வேலையை எப்படி செய்கிறீர்கள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 8,003 
 
 

“குருவே, எனக்கு ஒரு பிரச்னை’ என்று வந்தவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“என்ன பிரச்னை?’

“நான் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன். ஆரம்பித்தில் நிறைய வேலை கிடைத்தது, ஆனால் இப்போது வேலை வருவது குறைந்துவிட்டது. என்ன காரணம் என்று
தெரியவில்லை’ என்று அவன் சொன்னதும், குருவுக்கு அவனுடைய பிரச்னை என்னவென்று புரிந்துவிட்டது.

அவனுக்கு அமெரிக்காவில் நடந்து சம்பவம் ஒன்றைச் சொல்லத் துவங்கினார்.

“அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்புச் செலவுக்காக வேலைகள் செய்து சம்பாதிப்பார்கள். அப்படி ஒரு பெண்மணியைத் தொடர்பு கொண்டான்.
“மேடம், உங்கள் வீட்டில் தோட்ட வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்க. நான் செய்யறேன்’னு கேட்டான்.

அதற்கு அந்த அம்மா, “இல்லப்பா. எங்க வீட்டுல தோட்டம் ஒழுங்கு பண்ண ஆள் இருக்கு’னு பதில் சொன்னாங்க, பையன் விடல. “பரவாயில்ல மேடம், நான் குறைவான பணத்துக்கு செஞ்சு தரேன். எனக்கு அந்த வேலை கொடுங்க’னு சொன்னா.

ஆனா அந்தம்மா, “வேணாம்ப்பா இப்ப செய்யற ஆளே நல்ல திருப்தியா செய்றான்’னு மறுத்தாங்க அப்படியும் பையன் நிறுத்தல. “தோட்ட வேலையோடு வீட்டையும் சுத்தப்படுத்தித் தரேன். எனக்கு அந்த வேலை கொடுங்க’னு கேட்டான்.

அப்பவும் அந்தம்மா மறுத்துட்டாங்க.

“சரி மேடம், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கனா நல்லாயிருக்கும்’னு கெஞ்சற குரல்ல கேட்டான். அதுக்கு அந்தம்மா, “இப்ப முடியாதுப்பா, வேலையாளை மாத்துற ஐடியாவுல நான் இல்ல. அப்புறம் எப்பயாவது பார்த்துக்கலாம்’னு சொல்லி போனை வச்சிட்டாங்க.

இந்தப் பையன் இப்படி கெஞ்சி வேலை கேட்டதை அங்கிருந்த கடைக்காரர் கவனிச்சிக்கிட்டே இருந்தார். அவருக்கு பையன் மேல பரிதாபம் வந்துருச்சு.

“என்னப்பா, இவ்வளவு கெஞ்சியும் அந்தம்மா வேலை கொடுக்கலையே, வருத்தப்படாத. வேற வேலை கிடைக்கும்’ என்று ஆறுதல் தருவது போல் பேசினார்.

அதற்கு அந்தப் பையன், “எனக்கு வருத்தமில்ல, வேலை கொடுக்காததுல எனக்கு சந்தோஷம்தான்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னான். கடைக்காரருக்கு ஒன்றும்
புரியவில்லை.

“ஏன்ப்பா’ என்று ஆர்வத்துடன் கேட்டார்.

“அந்த வீட்டுத் தோட்ட வேலை செய்யறதே நான்தான். நான் நல்லா வேலை செய்யறேனா, என் வேலை அவங்களுக்கு திருப்தியா இருக்கானு பார்க்கிறதுக்காக
போன் பண்ணி சரி பார்த்துக்கிட்டேன். நான் செய்ற வேலை அவங்களுக்கு திருப்தியா இருக்குனு தெரிஞ்சிடுச்சு’ என்று சொன்னான் பையன்.’

இந்தச் சம்பவத்தைக் கேட்டதும் வந்தவுக்கு தன்னுடைய பிரச்னை என்னவென்று புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WIN மொழி:

வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது!

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *