வீணான சர்ச்சைகள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 7,745 
 

”குருவே, எனக்கு எந்த காரியத்தையும் செய்ய நேரமே கிடைப்பதில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“ஏன், என்ன பிரச்சனை?”

“எந்த காரியத்தை துவங்கினாலும் எதாவது பிரச்சனை வந்துவிடுகிறது. அதை சிந்தித்து முடிவெடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது” என்று வந்தவன் சொனனதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

‘ஒரு ராஜா பூனை ஒன்று வாங்கினார்.அழகான பூனை. அதற்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று மந்திரிகளை அழைத்து ஆலோசித்தார். ஒரு மந்திரி அதற்கு சிங்கம் என்று பெயர் வைக்கலாம் என்றார். ராஜாவுக்கு அது பிடித்துப் போய்விட்டது. ‘ ஆமாம் வீரமிக்கது’ என்று ராஜா ஆமோதித்ததும் இன்னொரு மந்திரி, ‘அதை விட வீரமிக்கது புலிதான். அதனால் காற்றில் கூட பாய முடியும்’ என்றார். உடனே ராஜாவுக்கு குழப்பமாகிவிட்டது. ‘சரி, இதை குறித்து இன்று முழுவதும் யோசித்து நாளை விவாதிப்போம்’ என்றார் ராஜா.

மறுநாள் அரசவை கூடியது. ஒரு மந்திரி எழுந்தார். ‘அரசே, புலி காற்றில் பாயும் என்றால் அதைவிட காற்றில் வேகமாய் பறப்பது மேகம்தான். அதனால் இந்தப் பூனைக்கு மேகம் என்று பெயர் வைப்போம்’ என்று இன்னொரு பெயரை சிபாரிசு செய்தார். இதைப் பார்த்த மற்றொரு அமைச்சருக்கு பொறுக்கவில்லை. ‘அந்த மேகத்தை நகர்த்துவது காற்றுதான். அதனால் காற்று என்று பெயர் வைக்கலாம் என்றார். அரசருக்கு மீண்டும் குழப்பம். ‘இன்னும் சிந்தித்து நாளை சந்திப்போம்’ என்று கிளம்பிவிட்டார்.

மீண்டும் மறுநாள் சபை கூடியது. அப்போது ஒரு அமைச்சர், ‘காற்றை ஒரு சுவரால் தடுத்துவிடும்.ஆகவே காற்றைவிட பலமானது சுவர்தான். அரசரின் பூனைக்கு சுவர் என்று பெயர் வைப்பதுதன் பொருத்தமானது’ என்றார். அதை மறுத்தார் இன்னோரு அமைச்சர். அந்த சுவரிலேயே ஓட்டை போடுவது எலிதான். அதனால் இந்தப் பூனைக்கு எலி என்றுதான் பெயர் வைக்க வேண்டும்’ என்றார் அவர்.

அப்ப்பொது இன்னொரு மந்திரி எழுந்து. ‘அரசே அந்த எலியை பிடித்து சாப்பிடுவது பூனைதானே, அதனால் பூனைதான் சரியான பெயர்’ என்றார்.

அரச்ரும் பலமாக சிந்தித்துவிட்டு ஆமோதித்தார். இறுதியில் பூனைக்கு பூனை என்றே பெயர் வைக்கப்பட்டது.

இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய நேரம் எப்படி விரயமாகிறது என்பது தெரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: வீணான சர்ச்சைகள் காலத்தை விரயமாக்கும்.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

அறிவுக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

விவசாயி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *