதனனைத் துன்புறுத்தவில்லை? காண்டீபத் திலிருந்து விடுபட்ட அம்புகள் வீணாகப் போவதை இன்றுதான் பார்க்கிறேன். இது என்றும் பாராத சம்பவமாக இருக்கிறது.உன் னுடைய கைப்பிடியும் தோள் வன்மையும் குறைந்து போயிற்றா? காண்டீபம் தன் தன்மையை இழந்ததா? நீ துரியோதனனைக் குறித்து விடும் பாணங்கள் அவன்மேல் பட்டுப் பயனற்றவை ரகக் கீழே விழுவதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் கிருஷ்ணன். 

“கிருஷ்ணா! இவன் துரோணரிடமிருந்து கவசம் பெற்று அதைப் போட்டுக்கொண்டு நிற்கிறான் என்ற எண்ணுகிறேன். த கவச தாரண ரகசியம் துரோணர் எனக்குச் சொல்லி யிருக்கிறார். இவன்மேல் அந்தக் கவசத்தை ஆசார்யர் போர்த் திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். மற்றொருவரால் பூட்டப் ப L இந்தக் கவசத்தை, மாடு பாரத் ை த ச் சுமப்பதுபோல் இவன் சும்மா சுமந்து நிற்கிறான். இப்போது என் சாமர்த்தியத் தைப் பார்’ என்று அருச்சுணன் பாணங்களை விட்டுத் துரியோதனன் குதிரைகளையும் சாரதிகளையும் தேரையும் இழக்கும்படி செய்தான். பிறகு வில்லையும் கையுறையையும் அறுத்தான். கவசம் எந்த பாகத்தில் உடலை மூடவில்லையோ அதைப் பார்த்து அருச்சுனன் துரியோதனனைத் துன்புறுத்தினான். கவசம் மூடாத உள்ளங் கைகளிலும் நகக் கண்களிலும் நுண்ணிய அம்புகளை விட்டுச் செலுத்தித் துன்புறுத்தினான். துரியோதனன் தோல்வி அடைந்தான். 


துரியோதனன் புறங்காட்டியதும் கண்ணன் பாஞ்ச ஜன்யத்யத்தை ஊதினான். 

ஜயத்ரதனுக்குக் காப்பாக இருந்த வீரர்கள் இதைக் கண் டதும் மிக்க கலக்கமுற்றார்கள். பூரிசிரவசு, சலன், கர்ணன் விருஷசேனன், கிருபர், சல்லியன், அசுவத்தாமன், ஜயத்ரதன், ஆகிய எண்மரும் தேர்களின் மீது ஏறிப் பார்த்தனை எதிர்த்தார்கள். 

தருமன் கவலை 

அருச்சுனனைப் பின் தொடர்ந்து துரியோதனன் சென்றதைப் பார்த்து ஜயத்ரதனுக்கு உதவியாகத் துரோணரும் சென்றால் காரி யம் கெட்டுப் போகும் என்று திருஷ்டத்யும்னன் அடுத்தடுத்து அவர்மேல் படையைச் செலுத்தித் தாக்கி வந்தான். துருபதபுத் திரன் அவ்வாறு செய்ததன் பயனாகக் கெளரவப் படை மூன்றாகப் பிளந்து போய் பலம் குன்றி நின்றது. 

திருஷ்டத்யும்னன் தன் தேரைத் துரோணர் தேரின்மேல் இடித்துத் தாக்கினான். அவருடைய சிவப்புக் குதிரைகளும் ஒன்றோடொன்று கலந்து சூரியாஸ்தமன மேகங்களைப்போல் த்திரக் காட்சி தந்தன. திருஷ்டத்யும்னன் தன் வில்லை எறிந்து வி டுக் கத்தியும் கேடயமும் எடுத்துக்கொண்டு துரோணருடைய தேரின்மேல் குதித்தேறினான். ரதத்தின் ஏர்க்காலின் மேலும் நுகத்தடியின் மேலும் குதிரைகளின் முதுகின் பேரிலும் நின்று துரோணரை அவன் தாக்கினான். செத்த மிருகத்தின் பேரில் பரு ந்து பாய்வதைப்போல் திருஷ்டத்யும்னன் குரூரமான திருஷ்டியு டன் இங்குமங்கும் பாய்ந்து தன் பிறவிப் பகைவனைத் தாக்கினான். வெகு நேரம் இவ்வாறு கழிந்தது. கோபம் மேலிட்ட துரோணர் எய்த ஒரு பாணம் பாஞ்சாலனுடைய உயிரை ஆனால் சாத்யகி அச்சமயம் எதிர்பாராதபடி அதைத் தன் பாணத் தால் தடுத்துவிட்டான். இதைக் கண்டு துரோணர் சாத்யகியைத் தாக்க ஆரம்பித்ததும் பாஞ்சால ரதிகர்கள் திருஷ்டத்யும்னனை விலக்கி அழைத்துக்கொண்டு சென்றனர். 

கிருஷ்ண சர்ப்பம் போல் சீறிக்கொண்டும், கோபத்தினால் கண்கள் சிவந்தும் துரோணர் சாத்யகியை எதிர்த்துச் சென்றார். சாத்யகி பாண்டவப் படையில் முதல் ஸ்தானம் பெற்றவர்களில் ஒருவன். துரோணர் தன்னை எதிர்த்து வருவதைப் பார்த்து அவ னும் அவரை நோக்கி முன் சென்றான். 

சாத்யகி தன் சாரதியைப் பார்த்து இவர்தான் தம்முடைய குலத்துக்கு உரிய தொழிலை விட்டு விட்டு க்ஷத்திரிய காரியத்தில் பிரவேசித்துப் பாண்டவர்களுக்குத் துன்பம் உண்டாக்குபவர். மகாசூரர் என்று எப்போதும் கர்வம் கொண்டவர்.இவரை எதிர்த்து அடக்க வேண்டும். குதிரைகளை வேகமாகச் செலுத்து” என்று சொன்னான். 

சாரதியும் அவ்வண்ணமே காற்று வேகம் கொண்ட வெள்ளி நிறக் குதிரைகளைச் செலுத்தினான். ஒருவர் மேல் ஒருவர் பாணங் களை விட்டார்கள். அவ்விருவர்களுடைய விற்களிலிருந்து வெளிப் பட்ட பாணங்கள் சூரியனை மறைத்து யுத்த பூ மியை இருள் படச்செய்தன. சட்டை உரித்த பாம்புகள் போல் பிரகாசிக் கின்ற நாராசங்கள் இரு பக்கத்திலிருந்தும் பயங்கரமாகப் பாய்ந் தன இருவருடைய தேர்க் குடைகளும் ஒடிந்து கீழே விழுந்தன. இருவருடைய உடலிலிருந்து ம் இரத்த ம் பெருகிற்று. அந்த யுத்தத்தைப் பார்த்து மற்றவீரர்கள் யுத்தத்தை நிறுத்தி விட்டுப் பேசாமல் நின்றார்கள். கர்ஜனைகளும் சிம்ம நாதங்களும் சங்க துந்துபி கோஷங்களும் அடங்கிவிட்டன. சாத்யகியும் துரோணரும் பற்பல ஆயுதங்களைப் பிரயோகித்துச்செய்த துவந்த யுத்தத்தைப் பார்க்கத் தேவர்களும் வித்தியாதரர்களும் கந்தவர் களும் யக்ஷர்களும் ஆகாயத்தில் நின்றார்கள். 

துரோணருடைய வில்லைச் சாத்யகி தன் பாணங்களால் அறுத் துத் தள்ளினான்.பாரத்வாஜர் ஒரு வினாடியில் வேறு வில்லை எடு த்து நாணேற்றி நின்றார். அதையும சாத்யகி உடனே அறுத்தான். மறுபடியும் வேறொரு வில்லை எடுத்து நின்றார். அதையும் அறுத்து விட்டான். இவ்வாறு நாணேற்றவே விடாமல் நூற்றொரு விற்களை சாத்யகி அறுத்து விட்டான். இந்தச் சாத்யகியானவன் ஸ்ரீ ராமர், கார்த்தவீரியன், தனஞ்சயன், பீஷ்மர் இவர்களைப்போல் யுத்தம் செய்கிறான் என்று துரோணர் தமக்குள் எண்ணித் திருப்தி யடைந்தார்.ஆச்சாரியருக்கு இவ்விதமாக விரோதிகளிடம் நல்ல சாமர்த்தியத்தைப் பார்க்கும்போது சந்தோஷம்  உண்டாவது இயற்கை. 

துரோணர் எந்த அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தாரோ அதே அஸ்திரத்தை அதே முறையில் சாத்யகி பிரயோகம் செய் வான். இவ்வாறு வெகு நேரம் கழிந்த பின்னர் தனுர்வேதத்தின் கரையைக் கண்ட துரோணாச்சரியார் சாத்யகியைக் கொல்லு ம் பொருட்டு ஆக்னேயாஸ்திரத்தைத் தொடுத்தார். சாத்யகியும் உடனே அதை வெட்டும் படியான வருணாஸ்திரத்தைத் தாமத் மின்றிப் பிரயோகித்தான். 

வர, வர சாத்யகியின் வலிமை தளர ஆரம்பித்தது. அதைக் கண்ட கெளரவர்கள் மகிழ்ச்சியடைந்து கர்ச்சித்தார்கள். 

சாத்யகி பீடிக்கப்படுகிறான் என்று யுதிஷ்டிரன் அறிந்து அருகிலுள்ள வீரர்களைப் பார்த்து உ த்தமனும் வீரனும் சத்ய பராக்கிரமனுமான யுயுதானன்* துரோணரால் மிகவும் கொடு மையாக எதிர்க்கப்படுகிறான். உடனே அவனிருக்குமிடம் செல் லுங்கள்” என்றான். 

திருஷ்டத்யும்னனனைப் பார்த்து “சீக்கிரம் சென்று துரோண ரைத் தடுப்பாயாக! பிராமணர் சாத்யகியைக் கொன்றுவிடுவார். ஏன் நிற்கிறாய்? உடனே வேகமாகப்போய் சாத்யகி இருக்குமிடம்  சேர். துரோணரால் நமக்குப் பெரிய பயம் நேரிட்டிருக்கிறது. சிற பையன் பறவையைக் கயிற்றினால் கட்டி விளையாடுவதைபோல் சாத்யகியுடன் துரோணர் செய்யும் யுத்தம் அவருக்கு விளையாட் டாக இருக்கிறது. அவனால். அவரை இனி எதிர்க்க முடியாது. நீ – சீக்கிரம் போய் உதவி செய். மற்றவர்களை ம் அழைத்துச் செல். தாமதம் செய்யாதே. அந்தகனுடைய பற்களுக்கிடையில் சாத்யகி அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். படைகளை யெல்லாம் துரோணரைத் தாக்கவும் கட்டளையிட்டான். 

அனைவரும் கஷ்டப்பட்டு சாத்யகியைத் தப்புவித்தார்கள். 


அச்சமயம் பான்சஜன்யத்தின் ஒலி கேட்டது. யுதிஷ்டிரர் கவலையுற்றார். 

“சாத்யகியே, பாஞ்சஜன்யம் மட்டும் ஒலிக்கிறது. காண்டீ வத்தின் சப்தம் கேட்கவில்லை. பார்த்தனைப்பற்றி எனக்குச் சந் தேகமாயிருக்கிறது. ஜயத்ரதனுக்குத் துணையாக நிற்கும் வீரர் தோன்று களால் அவன் சூழப்பட்டு ஆபத்திலிருக்கிறான் என்றே தோன்றுகிறது. முன் பக்கத்தில் ஸைந்தவனுடைய சேனையும் பின்பக்கத் தில் துரோணருடைய பெருஞ்சேனையும் அருச்சுனனுக்கு ஆபத்து விளைவிக்கும்படியாக இருக்கின்றன. அருச்சுனன் சூரியோதயத் தில் சத்துரு சேனையில் நுழைந்தான். இப்போது பகலில் பெரும் பாகம் கழிந்து விட்டது. பாஞ்சஜன்யம் மட்டும் ஒலிப்பதால் தனஞ்சயன் மாண்டுவிட்டு வாசுதேவன் மட்டும் யுத்தம் செய்கி றானோ என்று சந்தேகப்படுகிறேன். சாத்யகி! உன்னால் செய்யமுடி யாத காரியம் இல்லை. அருச்சுனன் உனக்குத் தோழனும் ஆச்சாரிய னுமாவான். அவனுக்கு இப்போது நிச்சயமாகச் சங்கட நிலை ஏற் பட்டிருக்கிறது. சாத்யகி! தனஞ்சயன் உன்னைப்பற்றி என்னிடம் பல தடவை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறான். சாத்யகியைப் போன்ற சத்திய பராக்கிரமன் வேறொருவன் இல்லை” என்று வன வாசத்தில் இருக்கும்போதே சொன்னான். அதோ பார். யுத்தத் தினால் கிளம்பிய புழுதி. அருச்சுனன் சத்துருக்களால் சூழப்பட்டி ருக்கிறான் என்பது நிச்சயம். ஜயத்ரதன் மகாசூரன். அவன் விஷ யத்தில் உயிரைவிடத் துணிந்து பல வீரர்களும் அவனுக்குத் துணையாக இருக்கிறார்கள். உடனே போ!” என்று படபடப் புடன் தருமன் சொன்னான். 

இப்படி மிகவும் வற்புறுத்தப்பட்டவனாக சாத்யகி “தருமத்தினின்று தவறாதவரே! உம்முடைய கட்டளையை நா உம்முடைய வகிப்பவன். தனஞ்சயனுக்காக நான் எதைத்தான் செய்யமாட் டேன்? அவன் விஷயத்தில் என் உயிரும் எனக்கு ஒரு பொருளா காது. உம்மால் ஏவப்பட்டால் நான் தேவர்களோடும் எதிர்த்துப் போர் புரிவேன். ஆனால் எல்லா விஷயமும் அறிந்த வாசுதேவனும் அருச்சுனனும் என்னிடம் சொல்லிப் போனதைத் தேவரீரி ம் என்னிடம் விஞ்ஞாபனம் செய்து கொள்ளுகிறேன். ‘ஜயத்ரதனைக் கொன்று திரும்பும் வரையில் நீ யுதிஷ்டிரனுக்குக் காப்பாக இரு.மிகவும் ஜாக்கிரதையாக அவரைப் பார்த்துக்கொள். உன்னை நம்பி நாங் கள் போகிறோம். கெளரவ சேனையில் நாம் அஞ்ச வேண்டியவர் துரோணர் ஒருவரே. அவருடைய பிரதிக்ஞை உனக்குத் தெரியுமே! தரும புத்திரரை உன் காப்பில் வைத்துவிட்டு நாங்கள் போகிறோம். என்று வாசுதேவரும் அருச்சுனனும் என்னிடம் சொல்லிப் போனார் கள். அருச்சுனன் என்னை மதித்தும் நம்பியும் இவ்வாறு கட்டளை யிட்டுப் போயிருக்கிறான். நான் இப்போது எப்படி அதைப் புறக் கணிக்க முடியும்? அருச்சுனனைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். அவனை யாரும் ஜயிக்க முடியாது. சிந்து ராஜனும் மற்றவர்களும் தனஞ்சயனுக்குப் பதினாறில் ஒரு பங்கு ஈடாகமாட்டார்கள். தரும புத்திரரே! உம்மை யாருடைய காப்பில் விட்டுவிட்டு நான் போவேன் துரோணருடைய எதிர்ப்பைத் தாங்கக்கூடிய எவனை யும் நான் இங்கே காணவில்லை. நன்றாக ஆலோசித்து எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான். 

“இரண்டையும் தீர ஆலோசித்தே நான் உன்னை அருச்சுனனி டம் போகச் சொல்லுகிறேன். என்னுடைய அனுமதியைப் பெற்று நீ செல். மகாபலசாலியான பீமன் எனக்குக் காப்பாக இருக்கிறான். திருஷ்டத்யும்னனும் இருக்கிறான். இன்னும் பலர் இருக்கின்றனர். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிச் சாத் யகியின் தேரில் அம்புப் பெட்டிகளையும் எல்லா – பகரணங்களைபீ அஸ்திரங்களையும் வைத்து நன்றாக இளைப்பாறிய குதிரைகளை யும் பூட்டச் செய்து ஆசீர்வதித்து யுதிஷ்டிரன் சாத்யகியை அனுப்பினான். 

“பீமசேனா! தரும புத்திரரைப் பார்த்துக் கொள்’ என்று சொல்லி விட்டுச் சாத்யகி தனஞ்சயனை நோக்கிச் சென்றான். 

இவ்வாறு சென்ற சாத்யகியைக் கௌரவப் படை பலமாகத் தடுத்தது. தடை செய்தவர்களையெல்லாம் வென்று பலரை வதம் செய்து சாத்யகி சென்றான். வழியில் அநேக சத்துருக்களுடன்போர் செய்ய நேரிட்டபடியால் அவன் அருச்சுனனிடம் போயச் சேர நேரமாயிற்று. 

சாத்யகி யுதிஷ்டிரரை விட்டுப் பிரிந்ததைப் பார்த்த துரோ ணர் பாண்டவ சேனையை இடைவிடாமல் தாக்கினார். பாண்டவர் களுடைய சேனை ஒழுங்கு குலைந்து பின்வாங்க நேரிட்டது. யுதிஷ்டி ரன மிகவும் கவலைப்பட்டுச் சிந்திக்க ஆரம்பித்தான். 

யுதிஷ்டிரன் ஆசை 

“அருச்சுனனையும் காணவில்லை; அவனைத் தொடர்ந்து சென்ற சாத்யகியும் திரும்பவில்லை. பீமனே! தம்பியைப் பற்றி எனக்கு மிகக் கவலையாக இருக்கிறது. பாஞ்சஜன்யம் ஒலிக்குமபோது காண்டீவமும் கூட ஒலிக்காமலிருப்பது என் உள்ளத்தில் மிக்க பய த்தை உண்டாக்குகிறது. உயிரைப் போன்ற நண்பனும் வீரனு மான சாத்யகியை அனுப்பினேன். அவனும் திரும்பவில்லை என்னு டைய கவலை வளர்ந்து வருகிறது ” என்று யுதிஷ்டிரன் பீமசேன னிடம் சொல்லி ஒன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்தான். 

“உமக்கு இப்படிப்பட்ட மனக் கலக்கம் வந்ததை நான் எப்போதும் பார்த்ததில்லை. தைரியத்தை விடவேண்டாம். எனக்கு என்ன கட்டளை வேண்டுமானாலும் இடுவீராக. மனத்தைத் துக்கத் தில் சிக்கிக் கொள்ள விட வேண்டாம். என்றான் பீமன். 

“அப்பனே! உன்னுடைய தம்பி இறந்தே விட்டான் என்று நான் எண்ணுகிறேன். அவன் வீழ்த்தப்பட்டபடியால் மாதவனே ஆயுதம் எடுத்து யுத்தம் செய்கிறான் போலிருக்கிறது. பாஞ்ச ஜன்ய ஒலி மட்டும் கேட்கிறது. தனஞ்சயனுடைய வில்லின் ஒலி கேட்கவில்லை. ஒப்பற்ற சூரனும் நமக்கு உயிருமான தனஞ்சயன் கொல்லப்பட்டான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நான் மதி மயக்கமடைந்து விட்டேன். பீமனே! என் சொற்படி நீ நடப்பதா யிருந்தால் உடனே தனஞ்சயனிருக்குமிடம் செல். சாத்யகியை யும் அருச்சுனனையும் பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்து திரும்பி வா. என் பேச்சுக்கிணங்கி சாத்யகி அருச்சுனன் சென்ற வழியைத் தொடர்ந்து கௌரவ சேனையைப் பிளந்துகொண்டு சென்றான். அவர்களைத் தொடர்ந்து நீயும் போய் அவர்கள் க்ஷேம மாக இருப்பதைக் கண்டாயாகில் உன் சிம்மநாதத்தால் அறிவேன்’ என்றான். 

“நாதனே! விசனப்பட வேண்டாம். நான் போய் அவர்களைக் கண்டு க்ஷேமமாக இருப்பதைத் தெரிவிக்கப்போகிறேன்”. என்று இரண்டாவது பேச்சு இல்லாமல் ஒப்புக்கொண்டு திருஷ்டத் யும்னனைப் பார்த்து பாஞ்சாலனே? தருமநந்தனரை எப்படியா வது பிடிக்க வேண்டும் என்று துரோணர் உபாயத்தைத் தேடிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்.அரசனை ரட்சிப்பது முக்கியமான கடமை. ஆனால் அவருடைய கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டியவனாக ருக்கிறேன். உன்னை நம்பிப் போகிறேன்.” என்றான். 

“பீமனே! சிந்தனை வேண்டாம். ஆலோசிக்காமல் போவா யாக. என்னைக் கொல்லாமல் துரோணர் யுதிஷ்டிரரைப் பிடிக்க முடியாது” என்று வீரனும் துரோணருக்குப் பரம சத்துருவுமான துருபதகுமாரன் சொன்னதும் பீமன் வேகமாகச் சென்றான. 

அருச்சுனனுக்குத் துணையாக அனுப்பப்பட்ட பீமனை வழியில் கௌரவர்கள் சூழ்ந்து கொண்டு தடுத்தார்கள். ஆனால் சிம்மமா னது அற்ப மிருகங்களை விரட்டியடிப்பது போல் அவன் பகைவர் கூட்டத்தைத் துரத்தியடித்துத் திருதராஷ்டிர குமாரர்களில் பதி னொரு பேர்களை வழியில் கொன்று துரோணரை அணுகினான். அவர் அவனைத் தடுத்து பீம்சேன்னே! சத்துருவாகிய என்னை ஜெயிக்காமல் நீ செல்ல முடியாது. உன் தம்பி அருச்சுனை என் சம்மதம் பெற்றுச் சேனையில் புகுந்தான். உனக்கு நான் சம்மதம் தர மாட்டேன் என்றார். பல்குனனைப் போல் பீமனும், தன்னைக் கவுரவிப்பான் என்று எண்ணி இவ்வாறு சொன்னார். 

பீமனோ துரோணருடைய பேச்சைக் கேட்டு மிகுந்த கோபங் கொண்டு ஓய் பிராமணரே! உமது சம்மதத்தின் பேரில் அருச்சு னன் சேனையில் பிரவேசிக்கவில்லை. அவன் தன் பராக்கிரமத்தைக் கொண்டு உம்முடைய வியூகத்தை உடைத்தான். நான் அருச்சுன னைப் போல் உம்மிடம் தயை காட்டேன். நான் உமக்குச் சத்துரு. ஒரு காலத்தில் நீர் எங்களுக்குத் தந்தையும் குருவுமாக இருந்தீர்.நாங்களும் உம்மை வணங்கினோம்! இப்போது நீர் எங்களுக்குச் சத்துருவென்று நீரே சொன்னீர். அவ்வாறே இருக்கட் டும். என்று சொல்லிக் கதாயுதத்தைச் சுழற்றித் துரோணரைத் தாக்கினான். துரோணருடைய ரதம் பொடியாயிற்று. 

துரோணர் வேறு ரதம் ஏறினார். அதையும் பீமன் பொடியா க் கினான். இவ்வாறு துரோணரைத் தாக்கி நான்கு பக்கங்களிலும் இருந்த யுத்த வீரர்களையும் விரட்டி அடித்து வழி செய்து கொண்டே உள்ளே பிரவேசித்தான். 

அன்று துரோணருடைய எட்டு ரதங்கள் ஒன்றின் பின் ஒன்றாக உடைக்கப்பட்டன. சேனையைப் பிளந்துகொண்டு போகும் பீமனைப் போஜர்களுடைய சேனை எதிர்த்தது. அதையும் துவம் சம் செய்து முன்னால் சென்றான். அதன் பின்னும் வந்து தடுத்த சேனைப் பகுதிகளை எல்லாம் வதம் செய்து வேகமாகச் சென்று பீமன் ஜயத்ரதனுடைய சேனையுடன் போர் புரிந்து கொண்டி ருந்த அருச்சுனனைக் கண்டான். அருச்சுனனைக் கண்ட சேனன் சிம்மத்தைப் போல் கர்ச்சித்தான். அவன் செய்த கர்ச்ச னையைக் கேட்டதும் கிருஷ்ணனும் அருச்சுனனும் மகிழ்ச்சி பரவசமடைந்து அவர்களும் சிம்மநாதம் செய்தார்கள். 


தரும புத்திரன் இந்தக் கர்ச்சனையைக் கேட்டுக் களிப்புற்றான்.) சோகத்தை விட்டுத் தனஞ்சயனை மனத்தில் ஆசீர்வதித்தான். 

“அஸ்தமிப்பதற்குள் அருச்சுனன் தன் பிரதிக்ஞையை முடி த்து சிந்து ராஜனை வதம் செய்து திரும்புவான். தனஞ்சயனால் ஜயத்ரதன் கொல்லப்பட்ட பின் துரியோதனன் சமாதானத்துக்கு வரலாம். தம்பிமார்கள் கொல்லப்பட்டதைக் கண்டு மூடனான துரியோதனனுக்கு நல்ல புத்தி உண்டாகலாம். சிறந்த அரசர்க ளும் போர் வீரர்களும் யுத்த களத்தில் வீழ்த்தப்பட்டதைப் பார் த்து மந்த புத்தியுள்ளவனான துரியோதனன் தன் பிழையை அறி ந்து சமாதானத்துக்கு வரலாம். பிதாமகரான பீஷ்மர் வீழ்ந்த பின் நமக்குள் உண்டான இந்தப் பாபமான வைரம் ஒழிந்து எஞ்சியுள்ளவர்களாவது பிழைக்க வழி ஏற்படுமா?’ இவ்வாறு தருமபுத்திரன் பலவிதமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான். 


இப்படி யுதிஷ்டிரன் சமாதானத்தில் ஆசை செலுத்திச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் பீமனும் சாத்யகியும் அருச்சுன னும் சென்ற இடத்தில் கோரமான யுத்தம் நடைபெற்றது. உல கம் எப்படிச் செல்ல வேண்டும், அதற்காக என்ன நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதையெல்லாம் ஆண்டவன் அன்றி வேறு யார் அறிவார்? அனைத்தும் அவன் செயல் அல்லவோ? 

கர்ணனும் பீமனும் 

அபிமன்யுவுக்குத் துணை செய்யப் போன பாண்டவர்களைத் தடுத்து அவன் வதத்திற்கு முக்கிய காரணமான ஜயத்ரதனைப் போருக்கு அழைப்பதற்காகப் போன அருச்சுனன் திரும்பி வராத தால் யுதிஷ்டிரன் கவலைப்பட்டு சாத்யகியையும் பிறகு பீமனையும் அனுப்பினான். பீமன் போய்ச் சேர்ந்து தனஞ்சயன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாக உரக்க கர்ச்சித்ததின் பேரில் யுதிஷ்டிரன் ஆறுதலும் தைரியமும் அடைந்தான். 

ஒரு புறம் சாத்யகிக்கும் பூரிசிரவசுக்கும் மற்றொரு புறம் கர்ணனுக்கும் பீமனுக்கும் வேறொரு புறத்தில் அருச்சுனனுக்கும் ஜயத்ரதனுக்கும் அதுவரையில் பார்த்தது ம் கேட்காததுமான போர்கள் நடந்தன. துரோணர் பாஞ்சாலரும் பாண்டவர்களும் செய்து வந்த எதிர்ப்பைத் தாங்கியும் அவர்கள் பேரில் எதிர்த் தாக்குதல் செய்துகொண்டும் போர் நிலையின் முதல் வியூ லேயே நின்றார். 

பியூகத்தி அருச்சுனன் ஜயத்ரதனை எதிர்த்த இடத்திற்குத் துரியோதனன் வந்து சேர்ந்தான். அவனும் தோல்வியடைந்து புறங்காட்டித் திரும்பினான். 

இவ்வாறு யுத்தம் பல பகுதிகளில் தீவிரமாகவே நடைபெற் றது. இரு திறத்தாருக்கும் ஆங்காங்கு முன் புறமும் பின்புறமும் இரண்டு புறத்திலும் அபாயம் இருந்து வந்தது. அப்போது துரோ ணரிடம் துரியோதனன் வந்து அருச்சுனனு ம் பீமனும் சாத்ய கியும் இந்தச் சேனையை அலட்சியம் செய்து விலகிச் சென்று சிந்து ராஜனை நெருங்கி விட்டார்கள். அங்கே கடும் போர் நடைபெற்று வருகிறது. உம்முடைய தலைமையில் நின்ற நம்முடைய வியூகம் இப்படி உடைபட்டு நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறாமல் கெட்டுப் போனது ஆச்சரியமாக இருக்கிறது. தனுர் வேதத்தின் கரையைக் கண்ட துரோணர் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார் என்று எல்லோரும் கேட்கிறார்கள். நான் என்ன சொல்வேன்? உம்மால் நான் துர்ப்பாக்கியன் ஆனேன் என்று துரோணரை வழக்கம்போல் தாக்கிப் பேசினான். 

“நீ என்னை நிந்திப்பது எல்லாம் உண்மைக்கும் தருமத்துக் கும் விரோதம். சென்று போனதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. மேலே செய்ய வேண்டியதைப்பற்றி யோசிப்பாயாக” என்றார் துரோணர். 

“எது செய்யவேண்டுமோ அதை நீரே ஆலோசித்துச் சொல் லும். நன்றாக ஆலோசித்து முடித்த தீர்மானத்தை விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும்” என்றான் கவலை கொண்டு மதியிழந்த துரியோதனன். 

“அப்பனே! ஆலோசிக்க வேண்டிய விஷயம் பலவாறாக இருக் கிறது. மூன்று மகாரதர்கள் நம்மைத் தாண்டிச் சென்று விட்டிரு கிறார்கள். அது உண்மை. ஆனால் அவர்கள் முன்னால் சென்றதன் காரணத்தால் அவர்கள் பயப்படுவதைப்போலவே அவர்களு குப் பின்புறம் நாம் இருப்பது அவர்களுக்குப் பயத்துக்கு காரண மாகவே இருக்கும். அவர்களுக்கு இருபுறமும் சத்துருக்களாகிய நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் இருக்கிறோம். ஆதலால் நீ தைரியமாக ஜயத்ரதனுக்கு உதவியாகப் போய் அவ்விடம் செய்ய வேண்டியதைப் பார்த்துக் கொள். கவலைப்பட்டுச் சாவதில் பயனில்லை. நான் இவ்விடமே இருப்பது நலம். வேண்டும்போது, இங்கிருந்து இன்னும் வீரர்களையும் படைகளையும் உனக்குச் சகாயமாக அனுப்புவேன். பாஞ்சாலனையும் பாண்டவப் படை களையும் இவ்விடம் நான் எதிர்த்து நிற்க வேண்டும்” என்றார் துரோணர். 

ஆசார்யருடைய யோசனையின்படி துரியோதனன் சில படை களையும் கூட்டி கொண்டு அருச்சுனன் யுத்தம் நடத்திக்கொண் டிருந்த இடத்துக்குத் திரும்பவும் போனான். 

தற்காலத்துப் போர் முறையில் ஒரு அத்தியாயம் பகைப் படைகள் அரண் செய்துகொண்டு நிற்கும் இடங்களைச் சில சமயம் அப்படியே விட்டுவிட்டு முன் செல்லும் முறை. அவ்வாறு பகைவர்களுடைய பலத்தை லட்சியம் செய்யாமல் முன் செல்வ தன் லாப நஷ்டங்களை 1939-ல் ஆரம்பித்த மகா யுத்தத்தில் இரு திறத்தாரும் ஆராய்ந்து செய்ததைப் போலவே பாரத யுத்தத் திலும் நடைபெற்றது. பதினான்காவது நாளில் எதிர்பாராத முறை யில் அருச்சுனன் செய்த மகத்தான காரியங்களும் அதைப்பற்றித் துரோணரும் துரியோதனனிடம் கலந்து ஆலோசித்ததும் இதுவே தான். சத்துருப்படை இருக்கும் இடத்திலெல்லாம் போர் நடத் திக்கொண்டு கால விளம்பம் செய்யாமல் விட்டு விலகி முன் செல்லும் போர் யுக்தியே பை – பா ஸிங்’ என் று தற்காலத்தில் சொல்லப்படுவது. அந்த முறையை அருச்சுனன் சாமர்த்தியமாக உபயோகித்துத் துரியோதனனைத் தத்தளிக்கச் செய்தான். 

பீமனுக்கும் கர்ணனுக்கும் அன்று நடந்த யுத்தம் ஒரு மயிர் சிலிர்க்கும்படியான கதை. பாரத யுத்தத்தைத் துரோண பர்வத் திலும் கர்ண பர்வத்திலும் படிக்கும்போது பல இடங்கள் இப்போது நடைபெற்று வரும் யுத்தத்தின் பிரதி பிம்பமாகவே எல்லா விதத்திலும் காணப்படுகின்றன. 

முதலில் தன்னை எதிர்த்த கர்ணனை விட்டு விட்டுப் பீமன் தனஞ்சயன் இருந்த இடத்துக்குப் போய்ச் சேரவே விரும்பினான். ஆனால் ராதேயன் விடவில்லை. பீமசேனன்மேல் அம்புமாரி பொழிந்து அவனைத் தடுத்தான். தாமரைப் பூவைப்போன்ற அழகிய முகத்தைப் படை த்திருந்த கர்ணன் சிரித்துக்கொண்டு ஓடாதே! முதுகைக் காட்டாதே என்று பீமனை ஏளனமாகப் பேசித் துன்புறுத்தினான். கர்ணனுடைய சிரிப்பைப் பீமனால் சகிக்க முடியவில்லை. இருவருக்கும் கடுமையான யுத்தம் ஆரம் பித்தது.கர்ணன் சிரித்துக்கொண்டே செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்தான். பீமனோ கோபவேசமாகப் போர் புரிந்தான். கர்ணன் தூரத்திலிருந்து கொண்டே தவறாத குறி வைத்து வில்லையும் பாணங்களையும் பிரயோகம் செய்வான். பீமன் தன்மேல் பொழியும் பாணங்களையும் நாராசங்களையும் லட்சியம் செய்யாமல் கர்ணனை நெருங்கிப் போவான். கர்ணன்  சிரமமேயின்றிச் செய்வதைப்போல் காட்டிக்கொண்டு எல்லா வற்றையும் பிழையில்லாமல் சாந்தமாகச் செய்வான். பீமன் அவமானத்தைப் பொறாதவனாகக் கோபம் மேலிட்டு வியப்பைத் தரும்படியான முறையிலெல்லாம் தன் பலத்தைக் காட்டுவான். 

பீமசேனன் உடலெல்லாம் காயமடைந்து ரத்தம் ஒழுகி வசந்த காலத்து அசோக மரத்தைப்போல் விளங்கினான். காயங்களை லட்சியம் செய்யாமல் கர்ணனுடைய தேரையும் குதிரை களையும் வில்லையும் நாசம் செய்தான். 

கர்ணன வேறு ரதத்தைத் தேடி ஓடவேண்டியதாயிற்று வேறுரதத்தில் ஏறிய கர்ணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் முகத்தில் இருந் சிரிப்பு மாறிப் பருவ காலத்துக் கடலைப்போல் கோபம் பொங்கிப் பீமனை மறுபடியும் எதிர்த்தான். இருவரும் தேக பலத்தில் புலிகளைப்போலவும் விசையில் பருந்துகளைப்போல வும். கோபத்தில் சர்ப்பங்களைப்போலவும் ஒருவர்மேல் ஒருவர் பாய்ந்து யுத்தம் செய்தார்கள். தனக்கும் தன் சகோதரர்களுக் கும் மனைவி திரௌபதிக்கும் ஏற்பட்ட அவமானங்களும் துன்பங் களுமெல்லாம் அந்தச் சமயம் பீமனுக்கு நினைவு வந்தது. உயிரை வெறுத்து யுத்தம் செய்தான். இரண்டு தேர்களும் ஒன்றை ஒன்று மோதின. கர்ணனுடைய பால்வண்ணக் குதிரைகளும் பீமனு டைய கருங் குதிரைகளும் மேகங்கள் கலப்பதுபோல் ஒன்றோ டொன்று நருங்கிக் கலந்தன. 

கர்ணனுடைய வில்லானது அறுபட்டது. சாரதி அடிபட்டுத் தேரினின்று கீழே விழுந்தான். அப்போது கர்ணன் ஒரு சக்தியா யுதத்தை எடுத்துப் பீமன்பேரில் வீசினான். பீமன் அதைத் தடுத்து விட்டு வேறு அம்புகளைத் தன் வில்லில் தொடுத்தான். கர்ணனும் புதியதொரு வில்லை எடுத்துப் பீமன்மேல் சரமாரி பொழிந்தான். மறுபடியும் கர்ணன் தேரை யிழந்தான். 

துரியோதனன் கர்ணனுடைய கஷ்டமான நிலைமையைப் பார்த்துத் தம்பி துர்ஜயனை அழைத்து பாபிஷ்டனான பாண்ட வன் கர்ணனைக் கொல்லப் போகிறான். நீ உடனே சென்று பீமனை எதிர்த்துக் கர்ணன் உயிரைக் காப்பாயாக!’ என்றான். துர்ஜய னும் அந்தக் கட்டளைப்படி பீமனை எதிர்த்தான். விருகோதரன் கோபங்கொண்டு ரழு பாணங்களை விட்டு துர்ஜயனையும் குதிரை களையும் சாரதியையும் யம லோகத்திற்கு அனுப்பினான். நிலத்தில் அடிபட்ட பாம்புபோல் புரண்டு கொண்டிருந்த துர்ஜயனைப் பார்த்துக் கர்ணனுக்குத் தாங்கவில்லை. கண்ணீர்விட்டு அழுது விழுந்து அவனைப் பிரதட்சிணம் செய்தான். பீமனோ யுத்தத்தை விட்டு விலகவில்லை. மறுபடியும் கர்ணனை அம்புக் கூ களாலும் பாணங்களாலும் நன்றாக அடித்துத் துன்புறுத்தினான். 

தேரை இழந்த கர்ணன் வேறொரு தேரில் ஏறித் திரும்பவும் பீமனை எதிர்த்தான். அவன் செலுத்திய அம்புகள் பீமனை நன் றாகத் தாக்கின. கோபாவேசமாகக் கதாயுதத்தை எடுத்துப் பீமன் வீசி யெறிந்தான். அது கர்ணனுடைய சாரதியையும் குதிரைகளை யும் கொன்று கொடிக் கம்பத்தையும் உடைத்தது. கர்ணன் குதிரை யிழந்து தேரைவிட்டு இறங்கி வில்லை எடுத்துக்கொண்டு பூமியில் நின்றான். 

இதை யறிந்த துரியோதனன் “ராதேயன் பீமசேனனால் ரதத்தை மறுபடியும் இழந்தான். உன் ரதத்தில் ஏற்றிக்கொள். என்று மற்றொரு தம்பி துர்முகனுக்குக் கட்டளையிட்டான். துர்முகனும் தன் தேரைக் கர்ணன் நின்ற இடத்துக்குச் செலுத்தினான். 

திருதராஷ்டிர புத்திரர்களில் மற்றொருவனும் வந்தான் என்று பீமன் மகிழ்ச்சியடைந்து உதடடை நக்கிக்கொண்டு துர்முகன்பேரில் ஒன்பது பாணங்களை விட்டான். கர்ணன் அந்த ரதத்தின்மேல் ஏறிய அதே சமயத்தில் துர்முகன் கவசமுடைந்து உயிரற்று வீழ்ந்தான். ரத்தத்தால் நனைக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த துர்முகனைக் கண்ட கர்ணன் கண்களில் நீர் ததும்ப ஒரு முகூர்த்த காலம் யுத்தம் செய்யாமல் அப்படியே நின்றான். பீமன் அப்போ தும் யுத்தத்தை நிறுத்தாமல் மறுபடியும் கர்ணன்மேல் கூரிய பாணங்களை எய்தான். அவை ராதேயனுடைய கவசத்தைப் பிளந்து மிகவும் துன்புறுத்தின. உடனே அவனும் பீமனை எதிர்த்துப் பாணங்கள் எய்து பீமன் உடலில் பல இடங்களில் காயப்படுத்தினான். பீமனும் அதைப் பொறுத்துக்கொண்டு மறுபடியும் கர்ணனைப் பலமாகத் தாக்கினான். காயங்களின் வேதனை யினாலும் துரியோதனனுடைய தம்பிகள் தனக்காக ஒருவர் பின் ஒருவராக மாண்டதனாலும் துக்கம் தாங்க முடியாமல் கர்ணன் தைரியம் இழந்து யுத்த அரங்கத்தைவிட்டு விலகிப் போனான். 

அப்போது பீமன் பல காயங்கள் பட்ட தேகத்தோடு கொழு த்து விட்டெரியும் நெருப்பைப் போல யுத்த பூமியில் நின்று கொண்டு வெற்றி கர்ச்சனை செய்தான். அதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல் கர்ணன் யுத்த பூமியை விட்டுப் போகும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு திரும்பி வந்து நின்றான்.

– தொடரும்…

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *