வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,728 
 
 

ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண் பிள்ளைகளைப் பெற்றவர். வயது 45 ஆக இருக்கும்.

இவரை அவர் தெருக்கார்கள் எல்லாம், மிஸ்டர், சார், என்றே அழைப்பார். அவர் பார்ப்பதற்க்கு பெரிய தொழில் நுட்ப முதலாலி போல் இருப்பவர். ஏனென்றால், தன் ஆடைகள் அவ்வாறு நேர்த்தியாக இருக்கும்.

ஒருநாள் இவர் மூத்த மகள் கல்லூரி படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது. வெளியே இவர் கடன் ஏதும் வாங்கி பழக்கம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தார்.

இதனால் தினமும் வீட்டில் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

இவர் அதனை நினைத்தப்படியே அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டு இருந்தார்.

மறுநாள் ‘மிஸ்டர் விக்னேஷ்’ வேலைக்கு செல்லும் போது, தன் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் சிதம்பரம், அவர் அருகே வந்தார்.

சிதம்பரம் “நாங்கள் குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்கிறோம். வருவதற்கு ஒரு வாரம் ஆகும். அதனால் எங்க வீட்டு கரண்டு பில் நீங்க கட்டிருங்க சார்” ன்னு சொல்லி பணமும் ,புக்யும் கொடுத்தனர்.

இவர் அதை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அவர் யோசித்தப்படியே பணத்தை வைத்து இருந்தார்.

மதியம் ஆனது, கட்டலாமா? வேண்டமா? என்று அவர் மனதில் ஒரே குழப்பம்.

“வீட்டில வேற மூத்த புள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும், சிதம்பரம் வர ஒரு வாரம் இருக்கு அதுக்குள்ள நாம கரண்டு பில் கட்டிரலாம். என்று யோசித்தப்படி அவர் அந்த பணத்தைத் தன் பேண்ட் பாக்டை விட்டு எடுக்கவே இல்லை.

மாலை வரை ஒரே பதற்றடத்துடனும், பயத்துடனும் இருந்தார்.

ஒருவேலையாக அலுவலகம் முடிந்தது.

வீட்டிற்கு மிக வேகமாக தன் ஸ்கூட்டர் வண்டியை எடுத்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்.

மனதில் மகளுக்கு பணம் கொடுத்து விடலாம். என்ற சந்தோஷம் ஒரு புறத்தில் இருக்க, “இந்த பணம் ஏது என்று பொண்டாடி கேட்ட என்ன சொல்லறது” என்று யோசித்தப்படி வண்டியை ஓட்டினார்.

அவர் வீட்டிற்கு வந்தவுடன் தான் வைத்திருந்த பணத்தை எடுத்து தன் மனைவியிடம் தந்தார்.

மனைவி, “ஏதுங்க உங்களுக்கு இந்த பணம்” என்று கேள்வி கேட்க தொடங்கினாள்.

மிஸ்டர் விக்னேஷ், “உனக்கு அது எல்லா எதுக்கு டி, இந்த பணத்தை வைத்து மூத்த மக கல்லூரிக்கு பணம் கொடுத்துரு” என்று அதட்டினார் .

அவள் மனைவி திரும்ப திரும்ப கேள்வி கேட்டதால், அவர் உண்மையைக் கூறிகிறார்.

மிஸ்டர் விக்னேஷ், “இந்த பணம் சிதம்பரத்தோடது, அவர் கரண்ட் பில் கட்ட தந்தாரு, ஆனா அவரு வெளியூருக்கு போயிட்டு வர நாள் ஆகும் ன்னு சொன்னாரு, அத நா அப்றோம் கட்டிக்கலாம் ன்னு அந்தப் பணத்த உங்கிட்ட கொடுத்த, என்கிறார்.

மனைவி, “இது உங்களுக்கே நியாமா இருக்கா, வேலியே பயிரை மேய்ந்தாற் போல இருக்கு நீங்க பண்ணுனது, உங்கல நம்பி தந்தாரு இப்படி செய்யறது, நியாமா, அந்த பணமே வேண்டாங்க, நா வீட்டு செலவுக்கு வைச்சு இருக்கற பணத்த மூத்த மக காலேஜ்க்கு தந்தற, நீங்க இத உங்க ஆபிஸ்ல கட்டிருங்க” என்று, அவர் திருந்தும் படி புத்திமதி சொல்கிறாள்.

மிஸ்டர் விக்னேஷ் திருந்தினார்.

மறுநாள் முதல் வேலையாக ஆபிஸ்க்கு சென்று, சிதம்பரத்தோட பணத்தைக் கட்டினார்.

இதில் அவருக்கு ஒரு ஆனந்தம் கிடைத்தது. பயமில்லாமல் தன் பணியைத் தொடர்ந்தார்.

நீதி: வளரும் சமுதாயத்தில், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. பொறுப்புள்ளவர்கள் அவர் கடமையில் சரியாக (ஊழல், திருட்டு, பொய் இல்லாமல்) நடந்தால், அனைவருக்கும் நன்மையே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *