(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
21 – 25 | 26 – 30 | 31 – 35
26 . நற்கிள்ளியின் இசை
அந்த நடுநிசியில் யவனர் மரக்கலத் தலைவன் அறையில் கடல்வேந்தன் யாரை எதிர்பார்த்திருந்தாலும் கண்டிப்பாக அராபியனான யூசப்பை எதிர்பார்க்காததால் “இவனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறானா?” என்று உள்ளூர வினவிக்கொண்டு பெரிதும் வியப்பு அடைந்த சமயத்தில், யூசப் உள்ளறையை நோக்கி வரவே சட்டென்று நிலக்கள்ளி யையும் இழுத்துக்கொண்டு உள்ளறைக் கதவில் பின்புறம் மறைந்து கொண்டான். உள்ளறையில் யாரும். இல்லை யென்ற நினைப்பில் அதை நோக்கி வந்து கதவையும் பாதியளவு திறந்து எட்டிப்பார்த்த யூசப், அங்கிருந்த களே பரத்தைப் பார்த்து, “எனக்கு முன்பு வேறு யாரோ ஒருவனும் இங்கு வந்திருக்கிறான்” என்று சற்று இரைந்தே சொல்லி உள்ளேயிருந்த பெரிய மரப் பெட்டியை வெளியிலிருந்தே நோக்கினான். மரப்பெட்டி வாயைப் பிளந்து கொண்டு கிடப்பதையும், கிட்டத்தட்ட அதிலிருந்த பொருள்கள் எல்லாமே வெளியே சிதறுண்டு கிடப்பதையும் நோக்கி, ‘நான் தேடவந்ததைத்தான் முன் வந்தவனும் தேடியிருக்கிறான்’ என்று நினைத்த வண்ணம் உள்ளே காலடி எடுத்து வைத்துப் பெட்டியிடம் சென்றான்.
அறைக்கதவு ஒருபாதி திறந்திருந்தாலும், வெளியறை வெளிச்சம் அந்தப்பாதியில் விழுந்திருந்தாலும் திறந்த கதவுக்குப் பின்னாலிருந்த மறுபாதியில் இருட்டே அடித்துக் கிடந்ததன் விளைவாக நிலக்கள்ளியை அணைத்த வண்ணம் சடல்வேந்தன் மூச்சுப் பேச்சின்றி நின்றிருந்ததால்’ அனர் களிருப்பதை அறவே அறியாத யூசப் பெட்டிக்குள் குனிந்து நோக்கினான். அதிலிருந்து இரண்டொரு துணிகளையும், கிரேக்க நாட்டுக் குறுவால்களையும் எடுத்துக் கீழேபோட்ட யூசப் மீண்டும் பெட்டிக்குள் தலையைவிட்டு ஆராய்ந்த போது அந்த அறைக்கதவு மெதுவாக சாத்தப்படுவதை. உணர்ந்தான். அதனால் ‘“யாரது?” என்று கேட்டு இடையில் இருந்த குறுவாளை எடுக்கப் போனவன், தனது கை மிகுந்த முரட்டுக் கையொன்றால் பிடிக்கப்பட்டதையும் உணர்ந்து, இருமுறை முனகினான். மூன்றாம் முறை முனகவில்லை, கடல்வேந்தனின் குறுவாள் அவன் தலையில் இறங்கி விட்டதன் விளைவாக.
அடுத்து, கடல்வேந்தன் துரிதமாகச் செயல்படலா னான். பெட்டிக்குள் தலை தொங்கிக் கிடந்த யூசப்பை பெட்டிக்குள்ளேயே திணித்து. வெளியேயிருந்த துணி களையும் அவன் மீது திணித்தான். பிறகு நிலக்கள்ளியை நோக்கி, “வா போகலாம்” என்று அழைக்க, நிலக்கள்ளி கேட்டாள், “இவனைப் பெட்டிக்குள் வைத்துப்பூட்டி விட்டாலென்ன?” என்று.
“அப்படிச் செய்தால் இவன் செத்து விடுவான். செத்தவன் பின்னால் நமக்குச் சாட்சி சொல்ல மாட்டான். வேறு செய்திகளையும் சொல்ல மாட்டான்” என்ற கடல் வேந்தன், “வா போகலாம்” என்று அவளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் தளத்தின் குறுக்கே நடந்து ஆகாயத்தைக் கவனித்தான். “நிலக்கள்ளி! எதிர்பார்த்ததைவிட அதிக நேரமாகி விட்டது. க்ளேஸியஸ் வருவதற்குள் போய்விடுவோம்” என்று சொல்லிக்கொண்டு மரக்கலத்தின் பக்கப்பலகைக்கு வந்து நூலேணியில் முதலில் நிலக்கள்ளியை இறக்கினான். அவள் சமுத்திர ஜலமட் டத்தை அடைந்ததும் எட்ட ஒரு படகு துரிதமாக வரு வதைக் கண்டு தானும் துரிதமாக இறங்கிக் கீழிருந்து படகில் நிலக்கள்ளியுடன் ஏற, படகை நற்கிள்ளி வேகமாகச் செலுத்தினான்,சிறிது தூரத்தில் நின்றிருந்த கடல்வேந்தன் மரக்கலத்தை நோக்கி.
கடல்வேந்தன் தனது மரக்கலத்தின் அருகில் வந்ததும் அதில் நிலக்கள்ளியையும் ஏறச்சொல்லித் தானும் ஏறினான் அவளுடன். நற்கிள்ளியை நோக்கி, ‘நற்கிள்ளி! அதோ வரும் படகில் க்ளேஸியஸ் வருகிறான்.அவனுடன் எத்தனை பேர் வருகிறார்கள்? யார் யார் வருகிறார்கள்? என்பதைப் புலனறிந்து வா” என்று கூறி, மரக்கலத்தில் ஏறிவிட்டான். நற்கிள்ளியும் உடனடியாகத் தனது படகைத் திருப்பிக் கொண்டு சுள்ளியாற்று முகத்துவாரத்தை நோக்கிச் செலுத்தினான். முகத்துவாரத்தை அடைந்ததும் இடது கரையில் படகைத் தரையில் இழுத்து முனையில் பிணைத்து விட்டு,சிறு விளக்கொன்றையும் ஏற்றிக்கொண்டு படகுக்குள் அரைவாசி படுத்த வண்ணம் ஒலைச்சுவடி ஒன்றை எடுத்து மெதுவாகப் படிக்கவும் பாடவும் முற்பட்டான்.
அப்போது மூன்றாம் ஜாமம் தொடங்கிவிட்டதாலும், அதுவரை மெதுவாக எழுந்த அலைகள் அதிகமாக எழுந்து இரைந்ததாலும் அவற்றின் ஓசையையே சுருதியாக வைத்துக்கொண்டு பூபாளராகத்தில் மெல்லப் பாட்டை இசைத்தான் நற்கிள்ளி. “பாட்டுக்கு என் கை ஏட்டைப் பா ; கீதத்துக்கு என் குரல் நாதம் பார்” என்று பாடினான். அத்துடன் நிற்கவில்லை அவன். “கடல்நிலைக்கு அலையைப் பார்; கடவுளை அறிய அதன் பெரு ஓசையைப் பார்”என்று கவிதையும் அவனே வடித்துச் சற்று இரைந்தே படித்தான் சுவடியை. இடையிடையே பாட்டை நிறுத்தி, எட்ட யவன மரக்கலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த படகையும் பார்த்தான்.
படகு வேகமாக விரைந்தது. அது பவன மரக்கலத்தை அணுகியதும் அதிலிருந்த நூலேணியை ஆட்டிய ஒருவன், மேற்புறம் நோக்கி ஏதோ குரல் கொடுத்தான். பதில் ஏதும் இல்லாது. போகவே விரைந்து ஏறினான் நூலேணியில், சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு பந்தத்தைக் கொளுத்திக்கொண்டு வந்த அந்த யவனன் முகம் – அத்தனை தூரத்திலும் பந்த ஒளியில் நன்றாகவே தெரிந் தது. அவனை முதலில் கணக்கெடுத்த நற்கிள்ளி மற்றும் அறுவர் அந்தப் படகிலிருந்து நூலேணியில் தொடர்ந்து ஏறியதையும். கடைசியாக க்ளேஸியஸ். ஏறியதையும் கவனித்தான் க்ளேஸியஸை எதிர்பார்த்த நற்கிள்ளி அத் துடன் ஏழு பேர் என்று முடிவு கட்டி ஓலைச் சுவடிமீது கண்களை மீண்டும் நாட்ட முயன்ற சமயத்தில் மற்றொரு படகும் அந்த மரக்கலத்தை நோக்கி விரைந்தது. அந்தப் நல்ல நூலேணியை அணுகியதும் அதிலிருந்து படகு, உயரமும் பருமனும் உள்ள ஒரு யவனன் எழுந்ததையும், அவள் நூலேணியில் ஏறுவதற்கு மற்றுமிரு யவனர்கள் கைலாகு கொடுத்ததையும் கவனித்த நற்கிள்ளி; ‘இவன் யாரோ பெரிய மனிதனாயிருக்க வேண்டும்’ ஊகித்தான். அவன் நூலேணியில் ஏறித் தளத்தில் ஏறப் போன சமயத்தில் அவன் முகத்துக்குக் குறுக்கே வெட்டுக் காயமொன்று இருந்ததையும், அந்த வெட்டுக்காயம் பந்தத்தின் வெளிச்சத்தில் பயங்கரமாகத் தெரிந்ததையும் கவனித்தான். அவனை எங்கும் பார்த்ததாக நற்கிள்ளிக்கு நினைவில்லாததால் அவன் ஒரு வேளை யவன மரக்கலத்தின் தலைவனாயிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான் பிறகு தனது படகின் விளக்கை அணைத்துவிட்டு ஓலைச் சுவடியையும் கட்டிவிட்டுப் படகில் கால்களை நீட்டிப் படுத்தான். ஆனால் உறக்கம் வரவில்லை நற்கிள்ளிக்கு. ஆகாயத்தை நோக்கி விண்மீன்களைக் கணக்கிட்ட வண்ணம் படுத்துக் கிடந்தான். சுக்கிரனும் மெல்ல மெல்ல உதயமானான்: குரு மறைந்தான்.
விண்மீன்களின் இந்த விசித்திரத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் தூரத்தில் யாரோ மூவர் வருவதைக் கண்ட நற்கிள்ளி மூச்சு பேச்சு காட் டாமல் படயில் கிடந்தான்.
வந்த மூவரில் இருவர் அராபிய அடிமைகள். அவர் களை இழுத்து வந்தவன் யாரென்று இருட்டில் புரியவில்லை யாகையால் உற்றுக் கவனித்த வண்ணம் இருந்தான் நற் கிள்ளி. இழுத்து வரப்பட்டவன் மணலில் தள்ளப்பட்டான் வேகமாக, பிறர் யவனர் கப்பலை நோக்கி விளக்கொன்றை ஆட்டிவிட்டுச் சென்றார்கள். அந்த விளக்கின் ஒளிக்குப் பதில் ஒளி தெரிந்தது. யவனர் மரக்கலத்திலிருந்து இழுத்துவந்து தள்ளப்பட்டவனை யாரோ ஒருவர் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல, யவன மரக்கலத்திலிருந்து இருவர் மீண்டும் நூலேணியில் இறங்கினார்கள், படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி வரவும் முற் பட்டார்கள்.
இழுத்து வந்து வீழ்த்தப்பட்டவன் விளக்கு சமிக்ஞை களையும், படகு வர முற்பட்டதையும் கவனித்திருக்க வேண்டும். எழுந்து வேகமாக ஓடத்தொடங்கினான். ஓடத் தொடங்கியவன் நேராக நற்கிள்ளியின் படகை நோக்கி ஓடிவந்து படகுக்கு அடியில் பதுங்கினான். படகுக் அருகில் வந்ததும், அவன் யாரென்பதைப்
புரிந்து கொண்ட நற்கிள்ளி, சீக்கிரம் எழுந்து படகுக் குள் படுத்துவிடு” என்று துரிதமாகக் கூறியதன்றி ஒரு கையைக் கொடுத்து, இவனை இழுத்துத் தனக்கருகில் படகுக்குள் தள்ளிக்கொண்டான். பிறகு ஒரு பெரிய சீலை யால் அவனைப் போர்த்தவும் செய்தான். மீண்டும் தனது விளக்கை ஏற்றி ஏடுகளைப் புரட்டவும், பாடவும் தொடங்கினான்.
யவனர் மரக்கலத்திலிருந்து வந்த இருவர் கரையை அடைந்ததும் நாற்புறமும் நோக்கினார்கள், “இங்கு யாரையும் காணோம்’ என்றான். ஒருவன். “அப்படி யானால் யூசப் பொய் சொல்லியிருக்கிறான்” என்றான் இன்னொருவன்.
“விளக்கு அடையாளம் காட்டினார்களே” என்று வினவினான் முதல்வன்.
“நம்மை மோசம் செய்வதற்காக இருக்கும்” என்றான் இன்னொருவன்.
“இதற்கு நமது தலைவர் யூசப்பை லேசில் விடமாட்டார்” என்றான் முதல்வன்.
“மரக்கலத்தில் கட்டித் தோலை உரித்துவிடுவார்” என்றான் இன்னொரு வன்,
அந்தச் சமயத்தில் நற்கிள்ளியின் படகைப் பார்த்த அந்த இருவரும், “எதற்கும் அதோ அந்தப் படகோட்டி யைக் கேட்போம்” என்று படகை நோக்கி வந்தார்கள்.
அவர்கள் வருவதைப் பார்த்த நற்கிள்ளி பெதுவாகக் காதல் பாட்டு ஒன்றை இசைத்தான். வந்த இருவரும் : அவன் பாடுவதைக் கேட்டு எரிச்சல் கொள்ள ஒருவன் கேட்டான். “இப்பொழுது எதற்காகப் பாடுகிறாய்?” என்று.
“நீ யார் அதைக் கேட்க?” என்றான் நற்கிள்ளி.
“பார்த்தால் தெரியவில்லையா? நாங்கள் யவனர்’ என்றான் ஒரு யவனன்.
“உன் மாதிரி யவனர் இங்கு பல பேர் இருக்கிறார்கள்” என்று அசட்டையாகக் கூறிவிட்டு, கீழே சீலைக்கடியில் படுத்திருந்தவனைச் சுட்டிக்காட்டி, “என் மனைவி எழுந்து விடுவாள். கூச்சலிடாதே. மெதுவாகப் பேசு” என்றான்.
”உன் மனைவிக்கு இங்கு என்ன வேலை?” என்று ஒரு யவனன் கேட்டான்.
“என் மனைவிக்கு என் படகில் என்ன வேலையா? வேறு எங்கு இருக்கும் வேலை அவளுக்கு?” என்ற நற்கிள்ளி யவனா! மரியாதையாசுப் போய்விடு. என் பாட்டுக்குக் குறுக்கே வராதே” என்று கூறிவிட்டு, மீண்டும் பாடத் தொடங்கி படகிலிருந்தவன் மீது ஒரு கையையும் போட்டு அணைத்தான்,
யவனர் இருவரும் சிறிது தயங்கினர்…. “ஏ, படகோட்டி! இங்கு யாராவது வந்ததைப் பார்த்தாயா?” என்று ஒருவன் கேட்டான்.
“யாரையும் நான்பார்க்கவில்லை. என் மனைவி அருகில் இருக்கும்போது நான் வேறு எந்தப் பெண்ணையும் பார்ப்பதில்லை” என்றான் நற்கிள்ளி.
“வந்தது பெண்ணல்ல” ஒரு யவனன் சொன்னான்.
“பின்?”
“ஆண்?”
“ஆணை எதற்காக நான் பார்க்கவேண்டும்?”
அதற்கு மேல் அவனை ஏதும் கேட்காத முதல் யவனன், “இவனைக் கேட்பதில் ஏதும் பயனில்லை. வா தேடுவோம். அவன் எங்கும் மறைந்திருக்க முடியாது” என்று கூற இருவரும் நடந்தனர் மீண்டும், எதிரே தெரிந்த குடியிருப்புகளை நோக்கி. நற்கிள்ளி மீண்டும் பாட்டைத் தொடங்கினான். அவன் இசைக்கு உதயகாலப் பட்சிகள் சுருதி கூட்டின.
27. கடலைப் பார்
உதயகாலப் பட்சிகள் கூவி. உதயத்துக்கு முன்பாகக் கருக்கல் ஏற்பட்டதும், படகில் படுத்துக் கிடந்தவன் மீதிருந்த சீலையை விலக்கி, ‘சேர தூதரே! படுத்தது போதும். எழுந்திரும்” என்று நற்கிள்ளி சொன்னதும், படகில் முடங்கிப் படுத்திருந்த சஞ்சயன் முக்கி முனகிக் கொண்டு எழுந்திருந்து உட்கார்ந்தான், சில விநாடிகள். பிறகு படகை விட்டு இறங்கி மணலில் நின்று கைகால் களை உதைத்துப் பிடிப்புகளை உதற முயன்றான். இப்படி இருமுறை அவன் கால்களை உதறி, கைகளையும் உதறி யதைப் பார்த்த நற்கிள்ளி, “தூதரே! நீர் பரதநாட்டியம் வேண்டியவர். அந்தத் தொழிலுக்குப் சுற்றுக்கொள்ள போயிருந்தால் இப்பொழுதிருப்பதை விட நல்ல வெற்றி கரமான வாழ்க்கை கிடைத்திருக்கும்” என்று கூறி ஏளனப் புன்முறுவல் செய்தான்.
நற்கிள்ளியின் நகைச்சுவையை ரசிக்க முடியாத சஞ்சயன், “நீ அராபியரிடம் அகப்பட்டு உன் தலைமீது பெரிய வாளும் கட்டப்பட்டிருந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்” என்று கூறினான். குரலில் எரிச்சலையும் காட்டினான்.
“நீர் எதற்காக அராபியரிடம் மாட்டிக் கொண்டீர்?”, என்று நற்கிள்ளி சேட்டான்.
“ஆசையாயிருந்தது, மாட்டிக் கொண்டேன்” என்று எரிந்து விழுந்தான் சஞ்சயன். அத்துடன் கேட்டான்; ”யவனர்களிடம் என்னை உன் மனைவியென்று ஏன் பொய் சொன்னாய்? எதற்காக என்னை அணைத்தாய்?’ என்று.
“உம்மை யாரென்று சொல்லியிருந்தால் இப்பொழுது உம்மிடம் பேசவும், உமது அறிவற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் அவசியமிருந்திருக்காது. கட்டியணைத்தது ஆசையால் என்று நினைக்கிறீரா? என் தலையெழுத்து” என்று நொந்து கொண்டான் நற்கிள்ளி.
சஞ்சயனுக்குக் கோபம் அதிகமாயிற்று. “எனக்கு முட்டாள் பட்டம் கட்ட நீர் யார்? என்னை மனைவி என்று அழைக்கவும் உமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று கேட்ட சஞ்சயன், “அரச,தூதனை அவமதித்தால் சேர நாட்டில் என்ன தண்டனை தெரியுமா?” என்று வினவினான் “இப்பொழுது நான் முசிறிக்குள் போய் அமைச்சரிடம் சொன்னால் சிறிது நேரத்தில் நீர் சிறைப்படுவீர்” என்றும் சொன்னான் சஞ்சயன்,
“முடிந்தால் பாரும்” என்ற நற்கிள்ளி நகைத்தான்.
“முடியாமலென்ன?
“அதோ இன்னும் யவனர்கள் நடமாடுகிறார்கள். உம்மைக் கண்டால் விடமாட்டார்கள். விட்டால்தான் நீர் முசிறிக்குள் போகலாம். விடாவிட்டால் நீர் போகச்கூடிய இடம் வேறு.”
“எந்த இடம்?”
“புண்ணியம் செய்திருந்தால் சொர்க்கம். பாவம் செய் திருந்நால் நரகம். நீர் ஆயுள் பூராவும் சொல்லியிருக்கும் பொய்களுக்கு, எமன், உமது நாக்கில் காய்ச்சின இரும்பை வைத்துச் சுடுவான்”.
இதைக் கேட்ட சஞ்சயனுக்கு உண்மையாகவே பீதி வரவே. “நற்கிள்ளி!” என்று பரிதாபத்துடன் அழைத்தான்.
“என்ன தூதரே?” என்று கேட்டான் நற்கிள்ளி. இகழ்ச்சி நகை உதடுகளில் விரிய,
“நான் பொய் சொன்னதெல்லாம் கடமைக்காக, நாட்டு நன்மையை முன்னிட்டு, கடமைக்காகப் பொய் சொல்லலாம்” என்று தர்மத்தைச் சொன்னான் சஞ்சயன்.
“இப்பொழுது எந்த நாட்டு நன்மைக்காக அராபியரிடம் போய் வந்தீர்?” என்று நற்கிள்ளி கேட்டான்.
“நானாகப் போகவில்லை. அவர்களாகத்தான்பிடித்துக் கொண்டு போனார்கள்”.
“அப்படியா?”
“ஆம்!”
“பிடித்து என்ன செய்தார்கள்?”
“அதை நான் கடல்வேந்தனிடந்தான் சொல்ல முடியும்.”
“ஏன், மந்திரியிடம் சொன்னால் என்ன?”
“பயனில்லை. கடல்வேந்தனை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்” என்றான் சேரதூதன்.
“இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” என்ற நற்கிள்ளி, “சரி, பழையபடி படகில் படுத்துக் கொள்ளும்” என்று கூறினான்.
“எதற்குப் படுக்கவேண்டும்?” என்று தூதன் கேட்டான்.
“படகிலிருப்பது நீர் என்று தெரிந்தால் அராபியப் படகும், யவனர் படகும் என்னை மடக்கும், அல்லது படகை நோக்கிக் குறுவாள் வீசப்படும். அது உமது மேல் பாய்ந்தால் எனக்கு ஆட்சேபணையில்லை. என் மேல் பாய்வதை நான் விரும்பவில்லை” என்ற நற்கிள்ளி, “சரி, சரி படும்” என்று துரிதப்படுத்த சஞ்சயன் பழையபடி ஏறிப் படுத்தான்.
நற்கிள்ளி படகைத் தளையிலிருந்து அவிழ்த்துக் கடலுக்குள் இழுத்துவிட்டுத் தானும் ஏறித் துடுப்புகளைத் துழாவலானான். அன்று அலை சற்று மந்தமாகவே இருந்த தால் அதிக சிரமம் இல்லாமலே படகைச் செலுத்திய நற்கிள்ளி, சுமார் இரண்டு நாழிகைகளுக்குள் கடல்வேந்தன் மரக்கலத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் வருவதை முன்ன தாகவே பார்த்துவிட்ட கடல்வேந்தன் மாலுமிகள் நூலேணியை அவிழ்த்துவிட, நற்கிள்ளி ஏறித் தளத்தில் குதித்தான். *படகிலிருக்கும் இன்னொருவரையும் ஏற்றி விடுங்கள்” என்று மாலுமியொருவனுக்கு உத்தரவிட, சஞ்சயனும் ஏறிவர மாலுமி அனுமதித்தான்.
மரக்கலத்தில் ஏறியதும் சஞ்சயன் தாமதிக்காமல் சுடல்வேந்தன் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான். கதவைத் திறந்த நிலக்கள்ளி, “என்ன வேண்டும்?” என்று வினவினாள்.
சஞ்சயன் முகத்தில் வெறுப்பின் சாயை படர்ந்தது “கடல்வேந்தனுடன் இரவு முழுவதும் இவள் தனித்து இருந் திருக்க வேண்டும்” என்ற நினைப்பு அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், “உங்கள் துணைவரைப் பார்க்க வேண்டும்” என்றான்.
நிலக்கள்ளி சினத்துக்குப் பதில் வெறுப்பைக் காட்டி னாள். “யார் என் துணைவர்?” என்றும் வினவினாள். “கடல்வேந்தன்” என்றான் சஞ்சயன்.
“அவரை நாங்கள் துணைவர் என்று அழைப்பதில்லை. தலைவர் என்று அழைக்கிறோம்” என்றாள் நிலக்கள்ளி.
“தலைவர் என்று அழைக்க வேண்டுமா?”
“ஆம்!”
“அழைக்கா விட்டால்?”
“தெரிந்துகொள்ள வேண்டுமா?”
“ஆம்.”
நிலக்கள்ளி எட்ட நின்ற நற்கிள்ளியை நோக்கி “இவர் தலைவரை ‘தலைவர்’ என்று அழைக்க மாட்டாராம்’ என்று கூறினாள்.
அடுத்த நிமிடம், இரண்டு மாலுமிகள் சஞ்சயனை நோக்கி வந்து அவனைத் தரதரவென்று இழுத்துச் கொண்டு போனார்கள். “பாய்மரத்தில் கட்டிவையுங்கள்” என்று நிலக்கள்ளி உத்தரவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.
சிறிது நேரத்திற் கெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியேவந்த கடல்வேந்தன் நேராகப் பாய்மரத்தண்டி னிடம் சென்று “சஞ்சயா! நீ என்ன செய்தாய்? உன்னை ஏன் கட்டியிருக்கிறார்கள்?” என்று சர்வசாதாரணமாக விசாரித்தான்.
“நான் ஏதும் செய்யவில்லை. தலைவன் என்று உன்னை அழைக்க மறுத்தேன்!”
“ஏன்?”
“எனக்குத் தலைவர் மன்னர் ஒருவர்தான்”
“அப்படியானால் மன்னர் உன்னைக் காப்பாற்றட்டும்” என்று கூறிய கடல்வேந்தன் இரண்டு மாலுமிகளை நோக்கி, “இவரைத் தூக்கிக் கடலில் எறிந்துவிடுங்கள்” என்று கூறி விட்டு அறையை நோக்கி நடந்தான்.
“கடல்வேந்தரே! தலைவரே!”, என்று கத்தினான் சஞ்சயன்.
அவன் கூச்சலை லட்சியம் செய்யாத மாலுமிகள் இருவர் அவன் கட்டுகளை அவிழ்த்துத் தரதரவென்று கப்பல் பக்கத்தை நோக்கி இழுத்துச் சென்றார்கள். “தலைவரே! நான் சொல்வதைக் கேளும். முக்கியமான செய்தி. இந்த முசிறியின் நலமே அதைப் பொறுத்திருக்கிறது” என்று கூவினான் சஞ்சயன்.
அவன் கூக்குரலைக் கேட்டதால் கடல்வேந்தன் மாலுமிகளை நோக்கி, “அவரை விட்டு விடுங்கள். இங்கு வரட்டும்” என்று கட்டளையிட மாலுமிகள் சஞ்சயனை விட்டார்கள்.
சஞ்சயன் கடல்வேந்தன் நின்றிருந்த இடத்தை நோக்கி சிரமப்பட்டு நடந்தான். “உள்ளே வா சஞ்சயா!” என்று கூறிய கடல்வேந்தன் அறைக்குள் சென்றான்.
அவனைத் தொடர்ந்து அறைக்குள் சென்ற சஞ்சயன், அந்த அறை இருந்த கச்சிதத்தை நோக்கி வியந்தான், ஒருவர். படுக்கும் படியான சிறுகட்டில், பெரிய மரப் பெட்டி. அதன் பக்கத்தில் இன்னொரு பெரிய மரப் பெட்டி, அதன்மீது எழுதும் சுருவிகள் இவை தானிருந் தன.இரண்டாவது உயரமான பெட்டி மீதிருந்த சீலைகளிலிருந்து கடல்வேந்தன் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறானென்பதைச் சஞ்சயன் புரிந்துகொண்டான்.
சஞ்சயன் உள்ளே வந்ததும் அவனைச் சிறிய பெட்டிமீது உட்காரச் சொல்லிவிட்டு எதிரே நின்றுகொண்ட கடல் வேந்தன் “சொல் சஞ்சயா” என்றான்,
சஞ்சயன் சற்று சங்கடப்பட்டான், கடல்வேந்தன் தன்னை மரியாதையில்லாமல் அழைத்ததால். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தான் யூசப்பிடம் சிக்கியது, க்ளேஸியஸ் அங்கு வந்தது, பிறகு பூசப்பிடம் சேரர் படை யிருக்கும் இடங்களை எழுதிக் கொடுத்தது எல்லாவற்றை யும் மிக விவரமாகச் சொன்னான்
அவன் எதிரே குத்துக்கல் போல் நின்றிருந்த கடல் வேந்தன் தீவிர சிந்தனை வயப்பட்டான். “நிலக்கள்ளி! இவரை அழைத்துப் போய் க்ளேஸியஸின் அறையில் தங்க வை, அது இப்பொழுது காலியாகத்தானிருக்கும். பகலில் பேசுவோம்” என்று அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். க்ளேஸியன் அறைக்கு வந்ததும் வெளியில் நின்று, “உள்ளே செல்லுங்கள் தூதரே! உமது சௌகரியங்கள் அனைத்தும் கவனிக்கப்படும்” என்று கூறிவிட்டு மீண்டும் கடல்வேந்தன் அறையை நோக்கிச் சென்று விட்டாள்.
நிலக்கள்ளி சொன்னபடி சஞ்சயனுக்கு சகல வசதிகளும் அளிக்கப்பட்டன. நீராட வசதியளித்து நீராடிய கொடுத்தார்கள். மாற்றுடை மிக பின் மாற்றுடையும் விலை உயர்ந்தகாயிருந்ததைக் கண்ட சஞ்சயன், ‘எல்லாம் திருட்டுச் சொத்து” என்று உடையை வெறுத்தாலும் அதை காலத்தில் அவனுக்கு உணவு அணிந்து கொண்டான், பரிமாறப்பட்டது. மாலைவரை அவனை யாரும் ஏனென்று கேட்கவில்லை. மாலை நெருங்கியதும் நிலக்கள்ளி வந்து அவனைக் கடல்வேந்தன் அறைக்கு அழைத்துப் போனாள்.
அறைக்குள்ளே கடல்வேந்தன் கையிலொரு முத்திரையிட்ட குழலுடன் நின்றிருந்தான். சஞ்சயனிடம் அதை நீட்டி, “இதை மன்னருக்கு அனுப்பிவிடும்” என்றான்.
சஞ்சயன் வியப்பினால் வாயைப் பிளந்தான். “மன்னருக்கா?” என்றும் வினவினான்.
“ஆம்!” திட்டமாக வந்தது கடல்வேந்தன் பதில்.
சஞ்சயனுக்கு ஏதும் புரியவில்லை. தொடர்ந்து மன்னரின் பொக்கிஷ வண்டிகளைக் கொள்ளையிட்டு வரும்
கடல்வேந்தன், மன்னருக்குச் செய்தி அனுப்புவது பரம விந்தையாயிருந்தாலும், சமீபத்தில் தலைநகரில் நடந்த சம்பவங்களை நினைத்து தனக்கும் விளங்காத ஏதோமர்மம். இதில் இருக்கிறது என்று புரிந்து கொண்டதால் “சித்தம்” என்று ஓலையை வாங்கிக் கொண்டான் சஞ்சயன்.
“இதைத் தவிர வேறு ஏதாவது செய்தி உண்டா?” என்று சஞ்சயன் கேட்டான்.
“மன்னருக்கு இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்கு நிலக்கள்ளி என்னுடன் இருப்பாள் என்று அமைச்சரிடம் சொல்லுங்கள்” என்றான் கடல்வேந்தன்.
சஞ்சயனுக்கு வியப்பு தாங்கவில்லை. “உங்களிடமா?” என்று கேட்டான், வியப்பு குரலிலும் விரிய.
”ஆம்” உறுதியுடன் உதிர்ந்தன சொற்கள், கடல் வேந்தன் உதடுகளிலிருந்து.
‘அமைச்சர்…” என்று இழுத்தான் சஞ்சயன்.
“ஆட்சேபிக்க மாட்டார்” என்று கூறிய கடல்வேந்தன் அவன் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான்.
வியப்பு தலைக்குமேல் ஓடிவிட்ட நிலையில் சஞ்சயன் தனது அறைக்குத் திரும்பினான்.அன்றிரவு இரு மாலுமிகள் வந்து அவனை அழைத்துப்போய்க் கரையில் விட்டார்கள் சிறிதும் தாமதம் செய்யாமல் அமைச்சர் மாளிகையை நாடிய சஞ்சயன், அழும்பில் வேளிடம் செய்தியைச் சொன்னான். அமைச்சர் அதை சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொண்டார். “ஒரு வாரபா?” என்றும் வினவி, ‘“ஆகும் ஆகும்”. ” என்றார்.
சஞ்சயனுக்கு ஏதுமே விளங்கவில்லை. வியப்பு அவன் முகத்தில் தாண்டவமாடியது. அதைக் கவனிக்கவே செய்த அமைச்சர் “தூதரே! நாளைக் காலையில் இங்கிருந்தே கடலைப் பாரும்” என்றார்.
காலையில் கடலைப் பார்த்தான் சஞ்சயன். அவன் வியப்பு எல்லை மீறியது.
28. கடல்வேந்தன் ஓலை
அமைச்சர் அழும்பில்வேள் சொன்னபடி காலையில் கடலை நோக்கிய சேர தூதனான சஞ்சயன் வியப்பின் எல்லையை அடைந்தானென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. கடல்வேந்தன் மரக்கலம் கடலில் காணாதது தவிர வேறு மூன்று மரக்கலங்கள் பழைய யவன மரக்கலத்துக்கு அண்மையில் நின்று கொண்டிருந்தன. அவற்றிலிருந்து சில படகுகள் வந்து போய்க் கொண்டும், வணிகப் பொருள்களை இறக்கிக் கொண்டுமிருந்தன. அந்த வணிகக் கப்பல்களைப் பற்றி அக்கறை கொள்ளாத சஞ்சயன் அந்த மரக்கலங்களைப் பார்த்த வண்ணம் தன் உப்பரிகையில் நின்று கொண்டிருந்த னுடன் மாளிகை அமைச்சரை தோக்கி கடல்வேந்தன் கப்பல் என்ன ஆயிற்று?’” என்று வினவினான்.
“உமக்கு எவ்வளவு தெரியுமோ அதைப்பற்றி அவ்வளவு தான் எனக்கும் தெரியும். அகை நங்கூரமெடுத்து எங்கோ செலுத்தியிருக்கிறான் கடல்வேந்தன். நிலக்கள்ளி , ஒரு வாரம் தன்னுடன் இருப்பாள் என்று அவன் சொல்லியனுப் பியதைப் பார்த்தால் அவன் கப்பல் ஒரு வாரத்துக்கு இங்கு தலை காட்டாது என்று தெரிகிறது” என்று பதில் சொன் னார் அமைச்சர் அழும்பில்வேள்.
அமைச்சர் பதில் சஞ்சயனுக்கு மிக விசித்திரமாயிருந் தது. தமது மகள் இன்னோர் ஆடவனுடன் தனித்து ஒரு வாரம் கப்பலில் போகிறாளென்பதைப் பற்றி சிறிதளவும் கவலை கொள்ளாமல் அமைச்சர் சர்வ சாதாரணமாக இருப்பதைப் பற்றிச் சற்று எரிச்சலும் அடைந்த சஞ்சயன்.
“அமைச்சரே! கோபித்துக் கொள்ளக் கூடாது. நிலக்கள்ளி கடல்வேந்தனுடன் ஒரு வாரம் தனியாகக் கப்பலில் போவது உசிதமா?” என்று வினவினான்.
“ஏன் போனாலென்ன?!” என்று அமைச்சர்கேட்டார், குரலில் சிறிதும் சலனமில்லாமலே.
“நிலக்கள்ளி குழந்தையல்ல…” சஞ்சயன் வாசகத்தை முடிக்கவில்லை.
“யார் சொன்னது குழந்தையென்று?” என்று எதிர்க் கேள்வி போட்டார் அமைச்சர்,
“வயது வந்த பெண்”.
“ஆமாம்”.
“கடல்வேந்தனும் வாலிபன்”.
“சரி”
“பஞ்சையும் நெருப்பையும் இப்படி சேர்த்து வைப்பது சரியா?”
இதைக் கேட்ட அமைச்சர் நகைத்தார். “தூதரே! இப்பொழுதுதானா அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்? பரண ரிடம் இருவரும் சேர்ந்தே கல்வி பயின்றார்கள். வில்லம்பு இலச்சினை இல்லத்தில் அவள் அடிக்கடி காணப்பட்டாள், அது மட்டுமா? வஞ்சியிலிருந்து அவளும் வேந்தனும் சேர்ந்து வரவில்லையா?” என்று சொற்களை அடுக்கித் தமது. மகள் கடல்வேந்தனுடனிருந்த சமயங்களையும் அத்தாட்சி காட்டினார்.
இதைக் கேட்ட சஞ்சயன் பதில் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டான் “இதையெல்லாம் நாம் அனுமதிக்க லாமா!” என்று வினவினான் தயங்கிய குரலில்.
“நம் அனுமதியைக் கேட்டது | யார்? முதல்நாளில் கடல்வேந்தன் இந்த என் மாளிகைக்கு வந்தானே. அவனை நாம் சிறை செய்ய முடிந்ததா? கொள்ளையடித்தானே மன்னரின் பொக்கிஷப் பெட்டிகளை; அதையாவது தடுக்க நம்மால் முடிந்ததா? சரி எல்லாம் கிடக்கட்டும். வஞ்சியி லிருந்து தப்பி வந்தானே, அது எப்படி? யோசித்தீரா?” என்று கேள்விகளை அடுக்கினார் அமைச்சர்.
“எனக்கு ஏதும் புரியவில்லை அமைச்சரே!” என்று ஒப்புக்கொண்டான் சஞ்சயன்.
“எனக்கே மனம் குழம்பியதாலும், நிலக்கள்ளி அவனுடன் தங்கிய பிறகும் தூய்மையுடன் திரும்பி வந்த தாலும், கடல் வேந்தனைப் பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் இருக்கின்றனவென்பதை நான் புரிந்து கொண்டேன் போதாக்குறைக்கு கொள்ளைக்காானான அவன் இப்பொழுது, அரசருக்கே ஓலை எழுதுகிறான் இதற்கு என்ன சொல்கிறீர்?” என்று விசாரித்தார் அழும் பில்வேள்.
சஞ்சயன் குழம்பினான். “ஆமாம். அரசருக்கே ஓலை அனுப்புகிறான்” என்றான் சஞ்சயனும் குழப்பத்துடன்.
“தூதரே….!” என்று மெல்ல அழைத்தார் அமைச்சர். “”சொல்லுங்கள் அமைச்சரே!” என்றான் சஞ்சயன். ‘வஞ்சியிலிருந்து அவன் தப்பி வந்த பிறகு உம்மைக் காணவில்லையே? எங்கு போனீர்?” என்று வினவினார் அழும்பில்வேள்.
“என்னை அந்தக் கொள்ளைக்காரன் நதிக்கு அக்கரை யில் தள்ளிவிட்டுப் போய்விட்டான். நான் சிக்கிக் கெண் டேன். யவனரிடமும் அராபியரிடமும்” என்ற சஞ்சயன், நடந்த கதையை விவரமாகச் சொன்னான்.
“உம்மைக் கடல்வேந்தனா அக்கரையில் விட்டான்?” என்று வினவினார் அமைச்சர்.
வண்டியில் நான் நன்றாக உறங்கி விட்டேன். எனக்கு ஏதோ மயக்க மருந்தைக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நற்கிள்ளியும் கடல்வேந்தனும், பிறகு எனக்கு எதுவும் தெரியாது. சுரணை வந்தபோது நான் அராபியர் வசமிருந்தேன்.” என்றான் சஞ்சயன்,
இந்தச் செய்தி அமைச்சரையே குழப்பியதால் சிந்த னையில் இறங்கினார், ‘கடல்வேந்தன் உம்மை எதிரிகளிடம் பிடித்துக் கொடுக்க மாட்டானே. அப்படியே கொடுத் தாலும் அவனது பாதுகாப்புக் கரம் உமது பக்கம். எப். பொழுதுமிருக்குமே!” என்று ஏதோ தாமாகப் பேசிக்- கொண்டார். பிறகு சொன்னார் “தூதரே! இதில் நாம் அறியாத பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த ரகசியச் சிக்கலை மன்னர்தான் அவிழ்க்க முடியும்” என்று, “எதற்கும் கடல்வேந்தன் ஓலையுடன் இன்றே புறப்படும் வஞ் சிக்கு” என்றும் கூறினார்.
அத்துடன் அவர்கள் உரையாடல் நின்றது. சஞ்சயன் நீராடி உணவருந்தி புறப்படத் தீர்மானித்து அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான். கதிரவன் உதயமாகி எட்டு நாழிகைகளுக்கெல்லாம் உணவை முடித்துக்கொண்ட சஞ்சயன் அமைச்சரைச் சந்தித்து, குழலில் இட்டு முத்திரையும் வைத்திருந்த ஓலையை வாங்கிக்கொண்டு “அமைச்சரே! நான் மன்னரிடம் சொல்ல வேண்டியது ஏதாவது உண்டா?” என்று வினவினான்.
“நடந்ததை. அப்படியே சொல்லும்” என்றார் அமைச்சர்.
“அப்படியே சொன்னால் மன்னருக்கு என் மீது கேவலமான அபிப்பிராயம் ஏற்படுமே?” எனறு சஞ்சயன் கேட்டான்.
“எப்படியும் பிரமாதமான அபிப்பிராயம் நம் இருவர் மீதும் மன்னருக்கு இருக்க முடியாது. இங்கு நடந்த கொள்ளை எதையும் நடுக்க உம்மாலோ என்னாலோ முடியவில்லை. இனிமேல் நம்மைப் பற்றிப் புது அபிப்பிராயம் எதுவும் ஏற்பட அவசியமில்லை ” என்ற அமைச்சர் ‘சரி புறப்படும். வாயிலில் வண்டி சித்தமாயிருக்கிறது’ என்றார்.
அந்தச் சமயத்தில் அவர்கள் இருந்த அறைக்கு வெளியி லிருந்து ஒரு குரல் எழுந்தது, “தூதர் எங்கே போகிறார்?” எனறு.
திரும்பிப் பார்க்க வாயிற்படியில் புலவர் பரணர் நின்றிருந்தார். பரணரைக் கண்டதும் இருவருக்குமே வெறுப்பாயிருந்தாலும் இருவரும் அதைச் சொற்களால் தெரியப்படுத்தினான் சஞ்சயன். “பரணரே! போகும் போது எங்கே போகிறாயென்று கேட்கலாமா?” என்று வினவினான்.
பரணர் இகழ்ச்சி நகை கொண்டார். “ஏன் எங்காவது பெண் பார்க்கப் போகிறீரா?” என்றும் கேட்டார், இகழ்ச்சி குரலிலும் தெரிய.
“பெண் பார்ப்பதற்குத் சகுனம் பார்க்க வேண்டுமா? வேறு முக்கிய விஷயம் ஏதும் உலகில் கிடையாதா?” என்று சஞ்சயன் கேட்டான்,
“ஏனில்லை? அரச காரியமாயிருந்தால் அது முக்கியம்” என்றார் பரணர்.
இந்தப் பதில் இருவருக்குமே தூக்கிப் போட்டதால் “அரச காரியமா?” என்று ஒரே சமயத்தில் இருவரும். கேட்டார்கள்.
”ஆம் தூதரே! உமது கையில் இருக்கும் குழலைப் பார்த்தால் அரச காரியமாகத் தெரிகிறது” என்ற பரணர் “தூதர் அரச காரியமாகப் போவதில் விசித்திரமேது மில்லையே” என்றும் சொன்னார்.
அமைச்சரின் வியப்பு எல்லை மீறியது. “பரணரே! இந்த மாதிரி பல குழல்களை நான் ஒவ்வொரு நாளும் அனுப்புகிறேன்…” என்று விளக்கினார்.
“அதில் அரச காரியமும் உண்டு. அதுவும் இம்மாதிரி குழல் அரசரின் தனிப் பார்வைக்கே ஏற்பட்டது என்றார் பரணர். அதைக் கேட்டுப் பிரமித்த மற்ற இருவரையும் நோக்கி “இதில் பிரமிக்க ஏதுமில்லை. அரசவையில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவருக்கு வரும் குழல்களையும் பார்த்திருக்கிறேன்” என்றும் கூறினார்.
சஞ்சயன் ஏதோ சொல்ல முயலவே “தூதரே! நாம் வீண் காலம் சுடத்த வேண்டாம். நானும் நானும் வஞ்சிக்குப் போக வேண்டியிருக்கிறது. உமக்கு ஆட்சேபணையில்லை யென்றால் உம்முடன் நானும் வருகிறேன்” என்றார் பரணர்.
அமைச்சர் பரணரை நோக்கிக் கேட்டார், “தங்க க்குத்தான் அரசர் தனிரதம், காவல் வீரர், இத்தனையும் அளித்திருக்கிறாரே?” என்று.
“ஆம்.”
“அதில் போகலாமே!”
“அரசாங்க அலுவல்களுக்கு, விழாக் காலங்களுக்கு அவற்றை உபயோகப்படுத்துகிறேன். ஏழைப் புலவன் தளித்துப் போக இந்தப் படாடோபங்கள் தேவையில்லை. தூதரோடு நானும் அவர் வண்டியில் ஒட்டிக் கொள்கிறேன். ஆட்சேபனையில்லையே!”
ஆட்சேபிப்பதால் பயனில்லை என்பதை இருவருமே புரிந்து கொண்டதால் பரணரையும் அழைத்துச் செல்ல சஞ்சயன் சம்மதித்தான். பரணரையும் தமது வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்படவும் செய்தான். பயணத்தைத் துரிதமாகவும் செய்தான். வண்டியில் ஏறிய பிறகு பரணர் ஏதும் பேசயில்லை. நீண்ட நேரம் சிந்தனையில் அடிக்கடி ஆழ்ந்தார். சிந்தனையில் ஆழாத சமயங்களில் பாட்டு களையும் பாடினார். சில சமயங்களில் தமது மடியிலிருந்து ஓலைச் சுவடியையும் எழுத்தாணியையும் எடுத்து வேகமாக எழுதவும் முற்பட்டார்.
அவர் போக்கு சஞ்சயனுக்கு முற்றிலும் பிடிக்க வில்லையென்றாலும் அவனால் எதுவும் செய்ய முடியாத தாலும், பேச்சுக் கொடுத்தாலும் பரணர் சிந்தனையில் ஆழ்ந்து பதில் சொல்லாததாலும் அவன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டு, இப்படிப் பயணம் செய்து மறுநாள் காலை வஞ்சியைச் சேர்ந்த தூதன், வண்டியை நேராக மன்னர் அரண்மனையை நோக்கிச் செலுத்தினான்,
அரண்மனையின் ஆரம்ப வாயிலிலேயே வண்டியிலிருந்து இறங்கிவிட்ட பரணர் அவனை மேற்கொண்டு செல்லுமாறு பணித்துப் பக்கத்திலிருந்த விடுதியொன் றில் புகுந்தார். சஞ்சயன் அரண்மனை பிரதான வாசலுக்குச் சென்று வண்டியைக் காவலரிடம் ஒப்படைத்து மன்னரைக் காணவேண்டுமென்று காவலரிடம் சொல்ல, காவலர் அவனை அரண்மனை பிரதம நிர்வாகிபிடம் அழைத்துச் சென்றனர். பிரதம நிர்வாகி மன்னர் அவனை மாலைதான பார்க்க முடியுமென்று சொன்னதையும்- கேட்காமல் சஞ்சயன் “செய்தி முக்கியம்” என்றான்.
“என்ன முக்கியமென்றாலும் இப்பொழுது மன்ன ரைப் பார்க்க முடியாது’ என்று திட்டமாகச் சொன்ன நிர்வாகி “தூதர்கள் விடுதியில் தங்கி இரும். மன்னர் உம்மைப் பார்க்க சம்மதிக்கும் சமயத்தில் சொல்லியனுப்புகிறேன்” என்றார்.
“கடல்வேந்தனிடமிருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் தூதன் எரிச்சலுடன்.
இதைக் கேட்ட நிர்வாகி துள்ளி எழுந்தார். “இதை ஏன் முன்னமே சொல்லவில்லை? இரும். மன்னரிடம் கேட்டு வருகிறேன்” என்று அரண்மனைக்குள் விரைந்தார். சில நிமிடங்களில் திரும்பி வந்து “உள்ளே செல்லுங்கள். மன்னர் இப்பொழுதே உம்மைச் சந்திப்பார்” என்று கூற சஞ்சயன் அரண்மனைக்குள் நுழைந்தான்.
அரண்மனையில் அந்தரங்க அறையில் அவனைக் காண மன்னர் சித்தமாயிருந்தார். சஞ்சயன் உள்ளே நுழைந்ததும் அரியணை மஞ்சத்தில் அமர்த்திருந்த மன்னர் தமது கையை நீட்டி “கொடும் ஓலையை” என்றார்.
29. மன்னனும் மாசறக் கற்றோனும்
கடல்வேந்தனிடமிருந்து ஓலை கொண்டு வந்திருப்பதாக அறிவித்ததும் அரண்மனை பிரதம நிர்வாகி துள்ளி எழுந்து மன்னரிடம் ஓடியதையும், மாலையில்காள் பார்க்க முடியுமென்று நினைத்த மன்னரையும் தான் உடனடியாகப் பார்க்க முடிந்ததையும் நினைத்துப் பார்த்து ‘கடல்வேந்தன் பெயருக்கு மிதமிஞ்சிய மதிப்பு இருக்கத்தான் செய்கிறது’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்ட சஞ்சயன், மன்னரிடம் ஓலையைக் கொடுத்ததும் மன்னர் சொல்லக்கூடிய பதிலை எதிர்பார்த்து நின்றான். இமயத்தில் இலச்சினை பொறித்தவனும், அஞ்சா நெஞ்சலென்றும், மகாவீரனென்றும் மாற்றாராலும் மிகவும் பாராட்டப்பட்டவனுமான சேரன் செங்குட்டுவன் குழலிலிருந்த முத்திரைகளை உடைத்து ‘உள்ளிருந்த ஓலையை நிதானமாகப் படித்தான். அதை ஒரு முறைக்கு இருமுறை ஆழ்ந்து படித்த செங்குட்டுவன் சில நிமிடங்களில் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். கடைசி யாகத் தூதனை நோக்கி, “கடல்வேந்தன் இப்பொழுது எங்கிருக்கிறான்?” என்று வினவினான்.
சஞ்சயன் “தெரியாது மன்னவா” என்று உண்மையைச் சொன்னான்.
மன்னனின் புருவங்கள் வியப்புக்கு அறிகுறியாகச் சற்று மேலே எழுந்து இறங்கின. “தெரியாதா?” என்று மன்னர் கேட்ட கேள்வியிலும் வியப்பு ஒலித்தது.
“தெரியாது” மீண்டும் அதே பதிலைச் சொன்னான் சஞ்சயன்.
“இந்த ஓலையை யார் கொடுத்தது உம்மிடம்?* மங்கள் மீண்டும் கேட்டான் சிந்தனை வயப்பட்டு.
“கடல்வேந்தன்தான்” என்றான் சஞ்சயன்.
“எப்பொழுது?”
“நேற்றுக்கு முந்திய இரவு”
“எங்கு சந்தித்தீர் கடல்வேந்தனை?”
”அவனது கப்பலில்”
“அங்கு ஏன் போனீர்?”
“நானாகப் போகவில்லை. அழைத்துச் செல்லப்பட்டேன்”. இதைக் கேட்ட மன்னன் மீண்டும் சிந்தனையில் இறங்கினான். கடைசியாகச் சொன்னான்: “நீர் தூதர் விடுதியில் இரும். மாலை சந்திக்கிறேன்’ என்று பேட்டி முடித்துவிட்டதற்கு அறிகுறியாக ஆசனத்திலிருந்து எழுந்திருக்கவும் செய்தான்.
அத்துடன் அரண்மனையை விட்டு வெளியே வந்த சஞ்சயனை நோக்கிப் புலவர் பரணர் விரைந்துவந்து கொண்டிருந்தார். “என்ன சஞ்சயா! மன்னரைப் பார்த்து விட்டாயா?” என்று வினவினார்.
”பார்த்துவிட்டேன்”
“ஓலையைக் கொடுத்து விட்டாயா?”
“அதற்குத்தானே மன்னரைப் பார்த்தேன்”.
“ஓகோ!” என்று புன்முறுவல்செய்த பரணர் “மன்னர் என்ன சொன்னார்?” என்றும் வினவினார்.
“எதைச் சொல்லியிருந்தாலும் உம்மிடம் சொல்வதற் இல்லை” என்று சற்றுக் கடுமையாகவே பதில் சொன்னான் சஞ்சயன் .
அதைக் கேட்டுப் புலவர் எந்தவித அதிர்ச்சியோ, ஆத்திரமோ கொள்ளவில்லை. “சரி பிறகு சந்திப்போம்” என்று கூறிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தார். அவரைப் பிரதம நிர்வாகி எதிர்கொண்டு உள்ளே அழைத்துச் சென் றான். பன்னர் இருக்கும் அறையைச் சுட்டிக்காட்ட அந்த அறைக்குள் சென்ற பரணர், மிகுந்த சிந்தனையுடன் மன்னன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண் டிருந்ததைப் பார்த்து ஏதும் பேசாமல் ஒரு விநாடி நின் றார். பிறகு “மன்னா! நீ நீடூழி வாழி! உன் செங்கோல் நாற்றிசையும் ஓங்கட்டும்” என்று வாழத்து கூறினார்.
அப்பொழுதுதான் புலவர் வந்திருப்பதை உணர்ந்த செங்குட்டுவன் திரும்பிப் பார்த்துப் புலவருக்குத் தலை வணங்கினான். “இப்படி அமரவேண்டும்” என்று எதிரே யிருந்த மஞ்சமொன்றையும் காட்டினான்.
அதில் அமர்ந்து கொண்ட புலவர் “மன்னா! நீயும் உட்கார்” என்று சொல்லியும் செங்குட்டுவன் கேட்டானில்லை. ‘புலவரே! உமக்கு முன் நான் நிற்பதே எனக்குப் பெருமை” என்றான்.
அதற்கு மேல் மன்னனை வற்புறுத்தாத பரணர், “மன்னா! சஞ்சயன் செய்தி கொண்டு வந்தானா?” என்று கேட்டார்.
*கொண்டு வந்தான்” என்ற மன்னவன், “புலவரே! தங்களுக்கு ஏதாவது செய்தி உண்டார்”என்று வினவினான்.
புலவர் தமது மடியில் மிக மெல்லியதாக மடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஓர் ஓலையை எடுத்துக்கொடுத்தார். மன்னன் அதைப் பிரித்து அதிலிருந்த வரிகளை மெதுவாகப் படித்தான். “இந்தச் செய்தி சஞ்சயன் கொண்டுவந்த செய்தியை உறுதிப்படுத்துகிறது” என்று கூறிவிட்டு “புலவரே! கடல்வேந்தன் உம்மைக் கடைசியாக எப்பொழுது பார்த்தான்?” என்று வினவினான்.
“ஒரு வாரத்திற்கு முன்பு” என்றார் பரணர்.
“இந்த ஓலை உமக்கு எப்பொழுது வந்தது?” என்று மன்னன் விசாரித்தான்.
“முந்தாநாளிரவு. அப்பொழுதான் சஞ்சயனுக்கும் ஓலை கிடைத்திருக்க வேண்டும்” என்றார் புலவர்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் செங்குட்டுவன். “இரண்டு ஓலைகளிலும் ஒரே விஷயந்தான் இருக்கிறது. ஒன்று கிடைக்காவிட்டாலும். இன்னொன்று கிடைக்க சடல்வேந்தன் ஏற்பாடு செய்திருக்கிறான்” என்று சொன்ன மன்னன், “புலவரே! யார் இந்த யூசப்?” என்று வினவினான்,
“அராபியர் குடியிருப்புகளின் தலைவன்” என்றார் பரணர்.
“அவன் யவனாகளுடன் சேரக்கூடும் என்று கடல் வேந்தன் எழுதியிருக்கிறானே” என்றான் மன்னன்
“அப்படி ஒரு வதந்தி இருந்தது. ஆனால் இரண்டு நாள்களாக யூசப்பைக் சாணவில்லை. க்ளேஸியஸ் மட்டும் யானர்களை அடிக்கடி அழைத்துப் போகிறான், தவிர, முசிறி துறைமுகத்தில் இப்பொழுது யவன மரக்கலங்கள் நான்கு நிற்கின்றன” என்ற பரணரின் குரலில் கவலை தெரிந்தது.
“எந்த மாதிரி மரக்கலங்கள்?’ அரசன் கேள்வியை வீசினான் சிறிதும் பதற்றமில்லாத குரலில்.
“பார்ப்பதற்கு வணிக மரக்கலங்கள். வணிகப் பொருள் களும் துறைமுகத்துக்குள் வருகின்றன. ஆனால் அவற்றின் தோற்றம் வேறு, உண்மை வேறு, பெரும் போர்க்கலங்களாக இருக்க வேண்டும்” என்ற பரணரின் குரலில் கவலை இருந்தது.
மன்னன் முகத்தில் எந்தவிதக் கவலைக்குறியும் இல்லை. *கடல் போருக்கு நான் அஞ்சுவேனென்று யவனர் நினைக்கிறார்களா? ” என்று கேட்டான் ஏதோ சாதாரண விஷயத்தைப் பிரஸ்தாபிப்பவன் போல.
“அப்படித்தானிருக்கும்” என்ற பரணர், “உன்னை வடநாட்டாரே சரியாக எடை போடவில்லையே, மேல் நாட்டவரான யவனர்களா எடை போட முடியும்?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வி மன்னனுக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். செங்குட்டுவனின் அழகிய வீரமுகத்தில் மகிழ்ச்சிச் சாயை விரிந்தது. உதடுகளிலும் புன்சிரிப்பு குரலிலும் ஒலிக்கப் தலைகாட்டியது. அந்த மகிழ்ச்சி பேசினான் மன்னன். “பரணர் பெருமானே! உமது சீடனை நீர் மெச்சுவது நல்லதல்ல. அதிகமாகப் புகழ்ந் தால் நான் நிதானமிழந்து விடுவேன். உங்கள் அடிமையை அதிகமாகப் பாராட்டாதீர்கள்” என்று.
புலவர் மஞ்சத்தில் லேசாக அசைந்து, “மன்னா! நீ தமிழகத்துக்கு ஓர் அணிகலன். உன்னை நான் பாராட்ட இஷ்டப்படவில்லை. உண்மையைச் சொன்னேன். தவிர, நீ அடிமை என்று சொல்லிக் கொள்ளாதே. மாற்றரசர்கள் எல்லாரும் உனக்கு அடிமை” என்று சொன்னார்.
புரவலன் புலவரை நோக்கித் தலை வணங்கினான் “பரணர் பெருமானே! மாற்றரசர் எனக்கு அடிமை களாகலாம். ஆனால், மாசறக் கற்றோரான தங்களுக்கு மன்னன் அடிமை. இது தமிழுலகம் ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை”
புலவர் மகிழ்ச்சியுடன் மன்னன் சொல்லை ஏற்றுக் கொண்டு, “உன்னிஷ்டம் மன்னா!” என்று கூறிவிட்டு, “எனக்கு என்ன கட்டளை? இந்த ஓலைக்கு என்ன பதில்?” என்று கேட்டார்.
செங்குட்டுவன் வதனத்தில் சீரிய சிந்தனைச் சாயை படர்ந்தது. இருப்பினும் சில நிமிடங்களுக்கெல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட மன்னன், “கடல் வேந்தனுக்குப் எழுதித் தருகிறேன். அதை எடுத்துக் கொண்டு நீர் தொண்டித் துறைமுகம் செல்லும். இன்னொரு கடிதம் அமைச்சர் அழும்பில்வேளுக்கு எழுதித் தருகிறேன். அதைச் சஞ்சயன் எடுத்துச் செல்லட்டும்” என்று கூறினான்.
“தொண்டிக்கா! எதற்கு?” என்று கேட்டார் புலவர்.
“அங்குதான் கடல்வேந்தன் இருக்கிறான்” மன்னன் திட்டவட்டமாகச் சொன்னான்.
“எப்படித் தெரியும் உனக்கு?” என்று பரணர் கேட்டார்.
“அவன் வழக்கமாகச் செல்லும் லட்சத் தீவுகளில் ஏதாவது ஒன்றுக்கு அவன் சென்றிருந்தால்?” என்றும் தொடர்ந்து வினவினார்.
“லட்சத்தீவு. கடல் கொள்ளைக்காரர்கள் இருக்கு யிடந்தான், ஆனால், கடல்வேந்தன் சாதாரண கொள்ளைக்காரன் அல்லவென்பது உமக்கும் தெரியும், என்ன கொள்ளையடித்தாலும் நாட்டுப் பற்றுடையவன். அது அவன் ரத்தத்திலிருக்கிறது” என்றான் மன்னவன்.
“ஆம், ஆம் ரத்தத்திலிருக்கிறது” என்று ஓப்புக் கொண்டார் பரணர்
”ஆகவே, முசிறி யவனர் புரட்சியை எதிர்பார்க்கும் தருவாயில் அவன் நாட்டு மேற்குக் கரையைவிட்டு அகல மாட்டான். தவிர, சஞ்சயன் ஓலையில் என்னையும் முசிறிக்கு வரும்படி எழுதியிருக்கிறான்” என்றான் மன்னன்.
“உன்னையா! எதற்கு மன்னா?” என்று வியப்புடன் புலவர் கேட்டார்.
“தெரியவில்லை. ஆனால், வஞ்சிப் பாதையிலுள்ள மலைக்காடுகளில் பாசறை அமைத்துத் தங்கும்படி சொல்லியிருக்கிறான்” என்றான் மன்னன்.
புலவர் சீற்றத்தைக் காட்டினார். ”உனக்குத் தங்கு மிடத்தைச் சொன்னானா? உனக்கு உத்தரவிட இவன் யார்? நேற்றைய சிறு பயல்’ என்று உக்கிரமாகப் பேசினார்.
“எல்லாம் நாட்டு நன்மைக்குத்தான் சொல்லியிருப்பான்” என்ற மன்னன், அதற்குமேல் பேச்சை வளர்க்காமல், “புலவரே! நீங்கள் நீராடி உணவருந்துங்கள். சற்றுப் பயண அலுப்பை நீக்கப் படுத்துக் கொள்ளுங்கள். மாலை சந்திப்போம்” என்றான்.
மன்னன் கூறியது போல் நீராடி, அறுசுவை உணவு உண்டு, தமக்கு அளிக்கப்பட்ட தனி அறைக்குச் சென்றார். அங்கிருந்த பஞ்சணையில் படுக்கவில்லை. தமது ஓலைச் சுவடிகளை எடுத்து ஏதோ எழுதலானார். எழுதி முடித்து ஒரு பணியாளனை அழைத்து, அதற்கு முத்திரையும் வைக்கச் சொன்னார். பிறகு படுத்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
அன்று மாலை விளக்கு வைத்த பின்பு, மன்னன் அறைக்கு அழைக்கப்பட்டார். அங்கு சஞ்சயனும் காத்திருந்தான். இருவரிடமும், இரு ஓலைகளைக் கொடுத்த மன்னன், “சஞ்சயா! நீ சென்று அதை அமைச்சரிடம் கொடு” என்றான்.
“புலவர்?” என்று கேட்டான் சஞ்சயன்.
“இப்பொழுது வரவில்லை பிறகு அனுப்புகிறேன்” என்று முடிவாகக் கூறிவிட, சஞ்சயன் புறப்பட்டான்.
அவன் சென்ற பின்பு, தமது கையிலிருந்த குழலை கவனித்த புலவர், தனது மடியிலிருந்து முத்திரையிட்ட ஓலை நறுக்குகளை மன்னரிடம் கொடுத்தார்.முத்திரையைப் பிரித்து ஓலைகளைப் படித்த செங்குட்டுவன், “முடிவை முன்னதாகச் சொல்லி லிட்டீர்களே?” என்று கேட்டான். “புலவன் கவிதையில் தவறு இருக்காது” என்றார் புலவர்.
அடுத்து மன்னனும், மாசறக் கற்றோனும் ஒருவரை யொருவர் நோக்கிக் கொண்டனர், அர்த்த புஷ்டியுடன். “நாளைக் காலையில் நீங்கள் கிளம்பலாம்” என்றான் மன்னன்.
அன்றைக்கு இரண்டு நாள் சுழித்து, மன்னன் ஓலையைப் படித்த அமைச்சர் அழும்பில்வேள், திக்பிரமை பிடித்து நின்றார். ‘மன்னனுக்குப் பைத்தியமேதும் இல்லையே?’ என்று சஞ்சயனை விசாரிக்கவும் செய்தார்.
30. கடற்படைத் தலைவன்
மன்னன் அனுப்பிய ஓலையின் முத்திரைகளை உடைத்து அதைப் படித்த அழும்பில்வேள் அதிர்ச்சியடைந்து “மன்னனுக்குப் பைத்தியம் ஏதுமில்லையே?” என்று கேள்வி எழுப்பியதும் சஞ்சயன் அமைச்சரை வியப்பு ததும்பிய விழிகளுடன் நோக்கினான். மன்னனைப் பற்றி அப்படித் துணிகரமாகப் பேசிய அழும்பில்வேளின் சித்த ஸ்வாதீனத்தைப் பற்றியே அவன் சந்தே கப்பட் டாலும் அதைப்பற்றிக் கேள்வி எழுப்பாமல் அமைச்சரின் கேள்விக்கே அவன் பதில் சொன்னான், “எனக்குத் தெரிந்த வரை மன்னருக்கு அப்படியொரு நிலை ஏற்படவில்லை’ என்று.
அமும்பில்வேள் அப்பொழுதும் விடவில்லை. “இந்த ஓலையில் என்ன எழுதி இருக்கிறது தெரியுமா?” என்று வினவினார் சேரதூதனை நோக்கி.
“தெரியாது. முத்திரைகளை உடைத்து மன்னர் ஓலை களைப் படிக்கும் பழக்கம் இன்னும் வரவில்லை எனக்கு” என்று இடக்காகப் பதில் சொன்னான் சஞ்சயன்.
மந்திரியின் புத்தியிருந்த நிலையில் அவர் சஞ்சயன் இடக்கைக் கவனிக்காமல், “அப்படியானால் இந்த ஓலையை இப்பொழுது படி” என்று ஓலையைச் சஞ்சயனிடம் கொடுத்தார்.
சஞ்சயன் மன்னர் ஓலையைக் கையில் வாங்கி அதில் இருந்த வரிகளில் கண்களை ஒட்டினான். படிக்கக் படிக்கக் கண்களில் பிரமை அதிகப்படவே மிகுந்த அதிர்ச்சி யடைந்து, “அமைச்சரே!” என்று அச்சம் மிகுந்த குரலில் அழைத்தான்.
“என்ன தூதரே!” அமைச்சர் குழப்பத்துடன் கேட்டார்.
“இந்த ஓலையில் கண்டுள்ளபடி நடந்தால்…” சொற்களை முடிக்கவில்லை சஞ்சயன்.
அமைச்சர் இடைபுகுந்து வாசகத்தை முடித்தார், “முசிறி, யவனர் வாயில் பலாச்சுளைபோல் விழுந்து விடும்” என்று.
ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த சஞ்சயன் “யவனர்கள் இஷ்டப்படி நடமாட அதிகாரம் கொடுக்கும்படி மன்னர் கூறியிருக்கிறார்” என்றான்.
“ஆம். படைகள் அவர்களைத் தடைசெய்ய வேண்டா மென்றும்,சற்று அத்து மீறினாலும் சகித்துக்கொள்ளும் படியும் கூறியிருக்கிறார் மன்னர்” என்றார் அமைச்சர்.
“அத்துமீறி என்றால் என்ன என்பதை விளக்கவில்லை மன்னர்” என்று சஞ்சயன் குறிப்பிட்டான்.
“அதை நாம் தான் நிர்ணயம். செய்யவேண்டும். இங்கு மன்னர் அதிகாரம் குலையாதிருக்கும் வரை யவனர் எது செய்தாலும் நாம் எதிர்ப்பதற்கில்லை” என்று தமது அதிகார வரையறை என்ன என்பதை விளக்கினார் அமைச்சர்
“அதாவது?”
“க்ளேஸியஸும், அவன் சகாக்களும் ஆற்றங் ரைக்கு இப்புறம் வரக்கூடாதென்ற தடை இருக்கிறது? அந்தத் தடையை நீக்கலாம். அவர்கள் இங்கு வந்து வாணிபம் செய்யவும் அனுமதிக்கலாம். ஆனால், படை வீடுகளுக்குள் நுழைய முயன்றால் தடுப்போம்’ என்ற அமைச்சர், “இதெல்லாம் எனக்கு அச்சமளிக்கவில்லை, வஞ்சிப் பாதையிலிருந்து மலைக்காட்டுப் பாசறைகளை அதிகமாக வலுப்படுத்த வேண்டாமென்று மன்னர் எழுதியிருப்பதற்குத்தான் எனக்குக் காரணம் புரியவில்லை. முசிறியின் பாதுகாப்புக்கு ஒரே இடம் மலைக்காட்டுப் பாசறை. அதுவும் பலவீனப்பட்டால் முசிறியை யாரும் விழுங்கிவிட முடியும்” என்று கவலை தெரிவித்தார்.
சஞ்சயனுக்கும் அந்தக் சுவலை உண்டென்றாலும் அதைப் பற்றி அவன் ஏதும் சொல்லவில்லை. தங்களிரு வருக்கும் தெரியாத ஆழமான திட்டம் ஏதோ உருவாகிற தென்பதை ஊகித்துக் கொண்டான் சஞ்சயன்.
அப்பொழுது அமைச்சர் திடீரெனக் கேட்டார்
“ஆமாம். உம்முடன் வந்த புலவர் எங்கே?” என்று.
”அவர் வஞ்சியிலேயே தங்கி விட்டார்”
“மன்னன் ஆணையின் மேலா?”
”ஆம்”
அறிவாளியான அமைச்சர் அழும்பில்வேள், மன்னன் புலவரைத் தம்முடன் இருத்திக் கொண்டதிலும் ஏதோ காரணமிருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டார். எனினும் அதன் மர்மம் புரியாததால் சற்றுக் குழம்பவே செய்தார்.
இந்த குழப்பம் அமைச்சருக்கு மட்டும் ஏற்படவில்லை. அரசன் ஓலையைத் தொண்டிக்கு எடுத்துச் சென்ற புலவ ரான பரணருக்கும் ஏற்பட்டது. மேற்றிசைத் துறைமுகங்களில் மிகவும் முக்கியமென்று கருதப்பட்ட தொண்டித் துறைமுகத்தை அடைந்த புலவர், அங்கிருந்த நிலைகண்டு பெருவியப்படைந்தார். மிகவும் சுட்டுத் திட்டமுள்ள அந்தத் துறைமுகத்தின் ! தெருக்களில் கடல்வேந்தன் மாலுமிகள் இஷ்டப்படி உலாவிக் கொண்டிருந்தனர். அவர்களைத் துறைமுகக் காவலரோ, இதர நகரக் காவலரோ தடை செய்யவில்லை. அந்தஅராஜக நிலையைக் கவனித்துக் கொண்டு துறைமுகப் பெருங்காவலரின் மாளிகையை அடைந்த புலவர். தமது வருகையை அறிவிக்க, துறைமுகத் தலைவன், மாளிகையிலிருந்து ஓடோடி வந்து புலவரை வணங்கி உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளேயிருந்த ஒரு பெரிய அறையைத் திறந்து விட்டு “இது மன்னர் தங்கும் அறை. தாங்கள் தாங்கலாம் என்று அவரை அங்கு தங்க வைத்த துறைமுகத் தலைவன் வந்த காரியத்தை வினவும் முறையில், “புலவர் பெருமான் இணைக்குக் காத்திருக்கிறேன்” என்றான்.
புலவர் ஏதும் பேசவில்லை. மடியிலிருந்த இலையை எடுத்துத் தலைவனிடம் கொடுத்தார். ஓலையின் முத்திரை களை உடைத்து ஓலையைக் கண்களில் ஒற்றிக்கொண்டு அதிலிருந்த செய்தியைப் படித்த துறைமுகத் தலைவன் இருமுறை ஓலையைத் திருப்பிப் பார்த்தான், பிறகு புலவரை நோக்கி, “புலவரே! இதை நீரும் படியும்’ என்று புலவரிடம் ஓலையைக் கொடுத்தான்.
புலவர் அதைப் படித்ததும் பெரிதும் குழம்பினார். “துறைமுகத் தலைவரே! இந்த ஓலைப்படி கடல்வேந்தன் இந்தத் துறைமுகத்தின் தலைவனாகிறான்” என்று சொன்னார், குழப்பம் குரலிலும் தெரிய.
“ஆம்” என்றான் தலைவன் சர்வ சாதாரணமாக,
“உனக்கு இதில் ஏதும் ஆட்சேபனை இல்லையா?” என்று புலவர் கேட்டார்.
“இல்லை.”
”ஏன்?’
“இந்த ஓலையில்லாமலே கடல்வேந்தனும், அவனது மாலுமிகளுந்தான் இந்த துறைமுகத்தை இப்பொழுது ஆளுகிறார்கள்”
“எப்படி ஆளமுடியும்? ஒரு கொள்ளைக்காரன் இஷ்டமா நமது துறைமுக நிர்வாகம்?” என்று கேட்டார் புலவர்.
தலைவன் ஒரு விநாடி புலவரின் கண்களுடன் தனது விழிகளைக் கலந்தான். ‘புலவரே! நிர்வாகம் இப்பொழுதும் என் கையில் இல்லை. மூன்று நாள்களுக்கு முன்பு அவன் மரக்கலம் திடீரென இந்தத் துறைமுகத்துக்குள் நுழைந்தது. அதைத் தடுக்க நமது மரக்கலங்கள் இரண்டு, நங்கூர மெடுத்தன. அவை செயல்படுவதற்குள் அவை இரண்டுக்கும் நடுவில் கடல்வேந்தன் மரக்கலம் வந்து நின்று கொண்டது. அதன் பாய்கள் வேகத்துடன் இறக்கப்பட்டன. அதன் பக்கப் பலகைகள் இரண்டிலும் வில்லேந்திய அவன் மாலுமிகள் அம்புகளை அமைத்து நாண்களை இழுத்து நின்றனர். அதுதவிர, பெரும் யந்திரமொன்று நான்கு வேல்களை ஒரே சமயத்தில் தாங்கித் திரும்பிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் அந்த மரக்கலத்தின் பெரிய பாய் மரத்தின் உச்சியிலிருந்த தட்டில் ஏறி நின்றிருந்தான். கடல்வேந்தன், ‘துறைமுகத்தை, ஒருமுறை கண்களைச் சுழற்றிப் பார்வையிட்டான். பிறகு பெரிய ஊது குழலை ஊதி, “எந்த மரக்கலம் அசைந்தாலும் அவை அழிக்கப் படும். இந்தத் துறைமுகம் என் கைவசத்திலிருக்கிறது. யாராவது போய் இந்தத் துறைமுகத் தலைவனை வரச் சொல்லுங்கள்” என்று அதிகாரத்துடன் அறிவித்தான்.
“இதை எனது துறைமுகக் காவலர் ஓடி வந்து சொல்ல, நான் விரைந்தேன் துறைமுகத்துக்கு. கடல் வேந்தனைச் சந்தித்து எச்சரித்து விடுவதென்று ஒரு படகை எடுத்துக்கொண்டு கடல்வேந்தன் மரக்கலத்துக்குச் சென்றேன் என்னை அவன் வரவேற்கச் சித்தமாயிருந் திருக்கவேண்டும். நான் அந்த மரக்கலத்தை அணுகியதும், நூலேணி தொங்க விடப்பட்டது.
அதில் ஏறித் தளத்தை அடைந்ததும் இரு மாலுமிகள் எனக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டுக் சுடல் வேந்தன் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
“அந்த அறைக்குள் நுழைந்ததும் திடுக்கிட்டேன். அங்கு கடல்வேந்தன் புன்முறுவலுடன் என்னை வரவேற் றான். அந்த அறை மூலையில் ஓர் அழகி உட்கார்ந்து ஒரு சீலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் கடல் வெந்தன் நான் அமர ஆசனம் ஒன்றைக் காட்டினான். தான் நின்று கொண்டேயிருந்தேன். அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான். ‘இவள் நிலக்கள்ளி. அமைச்சர் அழும்பில்வேளின் மகள்’ என்று. நான் பிரமித் தேன், மந்திரி மகள் எப்படி இந்தக் கொள்ளைக்காரனுடன் வரமுடியுமென்று. ஆனால் அவள் எந்தக் குழப்பத்தையும் காட்டவில்லை. எழுந்து சீலையைக் கடல் வேந்தனிடம் கொடுத்தாள். அதில் எழுதப்பட்டிருந்ததைப் படித்துக் கடல்வேந்தன் ‘சரியாக இருக்கிறது’ என்று கூறிவிட்டுத் ‘துறைமுகத் தலைவரே! இதில் தங்கள் கையொப்பத்தை இடும்” என்றான்
”அந்தச் சீலையைப் படித்தேன். அதில் இந்தத் துறை முகத்தில் எதுவும் செய்ய நான் அதிகாரமளிப்பதாகக் கண்டிருந்தது. ‘இதில் நான் கையெழுத்திட மறுத்தால் ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். ‘இன்று மாலைக் இள் தொண்டி நகர் சூறையாடப்படும்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினான் கடல்வேந்தன்.
“அதுவரை வாளாவிருந்த அந்தப் பெண்ணும் “அவர் கூறியபடி செய்யுங்கள். நகரத்துக்கு நல்லது என்றாள். அங்கிருந்த சூழ்நிலையைக் கவனித்தேன். துறைமுக நன்மையை முன்னிட்டுக் கையொப்பமிட்டேன். அதைப் பறையறைவித்து நகர மக்களுக்கு அறிவித்தேன். முதலில் நகர மக்கள் அஞ்சினார்கள். ஆனால் பிறகு அவர் களே இந்தக் கொள்ளைக்காரனைப் பாராட்டினார்கள். அவன் மாலுமிகள், பண்டங்களை நிரம்ப வாங்கித் தங்கள் கப்பலுக்குக் கொண்டு போனார்கள். வேண்டியதற்கு மேல் வணிகருக்குப் பணம் கொடுத்தார்கள். கொள்ளைத் தங்கம் தொண்டியில் பெரிதும் நடமாடியது. இதனால் மக்கள் அவனைத் தெய்வமாகப் பாவிக்கிறார்கள்” என்ற தலைவன், தனது உரையைச் சற்று நிறுத்தினான்.
இப்பொழுது மன்னரின் ஓலை கடல்வேந்தனை இந்தத் துறைமுக அதிகாரியாக நியமிக்கிறது. அவன் சொற்படி நடக்கவும் உனக்கு உத்தரவிடுகிறது” என்றார் புலவர்.
“அது மட்டுமல்ல. சேரர் கடற்படைக்கு அவனைத் தலைவனாகவும் நியமிக்கிறது. இதோ பாருங்கள்” என்று ஓலையின் அடிக்குறிப்பைக் காட்டினான் துறைமுகத் தலைவன்.
அடுத்து புலவர் முகத்தில் பெருமகிழ்ச்சி விரிந்தது. “கடல்வேந்தன். சேரக் கடற்படைத் தலைவன் நல்லது நல்லது! சேர நாடு காப்பாற்றப்பட்டது’ என்று குதூகலத்துடன் சொன்னார். அத்துடன் அத்துடன், தலைவரே! கடல்வேந்தனை இங்கு அழைத்து வாரும்'” என்று உத்தர விட்டார்.
“இந்த ஓலையை அவனிடம் கொடுத்து நான் அழைப் பதாகத் தெரிவியும்” என்றார்.
“அப்பொழுது வருவானா?”
“வருவான் “
“ஏன்?”
“அவன் என் மகன்” என்றார் புலவர்.
துறைமுகத் தலைவன் முகத்தில் விரிந்தது அதிர்ச்சியா? அல்லது வேறு ஏதாவது உணர்ச்சியா? புரியவில்லை, தலைவனுக்கு. பெரும் விசித்திரம் என்று எண்ணினான் உள்ளுர. அதைவிட இன்னும் பெரிய விசித்திரம் அன்று மாலை நிகழ்ந்தது.
– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை