நாகநாட்டரசி குமுதவல்லி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 642 
 
 

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-16

பத்தாம் அதிகாரம்

குழதவல்லியும் மீனாம்பாளும் 

மீனாம்பாள் மிக்கவணக்கத்தோடுங் குமுதவல்லியினிடத் துக் கருத்துக் காட்டிவருகையிலேயே தன்கள்ளவுள்ளத்தில், நாகநாட்டரசியையும் அவள் பாங்கிமார் இருவரையுந் தன்னிடத் திற் சிறைப்படுத்துவதற்கு எவ்வகையான சூழ்ச்சியை நன்றாய்ச் செய்யலாம் என்று சூழலானாள். வலிந்து செய்வதைப்பற்றி நினைத்தலுங் கூடாது; ஏனென்றால் இரண்டுபக்கத்தும் மும் மூன்று பெயர் இருந்தனர். மறத்திக்குரிய மறச்செய்கையின் துணிவினை மீனாம்பாள் காட்டக்கூடியவளா யிருந்தாலும், அதனை இங்கே காட்டினால் வெற்றி யுண்டாமென்பது எட்டிய தோற்றமாகவே இருந்தது. அதுவேயுமன்றி, ஏதேனும் ஒரு சூழ்ச்சி செய்யப்படுதல் வேண்டுமென அவள் ஏற்கெனவே தன்னுள்ளத்தில் உறுதி செய்துவிட்டாள்; ஆகவே, குமுத வல்லியை முழுதும் நம்பச்செய்து, அவளுக்குத் துணைப்பய ணம் போவதுபோற் காட்டிக் கொண்டுபோய் அவளை ஓரிடத் திற் சிறிதுநோஞ் சிறையிட்டு வைப்பதே இனிது செய்யக் கூடிய வழியாகத் தோன்றியது. 

பலநிறமணிகள் பதித்தாற்போலப் பூக்கள் மலிந்த புல்நிலத் தின்மேற் சாப்பாடு கொண்டுவந்து பரப்பும்படி மீனாம்பாள் தன் பணிப்பெண்களுக்குக் கட்டளையிட்டாள்; இளைய நீலலோசன னிடத்துத் தான் அத்தனை திறமையோடுங் காட்டிய இன் சொல்லைப்போலவே, இந்தச் சிற்றுணாவிருந்திலும் அவள் இன் சொற் காட்டினாள். அவர்களது பேச்சுப் பொதுவான செய்தி களைப்பற்றியே நடந்தது. ஏனெனிற், குமுதவல்லி இனித்தான் முழுதுந் தொடர்பாக விழிப்புடன் இருக்கவேண்டுமென்றும், யாரிடத்துந் திறப்பாகப் பேசலாகாதென்றும், வெளிக்கு நண் பரைப்போற் பூண்ட கோலத்தில் எல்லாம் ஒளிப்பான பகைவ னொருவன் மறைந்திருக்கக்கூடுமென நினைந்தே நடக்கவேண்டு மென்றும் ஏற்கெனவே தீர்மானஞ் செய்துகொண்டாள். தான் இப்போது நட்புக்கொள்ள நேர்ந்த நங்கையைப்பற்றி நாகநாட் டரசி ஒரு நொடியேனும் எதுங் கெடுதலாக நினைந்தவளல்லள்: ஆனாலுந், தன்புதிய நிகழ்ச்சிகளால் தான் விழிப்பாகவும் முன் னறிவோடும் இருக்கப்பெற்றாள்; ஆயினும், நம்பிக்கையின்மை கொண்டிலள். 

எதேனும் ஒன்றைக்குறித்துப் பேசப்புகுந்தால் தன்னி டத்து ஏதோ முடிவான நோக்கம் உண்டென்று ஐயுறவு கொள் ளப்படுமென அஞ்சினவளாய் மீனாம்பாளும் அவ்வாறே பொதுச் செய்திகளைப்பற்றிப் பேசுவதில் மிகவும் விருப்பமுடையவளா யிருந்தாள். குமுதவல்லியின் உள்ளத்தில் தான் அச்சத்தைப் புகட்டுவதாய் முடியுமென்று அஞ்சி, இங்ஙனம் அவள் கள்வர் தலைவன் நல்லான் பெயரைக்கூடச் சொல்லாதுவிட்டனள்; ஏனென்றால், அத்தகைய அச்சங்களே ஐயமுறுதற்கு இடஞ் செய்யும். மீனாம்பாள் முதலிலிருந்தே நல்லகுணமுங் கற் பொழுக்கமும் உடையளாயிருந்தாள்: ஆனால், அவள் தன் கண வன் நல்லான்மேல் வைத்த காதலானது அளவுகடந்து வியத் தகும் ஆற்றலுடையதாய் எழுந்தமையால், அது மற்ற எல்லா உணர்வுகளையும் மற்றெல்லா எண்ணங்களையுந் தன்கீழ்ப்படுத்தி நின்றது. அவளது முழுவாழ்வினொடு முழுதும் பிணைந்து, அவளது முழுவுயிரொடு முழுதும் பின்னப்பட்டு அக்காதல் வளர்ந்து முதிர்ந்தமையால், அவள் அதற்கென்றே உயிர்பிழைத் திருப்பாளானாள். அதனால் அவள் தன் கணவனது விருப்பத் திற்கு இணங்கிப் படிமானம் உள்ளவளாய் எந்த வகையான குற்றத்தைச் செய்யவும், எந்தவகையான பழிச்செய்கையை அணுகவும் ஒருப்படுவாளானாள்: என்றாலும், அவள்தன் நல் லொழுக்கங்கள் அவளைவிட்டு இன்னும் முற்றும் அழிக்கப் பட வில்லை; அவை அவள்தன் காதற்பெருக்கத்தின் வயப்பட்டுச் செயலிழந்து மட்டுங் கிடந்தன. 

இப்பொழுதோ தனக்கெதிரே யிருந்த பதினேழு ஆண் டுள்ள அவ்வழகிய பெண்ணை நோக்கி நினைக்கையில், மீனாம் பாள்நெஞ்சத்தில் அந்த நல்லுணர்வுகள் சிறிதே கண்விழித்து எழுவ வாயின. பெண்டன்மையோடிருந்து பார்ப்பவர் நெஞ்சத் தையும் உருகச்செய்யும் ஓர் ஒப்பற்ற பெண்மையழகிலே ஏதோ இருக்கின்றது. அவ்வழகிய கண்களிலிருந்து நீர்வரச்செய் வதும், அவ்வழகியமுகத்தை வருத்தத்தொடு சுளிக்கப்பண்ண எதனையாவது செய்தலும், அல்லது அக்கன்னிமை நெஞ்சத் தைக் கலங்கச் செய்வதும் ஒரு பெருங் குற்றமாகும் என்று, உயிர் தனக்குட்டானே சொல்லிக்கொள்வதுபோற் காணப்படு கின்றது. குமுதவல்லியின் மிக உயர்ந்த அழகினைத் தான் நோக்கியபோது மீனாம்பாள் தன் நெஞ்சத்தே இத்தன்மையவான நினைவுகள்வந்து நுழையாமற் றடுக்கக்கூடவில்லை. நாக நாட்டரசியைப் பற்றித் தான் சிறிதும் பொறாமை கொள் ளாமையால், அவள் இந்நேரத்தில் அங்ஙனம் உணர்ந்து உள்ளங் கசிவதற்கு மிகவும் இடம் பெறுவாளாயினாள். அவள் தற் பெருமை, அல்லது தான் அழகுடையவள் என்பதைப்பற்றிய செருக்குக் கொண்டவளாகவே யிருந்தாள். குமுதவல்லி ஒரு வகையான வனப்பின் முதிர்ந்த படியாய்த் தோன்றியது போலவே, தானும் வேறொரு வகையான அழகின் முடிந்தபடி யாய் உள்ளவள் என்று நினைந்தாள்.நல்லானும் நாகநாட்டாசி குமுதவல்லியைப் பார்த்தான்: அவள் அப்பெயர் பெறுதற்குப் பெரிதுந் தகுதியானவளே யென்று அவன் மீனாம்பாளிடஞ் சொல்லத் தாழ்க்கவில்லை; ஆயினும், உலகத்தில் உள்ள எந்த மக்கட்பிறவியுந், தன் மனைவியைப்போல் அத்துணை அழகுள்ள தாகவேனும் நேசிக்கத்தக்க தாகவேனுந் தன்மதிப்பிற்றோன்ற மாட்டாதென்று அவன் அதே நேரத்தில் தன் மனையாளிடம் உறுதிமொழி புகன்றான். ஆதலினாற்றான் மீனாம்பாள் குமுத வல்லியின் வனப்பைப் பற்றிப் பொறாமையாவது மனப்புழுக்க மாவது கொண்டிலள்; ஆகவே, அவள் உள்ளத்திற் சிறிது சிறி தாக அவிழ்ந்து விரியும் இரக்கம் என்னும் அம்மெல்லிய மலரை வளராமல் அமுக்குவதற்குக் கொழுத்த களைப்பூண்டு களேனும் முட்களேனும் அங்கில்லை. தான் நல்லானுக்கு மண மகளாய் வந்த நாள் தொட்டு இதுவரையில் இம் முறைதான். அவள் அவனது அலுவல்மிக்க துணிவு வாழ்க்கையில், தானும் அடிக்கடி சேரும்படி கட்டாயப்படுத்தப்படுஞ் சூழ்ச்சிகளை வெறுக்கத் தலைப்பட்டாள். இளைய நீலலோசனனைத் தன் னுடைய மயக்குமுறைகளால் ஏமாற்றும் பொருட்டுக் காதல் மொழிகளைச் சொல்லும்போதுங் கண்ணெறியும் போதும் அவள் தன் நெஞ்சத்திற்குச் செய்த கொடுமை சிறிதன்று; ஏனென்றாற், பெண்பாலியல்பில் மீனாம்பாள் கடுங் கற் பொழுக்கம் உள்ளவள், மனையாளியல்பில் தன் கணவனிடத் மாசற்ற அன்புள்ளவள். இதனைப் பயில்வோர் தெரிந்து கொண்டபடி, குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டும் வழக்கின் திறமையினாலும் அவள் அப்பொழுது அங்ஙனம் நடந்துகொள்வாளானாள். அப்போது அவள் தன் நெஞ்சத்திற்குக் கொடுமை செய்தனளாயின், இப்போது தன் அப்பத்தையும் உப்பையுந் தின்ற அழகிய களங்கமற்ற இளம் பெண்ணுக்குத் தான் இரண்டகமாய் நடக்கவேண்டியிருத்தலைப் பற்றித் தன்னையே தான் இன்னும் மிகுதியாய் அருவருப்பா ளானாள். சிலநேரங்களிற் குமுதவல்லியின் இசையினின் வாய்ந்த குரலொலியானது காந்தருவர் இசையைப்போல் மீனாம்பாள் செவிகளிற் சென்று ஒழுகினது; வேறு சில நேரங்களிற் குமுதவல்லியின் பெரிய நீல விழிகளின் மெல்லி யல் நோக்கமானது அவள்மேற் சென்று இனிது வைகிற்று; மற்றுஞ் சில நேரங்களிற் குமுதவல்லியின் இங்குலிகம் போன்ற இதழ்களானவை மிக இனிய குறுமுறுவல் முகிழ்த்தன; அத் தகைய நேரங்களி லெல்லாம் மீனாம்பாள் தன் நெஞ்சம் அவ் விளம் பெண்மேல் ஆவல்கொள்ளக் கண்டாள். அப்போது அவள் அவளைத் தன் மார்புறத் தழுவியிருக்கக் கூடும்; மிகவும் நேசிக்கப்பட்ட தன் ஒரு தங்கையைக் கட்டியணைக்கும் அத் தனை வேட்கையோடும் அவளையும் அணைத்திருக்கக் கூடும்; அவள் செல்லும் வழியைச் சூழ்ந்திருக்கும் ஏமாற்றங்களைக் குறித்து அவளை முன்னறிவித்து மிருப்பள். 

ஆனால் இல்லை! மீனாம்பாள் அங்ஙனம் நடக்கவில்லை. அவ ளது தீவினையின் வலிமையானது இன்னும் முதன்மை பெற்று நின்றது. அவள் நல்லான்மேல் வைத்திருந்த காதலே அவன் விருப்பத்திற்கு மாறு பேசாமற் கீழ்ப்படியவும், அவன் பற்று வைத்தவற்றில் தானும் பற்றுவைத் தொழுகவும் பிணையாய் இருந்தது. என்றாலும், அப்போதிருந்த அவள் மனநிலையானது அவள் நல்லொழுக்கங்களை எல்லாவற்றிற்கும் மேலே எழச் செய்து, அவள் நல்உணர்வுகளுக்கு ஆட்சி தாற்பொருட்டு ஒரு சிறு நன்னேரத்தை மட்டும் அவாவி நின்றது. 

சாப்பாடு முடிந்தது; இப்போது இவ்விரு நங்கைகளின் பாங்கிமாருஞ் சிறிது சேய்மையில் ஒருங்குசேர்ந்து விருந்துண் டார்கள்; மீனாம்பாளுங் குமுதவல்லியும் இன்னும் அந்நீரோடையின் கரைமருங்கே உட்கார்ந் திருந்தனர். அக்கள்வர்தலைவன் மனைவியானவள் திரும்பவும் பயணந் தொடங்கவேண்டுங் கட்டாயத்தைப்பற்றித் தான் பேசும் வகையிலே பேச்சைத் திருப்புதற்கும், அதனாற் குமுதவல்லியின் வாயின் நின்றே அவள் தானும் நீலகிரிக்குப் போவதை வருவித்தற்கும், அவ்வாற் றால் வழியிலே துணை கூடிச் செல்லுங் கருத்து மொழியப் படுதற்கும் ஆனவகையாய்ப் பேசத் துவங்கினாள்; ஆனால், அந் நேரத்தில் அவ்விடத்தில் வேறோர் ஆள்வந்து தோன்றலா யிற்று. 

இஃது ஒரு துருக்கி தேசத்துப் பெண்பிள்ளை; இவள் தான் அணிந்திருந்த உடுப்பினாலுந் தன் கையிற் கொண்டுசெல் லும் ஒரு சிறு சந்தனப்பெட்டியினாலும், ஆசியாக்கண்டத்தும் அதனையடுத்தநாடுகளிலும் மருந்துச் சரக்குகளும், மணக்கூட்டு களும், மருந்துகளும் விற்றற்பொருட்டுச் சுற்றித் திரியும் அறி வான் மிக்க பெண்மக்களுள் ஒருத்தியாகக் காணப்பட்டாள். இப்போது நாம் குறிப்பிட்டுப் பேசும் இப்பெண்மகள் நடுத்தர ஆண்டும், நீண்டு நேரான வடிவும் உள்ளவள்; சணல் நூற் புடைய வையால் தன்முகத்தின் பெரும்பாகத்தை வழக்கமாய் முக் காடிட் டிருந்தாலும் மங்கலான நிறம் உடையவள். 

அவள் அவ்விரண்டு நங்கைமாரையும் அணுகி மலைய மொழியில், “அழகுள்ளவர்களே, என்னுடைய சாம்பிராணித் திரிகளையேனும் மணக் கூட்டுகளையேனும் வாங்கிப் பாருங்கள்! எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்னுடைய எண்ணெய்களை யேனும், எல்லா நஞ்சுகளுக்கும் மாற்று மருந்தான என் மருத் துப்பொடிகளையேனும் வாங்கிப் பாருங்கள்! அல்லது உங்கள் அணிகல மேசைகளுக்குச் சிறப்பாய் வைக்க அழகான அம்பர்த் துண்டுகளும் என்னிடம் விலைக்கு இருக்கின்றன. நீங்கள் திருமண மானவர்களாயிருந்தால் உங்களுக்குக் கணவன்மார் இருப்பர்; அங்ஙன மில்லாவிட்டால் உங்களுக்குக் காதலர் இருப்பர்; அவர்களுக்கு நீங்கள் என் அழகிய அம்பரைப் பரி சாகக் கொடுக்கலாம். திகழ்கலையின் சரக்குகளிற் சிலவற்றை வந்து வாங்குங்கள்! அலைந்து திரியுந் திகழ்கலைக்கு ஒரு நல்ல உதவியைச் செய்வது நல்வினையாகும்!” என்று சொன்னாள். 

இவளை யொத்த அறிவான் மிக்க பெண்பிள்ளைகள் இங்ங னம் பசப்பிப் பேசுவது வழக்கத்தில் இல்லாவிட்டால், காதலர் இருக்கக்கூடிய செய்தியைப் பற்றித் திகழ்கலை பேசிய ஒரு பகுதி ஏதோ அடக்கம் அற்றதாகவாயினும் நாகரிக மில்லாத தாகவாயினுங் காணப்பட்டிருக்கும். இதுதான் வழக்கமென் பது குமுதவல்லிக்கும் மீனாம்பாளுக்குந் தெரியும்; அதனால் திகழ்கலை கிட்ட நெருங்கி வந்தபோது குமுதவல்லி நல்ல குணத்தொடு நகைத்தாள். மீனாம்பாளும் அங்ஙனமே நகைத் தாள். ஆனாற், பணிவோடும் முன்னறிவோடும் மட்டும் அணு கற் பாலதான ஒரு செய்தியை குறித்துத் தான் அத்தனை திறமையோடும் பேச்சைத்திருப்புகிற நேரத்தில் நேர்ந்த இவ் இடையூற்றால் தான் அடைந்த கவலையை மறைப்பதற்காகவே இவள் அங்ஙனம் நகைத்தாள். திகழ்கலையோ ஒருவரொடு மற்றவரும் நகைத்ததனால் உள்ளத்தில் எழுச்சி கொள்ளப் பெற்றாள்; உடனே தான் புல்லின்மேல் உட்கார்ந்துகொண்டு தனது சிறிய சந்தனப் பேழையைத் திறந்தாள். 

“இதோ கலப்பில்லாத சிறந்த தூய குலாப்பூவின் அத்தர் அடைத்த சிறு குப்பிகள். இதோ மிகக் கொடிய நஞ்சையுங் கடுக மாற்றும் மருந்துகளாகிய பொடிகள். பாண்டிநாட்டுக் காவலர்க்கு ஆறு திங்கட்கு முன்னே இரண்டகனான ஓர் அடி மை ஒரு கிண்ணந் தேன்நீரிற் சூழலாக ஒரு நஞ்சைக் கலந்து கொடுத்தபோது அதை நான் இதனால் தீர்க்கவில்லையா?- இது திகழ்கலையின் புகழை மிகுதிப்படுத்தவில்லையா? இதோ, பெரு மாட்டிகளே, சிறிது முன்னே நான் சொல்லிய சிறந்த அம் பர்த்துண்டுகள். ஆண்டவன் அறிய இவைகள் பளிங்குக் கல்லைப்போல் எவ்வளவு தெளிவாய் இருக்கின்றன!” என்று அவள் மொழிந்து, அடக்க ஒடுக்கத்திற் சிறந்த பார்வையோடுங் குரலோடும் மருந்துவைக்குஞ் சிறு பரணிகள் இரண்டு மூன் றைக் கையில் எடுத்து, ‘இதோ ஒரு மருந்து, இதிற் சேர்ந் திருக்குஞ் சரக்குகள் அலைந்து திரியுந் திகழ்கலைக்கு மட்டுந் தான் தெரியும்! இந்நறுமணப்பண்டத்தை இவ்வுலகத்திலுள்ள எல்லா உயிர்களிலுந் திகழ்கலை மட்டுமே செய்யத் தெரிந்தவள்.” என்று தொடர்ந்து சொன்னாள். 

இந்தப் பசபசப்புப் பேச்சில் தனக்கு விருப்பமேனும் மகிழ்ச்சியேனும் இல்லாவிட்டாலும், அந்தப் பெண்பிள்ளையை மகிழ்விக்கவேண்டு மென்னும் நற்குணத்தால் “அஃது எங் வனம் வந்தது திகழ்கலை; இவ் வியத்தக்க மருந்துமுறை உன் வசத்தில் எவ்வாறு வழிதேடி வந்தது?” என்று குமுதவல்லி வினவினாள். 

‘ஆ! பெருமாட்டி, அஃது என்னிடத்தே மட்டுமுள்ள மறைபொருள்!” என்று மறைவுக்குறிப்பு மிக்க பார்வை மறு மொழியொடு கூறுவாளாய்ப், பின்னும், “என்றாலும், இந்நறு மணப்பண்டம் மேலான நற்குணங்கள் உள்ளதென்று ஆண்ட வன் அறிய ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! இந்த மேற்கண வாய் மலைப்பக்கங்களில் நன்குமதிக்கப்படுகின்ற பூர்ச்சமரத்தின் வெள்ளைப்பட்டைச்சாறு இவ்வுயர்ந்த நறுமணப்பண்டத்தின் கலவையிற் சேர்ந்திருக்கின்றதென்று திறந்து சொல்ல நான் பின்வாங்கவில்லை: இன்னும் இதிற் கலக்கப்பட்டுள்ள பூண்டு களும் மருந்துகளும் மற்றும் பல உண்டு; அவைகள் இவ்வெள் ளைப் பூர்ச்சமரத்தின் நோய் ஆற்றுந் தன்மையினும் மிக உயர்ந்த னவாகும். பதினெட்டுத் திங்களுக்கு முந்தி மிகவும் மறைவான நிலைமையிற் கிழவன் ஒருவனுக்கு இந்த உறையைக்கொண்டு யான் நோய் தீர்க்கவில்லையா?” என்று எடுத்துரைத்தாள். 

“நீ அங்ஙனஞ் சொன்னால், திகழ்கலை, அஃது உண்மை யாகத்தான் இருக்கவேண்டும்; ஏனென்றால் நீ பொய்சொல்லத் தெரியாதவள் என்று யான் உறுதியாக நம்புகிறேன்.” என மீனாம்பாள் மொழிந்தாள். 

“பெருமாட்டி, நீங்கள் என்னை இறக்கிப் பேசிக் கேலி செய்கிறீர்கள்; ஆனாலும், அது நான் சொல்லுகிறபடியேதான் உள்ளதென்று கடவுளறிய ஆணையிடுகின்றேன்!” என்று அவ் வறிவோள் விடை பகர்ந்தாள். 

“எப்படி அந்நிலைமை அவ்வளவு புதுமையா யிருந்தது?” என்று குமுதவல்லி கேட்டாள். 

திகழ்கலை உட டனே நாசநாட்டரசியின் மேல் ஒரு புதுமை யான பார்வையைச் செலுத்தினாள்; அதன்பிறகு, அறிவுக்குத் தென்படாத அதே ஆழ்ந்த நோக்கத்தை மெல்ல மீனாம்பாள் மேல் திருப்பினாள்; இங்ஙனஞ் சிறிதுநேரம் பெரிதும் வாய் பேசாதிருந்தாள். 

கடைசியாக அவள் வாய்திறந்து அமைதி மிக்க குரலொடு, “பெருமாட்டிகளே, புதுமையான ஒரு கதையைக் கேட்க உங் களுக்கு ஓய்வும் விருப்பமும் இருந்தால், நான் அதனை விரித் துரைக்கின்றேன். ஆண்டவன் அறிய அஃது உண்மையென் றே ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! யான் உயிரோடிருப் பவளாயினும், உண்மை நம்பிக்கையுடையவர்கள் இறந்தபின் செல்லும் இறைவனது துறக்க வுலகத்தைப்பற்றி ஒரு சிறிது தெரியப்பெற்றிருக்கின்றேன் என்னும் எனது நம்பிக்கை யினின்று எதுவும் என்னைப் பிறழ்த்தமாட்டாது.” என்று கூறினாள். 

திகழ்கலை கூறிய இப்புதிய சொல்லைக் கேட்டவுடனே, மீனாம்பாள் தானுந் தன் கணவனுஞ் சிலநாளாகப் பெறுதற்கு ஆவலுற்றிருக்குந் துறக்க நிலத்தின் காட்சிகளோடு தெளிவுந் திட்டமும் இன்றி இதனை இயைபுபடுத்தினவளாய் “உண்மை தான்!” என்று திடுமென மொழிந்தாள். 

மேன்மைமிகுங் கனவைப்போன்ற அத்தகைய எண்ணங் கள் தன்னுள்ளத்தின்கண் மிதக்கப் பெறாதவளா யிருந்துங், குமுதவல்லியுங் கூடத் திகழ்கலை மொழிந்த புதுமையும் மறை பொருளும் வாய்ந்த அச்சொற்களைக் கேட்டு அதனை அறியும் வேட்கை யுடையளானாள்; ஆகவே, அவ்விரண்டு நங்கைமார் களின் பார்வைக் குறிப்பினாலேயே தான் அக்கதையை எடுத் துரைக்கலாமென்று அம்மேதக்காள் கண்டுகொண்டாள். தன் மருந்துகளின் திறனை உறுதிப்படுத்திக் காட்டுதற்கும், ஒருநாழி கைநேரம் இனிதாகக் கழியவேண்டித் தான் எடுத்துக்கொள் ளும் முயற்சிக்குத் தக்க ஈடாகப் பரிசு பெறுதற்கும், மெய்யோ பொய்யோ அக்கதையைச் சொல்லுதற்கு நுணுக்கமாக அவள் வழி பிறப்பித்துவிட்டாள். 

“பதினெட்டுத்திங்களுக்கு முன்னே ” என்று துவங்கி அந் நல்லோள் அக்கதையைச் சொல்வாளானாள்: “மிகவுங்கடு மையான ஒரு மழை காலத்தின் நடுவிலே யான் நீலகிரி நகரத் தில் இருக்கும்படி நேர்ந்தது. அப்போது அங்கே எல்லாரும் மெச்சத்தக்க வகையாய்ச் சில நோய்களை நீக்கினேன்; அதனால் என் புகழ் வெளியூர்களிற் பரவிற்று. ஒருநாள் அவ்வூரிலுள்ள பெரியவர் ஒருவர் யான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து, தாம் என்னைப்பற்றிக் கேள்வியுற்ற எல்லாவற்றாலுங் குறிப்பான ஒரு முடையின்பொருட்டு என்னைக் கலந்துகொள்ளும்படி செய்விக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மக்களுக்குள்ள கருவி களைக்கொண்டு போராடக்கூடிய எவ்வகையான முடைப்பட்ட நேரத்திலும் யான் உதவத்தக்க திறமை வாய்ந்தவள் என்பதை அவருக்கு உறுதிகட்டிச் சொன்னேன். தாஞ்செல்லும் வழி யைக்கையாற் றடவிப்பார்த்துச் செல்வதுபோலவுந், தாம் இன்னுந் திறப்பாகப் பேசுவது தகுமா வென்றுந் தாம் தெரி விக்கப்போகுங் கருத்துக்களுடன் யான் ஒட்டி வரக்கூடுமா வென்றுந் திண்ணமாக அறிந்துகொள்ளுகற்கு என்னை ஆழம் பார்ப்பதுபோலவும் முதலில் அவர் தற்காவலொடு விழிப்பாகப் பேசினார். நங்கைமார்களே, எம்மிருவர்க்குள்ளும் நடந்த பேச்சுமுழுதுஞ் சொல்லி உங்களை நான் வருத்தவேண்டுவ தில்லை. யான் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட உதவியின் தன்மை இதுவென்று உடனே சொல்லிவிடுவதே எனக்குப் போதும். தம்மோடு யான் சிறிது நெடுவழி வரவேண்டுமென் றுஞ், சிலநாழிகை சென்றவுடன் யான் கண்ணைக் கட்டிக் கொள்ள இசையவேண்டுமென்றும் அப் பெரியவர் – அவர் பெயரை யான் சொல்லாதுவிட்டதற்காக நீங்கள் என்னை மன் னிக்கவேண்டும் – உடன்படிக்கை செய்துகொண்டார். யான் நலப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நோயாளியை யான் அதன் பொருட்டுப் பார்க்கவேண்டுவது மிகவும் இன்றியமை யாததா யிருந்தமையால், யான் இந்த வகையாகவே அழைத்துக்கொண்டு போக்கப்படல் வேண்டும். இதற்கெல்லாம் நான் இணங்கினால் ஏராளமான தொகை எனக்குக் கைம்மாறாக அளிக்கப்படும்; நான் குறிப்பிட்ட அப்பெரியவரதுநேசத்திற் பின்னர் எப்போதும் நான் நம்பிக்கை வைத்திருக்கலாமென் றும் வலியுறுத்திச் சொல்லப்பட்டேன். நல்லது, பெருமாட்டி களே, இஃது என்னைப் பிடிக்கும்படி செய்த சூழலாக இருக்க மாட்டாதென்றும் எண்ணிப்பார்த்தேன்; ஏனெனில் அப்பெரி யவர் நாடெங்கும் நன்கு மதிக்கப்பட்டவர்; மேலும், அலைந்து திரியும் ஏழையான அறிவோள் ஒருத்தியின் உயிரை வாங்கு வது அவருக்கு யாதுபயனைத் தரும்? ஆகவே, நான் இசைந் தேன்; அவர் தமது ஈகைக்கு அறிகுறியாக அச்சாரமுங்கொடுத் தார். மாலைப்பொழுதின் இருள் வந்தவுடனே, அப்பெரியவர் என்னை அழைத்துக்கொண்டு போகவந்தார். கடுகிச் செல்லும் வலியகுதிரைகளின்மேல் தனித்தனியே ஏறிக்கொண்டு நாங் கள் இருவேமும் நீலகிரியை விட்டுச் சென்றேம். இரவுமுழு தும் வழிச்சென்றோம்; காலைப்பொழுது வந்தவுடனே மேற் கணவாய் மலைக் காடுகளின் இடை யே நாங்கள் இருந்தோம். சிலநாழிகை நேரம் பெருங்குகை ஒன்றிலே நாங்கள் இளைப் பாறி யிருந்தோம்; யான் முன்னமே உங்களுக்குச் சொல்லிய படி மழைகாலம் மிகவுங் கடுமையாய் இருந்தமையால்,நாங்கள் ஏறக்குறையக் குளிரினால் மடிந்துபோவோம்போ லிருந்தது; அதனால் அப்பெரியவர் அங்கே தீமூட்டினார் உணவுக்கு வேண்டிய நல்ல பண்டங்களுஞ் சிறந்த பருகுநீர்களும் அவர் கொண்டுவந்திருந்தார். ஆகவே, நாங்கள் குளிர்காய்ந்து மகிழ்ச்சி யொடு வசதிபெற்றிருந்தோம். நாங்களும் எங்கள் குதிரை களும் போதுமான அளவு இளைப்பாறி உணவு கொள்ளும் பொருட்டுப் பலநாழிகை நேரம் அக்குகையிலே தங்கியிருந் தோம். கடைசியாக எங்கள் பயணந் தொடங்கவேண்டி வந்த போது, என் விழிகளின்மேல் துணி கட்டவேண்டிய நேரமும் வந்ததென்று கண்டு கொண்டேன். இரண்டகமாய் நடக்கும் எண்ணம் இருந்தாலும், யான் விழிதிறந்து காணக்கூடாதபடி அவ்வளவு செவ்வையாகக் கண்கட்டப்பட்டேன். பெருமாட்டிகளே, உங்களை நான் அலுப்படையச் செய்யவில்லையென்று நம்புகின்றேன்?” 

“இல்லை, இல்லை! என் நல்ல அம்மையே, சொல்லு, சொல்லு! உனது கதையை அதற்குரிய ஆவலோடுங் கேட்டு வருகின்றோம்.” என்று மீனாம்பாள் வியப்புடன் கூறினாள். 

குமுதவல்லியுந் தன் பார்வையினால் மனக்கிளர்ச்சி உண்டு பண்ணினாள்; அதனால் அவ்வறிவோளும் அக்கதையைத் தொடர்ந்து சொல்வாளானாள். 

“கண்கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் என் குதிரை மே லே தான் நான் இருந்தேன். அந்தப் பெரியவர் என் பக்கத்தே ஒரு குதிரைமேல் அமர்ந்துகொண்டு, நான் ஏறியிருந்த குதிரை யின் கடிவாளத்தைத் தாம் பிடித்துக் கொள்ளத்தக்க வகையாக அமைத்து அதனால் அதனை நடத்திவந்தார். சிலநேரம் நாங்கள் கடுவிரைவாய்ச் சென்றோம்; சிலநேரம் ஏற்றமான இடங்களில் ஏறிச்செல்லும்போதுங், குதிரையின் நடை வேறு பாட்டால் அருமையுங் கரடுமுரடு முள்ளனவாக யான் தெரிந்துகொண்ட நிலங்களைத் தாண்டிச் செல்லும்போதும் மிகவும் மெதுவாகச் சென்றோம்; இன்னுஞ் சிலநேரம் இன்னும் மிக மெதுவாய்ச் சென்றமையால் அங்காந்த மலைப்பிளவுகளைப் பற்றியுந் திடுக் கிடும்படியான செங்குத்து மலைகளின் விளிம்பிற் சுற்றிச்செல் லும் வழிகளைப்பற்றியும் நினைந்து கலங்கினேன். இந்த வகை யாக மங்கல் மாலைப்பொழுது வந்து சூழும்வரையில் வழிச் சென்றுகொண்டிருந்தோம்; அதன் பிறகு மறுபடியும் ஓரிடத் திற்றங்கினோம். என் கண்ணினின்றுங் கட்டு அவிழ்த்துவிடப் பட்டது; மேற்கணவாய் மலைப்பக்கத்தில் மிகக் கடுமையான தும் அச்சுறுத்துவதுமான ஓரிடத்தில் நான் இப்போது வந் திருந்தேன் என்பதனை எனக்குக் காட்டுவற்தகு இன்னும் போதுமான வெளிச்சம் இருந்தது. நங்கைமீர், அங்காந்த மலைப் பிளவுகளையும், உயர்ந்தோங்கிய மலைகளையும், வழுக்கி நகரும் பனிப் பாறைகளையும், இடியென முழங்கும் பெரிய மலையாற் றின் வீழ்ச்சிகளையும், நடுக்கந் தருங் கணவாய்களையும், உறை பனிமூடிய மிக உயர்ந்த இடங்களையும் நீங்களே நினைந்து பாருங்கள்! அப்போது தான் என்னைச் சூழ இருந்த நிலத்தோற்றங்க ளின் மேன்மையுந் திகிலும் உட்கும் வாய்ந்த வடிவங்களைப் பற்றி நீங்கள் ஏதோ சிறிது புல்லிய நினைவு கொள்ளக்கூடும். மற்றொரு பெருங்குகை எமக்குத் தங்கும் இடமாயிற்று; திரும் பவுந் தீ மூட்டப்பட்டது; உணவுப் பொருள்களும் பருகுநீர் களுங் கொண்டுவந்து வைக்கப்பட்டன; மற்றும் ஒரு முறை யான் தீக்காய்ந்து மகிழ்ச்சியோடும் இளைப்பாறி யிருந்தேன்.’ என்று திகழ்கலை மொழிந்தாள். 

“இனி இப்போதுதான் உனது கதையில் தெரிந்து கொள் வதற்கு மிகுந்த ஆவலை எழுப்பும் பகுதி வரப்போகிறதென்று நினைக்கின்றேன்.” என்று மீனாம்பாள் தன்னகத்தெழுந்த ஆவ லையும் அயிர்ப்பையும் வருத்தத்துடன் மறைத்துக்கொண்டு கூறினாள். 

“கடவுள் அறிய அஃது அப்படித்தான் உள்ளது. கடுங் குளிர் நிறைந்ததுங், கரடுமுரடான தன்றன்மையால் உள்ளத் திற் பதியத்தக்கதுமான இயற்கை யமைப்பு வாய்ந்த அவ்வச் சம்மிக்க இடத்தில் நாங்கள் வந்து சேர்ந்தபோது, நான் முன் சொல்லியபடி, மாலைக்காலமாகத் தான் இருந்தது. ஏறக்குறைய ஐந்து நாழிகை நேரம், பெரும்பாலும் முழுதும் இருள் வந்து சூழும் வரையில், நாங்கள் அங்கே தங்கியிருந்தோம்; அவ்விரு ளின் இடையிலே அடுத்துள்ள மலைக்குவடுகளிலுள்ள உறை பனியின் துலக்கம் மட்டுஞ் சிறிதுதெரிந்தது. அப்போது அப் பெரியவர் என்னை எழுந்து தன்னுடனே வருதற்கு முயற்சியா யிருக்கும்படி கட்டளையிட்டார். இப்போது மறுபடியும் என் கண்ணைக் கட்டிவிட்டார்; ஆனால், இந்தமுறை நாங்கள் எங்கள் குதிரைகளின்மேல் ஏறவில்லை; அவைகள் அக்குகையிலே காவலுடன் நிறுத்தப்பட்டன. நாங்கள் கால் நடையாகவே செல்லவேண்டுவதாயிற்று. அந்தப் பெரியவர் என் கையைப் பிடித்து அழைத்துகொண்டு சென்றார்; இவ்வாறு ஒரு நாழிகை நேரம் நடந்து சென்றோம்; உறை பனியால் ஆன அம்புகள் என் மூளையை ஊடுருவிப் பாய்வதுபோற் குளிர் அவ்வளவு முறுகித் தோன்றியது. கடைசியாகச் சில நொடிநேரம் ஓரிடத்தில் வந்து நின்றோம். பின்னர் அப்பெரியவர் என்னை முன்னே நடத்தினார்; மிகவுங் கொடிய குளிரின் வருத்தஞ் சிறிது நீங்க உண்டான வெதுவெதுப்பினாலும், எங்கள் காலடிகளில் உண் டான மழுங்கிய எதிர் ஒலியினாலும் ஏதோ ஒரு குகையினுள் நுழைந்தோம் என்பதை நான் சொல்லக்கூடும். அது நீண்ட தாயிருந்தது; அது முடிவுபெற்றவுடனே, அப்பெரியவர் என்னை நோக்கி, ‘இப்போது நீ படிக்கட்டுகளின் வழியே இறங்க வேண்டியிருக்கின்றது. அதுவும் ஆழத்தில் இறங்கவேண்டும்; என்றாலும் என் கையைப் பிடித்துக்கொள், அஞ்சாதே.’ என்று சொன்னார். ஒரு கதவு மெல்லெனத்திறப்பதுபோல் ஓர் ஓசை எனக்குக் கேட்டதென்று நினைத்தேன்; ஆனாலும் அஃது எனக்கு உறுதிப்படவில்லை. இறங்கத் துவங்கினோம்; உடனே எங்கள் காலடிகள் புதுமையான எதிரொலியை எழுப் பினமையால், மூடிக்கொள்ளுங் கதவினொலி ஏதேனும் இருந் தாலும் அஃது என் செவியிற் படவில்லை. வரவரக் கீழ் இறங் கிச் சென்றோம். உரமான மலைப்பாறையில் வெட்டப்பட்டுத் திருகிச்செல்லும் படிக்கட்டாக அது காணப்பட்டது. இன்னுங் கீழே, இன்னும் நெடுந் தொலைவு கீழே இறங்கிப்போனோம்; வளைந்து வளைந்து சென்றமையால் என் தலை கிறுகிறு வென்று சுற்றத்தொடங்கிற்று, இறங்கும் வருத்தத்தால் என் கால்கள் நோவுற்றன. ஆயினும்; ஆழத்திற் செல்லச் செல்ல வளிமண்டிலம் வெப்பமுள்ளதாவதை உற்றறிந்தேன்; புதுமை யும் அச்சமும் நிறைந்த எண்ணங்கள் படிப்படியே என் உள்ளத் திற்றோன்றலாயின. தீதுசெய்யும் பொல்லாத கூளிப் பேய் தான் மக்களுருவில் வந்து, என்னைத்தேடிப், பொருட்டிரள் தருவதாக ஏய்த்து, இப்போது என்னைத் தான் இருக்குங் கொடிய பாதாள உலகத்திற்குக் கொண்டுபோவதாய் இருக்க லாமோ!” என்று திகழ்கலை கூறுகையில், 

இடையே குமுதவல்லி இதனைக் கேட்டவுடன் தன் மெல்லிய உடம்பு நடுங்கப் பெற்றவளாய், “ஆ! இந்நினைவுகள் உண்மையிலே வெருவத் தக்கனவாய்த்தாம் இருக்கவேண்டும்!” என இயம்பினாள். 

மீனாம்பாள் ஒவ்வொரு நொடியுந் தன் உள்ளத்தெழுந்த ஐயம் முதிர்ந்தமையால் அதனைத் தாங்கப் பொறாதவளாய்க், “கதையைச் சொல்லு, சொல்லு!” என்று விளம்பினாள்; அவ் வறிவோள் தன் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தவகை போதுமான வரையிற் சுருக்க முள்ளதாக இருந்தாலும், அக் கொள்ளைக்காரன் மனைவிக்கு அது மிகுதியும் மெதுவுள்ள தாகவே காணப்பட்டது. 

மறுபடியுந் திகழ்கலை, “என்னுடைய எண்ணங்கள் இங்ங னம் என்னைக் கவர்ந்துகொள்ளப் புகுந்த பொழுதிற், சடுதி யிலே நாங்கள் நின்றோம் – வெளியே ஒரு கதவு திறந்தது; உடனே நறுவிய வளிமண்டிலத்தின் இருப்பு எனக்குப் புலனா யிற்று. மழைகாலத்தின் குளிர் மிகுந்த நீண்ட இராப் பொழு தின் நள்யாமமா யிருந்தும் அப்போது அங்கு வீசிய காற்று மெல்லிதாயும், வெதுவெதுப்பாயும், நறுமணங் கமழ்வதாயும் இருந்தமையால், என்னுடைய திகிலெல்லாம் ஒரு நொடிப் பொழுதிற் பறந்து போயின; என்னுள்ளத்தில் இனியதொரு கழிபெருங்களிப்பு எழுவது உணர்ந்தேன். என்னை அழைத்துப் போம் அப் பெரியவர் திரும்பவும் என்னைக் கைபிடித்து முன்னே அழைத்துச் சென்றார். அங்குள்ள கருங்கற்பாறை யினாற் செய்யப்பட்டது போன்ற கதவு பேரோசை யோடும் எனக்குப் பின்னே சாத்திக்கொள்ளக் கேட்டேன். சில வேளை மென்புல் வளர்ந்த பற்றைபோலவும், மற்றுஞ் சிலவேளை நன்கு மிதிபட்ட பாதைபோலவுந் தோற்றப்பட்ட இடத்தில் இறங்கிக் கொண்டே போயினோம். உறைபனியும் மலைகளும் நிறைந்த அப்பக்கத்தில் என்னைச் செவிடு படுத்தின நீரோட்டங்களின் பேரிரைச்சல்போலாது, அதனொடு மாறுபட்டு இனியவாய்த் தோன்றின மலைவீழாறுகளின் அமைதியான முறுமுறுப் பொலியுஞ் சிலுசிலுவென்று ஓடும் அருவிகளின் ஓசையும் என்காதிற் பட்டன. நடந்து செல்வது உழைப்பாகக் காணப் படாத மெல்லெனச் சரிந்த இடங்களில் இறங்கிக்கொண்டும், ஆறுதலும் மென்மையும் நறுமணமும் மிக்க தென்றற் காற்றி னிடையே ஒவ்வொரு நொடியும் நுழைந்து கொண்டும் மேலும் மேலும் போயினோம். என் ஆடைகள் செடிகளின்மேற் பட்டுச் சரசரவென்று ஓசை செய்தன: என் காலடிகள் சிலநேரம் மலர் களினிடையே அகப்பட்டுக்கொண்டன: பிடிக்கப்படாத எனது மற்றைக் கை கிளைகளிலிருந்து தொங்கும் பழங்களின்மேல் தட்டுப்பட்டது. யான் நுழைந்த அவ்விடம் இளவேனிற் கால முடையதாய்த் தோன்றியது! கடைசியாக என்னை அழைத்துச் சென்றவர் திடுமென நின்று என் கண்களினின்றுங் கட்டை அவிழ்த்து விட்டார்.” என்று சொல்லவே, 

உடனே மீனாம்பாள் ”நீ என்ன கண்டாய்? என்ன கண்டாய்? விரைந்து சொல்!” என்று வினவினவள், அப்புறம் நம்பிக்கையால் எழுந்த மிகுகளிப்பினிடையே தன்னைத்தானே தடுத்துக்கொண்டு, முன்னிலும் அமைதியாய், “நல்ல திகழ்கலை. உனது கதை வலுத்த ஆவலைக் கிளப்பவல்லதாய் இருக்கின் றது.” எனமொழிந்தாள். 

மேற்கணவாய் மலைகளின் நடுவே மறைபட்டிருக்கும் ன்பஉறையுளைப் பற்றிய ஊரார் சொற்களை நான் கேட்டிருக் கின்றேன்: ஆனாற், கட்டுக்கதை குடிகொண்ட அந்நாடுகளில் கடைபெறும் பொய்க்கதையாகவே இவற்றை நான் இதுவரை யில் நினைந்துவந்தேன்.” என்று குமுதவல்லி கூறினாள். 

“இங்கே கட்டுக்கதை இல்லை; நான் உண்மையே சொல்லி வருகிறேனென்று கடவுளுக்கு ஒப்பாக ஆணையிட்டுக் கூறு கிறேன்,” என்று திகழ்கலை பகர்ந்து, பின்னும் மீனாம்பாள் பக்கமாய்த் திரும்பிப், “பெருமாட்டி, நான் என்ன கண்டேன் என்று கேட்டீர்களே, அதனைச் சொல்லுகின்றேன் கேளுங் கள். வெண்மதி துலக்கமாக விளங்கிற்று. மக்கள் கண்ணிற்கு என்றுந் தென்பட்டிராத மிக அழகிய அவ்விடத்தின்மேல் அதன் ஒளி பட்டுத் துலங்கியது. அவ்விடம் மிக அழகிதாய் மட்டும் இருக்கவில்லை, மற்றொரு வகையில் மிக்க வியப்புடைத் தாயுஞ் சாலவும் விழுமிதாயும் இருந்தது! பலதிறப் புதிய வடி வங்களாக விளிம்பு உடைந்த பெரிய ஒரு சீனத்துப் பீங்கானை நினைத்துப் பாருங்கள்; அதன்பிறகு, அப்பீங்கான் அடியிற் கிடந்த சில சிறிய பூச்சிகள் மேல் நிமிர்ந்து அவ்விளிம்பைச் சுற்றி நோக்கினால் அவற்றிற்கு எவ்வகையான தோற்ற முண் டாகு மென்பதையும் நினைத்துப்பாருங்கள். புதுமையாகக் காணப்படும் இவ் எனது உருவகத்தைப் பொருத்திப் பார்க்கு மிடத்து, அப்பெரியவர் என்னை அழைத்துக்கொண்டுபோய் விட்ட அப்பள்ளத்தாக்கினடியில் யான் அப்பூச்சியைப்போல் இருந்துகொண்டு, சுற்றிலுந்தோன்றிய மிகப்பெரிய மலைகளின் வட்டவேலியை மேல் நிமிர்ந்து நோக்கினேன். அங்குள்ள ஒவ் வொரு பொருளையும் நிரம்பவுந் தெளிவாக யான் பிரித்தறியத் தக்கபடி, வெண்டிங்கள் அத்துணை விளக்கத்தோடுந் திகழ்ந்தது; வட்டமா யுள்ள மலைக்குவடுகளின்மேல் மூடிய பனிக்கட்டி களின் எதிரொளியால் அந்நிலவின் பளபளப்பு அப்பள்ளத் தாக்கிலே ஒருங்கு சேர்க்கப்பட்டு அத்துணை விளக்கத்தோடும் இலங்கியது. இப்பள்ளத்தாக்கினின்றும் அப்பால் ஏறிப்போக வாவது, அல்லது அப்பாலுள்ள காட்டிடங்களிலிருந்து ஏறி இதனுள் வரவாவது முயலும் எவரும் அங்ஙனங்கடந்து செல் வதற்கு ஏலாத வண்ணம் பிதுங்கி நீண்ட செங்குத்தான பெரும் பாறைத் தொகுதிகளோடு, அவ்வோங்கிய பொருப்பிடங் களெல்லாம் அப்பள்ளத்தாக்கின் பக்கங்களில் நேர்நீண்டிருந்த தாகிய ஈதொன்றிலே தான், இம்மலையவேலி நான் சொன்ன, ஒழுங்கின்றிப் புதுமையாக உடைந்த விளிம்பினை உடைய பீங்கான் உவமையினின்றும் வேறுபடுகின்றது.ஓ . இம்மலைய வேலிக்குப் புறத்தேயுள்ள நாடுகளிலெல்லாம் மிகக்கொடிய குளிர்மிகுந்த மழைகாலமாயிருக்க, இப்படுகரின் ஆழ்ந்த இடத் திலோ இனிய வேனிற்காலமாயிருந்தது! தித்திக்கும் பழக் குலைகளைச் சுமந்த முந்திரிக்கொடிகளையும் மணிகள் பதித்தாற் போலக் கொழுவிய பழங்கள் உள்ள மரங்களையுங் கம்பலம் விரித்தாற்போலப் பன்னிற மலர்கள் நிறைந்த நிலத்தையும், என்னைச்சூழ மலரும் எண்ணிறந்த நிலத்தாமரைப் *பூக்களையும் யான் வேறுவேறு பகுத்தறியக் கூடியதாயிருந்தது.’ என்று திகழ்கலை சொல்லி வருகையில்; 

“நிலத்தாமரைகளா? ஆம்!” என்று மீனாம்பாள் களிப்பி னால் மெய்ம்மறந்து கூறினாள்; தான் கேள்வியுற்ற இன்ப நிலத்தைப் பற்றிய எண்ணங்களே தன்னுள்ளத்தில் நிரம்பி நின்றமையால், அவள் அம்மலையவேலி என்னுந் துறக்க நிலத்தைப் பெறுதற்கு மிகுதியும் விரும்பினாள் 

குமுதவல்லி களங்கமற்ற தன்மை யுடையவளாதலால், திகழ்கலை படுபொய்களைக் கட்டிச்சொன்னாள் என்று நம்பக் கூடாதவளாயிருந்தாலும், அவ்வளவு புதுமையானதும் நம் பிக்கை யற்றதுமான ஒரு வரலாற்றினை உண்மையென்று ஒப் புக்கொள்வதற்குந் தான் கூடாதவளாய், “இவைகள் எல்லாம் உண்மையிலே வியப்பாகவே இருக்கின்றன!” என்று கூறினாள். 

“ஆண்டவன் அறிய இவைகள் எல்லாம் மெய்யே என்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! என்னுடைய கதையை முற்றுஞ் சொல்லிவிடுகின்றேன். முழுமதி விரித்த தெள்ளிய வெண்ணில வொளியின் உதவிகொண்டு அத் தூய நிலத்தை யான் இன்பமொடு வியந்து நோக்குதலை என்னை அழைத்துச் சென்ற அப்பெரியவர் சிறிதுநேரம் பார்த்து மகிழ்ந்தார்போற் காணப்பட்டனர்; பிறகு அவர் அருள் கூர்ந்த புன்சிரிப்புடன் என்னைத் தம்பின்னே வரும்படி கட்டளையிட்டபோது அவர் சொன்னதாவது: ‘மறுபடியும் இங்கிருந்து வெளியேயுள்ள பெரிய உலகத்திற்கு நீ போனபின்பு, இம்மறைபொருளை வெளியிடலாகா தென்று நாண சொல்லவேண்டுவ தில்லை; ஏனென்றால், இக்கதையை நீ வெளியிட்டாலும் எவரும் உன்னை நம்பவேமாட்டார்!”” என்று திகழ்கலை திரும்பவும் உரைத்தாள். 

மீனாம்பாள் பெருங்களிப்பினால் ஓசையின்றி நீண்ட பெருமூச் செறிந்து, “ஓ! எங்ஙனமாயினும் நான் நீ சொல்வதை நம்புகின்றேன்!” என்று தனக்குட் சொல்லிக்கொண்டாள். 

திகழ்கலை திரும்பவுந் தன்கதையைச் சொல்லத்தொடங் கினாள்: “அப்பெரியவர் பூக்களும் பழம் நிறைந்த மரங்களும் பழக்குலை சுமந்த கொடிகளும் என்னும் இவற்றிடையே என்னை வழி நடத்திக்கொண்டு சென்றார்; எனக்கு விருப்பான கனி எவையேனும் அவற்றைப் பறித் துண்ணும்படி கட்டளையிட் டார். யான் அங்ஙனமே செய்தேன்; நங்கை மீர், அவ்வினிய படுகரிலே அன்று நான் விருந்துண்ட தீங்கனிகளைப் போல் அவ்வளவு சுவையான கனிகளை சுவைத்துப் பார்த்ததேயில்லை. அப்படுகரின் நடுவிலேயுள்ள புல் நிலத்தின்மேல் அமைக்கப் பட்டிருந்த ஒரு சிறியமாளிகைக்கு அப்பெரியவர் என்னை அழைத்துச்சென்றார். நிலவு வெளிச்சத்தில் வெண்சுண்ண வொளிபோல் வயங்கும் புதுமையான ஒருவகைக் கற்களாற் கட்டப்பட்டு இருந்தமையால் அஃது ஒரு மலைக்குகைபோற் றோன்றியது. ஒருசிற்றாறு அதன் அருகே சிலுசிலு வென்று ஓடியது; புல் நிலத்தைச் சூழஇருந்த பாங்கெல்லாம் நிலத்தா மரையின் தோட்டங்களைத்தவிர வேறில்லை. ஓ அம்மலர்களின் நறுமணத்தோடு அளாவி வீசுந்தென்றற்காற்று எவ்வளவு இனி தாயிருந்தது! அது நோய்ப்படுத்துவதாகவேனுங் கடுமையுள்ள தாகவேனுந் தோன்றவில்லை. யான் அந்த மண்டபத்தினுட் கொண்டுபோய் விடப்பட்டேன். அங்கே யான் பார்க்க வேண்டிய நோயாளியையுங் கண்டேன். அவரும் ஆண்டின் முதிர்ந்த பெரியவராகவே இருந்தார்- ஆனால் இக்கதையின் இந்தப்பாகத்தைப்பற்றி யான் சொல்லவேண்டுவதில்லை. ஒரு கிழமை முழுதும் அவ்வினிய பள்ளத்தாக்கின்கண் யான் தங்கி இருந்து அதன் ஒவ்வொருபாகத்திலும் உலாவித் திரிந்தே னென்றும், என்னை அங்கே அழைத்துச்சென்ற பெரியவரை யும், யான் மருந்துகொடுத்த மற்றொரு பெரியவரையுந் தவிர வேறு எவரையும் யான் அங்கே பார்த்திலேன் என்றுஞ்சொல் வதுமட்டும் போதும். யானும் அவர்க்கு நோய்தீர்த்தேன்!” 

“ஒ, இவ்வழகிய பள்ளத்தாக்கைப்பற்றி இன்னும் மிகுதி யாகச்சொல்! கனிகளையும் பூக்களையும் அமைதியான சிற்றாறு களையும் விரைவான மலைவீழாறுகளையுந் தவிர வேறு எதனை யும் நீ பார்க்கவில்லையா?” என்று மீனாம்பாள் வியப்புடன் வினவினாள். 

அதற்குத் திகழ்கலை,”நங்காய்,ஆம், மாதர்கண்கள் என் றுங் கண்டிராத நிரம்பவும் அழகான பறவைகளைப் பார்த்தேன்; மக்கள் செவிப்புலனில் என்றும் பட்டிராத மிகஇனிய இசை களையுங்கேட்டேன். வேலியாகச் சூழ்ந்துள்ள அம்மலைகளின் அடிப்படைகளினும் நெடுந்தொலைவு கீழே ஊடுருவிச்செல்வன போற் காணப்பட்ட பெருமுழைஞ்சுகளின் நுழைவாயில்களை யும் அவ்வாறே கண்டேன்: ஆனால், அவற்றுள் நெடுக நுழைந்து செல்வதற்கு எனக்குத் துணிவில்லாமற்போய்விட்டது. என்றா லும், நான் அப்படுகரில் தங்கியிருந்த ஒரு கிழமைமுழுதும் என்னைக் கலங்கச்செய்யும் அல்லது அச்சுறுத்தும் அல்லது அத் துறக்கநிலத்தில் யான் திளைத்த இன்பத்தினைப் பழுது படுத்தும் எந்த உயிரையும் யான் சிறிதேனுங் காணவில்லை. அவ்விடத்தில் நரிகளின் ஊளைக்குரல் கேட்கப்படுவதில்லை- நிலத்தாமரைத் தூறுகளின் நடுவிலுங் கொடிமுந்திரித் தொகுதி களினிடையிலும் ஓநாய்கள் ஒளித்திருப்பதில்லை- புற்களி னூடே பாம்புகள் களவாய் ஊர்ந்து வருவதில்லை – கழுகுகளுங் கூடத் தாம் ஓங்கிப்பறக்கும் உயரத்திலிருந்து இப்பள்ளத்தாக் கைப் பார்க்கும் மட்டில் மன அமைதி பெறுவதல்லாமல், வேறு இதனுள் இறாஞ்சிப் போவதுமில்லை! நங்கைமீர், இன்னும் இதனை விரித்துச்சொல்லப் புகுவேனானால், அப்படுகரின் வளங் களையும் வனப்புகளையும் புனைந்துரைப்பதிற் பலநாழிகை நேரங் கள் யான் கழித்துவிடக் கூடும்; ஆனால், இக்கதையை யான் ஒருமுடிவுக்குக் கொண்டுவரல்வேண்டும். அக்கிழமைமுடிவில், யான் பார்த்துவந்த நோயாளி முற்றிலும் நோய்தீரப்பெற்றார்; என்னை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுபோன பெரிய வர், ஓர் இராப்பொழுதின் நடுவில் நாம் புறப்படவேண்டுமென் றறிவித்தார். யான் நோய்தீர்த்தவரிடத்தில் விடை பெற்றுக் கொண்டேன்: ஆனாற், சொல்லற்கரிய துயரத்தோடும் யான் அப்படுகரை விட்டுவரத் துவங்கினேன். அப்பெரியவர் மெல்ல மெல்லச் சரிவாய் உயரும் அவ்விடத்திற்கு என்னை நடத்திக் கொண்டு சென்றார்; அதன்பிறகு என்கண்கள் கட்டப்பட்டமையால், எனது மிச்சக்காலத்தையும் யான் மகிழ்வொடு கழித்துவிடத்தக்க அத்துறக்க நிலத்தின் காட்சி மறைபட்டுப் போயிற்று. இல்லை – இனி ஒருபோதுமில்லை!” என்று உறுத் திச்சொல்லிப் பின்னும்: “அங்ஙனம் யான் சிலகாலம் போ யிருக்கும்படி நேர்ந்த அவ்விடம் இந்திரனுலமாகத்தான் இருக்க வேண்டும்; மேலும், நான் உண்மை நம்பிக்கை யுடையவ ளாத லாற் பின்னும் ஒருகால் அவ்விடத்திற்குச் செல்வேனென்று விழைந்திருக்கின்றேன். பெருமாட்டிகளே, யான் உங்களுக் குச் சொல்லிக்கொண்டு வந்தபடி, மறுபடியும் நான் கண்கட்டப் பட்டேன்; இறக்கமான இடங்களை ஏறிச்சென்றோம்; பிறகு முன்முறை சொல்லிய கதவண்டை வந்து சேர்ந்தோம்; புறத் தேயுள்ள உலகத்திற்கு ஏறும்வழி தொடங்கிற்று; உறைபனி மிக்க மழைகாலம் உள்ள மங்கலான புறஉலகத்திற்கு! ஓ, எவ் வளவு துயரத்தோடு அவ்வினிய மலையவேலியைப் பின் திரும் பிப் பார்த்தேன்!” என்று பகர்ந்தாள். 

இந்நேரத்தில் மீனாம்பாள் திடுக்கிட்டுப் பெயர்ந்தாள்; அலங்கோலமான அழுகை ஒலி ஒன்று அவள் வாயிலிருந்து புறப்பட்டது, 

பதினோராம் அதிகாரம்

கரும்பாம்பு

குமுதவல்லியுந் திகழ்கலையுந் திகிலினாற் குதித்தெழுந்தார் கள்; தோழிப்பெண்களும் உடனே அவ்விடத்திற்கு ஓடிவந் தார்கள். பெருந்திகில் தோன்றப்பெற்றநிரம்ப அருவருப்பான முகத்தோடு அக்கொள்ளைத்தலைவன் மனைவி தன் ஆடையின் ஓரத்தை மேலே தூக்கி இழுத்தாள்; அங்கே மிகவும் நேர்த்தி யாக உருவாக்கப்பட்ட அவள் கணைக்காலைச்சுற்றி ஒருகரும் பாம்பு தன்னுடம்பை வளைத்துக்கொண்டிருந்தது. ஓ! முதலி லிருந்தே அரவமின்றித் திருட்டுத்தனமாய்ப் புற்களினூடே நுழைந்துவந்து, தன் நச்சுப்பற்களைச் சிறப்பு மிகுந்த மீனாம் பாள் சதையிலோ அல்லது அழகிய குமுதவல்லி சதையிலோ பதிப்பதென்னும் ஐயுறவினால் இடையிடையே நெடுநேரந் தங்கித்தங்கி வந்த பாம்பு அதுதான். தான் விழித்திருக்கும்போ துங் கனாக்காண்பதுபோல் எண்ணிவந்த எண்ணத்தால், முன் னே தான் சிறிதுணர்ந்த இந்நிலவுலகத் துறக்கத்தைப்பற்றி அக்கொள்ளைத்தலைவன் மனைவி இப்போது வினாவி வருகை யில், தன் நெஞ்சமானது களிப்பு நிரம்பின நம்பிக்கையால் நிறைந்திருப்ப, இன்பவுருவான தன் எண்ணங்கள் உறைபனி மூடிய மேற்கணவாய் மலைவரம்புகளைத் தாண்டி, என்றும் இள வேனில் குடிகொண்டிருப்பதும், நறுமணங்கமழுந் தன் தனி யிடங்களில் மழைகாலத்தின் ஊதைக்காற்று நுழையப் பெறா த்துமான அப்படுகரிற் செல்கின்ற அந்நேரத்திற் சாவைத்தரும் அக்கொடும்பாம்பு அவளது வெதுவெதுப்பான மெல்லிய தசை யிலே தன் கூர்ம் பற்களை ஊன்றியதே! 

அறிவிற்சிறந்த திகழ்கலையைத் தவிர மற்றவர்கள் எல்லா ரும் மனக்கலக்கத்தினாலுந் துன்பத்தினாலும் ஏக்கத்தினாலும் அலங்கோலமாயினர். இந்தப் பெண்பிள்ளை மட்டும் ஊக்கக் தளரவிடாமலிருந்தாள்; ஒரு மரத்தின் ஒடிந்த கிளை ஒன்றைப் பிடுங்கிப் புல்லின்மேல் நீண்டுகிடந்த அப்பாம்பின் வாலின் மேல் ஓரடி கொடுத்தாள்; உடனே அஃது இரைந்துகொண்டு தன் சுற்றை அவிழ்த்தது; மறுபடியும் அவ்வளாரின் அடி அதன்மேல் விழுந்தது; உடனே அது சாவுநோய் மிகுந்து நெளிந்துகிடந்தது. சுருண்டு துடிக்கும் பாம்பின் கிட்ட இருக்க விடாமல், இப்போது அரைவாசிகளைத்துவிழும் மீனாம்பாளைக் கரையின் சிறிது மேற்புறத்தே விரைந்து இழுத்துவரும்படி திகழ்கலை தோழிப் பெண்களுக்குக் கற்பித்தாள். ஒரு நொடிப் பொழுதுஞ் சோரவிடாமல் திகழ்கலை மிகவும் பெருமைபாராட் டிப்பேசிய தன்மருந்துகளைக் குனிந்துகொண்டே காயத்திற் சேர்த்தினாள். அதன் பின்னர் எவ்வகையான நஞ்சுக்கும் முறி மருந்துகளென்று தான் முன்னமே சொல்லியவற்றுள் ஒன் றான ஒரு தூளை எடுத்துத், தான் ஏவியபடி தோழிப்பெண் ஒருத்தி கொண்டுவந்த ஒரு கிண்ணந் தண்ணீர் சிறிதில் அத னைக்கலக்கி, அதனை அவள் மீனாம்பாள் வாயில் ஊற்றினாள். 

மிகக் கொடிய நச்சுப்பாம்பின் கடியையும் மாற்றும் உயர்ந்த மருந்தாகத் தான் நம்பிய ஒருபூண்டு தங்கள் கூடாரம் அடிக்கப் பட்ட இடத்திற்கு அருகாமையில் வளர்ந்திருப்பதைத் தான் சிறிது நேரத்திற்குமுன் காண நேர்ந்தமையால், அதனைத் தேடிக்கொண்டு காப்பிரிப் பெண்ணானவள். பழமரங்கள் நிறைந்த தோப்பினுள் விரைந்துசென்றாள். அந்தச் சிற்றாற் றின் கரைமேற் றோன்றிய இந்தக் காட்சியானது மனத்தை உருகச் செய்வதாய் இருந்தது. ஞானாம்பாள் மீனாம்பாளைத் தன் கைகளிற் றாங்கிக்கொண் டிருந்தனள். சுந்தராம்பாள் அவள் கைகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு அவள் முகத்தைக் கவலையோடும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்; மீனாம்பா ளின் பாங்கியான மலையநாட்டுப் பெண்ணோ பெருந்திகிலோ டும் பேரச்சத்தோடும் நோக்கிக்கொண்டிருந்தாள். திகழ்கலை யோ உயர்த்துப்பேசிய தனது மருந்தைச் செலுத்தியிருந்தும், ஒருவகையான பெரிய முகவாட்டத்தோடும் அருகே நின்று கொண்டிருந்தாள். குமுதவல்லியோ தன் கன்னங்களிற் கண் ணீர் ஒழுகப், புற்பற்றைமேல் மண்டியிட்டு முழங்காலின்மேற் குனிந்தபடியே நின்றாள்; ஏனென்றால், தான் ஏற்கெனவே விரும்பத் தலைப்பட்டவளும், இறக்கக்கூடாத அத்தனை இளம் பருவமுள்ளவளும், பெண் அழகிற்கு அவ்வளவு சிறந்தபடியா யிருந்தவளும் ஆன ஒருபெண்மணி இந்நிலவுலகத்துள்ள ஒளி யை என்றுங் காணாதபடி தன் கண்களை மூடிக்கொள்ளப்போ வதை எண்ண எண்ண அவள் நிரம்பவுங் கடுமையாகத் துன் புறுத்தப்பட்டாள்! 

நாம் முன்னமே சொல்லியபடி மீனாம்பாளை ஒருகளைப்பு வந்து மூடியது; அஃது, அவளுடைய நரம்புக்குழாய்களில் அப் பாம்பின் நச்சுநீர் ஓடுவதனால் உண்டான விறைப்பின் விளைவு என்றும், அது சாவை உண்டாக்குந் திமிர்ப்பாக விரைவில் முடியும் என்றுங் குமுதவல்லி எண்ணினாள். கலக்கமுந் துன் பமும் உற்ற குமுதவல்லி தான் மண்டியிட்டிருந்த நிலையினின் றுங் குதித்தெழுந்து, உருக்கம் நிறைந்த குரலொடு திகழ்கலை யை நோக்கி, “இந்த அம்மையை நீ காப்பாற்றக் கூடுமென்று நினைக்கிறாயா? உன்னுடைய மருந்துகளில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? எனக்குச் சொல். புண்ணியத்தின் பொருட்டாக வேனும் உன்னால் ஆனமட்டும் பார்! நானே உனக்கு நிரம்ப வும் மிகுதியாகப் பரிசுகொடுப்பேன்!” என்று பேசினாள். 

அதற்குத் திகழ்கலை “மக்களுடைய கை மருந்துகள் கெ கொடுக்கும்; ஆனால், மற்றையதை ஆண்டவனே முடிவுசெய்ய வேண்டும். உங்களுடைய தோழி பிழைத்தாலும் பிழைக்க லாம், அல்லது செத்தாலுஞ் சாகலாம்: அதனைக் கடவுளே அறி வார்! கடவுளே பெரியவர்!” என்று விடைகூறி, இந்தவகை யான பேச்சினால் மருத்துவஞ் செய்யுந் தன் உண்மைக்குணத் தையுஞ், சிறிது நேரத்திற்குமுன் தவறாமற் பலிக்குமென்று தான் பெருமை பாராட்டிக் கூறிய தன் மருந்துகளின் மதிப் பையும் பாதுகாக்கப் பார்த்தாள். 

அதனைக்கேட்ட குமுதவல்லி வருத்தமும் மனத்தளர்ச்சி யும் அடைந்து, “ஐயோ கடவுளே! உன் சொற்கள் எனக்கு நம் பிக்கையைத் தரவில்லையே!” என்று முணுமுணுத்தாள். 

நாகநாட்டரசிக்கும் அவ்வறிவோளுக்கும் இடையே நடந்த இச்சொற்களைக் கேட்கும்படியான அளவு உணர்வு வரப்பெற்ற மீனாம்பாள் தன் கரிய பெரிய விழிகளைத் திறந்து, “ஏது, நம்பிக் கை சிறிதும் இல்லை! அந்தச் சாநஞ்சு என் நரம்புகளிற் சுற்றி ஓடுகிறது; நான் சாகவேண்டுவது தான்! ஆனால், ஓ பெரு மாட்டி! நீங்கள் என்னிடத்திற் பற்றுவைத்தீர்களே! அழகிய குமுதவல்லி நீங்கள் என்பொருட்டுத் துயாமும் அடைகிறீர் களே!” என்று கூறினாள். 

மறுபடியும் மீனாம்பாள் பக்கத்தில் மண்டியிட்டுக் குனிந்த நாகநாட்டாசி தன்னை அவள் பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டு அவள் மேல் வியப்புடன் நோக்கினாள்; ஏனெனில் இவள் தன் பெயரை அக்கொள்ளைத்தலைவன் மனைவிக்குத் தெரிவிக்கவே யில்லை. 

உடனே அவள் பார்வையினது வியப்புக்குறியின் காரணத் தைத் தெரிந்துகொண்டவளான மீனாம்பாள், “ஆம், அழகிய குமுதவல்லி நான் உங்களை அறிவேன்! ஓ, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுவது மிகுதியாயுள்ளது! அதன்பொருட்டு என் னுயிர் வேண்டுமளவுக்கு நீண்டநேரம் தங்கியிருக்கும்படி ஆண்ட வன் அருள்புரிவாராக! ஆயினும்,முதலாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று மொழிந்தாள். 

இவ்வாறு பேசிக்கொண்டே மீனாம்பாள் நோயோடும் வருத்தத்தோடுந் தன்கையை உயரத்தூக்கினாள்; தன் மார்பி லிருந்து ஒரு சிறிய பொருளை எடுத்து அதனைக் குமுதவல்லி யிடம் நீட்டினாள். சாவடியிலுள்ள அறையின் கண்ணே தன் விரலினின்றும் நல்லானாற் கழற்றப்பட்ட மோதிரந்தான் அது, என்று தெரிந்துகொண்டவுடனே அவ்வழகிய நாகநாட்டரசி யின் வாயிலிருந்து களிப்பும் வியப்பும் உள்ள ஓர் ஒலி தோன்றிற்று. 

“ஆம், அஃது உங்களுடையதுதான், அஃது உங்களுக் குத்தான் உரியது! இப்பொழுது அதனைத் திரும்பவும் உங்க ளிடஞ்சேர்ப்பித்ததனாலே, என் மனத்திலிருந்த ஒரு பெருங் கவலை நீங்கப்பெற்றேன்.” என்று மீனாம்பாள் கூறினாள். 

அவ்வருங்கலத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததுங் குமுத வல்லி தன் கண்களையே நம்பக்கூடாதவளாய், “என்னுடைய மோதிரம்!” என்று இறும்பூதுடன் இயம்பினாள்; ஏனென்றால், தனக்கு எதிரில் இப்போது சாகும் நிலைமையில் உள்ள கருங் கண்மாதரார் வசத்தில் அஃது எங்ஙனம் வந்திருக்கக்கூடும்? என்னுங் கலவர ஐயமானது அவள் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்தது. 

“அழகிய குமுதவல்லி, உங்களைத்தவிர மற்றவர்கள் எல் லாருந் தொலைவிலே விலகிப்போய் இருக்கட்டும் ; நான் உங் களுக்குச் சொல்லவேண்டுவது மிகுதியுமிருத்தலால், நீங்கள் இங்கேயே இருங்கள்.” என்று மீனாம்பாள் விளம்பினாள். 

இந்நேரத்திற், கனிமரத் தோப்பிலிருந்து காப்பிரிமாது வெளியே வந்தாள்; அவள் தான் பிடுங்கிக்கொண்டுவந்த பூண்டுகளைக் கடுக நசுக்கிப்பிசைந்து தன் தலைவியின் காயத்தில் வைத் துக் கட்டுதற்கு விரைந்து முன்வந்தாள். 

அதனைப்பார்த்ததுந் திகழ்கலை சிறிது வெகுண்டு, “நான் செலுத்தியிருக்கின்ற மருந்துகளைக் கலைத்துவிடாதே! கடவு ளுக்குத் திருவுள்ளமானால், அவ்வம்மை பிழைத்துக்கொள்வார் கள்.” என்று மொழிந்தாள். 

அதற்குக் காப்பிரிமாது,”அப்புறம் எட்டிநில் அம்மே, என் மனத்தின்படிதான் நான் நடப்பேன்!” என்று தீர்மானத் தோடுங்கூறிப் பின் மீனாம்பாள் கணைக்காலில் அந்த மருந்தை வைத்துக் கட்டப்போகிறவள், “அன்புள்ள பெருமாட்டி, இந்த ஒரு மருந்தைமட்டும் யான் சேர்க்கும்படி விடைதரல்வேண்டும்; 

இறைவனுக்குத் திருவுள்ளமிருந்தால் இதனாலேயே பிழைத்துக்கொள்வீர்கள்!” என்று மீனாம்பாளைப் பார்த்துப் பகர்ந்தாள். 

”உனக்குத் தகுதியாகப்படுகிறதை நீ செய்; ஆனாந், செய் வதை விரைந்துசெய்; ஐயோ, எனக்கோ நம்பிக்கை இல்லை! அப்பாம்பின் நஞ்சு என் நாப்புக்குழாய்களிற் சுற்றி ஓடுகிறது. கள்ளம் ஏதும் அறியா அழகிய குமுதவல்லியினிடத்து இழைத்த தீமைகளுக்கு மருந்தாக எனக்கு இன்னும் எஞ்சி யுள்ள சிறிது அரிய நேரத்தையும் யான் முற்றும் பயன்படுத் திக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று மீனாம்பாள் மறு மொழி தந்தாள். 

கடைசியான இந்தச் சொற்கள் தாழ்ந்த புலம்பற் குரலிற் சொல்லப்பட்டமையால் அவை குமுதவல்லியின் செவிகளில் மட்டும் பட்டன; காப்பிரிமாதோ பிசைந்தமருந்தைப் பாம்பு கடித்த கணைக்காலில் வைத்து அதனைத் தன் முக்காட்டிலிருந்து கிழித்த துணியினாற் கட்டிக்கொண்டு அம் முயற்சியில் நினை அழுந்தியிருந்தாள். 

அதன்பின் அக்காப்பிரிமாது, ‘பெருமாட்டி, இப்போது மருந்து கட்டிமுடிந்தது. தங்களைக் காப்பாற்றுவது ஏதேனும் இருந்தால், அஃது இதுதான். நான் பிறந்தநாட்டில் மிகவுங் கொடுமையான நச்சுப்பாம்புகளின் கடுவையும் முறிக்கும் மருந்தாக இப்பூடுகள் கொடுக்கப்பட்டதனை நான் கண்டிருக்கி றேன்.’ எனப் புகன்றாள். 

“போதும், என் நம்பிக்கையுள்ள பணிப்பெண்ணே, என் நெஞ்சத்திற் பிழைப்பேனென்னும் நம்பிக்கையில்லை; என்றா லும், நீ நல்லெண்ணத்தொடு செய்த ஊழியத்திற்காக யான் பாராட்டும் நன்றியறிவு சிறிதுங் குறைவுபட்டிலது. அங்ஙன மே திகழ்கலை உனக்கும் எனது நன்றியைச் செலுத்துகின் றேன்! ஆயினும், நீங்கள் எல்லாரும் விலகிப்போங்கள்; யான் குமுதவல்லியொடு தனித்திருக்கவேண்டும்.” என்று மீனாம் பாள் நுவன்றனள். 

உடனே அவ்வறிவோளுங், காப்பிரிப் பெண்ணும், மலை நாட்டுப் பணிப்பெண்ணுஞ், சுந்தராம்பாளும், ஞானாம்பாளுங், காதிற்குமட்டும் எட்டாததாயினும், அவர்கள் அழைக்கும் நேரத் தில் தாம் உடனே சென்று உதவத்தக்க அண்மையில் உள்ள தான ஓரிடத்திற்கு அவ்வாறே ஒதுங்கிப் போயினர். அக் கரிய விழி மாதரார் தெரிவிக்கப்போவது எதுவா யிருப்பினும் அத னைக்கேட்கும் ஆவலோடும் ஐயுறவோடுங் குமுதவல்லி எதிர் பார்த்திருந்தனள்; ஏனென்றால், மீனாம்பாள் பேசிய சொற் களைக் கேட்டபிறகு, அவன் யாரா யிருக்கக்கூடுமென்றும், அந்த மோதிரம் அவள் வயத்தில் எங்ஙனம் வந்திருக்கக் கூடு மென்றும் நாகநாட்டாசி முன்னையிலும் மிகுதியாக விம்மிதம் உற்றாள். 

உடனே மீனாம்பாள், சாவின் களவான வருகையைத் தெரிவிப்பதுபோல் அவ்வளவு மெலிந்த தன்மையொடு பேசுனாலுந், தெளிவாகவுங் காதிற்கு எட்டத்தக்கதாகவும் உள்ள குர லில், “அழகிய குமுதவல்லி, என்னிடத்தில் நீங்கள் இரக்கங் காட்டினீர்கள்; என்பொருட்டுக் கவலையும் அடைந்தீர்கள்; அமைதியான உங்கள் நல்ல இனிய அழகினால் முன்னே மனங் கசியப் பெற்றயான் இப்போது என் நெஞ்சம் முழுதும் உரு கப் பெற்றேன்! குமுதவல்லி, திடுக்கிடாதீர்கள்! என்னை அரு வருப்பொடு பாராதீர்கள்!ஓ! முன்னமே நோய்ப்பட்டிருக்கும் என்னைப் பின்னும் புண்படுத்தாதீர்கள்! நான் அக்கொள்ளை தலைவனுக்கு மனைவியென்று சொல்லும்போது என்னைத் துயரத்தோடும் இரக்கத்தோடும் பாருங்கள்! ஆம், நான் நல்லா னுக்கு இல்லக் கிழத்தியே!” என்று விளம்பினாள். 

இவ்வுண்மை வெளிவரக்கேட்ட குமுதவல்லிக்கு உண்டான இறும்பூது இவ்வளவுதான் என்று விரித்துச்சொல்லல் இயலாது: ஆனாலும், புண்ணியத்தன்மை வாய்ந்த அவளது நெஞ்சமானது, திண்ணமாகவே பிழைக்கமாட்டாமல் இறந்து போகும் நிலையிலுள்ள மீனாம்பாளிடத்தில் அருவருப்பாவது எரிச்சலாவது காட்ட ஒரு சிறிதும் இடந்தரவில்லை. 

“ஓ! உங்கள் கணவன் எனக்குச் செய்த தீமையை நீங்கள் வேண்டிய அளவு மாற்றிவிட்டீர்கள்! அவர் என்னிடத்தி லிருந்து எடுத்துக்கொண்ட மோதிரத்தைத் திருப்பி எனக்குக் கொடுத்துவிட்டீர்கள்! ஒ, அவர்தாம் அதனை எடுத்துக்கொண்ட வர் என்பது எனக்குத் தெரியும்.” என்று குமுதவல்லி தன் கன்னங்களிற் கண்ணீர் ஒழுக மெல்லெனக்கூறினாள். 

”உங்களுக்கு அது தெரியும்!” என்று இப்போது மீனாம் பாள் தான் வியப்புற்று வினவினாள். 

”ஆம், நான் இருந்த அறையினுள் அவர் நுழைந்ததைக் கண்டேன் ; நான் அயர்ந்து உறங்குவதுபோலப் பாசாங்குசெய் தேன்; ஏனென்றால், அவர் தமது கையிற் கட்டாரி ஒன்று வைத்திருந்தார்; ஒ! நான் அஞ்சினேன் -” என்று குமுதவல்லி மறுமொழி புகன்றாள். 

மீனாம்பாள் நடுக்கத்தோடும் “பெருமாட்டி, அதனைச் சொல்லாதீர்கள், அப்படியானால் நீங்கள் என்கணவனைப் பார்த் தீர்களோ?” என்று கூறினாள். 

அதற்கு “ஆம்-ஆம், நான் அவரைப் பார்த்தேன்.” என்று விடைகூறிப், பின்னும், ”அவர் என்னைத் துன்பப்படுத்திக் கொண்டு வந்தார்? அவர் ஏன் எனக்கு அவ்வளவு பொல்லாங்கு செய்யத் தேடினார்? என்பதை எனக்குச் சொல்லுங்கள்.” என்று குமுதவல்லி கேட்டாள். 

“அழகிய குமுதவல்லி, திரும்பவும் உங்களிடம் நான் சிறிது முன்னே கொண்டுவந்து சேர்ப்பித்த அக்கணையாழியின் மதிப்பு உங்களுக்குத் தெரியாது என்பதனை யான் நன்கு அறி வேன். ஒ! என்னைவந்து மூடுகிற இவ்வாற்றாமை யாது? இது சாக்காடாகத்தான் இருக்கவேண்டும்!” என்று மீனாம்பாள் இயம்பினள். 

உண்மையிலே, விளக்கின் சுடரைப்போல் அத்தனை ஒளி யோடும் மிளிரும் இயல்பினையுடைய மீனாம்பாள் கண்கள் பளிங்குபோல் ஆகத்துவங்கின; சாவின் மாறுவடிவம் ஏற்கென வே அவள் முதத்தின்மேற் காணப்படுவதாயிற்று. அக்கொள் ளைத்தலைவன் மனைவியைக் குமுதவல்லி தன் கைகளிற் றாங்கிக் கொண்டிருந்தாள்; “ஒ, நான் என்ன செய்யக்கூடும்? யாது உதவி நான் இயற்றக்கூடும்?” என்று அவ்வழகிய நங்கை நடுங் கிய குரலொடு கூறினாள். 

”ஒன்றுமில்லை! குமுதவல்லி, ஒன்றுமில்லை !` என்று மீனாம்பாள் மனத்தை உருகச்செய்யுந் துயரத்தோடு அமைதி யாய்ச் சொன்னாள்; அதன் பிறகு, இன்னும் மிஞ்சியிருக்கின்ற தன் வல்லமையை ஒருங்கு சேர்த்துக்கொண்டு, நழுவிப்போகுந் தன் ஆண்மைகளில் மிச்சமா யிருப்பனவற்றை ஒருங்கு தொ குத்துக்கொண்டாலென்ன, அவள் கூறுவாளானாள்: “இன் னுஞ்சிறிதுநேரம் யான் உயிர் பிழைத்திருக்கும்படி கடவுள் அருள் புரிவாராக!ஒகுமுதவல்லி,எவ்வளவு அன்பொடு நான் என் கணவனைக் காதலித்துவந்தேன், இன்னுங் காதலிக்கின் றேன் என்பது உங்களுக்குத் தெரியாது! ஆனாலும், இந்த மே லான நேரத்தில் – அழிந்து போவதொன்றும், அழியாமல் நிலைத்திருப்பதொன்றுமாகிய இரண்டுலகங்களுக்கு இடையிலே என் ஆவி தொங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், நன்னடை யையும் மன அமைதியையுமே இன்னும் மேலாக நான் நேசிக்கின்றேன்!” 

“உங்கள் கணவனார் எனக்குச் செய்திருக்கும் அல்லது செய்ய நினைத்திருக்குந் தீங்குகளுக்காக எப்போதாயினும் கான் பழிவாங்குதற்கு ஏற்ற நேரம் வாய்த்தாலும் நான் அவரைப் பழி வாங்கப் பார்ப்பேனென்று நினையாதீர்கள்!” என்று அக்கரை யுள்ள குரலொடு குமுதவல்லி உறுதிமொழி புகன்றாள். 

“இந்தச் சொற்களுக்காகக் கடவுள் உங்களுக்கு அருள் வழங்குவாராக!” என்று மீனாம்பாள் நன்றியறிவின் ஒளி தன் கரிய பெருவிழிகளிற் சிறிதுநேரங் கதிர்த்துத் தோன்ற மெல் லென உரைத்தாள்; “தங்கள் வாயிலிருந்து யான் பெறுதற்கு விழைந்த உறுதிமொழி அதுவே; அதனை நீங்களே வலியச் சொல்லிவிட்டீர்கள்! ஒ, குமுதவல்லி உங்களுக்கு என் நன்றி யைச் செலுத்துகின்றேன் – என் நெஞ்சார உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்! நல்லான் என்பவருக்கு ஏதுந் தீங்கு செய்யா தீர்கள்!” 

“என்னைப்பாதுகாத்துக்கொள்ள நேர்ந்தால் அல்லாமல் அவர் இனிமேற் செய்யுஞ் செயல்களால் யான் அவருக்கு எதி ராய் அறநூற்படி செய்ய வலுகட்டாயஞ் செய்யப்பட்டால் அல் லாமல் நான் அவருக்கு ஒன்றுஞ் செய்யமாட்டேனென்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!” என்று குமுதவல்லி வற் புறுத்திக் கூறினாள். 

“குமுதவல்லி, இனிமேல் அவர் உங்களைத் தொல்லைப் படுத்த மாட்டார். ஆனால், எப்போதாயினும் அவர் மாறுகோலம் பூண்டிருக்கக் காண்பீர்களாயின், அவரைத்தாங்கள் காட்டிக் கொடாமலிருக்கும்படி தங்களைக் கெஞ்சிக் கேட்டுகொள்கின் றேன்!” 

”இல்லை, அவர் தமக்கு இரையாக்கப் பார்க்குங் களங்கமற்ற வர்களைக் காக்கும் பொருட்டாக அல்லாமல், நான் அவரைக் காட் டிக் கொடுக்கமாட்டேன்!” என்று குமுதவல்லி கூறினாள். 

“இதைவிட இன்னும் மிகுதியாக உங்களால் உறுதி கொடுக்கமுடியாது; நானும் உங்கள் வாயினின்று இன்னும் மிகுதியாகக் கேட்கக்கூடாது. ஐயோ! என் வல்லமை யெல் லாம் என்னை விட்டு நழுவிப்போகின்றதே! ஏதோ படலம்வந்து என் கண்ணை மறைக்கின்றதே! என் எண்ணங்கள் தாறுமாறா கக் குழம்புகின்றனவே!ஆ! அந்தத் துறக்கவுலகத்தை இனி நான் என்றும் பாரேன்! குமுதவல்லி, நீங்கள் எங்கே இருக் கிறீர்கள்? நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள்! விழிப்பாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!” என்று மீனாம்பாள் முற்றுஞ் சொல்லக்கூடாமல் நின்றுவிட்டாள். 

ஐயமுங் கலக்கமுங் கொண்ட குமுதவல்லி, “உங்கள் கண வரைத் தவிர இன்னும் நான் விழிப்பாய் இருக்கவேண்டியவர் கள் வேறு எவரேனும் உண்டோ? சொல்லுங்கள் – ஒ, சொல் லுங்கள்: உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன், எனக் குச் சொல்லுங்கள் -” என்றாள். 

இப்போது மீனாம்பாளுக்கு விழிகள் சிறிது சிறிதா மூடத் துவங்கின; அவள் குரல் மெலிந்து மங்கலாய்க் கேட்டது; அவள், “அந்தோ ! இங்ஙனம் மாண்டுபோவதோ!-இங்ஙனம் மாண்டு போவதோ!- இவ்வளவு இளம் பருவத்தில்–விளக்க மான கதிரவன் வெயில் வெளிச்சத்தில் – பறவைகள் மரங் களின் நடுவில் பாடிக்கொண்டிருக்க – மலர்கள் சுற்றிலும் இதழ் விரிந்திருக்க! இது சாக்காடுதானோ – அல்லது உறக்கந்தானோ என்னைவந்து அமிழ்த்துவது? குமுதவல்லி – நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று விட்டு விட்டு மெல்லப் பேசினாள். 

அதற்குக் குமுதவல்லி அமைதியாய், “நான் இங்கேதான் இருக்கிறேன், உங்கள் தலையைத் தாங்கிக்கொண்டிருக்கிறேன்.” என்று காதுக்குட் சொன்னாள். 

“நெடுந்தொலைவிலுள்ள உலகங்களிற் கந்தருவமாதினிடத் திருந்துவரும் மறைவொலிபோல், உங்கள் குரல் எனக்குக் கேட்கின்றது! உங்கள் மெல்லிய இனிய குரல்ஒலியிலிருந்து கடவுளின் திருவருள் ஒலி எனக்கு வருகின்றது! குமுத வல்லி, நான் இறந்துபோகின்றேன் -சில நொடிகளில் எல் லாம் முடிந்துபோகும்! காலந்தாழாது நீங்கள் நீலகிரி நகரத்திற் குப் போகும்படி நான் உங்களை வேண்டிக்கொள்கின்றேன்- குளிர்ந்துபோன பிணமாக யான் இங்கே நீட்டப்பட்டுக் கிடக் கும்போது என்கிட்ட ஒரு நொடிப்பொழுதுதானுந் தங்கியிரா தீர்கள் – நீங்கள் செல்லவேண்டிய வழியில் விரைந்து செல்லுங் கள் – குமுதவல்லி விழிப்பாயிருங்கள் – விழிப்பாயிருங்கள் -” என்று கடைசியிற் சில சொற்களைச் சொல்லக்கூடாமல் நிறுத் தினாள் மீனாம்பாள். 

மறுபடியும் பேசுவதற்கு மீனாம்பாள் வாயைத்திறந்து மேல் மூச்சு எறிந்தாள்: காதுக்குக் கேளாவிட்டாலும், எவை யோ சில சொற்கள் அவள் உதடுகளின்மேல் தத்தளிப்பன போற் காணப்பட்டன. குமுதவல்லி அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு ஆவலுற்று மிகுந்த கவலையோடும் அவள்மேற் குனிந்தாள் : ஆனால் இப்போது மீனாம்பாள் சிறிதும் அசை வின்றிக் கிடந்தாள்.- உயிர்போய்விட்டதென்றே நாகநாட்டரசி அஞ்சினாள். 

கடைசியாகத், தொலைவிலே ஒருவர் சொல்லிய ஒரு பெய ரைத் திரும்பச்சொல்லும் எதிரொலியேபோல், மிகவும் மங்க லான குரலில் அக்கொள்ளைத் தலைவன் மனைவி முணுமுணு வென்று கூறுவாள்: “குமுதவல்லி, இந்த மேலான நேரத்திற் கடவுளின் திருவருளால் ஒரு தேவதூதன் என்னிடம் அனுப் பப்பட்டிருக்கின்றார்! – விழிப்பாயிருங்கள் – பற்றி – விழிப்பா யிருங்கள் ” 

சிறிது நின்று மீனாம்பாள் ஒரு பெயரை மெல்லச் சொன் னாள்: சில நொடிகளுக்குமுன் குமுதவல்லியின் இயற்பெயரை அவள் சொல்லியபோது இருந்ததைவிட இப்போது சொல்லி யது இன்னும் மிகவும் மங்கலாய்ப்போயிற்று. இளந்தென்றற் காற்றுச் சடுதியில் வீசிச் சென்றாலென்ன மெல்லச் சொல்லப் பட்ட அது சந்திரன் என்னும் பெயரே யெனக் குமுதவல்லி எண்ணினாளேனும், அதைப்பற்றி அவள் உறுதிப்படவில்லை. மறுபடியும் மீனாம்பாள் அசைவில்லாமலும் பேசாமலும் இருந் தாள்; உயிர் மறுபடியும் இடைவிட்டுத் திரும்புமோ என்று பார்க்கவேண்டிக் குமுதவல்லி அளவிறந்த கவலையோடும் ஐயத் தோடுங் காத்துக்கொண்டிருந்தாள். ஆனால், இமைப்பொழுது கள் பலசென்றன; பின்னர் அவை நிமிஷங்களாயின; ஆகியும் மீனாம்பாள் அசைந்திலள்; பேசிற்றிலள்; அவள் வாயிலிருந்து இப்போது மிகச்சிறிய மூச்சுக்கூட வரவில்லை. சிறியநோத் திற்கு முன்னே அவள் கன்னங்களினின்றும் மறைந்துபோன செந்நிறமானது இப்போது அவள் இதழ்களினின்றும் பிரிந்து போயிற்று; ”மெய்யாகவே எல்லாம் முடிந்துபோயிற்று.” என்று குமுதவல்லி தனக்குள் முணுமுணுத்தாள். 

மீனாம்பாளின் தலையைப் பூக்கள் நிறைந்த புல்நிலத்தின் மேற்சோர்ந்து கிடக்கும்படி மெல்லென விட்டுவிட்டு, நாகநாட் டரசி தான் இதுவரையில் தாங்கிக்கொண்டிருந்த அவ்வுடம்பு தன்மேற் படாதபடி விலகிக்கொண்டாள். மூடப்பெற்ற கண்க ளொடு தனக்கெதிரில் அசைவின்றிக் கிடப்பதும், மேலே கவிந் திருக்கும் மரங்களின் திறப்பின் வழியே ஞாயிற்றினொளி பட்டு ஆடப்பெறுவதுமான அவள் முகத்தை அளவிறந்த துயரத்தோடுங் கண்ணிமையாமல் நோக்கினாள். 

“இவள் இப்படியா இறக்கலானாள்? எவ்வளவு அச்சத் தொடு வாழ்ந்தனளோ அவ்வளவு அச்சத்துடன் இறந்தனள்! வேண்டுமானால் மிக உயர்ந்த நிலையினையுந் தருதற்குரிய அழ கிற்சிறந்த இம்மாது ஒருகொள்ளைக்காரனுக்கு மனைவியாகி, அவனது திருட்டுத்தொழிலிலுங் கலந்திருந்தனளே! இவள் திரும்பவும் உயிர்பிழைத்து எழக்கூடுமாயின், முன்நாட்களில் தன்னை மலினப்படுத்தி இழிவு செய்த குற்றங்களுக்குப் பின் நாட்களில் மாற்றுத் தேடி யிருப்பளே! அந்தோ! இப்போது இவள் விட்டுச்சென்ற ஒளிநிறைந்த இவ்வினிய நிலவுலகத் திற்கு இவள் திரும்பவும் வரும்படி செய்யக்கூடிய வியப்பு நிகழ்ச்சி ஒன்றும் இல்லையா! ஐயோ! இவள் இங்கே உயிர் அற்ற பிணமாய்க் கிடக்கின்றனளே! என்று குமுதவல்லி தனக்குட் சொல்லி இரங்கினாள். 

குமுதவல்லி, தன்கண்களை மங்கச் செய்யுங் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்; மற்றைப்பெண்பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து நின்ற அவ்விடத்திற்கு அவள் மெதுவாய்ச் சென்றாள். அவள் முகத்திலிருந்து உடனே உண்மை இன்னதென்று புலப் படலாயிற்று. அதனை அவ்வாறு தெரிந்து கொண்டவர்களெல் லாம் மனத்துயரத்தால் தாக்குண்டார்கள் : ஆனாற், காப்பிரிமா தும் மலையநாட்டுப் பணிப்பெண்ணும் மிக்க துயரத்தோடும் புலம்பி அழுவாராயினர். 

“ஆண்டவன் திருவுள்ளப்படிதான் நடக்கும்! ஊழ் வினைக்கு மாறாய் உதவக்கூடிய மருந்து ஏதுமே இல்லை. தீவினைக்கு எதிராய் மருத்துவனுடைய திறமை போராடமாட் டாது. எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்: இறைவன் திருவருள் சிறப்பதாக!’ என்று திகழ்கலைகூறினாள். 

இந்தப் பெண்பிள்ளையின் பசபசப்புப்பேச்சு முன்னே தீங் கற்றதாகக் குமுதவல்லியால் எண்ணப்படினும், அவள் தன் திறமையற்ற பழக்க மருத்துவத்தை மெழுகிப்பேச எடுத்த பாசாங்காகவே இருந்தமையால், இப்போது அஃது அருவருக் கத்தக்கதாகவே தோன்றியது. ஆகவே, நாகநாட்டரசி அவ்வறி வோளை விட்டு அப்புறந் திரும்பிப்போயினாள்; காப்பிரிமாதை யும் மலையநாட்டுப் பணிப்பெண்ணையும் அவள் ஆற்றுதற்கு முயன்றாள். செய்யத்தக்க சவச்சடங்குகள் எங்கே செய்யப்படு மோ அங்கே பிணத்தை எடுத்துச் செல்வதற்குரிய ஒழுங்குகள் செய்யவேண்டுவது இப்போது அவர்கள் கடமை என்பதை அவள் அவர்களுக்கு நினைப்பூட்டினாள் : ஆனாலும், அதைப்பற்றி அவள் ஏதுங் கேட்கவில்லை; ஏனென்றால், நல்லான் இருக்கும் இருப்பிடத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள அவள் நாடவில்லை. 

அவ்வாறு குமுதவல்லி பேசிய அவ்விருதோழிப்பெண் களுந் தமக்குரிய கடமையைப்பற்றி நினைக்கும்படி தூண்டப் பட்டார்கள்; உடனே அவர்கள் மனக்கலக்கத்தை ஒருவாறு ஆற்றிக்கொண்டு தங்கள் தலைவி கிடந்த இடத்தண்டை துயா மான பார்வையோடும் மெதுவான நடையோடுஞ் சென்றார் கள். காலந் தாழாமல் உடனே நீலகிரிக்குப் பயணந் துவங்கும் படி தனக்கு மீனாம்பாள் அக்கரையொடு சொல்லியதைக் குமுத வல்லி இப்போது நினைவுகூர்ந்தாள்; அவள் உடனே இக் கருத்தைத் தன்தோழிமார்களுக்குத் தெரிவித்தாள். பயணக் தொடங்கவேண்டியதை அவர்களுக்குக் கற்பித்துவிட்டு, ஈர நெஞ்சமுள்ள அம்மாதரார், போதுமானவரையில் நல்லெண் ணத்தொடு மீனாம்பாளுக்கு உதவிபுரிந்த திகழ்கலை வதுங் கைம் மாறு பெறாமல் நிற்பதையும், அங்ஙனமே நினைவுகூர்ந்தாள். ஆகவே, அவள் ஞானாம்பாள் கையில் ஒரு பொன் நாணயத்தைக் கொடுத்து, அக்கொள்ளைத்தலைவன் மனைவி கிடந்த நீரோட்டத் தின் கரையண்டைக் காப்பிரிப்பெண்ணோடும் மலையநாட்டுப் பணிப்பெண்ணோடும் பின்சென்ற திகழ்கலைக்கு அதனைக் கொடுக்கும்படி அவளைப்போக்கினாள். ஞானாம்பாளும் அவ்வா றே அதனைச் செய்து முடித்து, அவ்வறிவோள் குமுதவல் லிக்கு நெஞ்சாரச் சொல்லிய நன்றி மொழிகளைத் தெரிவிக்கும் படி கடுகத் திரும்பிவந்தாள். 

மரங்களுக்கு நடுவே மறைபட்டிருந்த கூடாரத்திற்கு அரு காமையில் தங்கள் குதிரைகள் கொழும்புல் மேய்ந்துகொண் டிருத்தலை நாகநாட்டரசியும் அவள் தோழிப்பெண்களுங் கண் டார்கள். சுந்தராம்பாளும் ஞானாம்பாளுங் காணாமற்போன மோ திரந் தம் தலைவியினிடத்தில் திரும்பவும் வந்திருத்தலை வியப் போடுங் களிப்போடும் பார்த்தார்கள்; மீனாம்பாள் என்பவள் நல்லானுக்கு மனைவியேயல்லாமல் வேறு பிறர் அல்லர் என் பதை இன்னும் மிகுந்த வியப்போடு இப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 

“என்றாலும், நானே வலிந்து சென்று அக்கள்வனுக்குப் பழுதுசெய்யமாட்டேனென்று உறுதிமொழி சொல்லி யிருக் கின்றேன்; ஆகையால், என் தோழிமார்களே, உங்கள் தலைவி யைக் கட்டுப்படுத்தி யிருக்கும் ஆணையை நீங்களும் பாதுகாக்க வேண்டும்” என்று குமுதவல்லி அழுத்தமாகச் சொன்னாள். 

அங்ஙனஞ் சொல்லிய கட்டளைப்படியே நடப்பதாகச் சுந் தராம்பாளும் ஞானாம்பாளும் உறுதிமொழி புகன்றார்கள் ; உட னே பயணத் தொடங்கலாயிற்று. மிகவுந் திகிலான அத்துயர நிகழ்ச்சி நிகழ்ந்த இடத்தின் அருகே செல்லவேண்டுவதில்லாத படி அந்தத் தோப்பிலுள்ள மற்றொரு திறப்பானவழி பயணம் போவதற்கு உதவியாயிற்று; விரைவில் ஒரு பெரும்பாட்டை யில் வந்து சேர்ந்தார்கள்; அப்போது அவ்வழியே போகும்படி நேர்ந்த ஒரு குடியானவன் அதுதான் நீலகிரிநகரத்திற்கு நேரான பாதை யென்றும், அந்நகரம் இருபதுகல்லுக்குமேற் சிறிது தான் தொலைவாய் இருக்குமென்றும் நாகநாட்டரசிக்கு உறுதிப் படச் சொன்னான். 

மீனாம்பாளின் துயரமான முடிவை எண்ணி மிகுந்த இரக் கமுந், தனது மோதிரந் திரும்ப வந்ததற்கு மிகுந்த களிப்பும் ஆக ஒன்றோடொன்று மாறுபட்ட பல நினைவுகளால் தன் மெல்லிய நெஞ்சங் கலக்கம் எய்தக் முகுதவல்லி தன்வழியே போயினாள். 

இளமையும் அழகும் வாய்ந்த நீலலோசனனை அச்சுறுத் துங் கொள்ளைத் தலைவன் நல்லானாகக் குமுதவல்லி பிழைபட நினைந்த எண்ணத்தை மாற்றுதற்குரிய சொற்கள் எவையும் மீனாம்பாள் வாயிலிருந்து வரவில்லை என்பதை இதனைக் கற் போர் நினைவில் வைக்கவேண்டும். 

பன்னிரண்டாம் அதிகாரம்

நீலகிரிநகரம்

சென்ற அதிகாரத்தின் கடைசியில் விரித்துச் சொல்லப் பட்டபடி தன் தோழிப்பெண்கள் பின்னேவரக் குமுதவல்லி பயணந்தொடங்கியபோது பிற்பகலில் இருபத்தைந்து நாழிகை யாயிற்று. மலைநாட்டுத் தலைநகராகிய நீலகிரி இன்னும் இருபது கல் தொலைவி லிருந்தது; ஆயினும், நம்முடைய வழிப்போக்கர் கள் இப்போது செல்லும் பாட்டையானது நல்லதாயிருந்தமை யினாலும், மீனாம்பாளின் கூடாரம் அடிக்கப்பட்டிருந்த தோப் பின்கண் ஐந்து நாழிகைக்குமேல் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்கள் குதிரைகள் நன்கு இளைப்பாறி யிருந்தமையினாலும், அவர்கள் ஏழரை நாழிகை நேரத்தில் அவ்விருபதுகல் வழியை யுங் கடந்து வந்தார்கள்; சொல்லத்தகுந்தது ஏதும் வழியில் நிகழ வில்லை. நாம் பெரிதும் விரித்து உரைத்த துயரமான நிகழ்ச்சி நிகழ்ந்த இடத்தினின்று புறப்பட்ட பிறகு குமுதவல்லி தான் முதலிற் புகுந்த ஊரிலேயே தனக்குத் தக்க வழித்துணையாகப் படைக்கலம் பூண்ட ஆடவரைத் தெரிந்து ஏற்படுத்திக்கொண் டாள் ; ஆனாலும், அம்மெய்காப்பாளரின் ஊழியத்தை வேண் டத்தக்கது எதுவும் நேரவில்லை. ஆகவே, நீலகிரி நகரத்திற்கு அண்டையி லுள்ள பேட்டைக்கு நெருங்கியவுடனே குமுத வல்லி தாராளமாகப் பரிசு கொடுத்து அவர்களைப் போகவிட் டாள்: அதன்பின்னர் அவள் சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் மட்டுந் தன்பின்னே வர நகரத்தினுள் நுழைந்தாள், 

அங்ஙனம் அவள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த நேரஞ், சிறந்த வேனிற் காலத்தின் மாலைப் பொழுதா யிருந்தமையால் ஏழு மணி ஆகியும் இன்னும் நல்ல வெளிச்சம் இருந்தது; நாக நாட்டிலிருந்து வந்த நீண்ட பயணத்திற் பல இடைஞ்சல்களை யும் பல அல்லல்களையுந் தான் உழந்த பிறகு, செவ்வனே அங்கு வந்து சேர்ந்ததை நினைக்கவே அவள் நெஞ்சங் களிப்பால் துளும்பிற்று. அவள் முகத்தின்மேல் இப்போது நிறைய முக் காடு இடப்பட்டது; அதனைப் பார்த்து அவள் பாங்கிமாரும் அங்ஙனமே முக்காடிட்டுக் கொண்டனர். ஆகவே, அவளது முகத்தின் பேரழகும், சுந்தராம்பாள் ஞானாம்பாள்களின் முக வெட்டும் பிறர் பார்வையிற்படாமல் மறைபட்டன. என்றாலும், அவள் நீலகிரி நகரின் சுற்றெல்லையில் நுழையுங்கால், அங்கே ஏதோ சிலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தெருக்களின் ஊடே செல்லுகையிற், களங்கமற்ற அவளது உடம்பின் திருந் திய அமைப்பும், அவள் தனது குதிரைமேல் அமர்ந்திருந்த அழகிய வகையும், அதனை அவள் நடாத்திய திறமும் வழிச்செல் வார் கருத்தைக் கவராமற் போகவில்லை. அங்கே கேட்டது மனோகார் என்னும் பெயருள்ள மலைநாட்டு வணிகர் ஒருவரின் இருப்பிடத்தைப் பற்றியதேயாம்; அவர் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தற்கு வேண்டிய குறிப்புகள் உடனே சொல்லப்பட்டன; ஏனென்றால், மனோகரர் செல்வமும், முதிர்ந்த அறிவும், பெருந் தன்மையும் வாய்ந்தவர்; அதனால் அவர் குடியிருந்த அந்நகரம் முழுதும் அவரை யறியாதவர் இல்லை. 

குமுதவல்லி நீலகிரியின் நடு மையம் வரையிற் சென்றாள்; பெரியனவாய்ப் பார்வைக்கு அழகான மாளிகைகள் இருபக்கத்தும் வாய்ந்த மிக அகன்ற தெருக்கள் ஒன்றின் இடையே கடை சியாக வந்து நின்றாள். மனோகரர் என்னும் பணக்கார வணி கர்க்கு உரிய வீடு இதுதான் என்று அவளுக்குத் திட்டமாய்த் தெரியாது; ஆகவே, எவரிடத்து அதனைக் கேட்டறியலாம் என்று அவள் சுற்றி நோக்குகையில், அவளது வலதுகைப்பக்க மாய் மிக அருகில் இருந்த ஒரு பெரிய வாயிலினுள்ளிருந்து ஓர் இளைஞன் திடீரென வந்தான்; உடனே சந்திரன் என்னும் பெயர் குமுதவல்லியின் வாயிலிருந்து வந்தது. 

உண்மையிலே, வந்தவன் சந்திரன்தான். இக்கதையின் முதலதிகாரத்தில் நாம் தெரிவித்த, பதினெட்டு ஆண்டுள்ள, தனி அழகு வாய்ந்த அந்த இளைஞனே அவன். அப்போது அவன் வழிநடைக்கு ஏற்ற உடுப்பு அணிந்திருக்கக் கண்டோம். ஆனால், இப்போது அவன் அணிந்திருந்த உடையோ முன்னி லும் மிக கொய்தாயும் வளமுள்ளதாயும் இருந்தது. வானத்தின் நீலநிற முள்ள துணியினாற் செய்யப்பட்டுக் கழுத்துவரையிற் கொக்கி மாட்டப்பட்டு அவன் உடம்போடு இறுகப் பொருந்தி யிருந்த உட்சட்டையானது அவனது உருவின் மெல்லிய அமைப்பை இனிது புலப்படுத்தியது. இப்போது அவன் தலை யின்மேல் ஒன்றுமில்லை; செழுமை பொருந்திய அவன் தலை மயிர்களானவை அகன்ற நெற்றியின்மேற் கொத்துக் கொத் தாய்ச் செறிந்து சுருண்டு அவன் கன்னப்பொறிகளைச் சிறிய மூடிக்கொண்டிருந்தன. தன் இடுப்பைச் சுற்றிப் பூவேலை செய் யப்பட்ட அரைக்கச்சை அணிந்திருந்தான் ; மிகவும் அழகிய உறையில் இடப்பட்டிருந்த சிறிய கொடுவாள் ஒன்று இதிலே மாட்டப்பட்டிருந்தது. இவனைப்பற்றி முதலில் விளக்கிச் சொல் லியபோது, நாம் எடுத்துக் காட்டிய இவன் கண்களில் உள்ள ஒரு வகையான சுருசுருப்பானது, குமுதவல்லியைப் பார்த்த அளவிலே, உயிர்ப்புடன் திடுக்கிட்டுக் கிளர்ந்த பளபளப்புடன் கொழுந்துவிட்டெரிந்து, மற்றைப்படி ஆண்மையழகில் முற் றுப்பெற்று,ஆவலைத் தரத்தக்கதாய் உள்ள அவனது முகத்தின் மேல் மின்னல் ஒளியின் துளக்கம்போல் இடைவிட்டு ஒளி வீசுவதெனக் காணப்பட்டது. இல்லாவிட்டால் அவனுடைய தோற்றமானது பார்ப்பவர்க்குத் தன்னிடத்தே நிரம்பவும் பற் றுண்டாகும்படி செய்திருக்கும். 

குமுதவல்லி முக்காடு இட்டிருந்தும் அவன் அவளைத் தெரிந்துகொண்டான். அவளது வடிவத்தின் மிகவும் நேர்த்தி யான திருந்திய அமைப்பினாலும், அவளது முக்காட்டின் மடிப்புகளின் கீழ் எட்டிப்பார்ப்பதுபோற் றோன்றிய அவளது கருங் கூந்தலின் ஒரு சுருண்ட கற்றையினாலும் அவன் அவளைக் கண்டுகொண்டான். அவன் கண்கள் அங்ஙனஞ் சடுதியில் ஒரு தீய ஒளியை வீசியது என்னை? அதனால் அவன் ஏதோ ஒரு மனக்கலக்கத்தாற் சடுதியிற்பற்றப்பட்டானென்பதும், அதனை அவன் தன்னுள் அடக்கமாட்டாதவனாயினானென்பது புலப் படுகின்றன வல்லவோ? பலகிளையாக்கிப் பின்னர் அவளைச் சுற்றி வலைபோற் பின்னப்பட்ட இரண்டகமான சூழ்ச்சிகளுக் குப் பிறகு, நாகநாட்டரசி தான் சேரவேண்டிய இடத்தில் வந்து சேர்வளென அவன் எதிர்பார்க்கவில்லையோ? அல்லது எவரை யோ எதிர்பார்த்துக் கொண்டிருந்து, குதிரைக் குளம்படிகளின் ஓசை தெருவில் நின்றதைக் கேட்டுக் குமுதவல்லிக்கு மாறாக் வேறு ஒருவரை எதிர்ப்படும் நம்பிக்கையால் ஓடிவந்தனனோ? இவையெல்லாம் நமது கதையிற் போகப்போக விளங்கும். குமுதவல்லி வந்ததனால் இவனிடத்திற் சடுதியில் உண்டான மனக்கலக்கத்தை அவள் பாராதபடி மறைத்துவிட அவ்வளவு எளிதிலே தன்னிடத்தில் வேறொருவகையான பார்வையை வருவித்துக் கொள்ளவாவது அன்றித் தன்னை விரைவில் அமை திப்படுத்திக் கொள்ளவாவது இளைஞனான சந்திரன் மாட்டாத வனாயினன் என்றுகூறுதல் மட்டும் இவ்விடத்திற்குப்போதும். சந்திரனுடைய உண்மையைப்பற்றியும் நம்பகத்தைப்பற்றியுங் குமுதவல்லியின் மனத்தில் ஏற்கெனவே எழுந்த ஐயமானது முற்றும் உறுதிப்படாவிட்டாலும் ஒருநொடியில் வலுப்படுவதா யிற்று ; ஆகவே, மீனாம்பாளின் வாயிலிருந்து தத்தளித்துவந்து தன் செவியிற்பட்டது சந்திரனுடைய பெயரே என்றும், ஆகை யால் தான் விழிப்பாக இருக்கவேண்டியது சந்திரனிடத்திலே யே என்றுங் குமுதவல்லி பெரும்பாலும் உறுதிகொண்டாள். 

குமுதவல்லி தான் அகப்பட்டு மீண்ட இடர்களால் தான் மிகுந்த விழிப்போடும் முன்னறிவோடும் இருக்கவேண்டுங் கட் டாயத்தைக் கற்றுக்கொண்டாள்; தனது ஐயுறவிற்குச் சந்திரன் இடமாயிருக்கிறான் என்பதைக் காட்டாமலிருக்க அவள் தீர்மா னித்துக்கொண்டாள்; ஏனெனில், அது தெரிந்தால் அவன் மிகவும் விழித்தவனாகித் தனது சூழ்ச்சி எதுவாயிருப்பினும் அதனைக் கண்டுபிடித்தற்கு இயலாத நிரம்பவும் அருமையான மறைபொருளாய் அதனை அவன் மூடிவைப்பனென அஞ்சி னாள். அதுவல்லாமலுங், குமுதவல்லியின் இரக்க நெஞ்சமா னது தன்னை யொத்த ஒருயிரினிடத்து ஆன்ற காரணங்கள் இன்றித் தப்பெண்ணங் கொள்ளப்புகுதலைத் தடுத்தது; அது வேயுமன்றிச், சந்திரனுக்குத் தலைவரான மனோகரர் தனக்கு உற்றநண்பராகவுங் கூடுமென நினைக்கலானாள். ஆகவே, தான் நீலகிரிநகரில் இருக்கும்வரையில் அந்தப் பணக்கார வணிகரின் வீட்டின்கண் அச்சமின்றிச் செவ்வையா யிருக்கலாமென்று று கருதினாள்; இன்னும் வேண்டுமானால், சந்திரன் ஊழியம் புரியுந் தலைவரிடத்திற் சந்திரனின் உண்மையைப்பற்றி அவள் தான் ஐயுறவுகொள்ளுதலையும் எளிதிலே சொல்லக்கூடுமென்று எண்ணினாள். 

இத்தகைய எண்ணங்களினாலே குமுதவல்லி உந்தப்பட்டு, உயர்ந்த இடத்தில் தொழும்பனாயிருக்கும் ஓர் இளைஞனிடத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள ஒருபெருமாட்டி எவ்வளவுக்கு முகங்கொடுத்து இன்சொற்பேசலாமோ அவ்வளவுக்குச் சந்திர னிடத்திற் பேச இசைவுகொண்டாள்; பிறகு அவன் தன் நிலைக்கு வந்து அமைதிபெற்றவுடனே மிகவுந் தாழ்மையொடு தன்னை வணங்கவே, அவள் மகிழ்ந்தகுரலிற், சந்திரா, கடைசியாக யான் செவ்வனே இங்கு வந்துசேர்ந்தேன் பார்த்தனையா?” என்று மொழிந்தாள். 

இதற்குள் தனது முகத்தை முழுதும் அமைதிப்படுத்திக் கொண்டவனான சந்திரன் குமுதவல்லியை நோக்கிப், “பெரு மாட்டி, தாங்கள் இப்படிச் சொல்வதற்குக் குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்றே நம்புகின்றேன்.” என்று கூறிக்கொண்டே, பெரியவாயிலின் கீழ்த், தாம் திருப்பி நுழைவித்த குதிரை யினின்றும் அவ்வம்மையார் இறங்குதற்கு உதவிசெய்தான். 

“சில சிறிய இடர்களை வழியில் அடைந்தேன்; என்றாலுங் கடந்துபோன அவைகளை இப்போது நினைப்பதிற்பயனில்லை.” என்று குமுதவல்லி மொழிந்தாள். 

என்று இங்ஙனம் விடைபகருகையிலேயே குமுதவல்லி தனது முக்காட்டை அப்புறம் எடுத்துவிட்டுச் சந்திரன் முகத் தைக் கள்ளமாய் ஒருபார்வை பார்த்தாள்; ஆனாலும், அவள் தனது மனத்திலிருக்கும் ஐயத்தை உறுதிப்படுத்தத்தக்கது ஏதும் அவனது பார்வையில் தோன்றவில்லை. அப்பெரிய வாயிலின் உள்ளே இருபுறத்தும் இருந்த வீட்டுவாயில்களின் உள்ளிருந்து ஆணும் பெண்ணுமாகிய ஊழியக்காரர் பலர் வெளியேவந்தனர்; சந்திரனோ அவ்விளையநங்கையும் அவள் தன் தோழிமாரும் உள் ளே புகும்படி தான் பணிவுடன் அப்பால் விலகிநின்றான். அவ் வீட்டின் ஊழியக்காரர்க்குத் தலைவியென்று காணப்பட்ட ஒரு முதுமைமிக்க பெண்பிள்ளை, குமுதவல்லியை வரவேற்க முற் பட்டு வந்தாள்; வந்து, “பெருமாட்டி, என் தலைவர் இல்லத் திற்கு உங்கள் வரவு நன்றாகுக!’என்று மொழிந்தாள். 

நாகநாட்டாசி தகுதியான இன்சொற்களால் மறுமொழி கூறினள். பிறகு அகன்ற படிக்கட்டுகளின் வழியே ஏறி மிக வும் அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள அறைகளின் வரிசைக்கு அவ்வம்மையால் அழைத்துக் கொண்டுபோய் விடப்பட்டாள். 

“இந்த அறைகள் தாங்கள் இருப்பதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. செல்வத்திற் சிறந்தவரும் விருந் தோம்பும் இயல்பினருமான என் தலைவர் மனோகரர் ஒரு முடையான காரியத்தின்பொருட்டு இரண்டொருநாளைக்கு இங் கே இருக்கக்கூடாதவரானார்: ஆயினும், அவர் வெளியே போ கும்போது, தாங்கள் இதனைத் தங்கள் வீடாகவே எண்ணி வேண்டியவெல்லாஞ் செய்துகொள்ளும்படி கற்பித்துப்போ னார்.” என்று அம்முதியோள் கூறினாள். 

குமுதவல்வி விரைவில்மறைந்த ஏமாற்றப் பார்வையோடு, “அருமையுள்ள மனோகரர் இங்கில்லாமைகேட்டு வருந்துகின்றேன்; என்றாலும், அவர் என்பொருட்டு இவ்வளவு அன்புகாட் டினமைக்கும், அவர் சொல்லியபடிநடத்தும் உனது அன்பான தன்மைக்கும் நன்றிபாராட்டுகின்றேன்.” என்று கூறினாள். 

”பெருமாட்டி, தங்கள் விருப்பஞ் சிறிதாயிருந்தாலும், அதனை முன்னரே தெரிந்துகொள்வதுந் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றி வைப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரு வனவாகும். இது, தாங்கள் தங்கள் நாட்டின்கண் மேன்மை யுடன் வாழ்பவர்களென்று மாட்சிமைபொருந்திய எந்தலைவர் சொன்னதனால் மட்டுமன்று; தங்கள் இளமையும் அழகுந் தங் களை நெருங்கப்பெற்றவர் எல்லார்க்குந் தங்களிடத்து இயற்கை யாகவே பற்றுண்டாகும்படி செய்வதனாலேயாம். தங்கள் பாங்கி மாரே தங்களுடன் இருக்கவேண்டுமோ? அன்றி இவ்வீட்டி லுள்ளவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டுமோ? அதனை அருளிச் செய்யுங்கள்.” என்று அம் முதியவள் கேட்டாள். 

“என்னுடைய தோழிப்பெண்களே எப்போதும் என்பக் கத்திலிருக்கவேண்டும்; உன் தலைவர் வரும்வரையில் இயன்ற மட்டும் யாங்கள் தனித்திருக்கவேண்டும்; இதுதான் என்மனத் திற்கு இசைந்தது.” என்று குமுதவல்லி அதற்கு எதிர்மொழி கூறினாள். 

அதற்கு அம்முதியோள், “அப்படியே யாகட்டும், பெரு மாட்டி. இந்தமாளிகையின் முதன்மையானவாயிலுக்குச் செல் லும் படிக்கட்டைத் தாங்கள் முன்னமே தெரிந்திருக்கிறீர்கள்; ஆகவே, தாங்கள் நகரத்தினுள்ளே நடந்துசெல்ல எண்ணப்பட் டால், வெளியே போவதற்குரிய வழியை நீங்கள் அறிவீர்கள். இந்தவரிசையின் கடைசியிலுள்ள அதோ அந்த அறையிலே, கீழுள்ள தோட்டத்திற்குச் செல்லும் மறைவானபடிக்கட்டுக்கு நுழைவாயில் இருக்கிறது; அந்தத்தோட்டத்திலே, பெருமாட்டி, பிறரால் உற்றுப்பார்க்கப்படும் அச்சம் இன்றி எந்தநேரத்திலுந் தாங்கள் உலாவலாம். அந்தத் தோட்டத்திலிருந்துங்கூட நகரத் திற்குப்போக ஒரு வாயிலிருக்கிறது; அந்த மறைவானவாசற் கதவின் திறவுகோல் யான் சற்றுமுன் குறிப்பிட்ட அறையினுள் இருக்கின்றது. சில நாள் தாங்கள் தங்கவேண்டியிருப்ப துந், தாங்கள் இருக்கும் வரையிற் கூடியமட்டும் அது தங்க ளுக்கு இசைவாகவும் இனிதாகவுஞ் செய்யப்படவேண்டியது மான இவ்விடத்திலுள்ள ஏற்பாடுகளையும் நிலைமைகளையுந் தாங் கள் உடனே தெரிந்துகொள்ளும் பொருட்டாகவே இவைகளை யெல்லாம் நான் சொல்லலானேன்.” என்று இயம்பினாள். 

அவள்காட்டிய அன்பின் பலவகைகளுக்காகவுங் குமுத வல்லி அம் முதியோளுக்கு நன்றியறிதல் கூறினாள்; அதன் பின் அம்முதியோள் அவர்களை விட்டுப்போயினாள். 

குமுதவல்லி முதன்முதல் தன் அறைகளைப் போய்த் தேர்ந்து பார்த்தாள். அவ்வரிசையில் நான்கறைகள் இருந்தன; முதலிலுள்ளது சொல்லாடுமிடம், அதனையடுத்த இரண்டும் படுக்கையறைகள், கடைசியிலுள்ளது குளியலுக்கும் உடுத்திக் கொள்ளுதற்குந் தகுதியாக்கப் பட்டதாகும். அங்கிருந்த தட்டு முட்டுகளெல்லாம் விலையுயர்ந்தனவாயும் நேர்த்தியாயும் இருந் தன: பொதுவான தளவாடங்களுங்கூடச் செலவேறப் பெற் றனவாயும் விலைமிகப்பெற்றனவாயும் இருந்தன. இப்போது தனது வருகையால் மலைநாட்டு வணிகரின் மாளிகைக்குப் பெருமையினை உண்டுபண்ணும் புகழ்பெற்ற அழகிய நங்கை யின் வசதிக்கு வேண்டுவதொன்றுங் குறைவுபடவில்லை. குமுத வல்லி உடனே நீராடுவாளானாள்; பலநாள் நெடுவழி வந்ததற்குப் பிறகு – முதலாக இன்றைக்குப் புழுதி மிக்க பாட்டை நெடுக வந்த களைப்பான பயணத்தின் பின்னர் அம்முழுக்கு மிகவும் இளைப்பாற்றுவதா யிருந்தது. அவள் தன்றோழிமாரோடும் இருக்கும் அறைக்குத் திரும்பி வந்ததும், நேர்த்தியான உணவு கொண்டுவந்து மேசைமேற் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.இன் னும் ஏதேனும் வேண்டியிருந்தால் அதனைக் கொண்டுவரு வோரை அழைக்குங் கருவியாக ஒரு சிறிய வெள்ளி மணி யொன்றுங் கைக்கருகே அம்மேசைமேல் இருந்தது. சுவைபல வாய்ந்த திறமான மெல்லிய உணவுப் பொருள்கள் மிக ஆழ்ந்த அறிவோடு அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந் தமையாலும், வாயூறச் செய்யும் பழவகைகளோடும் இளைப்பாற்றுவிக்கும் பருகுநீர்களோடும் உணவிற்குரிய ஒவ்வொன்றும் மிகுந்த கருத் தோடும் அமைக்கப்பட் டிருந்தமையாலுஞ் சுவையை மிகக் கருதிப்பார்ப்பவர்க்குங் குறை சொல்லத்தக்கது ஏதுமேயில்லை. மேசையண்டை தன்னொடு கூட இருக்கும்படி குமுதவல்லி தன்றோழிமார்க்குக் கற்பித்தாள்; அவர்கள் தமக்கெதிரிலிருந்து மெல்லிய தின்பண்டங்களை எடுத்து அருந்தினார்கள். மனோகரர் ஊரில் இல்லாத செய்திமட்டுங் கலவாவிட்டால், தான் சேர வேண்டிய இடத்திற்குச் செவ்வனே வந்து சேர்ந்ததைப்பற்றி யுந், தனதுமோதிரந் தன்னிடந் திரும்பவந்து பொருந்தியதைப் பற்றியுங் குமுதவல்லி முழுதும் மன அமைதி பெற்றிருப்பள்; ஏனென்றால், தனக்குரிய நாகநாட்டிலிருந்து மலைநாட்டின் தலைநகராகிய நீலகிரிக்கு, அயர்ச்சியினையும் இடரினையுந் தரும் நீண்ட வழிச்செலவினைத் தான் செய்யும்படி தூண்டப்பட்டது ஏதுக்காகவென்று தெரிந்து கொள்ள அவள் இயல்பாகவே ஆவலுற்றுக் கவன்றாள். மேலுஞ், சிலநாழிகை நேரங்களுக்கு முன்னே நேர்ந்த அல்லல்களை நினைக்கவே அவள் துயரம் அடை யாதிருக்கக்கூடவில்லை; இன்னும், அத்துணை இளமையும் அழ கும் அறிவும் வாய்ந்த நீலலோசனன், அவள் தான் நினைத்துக் கொண்டபடி அவ்வளவு பெருங்குற்றம் உடையவனானதைத் துயரத்தோடும் எண்ணி வருந்தினாள். 

சாப்பாடு முடிந்ததுங், குமுதவல்லியின் வசதிக்காகச் செய் தமைக்கப்பட்ட பலவகை ஏற்பாடுகளும் அவளுக்கு இசைவாக இருந்தனவாவென்று தெரிந்துகொள்ளும்பொருட்டு அவ்வீட்டுக் கார முதியோள் அவர்கள் முன்னே வந்தாள்; அவர்கள் அவற் றின் இசைவினை மனமார மகிழ்ந்துரைப்பவே அவ்வம்மை போய்விட்டாள். அவ்வறைவரிசைகளின் வெளிக்கதவுகள் உட னே தாழிடப்பட்டன; குமுதவல்லியும் அவள் பாங்கிமாருக் துயில்கொள்ளப் போயினர். 

தடையின்றி அவர்கள் திளைத்த துயிலானது இனிதாகி அயர்வு தீர்ப்பதாயிற்று; விடியற்காலத்தில் அவர்கள் உறக்கம் நீங்கி எழுந்தபோது, இடர்மிகுந்த அவ்வழிப்பயணத்தின் பின் னர்ப் பாதுகாவல் அமைந்த புகலிடந் தமக்கு வாய்த்ததைப் பற்றித் தமக்குள் மகிழ்ந்து பேசிக் கொண்டார்கள். வெளிக் கதவுகள் திறக்கப்பட்டவுடனே வீற்றிருக்கும் அறையுள் வெற் காரப் பெண்கள் ஒருவரிசையாக வந்து மேசைமேல் நேர்த்தி யான சிற்றுணாக்களைப் பரப்பினர்; சாப்பாடு முடிந்தவுடனே குமுதவல்லி நல்ல காற்று வாங்குவதற்காகத் தோட்டத்தினுள் இறங்கக் கருதினாள். அம்முதியோள் சொல்லியபடியே,மறை வான ஒரு படிக்கட்டுக் குளியலறையிலிருந்து கீழே யுள்ள அகன்ற பூந்தோட்டத்திற்குச்சென்றது; அப்பூந்தோட்டத்தின் ஒருபக்க ஓரத்திற் சரக்கறைகளும் மாளிகையுஞ் சேர்ந்த நீண்ட ஒரு கட்டிடவரிசையும், மற்ற மூன்றுபக்க ஓரங்களிலும் உயர்ந்த சுவர்களும் இருந்தன, மலர்ப்பாத்திகளும், பசுங்கொடிபடர்ந்த நிழலுள்ள வாயில்களுங், கொடிப்பந்தர்களும், நீரூற்றுகளும் உள்ளனவாக அத்தோட்டம் அழகாகப் பண்படுத்தப்பட்டிருந் த்து; கடைக்கோடியிலுள்ள சுவரிலே அவ்வம்மையாற் குறிப் பிக்கப்பட்டதும் நகரத்தின் ஒருதெருவுக்கு வழியாயுள்ளதும் ஆன மறைந்த நுழைவாயிலொன்று இருந்தது. முதலில் தாம் வந்து சேர்ந்தபோது, தெருப்பக்கத்தே யுள்ள பகுதியைமட்டும் பார்த்து, அவை சிற்றளவினபோலுமென்று உறுதிப்படாமல் மதித்திருந்தகுமுதவல்லியும் அவள் தோழிமார்களும் இப்போது மனோகரரின் கட்டிடங்களுடைய பேரளவினைக் கண்டு பெரி தும் வியப்புற்றார்கள். இப்போது அவர்கள் அக்கட்டிடங்களின் தன்மையையுஞ் சாளரங்களின் அடுக்குகளையுங் கண்டு, அப் பெரியமாளிகையின் பெரும்பகுதி, செல்வத்திற்சிறந்த மனோ கரர் தம்முடைய சரக்குகளை வைத்திருக்கும் பண்ட அறைகளை உடையதாகுமென்று சொல்லக்கூடியதாயிருந்தது. 

சிலநாழிகை நேரங் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் அத்தோட்டத்தில் தங்கி யிருந்தனர்; அழையாமல் வருவார். எவரும் அங்கில்லாமையால், நாகநாட்டின்கட் குமுதவல்லியின் மாளிகையை அடுத்துள்ள இன்ப இளங்காக்களில் இருப்பது போல் அவர்கள் ஒருசிறிதும் அச்சமுந் தடையுமின்றி யிருக்கப் பெற்றதனை உணர்ந்தார்கள். திரும்பவும் அவர்கள் வீட்டினுட் புகுந்தபோது, மறுபடியும் மேசைமேல் உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது; அம்முதியோள் தனக்கெதிரே வரக் கண்டதுங் குமுதவல்லி மனோகரர் திரும்பி வந்தனரா என்று வினவினாள். அவ்வம்மை அவர் வரவில்லையென்று விடை பகர்ந்து, ஆயினும், அவர் நாளைக்கு நீலகிரி வருவதாக உறுதி மொழி புகன்று செய்தி விடுத்திருக்கிறார் என்றுரைத்தாள். தான் நாகநாட்டிலிருந்து அழைக்கப்பட்டதன் காரணத்தைப் பற்றிய ஐயுறவும் ஆவலும் விரைவில் நிறைவேறும் என்றெண் ணிக் குமுதவல்லி இச்செய்தியால் மன அமைதி பெற்றாள். 

மாலையில் ஐந்து நாழிகை ஆயிருக்கும்; குமுதவல்லி மறு படியுந் தன் றோழிமாருடன் தோட்டத்தில் உலவியிருந்து வீட்டுக்குள் திரும்பி வந்தாள். அந்நேரத்தில் வீற்றிருக்கும் அறையில் அம்முதியோள்வந்து, 

“பெருமாட்டி, தாங்கள் மனம் உவந்தால் ஒரு பெண்பிள்ளை தங்களைக் காண விரும்புகிறாள். என்று கூறினாள். 

”எந்தப் பெண்பிள்ளை? நீலகிரியில் இந்த இல்லத்திற்குப் புறத்தே எனக்குப் பழக்கமுள்ளவர்கள் எவரும் இல்லையே.” என்று நாகநாட்டரசி கேட்டனள். 

“பெருமாட்டி, திகழ்கலை என்னும் பெயரை மொழிந்தால் தன்னைப் பார்ப்பதற்கு நீங்கள் ஐயுறமாட்டீர்கள் என்று அவள் சொல்லுகிறாள்.” என்று அம்முதியோள் விடைகூறினாள். 

“ஆ, திகழ்கலையா!” என்று வியந்து கூறிக், குமுதவல்லி ஒருநொடியில் முன்னாள் நடந்த இடரிற் றொடர்புற்ற அறி வோளை நினைவுகூர்ந்து, “ஆம், நான் அவளைப் பார்க்கிறேன்; அவளை வரவிடு.” என மொழிந்தாள். 

அம்முதியவள் அங்ஙனமேபோய்ச் சிறிதுநேரத்தில் திகழ் கலையைக் குமுதவல்லியின் எதிரே அழைத்துவந்தாள். அவ்வறி வோள் முந்தியநாளில் உடுத்தி யிருந்தபடியே இருந்தனள்: ஆனால் இந்நேரத்தில் அவள் கையில் மருந்துகளும் உறை மருந்து களும் அடங்கிய பெட்டியைக் கொண்டுவரவில்லை. அவள் தான் அணிந்திருந்த முக்காட்டைப் பின்னே வாங்கியதும் அவள் முகத்தில் ஒரு துயரக்குறிப்புத் தோன்றியது; அவள் மீனாம் பாளைப்பற்றிப் பேசவே வந்தனளென்று குமுதவல்லி இயற்கையாக நினைந்தாள். திகழ்கலை மிகுந்த பணிவோடும் நம் தலை வியை வாழ்த்தி, “அழகிய நங்கையே தாங்கள் இத்தனை சுருக்கில் என்னைக் காண நினைத்திருக்கமாட்டீர்கள்.” என்று புகன்றாள். 

“என்னகாரியமாய் இங்கேவந்தாய்? என்னை இந்த இடத் திற் காண்பதென்பதை நீ எங்ஙனந் தெரிந்துகொண்டாய்?” என்று நாகநாட்டரசி வினவினாள். 

இரண்டாவதுகேட்ட கேள்வியை மெல்ல நழுவவிட்டுப், “பெருமாட்டி, புனிதமான புண்ணிய காரியத்தின்பொருட்டு யான் வந்திருக்கிறேன். யான் புத்தமதத்தைச் சேர்ந்தவளா யினும், மலையநாட்டார்க்குரிய கொள்கைகளில் எனக்கு உடன் பாடு இல்லையாயினும், மலையநாட்டார்க்குரிய கொள்கைகளிற் பெரும்பாலன பேதைமையின் பான்மை யென எனக்குத் தென்பட்டனவாயினும் எல்லாச் சமயக் கொள்கைகளிலும் எனக்குப் போதுமான நன்குமதிப்பு இருக்கின்றது; அதனாலே யே இந்தத்தடவை தங்களுக்குத் தூதாக வரும்படி தூண்டப் பட்டேன்.” என்று திகழ்கலை விடைகூறினாள். 

குமுதவல்லி மறைபொருளான இச்சொற்களைக் கேட்டு வியப்பெய்தினவளாய், “நீ சொல்லுவதன் கருத்து யாது திகழ் கலை? எவரிடத்திருந்து தூதாக வருகின்றனை?’ என்று கேட்டாள். 

“இறந்தவரிடத்திருந்து தூதாய் வருகின்றேன்!” என்று வெருக்கொள்ளத்தக்க விடைபகர்ந்தாள். 

குமுதவல்லியின் முகம் வெளிறினது. ஏனெனில், அம் மறுமொழியில் அச்சமுந் திகிலுங் கொள்ளத் தக்கது ஏதோ இருந்தது; ஆனாலும், அதற்கு உருவகப்பொருள் வேறிருக்க வேண்டுமென விரைவிற் கருதினவளாய்த், ‘திகழ்கலை, என் னிடத்தில் ஒட்டிலாவது உருவகத்திலாவது பேசாதிருக்கும்படி உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன்; இயன்றமட்டும் நீ சொல்லவேண்டியதைத் தெளிவாக விளக்கிச்சொல்.” என்று கூறினாள். 

“யான் இறந்தவர்களிடமிருந்து நேரே வராவிட்டாலும் என்று திரும்பவுந்தொடர்ந்து, “இறந்தவர்கள் பொருட்டாக யான் வந்திருக்கிறேன். அதனால் யான் இறந்தவர்களிடமிருந்து உண்மையாக வந்த தூதியே உயிரோடிருப்பவர் தமது பேதை மையால் இறந்தவர்கள்மேல் ஏற்றிச்சொல்லும் ஆவிக்குக் கீழ்ப் படிந்து யான் தூதாக வந்திருக்கிறேன்!” என்று உரைத்துத், தன்கண்களைக் குமுதவல்லிமேல் வைத்து ஊடுருவப்பார்த்துக் கூறுவாள்: “பெருமாட்டி, கள்வர் தலைவனான நல்லானுக்கு நல்வினையற்ற மனைவியாய் இறந்துபோன மீனாம்பாள் தங்களுக் குப் பகைவரான சிலரொடு கட்டுமானமாய்ச்சேர்ந்து சூழ்ச்சி செய்தாள்; அவள் இறக்குந்தறுவாயில் அவளது தலையைத் தங்கள் மார்பில் அணைத்துக்கொள்ளும்படி புத்தர் தங்களை அவள் செல்லும்வழியிற் செலுத்தின அதே நேரத்தில், அவள் உங்க ளுக்கு ஒரு பொல்லாங்கு இழைக்கக் கருத்துற்றிருந்தாள். அவளுடைய ஏவற்காரிகள் வாயிலிருந்து யான் பலவற்றைக் கேட்டுணர்ந்தேன்.” 

நல்வினையற்ற மீனாம்பாள் என்னிடத்தில் தீய எண் ணங்கள் வைத்திருந்தனளாயின், யான் அவளை மன்னித்து விட்டேனே! ஓ! என் நெஞ்சார யான் அவளை மன்னித்துவிட் டேனே!” என்று குமுதவல்லி இடைப்புகுந்து கூறினாள். 

“பெருமாட்டி, நீங்கள் அவளொடு தனிமையாக விடப் பட்டபோது, யானும் அவள் தோழிமார் இருவருஞ் சிறிது சேய்மையிற் போயிருந்தபோது, நீங்கள் அவள்மேற் குனிந் திருந்த வகையினாலும் உங்கள் பார்வையினாலும் உங்கள் பயில் களினாலும் உங்கள் முகத்தை அவள் ஏறிட்டு நோக்கியதனாலுந் தாங்கள் அவளை மன்னித்ததை உறுதிப்படுத்திக் கொண்டிருந் தீர்களென்று யான் தீர்மானஞ் செய்யக்கூடியதா யிருந்தது. இந்தக் காரணம் பற்றியே யான் இப்போது இங்கிருக்கின் றேன். இந்தக் காரணம் பற்றியே தங்களுக்குரிய இனத்தவர் களும் அவர்களுக்கு இனமானவர்களும் எண்ணுகிறபடி அந்த மன்னிப்பைப் பின்னும் உறுதிப்படுத்தும்படி தங்களை ஆணை யிட்டுக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். பெருமாட்டி, இறந்து போகும் ஒருவர்க்குச் சொல்லிய மன்னிப்பு இறந்துபோன அவரது பிணத்தின் பக்கத்தேயிருந்து மேலும் மிகுந்த தூய தன்மையுடனும் அடக்க ஒடுக்கத்துடனுந் திரும்பவும் வற்புறுத் தப் பட்டாலல்லாமல் அது பயன்படுவதில்லை யென்னும் ஒரு நம்பிக்கை உங்கள் நாட்டில், உங்கள் சொந்த நாகநாட்டில் இருக்கின்றதன்றோ?” என்று திகழ்கலை மறுமொழி கூறினாள். 

நிகழ்கலை இப்பேச்சின் கடைசிப் பாகத்தைச் சொல்லிய போது குமுதவல்லியின் முகம் வணக்கமும் அடக்கஒடுக்கக் குறிப்பும் உடையதாயிற்று; இச்சொற்களை அங்ஙனமே ஆவ லுடன் உற்றுக்கேட்டுக்கொண்டிருந்த சுந்தராம்பாளும் ஞானாம் பாளுந் தம்முடைய தலைவி இப்போது தன் முகத்திற் காட்டிய குறிப்பைப் போலவே தமக்குள்ளுங் காட்டிக்கொண்டார்கள். 

தன்னுடைய சமயக்கல்விகளின் இடையே இத்தகைய ஓர் ஆழ்ந்த நம்பிக்கை யுடையவளான குமுதவல்லி இப்போது தானும் அதன் வயப்பட்டவளாகி மெல்லிய குரலில், “மேற் கணவாய் மலைப்பக்கத்தி லுள்ளவர் அத்தனைபெயர்க்கும் மெய் யாகவே அந்நம்பிக்கை உண்டுதான் ; ஆகவே, திகழ்கலை, நீ இப் போது எண்ணிக்கொண் டிருப்ப தின்னதென ஒருசிறி துணர் கின்றேன்.” என்று மொழிந்தாள். 

அதனைத்தொடர்ந்து திகழ்கலைகூறுவாள், “நல்வினையற்ற மீனாம்பாள் விட்டுப்போன இரண்டு ஏவற்காரிகளான மலைய நாட்டுப் பணிப்பெண்ணுங் காப்பிரி மாதுந் தம் அன்புள்ள தலை வியின் பிணத்தை நீலகிரிக்கு எடுத்துவந்திருக்கிறார்கள்; இறந்து போகுந் தறுவாயில் உயிரோடிருந்த பெண்மகளின் அருகி லிருந்து நீங்கள் சொல்லிய மன்னிப்பு உறுதிமொழியை மறு படியும் பிணத்தின் பக்கத்தில் வந்து சொல்லும்படி தங்களிடம் போய்த் தங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுமாறு என்னை வேண்டினவள் அந்த மலையநாட்டுப் பணிப்பெண்ணேதான். எதன்பொருட்டுத் தங்கள் முன்னிலையில் யான் வந்திருக்கிறே னா அந்தப்புதுமையான நம்பிக்கை எவ்வளவு நீண்டு செல்லக் கூடுமென்பதைப், பெருமாட்டி, என்னைவிடத் தாங்கள் நன்றாய் அறிவீர்கள். இறந்துபோன மீனாம்பாள் தங்களுக்கு எவ்வளவு தீங்கிழைத்தாலும், அல்லது இழைக்க நினைந்திருந்தாலும், அவற்றிற்காகத் தாங்கள் மொழிந்த மன்னிப்பு மொழிகள், உயிரற்ற அவள் பிணத்தருகேயிருந்து வணக்கவொடுக்கத்துடன் திரும்பவுஞ் சொல்லப்பட்டால் அல்லாமல் அவை அவளுயிர்க்கு அமைதியைத் தரப் போதுவன் ஆகா என்று எனக்குத் தெரி விக்கப்பட்டது.”

குமுதவல்லி ஆழ்ந்து நினைப்பாளானாள். அவள் தோழி மார் இருவருமோ தம் இளைய தலைவியின் முகத்தைத் திகி லோடும் ஐயுறவோடும் நோக்கிக்கொண்டிருந்தனர். 

கடைசியாகக் குமுதவல்லி திகழ்கலையின் முகத்தை ஏறிட்டுப்பார்த்துக், ‘கள்வர் தலைவனான நல்லானின் நல்வினை யற்ற மனையாளது பிணம் எங்கே கிடக்கின்றது?” என்று வினவினாள். 

“பெருமாட்டி, இங்கிருந்து நெடுந்தொலைவிலில்லை.” என்று மறுமொழி தந்து, “அதோ அப்பக்கமாய் மூன்று அல் லது நான்கு தெருக்களுக்கு அப்பால்தான்” என்று அவ்வறி வோள் அவ்வீட்டின் பிற்பகுதியை நோக்கிச் சுட்டிக்காட்டினாள். 

மறுபடியுங் குமுதவல்லி நினைப்பாளானாள்; மறுபடியும் அவள் பாங்கிமாரின் கண்கள் கவல் கொண்ட ஐயுறவோடும் அவள்மேற் பதிந்தன. 

நெடுநேரம் பேசாமலிருந்த பிறகு, குமுதவல்லி திரும்பவும் வாயைத்திறந்து, “நீ கேட்டுக்கொண்டபடி நடப்பதற்கு என் னுள்ளம் என்னைத் தூண்டுகின்றது.நீ பேசிக்கொண்டிருந்த நம்பிக்கையில் உண்மையிருக்கிறதென்று யான் மெய்யாகவே கற்பிக்கப்பட் டிருக்கின்றேன்.” என்றுரைத்துப் பின்னும் அவ்விரக்கநெஞ்சம் வாய்ந்த இளைய நங்கை, ஓ! இறந்துபோன அவ்வுயிர்க்கு அமைதியைத் தரத்தக்கதெதனையும் யான் முழு விருப்பத்தொடு செய்வேன்! ஆனாலும், இஃது என்னைப்பிடிப்ப தற்கு விரித்த வலை அன்றென்று யான் மனங்கொள்வ தெப்படி? யான் இங்ஙனம் விட்டுச் சொல்வதற்காகத், திகழ்கலை,நீ என் மேற் குற்றஞ்சொல்லுதல் கூடாது. தீய எண்ணஞ் சிறிதும் இல்லாம லிருக்கக்கூடிய ஒருவர்மேல் யான் இங்ஙனம் ஐயுறு தல் பற்றி நீ என்மேற் குற்றஞ்சொல்லுதல் கூடாது.உன்னு டைய நோக்கம் நல்லது கருதியதாகவே யிருக்கலாம் – யானும் அஃது அப்படித்தான் என்று நம்புகிறேன் – என்றாலும், அறியாமலும் உனது கண்சாடை இல்லாமலும் நீ பிறர் கைக் குக் கருவியாக்கப்பட்டிருக்கலாமே.’ 

அதுகேட்ட திகழ்கலை ஒடுக்கவணக்கம் மிக்க குரலிற் பெரிதும் உண்மைதோன்றக் கூறுவாள்: ”பெருமாட்டி யான் புனிதமாக நினைந்தவையெல்லாம் அறியப், புத்தரும் அவர் சார ணரும் அறிய ஆணையிட்டுக் கூறுகிறேன்; யான் உங்களுக்குப் பொய்கூறுவேனானால் இறந்துபோன என் பெற்றோர்ப்பிழைத் தேனாவேன்; ஆதலால், அவர்கள் அறிய, இவ்வமயம் யானாவது மற்றையோராவது உங்களிடத்து ஒரு சிறிதுந் தீய எண்ணம் வைத்திலேம் என்று ஆணையிட்டுக் கூறுகின்றேன்.உங்கள் செழுங்கூந்தலில் ஒரு மயிரேனுந் தீங்குற யான் காண்பேன் அல்லேன்! ஏழை அறிவாட்டியிடம் நீங்கள் அன்பொடு பேசி ளீர்களன்றோ? அலைந்து திரியுந் திகழ்கலையை நுங்கள் புன் சிரிப்புகளால் நீங்கள் ஊக்கப்படுத்தினீர்களன்றோ? தானே பெருமை பாராட்டிப் பேசிய அவளது திறமை தவறிப்போன அந்நேரத்தில் அவளைத் தாங்கள் அருவருத்துத் தள்ளவேண்டுவ தாயிருக்க, அப்போதும் அவளுக்குத் தாங்கள் பொற்பணங் கொடுத்தீர்களன்றோ? அதுவன்றியும், பெருமாட்டி, உங்களுக் குத் தீதுசெய்யக் கனவில் எண்ணுவதாயினும் அது வானுலகத் துள்ள ஒரு கந்தருவமாதினொடு சண்டையிடுதலையே ஒக்கும்!” 

திகழ்கலையின் பார்வையிலும் அவள் நடந்துகொண்டவகை யிலுங் களங்கமின்மை காணப்பட்டது; அதனால் அவள் பேசிய சொற்களும் அத்தன்மையுடையனவாகவே யிருந்தன ; குமுத வல்லி மறுபடியுஞ் சிறிதுநேரம் எண்ணமிட்டுக்கொண் டிருந்த பின், தன் இருக்கையினின்றும் எழுந்து, “யான் உன்னுடன் வருகிறேன்.” என்று மொழிந்தாள். 

“பெருமாட்டி- அன்பிற்சிறந்த பெருமாட்டி!” என்று சுந்தராம்பாள் சொல்லிக்கொண்டே தன் தலைவியின் காலடி களில் வீழ்ந்து, “கொடும்புலிவாழுங் குகைக்குள் தாங்கள் செல் லாதிருக்கும்படி தங்களைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்ளுகிறேன்!” என்று மொழிந்தாள். 

அங்ஙனமே துன்புற்றுத் திதில்கொண்ட ஞானாம்பாளும் மண்டிக்காலிட்டுத் தூயவான எல்லாப்பொருள்களுஞ் சான்றா கப், பெருமாட்டி, தாங்கள் இங்கேயே இருக்கும்படி வேண்டி கொள்கின்றேன்! அலைந்து திரியும் ஒரு பௌத்தப் பெண் பிள்ளை தனக்கு உடம்பாடில்லாத சைவசமயக் கொள்கைக்குரிய காரியங்களில் அத்தனை உழைப்பையெடுத்துக்கொள்வளென்று தாங்கள் நினைக்கிறீர்களா? என்று கூ றுகையில், 

திகழ்கலை நடுவேயுகுந்து, அலைந்து திரியும் ஏழைப்பௌத் தப்பெண் தன் மதத்தை இழித்துப்பேசுவோர் கொள்கைகளை யம் நன்கு மதிக்கின்றாள்.” என்று சினவாமல் அமைதியோடுந் துயரத்தோடுங் கூறினாள். 

”காரிகையீர் எழுந்திருங்கள், நீங்கள் எழுந்திடும்படி நான் கட்டளையிடுகின்றேன்! என்பொருட்டு நீங்கள் கவலையுற்றதற் காக நான் நன்றியறித லுடையவளாயிருக்கின்றேன்: என்றா லும், யான் உறுதிசெய்துவிட்டேன், என் விருப்பத்திற்குக் குறுக்குச் சொல்லலாகாது; ” என்று கூறிய குமுதவல்லி ஏதோ ஒன்றைச் சடுதியில் நினைந்தவளாய்த் திகழ்கலையின் பக்கமாய்த் திரும்பி, “ஆ!தற்செயலாகவேனும் என் கண் எதிர்ப்படும் படி” எனக் கூறப்போகையில், அவ்வறிவோள் அடக்க வொடுக்கத்தோடும் அழுத்தமாய்ப் பகருவாள்:”பெருமாட்டி, யான் சொல்வதை உற்றுக்கேளுங்கள்! யான் தங்களை அழைத் துப்போகக் கருதியிருக்கும் இடத்தில் என் வாயிலிருந்தல்லா மல் வேறெவர் வாயிலிருந்தும் ஓர் எழுத்துக்கூட உங்களை நோக்கிப் பேசப்படமாட்டாது! என் கையைத் தவிர வேறெவர் கையும் உங்கள்மேற் படமாட்டாது! யான் கூறும் இக்கட்டுரை களுக்குக் கௌதமசாக்கியரையும் அவர் சாரணரையும் மறுபடி யுஞ் சான்றாக வைக்கின்றேன்! 

அங்ஙனமாயின் யான் உன்னுடன் வருகிறேன்.’ என்று கூறிய குமுதவல்லி அதன்பின் பாங்கிமாரை நோக்கி “மாதர் காள், நீங்கள் என்னுடன் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்-” எனமொழிகையில், சுந்தராம்பாள்.”ஆம், பெருமாட்டி, நாங்கள் தங்களொடு செல்வோம்! எங்களுக்காகவன்று நாங்கள் அச்சமுறுவது.’ என்று கூறினாள். 

“ஆண்டவன் தடை செய்வானாக! ஏதேனும் இடர் நேருமா யின் எங்கள் அன்புள்ள பெருமாட்டியொடு நாங்களும் அதனைச் சேர்ந்து ஏற்றுக்கொள்வோம்!” என்று ஞானாம்பாள் உரைத்தாள்.

“தங்களுக்கு விருப்பமானால், பெருமாட்டி, இவர்கள் உங்க ளொடு வரலாம்.” என்று திகழ்கலை மொழிந்தாள். 

அவ்வறிவோளின் உண்மை யொழுக்கத்தை மெய்ப்பித் தற்கு இது மற்றுமொரு சான்றாகத் தோன்றியது: ஆயினும், தன் தோழிமாரில் ஒருத்தியையே தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லக் குமுதவல்லி தீர்மானித்தாள்; ஏனென்றால், உண்மையிலே ஏதேனும் இரண்டகமான ஏற்பாடு செய்யப்பட் டிருக்குமானால், தன்தலைவியும் மற்றைத் தோழியும் ஏமாற் றிக் கொண்டுபோகப்பட்ட வகைகளை விரித்துச்சொல்வதற்கு ஒருத்தி தனக்குப்பின் இங்கே யிருக்கவேண்டுமென்று தீர்மா னஞ் செய்தாள். 

அதற்கு இணங்கவே அவள், “சுந்தராம்பாள், நீ என் னொடுவா ; ஞானாம்பாள், நீ நாங்கள் திரும்பிவருமளவும் இங்கே யே தங்கியிருக்கவேண்டும். இவ்விடுதியினின்றும், இதனைச் சேர்ந்த வீடுகளினின்றும் நாங்கள் யாரும் அறியாமற் போய் வருதற்கு நல்லகாலமாய் எனக்கு வழி கிடைத்திருக்கின்றது. ஞானாம்பாள், நீ இந்த அறையில் இரு: யான் இல்லாதபொழுது இவ்வீட்டு முதியோள் இங்குவந்தால் யான் சிறிது நேரத்திற்கு என் அறையில் தனியே யிருக்கப் போனேன் என்று சொல். சுந்தராம்பாள், என்னொடு வா!திகழ்கலை,யான் வா ஏற்பாடா யிருக்கின்றேன்!” எனப் பகர்ந்தாள். 

ஞானாம்பாள், தன் இளைய தலைவியின் கையைப் பிடித் துத் தன் விழிகளினின்றும் நீர் ஒழுக அதன்மேல் முத்தம் வைத்தாள்: ஏனென்றால், தான் குமுதவல்லியை இனி என் றுங் காணாதவாறு பிரிந்து போவதாகவே நம்பிக்கையும் அன்பும் வாய்ந்த அப் பெண் எண்ணினாள். 

“என் மாதே, மடமையால் வருந்தாதே.” என்று நாக நாட்டரசி கூறினாள்; தன் சொற்கள் அவளைக் கடிந்துகொள் வதுபோற் காணப்பட்டாலும், அன்போடும் விருப்பத்தோடுந் தன் கையால் அவளது கையைப்பிடித்து அணைத்துக்கொண் டாள்; தான் மிக்க மனத்திட்பமோடிருந்தும் இவள் தன் கண் களினின்றும் நீர் ததும்பாமல் தடைசெய்யக் கூடவில்லை. 

திகழ்கலை பின்னே வர இவள் அவ்வறையை விட்டு விரைந்துபோயினாள்; சுந்தராம்பாளோ தன் னுடன்றோழியா கிய ஞானாம்பாளைத் தழுவிக்கொள்ளும்பொருட்டு ஒரு நொடிப் பொழுது பின்னே நீடித்து நின்றாள். 

திகழ்கலையைச் சிறிதுநேரம் அங்குள்ள படுக்கையறை களில் ஒன்றில் இருக்கும்படி கற்பித்துவிட்டுக், குமுதவல்லி குளியலறைக்குட் சென்றாள். அங்கே தான் அணிந்திருந்த மணிக்கலன்களை யெல்லாங் கழற்றி ஒரு நிலைப்பேழையுட் பேணிவைத்தாள். விலைமதித்தற்கரிய அம் மந்திர மோதிரத் தையுந் தனது பணப் பையையும் அவற்றொடு சேர்த்து அங்கே வைக்க அவள் மறந்துவிடவில்லை; ஏனென்றாற், கொள்ளைக் காரரின் அவாவை எழுப்புதற்குரிய அணிகலனாவது நாணய மாவது சிறிதுந் தன்னிடத்தில் இருக்கலாகாதென்று அவள் தீர்மானித்தாள். அவள் நிலைப்பேழையைக் கருத்தாய்ப் பூட்டித், தான் திரும்பிவராவிடினுஞ் சிறிது தேடிப்பார்த்தால் திண்ண மாய்க் கண்டுபிடித்தற்கு இசைந்த ஓர் இடத்தில் அதன் சாவி யை வைத்தாள். பின்னர் ஒரு துப்பட்டியினால் தன்னை மூடிக் கொண்டு, தோட்டத்தின் கடைசியிலுள்ள நுழைவாயிலைத் திறப் பதற்குரியதும், அவ்வீட்டு முதியோள் கூறியபடி அக்குளிய லறையிற் கண்டெடுக்கப்பட்டதுமான சாவியைக் கையிற் பற் றினவளாய்த் தான் புறப்படுத்தற்கு முன்னிற்பதைத் திகழ்கலைக் குஞ் சுந்தராம்பாளுக்குங் குறிப்பித்தாள். அவ்வறிவோள் தன் கண்களை மட்டுந் திறப்பாகவிட்டுத், தன் முகத்தை யெல்லாஞ் சணல்நூற் றுணியினால் முக்காடிட்டுக் கொண்டாள்; சுந்தராம் பாளுந் தனது போர்வையினால் முக்காடிட்டுக் கொண்டாள்; அம்மூவரும் மறைபடிக்கட்டின் வழியாய்த் தோட்டத்தினுள் இறங்கினார்கள். விரைந்து சூழும் மசங்கல் மாலைப்பொழுதி னிடையே அதிற் கடுகி நடந்தார்கள்; கடைசியிற் சுவரிலுள்ள நுழைவாயிலண்டை வந்து சேர்ந்தார்கள். குமுதவல்லியினிட மிருந்த சாவியால் அதனைத் திறந்து அங்கு நின்றும் வெளிப் பட்டார்கள்; இப்போது திகழ்தலை அடுத்துள்ள தெருக்களி னூடே வழிகாட்டிச் செல்வாளானாள்.

– தொடரும்…

– குமுதவல்லி, நாகநாட்டரசி (முதல், இரண்டாம் பாகம்), முதற் பதிப்பு: 1911.
பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர், மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக்கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக்கூடத்தில் (T.M.PRESS) அச்சிடப்பட்டது, ஜனவரி 1942.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *