மேடம் உங்க பேர் மீனாட்சியா?
Yes சொல்லுங்க. காவேரி hospital லேந்து பேசறோம். உங்க father சுந்தரேசன் mobile ல last dialled உங்க நம்பர்தான் இருந்தது. ஒண்ணுமில்ல.. பதறாதீங்க. அவருக்கு ஒரு சின்ன accident.
அய்யோ என்னாச்சி half an hour back எங்கிட்ட பேசினாரே.. நீங்க நேர்ல வாங்க. இதோ வரேன். சரவணனை கூட்டிக்கொண்டு விரைந்தாள். Reception இல் பெயர் சொல்லி கேட்க, first floor போங்க மேடம்.
டாக்டர்.. Iam மீனாட்சி.. பாத்தீங்களா அப்பாவை. Nothing to worry. காயம் கொஞ்சம் ஆழமா இருக்கு. Stitches போட்டிருக்கோம். இதோ இவங்கதான் கொண்டுவந்து சேத்தாங்க.
ரொம்ப நன்றிமா கொண்டுவந்து சேத்ததுக்கு. எப்படி நடந்தது..
அய்யா tvs50 ல கரெக்டாத்தான் வந்துட்டிருந்தாரு. லேசான மழை. கொஞ்சம் சேரும் சகதியா இருந்தது. பின்னால horn அடிச்சிக்கிட்டே வேகமா ரெண்டு பொண்ணுங்க கார்ல வந்தாங்க. அய்யா கொஞ்சம் ஓரம் கட்ட ஒதுங்கினாரு. Skid ஆயி போய் விழுந்துட்டாரு. விழுந்த எடத்துல கூரா ஏதோ கிழிச்சிரிச்சி. அதிர்ச்சில அங்கேயே மயக்கமாயிட்டாரு. TVs வண்டி எங்க வூட்டுகாரு ஓட்டிகினு வந்துட்டாரு..இந்தாமா சாவி.. நானும் எங்க வூட்டுகாரும் அங்க பூ கட்றவங்க.
இந்தாங்க இந்த பணத்த வாங்கிக்கோங்க.
அய்யோ அதெல்லாம் வாணாம்மா.. கிளம்பினார்கள்.
அரைமணி நேரம் கழித்துதான் அப்பா அவளிடம் பேசியது ஞாபகம் வந்தது மீனாட்சிக்கு.
“மீனு… ஷேட்டு கடை இல்லம்மா.. இன்னிக்கி லீவாம். நான் வந்திடறேன். நாளைக்கி pledge பண்ணிக்கலாம்.”
சரவணன் ஆசையா வாங்கித்தந்த செயின் 5 சவரன். கொஞ்ச நேரம் முன்பு ஒரு நர்ஸ், அப்பா போட்ருந்தாருன்னு கொடுத்த டிரஸ்ஸில் check செய்தாள் மீனாட்சி. செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தாள். Tvs50 இல் ஓடிப்போய் check செய்ய அதிலும் ஒன்றுமில்லை.
சரவணனை அழைத்தாள்.. விபத்து நடந்த இடத்தை சொல்லி அங்கு பூ கட்டுபவர்களிடம் சென்று விசாரித்தாள்.
இல்லம்மா நாங்க எதுவும் பாக்கலியே.. ஆஸ்பிடல்ல கொண்டுவந்து சேக்கறாமாதிரி சேத்துட்டு நகைய ஆட்டய போட்டீங்களா? உங்கள் சும்மாவிடமாட்டோம்..
அங்கு இந்த விபத்து நடந்தது பற்றி அறிந்து ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் spot க்கு வந்து விசாரித்துக் கொண்டிருக்க..சரவணனும் மீனாட்சியும் அவரிடம் காதில் ஓத,
நீங்க ஒரு complaint எழுதி குடுங்க.. டேய் ஏறு வண்டில..station க்கு வா..
அய்யா நாங்க ஒண்ணும் பண்ணலிங்கய்யா.. Stationஇல் ஜெய்பீம் பட treatment தான் பூக்காரருக்கு. பூக்காரி எவ்ளோ கெஞ்சியும் ஒன்றும் பிரயோஜனமில்ல.
அதற்குள் சப் இன்ஸ்பெக்டர் வந்து என்ன ஏது என்று விசாரிக்க, இவ்வளவு அடி வாங்கியும்.. எடுக்கல எடுக்கல என்று சாதித்தவரின் பக்கம் உண்மை இருக்கும் என்று தீர்மானித்து, பெரியவர் விழுந்த spot க்கு சென்று பார்க்க,
சேரும் சகதியுமாய் இருந்த ஒரு இடத்தில் செந்நிறமாய் ஏதோ மின்ன, yes மீனாட்சி சொன்ன அதே செயின் அங்கே விழுந்து கிடந்தது.
அதை வாங்கிக்கொண்ட மீனாட்சி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதையும் பொருட்படுத்தாமல் விடுவிக்கபட்ட தன் கணவனை கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த வெளியேறினாள் பூக்காரி.
குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டாலும் வாங்கிய அடி, அவமானம் இவற்றிற்கு என்ன ஆறுதல்??