வி. வெளியில் ஒரு குரல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 17,778 
 

இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலம் மூன்றடுக்கு ராக்கெட்டின் க்ரையோஜெனிக் வீச்சில் அசுர வேகத்தில் வாயு மண்டலத்தைக் கடந்தது. முட்டை வடிவ சாளரத்தைச் சுற்றிலும் அடர்த்தியாய் அண்டவெளி இருட்டு. சிலுசிலுத்த நட்சத்திரப் புள்ளிகள்.

” திட்டமிட்ட உயரத்தை திட்டமிட்ட வினாடியில் கடந்து கொண்டிருக்கிறோம். இந்த செவ்வாய் கிரகப் பயணம் வெற்றியடைந்தால் விண்வெளி இயலில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும். இல்லையா ஆத்மா?”

“நிச்சயமாக. ” – ஆமோதித்த ஆத்மாவின் கண்கள் ‘பாத் ஸ்கேன்’ கம்ப்யூட்டர் திரையில் விழுந்தபோது, சட்டென அதிர்ந்தன. பரபரத்தான்.

” கர்மா, திரையைப் பார். ஏதோ ஒரு அன்னிய ஸ்பேஸ்க்ராப்ட் நம்முடைய இயங்கு பாதையில் குறுக்கிடுகிறது.

“உற்றுப் பார்த்த கர்மா, ” பறக்கும் தட்டு. ” என்றான்.

அந்தப் பறக்கும் தட்டை நோக்கித் தொடர்பலைகளை செலுத்தினான். பலன் இருந்தது. சிக்னல்கள் எதிரொலித்தன. மின்னணுப் பேச்சை ஆங்கிலத்தில் அனுப்பினான் கர்மா.

” ஹலோ, இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலத்திலிருந்து நாங்கள் ஆத்மா, கர்மா. தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.”

கர்மாவையும், ஆத்மாவையும் குபீரெனத் திகைக்க வைத்தது பறக்கும் தட்டிலிருந்து வந்த குரல். ” ஆங்கிலம் வேண்டாம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி இதில் ஏதாவது பாஷையில் பேசினால் நல்லது. “

” நீங்கள் எந்த கிரகத்தை சேர்ந்தவர் ? ” – ஆத்மா பரபரப்புடன் கேட்டான்.

” பூமி. “

” பூமியா? அமெரிக்காவா ? ரஷ்யாவா ? ஜெர்மனியா ? “

” இந்தியா. “

திகைப்பு வெள்ளம் அவர்களைத் திணறடித்தது. ” இந்தியாவா? எப்போது யார் உங்களை விண்வெளிக்கு அனுப்பினார்கள்? எங்கே செல்கிறீர்கள் ? உங்கள் இலக்கு என்ன ? “

” ஆகஸ்ட் 47-ல் அனுப்பப்பட்டேன். ஆரம்ப வேகம் குறைவுதான். மெல்ல மெல்ல மேலே செலுத்தப்பட்டவன் இப்போது அசுர வேகத்தை எட்டியுள்ளேன். இலக்கு எனக்குத் தெரியவில்லை. கன்ட்ரோல் தரையில்தான். இன்னும் எவ்வளவு தூரம் என்னை மேலே அனுப்புவார்கள் என்பது எனக்கே தெரியாது. “

ஆத்மா அவசரமாய்க் கேட்டான். ” தங்கள் பெயர் ? “

” விலைவாசி. “

– சாவி – 27 ஜூலை 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *