சோழனைக் காத்த மோசியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 2,448 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யானை வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வீரர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள். கையில் வாளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடிவந்தார்கள். ஒரே ஆரவாரம். யானையின்மேலே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவனைப் பார்த்தால் யானைப் பாகன் என்று நன்றாகத் தெரிந்தது, அவன்தான் முன்னால் உட் கார்ந்திருந்தான். பின்னால் இருந்தவன் ஒளிவீசும் முகமும் ஆடையணிகளும் அணிந்திருந்தான். அவன் அரசனாகத்தான் இருக்க வேண்டும். யானாப்பாகன் அங்குசத்தால் யானாயின் மத்தகத்தில் குத்தினன். அது அடங்கவில்லை. பிளிறிக்கொண்டே ஓடியது. பின்னல் ஓடிவந்த வீரர்கள் அந்த யானையைத் துரத்திக்கொண்டு வந்தார்கள் என்றே தோன்றியது. அவர்கள் எதற்காக அதைத் துரத்த வேண்டும்? யானாயின்மேல் இருந்தவர்கள் யார்? துரத்துகிறவர்களுக்கு விரோதிகளா?

பார்க்கிறவர்கள் எல்லோருக்கும் இந்தச் சந்தேகங்கள் உண்டாயினவோ என்னவோ தெரியாது. நெடுந்தூரத்தில் வரும் யானையையும் வாள் பிடித்தவர்களுடைய கூட்டத்தையும் கண்டு, சேர அரசன் பலவகையான சந்தேகங்களைக் கொண்டான்.

திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்று உறையூர் இருக்கிறது. பழங்காலத்தில் அதுதான் பெரிய நகரமாகவும் திருச்சிராப்பள்ளி அதன் பகுதியாகவும் இருந்தன. சோழ அரசர்களின் தலைநகரம் உறையூர். முதல் முதலில் கரிகாலன் என்ற சோழச் சக்கரவர்த்தி உறையூரைப் பெரிய நகரமாக்கி அங்கே இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். பிறகு அதுவே சோழ இராசதானி நகரமாக விளங்கியது. அங்கே இந்தக் கதை கடந்த காலத்தில் கோப்பெருநற்கிள்ளி என்ற சோழன் அரசாண்டு வந்தான்.

அவன் காலத்தில் இருந்த சேரன், அந்துவஞ்சேரல் இரும் பொறை என்பவன். அவன் தன் வீரத்தால் சேர நாட்டை விரிவாக்கினன். மலையாளம், கொச்சி, திருவாங்கூர் என்று வழங்கும் கேரள ராஜ்யந்தான் சேர நாடு. அதன் தலைநகரம் வஞ்சி. அந்துவன், தன் படைப்பலங் கொண்டு மலைநாட்டுக்கு மேற்கே உள்ள கொங்கு நாட்டையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையில் கருவூர் என்ற நகரம் இருக்கிறது. இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்ந்திருக்கிறது. அந்த நகரத்தில் சேரன் ஒர் அரண்மனை கட்டினான். சில காலம் கருவூருக்கு வந்து, அந்த அரண்மனேயில் தங்குவான். அரண்மனையில், மேலே அவனுடைய அரசிக்குரிய மாளிகை இருந்தது.

ஒரு சமயம் அந்துவன் கருவூருக்கு வந்து தங்கியபோதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவன் அரசியின் மாளிகையின் மேல் மாடத்தில் திறந்த வெளியில் கிழக்கு நோக்கி நின்றுகொண்டிருக்தான். அவனுடன் மோசியார் என்ற புலவரும் இருந்தார். அவர். முடவராதலால் முடமோசியார் என்று சொல்வார்கள். முடம் என்பதை யாரும் குறைவாக நினைக்காமல் அவரிடம் தமிழ் மக்கள் மதிப்பு வைத்துப் பாராட்டினர்கள். அவரும் சேர அரசளுேடு அங்கே இருந்தார்.

அந்துவன் நெடுந்தாரத்தில் ஒரு யானை வேகமாக ஓடி வருவதையும் அதற்குப் பின்னல் ஆயுத பாணிகளாகப் பலர் வருவதையும் கண்டான். கருவூரின்மேல் யாராவது படையெடுக்க வந்து விட்டார்களா? யானையின்மேல் இருப்பவன் யார்? எதற்காகத் துரத்துகிறார்கள்? -சேர அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

அருகில் இருந்த புலவரான மோசியாரைப் பார்த்து, “அதோ பாருங்கள் ஒரு யானையை. அதன்மேல் யாரோ தெரியவில்லையே!” என்றான். புலவர் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட்டது. யானை உறையூரிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

புலவர் முடமோசியாரும் உறையூரில் வாழ்கிறவர். பெரிய நகரங்களில், மேலே ஏறிப் பார்த்தால் ஊர் முழுவதும் நன்றாகத் தெரிவதற்குரிய கோபுரம் ஒன்று இருக்கும். அதை நகர் காண் ஏணி என்பார்கள். உறையூரில் அந்த ஏணி இருந்த இடத்தை ஏணிச்சேரி என்று சொன்னர்கள். அவ்விடத்தில் மோகியார் வாழ்ந்து வந்தார். அரசர்களுக்குள் நட்பானலும் பகையானுலும் புலவர்களிடம் அதைக் காட்ட மாட்டார்கள். போர் நடந்து கொண்டிருந்தாலும் புலவர்கள் ஒரு காட்டிலிருந்து அதற்குப் பகையான நாட்டுக்குப் போவார்கள். அவர்களை யாரும் ஏதும் செய்ய மாட்டார்கள். தமிழ்ப் புலவர்களிடம் அக்காலத்து மன்னர்களுக்கும் மக்களுக்கும் அவ்வளவு மதிப்பு இருந்து வந்தது.

கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழன், வழக்கம்போல் அன்று பட்டத்து யானையின்மேல் ஏறி, ஊர்வலம் வந்தான். திடீரென்று யானேக்கு மதம் பிடித்துவிட்டது. அது வேகமாக மேற்குத் திசையில் ஓடத் தொடங்கியது. யானேயின்மேல் பாகனும் சோழனும் அமர்ந்திருந்தார்கள். யானை, கட்டுக்கு அடங்காமல் ஓடுவதைக் கண்டு, உடன் இருந்த வீரர்கள் ஆயுதமும் கையுமாக அதைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். ஒடி இளைத்துப் போனார்கள். ஆயினும் அங்கங்கே இருந்த மக்கள், வாளோடும் வேலோடும் துரத்தி வந்தார்கள். யானை, சோழ நாட்டு எல்லையையே கடந்து வந்துவிட்டது. சேர நாட்டைச் சார்ந்திருந்த கருவூர் எல்லைக்குள் புகுந்தது. அப்போதுதான் சேர அரசன் பார்த்தான்.

உறையூர்க்காரராகிய புலவர் முடமோசியாருக்கு யானையின் மேல் இருப்பவன் சோழன் என்று தெரிந்துவிட்டது. யானையின் நிலையைக் கண்டு, அது மதம் பிடித்து ஓடி வருகிறது என்பதையும் உணர்ந்துகொண்டார்.

சேரனும் சோழனும் நண்பர்களாகப் பழகாத காலம் அது. வேற்று அரசன் அழைப்பு இன்றியும் காரணம் இன்றியும் அயல் நாட்டில் புகுவது முறையன்று. சோழனே வாள்வீரர்களோடு வருகிறான். அந்த நிலையில் நிச்சயமாகச் சேர மன்னன் அவனைக் கைப்பற்றிச் சிறையில் அடைத்துவிடுவான். அப்படிச் செய்வது அரசியலின்படி தவறான காரியம் அல்ல.

முடமோசியார் சோழனைக் காப்பாற்ற வேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டார். சேரன், “இவன் யாரோ?” என்று கேட்ட போது மோசியார் விடை கூறவில்லை. யானையையும் அதன்மேல் இருந்தவனையும் உற்றுப் பார்த்தார். மறுபடியும் சேரன், “யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டான்.

“பாவம்! தர்ம சங்கடமான நிலையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறான் இவன். புலித் தோலால் செய்த சட்டையை அணிந்திருக்கிறான். அதில் அம்பு பட்ட கொளேகள் இருக்கின்றன. உண்மையான விரன்.”

“இங்கே எதற்கு வருகிறான்? பின்னாலே ஆயுதங்களோடு வருகிறவர்கள் யார்!”

“பெரிய கடலிலே கப்பல் வருகிறதுபோல வருகிற இந்தக் களிறு, இயற்கையான நிலையில் இல்லை. அதற்கு மதம் பிடித்திருக்கிறது. அதைத் தடுத்து வசப்படுத்துவதற்காக அந்த வீரர்கள் வருகிறார்கள். அவர்களால் அடக்கமுடியவில்லே. வேண்டுமென்று இவன் இங்கே வரவில்லை, பாவம்! அயல் நாடு என்று தெரிந்தும் இந்த நிலையில் அவன் என்ன செய்வான்! அவனுக்கு ஒரு தீங்கும் வராமல் செளக்கியமாக ஊருக்குப் போய்ச் சேர வேண்டும்.”

“அவன் ஊர் எது?”

“எங்கே பார்த்தாலும் வயல்கள் பரந்து கிடக்கும் சோழ காட்டுக்கு உரியவன் அவன். உறையூரிலிருந்து யானை அவனே இங்கே தூக்கிக்கொண்டு வந்துவிட்டது.”

“அப்படியென்றால் இவன் சோழ…”

“ஆம்; சோழ அரசன் கோப்பெருநற்கிள்ளிதான்!”

சேரன் நிமிர்ந்து நின்று பார்த்தான். சற்றே கனத்துக் கொண்டான். “உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமா?” என்றான்.

“உறையூர்காரனுக்குத் தெரியாதா? இவன் கருவூருக்குள் முறை தவறி வரக்கூடியவன் அல்ல. யமன்கையில் பட்ட உயிரைப்போல இந்த யானையினிடம் அகப்பட்டுக்கொண்டான். சேர மன்னனுடைய எல்லைக்குள்ளே வந்துவிட்ட செய்தியை அவன் அறிந்தானோ அறியவில்லையோ? யான் அறியேன். ஏதோ அவனுக்குப் போதாத காலம்! நல்ல வேளையாக இப்போது மன்னர் பெருமான் இங்கே நின்று, இவனைப் பார்க்கும் சமயமாக இருக்கிறது. வஞ்சிமா நகரத்தில் தாங்கள் இருக்கும்போது இப்படி நேர்ந்தால் இவனை இங்குள்ள அதிகாரிகள் எளிதில் விட்டுவிடுவார்களா? தம்முடைய ஆற்றலுக்கு உட்படாத இத்தகைய சந்தர்ப்பம் ஒவ்வொரு வாழ்க்கையிலும் நிகழ்வது உண்டு. அப்படி நேரும்போது, மற்றவர்கள் பெருந்தன்மையோடு நடந்துகொண்டால் அந்தச் சமயங்களில் கேடு இல்லாமல் தப்பலாம். சோழன் யாதொரு கேடும் இன்றி, ஊருக்குத் திரும்பிப் போய்ச் சேருவான் என்றே நான் நம்புகிறேன்” என்று பேசி முடித்தார் மோசியார்.

புலவருடைய குறிப்பை அந்துவஞ்சேரல் உணர்ந்துகொண்டான். அவனே வரவேற்றான். அவனுடன் உறையூர் எணரிச்சேரி முடமோசியாரும் இருந்து, புன்னகையுடன் வரவேற்றார்.

“அயல் நாட்டுக்குள் முறையின்றி வந்துவிட்டோமே! என்ன ஆகுமோ!” என்று அஞ்சிக் கிடந்த சோழனுக்கு, முடமோசியாரைக் கண்டவுடன் உயிர் வந்தது.

ஒரு நாள் சேரனுடைய விருந்தாளியாக இருந்த சோழன். மறுகாளே, உறையூர் போய்ச் சேர்ந்தான். சேர்ந்தது முதல், ‘முடமோசியார் எப்போது வருவார், எப்போது வருவார். எப்போது வருவார்?” என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான். அவரால் உயிர் பிழைத்தவன் அல்லவா? தன் நன்றியறிவைக் காட்ட வேண்டாமா?

– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *