கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 2,771 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

16 – 20 | 21 – 25 | 26 – 30

21. சிருங்கார சிற்றரவங்கள்

இரண்டாவது ஜாம ஆரம் சொக்கன் சத்திரத்தில் பத்தில் தலையிலிருந்து கால்வரை தன்னைக் கறுப்புச் சீலை யொன்றால் மறைத்துக் கொண்டு ஏறிய புதுப்பயணி யாராக இருக்கக்கூடும் என்பதை அறிய திரையை அகற்ற முயன்ற சஞ்சயன் சுரம், பலமான ஒரு கரத்தால் இரும்புப் பிடியாக பிடிக்கப்பட்டதன் விளைவாக, வலி தாளாமல் அவன் முகம் சுளித்தானென்றால், கை முறுக்கப்பட்டதும் அலறவே செய்தான். இன்னும் ஒரு முறுக்கு முறுக்கினால் எலும்பு உளுத்துப்போன மூங்கிலைப் தனது முழங்கை என்பதை உணர்ந்த முறிந்துவிடும் போல் முற்றிலும் தால் பெரும் தியிலும் கொண்டான். ஆனால், அவனைக் காப்பாற்றத் தலையிட்ட புதுப்பயணி, “இவன் பொல்லா தவனல்லன், அசடுதான். விட்டு விடுங்கள்” என்று பரிந்து பேசியதும், பயணி சொன்னதை ஆமோதிக்கவே செய்தான் சேரதூதன். 

பேசிய பயணியின் குரலிலிருந்து, தனக்குப் பரிந்தவள் நிலக்கள்ளிதான் என்பதை உணர்ந்து கொண்ட சஞ்சயன், அவள் அந்த இரவில் சொக்கன் சத்திரத்தில் காத்திருக்க நாங்கள் அந்தச் சமயத்தில் வேண்டிய அவசியமென்ன? அங்கு வருவது அவளுக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக் கொண்டானானாலும் விடையேதும் கிடைக்கவில்லை தூதனுக்கு. 

லிடை நிலக்கள்ளியிடமிருந்தும், கடல்வேந்தனிடமிருந் துமே வந்தது. திரையிலிருந்து சேரதூதன் கையை அகற்றி, தொங்கவிட்டு, அதை மீண்டும் திரையை நன்றாகத் திறக்காதிருக்க இரு முனைகளையும் அந்த வண்டியின் பக்க விற்களில் செருகிவிட்ட செருகிவிட்ட கடல்வேந்தன், “நிலக்கள்ளி! சொன்னபடி சொக்கன் 
சததிரத்தில் சித்தமாயிருந்து விட்டாயே?”” என்று பாராட்டினான். 

”நீங்களும் சொன்னபடி சரியான காலத்துக்கு வந்து விட்டீர்கள். எப்படி வஞ்சியிலிருந்து தப்பினீர்கள்?” என்று வினவினான், 

கடல்வேந்தன் சிறிது நிதானித்து விட்டுச் சொன்னான். “நிலக்கள்ளி! உண்மையைச் சொன்னால் நீ நம்ப பாட்டாய்! ஆனால் ஆனால் மன்னர்தான் என்னை விடுதலை செய்தார்” என்று. 

“மன்னர் விடுதலை செய்தாரா? எப்படி? மன்னர் தானே உங்களைச் சிறை செய்ய உத்தரவிட்டிருந்தார்? உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பத்தாயிரம் பொன் வெகுமானம் என்று முரசும் கொட்டியிருக் கிறாரே” என்று வினவினாள் நிலக்கள்ளி. 

“மன்னர் மனம் மாறியிருக்க வேண்டும்” என்று கடல்வேந்தன் பதில் சொன்னான். 

“எப்படி மாறும்?” வினவினாள் அந்தக் கன்னி. 

“எப்படியோ தெரியாது. என்னைக் கண்டதும் காவல ரைப் பார்த்துச் சீறினார் மன்னர், “இவனை யார் கொண்டுவரச் சொன்னது?” என்று, ‘”உன்னை யார் இங்கு வரச்சொன்னது?” என்று என்மீதும் சீறி விழுந்தார்… 

“விசித்திரமாயிருக்கிறதே?” 

“எந்த விசித்திரமும் இல்லை இதில். நானாக வர வில்லையென்றும் என்னைப் பிடித்து வந்தார்களென்றும் சொன்னேன். எனக்கு விடுதலையளித்தால் நான் திருடிய இரண்டு பெட்டிப் பொன் நாணயங்களையும் அரசுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகச் சொன்னேன். இனிமேல் கொள்ளையடிப்பதில்லையென்றும் உறுதி கூறினேன், மன் ளர் சம்மதித்து விடுதலையளித்தார்.” இதைக் கூறிய கடல்வேந்தன் லேசாகப் பெருமூச்சுவிட்டு, என் தொழில் போய்விட்டது” என்றும் வருத்தத்துடன் கூறினான், 

நிலச்கள்ளி நகைத்தாள் மெதுவாக, அவன் விரல்களுடன் தனது விரல்களை இணைத்தாள். “எந்தத் தொழில்? கொள்ளைத் தொழிலா!” என்று வினவவும் செய்தாள் நகைப்பின் ஊடே, 

“ஆம்” என்றான் கடல்வேந்தன். 

“அது ஒரு தொழிலா?” என்று கேட்டாள் நிலக்கள்ளி. 

“ஆம்”

“கண்ணியமான தொழிலா?” 

“அவரவர்களுக்கு அவரவர் தொழில் கண்ணியமானது”. 

“மன்னர் இருக்கிறார். அரசியல் பணிசெய்யும் பெரு மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் தொழிலைப்போல் ஆகுமா உங்கள் தொழில்?” 

“அரசியல் ஒன்றும் அப்படி கண்ணியமான தொழி லல்ல அங்கும் கொள்ளை நடக்கிறது உள்ளூர. அதற்குக் கண்ணியமான சட்டப்போர்வை போர்த்தப்படுகிறது. எனது கொள்ளை பகிரங்கம். சட்டப் போர்வை கிடையாது. வித்தியாசம் அவ்வளவுதான்”. 

“அரசிலிருப்பவர்கள் நாட்டு வருமானத்தை மக்கள் நலனுக்குச் செலவிடுகிறார்கள்.. நீங்கள்?” 

“நானும் அப்படித்தான் கொள்ளையடிக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தருகிறேன். வேண்டுமானால் முசிறிவாசி களைக் கேட்டுப் பார்” என்ற கடல்வேந்தன், ‘நிலக்கள்ளி! வீண் பேச்சு எதற்கு? சிறிது நேரமாவது உறங்கு’ அவளைப் படுக்கவைத்தான். 

படுத்தும் அவள் உறங்கவில்லை. “உம் பேசாமல் இருங்கள். கையை எடுங்கள்” என்றாள்.

கடல்வேந்தன் மெல்ல நகைத்தான். “கையை ஏன எடுக்கச் சொல்கிறாய்? அது என்ன செய்கிறது உன்னை? என்று வினவினான் நகைப்பின் ஊடே. 

“என்ன செய்யவில்லை?” என்று முணுமுணுத்தாள் நிலக்கள்ளி. 

அடுத்து வண்டிக்குள் மௌனம் நிலவியது சில விநாடிகள். மீண்டும் “உம்” என்ற ஒலி கிளப்பினாள் நிலக்கள்ளி. 

‘”என்ன, உம்?” என்று முணுமுணுத்தான் கடல் வேந்தன். அவன் உள்ளே அசையும் ஒலி கேட்டது சேர தூதனுக்கு 

நிலக்கள்ளி வேகமாகத் திரும்பிப் படுத்து “ஏதாவது விஷமம் செய்தால் கையை உடைத்துவிடுவேன்” என்று எரிந்து விழுந்தாள். 

அந்த எரிச்சலில் ஒரு வேட்கையும் இருந்ததை சேர தூதன் புரிந்து கொண்டான். அதனால், அவன் பெரும் பக்கத்தில் சங்கடத்துக்குள்ளாகி, உட்கார்ந்திருந்த நற்கிள்ளியை நோக்கி, ‘”நற்கிள்ளி! கேட்டாயா கதையை?” என்று மெதுவாக வினவினான். 

“இல்லை” என்றான் நற்கிள்ளி, எதிரே சாலையை நோக்கிய வண்ணம். 

“எதுவுமே கேட்கவில்லையா?” 

“இல்லை.”

“உனக்குக் காது இல்லையா?*

”இருக்கிறது”. 

“பின் எப்படி கேட்காமலிருக்க முடியும்?” 

“என் காது…” 

“உம்”? 

“….கேட்கக்கூடியவிஷயங்களைத்தான் கேட்கும்.எனக்கு மூன்று காதுகள் உண்டு” என்றான் நற்கிள்ளி. 

“மூன்று காதுகளா?” வியப்புடன் வினவினான்.

“ஆம், தூதரே! சாதாரண சமயத்தில் இரு காதுகள் “கேட்காது விஷயங்களில் சம்பந்தப்படாத நான் என்ற மூன்றாவது காதும் உண்டு. அறிவுள்ளவர்களுக்கு இந்த மூன்றாவது காது அவசியம்” என்ற நற்கிள்ளி நகைத்தான். 

தூதன் சினந்தான். 

‘நற்கிள்ளி! நீ என்ன சிலேடை பாடும் புலவனென்று எண்ணமா?” என்று வினவினான், 

*எண்ணமா என்று கேட்பானேன். நான் தமிழன் சிலேடையும், நகைச்சுவையும் தமிழனுக்கு இயற்கை யாகவே உண்டு” என்ற நற்கிள்ளி, “நாளை எனது பட கவி பாடிக் காட்டுகிறேன்’ என்றும் கூறினான். 

அதுவரை நற்கிள்ளி சொன்னதையெல்லாம் பொறு மையாகக் கேட்ட சஞ்சயன், ‘நீர் கவிதான். கவி பாடுவீர்? என்று எரிச்சலுடன் சொன்னான். 

“இப்பொழுதாவது புரிந்து கொண்டீரா?” என்று நற்கிள்ளி வினவினான். 

“புரிந்து கொண்டேன். கவி கவிதை புனைவதோடு நிற்கமாட்டான். புனைந்த கவிதையைக் கேட்க ஆளைப் கொண்டால், சிக்கிக் பிடிப்பான். அப்படி யாராவது கவிதை வரி ஒவ்வொன்றையும் இரண்டு தடவை சொல்லி பிராணனை வாங்குவான்” என்ற சஞ்சயன், “நற்கிள்ளி! சடல்வேந்தன் கையால் நான் செத்தாலும் சாவேனேதவிர, உன் கவிதையைக் கேட்டுப் பிராணனை விடமாட்டேன்’ என்றான் தீர்மானமால 

நற்கிள்ளி, திரும்பிச் சஞ்சயனை நோக்கி “தூதரே! உமக்கு இலக்கியச் சுவையில்லை” என்றான். 

சஞ்சயனும் சளைக்கவில்லை. “இல்லாததால் பிழைக் கிறேன். இருந்திருந்தால் தமிழ் நாட்டில் இருக்கிற ஒவ் வொரு சுவியும் எனக்குப் பாடிக்காட்டி என்னைக் கொன் திருப்பான்” என்று தனது இலக்கிய வெறுப்பை சஞ்சயன் காட்டினான். 

அதற்கு மேல் இருவரும் போவில்லை. அவர்கள் மௌனத்தை, உள்ளிருந்து எழுந்த சிருங்கார சிற்றரவங்கள் கலைத்துக் கொண்டிருந்தன. கடல்வேந்தன், நிலக்கள்ளியின் முதுகைத் தன்னை நோக்கித் திருப்பியபோது, சரசரவென்று அவள் ஆடை ஒலித்தது. அவன் குனிந்து தனது இதழ்களால் அவள் இதழ்களைத் தீண்டியபோது ஏற்பட்ட வழவழத்த ஒலியொன்று வண்டிச் சக்கர ஓட்டத்தின் ஒலியையும் சற்றே கிழித்தது. 

அவன் ஒரு கையால் அவள் முதுகை வருடினான் இடையில் தனது இன்னொரு கையைத் தவழவிட்டான் சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் கைகள் இடம் மாறின. ஏதேதோ ஒலிகள், சிறு முனகல், காற்சிலம்பின் பரல்களின் தமி கையொன்று இன்னொரு கையைப் பிடித்துத் தள்ளிய தால் ஏற்பட்ட தட்டென்ற ஒலியொன்று, எல்லாமே. கை விளையாட்டின் பூர்வங்களாகத் தெரிந்தன தூதனுக்கு. 

“உறக்கம் வருகிறது. பேசாமலிருங்கள்” என்று சற்று உரக்கவே நிலக்கள்ளி கடைசியாகச் சொன்ன சொற்கள் தூதன் மனத்தை அலைக்கழித்திருக்க வேண்டும். அவன் நற்கிள்ளியைத் திரும்பி நோக்கி, “நற்கிள்ளி! இரண்டாம் ஜாமம் தாண்டிவிட்டது. இன்னும் ஒரு ஜாமமாவது நாம் தூங்க வேண்டாமா?” என்று கேட்டான். 

“யார் தடுத்தது உங்களை?” என்று நற்கிள்ளி கேட்டான். 

“இதைக் கேட்க வேறு வேண்டுமா?” என்று சஞ்சயன் பதிலுக்குக் கேட்டான். 

என்னிடம் “தூங்கும் புரளிகளின் சேணத்தை வாங்கிக் கொண்டான் கொடு” எனறு சேணத்தை நற்கிள்ளி. 

“தூதன் அலுப்பு மிகுதியால் வண்டியின் கூண்டின் பக்கமாகச் சாய்ந்து நித்திரை வயப்பட்டான். எத்தனை நேரம் அவன் உறங்கியிருப்பானோ அவனுக்கே தெரியாது. விழித்த போது முற்றும் புதிய சூழ்நிலையில் இருந்தான், அவனை இரு முரடர்கள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவன் எப்படி இங்கு வந்தான்?” என்று ஒருவன் கேட்டான். 

“தெரியாது” என்றான் இன்னொருவன். “அப்படியானால் இவனை என்ன செய்வது?’ என்று முதலில் பேசிய முரடன் கேட்டான். 

“அதுவும் தெரியாது” என்றான் இரண்டாமவன்.

“இவனை ஆற்றில் தூக்கிப் போட்டால் என்ன?”

“அது சரிப்பட்டு வராது”. 

“ஏன்?”

”நீந்தத் தெரிந்தால் தப்பிவிடலாம்” இதை மிகுந்த வருத்தத்துடன் சொன்னான் இரண்டாவது முரடன். 

22. அந்தரத்தில் ஒரு வாள் 

வஞ்சியிலிருந்து வந்த வண்டியில் உறங்கிவிட்ட சேர தூதனான சஞ்சயன், வேசாகக் கண்விழித்தபோது எதிரே தெரிந்த இரண்டு முரட்டு உருவங்களைக் கண்டதும் கண் களை இறுக மூடிக்கொண்டாலும், அவர்கள் உரையாடல் காதில் விழவே ஓரளவு அச்சம் மட்டுமின்றி சீற்றமும் கொண்டான். அப்பொழுது தான் இருந்த இடம் வண்டியின் முகப்பு அல்லவென்பதையும் ஏதோ கடினமான தரையில் கிடத்தப்பட்டிருந்ததையும் உணர்ந்ததால், ‘இங்கு எப்படி வந்தோம்? இந்த இடம் எது?’ என சிந்திக்கத் தொடங்கி யவன், அந்தச் சிந்தனையை மாற்றித் தன்னைக் கொல்லும் வழியைப்பற்றி விவாதிக்கும் அந்த முரடர்களை அரைக் கண்ணால் கவனிக்கலானான். இருவர் முகங்களும் மிகப் பெரிதாகவும், கரடு தட்டி இருந்ததையும் இருவருக்கும் பெரிய மீசையும், காதில் கம்பிக் குண்டலமும் இருந்ததையும், இருவரும் தலையில் முண்டாசு கட்டியிருந்ததையும் அறிந்த சஞ்சயன், இருவரும் கடலோடிகளென் பதைப் புரிந்து கொண்டாலும் அவர்கள் எதற்காகத் தன்னைக் கொல்ல முயலுகிறார்களென்பதைப் பற்றிச் இந்திக்கலானான். ஆனால் இருவர் கண்களிலும் பிரதி பலித்த கொலைக்குறிப்பைக் கொண்டு அவர்கள் தன்னைக் கொல்லாமல் விடமாட்டார்களென்பதையும் புரிந்து கொண்டு தெய்வத்தைச் சிந்தையில் எண்ணினான். 

அந்தத் தெய்வ சிந்தனை அந்த முாடர்களின் மனத்தையும் மாற்றியிருக்க வேண்டும். அவர்களில் ஒருவன் மற்றவனை வினவினான்,”இவனைக் கொல்லாமல் விட்டால் என்ன?” என்று.

மற்றவன், “மீண்டும் நேற்று மாதிரி நமது ரகசியப் பாசறையில் நுழைந்து விட்டால் என்ன செய்வது?” என்று கேட்டான் 

“இன்று காலைகூட. இவன் சுயநினைவோடு வந்ததாகத் தெரியவில்லை” என்றான் முதல் முரடன். 

“ஆம்! தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தான், கதவருகில் மூர்ச்சை போட்டு விழுந்தான்” என்று மற்றவன் பூர்த்தி செய்தான் நிகழ்ச்சியை. 

“அதிகமாகக் குடித்துவிட்டு வந்திருப்பானோ?” முதல்வன் கேட்டான். 

“குடித்ததாகத் தெரிவில்லை. அவன் வாயில் குடி நாற்றமில்லை”. 

“பின் ஏன் தள்ளாடினான்?” 

“யாரோ மயக்க மருந்தைப் புகட்டியிருக்கிறார்கள்”.

“அப்படியானால் ஆற்றைக் கடந்து எப்படி வந்தான்? மயக்கத்திலிருப்பவன் படகைக்கூட விடமுடியாதே.”

“உண்மை! இவன் படகில் வந்ததாகத் தெரியவில்லை. ஆற்றங்கரையில் சவம் போல் படுத்துக்கிடந்தான். பிறகு மெல்ல எழுந்தான், தள்ளாடினான். நடக்க ஆரம்பித்தான்….” 

“பிறகு?” 

“அவனை நான் தொடர்ந்தேன். நேராக இந்த இடத்தை நோக்கி நடந்துவந்தான். வந்து வாயிலில் விழுந்து விட்டான். பிறகுதான் வாயிற்கதவை நீ திறந்தாய்” 

இந்த உரையாடலால், சஞ்சயன் தான் அங்கு வந்த விதத்தைப் புரிந்து கொண்டான். தன் வண்டியில் உறங்கிய பிறகு கடல்வேந்தனோ அல்லது நற்கிள்ளியோ தன்னை ஆற்றங்கரையில் தள்ளிவிட்டுப் போயிருக்க வேண்டுமென் பதை உணர்ந்தான். தன்னால் கை, கால்களை அசைக்க முடியவில்லையென்பதையும், தான் மிக பலவீனமாயிருப்பு தையும் உணர்ந்து கொண்ட சஞ்சயன், ”உம் உம்” என்று பெரிதும் வேதனைப்படுகிறவனைப் போல் இருமுறை முனகினான். 

அந்த முனகலைக் கேட்ட முதல் முரடன், “தம்பீ! இவ னுக்கு சுரணை வருகிற மாதிரி தெரிகிறது” என்றான். சஞ்சயன் சற்றே உடலை நெளிப்பதைப் பார்த்து, ஆமாம்! அப்படித்தான் தெரிகிறது” என்றான் இரண்டா மவன். 

முதலாமவன் விளித்தான் மற்றவனை “தம்பீ!” என்று. ‘என்ன அண்ணே?” என்றான் மற்றவன். 

”இவன் தலையில் கட்டையால் ஓர் அடிபோட்டு மறு படியும் உறங்கச் செய்யட்டுமா?” என்று முதல் முரடன் வியலினான், 

“வேண்டாம். பாவம். அப்படி இம்சை செய்து கொல்லக்கூடாது” என்று மற்றவன் ஜீவகாருண்யத்தைக் காட்டினான். 

“வேறு என்ன செய்யலாம்?” முதல்வன் வினாத் தொடுத்தான். 

“முதலில் நினைத்தது போல் ஆற்றில் தள்ளி விடலாம்.”

“அதுவரை?” 

“வாயில் துணியடைத்துக் கட்டிவிடுவோம்.” 

“அப்படியே நதியில் அமிழ்த்தி விடலாமென்கிறாயா!” 

“ஆமாம்! அதுவும் முகத்துவாரத்தில் தள்ளிவிட்டால் சுறாக்கள் இவனைக் கடித்து விழுங்கிவிடும்.இவன் பிணமும் கரையில் ஒதுங்காது. விசாரணைக்கும் இடமிருக்காது”என்று இரண்டாமவன் சொன்ன யோசனையைக் குதூகலத்துடன் வரவேற்றான் முதல்வன். 

“தம்பீ! நீ புத்திசாலி. முன் யோசனைக்காரன். பிணம் ஒதுங்கினால் விசாரணை வரும், விசாரணை வந்தால் நமது பாசறை மர்மம் தெரிந்தாலும் தெரியலாம். வீண் வம்பு பட்சணமாக்கி விடு எதற்கு? இவனைச் சுறாக்களுக்குப் வோம். ஒரு ஜீவனுக்கு உணவளித்த புண்ணியமும் நமக்கு வரும்” என்று இரண்டாமவன் சொல்ல “சரி இவன் வாயில் துணியை அடை. இன்றிரவு இவனை முகத்துவாரத்தில் தள்ளி விடுவோம்” என்று முதல்வன் முடிவு கூறினான். 

“இரவு வரை காத்திருக்க வேண்டுமா?” என்று இரண்டாமவன் கேட்டான். 

‘விடிந்து விட்டது. இவனை நதியில் போடுவதை யாராவது பார்த்தாலும் தொந்தரவு. தவிர, இவனால் விசாரணை வந்து நமது பாசறை மர்மம் வெளியே தெரிந் தால் தலைவர் நம்மைக் கொன்றுவிடுவார்.ஆகவே எதையும் இரவில் கவனித்துக் கொள்வோம். இவன் வாயில் துணியை அடைத்து அடுத்த அறையில் உருட்டிவிடுவோம்” என்று முதல்வன். சொல்ல, இரண்டாமவன் சேரதூதனைப் பிணைக்கும் பணியில் இறங்கினான். 

அவன் மார்புமீது ஏறி உட்கார்ந்து வாயில் துணியைத் துருத்தி அடைத்தான், பிறகு, வாய் வேறொரு துணி யால் பலமாகக் கட்டப்பட்டது. கைகால்களும் பிணைக்கப் பட்டன. அவர்கள் இருவரும் விளைவித்த இம்சையைத் தாங்க முடியாத சஞ்சயன் விழித்தான். திமிறினான். பெரும் முனகலாக முனகினான். ஆனால் அதையெல்லாம் லட்சியம் செய்யாத அந்தஇருமுரடர்களும் அவனைக் கட்டித் தூக்கிப் பக்கத்து அறைக்கு எடுத்துக்கொண்டு போய்த் தரையில் கிடத்தினார்கள். கிடத்திய பின் முதல் முரடன் சொன்னான். ‘டேய்! பேசாமல் படுத்திரு. நடுப்பகலுக்கு முன்பே உனக்கு உணவு தருகிறோம். நாங்கள் யாரையும் பட்டினி போட்டுக் கொல்ல மாட்டோம்” என்று சொல்லி விட்டு, “இதோ கூரையைப் பார்” என்று கூரைக்காகக் கையை உயர்த்தியும் காட்டினான். 

மேலே இருந்த மெல்லிய கயிற்றில் கட்டிய பளபள வென்ற கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. மேலே இருந்த சிறு சாளரத்தின் மூலம் வந்த காற்றில் அதுலேசாக ஆடவும் செய்தது. அந்த மெல்லிய கயிறு அறுந்து கூர்மையான அந்த வாள் தன் கழுத்தின்மீது எந்த விநாடியிலும் விழலாமென் பதையும், அப்படி விழுந்தால் அதன் கூர்மை தனதுகழுத்தை அறுத்துவிடுமென்பதையும், உணர்ந்த சஞ்சயன் மிரண்ட விழிகளை இரு முரடர்கள்மீதும் திருப்பினான். 

முதல்முரடன் புன்முறுவல் செய்தான். எபயப்படாதே, அந்தக் கயிறு மெல்லியதானாலும் உறுதியுடையது, அறுந்து விழாது. அப்படியே விழுந்தாலும் அது உனக்கு நல்லது. சுறாமீனுக்கு முழு நினைவுடன் இரையாவதைவிட இது வரவேற்கத் தக்க மரணம் என்று கூறி அறைக் கதவைச் சாத்திக் கொண்டு இரண்டாவது முரடனுடன் வெளியே சென்று விட்டான். 

அந்த இரு கொலைகாரர்களும் சென்றதும் தானிருக்கு மிடத்தைப் பற்றியும், தனது நிலைபற்றியும் தெளிவாக இந்திக்க முற்பட்டான் சஞ்சயன். அந்தச் சிந்தனைக்கு உதவி செய்யக் கடவின் பேரலைகளின் ஓசை வெகு அருகில் அதனால்தான் மேலைக் சேட்டது சஞ்சயன் காதுகளில் கடலோரத்திலுள்ள ஏதோ ஒரு குடியிருப்பில் இருப்பதை யும், கிட்டத்தட்ட அந்த இடம் சுள்ளியாற்று முகத்துவாரத் தில் இருக்க வேண்டுமென்பதையும் உணர்ந்தான் சஞ்சயன். யவனர் குடியிருப்பு கடலோரத்தில் இருப்பவை ஒன்று என்பதையும், மற்றொன்று அராபியர் குடியிருப்பு என்பதை யும் ஊகித்துக் கொண்ட சஞ்சயன், “இரண்டு குடியிருப்பு களில் இது எது?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டான். தன்னைப் பிணைத்த பயங்கர மீசையையும், காதணியையும், முண்டாசையும் எண்ணிப் பார்த்து ‘அநேகமாக இது அராபியர் குடியிருப் பாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தீர்மானமும் செய்து நண்பர்கள் கொண்டான். ‘அராபியரும், சேரர்களுக்கு தானே?” அப்படியிருக்க என்னைக் கொல்ல இவர்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். 

இப்படிச் சிந்தனையை வளர விட்டுக் கொண்ட சஞ்சயன், நேரம் வேகமாக ஓடுவதை அறிந்தான். பொழுது நன்றாக ஏறியதும் தானிருந்த வாயிலில் ஆள்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டதை உணர்ந்தான், தனது அறைக்கு வெளியே யார் யாரோ நடமாடுவதையும் திடீரெனச் சிரிப்பொலி பயங்கரமாகக் கேட்டதையும் எண்ணி, “எதற்காக நகைக்கிறார்கள்?” என்று வினவிக் கொண்டான். இடையிடையே கூரையை நோக்கித் தனது கழுத்துக்கு நேரில் தொங்கும் கூரிய பெருவாளையும் பார்த்துத் திகிலடைந்தான். 

நேரம் ஓடஓட அறைக்கு வெளியே கூச்சல்அதிகரித்தது. பலர் சேர்ந்து ஏதோ விவாதிப்பதும் தெரிந்தது. யாரோ ஒருவன் கேட்டான். “ஓற்றனா? நமது பாசறையிலா?” என்று.

”ஆம் எசமான்!” என்று ஒலித்தது முதல் முரடன் குரல், 

“இங்கு யாரும் அப்படி வர முடியாதே?” என்று வினவினான் எசமான் என அழைக்கப்பட்டவன். 

“தட்டுத்தடுமாறி நினைவிழந்து வந்து இங்கு விழுந்து விட்டான். தாங்கள் உள்ளே தூக்கி வந்தோம்” என்றான முதல் முரடன். 

“எங்கிருந்து வந்தான்?” என எசமான் கேட்டான். பாசறைக்கு நேர் எதிரில் உள்ள ஆற்றங்கரையி லிருந்து” என்றான் முதல் முரடன். 

“அவனை அங்கேயே ஏன் வெட்டிப் போடவில்லை?”

“ஏதோ உளறிக் கொண்டே வந்தான்.”

“அதனால்?” 

”அந்த உளறலில் தங்கள் பெயரும் இருந்தது”.

எசமான் என்பவன் சிந்தித்தான் சில விநாடிகள் “என் பெயரையா உளறினான்?” என்று வினவினான் முடிவில். 

”ஆம் எசமான்!” திட்டமாயிருந்தது முதல் முரடன் பதில் .

“ஆம் எசமான்!” இரண்டாவது முரடனும் ஓப்புக் கொண்டான். 

“அப்படியானால் இவன் விவரமறியத்தான் வந்திருக்கிறான்”. 

“சந்தேகமில்லை எசமான்.” 

”அவன் எங்கே இப்பொழுது?” 

“பக்கத்து அறையில் கிடத்தி இருக்கிறோம். வாயில் துணியடைக்கப்பட்டு, கைகால்கள் பிணைக்கப்பட்டு படுத்திருக்கிறான்.’ 

”அதாவது.. ?” 

“கத்திக்கு நேர் கீழே”. 

“பலே! பலே!” என்று உற்சாகப்பட்ட எசமான் “யவனர்களின் சூட்சும புத்தி இவர்களுக்குப் புரியட்டும். டெமாகிள்ஸ் ஸ்வோர்ட்! அதனடியில் இவன். அப்படி சாக வேண்டுமானால் இவன் கொடுத்து வைத்தவன்” என்று சஞ்சயன் விதியைப் பற்றிப் பாராட்டினான். 

அதைக் கேட்ட சஞ்சயன் மனம் கொதித்தான்.சாவதில் கொடுத்து வைப்பது வேறு இருக்கிறதா?” என்று உள்ளூர வெறுத்தான். 

வெளியே மேலும் உரையாடல் தொடர்ந்தது. “டெமா கிள்ஸ் கத்தியால் இறக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எசமான்! ஆனால், அந்தப் பாக்கியம் இந்தத் கத்தியை மெல்லிய வலுவான தமிழனுக்குக் கிடைக்காது. கயிற்றால் கட்டியிருக்கிறேன். அறுந்து விழாது. அவனை அச்சுறுத்தவே அங்கு படுக்க வைத்திருக்கிறேன். இரவு ரகசியக் கூட்டம் முடிந்ததும் இவனைப் பரலோகம் அனுப்பி விடுகிறேன்” என்றான் முதல் முரடன். 

அத்துடன் உரையாடல் முடியுமென்று நினைத்த சஞ் சயன், திடீரென வியப்பின் வயப்பட்டான், “எங்கே அந்தப் புது ஒற்றன்?” என்று பலத்த குரலொன்று அதட்டலாகக் கேட்டது. 

அந்தக் குரலைக் கேட்ட சஞ்சயன் பேரதிர்ச்சி அடைந் தான். அந்தக் குரல் யவனனான கிக்ளஸியஸின் குரல்! அந்தக் குரலைக் கேட்டதும் ஏதோ பெரிய விபரீதத்திற்கு வழிவகுக்கப்படுகிறது என்பதை சஞ்சயன் புரிந்து  கொண்டான். அது என்ன என்பதை அன்றிரவில் அறிந்தபோது தானிருந்த நிலையில் நிகழவிருக்கும் பேராபத்தைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று எண்ணினான் சஞ்சயன். 

23. யூசப் 

கடல்வேந்தன் உப தளபதியும் யவனனுமான க்ளேஸியஸின் குரலைக் கேட்டதும் சஞ்சயன் வியப்பை மட்டுமின்றி அச்சத்தையும் அடைந்தான். கடல்வேந் தனின் அடக்கும் கரம் இல்லாதபோது. க்ளேஸியஸ் எதையும் செய்யத் துணிவானென்பதை ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த சேரதூதன், ‘அராபியர் குடியிருப்பில் இவன் எப்படி வந்தான்? இவனுக்கும் அராபியர்களுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று தனக்குள் கேள்விகளை எழுப்பிக் கொண்டாலும் அவற்றுக்கு விடை காண முயற்சி செய் யாமல் தான் யார் என்பதை அறிந்தால் க்ளேஸியஸ் தன்னைக் கொலை செய்ய விடமாட்டானென்பதை உறுதி யாக நம்பியதால் ஓரளவு துணிவும் அடைந்தான். அந்தத் துணிவு எத்தனை அர்த்தமற்றது என்பதை அடுத்த சில நிமிடங்களில் புரிந்து கொண்டான். வெளியறையில் நின்ற க்ளேஸியஸ், “எங்கே அந்தப் புது ஒற்றன்?” ன்று கேட்டதும் அல்லாமல், “யாரவன்?” என்றும் விசாரித்தான். 

“அவன் யாரென்று தெரியவில்லை” என்றான் முதலில் எசமான் என முரடர்களால் அழைக்கப்பட்டவன். 

“அப்படி விவரம் தெரியாதவனை இங்கு ஏன் சிறை வத்தீர்கள்?” என்று க்ளேஸியஸ் வினவினான். 

“அவனை வேண்டுமென்று சிறை வைக்கவில்லை. அவனாக இங்கு வந்து மயக்கமாக விழுந்து விட்டான், ஆகவே அறையில் கிடத்திப் பூட்ட வேண்டியதாயிற்று” என ஈசமான் என்பவன் பதில் சொன்னான். 

“யூசப்! உன்னைப் புத்திசாலி என நினைத்தேன். யாரென்று தெரியவில்லையென்றால் அவனை ஆற்றில் தூக்கிப் போடுவதுதானே?” எனக் கேட்டான் க்ளேஸியஸ். 

“இருட்டினதும் போடலாமென்றிருந்தேன்” என யூசப் பதில் சொன்னான். 

“இருட்டாவிட்டால் என்ன? கோணியினால் சுட்டிப் போட்டிருக்கலாமே?” என யோசனை சொன்னான் க்ளேஸியஸ்.

“போட்டிருக்கலாம். ஆனால் கோணியில் சுட்டியதும் இவன் கை கால்களை ஆட்டினால், உடலை நெளித்தால் உயிருள்ளவனை ஆற்றில் போடுவது செம்படவருக்குத் தெரியும். அவர்கள் ஒருவேளை இவனை மீட்கலாம்” என்றான் யூசப்.

“இவனை இரண்டாக வெட்டிக் கட்டினால்?” என்றொரு கேள்வியை வீசினான் க்ளேஸியஸ், 

“அப்பொழுது நாம் செய்யும் கொலை வெளிப்படையாகத் தெரியும். விஷயம் விசாரணைக்கு வரும்” என்றான் யூசப். 

இதைக் கேட்டு சில விநாடிகள் சிந்தித்த க்ளேஸியஸ், “யூசப்! நீ சொல்வதும் சரி, புரட்சித்தறுவாயில் இந்தத தொல்லை எதற்கு?” எனக் கூறிவிட்டு, “யவனர்களின் புது அதில் நவீன யவனர் ஆயுதங்களும் வந்திருக்கின்றன. மரக்கலம் வந்துவிட்டது, அதில் நவீன புது ஆயுதம் தரித்த யவனர்களும், இங்குள்ள அராபியர்களும் இணைந்தால் இந்த முசிறியைப் பிடிப்பது வெகு சுலபம். அமாவாசை இருட்டில் அழும்பில்வேளின் அரண்மனையைச் சூறையா சிறு படையையும் நிர்மூலமாக்கிவிட்டால் இந்த முசிறி, யவனர்கள் வசமாகிவிடும். பிறகு அராபியருக்கு சுதந்திரமாக இருக்கவும் வாணிபம் செய்யவும் ஒரு பகுதி யைத் தருவோம்” என்ற க்ளேஸியஸ், “எதற்கும் இந்த புது ஒற்றனைப் பார்க்கிறேன். எங்கே அவன்?” என்று கேட்டான். 

“அடுத்த அறையில்” என்ற யூசப், க்ளேஸியஸை சஞ்சயன் இருந்த அறைக்குள் அழைத்து வந்தான். 

க்ளேஸியஸ் உள்ளே வந்ததும் தனது விடுதலை நிச்சய மென்பதையும், புரட்சிக்கு வித்திடும் க்ளேஸியஸ் சேர தூதனான தன்னைக் கொல்ல அனுமதிக்க மாட்டானென் றும் நினைத்த சஞ்சயன் மெல்லக் கண்களை விழித்தான். உள்ளே வந்த க்ளே ஸியஸ் சஞ்சயனை உற்று நோக்கி வீட்டு சப்பைத் திரும்பிப் பார்த்தான், “இவன் யார்?” என்று ஏதுமறியாதவன் போல் வினவினான். 

சஞ்சயன் உள்ளம் கொதித்தது. ‘அடப்பாவி! நான் யாரென்பது உனக்குத் தெரியாதா?’ என்று உள்ளூர வினவி உடலையும் முறுக்கிக் கொண்டான். 

க்ளேஸியஸின் கேள்விக்கு யூசப் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. “இங்கு மயக்கமாய் வந்தபோது கூட உங்கள் பெயரையும் என் பெயரையும் உளறியதாகக் கேள்வி” என்றான் யூசப், 

க்ளஸியஸ் சஞ்சயனை ஊன்றிக் கவனித்தான். அவன் கண்கள் ஈவிரக்கமற்று இருந்தன. “என் பெயரைச் சொன்னானா? எப்படித் தெரிந்தது இவனுக்கு என் பெயர்?” என்று விசாரித்தான். 

அந்த பெரிய புரட்டைக் கேட்டதும் சஞ்சயன் உள்ளம் வெடித்துவிடும் நிலைமைக்கு வந்தது. “நான் மட்டும் இந்த ஆபத்திலிருந்து விடுதலையடைந்தால் உன்னை வெட்டி கடற்கரைக் கழுகுகளுக்கு இரையாகப் போட்டு விடுவேன்” என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டு கண் களில் சீற்றத்தையும் காட்டினான். 

அந்தச் சீற்றத்தைக் காணவே செய்த க்ளேஸியஸ் குரூரமாகப் புன்முறுவல் செய்து “இவன் கோபிக்கிறான்’ என்றான் யூசப்பை நோக்கி. 

“மடியும் மாந்தர்க்கு சிந்தனைச் சுதந்திரம் உண்டு’ என்றான் யூசப், 

அதைக் கேட்ட க்ளேஸியஸ் அசுரச் சிரிப்பாகச் சிரித்தான். ‘இவனை இன்றிரவு என் மரக்கலத்துக்கு அனுப்பிவிடு” என்று சொன்னான் சிரிப்பின் ஊடே. 

யூசப்பின் முகத்தில் சிந்தனைக்களை படர்ந்தது. “தங்கள் மரக்கலமென்றால்?” என்று விசாரித்தான். 

“யவனர் மரக்கலம்” என்றான் க்ளேஸியஸ். “புதிதாக வந்திருக்கிறதே அதுவா?” 

“ஆம்” 

“தங்கள் முந்திய மரக்கலம்?” 

“கடல்வேந்தன் மரக்கலமா?” 

”ஆம்” 

“அதில் நான் உபதலைவன் தானே?”

“இதில்?” 

“தலைவன்” 

“அப்படியா!” என்று வியப்புடன் வினவினான் யூசப். 

“ஆம் யூசப்பு இப்பொழுது எனக்குச் சுதந்திரமாக ஒரு மரக்கலம் இருக்கிறது. யவனர் மரக்கலம். சேரர் மரக்கலத்தில் இல்லாத பல வசதிகள் என் மரக்கலத்தில் உண்டு. சித்திரவதைக்குப் புது யந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் இவனை மாட்டி உருட்டினால் இங்குள்ள பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் அறியலாம். சேரன் ரகசிய படை வீடுகளையும் அறியலாம்” என்ற க்ளேஸியஸ் “ஆகவே இவனைக் கொல்ல வேண்டாம். இரவில் மரக்கலத்துக்கு அனுப்பிவிடு” என்று உத்தரவிட்டுச் சென்றான். 

அவன் சென்ற பிறகு சஞ்சயனைக் கவனித்த யூசப் “அடே ஒற்றனே! உனக்கு அடிக்கிறதடா யோகம். யவனர் சக்கரத்தில் மாட்டப் போகிறாய். உன் எலும்புகள் அணுவாய் முறிக்கப்படும். சுறாக்கள் கடித்துச் சாவதைவிட அந்த எலும்பு முறிக்கும் யந்திரம் அளிக்கும் இம்சை நரக வேதனை” என்று கூறிவிட்டு, வெளியே சென்றான். 

பிறகு தனிமையில் விடப்பட்ட சஞ்சயன் அந்தரத்தில் தலைக்கு மேலே தொங்கிய வாளைப் பார்க்கவும் இஷ்டப் படவில்லை. ‘அது விழுந்து கழுத்து அறுந்து சாவது யவன சக்கரச் சிகிச்சையைவிட எத்தனையோ மேல்’ என்று நினைத்தான். சக்கரத்தை நினைத்த பீதியால் பெருமூச்சும் விட்டான். 

இரவு ஏறிக் கொண்டிருந்தது. தகுந்த காலத்தில் அவன் வாயிலிருந்த துணி எடுக்கப்பட்டு உணவும் அளிக்கப் பட்டது. அப்படி தன்னை தூக்கி வந்த முரடர்கள் வாய்த்துணியை எடுத்த நேரத்தில் அவன் கிடந்த இடத் துக்கு எதிரே யூசப் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்ததைக் கவனித்தான் சஞ்சயன், யூசப்பின் உத்தரவின் மேல் சஞ்சயனுக்கும் ஓர் ஆசனம் போடப்பட்டு அதில் கை கால் கட்டுகளுடன் உட்கார வைக்கப்பட்டான் சஞ்சயன் பிறகு அவனுக்கு உணவு ஊட்டப்பட்டது. மெல்ல இரு கவளங்களை அவன் அருந்தியதும், “சிறிது மது கொடுங்கள்’ என்று உத்தரவிட்டான் யூசப். மதுவை அருந்தியதும் “நீ யார்? எதற்காக என்னைக் கொல்லப் பார்க்கிறாய்?” என்று சற்றுத் துணிவுடனேயே விசாரித்தான் சஞ்சயன். 

“நான் யாரென்பதைப் பற்றிக் சுவலையில்லை. இந்த முசிறியில் சேரன் ரகசியமாக வைத்திருக்கும் சூறாவளிப் படை எங்கிருக்கிறது?” என்று கேட்டான் யூசப்.

“எனக்கெப்படித் தெரியும்?” என்று சஞ்சயன் கேட்டான். 

“உனக்குத் தெரியும்! க்ளேஸியஸிடம் சொல்வதைவிட என்னிடம் சொல்லிவிடுவது நல்லது” யூசப் இதைத் திட்டமாகச் சொன்னான். 

“என்ன நல்லது? 

“உன்னைக் காப்பாற்ற என்னால் முடியும்” 

“சொல்லாவிட்டால்?” 

“சொல்லாவிட்டால் உன்னைக் க்ளேஸியஸிடம் அனுப்பிவிடுவேன். அங்கு எப்படியும் ரகசியத்தைக் கக்கி விடுவாய்”. 

“என் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வராது என் அரசனுக்கு நான் துரோகம் செய்ய துரோகம் செய்ய மாட்டேன்” என்று அறிவித்தான் சஞ்சயன். 

யூசப் சிறிது சிந்தித்தான். பிறகு தன்னுடன் வந்திருந்த இரு முரடர்களையும் வெளியே செல்லும்படி சைகை செய்தான். அவர்கள் சென்றதும் கதவையும் சாத்திவிட்டுப் பழையபடி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு “இப்பொழுது நாம் தனிமையிலிருக்கிறோம். சொல்லிவிடு”என்று கேட்டான். 

“ராஜத்துரோகம் செய்வதைத் தனிமையில் செய்தாலென்ன, பகிரங்கமாகச் செய்தாலென்ன? என்னைச் சித்திரவதைக்கு அனுப்பிவிடு. எலும்பு முறிந்து சாவேன். ஆனால் அரசர் படை ரகசியத்தைச் சொல்ல மாட்டேன்” என்று திட்டமாக அறிவித்தான் சஞ்சயன். 

அதைக் கேட்ட யூசப் வெளியே சென்று சில நறுக்கு இலைகளையும், எழுத்தாணியையும் கொண்டு வந்து சஞ்சயன் கைக்கட்டுகளை அவிழ்த்து “சொல்ல வேண்டாம். எழுதிவிடு” என்றான் 

“எனக்கு எதவும் தெரியாது” என்று ஒரே அடியாய் மறுத்தான் சேரதூதன். 

அடுத்து யூசப் சொன்ன வார்த்தைகள் பெரும் திகைப்பைத் தந்தன சஞ்சயனுக்கு. “சஞ்சயா! நீ யாரென்பது எனக்குத் தெரியும். நான் கேட்ட விவரங்களை எழுதிவிடு” என்றான். 

தன் பெயரை யூசப் உச்சரித்ததால் திகைத்த சஞ்சயன் கேட்டான், “நான் எழுதாவிட்டால்?” என்று. 

“எழுத்தாணியால் உன் கண்களிரண்டையும் குத்தி எடுத்துவிடுவேன்” என்று சர்வ சாதாரணமாக அறிவித்தான் யூசப். 

24. யூசப்பின் தந்திரம் 

அரபு நாட்டவனான யூசப் தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததையும், சேரர் படை ரகசியத்தைச் சொல்லுமாறு கேட்டதையும், எழுதியாவது கொடுக்கா விட்டால் எழுத்தாணியால் கண்களிரண்டையும் தோண்டி விடுவ தாகப் பயமுறுத்தியதையும் நினைத்த சஞ்சயன் அச்சத் தின் உச்சத்தை அடைந்தான். ‘உயிர் போனால் பாதக மில்லை. கதை அத்துடன் முடிந்துவிடும். ஆனால் கண் போய்க் குருடனாகக் காலம் கழிக்க வேண்டுமே’ என்ற எண்ணத்தால் பதறிய சேரதூதன் சரி யூசப்! நீங்கள் சொன்னபடி படை ரகசியத்தை எழுதிக் கொடுக்கிறே னென்று வைத்துக் கொள். எழுதி வாங்கிக் கொண்டு என்னை க்ளேயஸிடம் அனுப்பமாட்டாயென்பது என்ன நிச்சயம்?” என்று வினவினான். 

யூசப் தனது தாடியைச் சிறிது தடவிக் கொண்டு. புன்முறுவல் செய்தான். “ரகசியத்தை நான் அறிந்தபின் க்ளேஸியஸிடம் உன்னை அனுப்ப அவசியமென்ன? எனக்குக் கிடைத்த ரகசியத்தை க்ளேஸியஸிடம் பங்கு போட்டுக் கொள்வதில் என்ன பயனிருக்கிறது?” என்று வினவவும் செய்தான் 

சஞ்சயன் சிந்தித்தான் சில விநாடிகள். பிறகு கேட் டான்: “இந்த ரகசியத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?” என்று. 

“இந்த முசிறியைப் பங்கு போட்டுக் கொள்வதில் வியாபாரம் பேசுவேன். ரகசியத்தை அறிந்ததால் என்கை ஓங்கி நிற்கும்” என்று விளக்கினான் யூசப்.

இதைக் கேட்ட சஞ்சயன் மிகவும் வியப்படைந்தான். திருட்டுக்குள் இன்னொரு திருட்டும், வஞ்சகமும் கலந் திருப்பதைக் கண்டு “திருடர் கதி என்றைக்கும் இது தான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, வாய்விட்டுப் பேசத் தொடங்கி, ‘சரி யூசப்! ரகசியத்னத எழுதித் தருகிறேன், ஆனால் என்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று ஒரு நிபந்தனையும் போட்டான். 

“அப்படியே” என்று யூசப் ஒப்புக் கொண்டான்.

“விடுதலை செய்வதாகப் பிரமாணம் செய்வாயா?”

“ஆகா! எத்தனை பிரமாணம் வேண்டுமானாலும் செய்கிறேன்.”

“எத்தனை பிரமாணங்கள் வேண்டுமானாலும் செய்வாயா?” 

“ஆம்” 

“அப்படியானால் பிரமாணத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?” 

“இல்லை” என்று திட்டமாக அறிவித்த யூசப், தனது ஆசனத்தை விட்டு எழுந்து அந்த அறையில் இப்படியும் அப்படியும் உலவினான் சில விநாடிகள். பிறகு சஞ்சயன் எதிரே நின்று சொன்னான், “சஞ்சயா! நான் சொல்வதை நிதானமாகக் கேள். யவனனான க்ளேஸியஸ், முசிறியை யவனர் துறைமுகமாக ஆக்கத் தீர்மானித்திருக்கிறான். அதற்கு நாங்கள் ஒப்பவில்லை. மற்றவர்களுக்கு ஆசையிருப்பதுபோல் அராபியர்களுக்கும் ஆசை உண்டு. நாங்கள் இதை ஆக்ரமிக்க விரும்பவில்லை. ஆனால் முழு வாணிபமும் எங்களிடமிருக்க வேண்டுமென்று நினைக் கிறோம். யவனர்கள் சூழ்ச்சிகளை முறியடித்தால்தான் அது முடியும். அத்துடன் சேரர் கையும் சிறிது பலவீனப் பட்டால் நாங்கள் சேரருடன் வாணிபம் பேசுவோம். சேர சாம்ராஜ்யத்தில் யவனர் குடியிருப்பு போன்ற ஒரு கூட்டம் ராஜ்யத்தைக் கவர்த்து பிழைக்க முடியாது. ஆனால் சூறையாடலாம். இங்குள்ள செல்வத்தையெல் லாம் ஏற்றிக்கொண்டு சொந்த நாடு செல்லலாம். யவனர்கள் தாங்கள் எங்கு உறைகிறார்களோ அந்த நாட்டுடன் இணையாதவர்கள். அராபியர் அப்படி யல்ல. உறையும் நாடு அவர்கள் நாடு, அதில் ஒரு பகுதி யிலாவது ஆதிக்கம் பெற விரும்புவார்கள். யவனர் இருக்கும் வரை நாங்கள் ஏதும் செய்ய முடியாது. நீ ரகசியத்தைச் சொன்னால் அதை மாற்றி க்ளேஸியஸிடம் சொல்லி அவனை சேரர் தூக்குமேடைக்கு அனுப்பிவிடு வேன். அப்புறம் இங்கு நான் வைத்தது சட்டம், அழும் பில்வேள்கூட இங்கு இருக்க வேண்டாம். வஞ்சிக்குப் போகலாம்” 

இப்படி தன்னுடைய திட்டத்தை விளக்கியதும் சஞ்சயன் உள்ளூர பிரமித்தான், ‘க்ளேஸியஸைவிட இந்த அராபியன் பெரிய நுழை நரி’ என்று மனத்துள் சொல்லிக் கொண்டான். க்ளேஸிபஸ் எதிர்பார்க்கும் கடல்வெற்றி நிறைவேறுவது குதிரைக் கொம்பானாலும் அராபியன் முசிறியின் வாணிப ஆதிக்கத்தையும், அதன் மூலம் அரசியல் ஆதிக்கத்தையும் அடைவது பிரமாத மல்ல என்று நினைத்தான். ஆனால் இத்தனையிலும் இன் னொரு யோசனையும் தோன்றியது அவனுக்கு. “இவர்கள் கடல்வேந்தன்’ ஒருவன் இருக்கிறானென்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையே. அவனை எப்படி சரிக்கட்டு வதாக உத்தேசம்? முசிறியின் கடல்மன்னனாக இருக்கும். வேந்தனை உதாசீனம் செய்து எந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்?” என்று உள்ளூர வினா எழுப்பிக் கொண்டான் 

யூசப் பெரிய கண்களால் நகைத்தான் சஞ்சயனை நோக்கி, “சஞ்சயா! கடல்வேந்தனைப் பற்றிக் கவலைப்படாதே! இதே நேரத்தில் அவன் யவனர் மரக்கலத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறான் அங்கிருந்து திரும்புவது துர்லபம்” என்றும் சொன்னான்.

இதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்தது போன்ற உணர்ச்சியை அடைந்த சஞ்சயன், “யூசப் என் கைகளை அவிழ்க்கச் சொல். ஓலையையும் எழுத்தாணியையும் எடு” என்றான். 

யூசப்பின் உத்தரவின்மேல் சஞ்சயன் கைகள் அவிழ்த்து விடப்பட்டன. கால்களும் சுதந்திரம் பெற்றன. எழுத்தாணியை எடுத்துக்கொண்டு சஞ்சயன் ஓலையில் வரிகளைப் பொறிக்கலானான். சில வரிகளை எழுதிக் குறிப்புக் கோடு களையும் வரைந்தான். பிறகு யூசப்பை அழைத்து “இப்படி வா யூசப்! இதை நன்றாகக் கவனி, வஞ்சியிலிருந்து வரும் நெடுஞ்சாலையை அடுத்து ஒரு சிறு குறுக்குப் பாதை வருகிறது. அது ஒரு மலைக்காட்டுக்கு அழைத்துச் செல்லும், அந்த மலைக்காட்டில் சேரர் புரவிப்படை இருக்கிறது. அதிலிருந்து வலப்புறம் திரும்பினால் இன்னொரு போகும். அதன் முடிவில் சேரர் யந்திரப்படை இருக்கிறது; இரண்டிலும் வீரர் அதிகமில்லை. சுமார் ஆயிரம் பேருக்குள் தானிருக்கிறார்கள். ஆனால், எண்ணிக்கையை நினைத்து மகிழ்ந்து விடாதே. அங்கிருக்கும் ஒவ்வொரு வீரனும் பத்து வீர களுக்குச் சமம். அங்குள்ள யந்திரங்கள் ஒரு படையை அழிக்கும்” என்று விளக்கினான்: “இந்தக் கோடுகள் பாதை களைக் குறிக்கின்றன. இந்தப் புள்ளிகள் பாசறைகள் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன என்றும் சொன்னான். 

யூசப்பின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. “சஞ்சயா! உன் அறிவைப் பாராட்டுகிறேன். நீ படைகளின் இடத்தைச் சொன்னதால் எந்த ஆபத்தும் கிடையாது. இதை மாற்றி நானே எழுதி க்ளேஸியஸை என் வலையில் சிக்க வைக்கி றேன். பிறகு அவனையும் யவனரையும் இங்கிருந்து ஏற்றுமதி செய்வது ஒரு பிரமாதமல்ல. அவனைக்கொள்ளையடிக்க விடுகிறேன் நான். அதில் பங்கு வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறினான் மகிழ்ச்சி நிரம்பிய குரலில்.

அடுத்துக் குரல் கொடுத்தான், “யாரங்கே?” என்று இரண்டு முரடர்களும் உள்ளே வந்ததும், “இவருடைய கால்களை மட்டும் கட்டுங்கள். கைகளைக் கட்ட வேண்டாம்” என்று. 

“ஏனிப்படி?” என்று கேட்டான் சஞ்சயன். 

“கைகள் ரகசியத்தை எழுதி உதவியிருக்கின்றன. கால்கள் என்ன உதவி செய்தன?” என்று யூசப் வினவி பெரிதாக நகைத்தான் 

“நீ இஷ்டப்பட்டால் கால்களும் உதவி செய்திருக்கும்” என்றான் சஞ்சயன் கபடமாக. 

“எப்படி?” யூசப் வினவினான். 

“வழியை நானே காட்டியிருப்பேன்”. 

”உம், இதுவும் நல்லதுதான். ஆனால் எனக்கு வேண்டாம். அதை க்ளேஸியஸுக்குக் காட்டு!” 

“க்ளேஸியஸுக்கா?” 

“ஆம்”. 

“அவனுக்கா நான் வழிகாட்ட வேண்டும்?” 

“அவள் தானே இந்தப் படைகளைத் தாக்கப் போகிறான்.” 

 “வாணிபம் பேசப் போவதாகச் சொன்னாயே?”

“அதற்கும் உன்னை க்ளேஸியஸிடம் அனுப்புவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உன்னை ஒப்படைப்பதற்கு முன்பாக வியாபாரம் பேசுவேன் என்ற யூசப், சஞ்சயன் கால்களைக் கட்டச் செய்தான். பிறகு எழுந்து “நாளை விடியற்காலையில் நீ க்ளேஸியஸின் கப்பலுக்குப் பயணமாகிறாய்” என்று சொன்னான். 

“நீ கொடுத்த வாக்குறுதி?” 

“நிலை நிறுத்துகிறேன்.” 

“எப்படி?” 

“உன்னைக் கடற்கரை முகப்பில் அவிழ்த்து சுதந்திரமாக விட்டு விடுவேன். பிறகு தப்புவது உன் சாமர்த்தியம், கண் குத்தி பாம்பு போல் உன் வரவை க்ளேஸியஸ் பார்த்துக் கொண்டிருப்பான்” என்ற யூசப் பெரிதாக நகைத்தான். 

அதே இரவில் நடுநிசியில் யவனரின் மரக்கலத்தின் நூலேணியில் கடல் வேந்தன் ஏறிக்கொண்டிருந்தான். வாயில் குறுவாளைக் கவ்விக் கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்கொரு முறை தளத்தை அண்ணாந்து பார்த்து நூலேணியில் ஏறினான். நூலேணியின் உச்சியை அடைந்ததும் இருகைகள் அவன் கைகளுக்குப் பிடி கொடுக்க, ஏறித் தளத்தில் குதித்தான் கடல்வேந்தன். 

25. இன்னும் ஒருவன் 

யவனர் மரக்கலத்தின் மத்தியில் தெரிந்த ஒரு சிறு விளக்கைத் தவிர வேறு விளக்குகள் ஏதும் ஏற்றப்படாத தால் அந்த மரக்கலத்தின் தளத்தில் இருள் பெரிதும் அடர்ந்து கிடப்பதைக் கவனித்த கடல்வேந்தன் திருப்திக்கு அறிகுறியாகத் தலையை அசைத்துத் தனக்குக் கை கொடுத்த நிலக்கள்ளியை நேர்க்கி, “நிலக்கள்ளி! நீ இந்த மரக்கலத்தில் தைரியமாக உலாவலாம். மாலுமிகள் எல்லாருமே கரைக்குப் போய்விட்டார்கள். அப்படியே யாராவது நாலைந்துபேர் இருந்தாலும் அவர்களைச் சமாளிப்பது கஷ்டமில்லை” என்று சொன்னான், 

அவன்பக்கத்தில் நின்றிருந்த நிலக்கள்ளி, “மிக விந்தையாயிருக்கிறது. இத்தனை பெரிய மரக்கலத்தை அனாதரவாக விட்டு எல்லா மாலுமிகளுமா கரைக்குச் சென்றிருப்பார்கள்? நம்புவது கஷ்டமாயிருக்கிறதே” என்றாள் மெதுவாக. 

“இன்றிரவு கரையிலுள்ள யவனர்சேரியில் யவனர் ரகசியக் கூட்டம் ஒன்று நடக்கிறது. அதற்கு எல்லாரும் போயிருக்கிறார்கள். இந்த மரக்கலம் போர் மரக்கலம் என்பதே மறைக்கப்பட்டு ஏதோ வாணி பத்துக்குப் பொருள் கொணர்ந்திருக்கும் வணிக மரக்கலமாக அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரக்கலத்தின் தலைவன் இதை வணிக மரக்கலமென்று நிருபிக்கப் பல பல வணிகப் பரிசாகக் இன்று தந்தைக்கு பொருள்களை உன் நான்கு நாள்கள் மரக்கலம் கொடுத்திருக்கிறான். இந்த இங்கிருந்து வியாபாரம் நடத்த உன் தந்தையும் அனுமதித்திருக்கிறார்.” என்று கூறிய கடல்வேந்தன் “இன்னும் இரண்டு நாள்களில் முசிறித் துறைமுகத்தில் இன்னும் இரு மரக்கலங்களை எதிர்பார்க்கிறேன்” என்றும் சொன்னான். 

நிலக்கள்ளி தளத்தைச் சுற்றுமுற்றும் நோக்கினாள். தளத்தில் பாய் தளர்த்தப்பட்ட வெறும் பாய்மரங்களும், அத்தியாவசியமான இரண்டு ஈட்டி வீசும் பொறிகளும் தவிர வேறெதுவும் காணாததைக் கண்டு வியந்து, “இந்த மரக்கலத்தில் தாக்கும் சாதனங்கள் ஏதுமில்லையே? இதை வைத்துக்கொண்டு முசிறியை எப்படிப் பிடிக்க முடியும்?” என்று வினவினாள். 

கடல்வேந்தன் அவள் இடையில் கையைச் செலுத்தித் தன்னிடம் இழுத்துக் கொண்டான். “மேல் தளத்தில் தான் சாதனங்கள் இல்லை. தடுத்தளத்தில் இருக்கின்றன. காட்டுகிறேன் என்று சொன்ன கடல்வேந்தன், “முதலில் இந்தக் கப்பல் தலைவன் அறையை ஆராய்வோம்” என்று கூறி அணைத்த வண்ணமே அவளை அழைத்துச் சென்றான் கப்பலின் நடு அறையை நோக்கி. 

நிலக்கள்ளியும் ஓசைப்படாமல் காலை அடிமேலடி. வைத்துப் பூனை போல் நடந்தாள். கடல்வேந்தன் அவளை விட மெதுவாக நடக்கத் தொடங்கி, கப்பலின் ஓரமாகவே சென்று விளக்கின் வெளிச்சம் விழுந்த ஓரிரு இடங்களில் அவளையும் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து இருட்டிருந்த இடங்களில் எழுந்து நடந்தான். அந்த மரக்கலத்தின் நடுவிலிருந்த அறையில் வெளிச்சம். தெரிந்தது. அதன் வாயிலில் இரண்டு மாலுமிகள் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொற்கள் குளறி வந்ததால் இருவரும் குடித்திருக்கிறார் களென்பதைப் புரிந்துகொண்ட கடல்வேந்தன் நிலக் கள்ளி! இவர்களே குடித்திருப்பதால் எந்தவித அபாயத் தையோ, எதிர்ப்பையோ அவர்கள் எதிர்பார்க்க வில்லை யென்பது தெரிகிறது. நீ இப்படியே இந்த இருளில் மறைந்திரு. நான் அடித்தளம் வரை போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு அவள் தடை செய்யுமுன்பு இருளில் மறைந்து விட்டான். 

திடுக்கிடும் உள்ளத்துடன் தளத்தின் மூலையில் நின்றிருந்த நிலக்கள்ளி தனக்கேற்பட்ட துணிவைப்பற்றி வியந்தாள். ‘எதற்கும் அஞ்சும் எனக்கு இத்தனை துணிவு எங்கிருந்து வந்தது?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டாள். “என்ன செய்வது? கொள்ளைக்காரன் மனைவியின் மாங்கல்யத்துக்கு என்றும் ஆபத்துதான். பிசாசுக்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறு என்று ஒரு பழமொழி இருக்கிறது. நான் புளியமரத்தில் ஏறவில்லை. எதிரி மரக்கலத்தில் ஏறியிருக்கிறேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். தனக்கு ஏற்பட்ட இத்தனை நெஞ்சுரத்திற்கும் கடல்வேந்தன் தான் காரணம் என்றும் எண்ணமிட்டதாலும், சற்றுமுன்பு அவன் தனது இடையை இழுத்து அணைத்துக் கொண்டதாலும், இன்ப ரேகை ஒன்றும் அவள் முகத்தில் பரவலாயிற்று. யவனர் பேராபத்தில் நின்றுகொண்டி மரக்கலத்தின் தளத்தில் துணிகரச் கடல்வேந்தனின் ருந்த அந்தச் சமயத்திலும் செயல்களில் தான் பங்கு கொண்ட சமயங்களையும், அந்தச் சமயங்களில் ஆபத்துடன் கலந்த இன்ப நிகழ்ச்சிகளையும் எண்ணி மகிழ்ந்தாள். சுத்த பயங்கொள்ளியாயிருந்த தன்னை, எத்தனை வீராங்கனையாக ஆக்கி விட்டார் கடல் வேந்தன் என்று எண்ணமிட்டதால் சிறிது பெருமிதமும் அடைந்தாள்.  

அவள் எண்ணங்கள் இப்படிச் சுழன்று கொண்டு இருந்த சமயத்தில், தளத்தின் ஒரு பக்கத்திலிருந்து நுழைவாயில் மூலமாகக் கடல்வேந்தன் ஏறி, அவளிருந்த இடம் வந்து, “நிலக்கள்ளி! இனி யாரும் நம்மைத் தடை செய்ய மாட்டார்கள். வா தலைவன் அறைக்குச் செல்வோம்” என்று அவளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு தளத்தின் மத்தியிலிருந்த அறையை நோக்கி நடந்தான். அந்த அறைக்கு வந்ததும், “நிலக்கள்ளி! நீ முன்னால் சென்று குடித்திருக்கும் இரு காவலர்களிடம் பேச்சுக்கொடு. தலைவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல். அவர்கள் ஏதாவது கேட்டால், பதில் சொல்லாமல் திரும்பி, இந்த இடத்தை நோக்கி நடந்து வா” என்று சொன்னான். 

கடல்வேந்தன் எதைச் சொன்னாலும் காரணம் கேட் டறியாத நிலக்கள்ளி, இரு காவலரையும் நோக்கிச் சென்றாள். அவர்களைத் தாண்டி, அவள் அறையில் நுழைவதாகப் பாசாங்கு செய்ததும், “நில்! யார் நீ?” என்று கேட்டுக் கொண்டு எழுந்தான் ஒரு காவலன். அப்படிக் கேட்டபோதும் குடிவெறியில் தள்ளாடினான்.

அதற்குள் எழுந்த இன்னொரு காவலன் அறை வாயிற்படியைப் பிடித்து நிதானித்துக் கொண்டு, நிலக் கள்ளியை உற்று நோக்கி, “டேய் இது ஒரு பெண்” என்று உளறினான் தனது சக காவலனை நோக்கி. 

மெல்ல நகைத்தாள் நிலக்கள்ளி, “இதைக் கண்டு பிடிக்க இத்தனை நாழியாயிற்றா? அடுத்து நான் யாரென்று கேட்பாய்?” என்று நகைப்பின் ஊடே கேட்டாள். 

முதல் காவலன் அவளை அணுகி உற்றுப் பார்த்து, “ஆம். அதையும் சொல். நீ யாரென்று தெரியவில்லை” என்றான். 

“வழியை விடு. நான் உன் தலைவன் அறைக்குள் போகிறேன், அவர் வந்ததும் விசாரித்துக் கொள்” என்று கூறி நாணப் புன்னகையும் செய்தாள். 

முதல் குடியன் சற்றுக் தள்ளாடி, “அப்படியா சமாசாரம்?” என்று குடிவெறியிலும் இடக்காகக் கேட்டான்.

“அதைப் பற்றி நீ கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று மிரட்டினாள் நிலக்கள்ளி.

“வேண்டியதில்லை, வேண்டியதில்லை” என்று உளறினான் இரண்டாவது குடியன். 

“உன் பெயரை மாத்திரம் சொல்லிவிடு. நீ போகலாம்” என்றான் முதல் காவலன். 

நிலக்கள்ளி சிறிது சிந்திப்பது போல் பாவனை செய்து “பெயரைச் சொன்னால் ரகசியமாக வைத்துக் கொள்வாயா?” என்று வினவினாள். 

“என்னிடமிருக்கும் ரகசியம் வெளியே போகாது. இங்கேயே இருக்கும்” என்று தனது மார்பைத் தட்டிக் காட்டினான் காவலன்.

“அப்படியானால் இப்படி தனியாக வா” என்று அவனை அழைத்துத் திரும்பி நடந்தாள் கடல்வேந்தனிருந்த மறைவை நோக்கி. 

“அவன் மட்டும் என்ன உசத்தி? நானும் வருவேன்” என்று இரண்டாவது காவலனும் தொடர்ந்தான். 

 இருவரையும் கப்பலில் இருண்ட பகுதிக்கு அழைத்து வந்ததும் தனக்கு வெகு அருகில் அழைத்து நிலக்கள்ளி “குனியுங்கள், உற்றுக் கேளுங்கள். கேட்பதை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அவர்களைக் குனிய வைத்தாள். “நான் யாரென்று தெரியாது உங்களுக்கு? நான்தான் மந்திரிமகள்” என்றாள். 

குனிந்த முதல் காவலன், “மந்திரி மகளா! அவளுக்கு இந்த இரவில் இங்கென்ன வேலை?” என்று சீற முயன்று தள்ளாடினான். 

“இது வெறும் கதையடா, இவள் வந்த காரியம் வேறு” என்று கூறி நிலக்கள்ளி மீது கையொன்றை வைக்க முயன்றான் இரண்டாவது காவலன். 

நீண்ட கை அவளை அணுகவில்லை. பொட்டில் இறங்கிய குறுவாளின் பிடி அவனைக் கீழே சரியவிட்டது. இன்னொருவன் தனது சகாவுக்கு நேர்ந்த கதியைப் பார்க்கத் திரும்பியதும் அவன் தலையிலும் பேரிடி இறங்கியது போன்ற பிரமையை அடைந்தான், அடுத்து அவனும் சாய்ந்தான் தளத்தில். 

“இனி இவர்களைப் பற்றிக் கவலைவேண்டாம். வா.” என்று நிலச்கள்ளியை அழைத்துக் கொண்டு கப்பல் தலைவன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். “நிலக்கள்ளி! இந்த அறையில் இக்கப்பல் வந் திருக்கும் காரணத்தைத் தேடப் போகிறேன். நீ கப்பல் தலைவன் ஆசனத்தில் உட்கார்ந்துகொள், கையில் உன் குறுவாளை எடுத்துக்கொள். திடும் பிரவேசமாக யார் நுழைந்தாலும் அவர்களைக் கொன்று விடு” என்று கூறி விட்டு ஒரு நிமிடம் வெளியே சென்று திரும்பினான். 

அவன் வெளியே சென்றதும் கப்பல் தலைவன் ஆசனத் தில் அமர்ந்து கொண்ட நிலக்கள்ளி கையில் தனது குறு வாளையும் ஏந்திக்கொண்டாள். வெளியே ஏதோ மடக் கென்று சத்தம் ஒன்று கேட்கவே அது என்னவாயிருக்கும் என்று அவள் எண்ணமிட்டபோது, தாழ்ப்பாளும் பூட்டு மாக உள்ளே நுழைந்த கடல்வேந்தன் தாழ்ப்பாளையும் பூட்டையும் அறை முலையில் வைத்தான், 

“தாழ்ப்பாளை உடைத்துவிட்டீர்களா?” என்று வினவினாள் நிலக்கள்ளி. 

“ஆம். நாம் இந்த அறையைச் சோதித்துக் கொண் டிருக்கையில் யாரும் நம்மை வைத்து வெளியில் பூட்டி விட முடியாது” என்ற கடல்வேந்தன், அறைக் கதவைச் சாத்தி விட்டு, அந்த அறைக்கு அப்பாலிருந்த உள்ளறையை நோக்கி நடந்தான். 

நீண்ட நேரம் அவன் வெளிவராததால் கவலை அடைந்த நிலக்கள்ளி தனது ஆசனத்தை விட்டு எழுந்து உள்ளறையை நோக்கி நடந்து வெளியிலிருந்த வண்ணமே உள்ளே நோக்கினாள். 

அறை முழுவதையும் சின்னாபின்னப் படுத்தியிருந்தான் கடல்வேந்தன். அறையிலிருந்த ஒரு மரப்பெட்டி திறந்திருந்தது. அதிலிருந்த ஆடைகள் வெளியே போடப்பட்டிருந்தன. மற்ற உல்லாசப் பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே கடல்வேந்தன் ஒரு சீலையை மட்டும் மிகுந்த அக்கறையுடன் மடித்துக்கொண்டிருந்தான். அவள் உள்ளே தலை நீட்டியதும், “வந்த வேலை முடிந்துவிட்டது. வா போவோம்” என்று கூறி கிளம்பச் சித்தமாயிருந்த சமயத்தில் முன் அறைக்கு வெளியே யாரோ திடமாக நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டதால் உள்ளறைக் கதவை லேசாகச் சாத்தினான் கடல்வேத்தன். 

நடந்து வந்தவன் உள்ளே நுழைந்து விளக்கு வெளிச்சத்தில் நின்றான். உள்ளறையிலிருந்து அவனைப் பார்த்த கடல்வேந்தன் வியப்பு எல்லை மீறியது. “இவனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறானா?” என்று வியப்புடன் உள்ளுர வினவிக்கொண்ட கடல்வேந்தன், உள்ளறையில் அசைவற்று நின்றான். 

வந்த மனிதனும் அறையைச் சுற்றுமுற்றும் நோக்கி விட்டு உள்ளறையை நோக்கி வந்தான். 

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *