கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 7,792 
 

ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு கூடியிருந்தது!

வீரச்சக்கரவர்த்தி விஸ்வாமித்திரருக்கும், தேவலோக அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த தேவலோக இளவரசி என்பதை சற்றும் அறியாதவளாய் ,வெகுளியாய் புள்ளிமான் போல் துள்ளி விளையாட வனத்துக்குள் பிரவேசித்தவளை பறவை ஒன்று வந்து தடுத்தது.கிளியைப்போன்ற வளைந்த அலகுடைய ,அதே சமயம் கருடனைப்போன்ற பெரிய இறகுடைய அபூர்வப்பறவை அது.பறவைகளின் மொழி தெரிந்தவளாதலால் புதியவர் யாரோ வரப்போகிறார் என்பதை அறிந்து ஓடிச்சென்று குடிசைக்குள் புகுந்து கொண்டாள்!

வளர்ப்புத்தந்தை கன்வனும் இந்த நேரத்தில் இல்லாதது மன பயத்தை அதிகரித்தது.சற்று நேரத்தில் கால்மொண்டிய மான் குட்டி குடிசைக்குள் நுழைந்தது.அதை தொடர்ந்து குதிரையின் காலடிச்சத்தம் கேட்டது!

மாவீரனின் நடையால் ஏற்படும் அதிர்வால் குடிசை குலுங்கியது.அப்போது ஆணழகன்,மாவீரன் குடிசைக்குள் நுழைந்து மான்குட்டியை தாவி எடுத்து மடியில் கிடத்தி, கால்களை நீவி விட்டு சரியானவுடன் காட்டில் விட்டு திரும்பிய பின்பே,குடிசையில் ஒரு மான் குட்டி தன்னைக்கண்டவுடன் மனமுடைந்து வார்த்தை வராமல் தவித்ததை உணர்ந்து,குடிசைக்குள் மீண்டும் பிரவேசித்தவன் தன் சாந்தப்பார்வையால் அவள் காந்தப்பார்வையை வெற்றி கொண்டு அமர்ந்தான்!

இது வரை வளர்ப்பு தந்தையைத்தவிர வேறு ஆண்களையே பார்த்திராத சகுந்தலைக்கு வீரன் துஷ்யந்தனின் மேனி அழகும்,கம்பீர தோற்றமும் தனக்குள் பல மாற்றங்களை உண்டு பண்ணுவதையும்,அவன் எக்கணமும் கூடவே இருக்க வேண்டுமென்ற ஆசை அதிகரிப்பதையும் உணர்ந்த போது உடல் லேசாக நடுங்குவதைக்கண்டு ஒருகையை இன்னொரு கையால் இறுக்கிப்பிடித்துக்கொண்டாள்.அவளோடு இளவரசனும் அவள் மேல் அதீத ஈர்ப்பு ஏற்ப்பட்டதை உணர்ந்து கொண்டான்!

இளவரசன் வேட்டைக்கு வரும் வழியில் சந்தித்த மகானின் சோதிடம் பலித்து விட்டதாகவே உணர்ந்தான்.”செல்லும் வழியில் தேவ மங்கையை சந்தித்து மனதைப்பறிகொடுப்பாய்”என்றாரே…?!மனம் ஒத்த இருவரும் மணம்புரிந்து கொண்டனர்!

ஒரு வாரம் தம்பதியாய் வாழ்ந்த நிலையில் இயற்க்கைச் சீற்றத்தால்,

ஓர் இரவு ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்திட ,விதி தம்பதியரை பிரித்துப்போட்டது.காலையில் அக்கரையில் ஒரு குடிசையில் அடைக்கலமாக கிடந்தவள் கண் விழித்ததும் கலங்கிப்போனாள்.தன் மகளைப்போல குடிசை தம்பதி பார்த்துக்கொள்ள,பத்து திங்கள் நிறைந்ததும் பகல் பொழுதில் சகுந்தலைக்கு ஆண்குழந்தை பிறந்தது!

குழந்தை பத்து வயது பாலகனாக இருந்த போது சகுந்தலையை ஒரு சிங்கம் தாக்க வந்ததைக்கண்ட மகன் பரதன் அச்சிங்கத்தை அடக்கி வாயைப்பிளந்து பற்களை எண்ணியதைக்கண்டு வியந்து போனாள்!

அப்போது அவனது உடம்பின் கவசம் வீழ்ந்து போக அதை தாயோ,தந்தையோ பொருத்தினால் தான் பொருந்தும் என்பதால் சகுந்தலைக்கு சிங்கத்தருகில் செல்ல பயம் ஏற்பட்டது.அச்சமயம் எங்கிருந்தோ ஓர் அம்பு வந்து சிங்கத்தை சாய்க்க,ஓடி வந்த வீரன் கவசத்தை பரதனுக்கு பொருத்த,கண்டுகொண்டான் வீரனை தந்தையென்று பரதன்!

உண்மையை பெற்றோர் இருவரும் உரைக்க, உளம் மகிழ்ந்தான்.பின் மூவரும் அரண்மனைக்குச்சென்று வாழ்ந்தனர்.தந்தைக்குப்பின் நாடாண்ட பரதன் பெயராலேயே பரத தேசம் எனும் பெயர்தான் பின்னாளில் நம் பாரத தேசமானது.வீரம் நம் பாரதத்தின் சொத்து!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *