(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6
முதல் அதிகாரம்
வழிநடந்து போகும் இளைஞன்
உலகத்தில் மிக அழகிய மலைநாட்டைப்பற்றி விரித்துச் சொல்லப்போகின்றோம். தெற்கேயுள்ள குமரிமுனையிலிருந்து மேற்குக் கடற்கரைப்பக்கமாய் வடக்குநோக்கிச் செல்லுகின்ற மேற்கணவாய் மலைத்தொடர் என்பது ஒன்றுண்டு. இம்மலை தொடரில் நீலகிரிமலைக்கு அருகாமையில் உள்ள மலைநாடு இயற் கையமைப்பிற் காணப்படும் வளங்கள் நிரம்பி மிகப்பொலிந்து விளங்குகின்றது. வளைந்துவளைந்து ஓடும் எண்ணிறந்த கான் யாறுகளாலுந் தெளிந்த அருவியோட்டங்களாலும் நீர் ஊட்டப் படும் பூக்கள் நிறைந்த வெளிநிலங்களும், இனிப்பான பழங்கள் நிறைந்த தோப்புகளால் மூடப்பட்ட மேட்டுநிலங்களுங், காட் சிக்கு மிக இனிய பசும்புல் செழிப்பாய் வளர்ந்திருக்கும் பள்ளத் தாக்கான நிலங்களும், படைகள் செல்லுவதற்கு இசையாமல் இடர்பயப்பனவாயிருந்தாலும் அமைதியாக வழிநடைப்பயணம் போகின்றவர்களுக்குப் பெரு மகிழ்ச்சி தருகின்ற மலைகளின் இடையிலுள்ள இடுக்குவழிகளும், வானில் மீன்கள் விளங்கு தல் போலப் பல்லாயிரம்பூக்களால் அழகுறுத்தப் பட்டிருக்கும். மென்புல் வளர்ந்து உயர்ந்த பொற்றைகளும், பஞ்சு சணல் நார்ப்பட்டு முதலியன மண்டிவளர்ந்து காற்றால் அலையுங் கொல்லைகளும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. இன்னும் அங் குள்ள தோப்புகளின் உள்ளே நுழைந்து காண்பேமாயின் மா துளம்பழம், பலாப்பழம், மாம்பழம், நாரத்தம்பழம், முந்திரிப் பழம் முதலியவற்றைச் சுமைசுமையாய்த் தாங்கி நிற்கின்ற மரங்கள் அடர்ந்து இருப்பது காணலாம்; அங்குள்ள மலைகளி னிடையின் இடுக்கு வெளிகளிலே உள்ளுருவிப்போய்க் காண் பேமாயின் இரண்டு பக்கங்களிலுங் குலைகுலையாய்ப் பழங்கள் தொங்குகின்ற தீவியமுந்திரிக்கொடிகள் பின்னல் பின்னலாய்ப் பிணைந்திருத்தல் காணலாம். அகன்ற இலைகளை விலக்கிக் கொண்டு புறந்தோன்றிக் கிடக்குஞ் சுவையான கொம்மட்டிப் பழங்கள் பழுத்த கொடிகள் தாமே எப்பக்கத்திலும் பெரு விளைச்சலாயிருத்தலால் அவ்விடங்களில் இருக்கும் ஏழைக் குடித்தனகாரரும் அப்பழங்களை ஒரு பொருட்படுத்துவதில்லை. இவையேயன்றிப் பறங்கிப்பழம் பூசனிப்பழங் கும்பு கும்பாய்ப் பழுத்துத் தொங்குங் கொல்லைகளைப் புதிது காண்பவர் இவை இயற்கையிலேயே இவ்வாறு கொழுமையாய் விளைந்திருக் கின்றன என்று அறியாமற் குடிகளால் நன்றாகத்திருத்திப் பயிரிடப்பட்டன வென்றே நினைப்பர். இக்கொல்லைகளைச் சூழ்ந்து வேலிபோலிருக்கும் புதர்களின்மேற் சிவக்கப்பழுத்த கொழுங்கனிகளுடைய கொவ்வைக் கொடிகளுங், குன்றிமணிக் கொடிகளும் படர்ந்திருக்கின்றன. மரப் பொந்துகள் தோறும் மலைவெடிப்புக்கள் தோறுந் தேனீக்கள் பலமலர்களினின்றுந் திரட்டித்தொகுத்த தித்திப்பான தேன் அடைகள் நிரம்பி யிருக்கின்றன.
இனி இங்கேயுள்ள காடுகளின் பக்கத்திற் காட்டுத் தாராக்கள் தலையை அசைத்து நிமிர்ந்து செல்லுவது காண லாம்; அரவம் அடங்கியுள்ள அவ்விடத்திற் பகற்காலத்திற் பற வைத் தொகுதிகள் பறக்கும்போது உண்டாகும் இறக்கையின் ஓசைதான் ஒவ்வொருநேரங் கேட்கப்படும். நீர்ஓடைகளிற் கரிய அ அன்னப்பறவைகளும் வெளிய அன்னப்பறவைகளும் மொழு மொழுவென்று ஓடுந்தெளி நீரிற் சறுவலாய் மிதந்து செல்கின்றன; வரகங்கொல்லைகளில் மடப்பான புள்ளிமான்களுங் கலை மான்களும் மிகவும் விரைவாய்த் துள்ளித்துள்ளிக் களிப்பாய் ஓடு கின்றன; யாரும் வருத்துவார் இன்மையால் முயல்கள் கூட்டங் கூட்டமாய்ப் புல்நிலங்களில் அச்சமின்றி மேய்ந்து திரிகின்றன; சிலவேளைகளில் இருமருங்கும் பழுத்தமரங்கள் வரிசையாய் அமைந்த காட்டுநெறியை மெதுவாய்க் கடந்து செல்கின் றன. சிலவேளைகளில் மிகவும்பருமனான கழுகு இங்குமங்கும் பறந்துபோவது காணலாம்; ஆயினும், அவை அருகாமையில் உள்ள மலை உச்சிகளில்தாம் கூடுகட்டி உறைகின்றன. அம்மலை களின் கரிய முழைஞ்சுகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான அருவிகள் உண்டாகிக் கீழ் அடிவாரத்திலுள்ள நிலத்திற்பாய்ந்து அதனை வளம்படுத்துகின்றன.
இங்ஙனம் அடிவாரத்திலுள்ள வளப்பமான நிலமும், அதனை அடுத்து உயர்ந்த நீண்ட மலைத்தொடருந் தம்மில் இருவேறு வகைப்பட்ட இயற்கையுடையனவாய் விளங்குதலை வேறெங்குங் காண்பது அரிது. அத்தனித்த மலைத்தொடர்ப் பாகங்களில் மலைகள் ஒன்றன் மேலொன்றாய் உயர்ந்துங், குன்றுகள்மேற் குன்றுகள் செறிந்தும், உயரத்தின்மேல் உயரமாய்க் கற்பாறை களும், அச்சம்வாய்ந்த செங்குத்தான கொடுமுடிகளும், இருண்ட இடுக்கு வழிகளும், அருவி விழுந்து குடைந்த பெரும்பள் ளங்களும், பனிப்பாறைகளும், உறைபனிகளும் நிறைந்தும் ஒருங்குப்பட்டுத்தோன்றும் மிகமேலான தோற்றமானது மிக உயர்ச்சியுடையதாயுங், கண்டார்க்கு உள்ளமேம்பாட்டை விளை விக்கும் பெருந்தகைமை யுடையதாயும் இருக்கின்றது. ஆ இங்ஙனம் நாம் விரித்துக்கூறிய இனிய அடிவாரத்தினையும் வியக்கற்பாலதாம் அவ்வுயர்ந்த மலைத்தொடரினையும் மேற்கவிந் துள்ள வானம் புயலின்றி நீலநிறஞ்சிறந்து தெளிவுடையதாய் விரிந்து எவ்வளவு தூயதாய் விளங்குகின்றது!
கொச்சிமுதலான தென்னாடுகளிலிருந்து மேற்பக்கமாய் வடக்கு நோக்கிச் செல்வோர் தமது இடதுகைப்புறத்தில் விரிந் துகிடக்கும் இம்மலையநாடு இங்ஙனம் பேரழகுடையதாய்ச் சிறந்து விளங்குதல் கண்டுகொள்க. நீலகிரிமலைச்சாரலிலுள்ள இம்மலையநாடு சேரமரபினர்க்கு உரிமையுடையதாயினும், அக் காலத்தில் அரசாண்ட நரசிங்கவருமசோழன் என்னும்வேந்தர் வேந்தன், சாளுக்கிய நாட்டு அரசர் முதலாயினாரைப் புறங் கண்டு பேராற்றலுடையனாய் விளங்கினமையால், மற்றைத் தமிழ்நாட்டு வேந்தரான சோபாண்டியர் இவனோடு எதிர்க்க அஞ்சி அமைந்திருப்ப, மலைநாட்டுக் கோடியிலுள்ள நீலகிரிமலைச் சாரல் அதனை யடுத்துள்ள சோழநாட்டோடு ஒருங்கு சேர்ந்து சோழமரபினர்க்கு உரியது போல் தோன்றிற்று. நரசிங்கவரும சோழனும் அந்நாடு தனக்கு உரிமையுடையதன்றாதல் நன்கு உணர்ந்து அதனை முற்றுந் தன்னகப்படுத்த நினையாமல் தன் படையில் ஒருபாகத்தை அங்கு நிலைப்பித்து அங்கு நடத்தப்ப டும் வாணிகஞ் செவ்வையாக நடை பெறும் பொருட்டு அதனைக் காப்பதுபோற் காட்டி வந்தான். அந்நீலகிரிநாட்டில் உள் ளோரும் வேற்றரசன் ஒருவனுக்கு நாம் அடங்கி ஒழுகக் கடமைப்பட்டுள்ளோம்’ என்பதை நினையாமல், தாம் விரும்பி யவாறு தம்முடைய சிற்றரசன் கீழ் இனிது காலங்கழித்து வந்தார்கள். இம் மலைய நாட்டி லுள்ள மக்கள் எல்லாரும் அழகாய் இருப்பர், ஆண்மக்கள் எல்லாரும் நீண்டுயர்ந்து ஒடிந்து விழுவது போன்ற அழகிய உடம்பும் பார்வைக்கு நல்ல தோற்றமும் உடையராய் இருப்பர்; பெண்மக்கள் எல்லாருந் தம் உடம்பின் மெல்லியதெளிவான சாயலானும், உறுப்பு களின் மிகத்திருந்திய அமைப்பானும், அவ்வுறுப்புகளெல்லாம் ஒரே ஒழுங்காய்க் கனிந்த அழகுடைமையானும், உலகமெங்கும் புகழ்பெற்றுச் சிறக்கின்றார்கள்.
கி-பி, சாஉரு – ஆம் ஆண்டு இளவேனிற்காலத்திடையில் ஒரு நாள் ஓர்இளைஞன் மிகவும் அழகான ஒரு குதிரைமேல் ஏறிக் கொண்டு நாம் முன்னே விரித்துச் சொல்லிய மலையநாட்டில் வந்துகொண்டிருந்தான். இவனுக்குப் பதினெட்டு ஆண்டு இருக்கலாம். இவன் பார்வைக்கு நல்லதோற்றம் உடையனாயும் இருந்தான். இவன் விழிகளிற் காணப்படுகின்ற ஒரு வகையான சுருசுருப்பு, இவன் உருவமெங்குங் கள்ளத்தன் மையுடைய தோற்றத்தை விளைவித்துத் திடுக்கிடச் செய் தலால் இவனை அழகுடையவன் என்று சொல்லக்கூடவில்லை. மற்று, இவன் உறுப்புகள் மிகச் செவ்வையான அமைப் புடையனவாய் இருந்தன. சிலவேளைகளில் இவன் கண்ணின் தோற்றத்தை நோக்குகின்றவர்க்கு இவன் கடுமை, தணியாப் பகை, கொடுமை முதலான தீய தன்மைகளுடையவன்போற் கடுமையாய்த் தோன்றும். ஆயினும், மலைநாட்டில் வாழ்கின்றவர்க்கு இத்தகையபார்வை பொதுவாக இருத்தலால், இது கொண்டே அவரது இயற்கையை அளந்தறிதல் ஒரு சிறிதும் பொருந்தாது. இங்ஙனம் நாம் வகுத்துரைக்கின்ற இவ்விளைஞனுடைய உடம் பின் சாயல் பெண்களுக்கு இருப்பதுபோல் தெளிவாய்த் திகழ்ந் தது; ஆயினும் மகளிர்க்கு உள்ள மென்மையில்லை; இவன்கதுப் பில் கடற்சிப்பியிற்போற் சிவந்த சாயத்தோய்ச்சல் இல்லையாயி னும், இளமைக்கு உரிய சிவந்தநிறஞ் செழுமையாய் இருந்தது. மோவாயில் மயிர் இல்லை. வீசைமயிர் தலைமயிரைவிட மிகக்கறு கறுத்து அரும்பியிருந்தது; தலைமயிர் பழுப்பு நிறமாய்ப் பட்டுப் போல் வழுவழுப்பாய் இருந்தது; இம்மயிரைப் பிடரிவரையில் நறுக்கித் தொங்கவிட்டுத் தலையிற் பொற்சரிகை விளிம்பு கோத்த சிறுபாகை சூடியிருந்தான். உடம்பினோடு ஒட்டி இறுகப் பிடித் திருக்குங் காற்சட்டை கைச்சட்டை யிட்டிருப்பதனாற், பூங் கொம்புபோல் ஒடிந்து விழும் இயல்பினையுடைய அவன் உடம் பின் உறுப்புகள் திருத்தமான அழகுடன் பொருத்தமுற்றிருத் தல் நன்கு தோன்றிற்று. இவன் இடுப்பில் இறுகப்பிணித்திருக் கும் அரைக்கச்சில் நொய்தான கொடுவாள் ஒன்று தொங்கிற்று. மெல்லிய தோலினால் தைத்த அடிச்சட்டை முழங்கால் அளவும் மாட்டியிருந்தான். அவன் ஏறிச்செல்லுங் குதிரையின் சேணங் கலினம் முதலியன எல்லாம் நடுத்தரமான சிறப்புடையன; சுருங்கச்சொல்லுமிடத்து, இவ்விளைஞன் பெரிய ஒருசெல்வன் வீட்டிலுள்ள ஏவலாளிகளில் உயர்ந்த நிலையில் உள்ளவனாகத் தோன்றினான்.
இனி ஒருவகையான குறிப்புள்ள இவன் கண்கள் பெருத்து நீலநிற முடையனவா யிருந்தன. அவற்றின் குறிப் பை நோக்காமல் அவை தெளிவாக இருத்தலைமட்டும் பார்ப் பவர்க்கு அவை மிகவும் அழகாகத் தோன்றும். நல்ல இயல்பு களுக்கு ஓர் உறைவிடம்போலத் தோன்றி அகன்று உயர்ந்த நெற்றியானது பொன்னிறமாய் மழமழவென்று விளங்குதலால் அவன் கண்களில் உள்ள கொடுங்குறிப்பு அவ்வளவாகத் தெரி தலில்லை. அவன் முகத்தின் கீழ்ப்பாகங்களெல்லாம் அவன் நல்லன் என்றறியும்படியாக அமைந்திருந்தன. திருத்தமாய் அமைந்த அவன் இதழ்கள் அவனிடத்துக் கள்ளங்கவடு இல் லாமை காட்டுவன போல் இருந்தன. அவ்விதழ்கள் விரியுந் தோறும் இடைஇடையே மயக்குந் தன்மையுடைய இனிய நகையொளி தோன்றுதல்போல மற்றை ஆண்மக்க ளிடத்திற் பார்த்தலரிது. அங்ஙனம் நகை தோன்றும் போதெல்லாம், நெய்ப்பான பவளத் துண்டின்மேல் ஞாயிற்றின்கதிர் விரிதல் போலவும், இங்குலிகச் செப்பின் வடிம்பில் விழுமிய முத் துகள் பதித்ததுபோலவும் இரண்டு வரிசையாகப் பற்கள் தோன்றும்.
இனி இவ்வாறு வகுத்துச் சொல்லப்பட்ட இளைஞன் குடகிலிருந்தாயினும், இன்னும் அதற்குந் தொலைவிலுள்ள நாக நாட்டி லிருந்தாயினும் வந்தவன்போல் மேல் கடற்கரையைச் சார்ந்த மேற்கணவாய் மலையகாட்டில் வந்துகொண்டிருந்தான். இவன் நீலகிரி நகரத்திற்கு நேரே போகும் வழியிற் செல் லாமல் இடையே மேற்கணவாய் மலைச்சாரலிற் கொண்டு போய்விடுங் குறுகலான ஓர் இடுக்கு வழியில் இப்போது திரும்பிச் சென்றான். இவன் சில நாட்களாக வழிநடந்து வந்திருக்கவேண்டும்; ஏனெனிற், சிறிது நேரத்திற்குமுன்னே வழிநடை துவங்கியிருந்தால் இவன் தன்குதிரையைப்பற்றி இப்போது மிகவுங் கவலைகொண்டு பார்ப்பது போற் பார்க்க வேண்டுவ தில்லை; சிறிது நேரத்திற்கு ஒருதரம் வழிச்செல் வை நிறுத்திக் கீழ் இறங்கி நிலத்திற் கொழுமையாய் வளர்ந் திருக்கும் இனியபுல் மேயவிட்டுத், தான் தீவிய முந்திரிக் கொடி படர்ந்த மரநிழலில் இருந்து சாய்ந்துகொண்டு தலைக்கு மேலே குடும்புகுடும்பாய்த் தொங்குங் கொழுவிய பழக்குலையில் ஒன்று பறித்துத் தின்னுவான்; திரும்பவுஞ் சிறிதுநேரங்கழித்து வழிநடை தொடங்குவான்; இவ்வாறு சில நாழிகையாக அவன் வந்து கொண்டிருந்தான்.
இனி இவன்போகும் இடுக்குவழி மிக நீண்டதா யிருந் தாலும் மெத்தென்ற புற்கற்றை நெடுகவிருத்தலாற் குதிரைக்கு கு வழியிற் சிறிதும் வருத்த மில்லை. அதுவேயுமன்றி, அவ்வழியி லிடையிடையே பல சிற்றருவிகள் ஓடிவருதலால் குதி ரை தன் கால்களைக் குளிரச் செய்துகொண்டுந் தண்ணீர் அருந்தி விடாய் தீர்த்துக்கொண்டுஞ் செல்வதாயிற்று. இனி ஞாயிறு மறைகின்ற நேரத்தில் இவ்விளைஞன் அவ்விடுக்கு வழியின் முடிவிற்போய்ச் சேர்ந்தான்; நடுவில் இடைவெளி யாயுள்ள மேட்டுப்பாங்கான நிலத்திற்கு இருபக்கத்துஞ் செங் குத்தாய் ஆழ்ந்துகிடக்கும் பள்ளத்தாக்குள்ள மலைச்சாரல் தொடர்புற்று இருக்கின்றது.இம் மேட்டுப்பாங்கான மலைத் தொடர்பினுள் அவன் நுழைந்து போவானாயினான்; இங்ஙனம் போகப்போக இருளோவென்று கருகித்தோன்றும் மலைத் தோற்றம் அவன் சிலநாழிகைமுன்னே வழிநடந்து வந்தவளவிய நிலத்தின் றன்மையோடு எவ்வளவு மாறுபட்டுக் காணப்படு கின்றது! மாலைப்பொழுது முற்றும் வந்து கவிந்த வுடனே, கரடு முருடான இம்மலைப்பாங்கில் விரிந்து கிடக்கும் ஓர் அடர்ந்த காட்டின் அருகே வந்து சேர்ந்தான். அவன் அங்குள்ள வழிதுறைகளெல்லாம் முற்றுந் தெரிந்தவன் போலவும் அங்கு எதற்கும் அஞ்சாதவன் போலவுங் காணப்பட்டான். மரங் கள் ஒன்றோ டொன்று பிணைந்து வழிதுறையின்றி எல்லாங் குழம்பலாய்க் கிடக்கும் அவ்விருண்டகாட்டின் இடையே புதிதாக வழிச்செல்வோர் யார்க்கும் அறியக்கூடாத வழியை இவன் கூர்மையான கண்கள் தெரிந்தெடுத்தன ; பின்னும் ஓர் அரைநாழிகையில் தழைக் கும்பின் இடையிடையே வெளிச் சந் தோன்றுதலுங் கண்டுகொண்டான்; மற்றுஞ் சில நொடிப் பொழுதில், மரங்களின் நடுவிற் குறுக்கு உத்திரங் கட்டி அதன் மேல் வெள்ளாட்டுத் தோலானும் மான்றோலானுந் தைத்த போர்வையிட்டுச் சமைத்த ஆறுகூடாரங்களுள்ள ஒரு பாசறை யினை அடைந்தனன்.
இனி இப்பாசறைவீட்டு முற்றத்தின் இரண்டிடத்தில் நெருப்புக் கொழுந்துவிட்டு எரிந்தது; இந்நெருப்பண்டையிற் சிலர் மாலைக்காலத்திற்கு வேண்டும் உணவு சமைத்துக் கொண் டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நீண்டுயர்ந்து வலியராயும் அழகாயும் இருந்தனர். உச்சியில் சிவப்புத்துணியுள்ள ஆட்டுத்தோற்குல்லாவைத் தலைக்கு அணிந்திருந்தார்கள். அவர்கள் அடியிலிட்டிருக்குந் தோற்சட்டை காலுக்குப் பாது காவலா யிருப்பதன்றியும் நடைவிரைவுக்குந் தடைசெய்வ தில்லை. அது வல்லாமற், கைத்துப்பாக்கியுஞ் சிற்றுடைவாளுஞ் செருகிய அரைப்பட்டிகையிற் கூரியகத்தியுந் தொங்கவிட் டிருந்தார்கள். கூடாரங்களுள் எட்டிப்பார்த்தால் எவ்வளவு ஆட்கள் இருந்தார்களோ அவ்வளவு துப்பாக்கிகளும் இருந்தன. சுருங்கச் சொல்லுங்கால், இம்மலையநாட்டில் நெடுங்காலம் வழிப் பறி கொள்ளை செய்துகொண்டு வருபவராயும், இந்நாட்டிற் புகுந்த நரசிங்கவரும சோழன்படைக்குக் கொடும் பகைவராயு முள்ள கள்வர் கூட்டத்தினுள் ஒரு பகுதியினராக இங்குள்ள இச்சிறு கூட்டத்தார் காணப்பட்டனர்.
இனி இப்பாசறைவீட்டண்டை வந்துகொண்டிருக்கும் இளைஞன் தன்குதிரைக்குளம்படியின் ஓசை அச்சிறு கூட்டத் தார் காதிற் படுமென்பது தெரிந்தவுடனே அவன் தன் இதழ் களைக்குவித்துப் பளீரென்று ஒருசீழ்க்கை யடித்தான். அச் சீழ்க்கை ஓசை அக்காடெங்கும் உருவிச் சென்றது. அக்கள் வர் கூட்டத்தார் தங்கள் நண்பன் வரவை அறிவதற்கு இச்சீழ்க் கை யோசை ஓர் அடையாளம்போலும்! மிகவுந் திணிந்து பின்னிக்கிடத்தல்பற்றி அக்காட்டின்வழியே சிறிது நேரமாக நடத்திக்கொண்டுவந்த தன் குதிரையோடு அவ்விளைஞன் அவர் எதிரிற் புகுந்தபொழுது நெருப்பின் வெளிச்சம் அவன் முகத் திற் படவே அவரெல்லாரும் உடனே அவனைத் தெரிந்து கொண்டனர். அவனோ அவர்களையும் அவ்விடத்தையும் புதிது கண்டவனாய் இல்லை; அவர்களும் அவ்வாறே அவனொடு நன்கு பழகினவர்களைப்போல் இருந்தனர். நண்பர்க்குரிய முகமனுரை கள் ஒருவர்க்கொருவர் வழங்கினர்; அவர்களுள் ஒருவன் அவ் விளைஞனுடன் வந்த குதிரையைக் கொண்டுபோய்த் தீனிமுதலி யன அளித்தான்.
“உண்மையாகவே இது நேர்த்தியான குதிரைதான்” என்று ஒருவன் அதன் கழுத்திற் றட்டிக்கொடுத்து “உனக்கு இது நல்ல உதவிசெய்தது” எனக்கூறினான்.
“ஆம்” என்று அவ்விளைஞன் மறுமொழிதந்து “எனக்கு இன்னும் நெடுநேரம் இருந்தது பற்றி இந்நாள் முழுமையும் மிக மெதுவாய் அதனை நடத்திக்கொண்டு வந்தேன்.உங்கள் தலைவனைத் தவறாமற்காணும் நேரம் நன்கு அறிவேனாதலால் இராப்பொழுதிற்குமுன் இங்கு வர முயன்றிலேன்” எனச் சொன்னான்.
“வேலையிருந்தால் ஒழிய” என்று அக்கள்வன் அருகி லுள்ள தீவெளிச்சத்தில் ஒரு குறிப்புத்தோன்றநகைத்து “எங் கள் தலைவனுக்கு எல்லாநேரமும் ஒன்றுதான். அது நிற்க, உன் குதிரையைப்பற்றிப் பேசுமிடத்து ” என்று தொடர்ந்து குதிரை நோட்டத்திற் பழக்கப்பட்டவன் போல் அதன் உடம்பின் ஒழுங் கையும் ஒவ்வோர் உறுப்பின் அமைவையும் மெதுவாக அளந்து நோக்கி “ஆ,இது மிக உயர்ந்த பரிமா” எனமொழிந்தான்.
”இந்த இனத்திற்கு உரிய அடையாளம் இங்கே இருக் கின்றது” என்று அவ்விளைஞன் அதன் பின்றொடையில் தீய்க்கப்பட்ட ஒரு சிறியதழும்பைக் குறித்துக்காட்டி அவனோடு ஒத்துப்பேசினான்; ஏனெனில், அம்மலைநாட்டிலுள்ள குதிரை களின் இனப் பகுப்பினை வழுவாது நெறிப்படப் போற்றிவைப் பதற்கு அவர்கள் அங்ஙனம் அடையாளம் இடுதல் வழக்கம்.
“உண்மை! இந்த இனம் நல்லதுதான்” என்று அதனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் வியந்தான்.”ஆயினும் எங்கள் தலைவன் ஏறிச்செலுத்துகின்ற குதிரையினும் இதுதாழ்ந் த்துதான். ஏனென்றால், அதன் பின் தொடையில் குதிரைக்காற் பறளைக்குறி யிருப்பதனை நான்சொல்லும்போது இளையோய், நீயே அறிவாய்” என்றான்.
”நண்பனே, நின் தலைவன் குதிரையினை நான் ஒருகாலுங் கண்டிலேன் போலவுங், குதிரை இனங்களுள் அதுமிக அருமை யான தென்பதைக் குறிக்கும் பறளை அடையாளத்தை நான் அறியேன் போலவும் நீ பேசுகின்றாய். அதுநிற்கட்டும். இப் போது எனக்காக என் குதிரையினைப் பார்த்துக் கொள்; உங்கள் தலைவனொடு நான் உடனே பேசல்வேண்டும்” என்று அவ்விளை ஞன் மொழிந்தான்.
இரண்டாவது பேசின கள்வன் அப்படியே அவனைத் தன் பின்னே வரும்படி அழைத்துக்கொண்டு போவானாயினான். வழி துறையில்லாத அக்காட்டின் இடையிலே இருவரும் புகுந்து, கூடார முற்றத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பு வெளிச்சத் திற்கு அப்புறம் போய்விட்டார்கள்; இப்போது எங்கும் ஒரே இரு னாய் இருந்தது. ஆனாற் கள்வனோ தான் செல்லும் வழியினை மிகவும் நன்றாய் அறிந்தவன் போல் விரைவாய் நேரே சென்றான். இளைஞனோ அவன் பின்னே ஒட்டிக்கொண்டு போயினான். ஒசையின்றி எங்கும் இருண்டு கிடக்கும் அவ்விடத்திற் சடு தியிலே யாரோ காவலாளன் அறைகூவும் ஓர் ஒலி கேட்டது. உடனே அதற்குக் கூடப்போகுங் கள்வன் ஏதோ விடை சொன்னான்; சிறிதுதொலைவில் மரங்களின்நடுவில் மற்றொரு வெளிச்சந் தோன்றச் சிறிதுநேரத்தில் ஒரு கூடாரத்திற்கு முன்னே தீ எரியும் முற்றத்தில் இருவரும்போய்ச் சேர்ந் தார்கள்.
முன்னேகண்ட சிறிய பாசறைக்கு உரியவற்றுள் இத னைக்காட்டினும் இக் கூடாரம் பெரியதாயும் உயர்ந்ததன்மை யுடையதாயும் இருந்தது; இதன்படாத்திலுள்ள தோலின் ஓரங்களில் நீலப்பட்டுத் தைக்கப்பட்டிருந்தது; இதன் நுழைவாயிலும், நீலப்பட்டினாற் செழுமையான பூத்தொழில் செய்யப்பட்ட திரை இடப்பட்டிருந்தது. தீயில் மணங் கமழ உணவு சமைக்கும் மட் பாண்டத்தைப் பார்த்துக்கொண்டே ஒர் ஏவற்காரன் உட்கார்ந் திருந்தான்.இளைஞனை அங்கே அழைத்துக்கொண்டுவந்த கள் வன் கூடாரத்தினுள்ளே அவனை நுழைந்து போகும்படி சொல்லிவிட்டுத் தான் வெளியே நின்றுவிட்டான்.
அக்கூடாரத்தினுள்ளே நிலத்தில் விரிக்கப்பட்ட பாயின் மேல் இருபத்துமூன்று அல்லது இருபத்துநான்கு ஆண்டிற்கு மேற்படாத ஒருவன் சாய்ந்துகொண்டிருந்தான்; அவன் முகத்திற் பிறரை அடக்கியாளும்பொருட்டு இயற்கையிலேயே அமைந் துள்ள ஒருகளை தோன்றிற்று. அவன் உயரமாகவும் ஒல்லி யாகவும் இருந்தானாயினும், ஒத்துச்சமைந்த அவன் உடம்புஞ், செவ்வையாகப் பொருத்தப்பட்ட உறுப்புகளும் அவன் மெய் வலியின் மிகுதியினை இனிது விளக்கின. அவன் தலைமயிர் கரியதாய்ச் சற்று அளவுக்குமேல் அடர்ந்திருந்தது. அவ்வாறே மிகவுங் கரியவான அவன்கண்கள் பெருந்துலக்க முடையனவா யிருந்தன. அவன் முகத்திலுள்ள மற்றை உறுப்புகளெல்லாஞ் சிறிது பரும்படியாகக் கடைந்தெடுத்தனபோல் இனிதமைந் திருப்பவாயின; அவன் முகத்தை ஒரு பக்கச்சாய்வாய்ப் பார்த்தால் மட்டும் மூக்குக் கழுகுபோற் சிறிது வளைவாயிருத்தல் தோன் றும். அவன் சிறிது கன்னமீசையும் முகமீசையும் வைத்திருந் தான். அவன் மோவாயோ மயிரின்றி நன்றாய்ச் சிரைக்கப்பட் டிருந்தது. கள்வர் கூட்டத்திற்கு உரியவண்ணம் அவன் அணிந் திருந்த ஆடை தன் ஆட்கள் அணிந்திருந்தவற்றைக் காட்டிலும் மிக உயர்ந்ததாயும், அரைக்கச்சுப் பூத்தொழில் செய்யப்பட்ட தாயுங்,கைத்துவக்குஞ் சுரிகையும் வெள்ளிவைத்து இழைத்தன வாயுங், குற்றுடைவாளும் அவ்வாறே அழகுடையதாயும், பாயின் மேல் அவன் அருகிற்கிடந்த சுழல்துப்பாக்கி திறமையான தொழிற்பாடு உடையதாயும் விளங்கின. கூடாரத்திற் றொங்க விட்டிருந்த வெள்ளிவிளக்கு இவன் முகத்தில், நன்றாய் ஒளி பரப்பினமையால் இவன் முகக்குறிப்பை நன்கு அளந்துபார்த்து இவன்மாட்டுத் தடைபடாத மனஊக்கமும்,மனக்கிளர்ச்சியும், எவர்க்கும் அஞ்சாத வன்கண்மையால் எவற்றையும் பொருள் செய்யாது முடிக்கும் பேராற்றலும், பெருந்திறமையும், அவற் றால் அவன் மற்றையோரைக் காட்டிலுந் தனக்குள்ள உயர்ச்சி யினை நன்றாய் அறிந்திருந்தான் என்னுங் குறிப்பும் அமைந்து கிடத்தலைக் கடிதில் அறிந்து கொள்ளலாம். இங்ஙனம் அவன் எல்லாவகையானுந் தன்கீழ் உள்ளார் தன் சொற்படி அடங்கி நடந்து தன் இடத்து நம்பிக்கையுடையராய் நடந்து கொள்ள வுந், தான் வேண்டும்பொழுது அவரை வலிந்து ஒன்று செய்யும் படி வற்புறுத்தி முடிக்கவுங் கூடிய ஆற்றலும் உயர்ச்சியும் உள்ளவனாயிருந்தனன்.
அவ்விளைஞனுக்கு இக்கள்வர் தலைவன் புதியன் அல்லன். அக் கூடாரத்தினுள் நுழைந்தவுடனே அவ்விளைஞன் இவனை ஓரளவான பணிவுடன் வணங்க, அத்தலைவனுஞ் சில நேரங்களில் உயர்ந்தோர் தம்மினுந் தாழ்ந்தோரை நண்புடன் அன்பாய் கடத்துமுறைப்படி நேயர்க்குரிய இனிய மொழிகள் சொல்லி அழைத்தான்.
“சந்திரா, நின்வருகை நன்றாகுக. என்னசெய்தி கொண்டு வந்தாய்?” என்று அக்கள்வர் தலைவன் கேட்டனன்.
“மேன்மை தங்கிய தலைவனே, எல்லாஞ்செவ்வையாக நிகழ்கின்றன” என்று அவ்விளைஞன் மறுமொழி தந்திட்டான்.
“இதனால், நாகநாட்டரசி யிடத்தும் நீலலோசனன் என்னும் பௌத்த இளைஞனிடத்துங் கருதிய வண்ணம் முடித்து வந்தாயென்று நினைக்கின்றேன்” என்றான் அத்தலைவன்.
“மேற்கரை என்னுந் தன் நகரத்திலிருந்து பயணம்போ வதற்கு மிகவும் இசைந்தவழியினை நீலலோசனனுக்குக் காட்டியது போலவே, நாகநாட்டிலிருந்துவரும் அழகிய குமுதவல்லிக்குங் காட்டியிருக்கின்றேன்” என்று அவ்விளைஞன் ஒத்துக் கூறினான்.
“சந்திரா, நன்கு செய்தாய்.” என்று தன்முகத்தில் மகிழ்ச் சிதோன்றச் சொன்ன அத்தலைவன் மீண்டும் “முன்னொரு முறை நீ எனக்கு மிகவும் நுட்பமாய் விரித்துச்சொன்ன வரலாற்றில் உனக்கு நம்பிக்கை உண்டோ என்பதனைத் திரும் பவும் அறிய விரும்புகின்றேன். ஏனெனில், பெறப்படுகின்ற அப்பொருளின் உயர்ச்சியை நோக்கினல்லது, அவ்வளவு பெரியதொகு துணிகரமான செயலிற் புகுதற்கு நான் நினைக்க மாட்டேன்” என்று சொன்னான்.
“யான், நுணுக்கமாய் விரித்துச்சொல்லிய ஒவ்வொன்றும் உண்மையாமென்றே நம்புகின்றேன். தாமரைவேலி என்று சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய மலையவேலியின் கண் அப் பெரும்பொருள் புதையலாய் இருக்கின்றது” என் றான். சந்திரன்.
“புதுமை! புதுமை! இம்மேற்கணவாய் மலைத்தொடர் முழுதும் எனக்குத் தெரியாத சந்து,பொந்து,மூலை, முடுக்கு ஒன்றுமே இல்லையென்று என்னைப் பெரிதாக எண்ணியிருந்த எனக்குந் தட்டுப்படாமல் தாமரைவேலி என்பதொன்று இருத்தல் பெரிதும் வியப்பாயிருக்கின்றது! அங்ஙனம் ஒன்றிருக்கு மென இதுவரையில் நான் ஐயப்பட்டது மில்லையே! ஆயினும், அப்படியொன்று இருக்கலாம் – அப்படியொன்று இருக்கத் தான் வேண்டும்!” என்று காதிற் கேட்கும்படியாகவே அத் தலைவன் முன்கினான்.
“அஃதப்படித்தான்! உயர்ந்தோய், மலைநாடர்க்குள் வழங் கும் இச்செய்தியாவது உமக்குச் சிலநேரங்களில் எட்டியிருக்க வேண்டுமே” என்று சந்திரன் அழுத்திப்பேசினான்.
“ஆம்! அதனாலேதான் நீ முதன்முதல் அக்கதையினை எனக்குச்சொன்னபோது நான் அவ்வளவு உன்னிப்பாய்க்கேட் டேன். நான் குழந்தையாயிருந்தபோது என்பெற்றோர்’- என்று சொல்லும் போதே அத்தலைவன் முகம் வேறுபடப் பெருமூச்சுவிட்டு ”ஆம் குழந்தையாயிருந்தபோது இறந்து போன என்பெற்றோர், தமிழர்க்கு முதற் றந்தையுந்தாயும் இறைவனாற் படைக்கப்பட்ட காலத்தில் இம்மலைத்தொடரின் இடையில் உள்ள தாமரைவேலியில் அவர் அவ்விறைவன் கட் டளையால் தங்கியிருந்தனரெனவும், அவர்க்குப்பின் மக்கள் யாரும் அதனுட் புகுத இடம்பெறுவதில்லை எனவும், ஆயினும், ஒரோவொருகால் நெடுங்காலம் இடையிட்டுத் திருவருளாணை யாற் செலுத்தப்படுகின்ற தூயனானதுறவி தூயதான அவ் விடத்தைக்குறுகி ஆண்டுச் சுற்றிலும் உயர்ந்து விளங்கும் மலை களின் மேலேயிருந்து கீழே பொலிந்துதோன்றும் இன்பமான இளங்காவினை அப்பள்ளத்தாக்கிற் காண்பன் எனவுஞ் சொல் துவ வழக்கம்” என்றான்.
“என்னுடைய கதையானும் நீங்கள் சொல்லியவற்றானுங் குறிப்பிக்கப்பட்ட அவ்விடந்தான் நந் தமிழர்க்கு முதற்றந் தையுந் தாயும் உறைந்த இன்பநிலமென்று நான் சொல்லவில்லை. என் அறிவுக்குப் புலப்பட்டபடி கேட்டால், அஃது அவ்விடம் அன்றென்பதே என்கருத்து. நம் முதற் றந்தை தாயர்க்குப்பின் அவ்விடம் அழிந்துபோயிற்றெனல் தான் உண்மை; ஆயினும் இம்மேற்கணவாய் மலைத்தொடரில் எங்கோ ஓரிடத்தில் அவர் இருந்த அம்மலையவேலிப் பெயர்கொண்ட ஓரின்ப இளங்கா விளங்குதல் வேண்டு மென்பது மட்டும் நான் உறுதியாய்ச் சொல்வேன். இனி நான் சொன்ன மற்றை வரலாறுகளைக் கொண்டு, அங்குப் பொற்குவியல் உண்டோ இல்லையோ என் பதனை நீங்களே அறிந்துகொள்ளலாம். ஆனால், நாம் குறிப் பிட்டுப்பேசியது மலைநாட்டில் வழங்கும் வரலாற்றுடன் மிக வும் பொருந்தியிருக்கின்றது” என்று சந்திரன் சொன்னான்.
“அவ்வரலாற்றினால், அதுபோன்ற இன்பமான இடங் கள் இம்மலைகளினிடையே பல இருக்கின்றன என்றும், அவ் விடங்களில் மிகச்சிறந்த மலர்கள் மட்டும் பூக்கின்றன, அருமை யான இளமரங்கள் மட்டுங் கொழுக்கின்றன என்றும்,பாம்புமுத லான ஊர்வனவற்றிற்கு உணவாகும் பரும்படியான தழைகள் அங்கில்லை என்றும், அமிழ்தவடிவாயுள்ள அத்தனித்த இடங்களிற் புலிகளேனும் நரிகளேனும் நுழையமாட்டா என்றும், அவ்விடத்தைச்சுற்றி அரைப்பட்டிகைபோல் உள்ள செங்குத் தான மலைகள் புறத்தேயிருந்து பார்ப்பவர்க்குத் திரை மறைப் புப்போல் அவர் பார்வையினைத் தடைசெய்தலேயன்றி வெளியி லிருந்து மக்கள் அடிச்சுவடு தோயாவண்ணம் எழுப்பிய வரம்பு போலவுங் குளிர்காலத்துக் கொடுங்குளிர்காற்றும் வேனிற் காலத்து வெங்கதிர்வெப்பமும் நுழையாவாறு கட்டிய அரண் போலவும் பயன்படுகின்றன என்றுங், கடைசியாகப் பொற் குவியலும் வெள்ளிக் குவியலும் புதையலாயுள்ள கனிகளும் உயர்ந்த முழுமணிகள் குவிந்த முழைஞ்சுகளும் உள்ளன என் றும் நாம் விளங்க அறிகின்றோம்’ என்று பெருகியெழுந்த மகிழ்ச்சி தணிந்தாற்போலத் தாழ்ந்த குரலிற் பேசினான் அத் தலைவன்.
“தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு இம்மலை நாடர்க்குள் வழங்கிவரும் அவ்வரலாற்றினை நீர் அவ்வளவு நன் றாய் நும் உள்ளத்திற் பொதிந்து வைத்திருந்தும், நான்சொன்ன அக்கதையினை நீர் ஒரு நொடி நேரமாவது ஐயமுறத் தலைப்பட் டது எனக்கு மிகவும் வியப்பாயிருக்கின்றது” எனச் சந்திரன் சொன்னான்.
”நான் அதனை ஐயப்படவில்லை; முதலிலிருந்தே நான் அதைப்பற்றி ஐயப்படாவிட்டாலும், நீ சொன்ன மற்றை எல் லாவரலாற்றிலுந் திருத்தமாகப்பேசினையோ என்று யான் உறு திசெய்து கொள்ளும்பொருட்டே பலகேள்விகள் கேட்டேன்’ என்று வழக்கமாய் எதற்கும் அஞ்சாத தன் இயல்புக்கு இசை யப் பொறுமையான குரலோடு அத்தலைவன் பேசினான்.
“நான் சொன்ன உண்மையில் நீர் ஏன்தான் ஐயப்படல் வேண்டும்?” என்று சந்திரன் கேட்டான்.
“என் நிலைமையில் உள்ள ஒருவன் தன்ஆள் சொல்லும் உண்மையில் ஐயப்படாவிட்டாலும் ஒருதரத்திற்கு இரண்டுதர மாக ஓர் உண்மையை ஆய்ந்தறியவேண்டாமா?” என்று அவன் விரைந்துகேட்டுச் “சந்திரா! நான் சொல்வதைக்கேள். உன்னைக் கடைசியாக நான் கண்டதுமுதல் நான் நினைத்தது இது: சொன்ன சிக்குமுக்கான சூழ்ச்சியில் தலைகீழாய்ச்சென்று விழு தலைக்காட்டினும், உடனே அவன்மேற் பாய்ந்துவிழுந்து அம் மறைபொருள் தெரிந்து அவனைக்கொண்டே அதனைத்தெரிந்து கொள்ளல் சுருக்கமும் அதனால் நல்லதுமன்றோ? என்னைநம்பு; உன் தலைவனை ஒருமுறையேனும் பிடித்துக்கொண்டு வந்து இம்மலைகளினிடையே என்மாட்டுக் காவலில் வைத்துக்கொள் வேனாயின் -” என்பதற்குள்;
“அவன் செத்தாலுஞ் சாவான் ஒழிய இம்மறைபொருளை மட்டுஞ் சொல்லான்” என்று சந்திரன் இடையிற்கூறி “இச் செய்திகளெல்லாம் எனக்குத்தெரிந்தபின், அவன் கடைசியாகப் பயணப்பட்டுப் போனபோது அவன் கூடவே போவதற்கு நான் நேரம் பார்த்துக்கொண் டிருக்கவில்லையா ” என்று சொல் வதற்குள்;
“நல்லது, நல்லது” என்று அத்தலைவன்மறுபடியும் விரைந்து இடைமடக்கிச் “சந்திரா, நீ சொன்னவாறே ஆகட்டும்! அதைக் குறித்து நான் ஆராய்ந்தபோது, நீசெய்த சூழ்ச்சிப்படி செய் தலை விட வேறுவழியில்லையென்னும் முடிபுக்குவந்தேன். அது சிறந்ததென்றுரைப்பதற்கும் நான் பின்வாங்கேன். பெரியநன் மை கிடைப்பதாயின், அதுமிகவுங்கலவரமான தென்று சொன்னது கொண்டு அதனால் உண்டாகும் இடைஞ்சல்களை நினைந்து பின்வாங்குவேன் என்று நினையாதே. நண்பா சந்திரனே, செய்துமுடிக்கக்கூடிய ஒன்றிற்கு எளிதான நேரான வழியெது வென்று காண்பதே எனக்கு வழக்கம்; எளிதிலே செய்து முடிக் ஈக்கூடாததாயிருந்தால் மட்டுஞ் சுற்றானமெதுவான வழியிற் செல்லமுயல்வேன். இனி விரித்துச்சொல்ல வேண்டுவதில்லை; போதும்! இப்போது மாலைக்கு உணவு ஏற்பாடாயிருக்கும்; நாம் கனை உண்பம். உண்டபின் சிலநேரம் நீ என்பக்கத்திற் பாய் ல்லேபடுத்து அயர்வுதீர்த்துக்கொண்டு விடியற்காலையில் நீலகிரி நகரத்தில் உன் தலைவனிடம் போய்ச்சேர்” என்று மொழிந்தனன்.
இரண்டாம் அதிகாரம்
எதிர்ப்பு
இப்போது சொல்லப்படுஞ் செய்திகள் முன்னதிகாரத்திற் கூறியவை நடந்த மூன்றுநான்கு நாட்களின்பின் நேர்ந்தன வாகும்.
ஞாயிறு தோன்றியபின் உடனே ஆறுபேர், குடகிலிருந் நீலகிரி நகரத்திற்குச் செல்லும் பாதையை அடுத்து அடர்ந்தி ருக்குங்குறுங்காட்டின் நீழலில் தங்கியிருந்தனர். அவர்கள் ஏறிவந் தகுதிரைகளின் நிலைமையைப் பார்க்கும்போது அவர்கள் இரவிற் சில நாழிகைகளாகவழி நடந்து வந்திருக்க வேண்டுமென்பது விளங்கிற்று. இவர்கள் தங்கிய இடம் நீலகிரிநகரத்திற்கு நாற் பதுமைலுக்கு அப்பால், மேற்கணவாய்மலைத்தொடரின் எல்லைக் குள் அடங்கியிருந்தது. ஓர் யாண்டில் முக்காற்பங்குகாலம் மிக இனியதாய் விளங்குவதான அம்மலைநாட்டில், இவ்விடியற்கால மானது மிகவும் இன்பமுடைத்தாய்ப் பொலிவுற்றது. பறவை கள் மரங்களின்மேற் பாடிக்கொண்டிருந்தன; அன்னப்புட் கள் கால்வாய்களிற் செருக்குடனே மிதந்துகொண்டிருந்தன; கொழுவியமலர்கள் இதழ் விரிந்து காற்று வாட்டத்தில் நறு மணம் பரப்பின; அளவிறந்தனவாய் முழுமுழுப் பருமனுடைய வான பலதிறமணிகளுங் குலைகுலையாய்த் தழைகளின் இடை யே ஒவ்வொருகொம்பிலுந் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும் மாதுளம்பழம் எலுமிச்சம்பழம் கொடி முந்திரிப்பழம் முதலியவற்றின் அறத்திணிந்து கொழுவியவாய் மினுமினு வென்று விளங்கும் வண்ணங்களின்மேல் ஞாயிற்றின் இளங் கதிர்கள் தோய்ந்து மிளிர்ந்தன; வானமென்னும் நீலப்படங்கின் மேல் முகிற்கறை ஒருசிறிதும் இல்லாமையால் அது தெளிந்து காணப்படுவதாயிற்று. ஒளிவிளக்கம் வாய்ந்த பொன் உருண் டைபோல் திகழும் இளஞாயிறு தன் கதிர்களைச் சூழவிரித்து நீலநிறத்தோடு விரசும் இடந்தவிர, அவ்வானின் தெளிநீல வண்ணம் இடையறுந்துபோகாமல் ஒரே ஒழுங்காய்த்தொடர் புற்று வளைவாய்த்திகழ்ந்தது.
இப்போது இக்குறுங் காட்டி லிருந்த ஆட்கள் அறுவரும் முன்னதி காரத்தில் நாங் காட்டியகள்வர்கூட்டத்திற் சேர்ந்தவர் கள் என்றறியவேண்டும். நாம் முன்சொல்லியவாறே உடை உடுத் துப் படைக்கலங்கள் அணிந்திருந்தனர்; ஆயினும், இப்போது சுழல் துப்பாக்கிகளைத் தாம் வேண்டியபோது கையாளத்தக்க வகையாய் முதுகின்மேற் றொங்கவிட்டிருப்பது ஒன்றுதான் வேறுபாடாகத் தோன்றுகின்றது.
அவர்களுக்குத் தலைவன்போற் காணப்பட்ட ஒருவன் “இவ்விடந்தான். நமக்குவந்த செய்திப்படி நமது துணிகரச் செயல் இப்போது சென்றுகொண் டிருக்கும் நாழிகைக்குள் செய்து முடிக்கப்படும். வாருங்கள்! நம்முடைய குதிரைகளை இக்காட்டுக்குள்ளே கொண்டுபோய் விட்டு, மிகுந்த நேரமுங் கொழும்புல்மேயச் செய்விப்போம்” என்று அழைத்தான்.
“இருளா, இப்போது சிறிது முன்னே நீ சுட்டிச் சொல்லிய கட்டளைகள்?” என்று மற்றொருவன் வினவினான்.
“அவை சுருக்கமாயிருந்தாலும், நம் தலைவன் எப்போதும் நமக்கு இடுங்கட்டளைகளைப் போலவே கடுமையாக இருக்கின்றன” என்று இருளன் விடை பகர்ந்தனன்.
“சிலவேளை ஐயமாகவும் இருக்கின்றன.” என்றுசேர்ந்து பேசினான் மற்றொரு கள்வன், ஆம், அவை ஐயப்படுவதற்கும் இடஞ்செய்கின்றன. அச்சுறுத்தும் நம் தலைவனாகிய அப்பெரிய நல்லான் தன் கருத்தையும் தன் முடிவான நோக்கங்களையும் எனக்குங்கூடச் சொல்லுவதில்லை. இத்தொழிலில் இங்கே நம்மை யனுப்பிவிட்ட அதேநேரத்தில் தானும் ஒருதுணிவு செயல்மேற்போயிருப்பதைக் கருதிப்பார்க்கும்போது, சந்திரனாற் சொல்லப்பட்ட ஒரு செய்திக்கும் அல்லது ஒருசூழ்ச்சிக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பது தெரிகின்றது” என்று இருளன் சொன்னான்.
“சிலகாலமாய் மூன்று நான்குமுறை நம் தலைவனிடம் வந்து கொண்டிருக்கும் சந்திரன் என்கின்ற அவ்விளைஞன் யார்?” என்று அவர்களில் மற்றொருவன் வினவினான்.
அதற்கு இருளன் “நீலகிரிப்பட்டினத்திலிருக்கும் ஒரு பணக்காரன் வீட்டார்க்கு அவன் உரியவன் என்பதற்குமேல் அவனைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நாம் இங்ஙனம் வீண்பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தைக் கழிப்பதைவிட, நல்லான் என்னிடத்துச் சொல்லிய ஏற்பாடுகளை உங்களுக் குச் சொல்லுகின்றேன், கேளுங்கள்! நாம் ஆறுபேர் இருக் கின்றோம்; நாம் எதிர்க்கவேண்டியது மூன்று பேரைத்தான் என்பது தெரியும். இந்த மூவரில் ஒருவன் வரிசையிலும் பிறப்பிலும் உயர்ந்த பொத்த இளைஞன் என்றும், மற்றை இருவரும் அவனுக்குத்துணைவர் என்றும் அறிவீர்களாக. அவர் கள் செவ்வையான குதிரைகளின்மேல் படைக்கலன் பூண்டு வருவார்கள் என்பதில் ஐயம் இல்லை; அதன்மேலும் அவர்க களுடைய ஆண்மைச்செயல் வேறே இருக்கின்றது. கூடுமாயின் இரத்தஞ் சொட்டாமல் மூவரையுஞ் சிறையாகப் பிடிக்கவேண்டுவது நம்முடைய கடமை” என்று கூறினான்.
”ஆ! நாம் துப்பாக்கிகளை வழங்கநேருமாயின் அங்ஙனம் இரத்தஞ் சிந்தாமற் பிடிப்பது மிகவும் வருத்தமாயிருக்குமே என்று அவர்களில் மற்றொருவன் இடையிலே சொன்னான்.
அதற்கு இருளன் “கடைசிவழியாயுள்ள இதற்கு மாறாகத் தான் உங்களுக்கு இது சொல்லப்போகின்றேன். அம்மூவரை யும் நம்முடைய மலைக்கோட்டைகட்கு உயிருடன் சிறையா கொண்டுபோய்விட்டால், நாம் எடுத்தமுயற்சி நன்குபாராட்டப் படுவதோடு நந்தலைவன் இட்டகட்டளையும் மிகவுஞ் செவ்வை யாக முடிந்தனவாகும். ஆதலால், கடைசியாக வேண்டியிரு தால் மட்டும் உங்களைக் காத்துக்கொள்ளும்பொருட்டுத் துப்பாக் கிகளைவழங்குங்கள். இதுதான் நல்லான் இட்டகட்டளையும்” என்று கூறினான்.
“மிகவும் வலிமையுடைய மலைநாடர்களான நாம் அறுவ ரும் ஓர் இமைப்பொழுதில் அந்தப்பௌத்தர்கள் மூவரையும் பிடி யாவிட்டால், அப்புறம் என்ன இருக்கின்றது!” என்று மற் றொருவன் சொன்னான்
அதன்மேல் வழிமறிக்கப்படும் வழிப்போக்கர்கள் வரு கின்ற பாட்டையை இருளன் ஆராய்ந்து பார்க்கச்சென்றான்; வளைந்து செல்லும்பாட்டையைச்சேர்ந்து அதனைமேற்கவிந்திருக் குங்குறுங்காடு உள்ள ஓர் இடத்தைத் தெரிந்துகொண்டு அங் கிருந்து தம்முடையசெயலை நிறைவேற்ற எண்ணி, அதற்கு அரு காமையில் உள்ள ஓரிடத்திற் குதிரைகளை நடத்திக்கொண்டு போய்க் கொழும்புல்மேயவிடுத்து, ஒவ்வொருவரும் ஒரு நொடி பில் ஏறி எதிர்ப்பதற்கு வேண்டும் ஒழுங்குகளெல்லாம் செய்து வைத்துத் தானும் பதுங்கியிருந்தான்.
இங்ஙனம் இரண்டரை நாழிகை கழிந்தது; கழிந்தவுடன் நெடுந்தொலைவிலே மூன்றுவழிப்போக்கர்கள் காணப்பட்டனர். அவர்கள் துவர்க்காவியூட்டிய தலைச்சீரா அணிந்திருந்தமையானு குறிப்பிட்டகாலத்தில் மூன்று பேராய் நீலகிரிப் பட்டினத்திற் குச் செல்லும்பாதையில் வந்துகொண்டிருந்தமையானும்,தாம் எதிர்பார்த்த கூட்டத்தார் இவர்கள்தாமென்று அக்கள்வர் உறுதி செய்தனர். குதிரை மேல்வரும் மூவரில் ஒருவன் மற்றிருவர்க்குச் சிறிது முன்னேறி வந்தனன்; இவன் தன்மார்பில் இறுக் முடிந்து அணிந்திருக்குங் குப்பாயத்தின் பொற்சரிகை மேலும், பொன்மினுக்குச் செய்த வாளுறை மேலும், இவனது குதிரையின் உயர்ந்த சேணங்கலினம் முதலியவற்றின்மேலும் ஞாயிற்றின் கதிர்கள் தோய்ந்து ஒளிர்ந்தன. ஆகையாற் றன் துணைவர் இரு விரோடு குடகிலிருந்து நீலகிரிநகருக்குப் போகும் செல்லத்தினும் உயர்ந்த நிலைமையினும் சிறந்த பெளத்த இளை ஞன் இவன்தான் என்பதிற் சிறிதும் ஐயம்உற இடமில்லை. இங்கனம் ஏதும் ஐயுறவின்றி அவர்கள் அணுகிவரவர முன்னே வந்துகொண்டிருக்கு மிளைஞன் கட்டிளமையோனாய் மிகவும் அழகுடையனாய் இருப்பதும், அவன் பின்னேவரும் துணைவர் இருவரும் இளமைகழிந்தோராயிருப்பதும் அங்குப்பதுங்கியிருந்த கள்வர் கண்டு கொண்டனர்.
உடனே இருளன் ஒருகுறிசெய்தலுங் கள்வரெல்லாரும் மரங்களின் நடுவிற் குதிரைமேல் ஏறிக்கொண்டு, குலைநெருங் கின முந்திரிக்கொடிகளின் தழைகள் திரைமறைப்புப்போற் படர்ந்திருக்குங் குறுங்காட்டோரத்தில், அவ்வழிப்போக்கர்கண் களுக்குத் தென்படாமல் எதிர்ப்பதற்கு நெருக்கமாய் வந்துநின் றனர். இப்போது விரைவாய், இரண்டாவது ஒருகுறியும் செய்யப்பட்டது. உடனே ஒரு மான் மந்தையாயினுங், காட்டு விலங்கினங்களாயினுஞ் சடுதியில் தழைகளானும் பழங்களா னும் மறைபட்ட திரையைக் கீறிக் கிழித்துப் புகுந்ததுபோல மேல் வந்து விழுந்து, இருவர் நீலலோசனனையும் மற்றை நால்வரும் அவன் பின்வந்த மற்றிருவரையும் வளைத்துக்கொண் டனர்.
இவ்வாறு அக்கள்வர் எவ்வளவு சுருக்கெனப் புகுந்தன ரோ, அவ்வளவு விரைவில் அப்பௌத்தர் மூவரின் வலதுகையினும் வாள் உறைகழிக்கப்பட்டு மின்னின; அதேநேரத்திற் சேணத்திற்செருகியிருந்த கைத்துப்பாக்கியினை இடதுகையால் ஒவ்வொருவரும் உருவி யிழுத்தனர். ஆகவே அக்கள்வர்எதிர் பார்த்தவண்ணம் அவர்கள் முயற்சி நிறைவேறுவது அரிதாய்க் காணப்பட்டது; தாம் சடுதியிலே சண்டையிட நேர்ந்ததைக் கண்டார்கள். இருளனும் மற்றொரு கள்வனும் நீலலோசனன்மேற் குதித்து விழவே, அவன் ஒருகையாற் சுழற்றி வீசிய வாள் ஒரு வன்மேற் படும்பொழுது, அவன் மற்றைக்கையிற் பிடித்த துப்பாக்கி மற்றொருவனைச் சுட்டுக் கீழே வீழ்த்தியது.இரு ளனோ அவ்வாள்வீச்சுக்குத் திறமையாய்த் தப்பிக்கொண்டு, ஒரு கையில் வாளேந்தி அவனைக் குதிரையிலிருந்து பிடித்திழுக்க மற்றொருகையை நீட்டினான். நீலலோசனோ தன் பகைவ னைப்போலவே தன் குதிரையை ஆளுந்திறம் நன்கு வாய்ந்தவ னாதலால், தன் குதிரையின் கடிவாளத்தைப் பின்னுக்குப்பிடித்து இழுத்துத் தன் பகைவன் தன்னைக் காத்துக்கொள்ளும்படி கட் டாயப் படுத்தினான். இவ்வாறு சிலநேரம் இருவர்க்கும் போர் மூண்டு நடக்கையில், இருளன் திடீரென்று தன் குதிரைமே னின்றும் வழுவி மறைந்து போயினான்; அப்படி மறைகை யில் நீலலோசனன் தான் அவன்மேல் எறிந்த படைவீச்சு அவ னைக் கொல்லத்தக்க அத்துணைக் கடுமையானதென்று தோன் றாமையால் அவன் மறைந்து போனது ஏதோ ஒரு சூழ்ச்சி யாய் இருக்கின்றதென உடனே ஓர் ஐயம் அவனுக்குத் தோன் றிற்று. தோன்றவே, அவன் தன் குதிரையினின்றும் பாய்ந்து தோற்றுப்போன அப்பகைவனைப் பிடித்துக்கொள்ள முயலா மல் இச்சண்டையின் நிலையை ஆய்ந்தறியும் பொருட்டு ஒரு நொடிநேரம் வாளாவிருந்தனன்.
உண்மையாகவே இருளன் அவ்வாறு மறைந்துபோனது ஒரு சூதுதான். மலைநாட்டுக்கள்வர் போர்முகத்தில் இத்தகைய சூதுகள் செய்வதில் தேர்ந்தவராதலின் இவனும் ஒருசூது செய்வானாய்த் தன்குதிரைமுதுகின் மேலிருந்து வழுவி அதன் வயிற்றின் கீழ்ப் பகுத்து கால்உதையும் வளையத்திற் கால் அடியை மாட்டி இரண்டு கைகளானும் பிடரியைப் பிடித்தபடியாய்த் தொற்றிக்கொண் டிருந்தனன். இந்தச்சூழ்ச்சியினால் எதிரி யைத் தன் குதிரையினின்றும் கீழ்இறக்கி உடனே அவன் மேற் புலிபோற் பாய்ந்து தனக்குள்ள பெருவலியால் அவனை உயிருடன் பற்றிக்கொண்டு தன்கருத்தை நிறைவேற்றியிருப் பான். ஓர் இமைகொட்டில் நீலலோசனன் தன் எதிரியின் நன்னம்பிக்கையைப்பற்றித் தான் ஐயப்பட்டது உண்மையென்று கண்டு மிகுந்திருந்த தன்கைத்துப்பாக்கியை உறையினின்றும் இழுத்து அதனை இருளன் மண்டைக்கு நேரேகாட்டித் தனக் குக் கீழ்ப்படியும்படி கேட்டனன். இதற்கிடையிற் போர் புரிந்துகொண்டிருப்போர்க்குப் பின்னேயிருந்து குண்டுகள் வந்து விழுந்தன; இந்நேரத்திற் கள்வர் இருவர் முன்னே காற்றினுங் கடுகிவந்து இருளனை நோக்கி “உன்னைக்காப்பாற் றிக் கொள்” என்றனர்.
மின்னல் வீச்சுப்போல் இருளன் குதிரை அப்புறந்துள் ளிப்பாய்ந்து போயிற்று; அதேநேரத்தில் நீலலோசனன் துப் பாக்கியினின்று புறப்பட்ட குண்டுகள் முறிபட்டுப் பறந்தோடுங் கள்வன் காதோரமாய்க் கிறுகிறுவென்று சுழன்றுபோயின. பறந்தோடின இருளன் இருநூறுமுழம் எட்டிப்போனவுடனே தன் குதிரையை நிறுத்தி இப்புறந்திருப்பி முதுகிற் றொங்க விட்டிருந்த கைத்துப்பாக்கியினை அவிழ்க்கத் தொடங்கினான். நீலலோசனன் கூரிய கண்களுக்கு இதுதெரிந்தவுடனே, மலை நாட்டுக்கள்வர் குறி பிழையாமற்சுடுவதில் கைதேர்ந்தவர்களென் பதனை உணர்ந்து, தான் அப்பகைவன் குண்டுக்கு இலக்காய் அகப்படாமல், தன் குதிரையைமுடுக்கிக் குறுங்காட்டினுள்ளே புகுந்துபோய்த்தப்பினான். இவன் இங்ஙனந்திரும்பிவந்தவுடனே துப்பாக்கிக் குண்டுகள் இவன் பின்னே அருகிற் கிறுகிறு வென்று சுழன்று சென்றன. இருளன் தான் எடுத்த துணிவுச் செயல் முற்றும் தப்பிப்போய்விட்டதை அறிந்து குதிரையைத் திருப்பிக்கொண்டு விரைந்துபோயினான்.
இதற்குமுன்னமே நிலலோசனன் தன்பின்வந்த கால் லாளரும் அவரைத்தாக்கிய கள்வர் நால்வரும் எங்ஙனமாயினார் என்பதனை ஓர் இமைப்பொழுதில் அறிந்து கொண்டனன்; இப்போது அச்சண்டையின் முடிவைச் செவ்வையாக அளந் தறிவதற்கு ஒழிவுநேரம் வாய்த்தது. கள்வர் அறுவரில் இருவர் அப்பௌத்த இளைஞனை மறித்தனர்; இவ்விருவரில் ஒருவன் சுடப்பட்டு விழுந்திறந்தான்; மற்றையோன் பிழைத்தோடிப் போயினான். காவலாளர் இருவரையும் தாக்கிய கள்வர் நால்வரில், இருவர் தலையிற் சுடப்பட்டு உயிர் ஒழிந்து நிலத்திற் கிடக் தனர். மற்றிருவரில், ஒருவன் கத்திவெட்டினால் வாளேந்திய தோள்வலி கெட்டும், மற்றொருவன் கழுத்து முள்ளெலும்பு தகர்த்தும் கடுங்காயம் உற்று எதிர்நிற்கலாற்றாது முன்னே சொன்னவாறாய் ஓடிப்போயினர். ஆகையால் நீலலோசனன் காவலாளருந் தந்தலைவனைப் போலவே வெற்றிமறஞ் சிறந்து விளங்கினர். ஆயினும் இவர்களில் ஒருவனுக்குமட்டும் இடது தோட்புறத்துச் சதையில் வாள் அழுந்து வெட்டுக்காயம் சிறிது இருந்த தொன்றைத் தவிர, மற்று அவர்கள் இச்சண்டையின் விளைவைப்பற்றித் தம் தலைவனுடன் கூடி மகிழ்தற்கு இடம் பெற்றவராயினர்.
கொல்லப்பட்ட கள்வர் மூவருடைய குதிரைகளும் இவர் கள் கட்பார்வைக்கு அகப்படாமல் அவ்விடத்தை அகன்று ஓடிப்போய் விட்டன. நீலலோசனனும் அவன் காவலாளரும் வழிநடுவிற் கிடந்த அப்பிணங்களை அகற்றிக் கொடிமுந்திரிப் பந்தர் நிழற்கீழ்க் கிடத்தி விட்டுத் தாம் போம்வழியிற் செல் வாராயினர். செல்லும்போது இங்ஙனம் வந்து வழிமறித்த வர்கள் முடிவான நோக்கமேதுமின்றிக் கொள்ளையிடுதலையே குறிப்பாகவுடைய ஆறலை கள்வர் கூட்டத்திற் சேர்ந்தவர்கள் என்று நம்பினர்.
அப்போது நீலலோசனன் அவரைப்பார்த்து ”என்றாலும் அக்கொடியகள்வர் குறுங்காட்டில் மறைந்திருந்தபடியே நம் மைச்சுடாமல் எதிரேறிவந்து போரிட்டது எனக்கு மிகவும் புதுமையாய் இருக்கின்றது. அப்படி அவர்கள் சுட்டிருந்தால் நாம் எல்லாம் உயிரிழந்திருப்போம். மலைநாட்டுக்கள்வர் குறித் வறாமற் சுடுவதில் மிகவும் வல்லரென்பதில் ஐயம் இல்லையன் றோ” என்று கூறினான்.
அதைக்கேட்டதும், அடர்ந்து நரைத்துப்போன தாடியும், ஆண்மை மனவுறுதி அருள் முதலிய இயல்புகள் அவன்றன் இனத்தாரின் அடையாளமாய்க் கலந்து விளங்குகின்ற முக மும், தடித்துத் திணிந்த உடம்பும் உடையவனான மூத்தகாவ லாளன் “எங்கள் அரசின் செல்வமே, நம்மிடத்துள்ளவைகளை யெல்லாங் கொள்ளை கொள்வதுமட்டுமே யன்றி நம்மைச் சிறையாகப் பிடித்துக் கொண்டுபோய்த் தம் மலைஅரணில் வைத்திருந்து விடுதலை பெறும் பொருட்டுப் பெருந்தொகை யான பொருளும் அடையலாம் என்கின்ற முதன்மையான நோக்கத்தோடும் அவர்கள் நம்மை எதிர்த்தவர்களாகக் காணப்படுகின்றனர்.” என்றனன்.
அதற்கு நீலலோசனன் ” என் நம்பகமுள்ள கேசரிவீர நீ எண் ணிச்சொல்லியது எனக்குப்பொருத்தமாகத் தோன்றுகின்றது. அம்மறவர் கணக்கிட்டது அங்ஙனமாயின் அவர்தோல்வியடைந் ததும் நாம் வெற்றியடைந்ததும் அவர்களுடைய அவ் ஏற்பாட் டினால் அல்லவா? அவர்கள் முதலிலேயே துப்பாக்கிகளை எடுத் துவழங்காமல் கிட்டவந்து எதிர்த்து நீலகிரி நாட்டார்க்குரிய வலிமையினையும் குடகுநாட்டார்க்குரிய வலிமையினையும் ஆராய்ந்து அறிந்து கொண்டனர்” என்று கூறினான்.
அதுகேட்ட இளையகாவலாளனான வியாக்கிரவீரன் “எங்கள் அரசுரிமைச் செல்வமே, முதன்முதற் பின்முதுகுகாட்டி யோடினபழிகாரர் இருவருந்தங்களால் ஒன்றுஞ்சாயாது என்று கண்டவுடனே துப்பாக்கியை எடுத்துச் சுட்டனர்; என் சொற்படியெல்லாம் யான் உந்துமாறெல்லாம் வட்டமாய்த் திரிந்தும் முன்னோடியும் பின்னோடியும் நடக்கின்ற என்குதிரையின் திறமையாலன்றோ தங்கள் உண்மையுள்ள ஊழியக் ரனான அடியேன் தப்பிப்பிழைத்துத் தங்களோடு இப்போது பேசிக் கொண்டிருக்கின்றேன்!” என்றனன்.
என்றதுங் கேசரிவீரன் “என் காதருகிலும் விசைக்காற்று விறுவிறுவென்று வீசுதல்போலக் குண்டுகள் சுழன்றுபோயின் அதுகிடக்க, நாம் கௌதமசாக்கியரை வணங்குவேமாக! வெற்றி நம்பக்கமாயிற்று. வியாக்கிரவீரன் தோளில் வாள் கீறியது ஒன்று தவிர, நாம் வேறோர் இடையூறு மின்றி வந்து சேர்ந்தமை வியப்பேயாம்.” என்று மொழிந்தான்.
இங்ஙனம் பேசிக்கொண்டே நீலலோசனனும் அவன் காவலாளரும் வழிபிடித்துப் போயினர்; அரசிளைஞனும் இப் போது தன்காவ லாளருடன் சேர்ந்துபோயினான்; மற்றொரு முறையும் வழிமறித்தல் நேரிடுவதாயின் அதற்கு உடனே கை யாளுதற்பொருட்டு மூவருந் துப்பாக்கியை மருந்திட்டு இடித்து ஏந்திச்சென்றனர்.
செல்லும்போது சிறிதுநேரங்கழித்துக் கேசரிவீரன் “எங் கள் அரசே, நம்மைவழிமறித்தவர்கள், சோழநாட்டார்க்கும் மலை நாட்டார்க்கும் சிலகாலமாய்ப் பெரியதோர் அச்சத்தினை யுண்டு பண்ணிவருங் கள்வர்தலைவனைச் சேர்ந்தவர்களா யிருக்கலாம்என் பதுதங்களுக்குத்தோன்றவில்லையா?” என்று கேட்டனன்.
அதற்குநீலலோசனன் “நல்லானைக் குறிப்பிக்கின்றனை யோ? ஆம், அவனைப்பற்றிப் புதுபுதுக்கதைகள் இந்நீலகிரி மலைசாரல் எல்லையைத் தாண்டிக் குடகிலிருக்கும் நம்முடைய செவிகளுக்கும் எட்டுகின்றன: உனக்குஉண்மையைச் சொல்லு கின்றேன், நான் அந்தக்கதைகளை வெறும்பேச்சாகவே நினைக் கின்றேன். நல்லான் என்னும் ஓர் ஆளே உண்டென்பது பெருங் கட்டு அவன் ஒருமனப்பேய்தான்” என்றனன்.
“எங்கள் தலைவ, நல்லான் என்பது கட்டாயிருக்கலாம். மிகச் சிவரான வழித்துணைவரோடு நீங்கள் நன்றாய்ப்போகலாமென்று கூறப்பட்ட உறுதிமொழிக்கும்மாறாகச் சென்ற இரண்டொரு ழிகை நிகழ்ச்சியினாலேயே இப்பக்கங்களில் படைக்கலம்பூண் டவரான ஆறலைகள்வர்கூட்டம் உண்டென்பது நமக்குப்புலப் படவில்லையா?” என்று கேசரிவீரன் வினவினான்.
அதற்கு நீலலோசனன் “இங்ஙனம் பயணஞ்செய்யும்படி என்னைத் தூண்டுதல்செய்த ஒருசெய்தி கொண்டுவந்தவனான அந்தமலைநாட்டு இளைஞன்றான் அங்ஙனம் உறுதியுரை மொழிந் தான். அவன் தான் மெய்யென்று நம்பினதையே கூறினான் போலும்! அதுவேயுமன்றி நான் செல்வதைப் பிறர்உற்றுப்பா ராதபடி அன்றோ பயணஞ்செய்யும்படி கற்பிக்கப்பட்டேன். ஆ! அதோஎதிரே ஒருகுடிசை தோன்றுகின்றது. நாம் அங்கே கடு கச்சென்று, அங்குள்ளோர்க்கு இங்கேநிகழ்ந்தனயாவுந் தெரி விப்பேம். அவர்கள், நாம் வழியண்டையிலே கிடத்திவந்த பிணங் களை அப்புறப் படுத்துவதற்கு வேண்டுவது ஏதேனுந்தாமே செய்வர்.” என்று கூறினான்
அப்படியே அம்மூவருங் குடிசையண்டை போய்ச் சேர்ந் தனர்; அங்கிருந்த முதியோன் ஒருவனுக்கு நிகழ்ந்தனவெல்லாஞ் சொல்லப்பட்டன. நல்லான் நடத்தும் ஆறலைதொழில்கள் இனிது நடைபெறுகின்ற மேற்கணவாய் மலைச்சாரலையடுத்த இடங்களுக்கு நெடுந்தொலைவிலே இங்ஙனம் வழிமறிப்பு நேர்க் கதைப்பற்றி அவன்மிகவும் வியப்படைந்தவன் போற் காணப் பட்டான். அதனோடு, மூன்று பௌத்தரால் மிகவலியரான ஆறு கள்வர் முற்றும்முறியடிக்கப்பட்ட தனைப்பற்றி அவன்பின்னும் மிகுந்த வியப்படைந்து, அவர்கள்சொற்களில் நம்பிக்கையற்ற வனாய்க் காணப்படவே, கொல்லப்பட்ட அக்கொடிய கள்வர் மூவர்உடம்பும் பிணமாய் வழியிற்கிடத்திலைக் காணலாம் என்று அவர்கள் அவனுக்கு உறுதியுரை தந்தனர்.
இங்ஙனம் மலைநாட்டுக்காவற்றலைவர்களுக்குத் தாஞ்செய்ய வேண்டுங்கடமையைச் செய்துவிட்டுச், சிலநேரம் அக்குடிசை யில் விடுதிகொண்டபின் நீலலோசனன் தன் துணைவர் இருவரும் பின்னேவர வழிபிடித்துப் போயினான். இக்காவலாளர் இரு வரும் வெறிதேஊழியக்காரர் அல்லர். நீலலோசனன் சிறந்த மன்னவன் ஆகையால், அவனுடன் வந்த இவர்கள் செல்வர் என்று அறிதல்வேண்டும்.
இங்கே, இவ்வரசிளைஞன் கேசரிவீரன் வியாக்கிரவீரன் என்னும் இருவருடனும் வழிப்போய்க் கொண்டிருக்கும்போது, நமக்கு நல்லநேரம்வாய்த்தமையால் அவன் உடம்பின் தோற்றத் தைப்பற்றி இன்னுஞ்சிலசொற்கள் சொல்லவிரும்புகின்றோம். இவன்மிகவும் அழகாயிருந்தான் என்று முன்னமே சொன்னோம். இவனுக்குக்கரிய குஞ்சியும் கரியவிழிகளும் இருந்தன; இவன் மீசையானது, துகிலிகையால் நேர்த்தியாய் வனைந்தவாறுபோ லப்பளபளப்பாய் முனைசுருண்டு மேலுதட்டின் மேற்கவிந்திருந் த்து; இவனது மூக்குக் கழுகுபோற் சிறிதே நுனியில்வளைக் திருந்தது; ஆனாலும் இதுவும் முகத்தில் உள்ள மற்றை உறுப்புக் களும் சிறிதுமெல்லிய தன்மையுடையவாய் அமைந்திருந்தன. இவன் உடம்பின் நிறம் பெரும்பாலார்க்கு உள்ளதுபோலக் கரிய தாயில்லை; ஆயினும், ஞாயிற்றின் வெப்பத்தாற் சிறிதுபழுப்பு வண்ணமாய்த் தோன்றுதலின், இவனுடைய நிறம் இளமை யுருவிற் சிறிது ஆண்மைத்தன்மை காட்டிற்று. இல்லாவிட் டால், இவன்நிறம் இன்னுந்தெளிவாய் இளமைப்பருவத்திற்கு இசைந்ததாய்விளங்கும். இவ்வாறு உடம்பின்நிறம்பழுப்பாய்த் தோன்றுதற்குக் காரணம், ஆண்பாலார்க்குரிய வேட்டையாடு தலிலும் வேறுபயிற்சிகளிலும் இவன்மிகுந்த விருப்பமுடை யோனாய்ப் பகற்காலங்களில் திரிவதொன்றே என்பது தோன்று கின்றது. வேட்டையாடுவதிலுங் குதிரையேற்றத்திலும் இவன் நிரம்பியதுணிவும் திறமையும் வாய்ந்திருந்தனன். சிறிதுநேரத் திற்கு முன்னேவந்து வழிமறித்த கள்வங்களை அஞ்சாது, இவன் அவர்களைப்புறங்கண்டு வெற்றிசிறந்து விளங்கினதைப்போலவே, இன்னுங்கடுமையான போர்முகங்களிலெல்லாம் அங்ஙன மே மறஞ்சிறந்து திகழ்ந்தனன். இவனிடத்துப் பொறுமை யும் இரக்கமும் குடிகொண்டிருந்தன; இன்னும் இவனது நடை யில் ஆண்டன்மையோடுகூடிய ஒரு பெருந்தகைமை சிறந்து காட்டுவதாயிற்று. அச்சம் என்பதனை இவன் அறியவேமாட்டான்; இடர் என்கின்ற சொல்லைக் கேட்பினும் நகையாடுவான். இல் வியல்பினனேனும், தன்போன்றஓர் உயிர் வருந்துதலைக் காணி னும்,ஒருயிர் துன்புற்றகதையைக் கேட்பினும் இவன்கண்களில் நீர்முத்துமுத்தாய்த் துளிக்கும்.
இவனுக்கு இப்போது இருபத்தோர் ஆண்டு இருக்கலாம். இவனுடம்பு உயர்ந்து பூங்கொம்புபோல் மெல்லிதாயும், திருந் திய அமைப்புடையதாயும், மதவேள்போலக் கைகால் முத லான உறுப்புக்கள் நீளமாயுந்துவண்டன. வழுவழுப்பான வெள் ளைச் சலவைக்கல்லில் இவன்உடம்பின் உறுப்புகளைப் பார்வை யாகவைத்து உளியாற்செதுக்கி இழைத்து ஒருபாவை அமைக் கப்படுமாயின் அது வழுவற்றஆண்டன்மையினைக் குறிக்கும் வடிவமாய் நிலைபெறுமென்பது திண்ணமேயாம். அவனது நெற்றி அகன்று மேன்மையாய்விளங்கிற்று; தடிப்பின்றி மிக முரிந்துவளைந்த இவனுடைய புருவங்கள் கரியவாய் இருந்தன. கண்ணிறைப்பை செவ்வையாகக் திறந்திருந்தன; விழிகள்பரு மனாய் இமைகளிற் பெண்பாலார்க்கிருப்பதுபோற்கருகியடர்ந்த மயிர்வரிசையும் இருந்தன; தன்னை உயர்த்திப் பிறரைத்தாழ்த் தும் இறுமாப்பு செருக்கடைதல், தறுகண்மை, எண்ணிப்பா ராததுணிவு என்னும் தீயஇயல்புகள் இவனிடத்து ஒருசிறிதும் இல்லை. ஆயினும், ஆண்டன்மையும் போர்முகத்து அஞ்சா மையும் என்கின்ற உயர்ந்த இயல்புகள் வாய்க்கப்பெற்ற இளைஞர்க் குத் தம்உயர்வு தாமேயறியும் ஓர்உணர்ச்சியும் தற்றுணிவும் இயற் கையாக உண்டாதல்போல இவனிடத்தும் இப்பெற்றிப்பட்ட தோர் உணர்ச்சி தோன்றுதல் உண்டு. இவன் கன்னமீசை வைத்திராவிடினும், மேல் இதழில் உள்ள கரியமீசையும், எலுமிச் சம்பழத்தைவிடச் சிறிது பழுப்பாகத்தோன்றும் மேனியின் நிற மும், எதற்கும் அஞ்சாத கண்களின் நோக்கமும் இவன் முகத் தின்கண் ஓர் ஆண்டன்மை விளங்கத் தோற்றுவித்தன.
இளைஞனான நீலலோசனன் இங்ஙனம் பேரழகுடைய னாய்த் திகழ்ந்தனன். இவன் உடுத்திருந்த உடைகளை நோக்கு மிடத்து அக்காலத்து அரசர்வழக்கப்படியே அணிந்திருந்தனன் என்பது தோன்றிற்று. ஓரங்களிலும், மார்பின்புறத்தினும் முன்கையிலும் பூத்தொழில்செய்யப்பட்ட பொற்சரிகை பின் னப்பட்டு இருண்டபச்சைநிறமுடைய சட்டை மினுமினு வென்றுமிளிர்ந்து இவனது வடிவழகை இனிதுவிளங்கக்காட் டிற்று. இவன் அரையின்கீழ்ப் பூண்டிருந்த காற்சட்டையில் நீளத்தைத்திருந்த பொற்பட்டையினால் அரைக்கீழுள்ள உறுப் புகள் கிளர்ச்சிமிக்க குதிரையை அழகாய் அஞ்சாமல் நடாத்தும் போதுமிகவுந்திருந்திய இலக்கணம்வாய்ந்து தோன்றின. இவன் தொங்கவிட்டிருந்த கொடுவாளுறை நாம் முன் மொழிந்தபடி யேபொன்மினுக்குப் பூசப்பட்டிருந்தது. அதன்பிடியில் உயர்ந்த முழுமணிகள் அழுத்தப்பட்டிருந்தன. குதிரைமேற்போர்வை யில் பொற்சரிகையினால் அழகிய உருக்கள் பின்னப்பட்டு விளங் கின. எவ்வாற்றானும் ஆண்டன்மை இனிதுதோன்றக் குதி ரைமேல்வரும் இளையநீலலோசன்னது அழகிய உருவமானது, அம்மலைநாட்டு அழகிய இளமகளிர் அவன் செல்வதைப் பார்க் கும்பொருட்டுத் தங்குடிசைகளினின்றும் புறம்வந்து நோக்கு கையில் அவர்தம் கண்ணையுங் கருத்தையுங் கவருந்தன்மையதாய் இருந்து; இவனைப்பார்த்த அம்மலைநாட்டு ஆடவரோ இவ் விளைஞன் குதிரைமேல் அமர்ந்துவரும் எளிதான நிலையினையும் ஆண் கைமையினையும் வியந்துநோக்கி அவனைத்தாங்கிய குதி ரையின் சிறந்தஉறுப்பின் அமைவையும் உற்றுப்பார்த்து மகிழ்ந் தனர். இங்ஙனம் இவன்வருகையில் இவனுடன் பின்வருவோர் இருவரேயாயினும், இவன் உருவத்தோற்றமானது அங்குள்ளார் கருத்தையெல்லாம் இவன்பால் இழுத்தது.
இவனும் வழிதொடர்ந்துபோன வண்ணமாய் இருந்தனன்; இவ்வாறு பலநாழிகைகடந்தன. தானுந் தன்காவலரும் இடை யிடையேதங்கி இளைப்பாறிக் குதிரைக்குத் தீனிகொடுத்துக் கொண்டு கடைசியாக மூன்றுவழிகள் பிரியும் ஓரிடத்தில்வந்து சேர்ந்தனன். இப்போது அவர்கள் எந்தவழியிற் செல்வதென்று தெரியாமல் திகைத்தனர்; இம்மூன்றில் எதுநேராக நீலகிரி நகரத்திற்குச் செல்லுகின்ற தென்பதைக் கேட்டு அறியும்பொ ருட்டு அருகாமையில் ஏதேனுங்குடிசைவீடு இருக்கின்றதா வெனச்சுற்றிநோக்கினர். அப்பொழுது தனக்குச் சிறிது தொலை வில் ஒருகரைமேல் கிழவனொருவனிருப்பதை நீலலோசனன் கண்டான். இக்கிழவன் அம்மலைநாட்டில் தாழ்ந்தகுடியிற் பிறக் தவர்க்குரிய முறைப்பான உடை கட்டியிருந்தான்; பணிசெய்யப் போம்பொழுது இளைப்பாறுதற்பொருட்டு அங்கேசிறிது நேரம் இருந்தவனாகக் காணப்பட்டான். இவனைப்பார்த்து வழி எது வென்றுகேட்ப, அவனுந் தானிருந்தவழியே நேராக நீலகிரிந் ரத்திற்குச் செல்லுகின்றதென்று உரைத்தான். உடனே நீலலோசனன் அவன் முகமாய் ஒரு பொற்காசு வீசின ன். அந் நாட்டிலுள்ளோர் வறியராதலால் இப்பொற்காசினைக் கண்ட வுடன் மிகப்பணிந்து அன்புதோன்ற அஃதீந்தோனை வாழ்த்து வர். மற்று இக்கிழவனோ அக்காசினை மிகவும் பராமுகமாய் எடுத்துக்கொண்டு அக்காசு தந்த இளைஞனை நோக்கி வெறுப் புடன் சுருக்கமாகச் சிலநன்றியுரை கூறியபின், அரசிளைஞ் னுக்குத் தான் காட்டியவழிக்கு எதிர்முகமாய்ப்போயினான்.
போனவன் சிறிதுதொலைவிலுள்ள காட்டினுள்ளே புகுந்து மரத்தொகுதிகளின் நடுவே மறைத்து அமைக்கப்பட்ட ஒரு குடிசையினுள்ளே நுழைந்து, தான் எடுத்துவந்த பொற்காசி வன நிலத்தின்மேல் இகழ்ச்சியோடும் வீசியெறிந்து காரம் என்கொடும் மிக்க வெறுப்போடு ”ஒருநொடி நேரமாவது பகைவன் கையினின்றும் இக்காசினைப் பெறும்படி நேர்ந் ததே! அவன் என்னைத் தோற்கஅடித்தனனே! நான் அவனால் தாழ்வடைந்தேனே!” என மிகவருந்திக்கூறினான்
அப்போது அக்குடிசையிலிருந்த நடுத்தரஆண்டு உடைய னான ஒருவன் சினத்துடன் எறியப்பட்ட அக்காசை எடுக்க விரைந்துபோய் “என் நண்பனே உனக்குயாதுநோய் நேர்ந் தது? ஏன் இங்ஙனம் உரக்கக்கூவி வருந்துகின்றாய்?” என்று வினவினான்.
அதற்கவன் “அது கிடக்கட்டும். இதோநீ கொடுத்த இக் கோலத்தை நீயே எடுத்துக்கொண்டு, எனக்குரிய உடையினை என்னிடங்கொடுத்துவிடு! கூலித்தொழிலாளிக்குரிய இக்கோலத் தினால் யான் ஒருதொழுத்தைபோல் நடத்தப்பட்டேன். ஆயி னும், அச்செருக்குடைய பௌத்த இளைஞன் அக்காசினை வீசியபோதே, அவனை ஏமாற்றினேன்! என் முகத்திற் குழப் பித்தடலின் இவ்வழுக்கைக் கழுவுவதற்கும், இயற்கையிற்கரிய என்மயிரை வெளுக்கச்செய்த இவ்வெள்ளைப் பொடியைப் போக்குவதற்கும் எனக்குத்தண்ணீர் கொண்டுவா” என்றான்.
அக்குடிசை வீட்டிற்கு உரியனான அக்குடியானவன், கன்முன்னறியாத அப்புதியோனைத் தான் “நண்பனே” என் றழைப்பினும், இப்போதுவெருக்கொண்டுநோக்கிப் பின் அவன் பராமுகமாய் வீசிய பொற்காசைக் கையில் எடுத்துக்கொண்டு “எதுவாயிருப்பினும் நீ நினைந்ததொன்றை முடித்தற்கு மேற் கொண்ட இக்கோலம் உனக்குப்பயன்படவில்லையோ?” என்று கேட்டான்.
கேட்டதும் “அது கிடக்கட்டும், எனக்குத் தண்ணீர் சொடு! என் உடைகளையும் படைக்கலங்களையுங் கொண்டுவந்து வை! என்குதிரையைப் பிடித்துவா! யான்பிறந்த மலைநாட் டிற்குப்போய்த் திரும்பவும் நான் இளைப்பாறுவதற்கு மிகவிரும்பு கின்றேன்” என்று அவன் மறுமொழி புகன்றான்
அவ்வாறு அவன் விரும்பியபடியே அக்குடிசைக்காரன் யாவுஞ்செய்தானாக, அம்மற்றையோன் தன் முகம் மயிர்முதலிய வற்றைக்கழுவிக்கொண்டு, தான் முன்மேலிட்ட குடியானவன் உடுப்புகளைக்களைந்து எறிந்து, தன்னுடைகளை யுடுத்துக் குதி ரைமேலேறி மகிழ்ச்சியோடும் விரைந்துபோயினான். இவன் யாரோவெனிற் கள்வனான இருளனேயன்றிப்பிறன் அல்லன்.
இனி இங்ஙனம் பொய்க்கோலத்தில்வந்த குடியானவனால் வழிதவறிச் செல்லுகின்ற நீலலோசனனையும் அவன் துணைவர் இருவரையும் பற்றி உன்னிப்போம்.
“அந்த ஆளிடத்தில் அசட்டுத்தனமே யன்றி இன்னும் ஏதோஒன்று இருப்பது மாட்சிமை நிறைந்த தங்கட்குத் தோன் றுகின்றதா? அவன்முகத்தில் ஒரு தீக்குறிதோன்றியதென்று நினைத்தேன். அவன் தங்கள் திருமுன்பு விடை சொல்லு கையில் தங்கள் திருமுகத்தை நன்றாய்நோக்காமல் தன் கைக் கோலால் கீழே சிதறிக்கிடந்த கற்களைத் தட்டிக்கொண்டு இருந் தன்னே” என்று நுட்ப வறிவினனும் மிக விழிப்பானவனு மான கேசரிவீரன் கூறினான்.
அதற்கு நீலலோசனன் தன் கரிய மீசைமயிரோடு இகலி முத்துவரிசை போன்ற தன் அழகிய பற்கள் பளீரென்று துலங்க நகைத்து “அரண்மனையில் நடைபெறும் தகவொழுக் கங்களை மலைநாட்டுக் குடியானவன் பாற் காண்டற்கு என்அன் புள்ள கேசரிவீர, நீ எதிர்பார்க்கலாகாது. அவன் நம்மை ஒழுங் கான வழியில் செலுத்தியிருந்தானாயின், அவனது குறும் பானநடையைப்பற்றிச் சிறிதும் நாம் கவலல் வேண்டாம்” என்றனன்.
அதற்குக் கேசரிவீரன் “நல்லது, அவன் நமக்குச்செவ்வை யான வழியைக் காட்டியிருந்தானாயினன்றோ? அஃதின்னுஞ் சிலநாழிகைக்குள் தெரிந்துவிடும். தங்கள் மாட்சிமை நிறைந்ததிரு முன்பு பெரிதும் வணக்கமுடையேனாய் யான் நினைத்துக்கூறுவ து இது: போகப்போகக் குறுகி இடுக்குவழியாய்ப்போகும் இந் நெறி நீலகிரிநகரத்திற்கு நேரே செல்லும் பெரும்பாட்டையாகச் சிறிதும் தோன்றவில்லை.” என்று விடைபகர்ந்தான்.
வழியும் உண்மையாகவே குறுகலாய்த்தான் இருந்தது; அது குறுகிச் செல்லச்செல்ல அதன் அழகு நிரம்பவும் பொலிவு பெற்று விளங்கிற்று. தலைக்குமேலே ஒன்றோடு ஒன்று பின்னலாய் வளர்ந்திருக்கும் மரங்கள் தண்ணிய நிழலைப்பயந்து வழிச் செல்வார்க்கு ஞாயிற்றின் வெம்மையை மாற்றின. கோடிக் கணக்கான நறுமலர்கள் அக்கரையைக் கவிந்திருந்தன. அவ் வியல்பை நுணுகி நோக்கும்போது, உலகமங்கை தன் மலர்ச்சு மையைத் தாங்கிப்போவதற்கு ஏலாமல் அயர்ச்சியடைந்து அவற் றைஅங்கே சொரிந்துவிட்டாற்போலத் தோன்றிற்று; முந்திரிக் கொடிகள் மிகத்தித்திப்பான பழக்குலைகளைச்சுமந்து கிடந்தன; இன்னும் பலவேறுவகைப்பட்ட இனிய பழங்களும்வழிச்செல்வார் கைக்கு எட்டத்தக்க வகையாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.
“இந்த நெறிதான் நீலகிரி நகரத்திற்கு நேரே செல்வதா யிருக்கவேண்டுமென உறுதியாய் நம்புகின்றேன். இன்னும் இது போகப்போக இவ்வாறே அழகிற்சிறந்து தோன்றுமென்று புலப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் நாம் போம்வழியில் யா ரேனும் எதிரேவந்தால் அவரைக்கேட்போம், அல்லது ஏதே னும் ஒருகுடிசைவீடு அருகாமையிலிருந்தாலும் தெரிந்துகொள் வோம்.- அதோ ஒரு சிறிய ஓடை ஓடும் சிற்றொலி கேட்கின் றது! நான் மிகவும் விடாய்கொண்டிருத்தலால் அவ்வொலி எனக்குப் பண் இசைத்தாற்போல இருக்கின்றது; இங்குள்ள கொழுவிய கொடிமுந்திரிப் பழக்குலைகளை நெருக்கிப் பிழிக் தெடுத்தசாற்றைப் பருகு தலைக்காட்டினும், விடாயினால் வறண்டு உலர்ந்துபோயிருக்கும் என் நாவிற்கு இதன் தூயநீரில் ஒரு குடங்கையளவுமுகந்து உண்ணுவது மிகவும் இசைவாயிருக்கும். வாருங்கள்! நாம் முன்னேபோய், மொழுமொழுவென்று ஓடும் இவ்வாய்க்காலுக்கு விரைவில்வழிதெரிந்து கொள்வோம்” என்று நீலலோசனன் மொழிந்தான்.
இவ்வாறு சொல்லிக்கொண்டே நீலலோசனன் தன் குதி ரையை விரைந்தநடையிற் செலுத்தச் சிலநேரங்களுள் எல்லாம் அவ்வழிஓர் அகன்ற இடத்திற்கொண்டுபோய் விட்டது. அதற்கு மேல் வேறுவழியும் அங்கே காணப்படவில்லை.
உடனே நீலலோசனன் மிகநெருங்கிய மரஅடர்ப்பின் கீழ்ச் சணலாடையாற் சமைந்த ஒரு கூடாரத்தைக் கண்டு “நாம் வழி தெரிந்து கொள்ளுதற்கு இங்கு யாரேனும் இருப்பர். அதோ ஒரு கூடாரம் பார்!” என்று தன் காவலாளரை நோக்கிக் கூறினான்.
முன்னிலும் இப்போது அவ்வாய்க்காலின் ஓசை மிகவுந் தெளிவாய்க்கேட்டது; நீர் பளிங்குபோல் ஒழுகும் அவ்வருவி யின் பக்கத்தே யுள்ள ஓரிடத்தில் நீலலோசனன் சென்ற வுடனே, அங்குப் பேரழகாற் சிறந்த ஓர் இளம்பெண் தன்முகமாய் வருங்குதிரைக் குளப்படியின் ஓசையும் அறியாமல் மிகவும் ஆழ்ந்து நினைந்த நினைவினளாய் அமர்ந்திருப்பக் கண்டான்.
மூன்றாம் அதிகாரம்
தெளிநீர்வேலி
நீலலோசனன் குதிரைக்கடிவாளத்தைப் பிடித்து இழுத்த வாறே அவ்விளம்பெண் முகத்தை விளங்கப்பார்த்துக்கொண்டு நெருங்கிப்போய் அவள்பக்கத்தே சென்று குதிரையை நிறுத்தி னான். அவள் உருவத்தின் பேரழகைப் பார்த்துப் பெரிதும் வியப்படைந்தனன். முதல் நொடியில் அவனது அறிவை கலக்கிவிட்ட அப்பேரெழில் இப்போது அவன் உள்ளத்தே பையப்பைய நுழைந்து மயக்கிற்று. அவள் அவ்வாய்க்கால் ஓரத் தில் இருந்தமையால் தன் அடிகளை அதன் நீரிற் கழுவிக் கொண்டிருந்தனள் போலும்! அவள்பக்கத்தே யாழ் என்னும் ஓர் இசைக்கருவி யிருந்தது. அவள் மிகவும் ஆழ்ந்த நினைவிலிருந் தமையால், தன்னைச்சூழவிருந்த அக்கருவியினையும் பிறவற்றை யுந் தான் சிறிதும் உன்னித்திலள்.
மிகவுங் கரிய அவள் கூந்தல் தனக்கு இயற்கையிலேயுள்ள வழுவழுப்பினால் விளக்கமுடையதாய், இப்போது ஞாயிற்றின் கதிர்கள் தோய்தலால் மிகமிளிர்ந்து கற்றை கற்றையாய்
அவிழ்ந்து விரிந்து கிடந்தது. பால் நுரைபோன் மிகமெல்லிய தான வெள்ளிய சல்லா மேல் விலகித் தோட்புறத்திற் றொகுக் கப்பட்டுப் பசிய புல்நிலத்தில் தாழ வீழ்ந்திருந்தது. மற்றை உறுப்புகளின் அமைப்புக்கு இசையப்பொருந்தித் திருத்தமாகக் கடைந்தெடுத்தன போல் நீள ஒழுகிக் கிடக்கும் அத்தோள் களின் சரிவிற் கொழுமையான அம்மயிர்க்கற்றைகள் அலைந் தன. அத்தோள்களின் மணிக்கட்டுகளில் மாற்றுயர்ந்த பொன் னாற் செய்யப்பட்ட தொடி யணிந்து விளங்கின. இவ்விளம் பெண் சிறிது உயரமான வடிவுடையளாயிருந்தனள். மங்கைப் பருவத்தினளாகலின், இவள் உறுப்புகளெல்லாம் வளர்ந்து நிரம்பவேண்டும் நிலையை எய்தித் திரண்டு உருண்டு மறுவின் றிச் செவ்விதின் விளங்குவவாயின. இவள் மேனிநிறங் கரிய தாதலின்றித் தளுதளுப்பாக வெளிறிய வண்ணமுடையதாய் மிகவுந் தெளிந்து இலங்கிற்று. செழுங்குருதி கன்னங்களிற் பரவிச் செவ்விய வண்ணத்தோய்ச்சல் உண்டாக்கிற்று. இவள் முகங் கோழிமுட்டை வடிவினதாய் வயங்கிற்று. அன்னப் பறவைபோல் இயற்கைநலங் கனிந்து நீண்டு நுடங்குங் கழுத் தின்மேல் இவள் தலை நிறையொக்கப் பொருத்தப்பட்டிருந்தது. முதலிலே நீலலோசனன் கண்ட சிலநேரங்களாக, இவள் பரிய விழிகளைப் பொதிந்துகொண்ட மூடிகளின் இறைப்பைமயிர் கன்னத்திற்படிந்திருந்தன. இப்போது இவள் தன்விழிகளைத் திறந்தவுடனே, கரியபுட்டிலினின்றும் புறப்பட்ட இருபெரிய கனவுகள் அவன் உயிரின் ஆழ்ந்த அறைகளினுட் புகுந்து அறிவை மயக்குதல்போல இரண்டுஒளிகள் அவன்மேற் பாய்ந் தன. அவள் அணிந்திருந்த ஆடை மிக உயர்ந்ததென்று முன் னரே கூறினோம். மேல் இட்டிருந்த உடை பொற்கொட்டைக ளுடையனவாய் வெறுங் கரியபட்டினாற் சமைக்கப்பட்டிருந் தது; இடையிற் பூட்டியிருந்த மேகலை கொளுத்துவாயில் உயர்ந்தவயிரமணிகள் அழுத்தப்பட்டு அவிர்ந்தது; ஆடையின் ஓரங்கள் வண்ணத்தோய்ச்சல் சிறிதாயுள்ளபட்டிற் பூத்தொழில் செய்யப்பட்டிருந்தன. இப்பெண்ணின் முதற்றோற்றத்தினா லேயே இவள் யாரோ ஒரு செல்வரின் குடியிற்பிறந்த அருமை மகளாதல் வேண்டுமென்பது நன்கு அறியக்கிடந்தது. இப் பெண் இருந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அமைக்கப் பட்ட கூடாரவாயிலின் கீழ்ப் பூச்சிதறிய பசும்புல் நிலத்தில் நன்கு அணிந்த இருமகளிர் சாய்ந்துகொண்டிருந்தமையினை நீல லோசனன் கண்டபோதும் இக்கருத்து வலியுறுவதாயிற்று.
இனி இவற்றையெல்லாம் பார்த்த பௌத்த இளைஞனான நீலலோசனன் அறிவு மயங்கிப் பிறவயமாயினான் என்பது ஒரு வியப்பன்று; ஏனெனில் அக்காட்சி முழுதும் ஒருவனது அறிவை மயக்கி அவனுக்கு உவகையினை மிகுவிப்பது திண் ணமேயாகலின் என்க. ஆழத்திற் கிடக்குங் கூழாங்கற்படைக ளுங் கண்ணுக்குப் புலனாம்படி பளிங்குபோல் தெளிந்து ஓடும் அந்த நீர் ஓடையும், ஞாயிற்றின் கதிர்களை யெல்லாந் தன்னிடத் துச் சிறைப்படுத்திப் பொதிந்து வைத்து இப்போது அவற்றை மேல்எல்லாம் வார்த்துக் கொண்டாற் போலப் பசிய தழைகளெல்லாம் பொன்னென மிளிரக்கிளை நெருங்கித்தண்ணிழல் பயந்து தோன்றும் மரங்களும், பல்வேறு வகைப்பட்ட அழகும் நிறனும் உடையவாய்ப் பசும்புற்கற்றைமேல் இறைந்து கிடக்கும் பல்லா யிரம் பூக்களும், அவை முகை விரித்தலாற் காற்றிற் பரந்து உல வுங் குளிர்ந்த நறுமணமும், மேலே கவிந்து திகழும் நீலவானும் என்னும் இவையெல்லாம் இவ்விடம் அரம்பை மாது போல்வாளான இப்பெண்மணி தனியளாய் இருத்தற்குப் பெரிதுந் தகுதி யுடைய கற்பக இளங்காவேயென விளங்கச்செய்தன. மேலும், இங்ஙனம் வழி நடந்துவரும் இம்மலைநாடுகளைப்பற்றித் தான் கற்ற கட்டுக் கதைகளானும் வியத்தக்க வரலாறுகளானும் உணர்ந்தபடியே நற்குணமுடையளான ஒரு சூர்மகள் உறையும் மாய நிலத்திற்றான் வந்து சேர்ந்தனமோ என்று நீலலோசனன் தன் இளம் பருவத்தியற் கையாற் பலவாறு கருதுவானாயினன்.
இம்மாது, அவ்விளைஞன் வருதலை முன்னுணர்ந்து குதிரையடியோசையையும் அறியாமல் அவ்வளவு ஆழ்ந்ததொரு நினைவில் தன் அறிவை ஒருங்கச் செய்து அவனைப்பாராது உண்மையாகவே இருந்தனளோ, அல்லது, தான் அவனைப் பார்க்குமுன்னமே அவன் பேரழகாற் சிறந்த தனது உருவத்தைக்கண்டு கண்களுக்கு விருந்து செய்கவென்று எண்ணி அறியாதாள் போன்று தான் வாளாது இருந்தனளோ நாம் அறியோம். ஆயினும், இங்ஙனம் ஆழ்ந்ததொரு நினைவிற் றன்னையிருத்திச் சிறிதுநேரங் கழிந்ததென்பது திண்ணம். கழிய, உடனே தன் கண்களை ஏறிட்டு அவனை நோக்குதலும், அவள்மாட்டு ஒரு த கடு மாற்றமும் வியப்புங் குறிப்பாய்த் தோன்றி மறுநொடியே மறைந்தன. திரும்பவும் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தனள். உடனே தான் அந்நேரத்திற் செய்தற்குரிய ஒருதகுதியினை மறந்துவிட்டாற்போலத் திடுக்கிட்டுத் தன் முதுகின் புறத்தே குவிந்துகிடந்த சல்லாவினை யிழுத்து முகத்தை மூடிக்கொண்ட னள். அவ்வாறு மூடிக்கொள்ளுகையில் தன் கண்ணுறை மணியினுள்ளே சென்றடங்குவதான ஒருவகைக் குளிர்ந்த ஒளி நோக்கத்தோடும் நீலலோசனன்மேற் றன்பார்வையை ஊன்றி னாள்.
நீலலோசனன் அப்பெண்மணியைப்பார்த்துப் பணிவாய் வணங்கி வாழ்த்தும்போது, பின்றாங்கி வந்த இவன் காவலாளர் இருவரும் இவனுக்குப்பின்னே வந்து சேர்ந்து பணிவின் பொருட்டுச் சிறிது அகன்று குதிரையை நிறுத்திக்கொண்ட னர். உண்மையிலேயே கேசரிவீரன் அப்பெண்ணைப் பார்த்த விடத்துத் தான் செல்லவேண்டிய வழி தெரிவதற்கு நேரம் வாய்த்தது என்பதைத் தவிரப் பிறிதொன்றும் நினைந்திலன்: வியாக்கிர வீரனோ சிறிது இளம் பருவமுடைய னாதலாற் பெண் மக்கள் அழகின்நலத்தைக் கண்டு மயங்குதற்கு இடம்பெற்று, அவள் முகத்தின்மேற் சல்லாவை இழுக்கும் அந்நேரத்தே அவ ளது வடிவழகைக்கண்டு வியந்து, “பௌத்தன் அறிய இவள் நிரம்ப அழகுடையளாய் இருக்கின்றனள்!” என்றான்.
அவ்வுரைக்கு ஒத்து நீலலோசனனும், ”அழகா ! துறக்க நாட்டிற்குரியரான அரம்பைமாதர்களில் இவர் ஒருவராக இருத் தல் வேண்டும் ! இவர் இந்நிலமகள் அல்லர்!” என்று கூறினன்.
இளைஞனான தன்தலைவன் இங்ஙனங் காதல் வயப்பட் டுக் கூறியதைக்கேட்டுக் கேசரிவீரன் முகத்தில் ஒருவெறுப்புக் குறி தோன்றிற்றாயினுந், தனக்குயர்ந்தோனிடத்துப் பாராட்டும் பணிவினால் வாய்பேசா திருந்தனன். இப்போது நீலலோசனன் தன்குதிரையைச் சிலவடி முன்னேறச் செலுத்தி அம்மங்கையிருக்கும் இடத்திற்குப் பதினைந்து அடி எட்ட நிறுத் திப் பணிவொடுதாழ்ந்து, “மாதரீர், நீலகிரி நகரத்திற்குச் செல் லும்வழி யிதுவோ என்று அறியும்பொருட்டு, நுங்கள் ஆழ்ந்த நினைவினிடையே யான் புகுந்து வினவுதலைப் பொறுக்கும்படி வேண்டுகின்றேன்” என்றான்.
அதற்கு அம்மாது, “நீங்கள் வருவதாகத்தோன்றும் வழி முகமாய்ப் பார்த்தால், இது வழி யன்று” என்று கரும்பினு மினிய சொற்களான் மொழிந்தாள்.
இதனைக் கேட்டதுங் கேசரிவீரன் மற்றையோனை நோக்கி, “அருவருப்பான அக்குடியானவனைப் பார்த்து நான் முன்னமே ஐயப்பட்டேன்” என்று மெல்லச் சொன்னான்.
இதற்குள் அம்மங்கை நீலலோசனனைத் திரும்பவும் பார்த்து, “இந்நாடுகளில் திரிந்து பழக்கம் இல்லாதவர்கள் காணக் கூடாதாயினும், அரசபாட்டைக்கு இங்கேயிருந்து போகும் ஓர் இடுக்குவழி யிருக்கின்றது. நானும் நீலகிரி நகரத் திற்குத்தான் போகிறேன்” என்றனள். இவ்வாறுசொல்லி இப்படிச்சொல்லியதே மிகுதி யென்று எண்ணினாற்போலவும், இங்ஙனஞ் சொன்னமையால் தானுங் கூடப்போக விரும்பு கின்றனள் என்று நினைக்கப்படுமே என அஞ்சினாற்போலவுஞ் சடுதியில் மேலும் பேசுவதை நிறுத்திவிட்டாள்.
உடனே நீலலோசனன், “நங்கைமீர், நுங்கட்கு வேறு நல்ல துணையில்லாமல் எங்கள் துணையை ஏற்றுக் கொள்வீர்க ளாயின், நீங்கள் செல்லும் வழியில் நுங்களைப் பாதுகாத்துச் செல்லும் நேரம் எனக்கு வாய்த்ததைப்பற்றி மகிழ்ச்சியும் இறு மாப்பும் எய்துகின்றேன்.” என்று கூறினான்.
இதற்கு அந்தநங்கை ஏதும் உடனே மறுமொழி சொல்ல வில்லை; அவள் அணிந்திருந்த முக்காட்டின் மடிப்புகளின் ழியே அவள்முகஞ் சிறிது தோன்றியபோது அவள் திரும்ப வும் ஆழ்ந்த கருத்தினளாகக் காணப்பட்டாள். கடைசியாகத் தான் பின்பற்றவேண்டும் ஓர் ஏற்பாட்டை முடிவு செய்தாள் போலச் சடுதியில் நீலலோசனனைப்பார்த்து, “இப்படிப்பட்ட துணையொடு செல்வதில் தகுதியில்லாதது ஒன்றுமில்லை. முத லில் உண்மையைச் சொல்லுமிடத்து, இந்நேரம், என்னிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டிய தக்க ஆண்துணை இன்னும் வாராமையால் நான் ஏமாற்றமடைந்தேன்; அல்லது இவ்விடங் களில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்களை நானா வது போய்க் கண்டுபிடிக்கவேண்டும். என் கூடவந்த பணிப் பெண்கள் அருகாமையில் இருக்கின்றார்கள்; அவர்கள் உங்க ளுடன் வந்தவர்களைப் பணிவோடும் ஏற்றுக்கொள்வார்கள். யான் தங்கட்கு முன்னே ஏதோ கொண்டுவந்து வைக்கும் உணவை ஏற்றுக் கொள்ள உளம் இயைவீர்களானால், தாங்கள் பயணப்படுதற்கு முன்னே சிறிதுணவு கொள்வது நல்ல தாகும்.” என்று முன்னிலும் இனிமைமிக்க குரலோடும் பேசினாள்.
உடனே நீலலோசனன் குதிரையைவிட்டுக் கீழேகுதித் துப், பெற்றுக் கொள்வதற்கு விழிப்பாய் நின்ற வியாக்கிர வீரன் கையிற் கடிவாளத்தை விட்டெறிந்தான். இவ்வாறு நேர்ந்த இந்நிகழ்ச்சியைக் குறித்துக் கவலையடைந்தவன்போலக் கேசரிவீரன் காணப்பட்டான்; ஆயினும், இளம்பருவத்தின னான தன் தலைவனை இடித்து ஒரு சொல்லேனுஞ் சொல்ல அவன் துணிந்திலன்; ஆகவே, அவன் வியாக்கிரவீரனுடன் சென்று, கூடாரத்துக்கு எதிரிலே சாய்ந்தநிலையி லிருந்த அப் பணிப்பெண்கள் இப்போதுதான் எழுந்திருந்த இடத்திற் சேர்ந்தான். அக்கூடாரத்திற்குச் சிறிது அருகாமையிலே அழ கான மூன்று குதிரைகள் கொழுமையான புல் மேய்ந்துகொண் டிருந்தன. அவற்றின் அழகிய கல்லணை, அங்கவடி முதலியன வெல்லாம் அக்கூடாரத்தினுள்ளேயே வைக்கப்பட்டிருந்தன. அப்பணிப் பெண்களில் ஒருத்தி கன்னங்கறேல் என்று இருந்தாள். மற்றொருத்தி நீலகிரிநாட்டுக்குரிய பெண்கள் வகுப்பைச் சேர்ந்தவளாய் அழகாய் இளம் பருவத்தோடுங் கூடினவளா யிருந்தாள்.
பௌத்த இளைஞனுடன் வந்த இவர்கள் அந்நங்கையின் பணிப் பெண்களோடு உறவாடிக்கொண் டிருக்கையில், நீல லோசனனும் அந்தங்கையும் எவ்வாறிருந்தனர் என்பதைப்பற் றிக் கூறப்புகுவோம். அந்தங்கை மிகவும் அழகிதாய் அமைந்த தனதுகையை நயமாகச் சிறிது அசைத்து அழைத்து நீல லோசனனைத் தனக்கு அருகாமையிற் புல்லின்மேல் இருக்கும் படி சொன்னாள். நீலகிரிக்குப் போகும் பயணத்தில் தானும் அவனொடு செல்ல இசைந்தமையால், இதற்குமுன் அவனைப் பிறன்போலெண்ணிப் பணிவு காட்டிய நடக்கையின் எல்லையை மீறினாள் போலவும், இப்போது நேய மிகுந்து பழக்கமான தைத் தெரிவிப்பாள்போலவும், அங்நங்கை தன் முகத்தை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துவிட்டாள். அருகாமையி லிருந்து அவள் முகத்தின் போழகை இங்ஙனம் நீலலோசனன் கண்டபோது, தான்முன்னே தொலைவில் அவளைக் கண்டு எண்ணியது உண்மையென்று நினைந்தான். அவள் சிறிதேறக் குறைய இருபது ஆண்டுள்ளவள்போற் காணப்பட்டாள்; மடந் தைப்பருவங் கடந்து அறிவைப்பருவம் அடையும்பொழுது முகிழ்கின்ற பெருநலங் கனியப்பெற்றிருந்தாள்; ஆனாலும், மடந்தைப் பருவத்தின் புத்திளமை இன்னுஞ் சிறிதேனும் மாறப் பெற்றிலள். அவளது முக அமைப்பானது மிகவுங் திருத்தமாயிருந்தது. அவள் கண்கள் பெரியனவாயும், அடிக் கடி மாறுங் குறிப்புடையனவாயும் இருந்தன: அவைகள் சில நேரம் பேரொளிகாட்டி விளங்கின, வேறுசிலநேரம் மென்மை யாயும் மங்கலுடனுந் தோன்றின; சிலநேரம் ஒருநொடிக்குள் தமது ஒளிவன்மை முழுதும் அப்பௌத்த இளைஞன்மேல் வீசி, அதன்பிற் கருகி நீண்ட மயிர்நிறைந்த இறைகளாகிய திரைகளின் உள்ளே தம்மை மறைத்து ஒளிந்தன. குறுகிச் சிறிதாயிருந்தாலுஞ், செந்நிறம் மிகுந்து திரண்ட இதழ்க ளோடுங் கூடின அவள் வாயானது பேசும்போ தெல்லாம், அவள் தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையின் முத்துக்களைப் போல் வெண்மையான பற்களைத் தோற்றுவித்தது. அவள் விடும் மூச்சோ அமிழ்த மணத்திற் சிறிது தோய்ந்து வந்தாற் போலத் தோன்றியது. இங்ஙனங் கிட்டக் கண்ட பார்வை யானது நீலலோசனன் அந்நங்கையின் அழகைப்பற்றிக் கொண்ட கருத்தை உறுதிசெய்தது. ஆயினும்,மனக்கிளர்ச்சி யான் எழுந்த வியப்பும், வியப்பினான் எழுந்த மயக்கமுந் தம் முதல் மும்முரம் மாறித் தணிந்தவுடனே, நீலலோசனன், பெண்கட் குரிய மென்மைக் குணத்தில் ஏதோ சிறிது அவ ளிடத்திற் குறைபட்டிருப்பதைக் கண்டான்; ஒரு பெண்ணை எப்பொழுதுங் கவர்ச்சியுடையளாகச் செய்வதும், ஒருவன் உள் ளத்தில் அவளது அழகின் வலிமையால் ஒருநொடிக்குள் உண் டான மதிமயக்கத்தை அங்கே என்றும் நிலைபெறச் செய்வது மான நாணத்தோடுங் கூடிய இயற்கை மடப்பம் ஏதோ சிறிது அவள்பால் இல்லாமையை அவன் கண்டுணர்ந்தான்.
நீலலோசனன் அந்நங்கையின் அருகாமையிற் புன்மேல் உட்கார்ந்தபோது, “சுடுசுடுப்பான ஒரு குடியானவன் எனக் குப் பிசகான வழி காட்டினமையாலன்றோ உங்களுடைய பழக்கத்தைப் பெறும் நல்வினை உடையனானேன்?” என்று கூறினான்.
ஒருவகையில் எவ்வளவோ பொருளைத் தரக்கூடியதும், மற்றொரு வகையில் தான் நினையாமலும் அறியாமலும் உண் டான பழக்கத்தால் தோன்றியதை ஒப்பதுமான ஒருபார் வையை அவன்மேற் செலுத்தி அவள், “சொல்லளித்த துணை யானது வந்து சேராமையாலன்றோ நானும் தங்கள் கூட்டுறவா லுந் தங்களுடன் வந்தோராலும் உண்டான நல்ல துணையைப் பெறுவேனாயினேன்?” என்று தானும் எதிர் மொழிந்தாள்.
உடனே நீலலோசனன், “இந்த நீலகிரி நாடுகள் வழிச் செல்வோர் இடரின்றிச் செல்வதற்கு ஏற்றன அல்ல; இதற்கு நான் சிறிது முன்னே அடைந்த துன்பநிகழ்ச்சியே போதும்” என்றான்.
அதற்கு அவள், “மெய்தான்!” என்றுசொல்லி, அப் பௌத்த இளைஞன்மேல் இரக்கமும் உன்னிப்பும் உடையாள் போல அவனை நோக்கினாள். “எங்கே அவர்களிடத்தில் அகப்பட்டுக் கொள்கின்றேனோ என்று நான் நினைக்கும்போதெல்லாம் நடுக்கம் அடையும்படியான அக்கள்வரில் எவரையேனும் நீங்கள் எதிர்ப்பட்டிருக்கக்கூடுமோ?”
“நங்கைமீர், நல்லான் என்னுங் கள்வர் தலைவனது ஆறலை கூட்டத்தைப்பற்றி நீங்கள் குறிப்பாய்ச் சொல்லுகிறீர் கள் போலும்! அஞ்சாமறவனான அக்கொள்ளைத்தலைவன் மெய் யாகவே யிருக்கின்றான்! இளைப்படைந்தோரைக் கிளர்ச்சிப் படுத்த வேண்டியேனும், பிள்ளைகளை அச்சப்படுத்த வேண்டி யேனும் வீடுகளிற் பொய்க்கதையாய்ப் பேசப்படுவதில் அவன் சேர்ந்தவன் அல்லன் என்று நான் சொல்லல் பிழையன்று என்பதற்கு எனக்கு நேர்ந்தவையே போதும்.” என நீலலோச னன் மறுமொழி கூறினான்.
இங்ஙனம் நீலலோசனன் பேசியபோது அந்நங்கையின் முகம் மிக்க திகில் காட்டிற்று; அவள் நடுக்கமுற்ற குரலோடும் “நீங்கள் அக் கொள்ளைக்காரரிடம் அகப்பட்டீர்களோ?” என்றாள்.
உடனே நீலலோசனன், “இன்று காலையிலேதான்” என்று அதற்கு விடைகூறினான்.”ஆனால்,எங்களை எதிர்த் துச் சண்டையிட்டதில் அவர்கள் மகிழ்வதற்குச் சிறிதும் இடமே இல்லை. அப்படி யல்லாவிட்டால், நங்கைமீர், உங் களுக்கு இக்கதையைச் சொல்ல இங்கு வந்திருக்கமாட்டேன்.”
பிறகு, நீலலோசனன் கள்வர்கூட்டத்தை எதிர்த்த வகைக் ளெல்லாம் முற்றும் எடுத்துக் கூறினான். இவ்வாறு இவற்றை இவன் சொல்லி வருகையில் மிகவும் அழகியதான அந்நங்கை யின் முகத்தில் நடுக்கம், அச்சம், ஐயம், வியப்பு முதலிய குறிப் புகள் அடுத்தடுத்துத் தோன்றின. மிகவும் ஆராமையான குர லோடு அவள் அப்பெளத்த இளைஞன் அவ்விடரினின்று தப்பியதைப் பற்றியும், அவனதும் அவன்பின் வந்தோரதும் வலிமையைப் பற்றியும் வாழ்த்திச்சொல்லுகையில், அவள் முகத்தில் வியப்புக்குறிப்பு அழுந்திவிளங்கிற்று. அதன்பின் அவள் தன்பெயர் மீனாம்பாள் என்றுந், தான் நீலகிரி நகரத் திற்றான் வழக்கமாய் இருப்பதென்றும், பணக்கார வணிகரான தன் தந்தை பன்னிரண்டு திங்கட்குமுன் திடீரென இறந்து போனமையால் தான் தொலைவிலுள்ள ஒரு நகரத்திற்குப் பய ணம் போகவேண்டிய தாயிற்றென்றும், அங்கே சென்று தன் வினையினை முடித்தபின்னர்த் திரும்பவுந் தன்வீடு நோக்கிப் புறப்பட்டு வரலாயிற்றென்றுங் கூறினாள்.
மீனாம்பாள் மறுபடியும் அவனை, நோக்கி “என்னொடு தங்கியிருந்தவரான என் நண்பர்கள் என் பயணத்தில் நான் முதற் றங்குமிடம் வரையில் ஒரு தக்கதுணையை விடுத்திருந் தார்கள்; அதன்பின் என்னுடன் வழிச்செல்வதற்கு வழிகாட்டி களுங் காவற்காரரும் வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலைப்பொழுது மிகவும் இனிதாயிருந்தமையால், தக்கதுணை யின்றிச் செல்வதால் நேரும் இடர்களையும் மறந்து, புதியதுணை விரைவில் எம்முடன் வந்துசேரும் என நினைந்து, நல்லவெயில் நேரத்தில் தெளிநீர் வேலி எனப்படுவதாகிய இந்த இடத் திற்றான் நான் தங்குவேன் என்றுஞ் சொல்லிவிட்டு, என்ப பெண்களோடும் பயணம் புறப்பட்டு வந்தேன்; ஆனால், ஏதோ காரணத்தால் அந்தத்துணை இன்னும் வந்து சேர்ந்திலது; இத னால், மனந் துணுக்குற்றும், இங்ஙனம் ஏமாந்து போனமை யாற் றளர்புற்றும் மிக்க துயரத்தோடு யான் கவன்று கொண் டிருக்கையிற், பெருமானே, தாங்களுந் தங்கள் பின் வந்தோ ரும் இவ்விடம் வந்து சேர்ந்தீர்கள்” என்று சொன்னாள்.
உடனே நீலலோசனன், ‘அழகிற் சிறந்த அம்மை மீனாம் பாள், துணையில்லாமற் செல்வது உங்கட்கு இடர்தருவதேயாயி னும், இப்போது யான் உங்கள் துணையாய்வரும்படி நேர்ந்தமை யால் நீங்கள் இனி மனங் கலங்கி அஞ்சவேண்டுவ தில்லை. நீங் கள் முன்னமே தெரிந்துகொண்டபடி யானும் நீலகிரிக்குத் தான் செல்லவேண்டியவனாக இருக்கின்றேன். அங்கே நான் முடித்துக்கொள்ளவேண்டிய சில கட்டாயமான வினைகள் உண்டு.” என்று மறுமொழி சொன்னான்.
இதற்குமேல், நீலலோசனன் தனது உலகியல்நிலை யின்ன தென்றேனும், தன்வினைகள் இத்தகையன என்றேனும், தான் நீலகிரிக்குச் செல்லுங் காரியம் இனைத்தென்றேனுந் தானே ஏதும் விளங்க மொழிந்திலன்; அந்தநங்கையும் நற்குடியிற் பிறந்து நன்கு வளர்க்கப்பட்டு நாகரிகமுடையவள் போற் றோன்றினமையால், தானும் அவைகளைப்பற்றி அவனை ஏதும் உசாவிற்றிலள். அப்படியாயினும், அவன் தன்பெயர் நீலலோ சனன் என்று அவளுக்கு அறிவித்தான்; அவளோ அவனது தோற்றத்தையும் அவன் பின்னே இருவர் ஏவலராய் வருவதை யுங் கண்டு அவன் ஒரு செல்வமகனா யிருக்கவேண்டுமென்று எண்ணினாள்.
அழகிற் சிறந்த மீனாம்பாள் இப்போது தன்கைகளை மெது வாகத் தட்டித் தன் பணிப்பெண்களை அழைத்தாள்; அவர்களுங் கடுக வந்து புல்லின்மேல் நேர்த்தியான சிற்றுண்டியுங், கொடி முந்திரிப்பழச் சாறும், இனிய தேநீரும் பரப்பிவைத்தார்கள்; சுற்றிலும் மரக்கொம்புகளில் நெருங்கித்தொங்கிய பலவகை யான இனிய பழங்களும் அங்கே கொண்டுவந்து வைக்கப்பட் டன. மீனாம்பாள் அங்கு வைக்கப்பட்ட கொடிமுந்திரிப் பழச் சாற்றைப் பருகுதற்கு மனம் உவந்தவளேயாயினும், அவள் அதனைவிட்டு இனிய தேநீரையே அருந்தினாள்; நீலலோசனன் பௌத்தமதத்தைத் தழுவினவனாயினும், பௌத்த பிக்ஷங்கள் போற் கொடிமுந்திரிப்பழச் சாற்றை வெறுப்பவன் அல்லனா யினும், மதிமயக்கும் பொருள்களில் தனக்கு இயற்கையாகவே உள்ள ஓர் அருவருப்பினால் அவனும் அதனைத் தொடாது விட் டான். இங்ஙனம், அப்பெருமானும் பெருமாட்டியுமான இரு வரும், உண்டு முடியும்வரையிற், கொடிமுந்திரிப்பழச் சாறு நிறைத்திருந்த குடுவையைத் தொடவேயில்லை; வேறு தீநீர் களையே பருகினார்கள். அப்போது அவர்கள் இடையிடையே அங்குள்ள இயற்கைத்தோற்றங்களின் பொலிவையே வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நீலலோசனன் புதுப்பழக்கமாய் வந்த இப்பெண்ணின் அறிவையும் நாகரிக விழைவையுங் கண்டு விரும்புதற்குக் காரணம் வாய்த்தாற் போலவே, அவளும் அவ னிடத்தி லியற்கையாகத் தோன்றிய மன அறிவின் உயர்ச்சி யைக் கண்டு வியக்கலானாள்.
அவர்கள் குதிரைகளின்மேல் ஏறிப் பயணம் புறப்பட்டார் கள், நீலலோசனன் எழில் கனிந்த மீனாம்பாள் பக்கத்திற் பரிமேற் சென்றான்; அவன் பின் வந்த ஆடவரிருவரும் அவள்பின் வந்த பணிப்பெண்கள் இருவருடனுஞ் சென்றார்கள். தன் பக்கத்தே வந்த கரிய பணிப்பெண் தன்னைப் பேச்சிலிழுக்க மிகமுயன்றும், அதற்கு அகப்படாமல் துயரநினைவோடும் வாய் பேசாமற் சென்றதனால், தாடிமயிர் நீண்ட கேசரிவீரன் அவள் பக்கத்திற் சென்றவனாகவே சொல்லக்கூடவில்லை; மற்று, வியாக்கிர வீரனோ அழகியாளான மற்றொரு பணிப்பெண் ணொடு மகிழ்ச்சியாய்ப் பேச்சாடிக் கொண்டே சென்றான். ஏவலர்பகுதி யிரண்டிற்கும் அறுபதடி முன்னே பரிமேற்போன நீலலோசனனோ, மீனாம்பாள் தன் குதிரைமேல் உட்கார்ந்திருக் கும் அழகையும், நேர்த்தியையுந், திறமையையுங் கண்டு வியவாம லிருக்கக் கூடவில்லை. அவள் குதிரை யேற்றத்தில் மிகப்பழ கினவளென்பது தெளிவாயிற்று; அவள் ஏறியிருந்த குதிரை கூடியவரையில் நல்ல இயற்கை வாய்ந்த தொன்றாகவேயிருந் தாலும், அது சுறுசுறுப்பு மிகுதியுமுடையதா யிருந்தமையால், துணிவாக ஏறிநடத்த வல்லவரன்றிப், பிறர் அதன்மேலிருக்கத் துணியார். அஃது இன்ன இனத்தைச் சேர்ந்ததென்று தெரிய அக்குதிரையின் பின்னே பொம்மைமேற் சுட்ட தழும்பு ஒன்று இருந்தது. இஃது எவ்வளவு அருமையான சிறந்தவகுப்பைச் சேர்ந்ததென்று அறிந்து கொள்ள நீலலோசனனுக்குத் தன் றேயத்திலேயே இவைகளில் ஒன்றுந் தெரியாது.
அவனும் மீனாம்பாளும் பலவேறு செய்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்வாராயினர். தான் பெருந்திரளான பொருளுக்கு உரிமை யுடையவளாதலால் தானே தனக்குத் தலைவி என்பதும், உறவினர் எவருடைய தலைமைக்குந் தான் உட்பட்டவள் அல்லள் என்பதும், உலகவாழ்க்கையில் எந்தக் காரியத்திலுந் தான்தன் மனப்போக்கின்படி செல்லச் சிறிதுந் தடையில்லை என்பது, ஏதோ மென்மையாகவுந் தற்செய லாகவுந் தன் வாயினின்றும் பிறந்த சொற்களைக்கொண்டே அவன் உய்த்து அறியும்படியாகப் பேசினாள். இவ்விருவரையும் ஒன்று சேர்த்த இந்த வழிச்செலவின் முடிவிற் கழிவதாயிருந்தா லும், இப்போதுண்டான நிலையற்ற இந்நேயத்தில் இயல்பாக விளையும் நம்பிக்கையினாற் சிறிதுங் கள்ளங் கவடு இல்லாத தோற்றத்தோடும் இவள் அங்ஙனம் பேசினாளாயினும், இவ ளிடத்தில் அடக்கஞ் சிறிதுமில்லை யென்றும், மிகுவிரைவிற் பழக்கம் பிடித்துப் பேசுமியல்பினளென்றும் நீலலோசனன் நினையாம லிருக்கக்கூடவில்லை. ஆகவே, அவன் கண்கள் இவள் அழகை வியந்து பாராட்டினாலும், அவன்நெஞ்சம் முதலிற் கண்டபோது சில நொடிநேரமே உண்டான அதன் கவர்ச்சியில் அகப்படாது வேறாய் நின்றது. இங்ஙனம் அவன் இதனை உணர்ந்து அறிந்தபின், இந்தக் காரணம் பற்றியே இவளிடத்தில் அவன் பின்னும் மிகுதியாய் நேர்மை பாராட்டி வந்ததன்றியும், அழகிற் சிறந்த நங்கை ஒருத்தியொடு வழிச் செல்ல நேர்ந்த ஓர் இளையவிடலை பின்பற்ற வேண்டிய அடக்க வொடுக்கத்தில் தான் எங்கே தவறிப் போவதாகக் காணப் படுமோ என்றும் அஞ்சினான்.
வெயிலும் உழைப்பும் மிக்க பகற்காலத்தின் கிளர்ச்சி தணிந்து மசங்கன் மாலைப்பொழுது நாற்புறமும் வளைய, அப் போதுதோன்றும் மங்கலான வெளிச்சம் மென்மையாய் ஓசை யின்றி அமைதி செய்யுந் தன்மையோடும்வரவர, மீனாம்பாளின் குரலொலியும் மெல்லிதாயிற்று – அவள் சொற்கள் உருக்கம் மிகுந்துவந்தன – அவள் அந்த மாலைப்பொழுதின் செயலை உணர்வதுபோற் றோன்றினாள்; நீலலோசனன் தான் அறியா மலே, இவர்களின் உரையாட்டு எந்த வழியாகவோ காதலைப் பற்றி நடைபெறுவதாயிற்று; மீனாம்பாள் மெல்லெனப் பெரு மூச்செறிந்து அதனைத் தான் சிறிது உணர்ந்ததேயல்லாமல், அதன் சுவையைத் தான் நுகர்ந்து அறிந்ததே யில்லையென்று கூறினாள். பொருள் மிகுதியும் உடையளாய்த் தானே தலைவி யாயிருந்தும், பொருளைப்பற்றித் தன்னிடங் கூட்டங் கூடின வர்களையன்றித் தனக்கு வேறு நேயர்கள் இல்லாமையுந், தான் இதுகாறும் இல்லறவாழ்க்கையில் ஈடுபடாமையும் புதுமை யாய்த் தோன்றுமெனச் சொல்லி, ஆடவர் தன்னைவந்து மணங் கேட்பதில் தனக்கு விருப்பமில்லை யென்றுந், தான் நலமடைதற்கு ஒத்த ஆடவனெவனையுந் தான் இதுகாறும் எதிர்ப்பட்ட தில்லை என்றுந் தன்கருத்தை எடுத்துரைத்தாள்.
“ஏனென்றால், எந்தேயத்தில் எழுதப்பட்ட புதுக்கதை களையும், உங்கள் தேயத்தில் உள்ளாரால் எழுதப்பட்ட அழகிய கதைகள் எல்லாவற்றையும் பயின்றதனாலும், எழுத்திலில்லாமல் வாய்மொழியாக மட்டும் வழங்கிவருங் காதற்கதைகள் பலவற் றையுங் கேட்டிருத்தலினாலும், என் மனத்திற்கு அல்லது என் எண்ணத்திற்கு இசைந்தது இன்னதுதான் என்று தெரியப் பெற்றேன்.” என்று அவள் பின்னும் மொழிந்தாள்.
”அங்ஙனம் மனத்திற்கு இசைந்தது?” என்று நீலலோ சனன் வினவினான். இங்ஙனம் இவன் வினவியது பேச்சினை நீளச் செய்வதற்கே யல்லாமற், சில நாழிகைக்கு முன்னே தான் பழக்கமாகித் தம் ஏவலர் கூப்பிடு தொலைவிற்கு அப்பால் வா, மங்கல் மாலைப்பொழுதிற் பந்தலிட்டாற்போன்ற மரங்களின் நீழலிலே தனிமையில் வரும் இளைஞனும் நங்கையுமான தமக்கு இவ்வுரையாட்டு தக்கதுதானென எண்ணியதனால் அன்று.
அதன்பின் மீனாம்பாள் தன் மனக்கற்பனைக்கு இசைந்த விழுப்பொருள் இத்தன்மையதாக இருத்தல் வேண்டுமென்று சுருங்கச்சொல்வாளாயினள்; எப்போதாயினுந் தன்னாற் காதலிக் கப்படுவானும், அல்லது தன் உள்ளத்தைக் கவர்ந்து தன் செல் வத்தையுங் கையையும் பற்றுதற்கு உரியனவானும் இன்ன இயல்புடையனா யிருக்கவேண்டுமென்று கூறினாள். தன் றோழிமார்களுள் ஒருத்தியோடாயினும், இவ்வுலகத்தில் இதிற் கவலையேயில்லாத ஒருவனோடாயினும் எங்ஙனம் பேசுவாளோ அங்ஙனமே அவள் தன்னெதிரே யாரிடத்தில் இப்படிப்பட்ட செய்திகளைச் சொல்லுகின்றோம் என்பதனையும் மறந்தாள் போல ஒருவகையான குரலோடும் வகையோடும் அரைவாசி யாழ்ந்த நினைவோடும் பேசிக்கொண்டே சென்றாள். ஆனால், நீலலோசனன் தான் கேட்டதை நம்பக்கூடா விட்டாலுந், தன் னிடத்துப் பிள்ளைமைக்குணமான தற்பெருமையும் மனச் செருக்கும் இல்லாமையால் அவன் தன் மனத்தில் வலுப்பட்டு வரும் ஐயுறவினை உண்மையென்று துணிதற்கு விருப்பமற்றவனாயிருந்தாலுங் கடைசியாக அவன் தன்னையே மீனாம்பாள் சுட்டிப்பேசுகிறாள் என்பதை உணராம லிருக்கக்கூடவில்லை. அவளோ அவன் உடம்பின் அழகையும் வலிமையையும், அவனுடைய வெள்ளையுள்ளத்தையும் மனத்தேர்ச்சியையும், அவன்றன் உதவியையும் அஞ்சா ஆண்மையையும் விரித்துப் பேசினாள்; இவ்வாறு பேசியபோது, இவள் தனக்கு அவ்வுயர்ந்த ஒழுக்கங்களை நுணுக்கமாய் ஆழ்ந்தறியும் வல்லமை உண் டென்று காட்டாநிற்ப, அவன் தனது உருவப்படத்தையே இவள் இங்ஙனம் எழுதிக்காட்டுகின்றாளெனத் தன் அகத்தே வலிந்துதோன்றிய துணிவினால், தன்னைப்பற்றித்தான் முன் அறியாததனையும் அறிந்து கொண்டான்.
“அப்படிப்பட்டது என் மனத்தாற் கருதப்பட்ட விழுப் பொருள், ஐயநீலலோசன, இவ்வுலகத்தில் அதற்கிசைந்ததோர் உயிர் இருக்கின்றதென நினைக்கிறீரா? இருக்குமானால் அத் தன்மையதான அதன் உள்ளத்தை யான் கவர்ந்துகொள்ள ஆவலுற் றிருக்கின்றேன்’ என்று மீனாம்பாள் முடித்துக் கூறினாள்.
ஓரிமைப் பொழுது அப்பெளத்த இளைஞன் எக்கச்சக்க மான தன் நிலைமையை உணர்ந்தான்: ஆயினும், மறுபொழு தில் அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டு, ‘மீனாம்பாள் பெருமாட்டியின் கவர்ச்சியும் உள்ளத் தேர்ச்சியுந், தன்னால் தெரிந்து கொள்ளப்பட்ட எப்படிப்பட்ட நெஞ்சத்தையுங் கவர்வது திண்ணம்” என்று மகிழ்ச்சி தரும் முகமனுரை மொழிந்தான்.
மீனாம்பாள், நடுங்கிய மகிழ்ச்சியும் வெற்றிக்குறிப்பும் ஐயுறவுங் கலந்த ஒருபார்வையை நீலலோசனன் மேல் வீசிய போது, அதனை அவன் தெரிந்து கொள்ளுதற்குப் போதுமான வெளிச்சம் இன்னும் இருந்தது; அதன்பிற் சிறிது நேரங் கழித்து அவள், தன் ஆவலின் முதிர்ச்சியைத் தெரிவிப்பதாய் ஆழமுஞ் செழுமையும் வாய்ந்த குரலோடும், “அவ்வளவு இனி மையான நினைவிலே யான் மகிழ்ச்சியடையத் துணியலாமா? யான் நினைத்த பொருள் அகப்பட்டால் என்னைப்போலவே அதுவும் என்பால் அன்பு பாராட்டுமென யான் மனப்பால் குடிக்கலாமா?” என்று பேசியபோது, அவளது சொல்லின் ஓசை மிகவுங் குறைந்து போனமையால் அச்சொற்களே நன்றாகப்புலப்படவில்லை.
“பெருமாட்டி, நீங்கள் கொண்ட நினைவு ஒப்புயர்வில் லாததாய் இருத்தலின், அதைப்போல்வது உண்மையிற் கிடைத் தல் எளியது அன்று.” என்று நீலலோசனன் களிப்புடன் சிரித்துக்கொண்டே மறுமொழி புகன்றான். இவ்வாறு அவன் களிப்பொடுபேசியது, அந்நங்கையின் நினைவைத் தான் தெரிந்து கொண்டதாக எண்ணக்கூடிய குற்றந் தன்னைவிட்டு விலகு தற்காகவே யன்றி வேறில்லை.
உடனே மீனாம்பாள், “அந்தநினைவினை யொப்பது உண் மையில் அகப்பட்டிருக்கின்றது,” என்று மொழிந்தாள்; அப் போது அவள் ஏறியிருந்த குதிரை நீலலோசனன் குதிரையின் பக்கத்தே நெருங்கிவந்தமையால், மிக உருக்கத்தோடும் மெது வாய்ப்பேசிய அவள் சொற்கள் நன்கு புலப்பட்டன.
“நல்லது! அதோ எதிரே விளக்கு வெளிச்சந் தோன்று கின்றது! நாம் இன்றிரவு தங்குதற்கென்று நீங்கள் முன்னமே தெரிவித்த கோபுரம் அதுதான் என்பதில் ஐயம் இல்லையே? நங் குதிரைகளை முன்னே செலுத்துவாமாக, ஏனென்றாற் சென்ற இரண்டு மூன்று நாழிகையாக நாம் வழியில் தங்கித் தங்கி வந்தாம் என நினைக்கின்றேன்.” என்று சடுதியிற் கூறினான்.
இருண்டு கொண்டு வரும் அம்மாலைப் பொழுதின் இடையே மின்னல் தோன்றுவதையொப்பப் பார்வை ஒன்று வீசியது – சுறுசுறுப்பாக அசைந்து தோன்றிய அப்பார்வை யானது மீனாம்பாள் கண்களினின்றும் புறப்பட்டு நீலலோ சனன் முகத்தின்மேற் பட்டது; தன் சொற்களால் அவன் உள்ளத்திற்றோன்றியது இன்னதென்று அறியவும், தான் அவனாற் பராமுகமாக எண்ணப்பட்டனளோ, அல்லது தான் பேசியதெல்லாம் அவனைச்சுட்டியே என்பதை அவன் தெரிந்து கொள்ளத் தன்சொற்கள் தெளிவாயிருந்தனவோ என்று தெரியவுமே அப்படி நோக்கினாள். ஆனால் அவனோ அப்பார்வையை உன்னிக்கவேயில்லை; அதே நேரத்தில் தான் சொல்லியதற்கு ஏற்பவே தன் குதிரையைக் காலால் நெரித்து முன்னுக்கு நடத்தி னான். அப்பொழுது மீனாம்பாள், “நான் சொல்லிய கோபுரம் அதுவன்று: அதற்கு நாம் இன்னும் இரண்டுநாழிகை அளவு முன்னேறிப்போக வேண்டும். அந்த விளக்கு வெளிச்சம் ஓர் ஏழைக்குடிசையில் உள்ளது; இதற்கு முன் ஒருமுறை நான் இவ்வழியில் எதிர் முகமாய்ச் சென்றிருக்கின்றே னாகை யால், இங்குள்ள ஒவ்வோரிடமும் என் நினைவி லிருக்கின்றன என்றாள்.
அதற்கு நீலலோசனன்,”ஆயினும், இந்தக்குடிசையில் நாம் சிறிது நேரமாவது தங்கவேண்டும்: அதனால் நம்முடைய குதிரைகளைத் தீனியூட்டி இளைப்பாற்றுவிக்கலாம்: ஏனெனில், அத்தகைய தீனியில்லாமல் நங் குதிரைகள் இந்நாள் முழுதும் அடைந்த உழைப்பின் மிகுதியால் இன்னும் இரண்டு நாழிகை வழிகூடப் போவதற்கு ஏலாதனவா யிருக்கின்றன.’ என்று மறுமொழிதந்தான்.
அதற்கு மீனாம்பாள் “ஐய நீலலோசன, நீங்கள் விரும்பு கிறபடியே ஆகட்டும்.” என்றுகூறிப், பின்னும் புன்சிரிப்பொடு “நீங்கள் என் வழித்துணையாக இருப்பதால் நாம் செல்லவேண்டிய வகைகளைப்பற்றி நீங்கள் தாமே கட்டளையிடவேண்டும்” என்றாள்.
– தொடரும்…
– குமுதவல்லி, நாகநாட்டரசி (முதல், இரண்டாம் பாகம்), முதற் பதிப்பு: 1911.
பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர், மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக்கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக்கூடத்தில் (T.M.PRESS) அச்சிடப்பட்டது, ஜனவரி 1942.