விளம்பரம் வேண்டா வீராசாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 190 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வெள்ளிக்கிழமை! விஜிடபிள் பிரியாணிக்காக வெங்காயத்தை வேகமாக ‘கட்’ பண்ணிக் கொண் டிருந்தார் வீராசாமி! கத்திமுனையில் காய்கறிகளைப் ‘பவர்கட்டாயிருந்தாலும் பட்பட் என்று வெட்டித்தள்ளி விடுவார் அவர். அவர் உடம்பிலிருந்து வரும் வியர்வையை மட்டும் விஞ்ஞான முறைப்படிக் காய்ச்சினால் ஒரு தனி மனிதனின் முகம், கை கால்களைக் கழுவப் போதுமானது! ஏன் உள்ள அழுக்கும் போகும். 

ஒரு தம்பி, ‘கட்டுக்கடா, கட்டுக்கடா, கட்டுக் கடகடா’ துறையில் பேட்ஸ்மெனாக இருக்கிறான். அதிக மாக ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் ‘சிக்சர்’ ‘செஞ்சுரி’யென்ற கணக்கெல்லாம் கிடையாது. ‘அவுட்’ ஆகாமல் மட்டும் பார்த்துக் கொள்வான்! அதில் கெட்டிக்காரன். 

இன்னொரு தம்பி, ‘கட்பீஸ்’களைக் காட்சிப் பொருளாக்கிக் கண்ணைக் கவரும்வண்ண பொம்மை களின் மானம் காக்கும் மாவீரனாகப் பணியாற்றி வருகிறான். 

மூன்றாமவன் ஒரு கட்சித் தொண்டன்! எந்தக் கட்சிக்காரர் கூப்பிடுகிறாரோ, யார் கைமேல் காசு கொடுக்கிறாரோ காரிலும் ஆட்டோவிலும் காபி-டிபன், மரியாதையோடு அழைத்துச் செல்கிறாரோ அவருக்குச் சேவை செய்யும் சிந்தனையாளன். பள்ளிக்கூடம் போகா விட்டாலும் எதிரிலுள்ளவர்களை அர்ச்சுனன் என நினைத்துத் தத்துவங்களையும் வசனங்களையும் கோடை மழைபோலக் கொட்டும் கண்ணன் அவன். 

இவர்களை ஒன்றாகச் சேர்த்து போட்டோ பிடித்துப் பேட்டி கண்டு எட்டுக் ‘காலம்’ போட வேண்டிய பொறுப்பு என்னுடையது! அதிலும் முக்கிய பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து, கேள்விக்கணைகளைத் தொடுப்பதை விட்டு விட்டு இதைச் செய்ய வேண்டும் என்ற சுக்ரீவ ஆக்ஞை மேலிடத்திலிருந்து…அப்பம் தின்னவோ அலால் குழி என்னவோ! 

பத்திரிகையாளன் ஒருவன் வந்திருக்கிறேன் என்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயிருந்தார் வீராசாமி! என்னைப்பற்றி ஒரு டி.சி. போடாவிட்டால் ஒரு பிட்டாவது போடுங்கள்… அதையும் முதல் அல்லது கடைசிப் பக்கத்தில் போடுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக் கிழமை போடுங்கள்… என்று சிங்கப்பல்லையும் தங்கப்பல்லையும் காட்டும் ஊர்ப் பிரமுகர்களில் சிலர் எப்படி நாணிக் கோணுகிறார்கள் எங்களிடம்… ‘ஹேண்ட் அவுட்’களையும்… ‘பிக்ஸர்சை’யும் அவர்களாகவே கொண்டுவந்து கொடுத்துவிட்டு நாங்க ளாகப் போட்டது போல் பாவனை பண்ணுவார்கள்… அவர்கள் எங்கே? இவர் எங்கே? எனக்குள் சிரித்துக் கொண்டேன்! போதவில்லையென்றுகூட நினைத்தேன்… அவருக்கா எனக்கா புரியவில்லை. 

வெளியே இருந்தவாறே ஸ்டோர் ரூமை ஒருமுறை நோட்டம் விட்டேன். பறங்கிக்காய்ப் பாறைகள்… வாழைக்காய் வௌவால்கள்…பொடிபோடும் மூக்குகளை நினைவுபடுத்தும் குடமிளகாய்கள்…கல்யாண வீட்டில் கால்கடுக்க நின்ற களைப்புத் தீரக் கிடந்த நிலையில் ஓய்வெடுக்கும் வாலிப வாழைத்தண்டுகள்… கோஸ் மலைகள்… வெளியே முட்களைத் தாக்கிய பலாப் பிஞ்சுகள்… சுவரில் காலண்டர் மற்றும் பத்திரிகைகளி லிருந்து கத்தரித்து ஒட்டப்பட்ட சினிமாப் படங்கள், சாமி படங்கள்…இப்படிப்பட்ட சூழலில்தான் ‘விவேக வீராசாமி’ என்று அழைக்கப்படும் அந்த வீரர் தென் பட்டார். முகத்தில் தெளிவு இருந்தது. 

முதலாளி முகுந்தன் அந்தத் தேனீக்கு முழுச் சுதந்திரமும் கொடுத்திருந்தார். அவர் ஒரு ‘கிளவர் காபிடலிஸ்ட்.’ ‘மார்க்கெட்’ சாமான்கள் வாங்கும் முழுப் பொறுப்பு இந்த மைசூர்ப்பாகு இதய மனிதனைச் சார்ந்ததுதான்! வீட்டை மறந்த துறந்த வாழ்வைத் தாடங்காத வாடிக்கையாளர்களின் பண்டிகை நாட்கள், கோயில் திருவிழாக்கள், அரசியல் மாநாடுகள். ஆகிய வற்றிற்கேற்ப மெனுக்களை மாற்றியும் திருத்தியும் அமைக்கின்ற முழு அதிகாரம் மாஸ்டருக்கு இருப்பது போல் இந்த மேதைக்கும் உண்டு. மோதியது இல்லை. ஆனால் முழித்தது இல்லை. தண்ணீரில் இருக்கும் மீனுக்குத் தாகம் தெரியாது என்பார்கள். அதுபோல லட்டுக்குரிய திராட்சையையும் முந்திரிப்பருப்யையும் சட்டினிக்குள்ள பொட்டுக்கடலையையும் தேங்காயையும் மிக்சருக்குள்ள மல்லாட்டையையும் பார்த்துப் பார்த்துச் சலித்தவராதலால் அவற்றையெல்லாம் மனத்தாலும் தொடாத மாவிரதன். #பலம் என்பதே சத்தேகத்துக்குக் கூடக் கிடையாது. 

நான் உள்ளே நுழைந்தவுடன் அவர், “வெளியே போரிடைப் பாத்தீங்களா?” என்றார். முதலாளியின் அனுமதியோடு வந்திருப்பதற்கு அடையாளமாக’ டோக்கனை’க் காண்பித்தேன். பஜ்ஜி வில்லைபோடும் பலகையில் சிறிது உட்காரச் சொன்னார். சிறிது நேரத்தில் கனிவான காபி வத்தது. ஒங்களுக்கு சீட்டு விழுந்திருக்கு என்று மெல்ல ஆரம்பித்தேன்…“பாத்திரச் சீட்டா ஏலச் சீட்டா, குலுக்குச் சீட்டா” என்று உலுக்கிப் பின் “எந்தச் சீட்டும் விளுகாட்டியும் பரவாயில்லே இருக்கற சீட்டு.சிளியாம் பார்த்துகிட்டா போதும்” என்று புன்னகை புரிந்தார். இல்லீங்க பரிசுச்சீட்டு…பத்து லட்சம் விழுந்திருக்கு!” என்றேன், முகத்தில் எந்த விதமான உணர்ச்சி வேறுபாடும் இல்லை. “நான் வாங்கற தில்லீங்க!” என்றார். “வீட்ல சொன்னாங்க!” என்றேன். ‘அப்ப அது அவங்க சமாசாரம்” என்று பட்டுக் கரித்தாற் போல் சொன்னார். ஒங்களுக்கு என்றேன். “பணம் ஆளப்பிரிக்கும். ஏன் கொல்லக்கூடச் செய்யும்…தேவைக்கு மேல. சொலபமா வர்ற பணம் எனக்கு வாணாம்… அதுக்காக நாம் “மத்தவங்களை குத்தம் சொல்லலே… குந்த குச்சும் திங்க சோறும் உடுக்க மொழத் துணியும் போதுங்க… மேல்செலவுக்கு மொதலாளி” சம்பளந் தர்ராறா…அப்பப்ப அஞ்சு பத்து அதிகப்பத்தும் தருவாரு… அத நான் ரோஜு வேலைக்கு போயி அடச்சுப் புடுவேன்”…என்றார். “அப்ப இந்தப் பணம்!”னு இழுத்தேன்…”கையால கூடத் தொடமாட்டேன்!” என்றார் இரும் பு இதயங்கொண்ட அந்தக் கரும்பு மனிதர். ‘ஒங்களை * போட்டா எடுக்கணும். போஸ் கொடுங்கன்னு சொன்னேன்…” நம்பளை அனாவசியமா பெரிய மனுசன் ஆக்காதீங்க! அப்பறம் தூக்கம் வராது; நிம்மதி இருக்காது; பகை வந்திரும்…ராமாயணத்தில் வர்ற சத்ருக்கனன் மாதிரி இருக்கணும்னு நேத்து ஒரு பெரியவர் சொன்னாரு கூட்டத்ல… அப்படியே இருக்க லாம்னு ஒரு ஆசைங்க…” என்று சற்று ஆணித்தரமாகவே சொன்னார் வேண்டாமை அன்ன விழுச்செல்வம் அவரிடம் இருப்பதைக் கண்டேன். உலகம் பழித்ததை ஒழித்துவிட்ட இவர் அல்லவோ துறவி கொள்கையில் என்ன பிடிப்பு? ‘இந்தக் காலத்திலும் இப்படியொரு பட்டினத்தாரா.’ என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அதோடு விட்டேனா? அதுதான் இல்லை. “உங்கள் மனைவி அந்தஸ்து உயர்ந்துவிட்டதால் இந்த வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினால் என்ன செய்வீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். “மாட்டாள்…என்னை நன்றாக அறிந்தவள் அவள். என் தகுதி, திறமை, விருப்பத்துக்கு எத்த வேலை… இதில் தலையிட்டால் என் சுதந்திரம் பறிபோன தாகவே நினைப்பேன்…செய்யும் தொழில்தான் தெய்வம்!” என்று சொன்னார். என்னையும் அறியாமல் நான் நிருபர் என்பதையும் மறந்து என் கண்கள் நீரைப் பெருக்கின. பேட்டியைத் தொடர்ந்பேன். “ஒருவேளை, இந் தப் பணத்தை எந்தக் காரியங்களுக்குச் செலவு செய்யலாம் என்று உங்கள் மனைவி உங்களை யோசனை கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள்… அப்போது என்ன சொல்வீர்கள்” என்றேன். “என்போன்ற தொழிலாளர்கள் குடியிருக்க சின்னச் சின்ன சிமண்ட் பூசாத காறை வீடுகள் கட்டலாம் என்பேன்… அவர்கள் உடல் நலமும் உள்ள நலமும் பாதிக்காத வகையில் பல நல்ல பெரியவர்களின் பழக்கத்தை உண்டாக்குவேன். அனாதைப் பிணங்களின் அடக்கம், ஏழைக் குழந்தைகளின் படிப்பு… இதுங்களுக் காகச் செலவு செய்யச் சொல்வேன் என்றார். ஆளிடம் செய்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். ,பி.ஏ.’ என்றார். ஹைடென்ஷ்ன் கரண்ட்டில்’ கை வைத்தது போல் ஆனேன்…’பி.ஏ. படித்தும்…’ என்று இழுததேன். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதிகாரக் கும்பலின் சாகசமும் விதியும் என் வாழ்க்கையோடு விளையாடி என்மீது குற்றம் சுமத்தி என்னைச் சிறைப் பறவையாக்கிச் சிறகை ஒடித்துவிட்டது. ஏழாண்டுக் காலம் தனிமையில் தவித்தேன். எந்த உறவும் எட்டிப் பாரிக்கவில்லை. விடுதலை பெற்றேன். வயிற்றுக் கவலை யைப் போக்க வேலை தேடித்தேடி அலைந்தேன்… உண்மையைச் சொன்னேன்…உதட்டளவில் வாய் முத்துக்களை உதிர்த்த பூச்சு உலக புண்ணியர்கள் வழிகாட்டவில்லை. சோர்ந்தா போனேன். இல்லவே இல்லை, செய்யாத தவறுக்காகச் சிறையில் அடைந்த தண்டனையின்போது காய்கறி வெட்டச் சொல்லிக் கொடுத்த புண்ணியவானின் புத்திமதி ஞாபகத்திற்கு இந்த முதலாளியிடம் ஒன்றையும் ஒளிக்காமல் வேலை கேட்டேன். ‘குறையில்லாத மனிதன் யார்?” என்று சொல்லி வேலை போட்டுக் கொடுத்தார். “உங்கள் திருமணம் என்றேன். ‘சிவப்பு விளக்குப் பகுதிக்காக விலை பேசப்பட்டபோது தப்பியோடிக் கிணற்றை நாசப்படுத்த முயற்சி செய்த பெண்ணையும் கிணற்றையும் உத்தே சித்துச் செய்துகொண்ட நீண்ட நாள் ஒப்பந்தம்” என்றார் சிரித்தவாறே! “உங்கள் தம்பிகளைப்பற்றி ஒரு வார்த்தை ” என்று கேட்டேன்.முதலாமவன் யதார்த்த வாதி வெகுஜன விரோதத்தைச் சம்பாதித்தவன். இரண்டாமவன் ஒரு புனுக்குப்பூனை. மூன்றாமவன் சரியான கோயபல்ஸ். பிழைத்துக்கொள்வான்” என்று கூறி முடித்தார். பேட்டி கொடுத்த எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அவருடைய கைகள் கத்தரிக்காயை எடுத்து இட்லி சாம்பாருக்கு நறுக்கத் தொடங்கின. வாய், “நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே!” என்ற தாயுமானவரின் அடிகளை முணுமுணுத்தது. எல்லா இடங்களிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். பகட்டு வேஷம். பதவி, படாடோபம் என்ற மேகங்கள் அவர்களை மறைக்கின்றன. 

“எந்த ரோ மகானுபாவுலு அந்த ரீகி வந்தனம்’ என்ற தியாக பிரும்மத்தின் கீர்த்தனைதான் எவ்வளவு உண்மை!” தத்துவ மொழி என்பது என் உள்ளத்தில் பளிச்சிட்டது. 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *